Jump to content

இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை; மங்கள சொன்ன கருத்து குறித்து பொலிஸார் விசாரணை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை; மங்கள சொன்ன கருத்து குறித்து பொலிஸார் விசாரணை

இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை எனத் தெரிவித்தமை குறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். மாத்தறையில் சுமார் இரண்டு மணிநேரம் மங்கள சமரவீரவை அவரது கருத்துக் குறித்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இதை மங்கள உறுதிப்படுத்தினார். மங்கள சமரவீர வாக்கு மூலம் வழங்குவதற்காகச் சென்றவேளை அவருடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சிலரும் சென்றனர்.

ஒரு நோக்கத்துக்காக இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டமை இதுவே தல்தடவை என மாத்தறை அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் மங்கள சமரவீர தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளையில், நாட்டில் பெரும்பாலான விடயங்களைச் சிங்கள பௌத்த பெயரில் அடையாளப்படுத்திக் கொள்வது தவறானவிடயமாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இலங்கையின் பெரும்பாலான விடயங்களைச் சிங்கள பௌத்த பெயரில் அடையாளப்படுத்துவது முழுமையாகத் தவறான விடயமாகும். இந்தியாவை எடுத்துக் கொண்டால் அங்கு ஹிந்தி மொழியே பெரும்பான்மை மொழியாகும்.

அதனால் அது ஹிந்தி நாடு என்று யாரும் கூறுவதில்லை. இந்தியாவுக்கு இந்தியா என்றே கூறுகின்றார்கள். அந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் காவி உடைகளை வியாபாரமாகச் செய்கின்ற தேரர்களும், பௌத்த மதம் குறித்து தெளிவில்லாத நபர்களுமே இதனை இன்று துரதிஷ்டவசமாக புரிந்து கொள்ளாது இருக்கின்றனர்.

இந்த சில தேரர்களினாலேயே பௌத்த மதத்தின் தோற்றப்பாடு நாளாந்தம் அழிவடைகின்றது. அந்தத் தேரர்கள்தான் இன்று பாராளுமன்றத்துக்குச் செல்ல ஒவ்வொருத்தரை அடித்துக் கொண்டு தடுமாறுகின்றார்கள். தேரர்கள் தான் நாட்டில் இன மதங்களுக்கு எதிராக பாகுபாட்டையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகின்றார்கள்” என்றார்.

http://www.ilakku.org/இலங்கை-சிங்கள-பௌத்த-நாடி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

காவி உடைகளை வியாபாரமாகச் செய்கின்ற தேரர்களும், பௌத்த மதம் குறித்து தெளிவில்லாத நபர்களுமே இதனை இன்று துரதிஷ்டவசமாக புரிந்து கொள்ளாது இருக்கின்றனர்.

இந்த சில தேரர்களினாலேயே பௌத்த மதத்தின் தோற்றப்பாடு நாளாந்தம் அழிவடைகின்றது. அந்தத் தேரர்கள்தான் இன்று பாராளுமன்றத்துக்குச் செல்ல ஒவ்வொருத்தரை அடித்துக் கொண்டு தடுமாறுகின்றார்கள். தேரர்கள் தான் நாட்டில் இன மதங்களுக்கு எதிராக பாகுபாட்டையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகின்றார்கள்” என்றார்.

தெரிந்தோ, தெரியாமலோ உண்மையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். இன்று இந்த நாடு ஏழ்மையிலும், அநீதியிலும் சிக்கித் தவிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். எங்களை புதிய பாதையை  நோக்கித் தள்ளுவதும் இதுவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, உடையார் said:

இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை; மங்கள சொன்ன கருத்து குறித்து பொலிஸார் விசாரணை

இனி இவர் ஒருடமும் தனிய வெளிக்கிட்டு திரியேலாது. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இனி இவர் ஒருடமும் தனிய வெளிக்கிட்டு திரியேலாது. 😄

பிக்குகளே போட்டுத் தள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

பிக்குகளே போட்டுத் தள்ளுங்கள்.

அதெல்லாம் ஓல்ட் மொடல். இப்ப ஆர் போட்டுத்தள்ளுறியளோ அவருக்கு எம்பி பதவி...இல்லாட்டி வெளிநாட்டு தூதுவர் பதவி...😎

Link to comment
Share on other sites

மங்கள சமவீர தனிப்பட்ட ரீதியில்  இனவெறி அற்ற ஒர அரசியல் தலைவரே. கோட்டபாய- மகிந்தவின்   மிக பலமான இனவெறி அரசாங்கம் இருக்கும. போது அவர் இவ்வாறு  கூறியிருப்பது  அவரது நேர்மையையும் துணிவையும்  வெளிப்படுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

மங்கள சமவீர தனிப்பட்ட ரீதியில்  இனவெறி அற்ற ஒர அரசியல் தலைவரே. கோட்டபாய- மகிந்தவின்   மிக பலமான இனவெறி அரசாங்கம் இருக்கும. போது அவர் இவ்வாறு  கூறியிருப்பது  அவரது நேர்மையையும் துணிவையும்  வெளிப்படுத்துகிறது. 

இனிமேல் அவர் சிங்கள மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு செல்வது கடினம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இனிமேல் அவர் சிங்கள மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு செல்வது கடினம்....

இரண்டு கூட்டங்களிலை பற தெமில எண்டு வீராவேசமாய் பேசினால் சிங்களச்சனம்  ஜெயவே வா எண்டு சொல்லி வோட் பண்ணும்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இனிமேல் அவர் சிங்கள மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு செல்வது கடினம்....

இலங்கை அரசியலில் தான் இனி ஈடுபட முடியாது, ஈடுபட்டாலும் ஈடு மீள முடியாது என்று தெரிந்தும் கூறியிருக்கிறார். காரணம் ராஜபக்ஸாக்களின் அடாத்து அரசியலால் அரசியலில் இருந்து மீள முடியாதவாறு திட்டமிட்டு ஒதுக்கப்பட்டவர்கள் இவரும் சரத் பொன்சேகாவும். புலிகளுக்கெதிரான 
 போரில்  ராஜதந்திர முறையில் உழைத்தவர் இவர், ஆயுத ரீதியில் உழைத்தவர்  மற்றவர். பெயர், புகழ் அபகரிப்பில் வெளியேற்றப்பட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை இவர் சந்திரிக்கா அம்மையார் அரசில் இருந்த காலத்தில் ஏன் சொல்லவில்லை..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொந்து நூலாகி தூக்கியெறியப்படும்போது தத்துவம் பேசும். திரும்ப கட்டியெழுப்பிய பின் பழையபடி வேதாளம் முருக்க மரத்தில் ஏறினாற்தான் பதவியை  தக்க வைக்க முடியும். சிலபேருக்கு திரும்ப சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடும். ஜே. ஆர்.  அரச மரியாதை ஏதும் இல்லாமல், முக்கியத்துவம் அளிக்கப்படாமல் சாதாரண பிரஜையாகவே அடக்கம் பண்ணப்பட்டார் சிறிமா, மகள்   ஜனாதிபதியாக இருந்த படியினால் மரியாதை அளிக்கப்பட்டது. இருந்தும் குடியுரிமை பறிக்கப்பட்ட காலங்களும் உண்டு. சந்திரிகாவின் முடிவும்?   "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்." 

Link to comment
Share on other sites

21 hours ago, tulpen said:

மங்கள சமவீர தனிப்பட்ட ரீதியில்  இனவெறி அற்ற ஒர அரசியல் தலைவரே. கோட்டபாய- மகிந்தவின்   மிக பலமான இனவெறி அரசாங்கம் இருக்கும. போது அவர் இவ்வாறு  கூறியிருப்பது  அவரது நேர்மையையும் துணிவையும்  வெளிப்படுத்துகிறது. 

எப்படி செல்கீன்றீர்கள் இனவெறி அற்றவரென்று. இது அரசியல் நாடகம். முன்னர் இவர் செய்தவைகள் இன்னும் கொட்டிகிடக்கு இணைய தளங்களில்.

6 hours ago, satan said:

நொந்து நூலாகி தூக்கியெறியப்படும்போது தத்துவம் பேசும். திரும்ப கட்டியெழுப்பிய பின் பழையபடி வேதாளம் முருக்க மரத்தில் ஏறினாற்தான் பதவியை  தக்க வைக்க முடியும். சிலபேருக்கு திரும்ப சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடும். ஜே. ஆர்.  அரச மரியாதை ஏதும் இல்லாமல், முக்கியத்துவம் அளிக்கப்படாமல் சாதாரண பிரஜையாகவே அடக்கம் பண்ணப்பட்டார் சிறிமா, மகள்   ஜனாதிபதியாக இருந்த படியினால் மரியாதை அளிக்கப்பட்டது. இருந்தும் குடியுரிமை பறிக்கப்பட்ட காலங்களும் உண்டு. சந்திரிகாவின் முடிவும்?   "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்." 

நல்ல கணிப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 18:49, குமாரசாமி said:

இரண்டு கூட்டங்களிலை பற தெமில எண்டு வீராவேசமாய் பேசினால் சிங்களச்சனம்  ஜெயவே வா எண்டு சொல்லி வோட் பண்ணும்...:cool:

இப்ப இவர்கள் உபயோகிப்பது "கொட்டி"(டிசன்டா பறதெமிழுவை சொல்லற வசனம்) யை அழித்தவர் என்று சிங்கள மக்கள் கண்ணை மூடிக்கொண்டு முத்திரை குத்துவினம் .....விக்கியரும் கொட்டி பிரபாகரனும் கொட்டி  சிங்கள மக்களுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.