Jump to content

புளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக")


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

PLOTE%2B%25281%2529.jpg
 
குறிப்பு: "புளாட்டில் நான்" என்ற தலைப்பில் புளாட் வதை முகாமில் சித்திரவதைக்குள்ளான சீலனினால் ndpfront.com இணையத்தில் 2010 இல் தொடராக எழுதப்பட்டு பின்னர் "வெல்வோம் அதற்காக" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. சீலனின் அனுமதியுடன் இங்கு மீள்பிரசுரமாகின்றது. 

 

எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் மீதான விமர்சனங்களும் இருந்த வண்ணமே இருந்த போதும், இவர்களில் எத்தனைபேர் அதை ஆவணமாகவோ அல்லது விமர்சனமாகவோ பதிவு செய்துள்ளனர்.

இன்று இனியொருவில் ஐயர் எழுத ஆரம்பித்த பிறகு, பலருக்கு தமது நிலை பற்றிய விமர்சனத்தையும் அதிருப்தியையும் எழுத முடியும் எனறு முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அன்று இருந்த இயக்கங்களில் இருந்த பலர் தமது இயங்கங்களின் உள்முரண்பாடுகளின் காரணமாகவும், புலிகளின் சகோதரப் படுகொலைகள் காரணமாகவும் ஒதுங்கியவர்கள், இன்று தமக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றாற் போல மவுனித்தும் ஒதுங்கியும் வாழ்ந்து வருகின்றனர். இது ஒருபுருமிருக்க இன்னும் சிலர் 80 களின் பிற்பகுதியில் இருந்து சஞ்சிகைகளை வெளிக்கொண்டு வந்தனர். இதில் பல சஞ்சிகைகள் ஒரே பாணியில் இருந்தன. இவற்றை விட இலக்கியச் சந்திப்பு என்றும், மூன்றாவது பாதை என்றும், இன்னும் ஒரு படி முன்னேறி ஒரு கூட்டு வேலைமுறையை நோக்கி நகர முற்பட்டனர். ஆனால் அவைகள் அனைத்து சிதறி சின்னாபின்னமாக, ஐரோப்பாவில் இருந்து தமிழீழக் கட்சி என்றும், இந்தியாவில் இருந்து தேசபக்கத முன்னணியினர் கழகம் என்ற இரண்டுமே முன்பு சஞ்சிகைகளாக இருந்தவர்களில் கணிசமானோரை உள்வாங்கிக் கொண்டது. இவைகள் செயலற்றுப் போக (இது தொடர்பாக தனிமையில் ஆராயப்பட வேண்டியுள்ளது) இணையத்தளங்கள் உருவாகின. இவற்றின் வளர்ச்சியில் இன்று சிறு சிறுகுழுக்களாக பலர் ஒன்று திரண்டு வருகின்றனர். இருந்த போதும் இதில் பல குழுக்கள் முள்ளிவாய்க்காலுடன் முடிந்து போன எமது போராட்டத்தை மீளாய்வுக்குட்படுத்தாது, எங்கு முடிந்ததே அக்கிருந்தே ஆரப்பிக்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், மீண்டும் தமிழ் மக்கள் மீது தமது நலன் சார்ந்த பலரால் உருவாக்கப்படும் புதிய அமைப்புகளில் அடாவடித்தனமும், நேர்மையற்ற அரசியல் போக்கையும் கட்டவிழ்த்து விட வழிவகுக்கும். இதனடிப்படையிலேயே நான் எனக்கு நடந்த அனுபவத்தை, எழுத்துருவில் கொண்டுவர முயற்சிக்கின்றேன்.

இந்த வகையில் நான் அங்கத்துவம் வகித்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், மார்க்சியம் பேசிக்கொண்டு எவ்வாறு மக்கள் விரோதப் போக்கை கொண்டிருந்தது என்பதை உணர்த்த முனைகின்றேன். மக்கள் விடுதலையை விரும்பி பயிற்சிக்கு சென்றவர்களை, எவ்வாறு நடத்தியது என்பதை கவனத்தில் கொண்டு வரமுனைகின்றேன். அதேவேளையில் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் நடந்த உட்படுகொலைகளுக்கும், ஒட்டு மொத்தத்தில் உமாமகேஸ்வரனை பழிமுடித்து விட்டு தாம் தப்பித்துக் கொள்ளும் பலரை, அவர்களின் இயக்க பெயர்களுடன் அம்பலப்படுத்தும் வகையில் இதை எழுத முற்படுகின்றேன். இங்கு கவனிக்க வேண்டியது நான் உமாமகேஸ்வரனை நல்லவன் என்றோ அல்லது அவர் கொலை செய்யவில்லை என்றோ இங்கு கூறவரவில்லை அத்தோடு நடந்த அத்தனை கொலைகளுக்கும் கழகத்தின் செயலதிபர் என்ற நிலையில் அவர் மீது குற்றம் சுமத்தினாலும், இதில் பல கொலைகள் அவருக்கு தெரியாமேலே நடந்தேறின என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதுமட்டுமல்லாது இன்று தம்மை புரட்சியாளர்களாகவும் முற்போக்குவாதிகளாகவும் காட்டிவரும் பலர், இச்சம்பவங்களுடன் மறைமுகமாக சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை வெளிக்கொணரும் முகமாக, எனக்கு தெரிந்தவற்றை எழுத முற்படுகின்றேன்.

இவர்கள் பலர் தம்மை பற்றிய எந்தவித சுயவிமர்சனங்களும் இன்றி, மக்களுக்கு மீண்டும் ஏதோ ஒருவகையில் தீங்கிழைக்க முற்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டும் எமது போராட்டமானது மக்கள் சார்பில் எவ்வாறு நிலைகொள்ள வேண்டும் என்பதையும், மக்கள் இவர்கள் மத்தியில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தவே, எனக்கு நடந்த கசப்பான அனுபவத்தினுடாக மீளாய்வினை செய்ய முற்படுகின்றேன்.

அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்படுகொலைகள் பற்றியும் அதன் அராஜகப் போக்கு பற்றியும் தோழர் கேசவனால் எழுதப்பட்ட "புதியதோர் உலகம்" என்ற நூலில் அடங்காத பல விடையங்களை இங்கு ஆராய முற்படுகின்றேன். இதில் புதியதோர் உலகம் தீப்பொறி என்ற அமைப்பால் வெயியிடப்பட்ட போதும், அவ்வமைப்பையும் எனது பாதையில் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றேன். தீப்பொறி அமைப்பானது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து இடைநடுவில் பிரிந்து சென்ற பலரை, உள்வாங்கிய ஒரு அமைப்பாக இருந்தது. இதில் பலர் நடந்த உட்படுகொலைக்கு பதில் கூறவேண்டியவர்களாக இருந்த போதும், புதியதோர் உலகம் என்ற நுலின் மூலம் தமக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என கட்டி தப்பித்தனர். எனவே அவ்நூலுக்கு அப்பால் நடந்தது என்ன என்பதையும், எவ்வாறு தீப்பொறியினர் மற்றைய போராளிகளை விட்டுவிட்டு, தமது உயிரை பாதுகாத்துக் கொண்டனர் என்பதையும் விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. தீப்பொறியினர் பிரிந்து செல்வதற்கு முன்பே, இந்தியாவில் முகாம் ஒன்றில் நடந்த உட்கட்சிப் போராட்டம் தொடர்பாக அவர்கள் எதையும் கருத்தில் கொள்ளாது, தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த பலரையும் இங்கு பார்வைக்குட்படுத்துகின்றேன்.

தொடரும்

சீலன் (2010)

 

http://poovaraasu.blogspot.com/2020/08/plote-1.html

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

Black%2BJuly.jpg

எனது பெயர் சீலன். நான் இன்று ஐரோப்பாவில், எனக்கான முகவரிகள் தொலைந்தவனாய் வாழ்ந்து வரும் ஒரு ஈழத்தமிழன். வடக்கே எனது பிறப்பிடமாகும். அந்தச் சிறிய வயதில் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. அதனால் அவற்றை ஒருபுறம் வைத்துவிடுவோம். இனி எனது போராளி வாழ்க்கையில், நான் நோயாளியாகிப் போராடித் தொலைத்த போராளியின் வாழ்க்கைக்குள் போவோம்.

 

ஏதோ ஏகாந்தமான, அதிமிதவாத அரசியலால் பொருமி வீங்கத் தொடங்கிய காலமான 1983இல், எனது இளமைக் காலம் இயக்க கீரோத்தனத்தை நாடியது. ஈழ மண்ணின் விடுதலைக்கான ஆயுதப் போராட்ட வடிவங்களுக்குள் நாம் கவரப்பட்டோம். சிறிய பாடசாலை முதல் பல்கலைக்கழக மாணவர் வரை வகைதொகையின்றி, இயக்கத்தில் இணைய ஆரம்பித்த காலம் அது. அக்காலத்திலேயே நான் "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்' என்ற அமைப்பில், என்னையும் இணைத்துக் கொண்டேன். உண்மையைச் சொல்லப்போனால், எனக்குள் விடுதலை உணர்வுகள் அன்று இருந்ததென்று சொல்லமாட்டேன். மாறாக எதோ போராட வேண்டும் என்ற உணர்ச்சி வேட்கையே என்னுள் இருந்தது. அதாவது சிங்களவர் என்றாலே அவர்கள் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி என்னிடம் இருந்தது. அது என்னை என்னவோ செய்தது. அதற்கான காரணங்களும், எனது ஆழ்மனதில் பதிவாகிக் கிடந்தது.

அன்றைய காலத்தில் எனது தந்தை இலங்கைக் காவல்துறையில் கடமையாற்றினார். அவருக்கு தொலைதூர இடங்களுக்கான மாற்றங்கள் வரும்போது, அவரோடு வீட்டாரும் சேர்ந்து செல்ல வேண்டிய நிலை. அப்படித்தான் ஒருமுறை அப்பாவிற்கு புதிய இடமாற்றம் வந்தது. அது 1977ஆம் ஆண்டு. திருகோணமலைக்கு இடம் மாறினோம். நான் அப்போது 11வயது கொண்ட சிறுவன்.

அந்தக் காலத்தில் "தமிழர் விடுதலைக் கூட்டணி"யைச் சார்ந்தோர், திருகோணமலை முத்தவெளியில் பெரிய அளவிலான கூட்டத்தைக் கூட்டினர். அதற்காகப் பல கூட்டணிப் பிரமுகர்கள், பேச்சாளர்கள் வருகை தந்தனர். அவர்களை திருமலை இளைஞர்கள், மாலை சூட்டி வரவேற்றனர். அதன் முன்னணியில் நின்ற சிலர் ஏதோ முறுக்கெடுப்பவராகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும் எனக்குத் தெரிந்தது. நானும் வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்தேன். சிறு கணப்பொழுதில் அவர்கள் தமது கைகளை தாமே சவரத் தகடுகளால் வெட்டிக் காயப்படுத்தினர். சிலரது கைகளில் மிக ஆழமாக வெட்டுப்பட்டதால் நரம்புகள் அறுபட்டு, அவர்களின் இரத்தம் அந்த மண்ணில் நீராய் ஓடியது. அந்தப் பிரமுகர்கள் ஒரு வகையான திகைப்புடன் கலந்த புன்சிரிப்புடன் ஏறிட்டு நின்றனர். இவர்களோ ஒருவகை ஆவேசத்துடன் அங்கே வருகை தந்த பிரமுகர்களின் நெற்றிகளில் அந்த இரத்தங்களைத் தொட்டுத் தொட்டு பொட்டுப் பொட்டாய் திலகமிட்டனர். ஏதே ஏதோ கோசங்கள் வேறு. இதுவோ என்மனதிலில் ஆழப் பதிந்துபோனது.

அன்று அவர்களின் மிடுக்கும், அவர்களின் வசீகரமான வீரியப் பேச்சுகளும் இணைந்து, இது என்னைக் கவர்ந்தது. எங்கள் தமிழினத்தை தினமும் அழிக்கின்ற சிங்கள அரசை உடைக்க வேண்டும், அழிக்க வேண்டம் என்று அறைகூவினர். இது எதிரிச் சிங்களரை எதிர்த்துத் தாக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்ற உந்துதலை, என்னுள் ஏற்படுத்தி என்னை எரியவைத்தது.

1983 முற்பகுதியில் இயங்கங்களின் செயற்பாடுகள் ஒரளவு துரிதமடைந்த காலகட்டம். அக்காலத்தில் தான் பல இயக்கப் புத்தகங்கள், பத்திரிகைகள் எனது கையில் கிடைக்கப்பெற்றன. அவற்றை வாசிக்கும் போது உணர்ச்சிகள் தானகவே வரும். அதுமட்டுமின்றி யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும், இதற்கு பாடசாலைகளிலும், ஊர் மக்கள் மத்தியிலிருந்தும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதை வழிபட்ட எமக்கு, போராட்டப் புத்தகங்களையோ அல்லது பத்திரிகைகளையே தருபவர்களை, ஏதோ ஒரு கிரோக்களாகவே பார்த்தோம். இப்படி எல்லோரும் பார்த்தனர். அப்படி பார்க்க வைத்தனர். அன்றைய காலகட்டத்தில், இயக்கத்தில் இருப்பதென்பது ஒருவகை கீரோத்தனமாகும். அது அன்றைய சூழலாகவும் இருந்தது. அவ்வாறுதான் அன்றைய இயக்கங்களில் இருந்தவர்களும், தம்மை தாம் காட்டிக் கொண்டனர். மக்களோடு மக்களாக நின்று மக்களை அணி திரட்ட வேண்டியவர்கள், தம்மை ஒரு மேதாவிகள் போல் காட்டி நடந்தனர். மக்கள் மத்தியில் தாம் உயர் நிலையில் உள்ளவர்கள் போலவுமே, காட்டிக் கொண்டனர். இதன் விளைவலேயே, மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளக்க மறுத்தனர். பலர் இன்றும் இயக்கங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்தன என்று கூறவரலாம். அவர்களின் வேலை முறை, மக்களை போராட்டத்திற்கு ஏற்ப வளர்த்து எடுக்காது, மாறாக உணர்ச்சிகளின் அடிப்படையில் மக்களை திரட்ட முற்பட்டதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.

அக்காலகட்த்தில் தான் எனக்கு எனது உறவினரில் ஒருவரான சுகந்தன் என்பர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் வேலை செய்தார். அவர் மூலம் என்னை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் பெயர்ப் பதிவற்ற அடிநிலை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். ஒரு கொஞ்சக் காலம் எனது ஊரிலேயே துண்டுப் பிரசுரங்களை எடுத்துச் சென்று மக்களிடம் பரப்புகின்ற ஆரம்ப வேலைகளை செய்து வந்தேன். அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களை, மக்கள் மத்தியில் பரப்புவதுடன், அக்கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டேன். அத்துடன் ஆரம்பப் போராளிகளுக்காக நடைபெறும் பாசறைகளிலும், தவறாது கலந்து கொண்டேன்.

இங்கு முக்கியமாக பாசறை பற்றி எனது அனுபவத்தை கூற முனைகின்றேன். பாசறை என்பது ஆரம்ப தோழர்களுக்கு நடத்தப்படும் அரசியல் வகுப்பாகவே இருந்தது இதில் ஆரம்ப மட்ட உறுப்பினர்களை அணி திரட்டி, அரசியல் முதிர்ச்சி பெற்ற ஓருவரால் அரசியல் வகுப்பு நடத்தப்படும். அங்கு மார்க்சியம், லெனினியம், கருத்துமுதல் வாதம், தேசிய இனப்பிரச்னை, மற்றைய இயக்கங்களை குறை கூறுவது என்ற பதங்களின் கீழ் தான் அதிகமாக அரசியல் வகுப்புகள் இடம்பெறும். இதில் தேசிய இனப்பிரச்சனை குறித்து இன்றைய எனது பார்வையின் அடிப்படையில், அன்று வகுப்பு நடத்தியவர்களுக்கு ஒரு சரியானதும் அத்துடன் இயங்கியலின் அடிப்படையிலான புரிந்துணர்வோ அல்லது விளக்கமோ இருக்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்பதுடன் மற்றைய இயக்கங்களின் பார்வையில் இருந்து நாம் எவ்வாறு விலகி நிற்கின்றோம் என்பதே அவர்கள் மத்தியில் இருந்து நாம் கற்றுக்கொண்டது. தேசியவாதமானது ஒரு முதலாளித்துவத்தின் அடிப்படையிலேயே உள்ளது என்பதை மறுத்தே, அதை சோசலிச கொள்கைகளுடன் போட்டுக் குழப்பினார்கள். மார்க்சியம் என்றால் என்ன என்பதற்கு பதிலாக, தாம் தம் இயக்கத்துக்கு எற்ப எதை மார்க்சியமாக (சோவியத் நூல்களில்) கற்றனரோ, அதை அப்படியே அடிமட்டத் தோழர்களான எங்களுக்கு முன்வைத்தனர். எனக்கு இவர்களின் இச் சொற்பதங்கள் எதுவுமே விளங்கவில்லை. உதாரணத்திற்கு குட்டி பூர்சுவா, லும்பன் போன்ற பதங்கள். இவற்றை என்னவென்று விளக்கம் கேட்க முடியாது. இப்பாசறை என்பது இரண்டு மூன்று நாட்கள் நடக்கும். சில ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும். இந்த ஒரு வாரத்திலேயே பலர் தமக்கு அரசியல் அறிவு வந்து விட்டது என்று, அவர்களும் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு விடுவார்கள். என்ன பிரச்சாரம் என்றால் தமது கொள்கைகளை விளக்குவதை விடவும், மற்றைய இயக்கங்களை குறை கூறுவதே பிரச்சாரமாக இருந்தது. பிற்காலத்தில் பாசறை என்ற பெயரால் பல தில்லு முல்லுக்கள் நடத்ததாக, கொக்குவிலைச் சேர்ந்த ஐயுப் என்ற நண்பர் பின்தளத்திற்கு வந்த போது பலரிடம் குறிப்பிட்டார்.

இங்கு இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள் என்று கூறப்பட்டவர்கள், இன்று தாம் எதை அன்றிருந்த அடிமட்ட தோழர்களுக்கு கூறினார்களோ அதற்கு எதிரான ஆக்கங்களை எழுதுவதுடன் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். உண்மையில் இவர்களின் இந்த சமவுடமை தத்துவத்திற்கான அடிப்படை என்னவென்றால், ஒரு வித கீரோயிசமாகவே இருந்தது.

தொடரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

plote.uma-013.jpg

மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக் கொள்ளும் கனவுடன்...

 

1984 ஆரம்பப் பகுதியிலேயே இராணுவப் பயிற்சி எடுப்பதற்காக இந்தியாவிற்குச் (பின்தளம்) செல்ல விரும்பினேன். ஆனால் அன்றை சந்தர்ப்பத்தில் முடியவில்லை. அப்போதுதான் என்னுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்து இராணுவப் பயிற்சி எடுப்பதற்காக இந்தியா சென்றனர். நானும் அவர்களுடன் செல்ல முற்பட்ட போது, என்னை நிற்கும் படியும் தாம் சென்ற பின்னர் வரும் படியும் எனது வகுப்பு மாணவர்கள் கூறிச் சென்றனர்.

சில மாதங்கள் கழித்து 19.04.1984 அன்று எனக்கு இராணுவப் பயிற்சி எடுக்க இந்தியாவிற்கு செல்ல வாய்புக் கிட்டியது. என்றும் இல்லாதவாறு அன்று என் மனதில் பல சந்தோசக் கனவுகள், படங்களாக வந்து போயின. என்ன,

ஒரு மூன்றே மாதத்திலேயே பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கைக்கு (தளத்திற்கு), அதாவது சொந்த மண்ணுக்குத் திரும்பிவிடலாம், என்ற எண்ணங்களுடன் எனது ஆயுதப்பயிற்சிக்கான பயணம் ஆரம்பித்தது.

அன்று என்னை சுகந்தன் என்பவர் எனது ஊரில் இருந்து மானிப்பாய்க்கு கூட்டிச்சென்றார் அங்கு எமக்காகக் காத்திருந்த நேசனிடம் எம்மை ஒப்படைத்தார். அவர் என்னையும் என்னுடன் வந்த முரளி அழகன் என்பவரையும் இளவாலைக்கு அழைத்துச் சென்றார். என்னைப் போலவே வேறு சில தோழர்களும் இளவாலைக்கு வந்திருந்திருந்தார்கள். ஆனால், எங்களை அன்றிரவு தமிழ் நாட்டுக்கு படிகில் ஏற்றவில்லை. காரணம் இலங்கை கடற்படையின் ரோந்து நடவடிக்கைகள் அதிகமாகவிருந்தது. அதனால் மறுநாள் எம்மை படகில் ஏற்றினார்கள். நாங்கள் தமிழ் நாட்டுக்கு பயணிக்கின்றோம். எங்களுக்கு ஓட்டியாக வந்தவர் தோழர் பாண்டி. அன்று நாம் பயணித்த போது கடலில் பலத்த கொந்தளிப்பு. அதனால் குறித்த நேரத்திற்கு கோடியாக்கரையை (கோடிக்கரை) எங்களால் அடைய முடியவில்லை.

இரவு முழுவதும் படகை கடலிலேயே தரித்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. படகு அலையின் கொந்தழிப்பால் அங்குமிங்குமாக அலைந்து ஆட்டங்காட்டியது. நாம் கடலுக்குள் மூழ்கப் போகிறோமென என் மனதில் எண்ணங்கள் அலை பாய்ந்தது. எமது வாழ்க்கை முழுமையாக முடிந்து விட்டது போன்றதொரு பயம் என்னை ஆட்கொண்டது. என்ன செய்வதென்று புரியாமல் அந்தப்படகின் ஓர் ஓரத்தில் முடங்கினேன். அழுகை தானாக வந்தது. கடல் அவ்வப்போது எங்களை நனைத்துக்கொண்டது.

கண்களும் கரித்தது. அது கடல் நீரா, கண்ணீரா என்பதைப் புரியாத நிலையில் ஏதோ நாவிலும் உவர்த்தது. அந்தக் கடல் அலையின் எழுற்சியும், உப்புக் காற்றும், படகின் பயங்கர ஆட்டமும் கலந்து ஏற்படுத்திய மனக் குழப்பத்தால் எனக்கு வயிற்றைக் குமட்டி, வாந்தி எடுக்கத் தொடங்கினேன். வாந்தி எடுப்பது எனக்கு பெருந்தொல்லை தந்தது. அந்த அசதி காரணமாக இருக்கலாம், நான் என்னையும் அறியாமல் ஆழ்ந்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை, தோழர் பாண்டி எங்களை ஒரு கடற்கரையில் இறக்கினார். அந்தக் கரையோர மக்கள் எங்களைக் கண்டதும், ஆமா நீங்க விடுதலைப்புலிங்களா! என விசாரிக்க ஆரம்பித்தனர். நாம் ஒன்றுமே பேசாது நின்றோம். தோழர் பாண்டியே அவர்களுடன் கதைத்தார். அந்தக் கதைகளெல்லாம் என் காதிலும் விழுந்தது. இங்கு எல்லோரையுமே விடுதலைப்புலிகள் என்றுதான் அழைக்கிறார்கள் என்பதனை அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஆனால் அதில் ஒருவரிடம் பாண்டி கூறினார், நாம் "முகுந்தன் பார்ட்டி"..., இவ்வாறு சம்பாசனைகள் நடைபெற்றது. அப்படியே அந்தக் கடற்கரையில் நேரம் கழிந்தது. மதியம்போல் எம்மை அழைத்துச் செல்ல ஒரு வண்டி வந்தது. அதில் எல்லோரையும் ஏறும்படி கூறினார்கள். நாமும் ஏறினோம். இரண்டு அல்லது மூன்று மணிநேர ஓட்டத்தின் பின்னர், ஒரு சிறிய ஊரை அடைந்தோம். அங்கிருந்து பஸ்வண்டி மூலம் எம்மை பட்டுக்கோட்டை என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு நகரம். அங்கிருந்து மீண்டும் தஞ்சாவூர் நோக்கிச் செல்லும் பஸ்வண்டியில் ஏற்றினார்கள். அந்தப் பயணத்தின் இடையில் நாம் இறக்கப்பட்டோம். அங்கிருந்து சிறுதூரம் நடந்து ஒரு வீட்டை அடைந்தோம். அது இயக்கத்தின் ஒபீஸ் (காரியாலயம்) என்றார்கள். அங்கு எம்மைப்போன்று பலர் இருந்தனர். அவர்களும் இராணுவப்பயிற்சிக்காக வந்தவர்கள் என்பதை என்னால் உணர முடிந்தது.

ஆனால் எம்மை அழைத்து வந்தவர் எவருடனும் கதைக்க வேண்டாம் என்று கூறியபடி எம்மை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே சென்றதும் எம்மை தனிமைப்படுத்தினர். அப்போது அங்கு வந்த ஒருவர், உங்கள் சொந்தப் பெயர்களை இனி நீங்கள் பாவிக்க முடியாது, புனை பெயர்களைத்தான் பாவிக்கவேணும் என்றார். அப்போது ஒவ்வொருவரும் தங்களின் உறவினர், காதலி, நண்பன் என அவர்களின் பெயர்களை தமது புனை பெயராக வைத்தனர். எனக்கோ எந்தவித அபிப்பிராயமும் இல்லாததால், நான் காந்தன் என்று வைக்க உத்தேசித்தேன். சிறிது நேரம் கழித்து, தனித்தனியாக எம்மை ஒரு அறைக்குள் வரச்சொன்னார்கள். அதன்படி ஒவ்வொருவராக உள்ளே சென்று வந்தனர். நானும் உள்ளே சென்றேன். அங்கே எனது சொந்தப் பெயர், ஊர், வீட்டு விலாசம் என்பவற்றைப் பதிந்தார்கள். எனக்கு சுட்டிலக்கமும் தரப்பட்டது. எனது இலக்கம் 1825 என்றும், எனது புனைபெயர் காந்தன் என்றும், இனி இந்தப் பெயர்தான் பாவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அன்று இரவு அங்கேயே தங்கினோம்.

மறுநாள் காலை எழுந்ததும், ஒருவர் எம்மை அழைத்தார். இன்று பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் எனக் கூறினார். மதியமளவில் ஒவ்வொருவருக்கும் ஒரு அலுமினியக் குவளை, தட்டு, காற்சட்டை, பெனியன் மற்றும் போர்வையுடன், படுப்பதற்காக இருவருக்கு ஒரு பாய் எனச்சொல்லி தந்தார்கள்.

பிற்பகல் ஒரு லொறியில் எம்மை ஏறச்சொன்னார்கள். நாம் அதில் ஏறும்போது எமது உடமைகளுடனேயே ஏறினோம். அந்த வண்டியில் சமையலுக்கான பொருட்கள் இருந்தன. அவற்றை கண்டதும் என் மனதில் முதல் குழப்பம் ஏற்பட்டது. வண்டி புறப்பட்டு அரை மணிநேர ஓட்டத்தின் பின்பு, ஒரு சவுக்கு மரக்காட்டை நோக்கி திரும்பியது.

அப்படியே சற்று நேரம் ஓட திடீரென ஒரு இடத்தில் வண்டியை நிறுத்து, கையை உயர்த்து (STOP, Hands UP) என்றதும் எனக்கு பயம்பிடித்தது. சற்று நேரத்தில், வாகனச்செலுத்துனரும், நிறுத்தக் கூறியவரும் தமிழில் உரையாடத் தொடங்கியதும் எனது பயம் தணிந்தது. அவர்கள் எமது வண்டியை அனுமதிக்க, வண்டி முகாமிற்குள் நுழைந்தது.

நாம் சென்றது இரவு என்பதால் எனக்கு எங்கிருந்து எங்கு வந்துள்ளோம் என்பது சரியாக தெரியாத நிலையில் எனக்கு எல்லாமே ஒரு விசித்திரமாகவும், பயமாகவும் மனதிற்பட்டது.

அங்கு எம்மை வரவேற்க முகாமின் பொறுப்பாளர் மதன் மற்றும் உதவிப் பொறுப்பாளர் பாண்டியும் அங்கு நின்று கொண்டிருந்தனர் . இவர்களில் பாண்டி ஜேர்மனியில் இருந்து இராணுவ பயிற்சிக்காக வந்து பதவி உயர்வு பெற்றவர். நாம் வண்டியால் இறக்கப்பட்டதும் ஓர் இடத்தில் அமரும்படி கூறினார்கள். வண்டியில் இருந்த பொருட்களை இறக்கிய பின்னர் வண்டி புறப்பட்டது.

அதன் பின்பு முகாமின் பொறுப்பாளர் தன்னை அறிமுகம் செய்தார். தனது பெயர் மதன் என்றும், மற்றவரைக்காட்டி இவர் தோழர் பாண்டி என்றும் கூறினார். அதன் பின்பு இரவுப் படுக்கைக்கான வசதிகளையும் செய்து தந்தனர்.

எல்லோருக்கும் போலவே எனக்கும் தளத்தில் இருந்து வந்த பிரயாணக் களைப்பு இருந்தது. அன்றிரவு நான் நன்றாகவே உறங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்து பார்த்தேன். முகாமில் அதிகமானோரைக் காணவில்லை. முகாம் பொறுப்பாளர் எம்மை நோக்கி வந்தார். நீங்கள் காலைக் கடனை முடித்து விட்டு வாருங்கள் எனக் கூறினார். எமக்கு உதவிக்காக ஒரு தோழரையும் அனுப்பினார். அவர் சவுக்கம் காட்டைக் காட்டி, அங்கு மலம் கழித்துவிட்டு வாருங்கள் என்றார். எனக்கோ என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை. என்னை போல் அனைவரும் திகைத்துப் போய் நின்றார்கள். சற்று நேரத்தின் பின், சிறிது தூரம் நடந்தபின், ஒரு குளாய் கிணற்றைக் காட்டி.., அங்கே முகம் கழுவிவிட்டு வாருங்கள் என்றார். அவ்வாறே செய்து முகாம் நோக்கி திரும்பினோம்.

அவ்வேளையில் காலைப் பயிற்சி முடித்துத் திரும்பிய தோழர்கள், முகாமின் முற்றத்தில் வரிசையாக நின்றார்கள். அப்போது அங்கு முகாமின் மையப்பகுதியில் நின்ற கொடிக் கம்பத்தில், கழகக் கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்பு சற்று நேரம் உரையாடினார்கள். திடீரென விசில் அடித்தது. எல்லோரும் கலைந்து சென்றார்கள். மீண்டும் ஒரு விசில் கேட்டது. தட்டு மற்றும் குவளையுடன் எல்லோரும் ஓடிச்சென்று சமையல் பகுதிக்கு முன்னாக வரிசையில் நின்றனர். நாமும் சென்றோம். முகாமின் பொறுப்பாளர்

அங்கு வந்து, எமக்கே இன்று முதலிடம், உணவை எமக்கு முதல் பரிமாறும் படி கூறினார். அவித்த கடலையும் தேனீரும் தந்தனர்.

தொடரும்

 

 

 

சீலன் (2010)https://poovaraasu.blogspot.com/

PloteTraining.jpg

 தண்டனை முகாமை எல்லோரும் "நாலாம் மாடி" என்பார்கள்...

எனக்கு முன்பாகவே இராணுவப் பயிற்சிக்கு வந்திருந்த, என்னைத் தெரிந்தவர்களும், என்னுடன் கல்விகற்றவர்களும் எனதருகில் வந்தனர். தமது உறவினர்கள் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். பலர் தமது தாய் தந்தை சகோதரர்களையே விசாரித்தனர். சிலர் தமது காதலிகளைப் பற்றியும் விசாரித்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் இவர்களில் பலர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பால் உந்தப்பட்டோ, விடுதலை விரும்பியோ இராணுவப் பயிற்சிக்கு வரவில்லை. மாறாகப் பலர் காதலில் தோல்வியுற்ற உணர்வாலும், பெற்றோருடன் கோவித்துக் கொண்டும் இயக்கத்திற்கு வந்தவர்கள் அல்லது தன்னைத் தனது சமுதாயத்தில் அடையாளப்படுத்துவதற்காக கவர்ச்சி வாதத்தால் உந்தப்பட்டே வந்தவர்களாவார். இதனால் அவர்களிடம் எந்தவித அரசியல் தெளிவும் இருக்கவில்லை.

ஏன் மக்கள், சமூகம் பற்றிய பார்வை கூட சரியாக இருக்கவில்லை. மாறாக தாம் இராணுவப் பயிற்சிக்கு வந்த இடத்தில் தமது திறமைகளைக் காட்டுவதும், முகாம் பொறுப்பாளர்களுக்கு விசுவாசமாக இருப்பதுவுமே முக்கியமானதாகக் கருதினர் .

10.30 மணியளவில் விசில் சத்தம் கேட்டது. எல்லோரும் மைதானத்தில் அணிதிரண்டோம். அங்கே ஒருவர் சத்தம் போட்டவாறு அணிவகுப்பிற்கான ஒழுங்குகளைச் செய்தார்.

தோழர் லெனின் என்ற முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி, அணிவகுத்து நின்றோருக்கு பயிற்சிகளை ஆரம்பித்தார். நாம் அதைப் பார்த்தபடி இருக்கும்போது, என்னுடன் வந்தவர்களில் சிலர் மனம் நொந்தவர்களாக முகத்தை முகம் பார்த்தனர். அப்படியே பலதும் பத்துமாக மெதுவாகக் கதைக்க ஆரம்பித்தோம். நீங்கள் இப்பிடிக் கதைக்க வேண்டாமென, எங்களுக்கு உதவிகள் செய்யவதற்காக அங்கே நின்ற தோழர் சொன்னார். ஏதாவது தவறாகவோ அல்லது நக்கலாகவோ கதைத்தால் தண்டனை கிடைக்கும் என்றார். எனக்கு அப்போ இந்தத் தண்டனை என்றால் என்னவென்று விளங்கவேயில்லை. சற்று தூரத்தில் ஒரு தோழர் மைதானத்தைச் சுற்றி குத்துக்கரணம் அடித்துக் கொண்டிருந்தார். அவரைக் காட்டி, இதுதான் தண்டனை (பணிஸ்மன்ற்) என்றதும் எனக்கு பயம் பிடித்தது.

பின்னர் மதியம் உணவிற்கு விசில் அடிக்க எல்லோரும் வரிசையாக நின்றனர். உணவு பரிமாறப்பட்டது. சிலர் மிக விரைவாக உண்டனர். ஏனென்று அன்று எனக்குப் புரியவில்லை. அதற்கு காரணம் உணவு உண்டு கொண்டிருக்கும் வேளையில் திடீர் என அபாய ஒலி எழுப்புவார்கள். உடனேயே உணவை வைத்துவிட்டு, தமக்கு என கொடுக்கப்பட்ட இடங்களில் போய் பதுங்கி இருத்தல் வேண்டும். அபாய ஒலி எழுப்பிய பின்னர் யாராவது தொடர்ந்து உணவு உண்டாலோ அல்லது ஓடும் போது உணவு தட்டுகளை கவனித்து விலத்தி ஒடினாலே அவர்களுக்கும் தண்டனை தான். இது பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே தான் எல்லோரும் உணவை விரைவில் உட்கொண்டனர்.

உண்டவர்கள் தமது முகாமிற்குள் (கொட்டிலிற்குள்) சென்று உறங்க முற்பட்டனர். அவ்வேளை முன்பு வந்தவர்கள் சில புத்தகங்களை எடுத்து வாசித்தனர். இங்கு இருந்த புத்தகங்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். அதாவது மொஸ்கோ பதிப்பக புத்தகங்கள், இடதுசாரியப் புத்தகங்கள் தான் அதிகமாக காணப்பட்டது. அதைவிட உள்நாட்டு பத்திரிகைகளும், வேறு சில புத்தகங்களும் இருந்தன. இதில் எடுத்து படிப்பவர்கள், மொஸ்கோ பதிப்பக புத்தகங்களை படிப்பது கிடையாது. மாறாக உள்நாட்டு செய்தித் தாள்களையும், கதைப் புத்தகங்களையுமே வாசித்தனர். இதற்கு அடிப்படைக் காரணம், அங்கு பயிற்சியில் ஈட்டவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கப்படாமையே.

அரசியல் அற்ற சுத்த இந்திய இராணுவ முறையிலான பயிற்சியாகவே இருந்தது. இந்த இராணுவப் பயிற்சி முகாமில் அரசியல் வகுப்பு எடுப்பதற்கு என ஒரு நபர் கூட இருக்கவில்லை. அங்கு பயிற்சி கொடுத்த மதன், பாண்டி என இருவரும் இந்திய இராணுவத்தினரால் உத்தரப்பிரதேசத்தில் வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் என்பதுடன், அன்றைய அனைத்து முகாம்களின் பொறுப்பாளராக இருந்தவர் பரந்தன் ராஜன். இவர்களுக்கோ அல்லது அன்று மத்திய குழுவில் இருந்தவர்களுக்கோ, அரசியல் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. ஆனாலும் பின்னாளில் தேனீ மற்றும் புதுக்கோட்டை முகாம்களில் அரசியல் கற்பிக்கப்பட்டதாக அறிந்தேன். அது எந்தளவு உண்மை என்பது எனக்குத் தெரியாது. நான் இங்கு குறிப்பிட்ட முகாம், பீ காம். இது 400க்கு மேற்பட்ட தோழர்களை கொண்டிருந்தது. இதில் எமக்கு ஐந்து மாதங்களுக்கு முன்வந்தவர்கள் உட்பட, ஒவ்வொரு நாளும் வரும் புதியவர்களும் இணைக்கப்பட்டனர். தளத்தில் இருந்து வந்தவர்களுக்கு அரசியல் வகுப்புக்கள் எடுத்து, அதன் பின்னர் ஆயுதப் பயிற்சியை கொடுத்திருந்தால் அரசியல் அறிவு கலந்த ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கியிருக்க முடியும்.

மாறாக தளத்தில் முதல் நாள் அடிமட்ட உறுப்பினராக சேர்ந்தவரைக்கூட, இங்கு அனுப்பி வைத்தார்கள். தளத்தில் இயக்கத்திற்காக வேலை செய்தவர்கள் தாம் அரசியல் அறிவு ஊட்டப்பட்டவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட போதும், அமைப்புக்கு இணையும் தோழர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று இவர்களில் எவரும் எண்ணியதாகத் தெரியவில்லை.

அன்றைய காலகட்டத்தில் யார் எந்த இயக்கத்துக்கு போவது என்பதைக் காட்டிலும், எந்த இயக்கத்திலாவது போய் பயிற்சி எடுத்து வரவேண்டும் என்ற ஆர்வம்தான் பல இளைஞர்களிடம் காணப்பட்டது. ஒரு நாள் ஒரு இயக்கம் அவரை ஏற்க மறுத்தால், மறுநாள் மற்ற இயக்கம் அவரை பயிற்சிக்கு இந்தியாவிற்கு அனுப்பிவிடும். எனவே தளத்தில் விடுதலை இயக்கத்திற்கு ஆட்சேகரிப்பு என்பதிலும் பார்க்க, சும்மா போனவன் வந்தவனை எல்லாம் அனுப்பினர்.

எந்த அமைப்பில், அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கின்றனர் என்று காட்ட முயன்றார்கள். இதன் விளைவே பிற்காலத்தில் எமது போராட்டம் சிதைவடைந்த நிலைக்குப் போனதற்கான காரணிகளில் ஒன்றாகும் .

மதியத்துக்கு பின்பாக எல்லோரையும் குளிக்க அனுமதித்தனர். எல்லோரும் சென்று குளித்தனர். மாலை 6 மணிக்கு ஒரு விசில். எல்லோரும் மீண்டும் மைதானத்தில் சாரத்துடன் அணி திரண்டனர். அங்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த கலை இலக்கிய வடிவங்களைச் செய்து காட்டினர். அதன் பின்பு இரவு உணவு. அனைவரும் நித்திரைக்கு சென்றனர். அப்போது என்னுடன் ஒன்றாகப் படித்த நண்பர்கள் சிலர் என்னைச் சந்தித்து, தங்கள் மனந்திறந்து மெதுவாகக் கதைத்தனர். அவர்கள் தமது அனுபவத்தை ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, எனது மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது. அவர்கள் என்னைப் பார்த்து, நீ எதற்கும் வாயைத் திறக்காதே என்றனர். ஏனென்று பின்பு ஆறுதலாகக் கதைக்கலாம் எனச் சொல்லி, நித்திரைக்குச் சென்றனர். அன்று நான் தூங்கவில்லை. காரணம் பயம். அடுத்தது அப்போது தான் முதற் தடவையாக வீட்டாரைப் பிரிந்துவந்த கவலை, என்னைப் பெரிதும் வாட்ட ஆரம்பித்தது.

மறுநாள் காலை 4.30 மணிக்கு விசில் சத்தம் கேட்டது. என்னையும் எழுப்பினர். நானும் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் என்ன செய்கின்றனரோ அதையே செய்தேன். காலைக்கடன் முடித்து தேனீர் அருந்தியதும் மைதானத்தில் அணிவகுக்கும்படி கூறினார்கள். நாமும் நின்றோம். இன்று உங்களுக்கு பயிற்சி ஆரம்பமாகிறது எனக்கூறி எம்மை மற்றவர்களின் பின்னால் வரும்படி கூறினர். நாமும் அவர்களைப் பின் தொடர்ந்தோம். சற்றுத் தூரம் சவுக்குமரக் காட்டிற்குள்ளால் சென்ற பின்னர், ஒரு திறந்தவெளி மைதானத்தை அடைந்தோம். அங்கே பயிற்றுனர் காத்திருந்தார். அவர் அந்த மைதானத்தைச் சுற்றி ஓடும்படி உத்தரவிட்டார். ஒரு சுற்று ஓடியதும் என்னால் முடியவில்லை. ஒருவாறு இரண்டாம் சுற்றும் ஓடினேன். அதன்பின்பு நான் களைத்து நிற்க, இன்று சரி நாளை ஓடவேண்டும் என பயிற்றுனர் கூறினார். அவரது தமிழ் எனக்கு சரியாக விளங்கவில்லை.

நான் பயிற்சி இடைவேளையின் போது எனது நண்பனைக் கேட்டேன், "யார் இவர் எனக்கு இவரது கதை விளங்கவில்லையே" என்றேன். இவர் தமிழ் நாட்டுக்காரர். இந்திய இராணுவத்தில் முன்பு பணிபுரிந்தவர். இவரது புனை பெயர் லெனின் என்றான். இதனை அடுத்து நாம் பயிற்சியை ஆரம்பித்தோம். இவ்வாறு ஒருசில நாட்கள் கடந்தன.

அப்போது ஒரு தோழர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் முகாமைச் சுற்றி குத்துக்கரணம் அடித்தபடி இருந்தார். ஏனென்று எனக்கு தெரியவில்லை. உனக்குத் தெரியுமா என, ஒரு நண்பனை விசாரித்தேன். அவன் பயிற்சிக்கு வந்து முகாமை விட்டுத் தப்பிச் சென்றவன். அவனை எமது கழகத்தினர் பிடித்துவந்துள்னர். இப்படிப்பட்டவர்களுக்கு தண்டனை இது என்றும் கூறினான். இயக்கப் பயிற்சிக்கு என்று வந்து மனம் சலித்து, பல காரணங்களால் தப்பிச் சென்றாவர்களுக்கு இதுதான் தண்டனை. இதுவே பிற்காலத்தில் மரணதண்டனையாக மாற்றப்பட்டது.

மொட்டையடிக்கப்பட்ட அந்தத் தோழர், அவரின் தண்டனை முடிய முன்னரேயே களைத்து விழுந்துவிட்டார். இவ்வாறான தண்டனையைத் தீர்மானிக்கும் பொறுப்பில் அன்று இயக்கத்தின் தண்டனை முகாமிற்கு பொறுப்பான மூர்த்தி அல்லது மொட்டை மூர்த்தி என்பவன் இருந்தான்.

அப்போது இயக்கத்திற்கு மூன்றே மூன்று முகாம்கள் மட்டுமே இருந்தது. அவையாவன தேனீகாம், புதுக்கோட்டைக்காம், பீ-காம். நான் இருந்தது பீ-காம்பில். இங்குதான் தண்டனைக் கைதிகளும் இருந்தனர். ஆனால் அது வேறு ஒருபகுதியில் இருந்ததால், நீண்ட நாட்களின் பின்புதான் எனக்கு அது பற்றித் தெரியவந்தது. அப்போது பீ-காம்பில் பயிற்சி தருபவர்கள் மதன், பாண்டி என்ற ஊத்தைப்பாண்டி, சங்கர், சாணாக்கியன், மற்றுமொருவரின் பெயர் ஞாபகத்தில் இல்லை. இவர்களுடன் இந்திய இராணுவ அதிகாரியான லெனின். அத்துடன் தண்டனை முகாமிற்கு பொறுப்பாக இருந்தவர் மொட்டை மூர்த்தி. இந்த மொட்டை மூர்த்திக்கு உதவியாளராக கண்ணாடிச் சீலன் இயங்கினார். இவர் பிற்காலத்தில் அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் சித்திரவதை செய்வதற்கு என்று இடியமீன், சவுதி, என்ற இருவருடன் வேறு சிலரும் அம்முகாமில் இருந்தனர் .

தண்டனை முகாமை எல்லோரும் நாலாம் மாடி என்பார்கள். இதைப்பற்றியும் சற்று கவனிக்க வேண்டும். காரணம் இங்குதான் பல கொலைகள் நடந்தேறின. இயக்கத்திற்கு பயிற்சிக்காக வரும் தோழர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்ட இடம் இதுதான். கழகத்தின் தலைமை உறுப்பினர்களில் சொந்த விருப்பு வெறுப்பிற்கு ஏற்றாற்போல கொலைகள் நடந்தேறின. இதை நடத்தியவர்களில் முன்னணி வகித்தவர் வாமதேவனே. இவரை பொறுத்தவரையில், ஒரு போராளி என்ற சொல்லுக்கே அருகதையற்றவர். ஏன் சாதாரண மனிதப்பண்புகளே இல்லாத ஒருவர். "நாலாம் மாடி" யில் தான் சித்திரவதைகள் நடத்தப்படும். சித்திரவதை என்றவுடன் பலரும் சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதையை நினைப்பீர்கள். ஆனால் அதைவிட பலமடங்கு வக்கிரமானது.

அவற்றின் விபரம்:

1. தாம் களைக்கும் வரை ஒருவரை அடிப்பது. குறிப்பாக குதிக்கால் மற்றும் முதுகொலும்புப் பகுதியில்

2. கண்ணுக்குள் மிளகாய் தூள் போடுவது

3. ஒரு கோப்பை பச்சை முழகாயைச் சாப்பிடச் சொல்லது. இல்லையேன்றால் மயங்கும் வரை அடி, அதன் பின்னரும் சாப்பிடவே வேண்டும்.

4. நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்டு தலையில் காலால் உதைவது

5. கைகள் கால்கள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் உளண்றியில் (கப்பியில்) தொங்கவிடுவது

6. விரல் நகங்களைப் பிடுங்குவது

7. கையிலோ தொடையிலோ பிளேட்டால் வெட்டி, அந்தக் காயத்தின் உள் மிளகாய் தூள் போடுவது.

8. அதே காயத்தில் பின்னர் வெடிமருந்து அடைந்து, அதைக் கொழுத்தி விடுவது

9. மலவாயிலினுள் போத்தல் அல்லது தடியை நுழைப்பது

இவை எனது ஞாபகத்தில் உள்ளவை. இன்னும் பல. இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாக்கப் படும்போதே பலர் இறந்து விடுவார்கள். தளத்தில் இருந்து எதையுமே சிந்திக்காது, பலிக்கடாக்களாக இளைஞர்களைச் சேர்த்து அனுப்பும் ஒரு கூட்டம் இயங்கியது. இவர்களுக்கு தாம் யாரையாவது பிடித்து அனுப்பிவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் இயங்கினார்கள். ஆனால் அனுப்பப்பட்டவர்களின் கதி பயங்கரமானதாகவே இருந்தது. பல நூற்றுக்கணக்கானோரை அனுப்பினோம், எல்லோருக்குமா இப்படி நடந்தது என்று சிலர் கேட்கலாம். ஏறத்தாள அனேகமானோர் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே.

 

 

 

 

தொடரும்

 

 

 

சீலன் (2010)https://poovaraasu.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
plote.uma-001.jpg

தேச விடுதலை, பாட்டாளி வர்க்க புரட்சி 

எமது பயிற்சியின் ஆரம்பத்ததில் இருந்து பல புதிய விடயங்களைக் கற்றோம். அதேவேளை எனது வீட்டார் தொடர்பான கவலையும் அதிகரித்தது. இப்படி கிட்டத்தட்ட ஒரு 15 நாள் போயிருக்கும், திடீரென ஒரு நாள் முகாமில் பரபரப்பு. பல முக்கிய உறுப்பினர்கள் வழமைக்கு மாறாகவே முகாமிற்கு வந்து போக ஆரம்பித்தனர்.

எம்மிற் பலருக்கு எம்மைச் சுற்றி என்ன நடக்குதென்று தெரியாததனால், அதை அறிந்து கொள்ள எல்லோருமே விரும்பினோம். அப்போது தான் உமா மகேஸ்வரனுடன் வெளிநாட்டுக்குச் சென்று பி.எல்.ஓ பயிற்சி பெற்ற பி.எல்.ஓ விச்சு என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் புளாட்டின் தண்டனை முகாமில் உள்ளார் என்றும் கூறினார்கள். அவரைப் பார்க்க பலரும் விரும்பினர்.

அதனால் தண்டனை முகாமிற்கு அருகாமையில் காவலுக்குப் போவதற்குப் பலர் விருப்பப்பட்டனர். நான் தண்டனை முகாமிற்கு அருகாமையில் காவல் புரியப் பணிக்கப்பட்டேன். அந்த முகாமிலிருந்து ஐயோ... அம்மா... என்ற அலறல்கள் கேட்கும். எனது தோழர்களிடம் என்ன இது, யாரென்று கேட்டேன். அது சிறீலங்கா அரசின் உளவாளி என்றும், அவர் பெயர் மாணிக்கம் என்றும் கூறினர். அவருக்கு இரவு வேளைகளில் சித்திரவதைகள் நடப்பது வழக்கம் என்றனர். அந்தச் சித்திரவதை முகாமில் வேறு பலரும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எமக்குக் கூறப்பட்டது ஒருசிலரின் பெயர்களே. சிறிலங்கா அரசின் உளவாளி என்று கூறப்பட்ட மாணிக்கம் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றி எனக்கு முற்று முழுதாகத் தெரியாவிட்டாலும், எனக்கு தெரிந்தவற்றை இங்கு பதிவு செய்யலாமென நினைக்கிறேன் .

அவரின் கையை பிளேட்டால் வெட்டி, அவ்வெட்டுக் காயத்திற்குள் வெடிமருந்தை நிரப்பி அதைக் கொழுத்தி விட்டுருந்தனர். அவரின் சிறுநீரையே அவருக்குக் குடிக்கக் கொடுத்திருந்தனர். ஊளன்றியில் தலைகீழாக தொங்க விட்டு (இது அதிகம் எல்லோருக்கும் நடக்கும்) அடிப்பார்கள். இதை விட பல வகை. தற்போது இதை நினைவுக்கு கொண்டு வரவே பயமாக இருக்கின்றது. சிறிலங்கா இராணுவத்தினர் எமது தோழர்களையும், தமிழ் மக்களையும் கைது செய்து சித்திரவதை செய்கின்றார்கள் என்று, நாட்டில் பக்கம் பக்கமாக எழுதியும், சுவரொட்டிகளில் ஒட்டியும் இருந்தவர்கள், இங்கு அதையே ஈவிரக்கமின்றி செய்தார்கள்.

மாணிக்கம் என்பவர் மட்டுமல்ல, அங்கு பலர் இருந்தனர். எனக்கு மற்றவர்களின் பெயர்கள் மறந்து விட்டது. இதில் ஒரு சிலர் சித்திரவதையால் இறந்திருக்கக் கூடும். ஆனால் விச்சுவிற்கு சித்திரவதை நடந்ததாக நான் அறியவில்லை. அவரின் கூடாரத்திற்கு அருகில் காவல் காக்கச் செல்பவர்கள், விச்சுவுடன் கதைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர் . கதைப்பவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அனேகமானோர் அவருடன் கதைப்பதில்லை. முகாம் பொறுப்பாளர்கள் மட்டுமே அவருடன் கதைத்தனர். அதிலும் குறிப்பாக மதன் என்பவரே அவருடன் கதைத்தார்.

திடீரென ஒருநாள் நள்ளிரவு முகாமின் பாதுகாவலர்களால், பாதுகாப்பு மணி ஒலிக்கப்பட்டது. எல்லோரும் எழுந்து முகாமின் பாதுகாப்பு வலையத்திற்குச் சென்று முகாமுக்கான பாதுகாப்பில் ஈடுபட்டோம். வழமையாக பாதுகாப்பு மணி ஒலிக்க வைக்கப்படுவது பயிற்சியாக நடத்தப்படுவது வழக்கம், அவ்வாறாயின் சற்று நேரத்தில் எம்மை மைதானத்திற்கு அழைத்து பின்னர் முகாமிற்கு அனுப்புவார்கள். அன்று வழமைக்கு மாறாக, நீண்ட நேரமாகியும், எம்மை எழுந்து செல்ல அனுமதிக்கவில்லை. எல்லாத் தோழர் மத்தியிலும் கேள்வி எழ ஆரம்பித்தது. எல்லோருமே மெதுமெதுவாக கதைக்க ஆரம்பித்தனர்.

அவ்வேளை காவற் கடமையில் நின்ற தோழர்களை சிலர் அழைத்து காரணம் கேட்டனர். அதற்கு புலிகள் எங்கள் முகாமைத் தாக்க முற்பட்டனர் என்றும், அதனாலேயே இது நடக்கிறது என்றும் கூறப்பட்டது. ஆனால் இது கட்டுக்கதை என்பதை பின்னர் அறிந்து கொண்டோம்.

இவ்வாறு தான் மாற்று இயக்கங்கள் மீது, வெறுப்பையும் விரோதத்தையும் வளர்க்க ஆரம்பித்தனர். புலிகளுடன் மட்டுமல்ல மற்றைய இயக்கங்களுடனும், இவர்கள் பகை உணர்வையே கொண்டிருந்தனர். இதையே பயிற்சி முகாமில் உள்ளவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தனர். இதனாற் பலர் மற்றைய இயக்கங்களை விரோதிகளாகவும் பார்க்கலானார்கள். இதன் விளைவு தான் பிற்காலத்தில் சங்கிலியுடன் இணைந்து செயற்பட்ட, இடியமீன் போன்றவர்களை உருவாக்கியது.

அதிகாலையாகி வெளிச்சம் வர ஆரம்பித்தது. எம்மை மைதானத்திற்கு அழைத்தனர். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, விரைவாக வருமாறு கட்டளை பிறப்பித்தனர். எல்லோரும் கலைந்து சென்றவாறே, மெதுவாகக் கதைக்க ஆரம்பித்தோம். காரணம் எம்மை கண்காணிப்பதற்கும், மாட்டி விடுவதற்கும் எமக்குள்ளேயே ஒற்றர்கள் இருக்கின்றனர் என்ற சந்தேகமே ஆகும்.

சில விபரங்களை அறிந்தவர் என்ற வகையில் எமக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரிடம், என்ன நடந்தது எனக் கேட்டேன். பி. எல். ஓ விச்சுவை மதன் என்பவர் காப்பாற்றி, அவருடன் தப்பிச் சென்று விட்டாராம் என்று கூறினார். எனக்குப் பயம் தொட்டது. காரணம் முகாம் பொறுப்பாளரே இப்படி என்றால்.., என்ற பயம் தான் அது.

எத்தனை நாட்கள் கடந்து போயின என்பது எனக்குத் தெரியாது. முகாம்களின் அன்றைய பொறுப்பாளர் பரந்தன் ராஜன் திடீரென ஒருநாள் முகாமின் ஆரம்ப தோழர்கள் ஒருசிலரையும், மொட்டை மூர்த்தியின் சகாக்கள் என பலரையும் அழைத்து, ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்றார். அவர்களை எதற்காக, எங்கே கொண்டு சென்றார்கள் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. மறுநாள் காலை நாம் பயிற்சி முடிந்து மைதானத்தில் கூடி நிற்கும் போது, திடீரென மூர்த்தியுடன் வேறு சிலருமாக மதனின் கைகளைப் பிணைத்து விலங்கிட்டு கொட்டனால் அடித்தபடியே இழுத்து வந்தனர். இவன் ஒரு துரோகி, இவனுக்கு அடியுங்கள். எல்லோரையும் பார்த்துக் கைநீட்டிச் சொன்னார். அதை சிலர் ஏற்கவில்லை. வேறு சிலரோ, கைகள் விலங்கிடப்பட்ட மதனை பாய்ந்து பாய்ந்து அடித்தனர்.

ஐயோ அம்மா என்ற கதறலோடு, இரத்தம் உடலால் சீறிப்பாய்ந்தது. ஒரு மனிதனை ஈவிரக்கமின்றி, அடிமேல் அடித்த அந்தச் சம்பவம் என் மனதை பெரிதாகவே பாதித்துவிட்டது. அதனால் எனக்குள் ஒருவித பயமும் ஏற்பட ஆரம்பித்தது. இதில் முக்கியமான விடையம் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன்.

சித்திரவதை முகாமிலிருந்து தப்பித்த மதனும் விச்சுவும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பண்ணையார் வீட்டில் மறைந்திருந்தனர். அவர்களைக் கைது செய்ய முற்பட்டபோது பண்ணையாரும், அவரின் ஆட்களும் தடுக்க முயன்றனர். அப்போது, பண்ணையாரை பரந்தன் ராஜன் சுட்டுக் கொன்றான். இக்கொலை பற்றிய தகவல்கள் அன்றைய தமிழ் நாட்டு வானொலிச் செய்தியிலும் ஒலிபரப்பப்பட்டது . நாம் பயிற்சி பெற்று வந்த இடத்தில், எமக்கு அடைக்கலம் தந்த மக்கள் மீதும், தமது அராஜகத்தையும் தமது பிற்போக்குத் தனத்தையும் பிரயோகித்தது பிளாட் தலைமை. தங்கள் கொலைகார வக்கிரத்தை காட்டும் முகமாகவே, துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இவ்வாறான ஒரு இயக்கமா இது, என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்தது. தமக்கும் இதே நிலமை ஏற்படலாம் என்று பயத்தால், அங்கிருந்தவர்கள் மௌனமாக இருந்தார்கள். இக்காலத்தில் தான், பலர் பயிற்சி முகாமைவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்தனர்.

தமது தாயகத்தை மீட்க, தம்மால் அதிகூடிய கொடையாக தங்கள் உயிரையே கொடுக்க கூடிய தோழர்களின் மனதில், வெறுப்பும் பயமுமே எஞ்சியிருந்தது. அந்த முகாமிற் தங்கிப் பயிற்சி எடுப்பதற்கு எனக்கு கொஞ்சங்கூட விருப்பம் இல்லாமல் போனது. ஒருவாறு நான் எனக்கு சுகயீனம் என்று கூறியதனால், என்னை வைத்தியத்திற்காக ஓரத்தநாட்டிற்கு (இலங்கையிலிருந்து இந்தியா வந்த அன்று நாம் முதற் தடவையாக பயிற்றி முகாமுக்கு வருமுன் சந்தித்த அலுவலகம்) அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மறுநாள் காலை தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கே என்னைப் பரிசோதித்த வைத்தியர், மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதனால் நான் அங்கிருக்கும் முகாமில் சில நாட்கள் தங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது நாம் உறங்குவது மொட்டைமாடியில் தான்.

அங்கு ஒருவர் மிகவும் நகைச்சுவையாக கதைத்தார் அவர் பெயர் நாகேஸ். யாழ்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் வட இந்தியாவில் இருந்து வந்திருந்தார். தான் அமைப்பின் வெளி உளவுப் பிரிவில் வேலை செய்வதாக முதலில் கூறினார். பின்னர் ஒரு இரவு படுக்கும் போது நகைச்சுவையாக, தனது மலவாயில் பெரியையாவிற்காக பெருத்துவிட்டது (எனது குண்டி ஓட்டை பெரிசாகி விட்டது, பெரிசுக்காக) எனக் கூறினார். முதலில் எனக்கு இது விளங்கவில்லை. எனது அருகாமையில் இருந்த தோழரிடம் கேட்டேன் அவரும் தனக்கு புரிவில்லை என்றார். எனக்கோ இது என்ன என்ற அறிய ஆவலாக இருந்தது. அங்கு நீண்ட நாட்களாக வேலை செய்த எனது நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு சில அமைப்பின் விடயங்களை அறிந்தவர் என்பதால், மிகவும் இரகசியமாக இவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர் என்று கூறினார். இதை மற்றவர்கள் அறிந்தால், உனக்கும் எனக்கும் மரணதண்டனை தான் என்றும் கூறினார். இதை கேட்டதும் எனக்கு பயம் பிடிக்க ஆரம்பித்தது.

தேச விடுதலை என்றும், மார்க்சியம் என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும், பேசிய இவர்களிடம் இருந்த நடைமுறை என்பது, ஒரு மாபியா இயக்க நடைமுறையே. தளத்திலோ தமது வயிற்றுப் பசிக்காக தம்மால் எதை செய்ய முடியுமோ அதைச் செய்ய புறப்பட்ட பாமர மக்களில் ஒரு சிலர் கள்ளச்சாரயம் (கசிப்பு) விற்றனர். அவர்களை தேடி திரிந்து முதலில் எச்சரித்தனர் கழகத்தினர். அதன் பின்னரும் தமக்கு பிழைப்பில்லாததால், மீண்டும் கசிப்பு விற்கத் தொடங்கவே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கினர். ஆனால் இவர்களோ பெரியளவில், சர்வதேச கிரிமினலாக மாறி போதைவஸ்து கடத்துகின்றார்கள். எந்தளவுக்கு இவர்களின் அரசியல் அன்று இருந்தது, என்பதை இது வெளிப்படுத்துகின்றது. ஊருக்கு உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை என்பதைப் போலவே, இவர்களின் நடவடிக்கைகள் அமைந்தது.

நான் ஓரத்த நாட்டில் தங்கியிருக்கும் போது தான் தளத்தில் இருந்து மீரான் மாஸ்ரரும் அங்கு வந்திருந்தார். அவரிடம் தள விபரங்களை அறியக்கூடியதாக இருந்தது. அக்காலத்தில் தான் முதல் முறையாக தோழர் தங்கராசாவை சந்தித்தேன். அவர் அனைத்து முகாங்களுக்கும் சென்று தான் அரசியல் வகுப்பு எடுக்க விருப்பதாகக் கூறினார். அவருடன் ஏற்பட்ட உரையாடலே, எனக்கு அரசியல் மீது அதிக ஆர்வம் எற்படக் காரணமாகியது. மேலும் அவர் பல புத்தகங்களைச் சொல்லி அவற்றை முக்கியமாக வாசிக்கும் படி எமக்குக் கூறினார். ஒருசில நாட்கள் கழிய, நான் மீண்டும் பழைய முகாமிற்கு திரும்பினேன். அங்கு சென்றதும் மீண்டும் பயம், பதட்டமென ஏற்பட்ட போதும் ஒருவாறு பயிற்சியை தொடர்ந்தேன்.

ஒரு நாள் மதன் கொல்லப்பட்டார் என அறிந்ததோம். அவரைக் கொலை செய்வதற்கான உத்தரவை, அமைப்பின் மத்திய குழுவே வழங்கியதென, பின்நாளில் அதன் முக்கியஸ்த்தர்களில் ஒருவரான மீரான் மாஸ்டர் கூறினார். திடீரென என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றேன். எனக்குத் தெரிந்தவரை இதுதான் முதல் உட்படுகொலை என நான் நினைக்கிறேன்.

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 6)

santhathi.jpg

தோழர் சந்ததியாருடன் சந்திப்பு

நான் அறிந்தவரை, புளாட் மதனின் படுகொலையுடன் தான் ஆரம்பமாகியது உட்படுகொலைகள். இது அவர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. இவ்வளவு காலமும் சமூக விரோதிகள் என்ற பெயரில் படுகொலை செய்தவர்கள், இன்று ஒரே நோக்கத்துக்காக வந்தவர்களையும் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். இக்காலத்தில் இன்னுமொரு சம்பவமும் நடந்தது. மானிப்பாய் அல்லது அச்சுவேலியில் இருந்து பயிற்சிக்காக வந்தவர்கள் எனக்கு துல்லியமாக அவர்களின் சொந்த இடம் நினைவில் இல்லை ஆறு பேர் மாற்று இயக்கம் ஒன்றில் நாட்டில் இருக்கும் போது வேலை செய்தார்களோ அல்லது மற்றைய இயக்கத்தவர்களுடன் பின்னால் ஒரு அரசியலும் இல்லாமல் திரிந்தவர்களோ தெரியவில்லை. அவர்கள் எமது முகாமில் வந்து இறங்கி ஒரு சில நாட்களிலேயே வதைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கு காரணம் அவர்களுக்கு முதல், அதே ஊரிலிருந்து வந்த ஒரு தோழர் (அவரின் இயக்கப் பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவருடன் ஒரு குடிசையில் தங்கியிருந்த சக தோழர் ஒருவருக்கு, டேய், இவங்கள் ஊரில புலிக்குப் பின்னால திரிஞ்சவங்களடா... என்று கூறியதாகும். இதை எவ்வாறோ முகாமினுள் இருந்த உளவாளிகள் அறிய, அவர்களை விசாரணை என்று வதைமுகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் திரும்பவில்லை. ஒரு சில நாட்களில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என அறிந்தோம்.

படுகொலைகள் பற்றி அறிய, பயம் அதிகமானது. என்னால் அங்கு பயிற்சி செய்யவோ அல்லது மற்றவர்களுடன் கதைக்கவோ முடியாமல் போனது. இருவர் தொடர்ந்து ஒரு இடத்தில் இருந்து கதைத்தால், உடனே என்ன கதைத்தோம் என விசாரிக்கவும் தொடங்கினார்கள். அதுவே மூவர் அல்லது அதற்கு மேல் என்றால் விசாரணை தான்! மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றாற் போல, எவர் கூடிக் கதைத்தாலும் இவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்ற எண்ணமே அங்கு காணப்பட்டது. குறிப்பாக நான், அழகன், முரளி ஆகிய மூவரும், ஒரே ஊரில் இருந்து ஒரே நாளில் பின்தளம் வந்தவர்கள். ஆனால் நாம் மூவரும் தனிமையில் இருந்து கதைக்க முடியாது. எமக்கு ஏற்படும் மனச்சஞ்சலங்களைக் கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில், நான் முகாமில் தொடர்ச்சியாக இருக்க முடியாது என எண்ணினேன். அக்காலத்தில் அதிக வெய்யில் ஒவ்வாமை ஏற்பட்டு எனது கண்கள் சிவந்து வீங்கின. அதைக் காரணமாக வைத்து, என்னால் தொடர்ந்து பயிற்சிக்கு வரமுடியாதென அடிக்கடி பயிற்சியில் பங்கு கொள்வதைத் தவிர்த்தேன்.

இதையடுத்து அப்போது பயிற்சி வழங்கியவர்களில் ஒருவரான சாணாக்கியன் என்பவர் என்னை மீண்டும் ஓரத்தநாட்டுக்கு அனுப்பினார். அவர்கள் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே என்னைப் பார்வையிட்ட வைத்தியர், என்னை மீண்டும் ஒரு மாதத்தால் வரும்படி கூற, மீண்டும் என்னை பீ முகாமிற்கு திருப்பி அனுப்பினார்கள். நான் மறுபடியும் பீ முகாமிற்குச் சென்ற சிலநாட்களில் தோழர் சந்ததியார் அங்கு வந்திருந்தார். அவருடன் ஒவ்வொருவரும் தமது குறைகளை கூறினர். அவருடன் கதைப்பதற்கு எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு அவரை நான் கேட்டேன்.

அவரோ, "எனக்குந்தான் நாட்டிற்கு போகவேண்டும் என்று ஆசை. அதனால் தோழரே, நீர் தோழர் முகுந்தனிடம் எனக்கும் சேர்த்து விண்ணப்பியுங்கள்" என்றார். இதை கேட்ட எனக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை.

அவருடன் நாட்டுக்கு போவது பற்றி தொடர்ந்தும் கதைப்பது அனாவசியமானது என முடிவெடுத்தேன். இருந்தும் எனக்கு பயிற்சி பெறுவதில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு நோயாளியாக விளக்கினேன். அவர் அதை கவனமாகக் கேட்டார். "ஏன் நீர் பயிற்சி எடுக்க முடியாவிட்டால், அரசியல் வகுப்புகளில் பங்கு கொள்ளலாமே" என என்னிடம் கோட்டார். அதற்கு எந்த தயக்கமும் இன்றி சம்மதித்தேன். எனது நோக்கம் இந்த முகாமில் இருந்து வெளியேறுவது தான். அப்போது அவர் அமைப்பு அரசியல் பாசறைகள் நடாத்துவதற்குத் உதேசித்துள்ளது. அவ்வாறு அரசியல் பாசறை நடக்கும் பட்சத்தில், உங்களையும் அதற்கு பரிந்துரைக்கிறேன் என்றார். அத்துடன் எனது போராளிக்கான இலக்கத்தையும் பெயரையும் தனது பதிவேட்டில் குறித்துக்கொண்டார்.

ஒரு மாதத்தின் பின்னர் என்னை வைத்தியர் பார்வையிட வேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிட்டதால், அதற்கான திகதி வர நான் மீண்டும் ஓரத்தநாட்டிற்கு சென்றேன். அங்கே பல தோழர்கள் உடல் நலக்குறைவுடன், புதிதாக வந்திருப்பதைக் கண்டேன். எனக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கண் வைத்தியப் பகுதியில் ஒரு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டதன் விளைவாக நான் அங்கு ஒரு சில தினங்கள் தங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் தோழர் சந்ததியாரும் தோழர் தங்கராசாவும் அங்கே வந்தனர்.

அவர்கள் இருவரையும் இணைத்து ஒரே சந்தர்ப்பத்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனால் அவர்களிடம் எனது உடல்நிலை தொடர்பான பிரச்சினைகளை மீண்டும் கூறினேன். அத்துடன் எனக்கு அரசியலில் உள்ள ஆர்வத்தையும் தோழர் சந்ததியாரிடம் கூறினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டு, புதிதாக ஆரம்பிக்க விருக்கும் அரசியல் பாசறைக்கு செல்வதற்கு, அப்போது அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த பம்மாத்து வாசுவிடம் அதற்கான அனுமதியைப் பெற்றார். அதன் பின்பு நான் பீ காம்புக்குச் செல்லவில்லை. ஓரத்தநாட்டு முகாமில் நடைபெற்ற அரசியல் வகுப்பில் பயிற்சிபெற ஆரம்பித்தேன்.

தொடரும்
 

 

http://poovaraasu.blogspot.com/2020/09/6_24.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 7)

thngarajah.jpg
தோழர் தங்கராஜா

சாதிக்கூடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை...

ஒரத்தநாடு காரியாலயத்தில் அரசியல் வகுப்பு ஆரம்பித்தது. அப்போது என்னுடன் பலர் இணைந்து கொண்டனர். நோயுற்றவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும், அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். அவர்களில் பலர் அரசியல் வகுப்புகளில் அதிக நாட்டமும் காட்டினார்கள்.

அப்போ ஒரத்தநாட்டு காரியாலயத்தின் மலக்குழி நிரம்பி, அங்கு மலம் கழிக்க முடியாது போனது. அக்குழியை துப்பரவாக்க வேண்டிய கட்டாயத்தில், காரியாலயப் பொறுப்பாளர்கள் தள்ளப்பட்டனர். அக்குழியை துப்பரவு செய்ய அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளரான பம்மாத்து வாசுவும், மற்றைய பல விவகாரங்களை கவனித்து வந்த பெரிய மென்டிஸ்சு என்ற பாலமோட்டை சிவமும் வழிகாண வேண்டியிருந்தது. அவர்கள் தலித் ஒருவரை அழைத்து வந்தனர். அவர் அதைப் பார்த்த பின் அதற்கான கூலியை பேசிக் கொண்டிருந்தனர். அரசியல் வகுப்பு எடுத்து கொண்டிருந்த தோழர் தங்கராஜா எம்மிடம், ஏன் இதை நாமே செய்யக்கூடாது என்று கேட்டார்.

அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்தால் என்ன? இது போன்ற பல கேள்விகளை எம்மை நோக்கி எழுப்பினார். அப்போது எம்முடன் இருந்த ஆனந்தன் என்பவர், நாம் இதைச் செய்வோம் என்றார். இதுவும் ஒருவித பயிற்சி தான் என்றார். பின்னர் என்ன, நாம் எல்லோருமே அதை துப்பரவு செய்தோம். நான் இச்சம்பவத்தை இங்கு குறிப்பிடக் காரணம், சாதிகள் இல்லை அவற்றை ஒழிக்க நாம் பாடுபடவேண்டும் என்று கூறிய தலைமை உறுப்பினர்கள், என்ன செய்கின்றனர் என்பதை விளக்கத்தான். அவர்கள் தமக்கு இவ்வாறன பிரச்சனைகள் எழுந்தவுடன், அவர்களின் சிந்தனை எங்கு சென்றது. அது சாதிக்கூடாகவே தீர்வு காணும் வழிமுறையை நாடியது.

ஒருசில நாட்களில் காரியாலயத்தில் தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்கு என்று தனி ஒரு முகாம் அமைப்பது என்று எண்ணம் ஏற்கனவே இருந்ததால், தனி முகாம் அமைக்கப்பட்டது. அம்முகாமிற்கு ஏற்கனவே அரசியல் வகுப்புகளில் பங்கு கொண்ட என் போன்றவர்களே முதலில் அனுப்பப்பட்டனர். அம்முகாமை பலரும் தங்கக் கூடிய வகையில், பக்கத்துக் கிராம மக்களின் உதவியுடன் வடிவமைத்தோம். அந்த முகாமிற்கு அன்ரனி என்பவர், முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அம் முகாமிற்கு ஏச் (H) முகாம் என பெயர் வைக்கப்பட்டது. பிற்காலத்தில் அதை சி (C) காம் என்றும் அழைத்தார்கள்.

அங்கே நாம் அனைவருமாக, கிட்டத்தட்ட 70 தோழர்கள் வரை அப்போது இருந்தோம். அத்துடன் நீண்ட நாட்கள் சுகயீனப்பட்டோரையும், பொக்களிப்பான், சின்னமுத்து போன்ற தொற்று நோயுள்ளவர்களையும் எமது முகாமிற்கு மாற்றினார்கள். அவ்வாறு வருபவர் களில் பலர் திரும்பிச் செல்ல மறுத்தனர். அதனால் எமது முகாமின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எனது நினைவுக்கு எட்டியவரை 112 பேர் வரையில் இறுதியாக ஏச் முகாமில் இருந்தோம்.

இந்திய இராணுவத்தின் உத்தரப்பிரதேச மாநிலத் தளங்களில் யுபி(UB)யில் பயிற்சி பெற்ற உதயன், ஜிம்மி இருவருமே எமக்கான வெளி வேலைகளைச் செய்தனர். ஓரத்தநாட்டு முகாமுக்கு ஒவ்வொரு நாளும் சென்று வருவது அவர்களின் வழக்கம்.

இவர்களை எவரும் எதுவும் கேட்க முடியாது. காரணம் தாம் நேரடியாக அனைத்து முகாம் பொறுப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கூறுவார்கள். எமது முகாம் பொறுப்பாளராக அன்ரனி இருந்த போதும், எமது முகாமை வழிநடத்துவது தோழர் தங்கராஜா அவர்களே . அவர் எமது முகாமை சுய கட்டுப்பாட்டு முகாமாக மாற்றினார்.

அதாவது சமைத்த சாப்பாட்டை மற்றவர் பரிமாறாது, ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான உணவை தாமே எடுத்து சாப்பிடுவது. இறுதியாக சாப்பிடாத தோழருக்கும் தேவையான உணவு இருக்க வேண்டும் என்றும், உணவுகள் தேவையற்ற முறையில் விரையம் செய்யாத வகையில் பக்குவப்படுத்தையும் ஏற்படுத்தினார். சிலர் தேவையற்று உணவை விரையம் செய்தால், அவர் தாமாகவே அதற்கான சுயவிமர்சனத்தை முன்வைத்து அதற்கான தண்டனையையும் இரவுநேர ஒன்றுகூடலில் செயற்படுத்துவார்கள். இவ்வாறு பல பிரச்சனைகளை விமர்சனம், சுயவிமர்சனம் என்ற வகையில் புதிய முரண்பாடுகள் எழாதவாறு தீர்த்து வைத்து, எங்களுக்கு அரசியல் போதிப்பதையும் அவர் தொடர்ந்தார்.

ஒருமுறை தோழர் சோசலிசம் சிறி, எமது முகாமிற்கு அருகாமையில் வசித்த இந்தியப் பெண்ணைக் காதலித்தார். இது முகாமில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது, அது தொடர்பான விமர்சனத்தை எமது தோழர்கள் அவரிடம் முன்வைத்ததுடன், அவரின் சுய விமர்சனத்தை கோரினர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு சுயவிமர்சனம் செய்த வேளையில் விம்மிவிம்மி அழுதார்.

அவரின் சுயவிமர்சனத்தை ஏற்றுக்கொண்ட எம்மிடையே, இவ்விடையம் அனைத்து முகாம்களின் பொறுப்பாளருக்கோ அல்லது ஒரத்தநாட்டுக்கோ தெரிய வந்தால் சோசலிசம் சிறி வதைமுகாமிற்கு அனுப்பப்படலாம் என்ற ஐயம் ஏற்பட்டது. மேலும், வேறு முகாம்களிலிருந்து எமது முகாமிற்கு வரும் தோழர்கள் முகாம்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி கூறுவதுடன், தமது முகாம்களில் நடைபெறும் முகாம் பொறுப்பாளர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளையும், தோழர்கள் மீதான அவர்களின் வன்முறைகளையும் எம்மிடம் கூறினர். இது தொடர்பாக நாம் என்ன செய்வது என்ற கேள்வியை, இரவு நேர ஒன்று கூடலில் எழுப்பினர். இவ்வாறான விவாதங்களையும், சோசலிசம் சிறி போன்றவர்களின் விடயங்களையும் நாம் அனைத்து முகாம் பொறுப்பாளருக்கு உடனடியாகத் தெரிவிக்கக் கூடாதென முடிவெடுத்தோம். மாறாக எமது முகாமில் நடக்கின்ற அனைத்து விடயங்களும், நாளுக்கு நாள் ஓரத்தநாட்டு முகாமுக்கு தெரிந்த வண்ணமே இருந்தது.

இந்நிலையில் வல்வெட்டித்துறையில் இலங்கை விமானப் படையால் குண்டுகள் வீசப்பட்டு வருவதை செய்திகள் மூலம் அறிந்து கொண்ட நாம், அதற்கும் நாம் என்ன செய்வது என்ற விவாதத்தைத் தொடங்கினோம். ஏன் பயிற்சி முடிந்து லெபனானில் இருந்து திரும்பியவர்களும், யுபி(UB)யில்  இருந்து திரும்பியவர்கள் உட்படப் பலரும் இங்கு தரித்து நிற்பதை விடுத்து, தளத்தில் இறங்கி போராடினால் என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. இதன் போது பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர்.

அதன் முடிவாக நாம் இதனை எதிர்த்து போராட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் அமைப்புள் நடக்கும் பிரச்சனைகள், அமைப்பின் போராட்டத் தளத்தில் இயங்காத தன்மை போன்ற விடையங்களை உள்ளடக்கி ஒரு உள்ளக விமர்சன மகஜர் அறிக்கை எழுதி அனுப்புவதென்று அவ் விவாதத்தின் நிறைவாக முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு நாம் விவாதங்களை நடத்தும் வேளையில், எமது முகாமைத் தவிர்ந்த பல இடங்களில் "ஒரு விடுதலைப் போராட்டத்தில் அரசியலா இராணுவத்தை கட்டுப்படுத்துவது அல்லது இராணுவமா அரசியலைக் கட்டுப்படுத்துவது" என்ற பிரச்சனை எழுந்து நின்றது. இது தொடர்பாகவும் எமது முகாமில் ஒரு நீண்ட விவாதத்தை நடத்தினோம். இதில் என்ன வேடிக்கை என்றால், ஒரு சமூக விடுதலையை இடது சாரியக் கோட்பாட்டு ரீதியாக அங்கீகரித்த விடுதலை இயக்கத்தில், இவ்வாறான பிரச்சனை எழும்பியது என்பதே வெட்கத்துக்குரிய விடயம்.

ஆனால் பின்தளத்தில் இருந்த பல அரசியல் ஆசான்களும், தத்துவார்த்த விஞ்ஞானிகளும், இவைகளைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக இது போன்ற விவாதங்களைத் தடுக்க, சுத்த இராணுவக் கண்ணோட்டத்தில் ஏச் முகாம் தவிர்ந்த மற்றைய முகாம்களில் இருந்த சிவப்புப் புத்தகங்களை அகற்றி, அரசியல் பேசுவதையே தடைசெய்தனர்.

தொடரும்

 

http://poovaraasu.blogspot.com/2020/10/7.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 8 )

plot-uma.jpg

மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம்...

அமைப்புக்குள்ளான பிரச்சனைகளை அறிக்கையாக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது எவ்வாறு தயாரிப்பது என்றும், அதை யார் யாருக்கெல்லாம் அனுப்புவது என்ற விவாதமும் ஆரம்பமானது. எனது நினைவுக்கு எட்டியவரை, ஒருநாளில் இவ்விவாதங்கள் முடியவில்லை. பல நாட்கள் விவாதங்கள் தொடர்ந்தன.

இறுதியில் முகாமில் நிரந்தரமாகத் தங்கியவர்கள் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அக்குழுக்கள் தமக்குள் விவாதங்களை நடத்தி, தாம் முன்மொழியும் விடயங்களை அறிக்கையாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டது. குழுக்களால் எழுதப்படும் அவ்வறிக்கைகள் குறிப்பிட்ட தினங்களில் முகாமின் ஒன்றுகூடலின் போது வாசிக்கப்பட்டு, அவற்றைத் திருத்தி, அதில் எவை முக்கியமானவை என்று எல்லோராலும் முடிவெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றை அறிக்கையாக தயாரித்து அனுப்புவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து வந்த நாட்களில் ஏழு குழுக்களும் பல விவாதங்களை நடத்தின. இதில் நான் இருந்த குழுவில் என்னால் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அவையாவன:

1. தேசம் இலங்கை இராணுவத்தால் எரிக்கப்படுகின்றது. இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? எற்கனவே பயிற்சி முடித்தவர்களை நாட்டுக்கு அனுப்பி, தமிழீழத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் ரோம் நகரம் பற்றி எரியும் போது அந்த நாட்டு மன்னன் பிடில் வாசித்தது போல, தமிழீழம் பற்றி எரியும் போது உமாமகேஸ்வரன் என்ன செய்து கொண்டிருக்கிறார்" என்று அதில் கேட்டேன்.

2. அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்று, எமது சின்னத்தில் இருக்கின்றது. ஆனால் இங்கு நாம் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றோம். இது சரியான அரசியற் செயற்பாடா?

இதைக் கூற எமது குழுவில் இருந்த சண் என்பவர், அதை இன்னமும் விளக்கமாக அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்று கூறியபடி, இங்குவரும் தோழர்களை உடைத்து எறியும் வேலையை அமைப்புப் பொறுப்பாளர்கள் பார்க்கின்றார்கள், என்று கூறி எனது கருத்தை விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

இவ்வாறு ஒவ்வொரு குழுக்களும் தமது அபிப்பிராயங்களையும் ஆத்திரங்களையும் கொட்டித்தீர்த்தனர். மகஜர் தயாரிக்கப்பட்டது. மகஜர் தயாரிக்கப்படுவதை, ஒரு எதிர்ப்புரட்சி நடப்பதாகவும், நாம் இயக்கத்தை உடைக்கப் போவதாகவும், நாளுக்கு நாள் ஒரத்தநாட்டுக்குச் சென்று வந்த ஜிம்மியும், உதயனும் அங்கிருந்த பொறுப்பாளர்களுக்குத் தகவல் கூறினர். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த அறிக்கை தயாரிப்பது பற்றிய விவாதங்களில் அவர்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி கலந்து கொண்டனர். அவர்கள் எம்மை உளவு பார்க்கின்றனர் என்று எமக்கு தெரிய வந்தாலும் கூட, அவர்களைப் பொருட்படுத்தாது நாம் செய்ய வேண்டிய வேலைகளில் மும்மரமாக இறங்கினோம். இதனடிப்படையில் தயாரிக்கப்பட் அறிக்கையினை கீழே பார்க்கலாம்.

மகஜர் அறிக்கை

10.08.1984

செயலதிபர் தோழர் முகந்தன் அவர்கட்கு,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் துறைச்செயலாளர் தோழர் வசந்தன் அவர்கட்கு,

பிரதிகள்:-

தோழர் கண்ணன்

தோழர் ராஜன்

தோழர் வாசுதேவா

தோழர் தங்கராஜா

தோழர் அன்ரன் (ஏச் முகாம் பொறுப்பாளர்)

இயக்கத்தின் தோழர்களால் அனுப்பப்படும் இயக்க நடைமுறை குறைபாட்டு புனரமைப்பு அறிக்கை. 

இதனால் அறியத்தருவது, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கீழ் விடுதலை வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட வந்திருக்கிறோம். கழகம் மக்கள் மத்தியில் வைத்த கொள்கைகளுக்கும், இங்கே நடைமுறையில் இருக்கின்ற கொள்கைகளுக்கும் செயல்பாட்டிற்கும் இடையில் பாரதுரமான முரண்பாடுகள் காணப்படுகின்றன. இது படிப்படியாக கூடிக்கொண்டே செல்கிறது. எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளோடு இவற்றையும் ஒத்துநோக்கின் இயக்கத்தில் பிரச்சனைகளையும் நடைமுறை பிழைகளையும் சீர்திருத்த வேண்டிய இக் காலத்தின் கட்டாயமாகும்.

எனவே எமது கழகம் புனரமைக்கப்பட்டால் தான் நாங்கள் உண்மையான விடுதலையை அடைய முடியும் என்ற நோக்கில் கீழே சில புனரமைப்புச் செய்ய வேண்டிய பிரச்சனைகளை வரிசைப்படுத்துகின்றோம்.

1. எமது கட்சியின் சின்னத்தில் சகல அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. ஆனால் கட்சியில் இருக்கும் சில தோழர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற போர்வையில் முதலாளித்துவ இராணுவத்தையும் விட மிக மோசமான முறையில் விசாரணையின்றி சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப தன்டணை வழங்குகின்றார்கள்.

இது சோசலிச கொள்கையை தன் உயிர் நாடியாக கொண்டு இயங்குகின்ற நமது கட்சிக்கு பலத்த சேதத்தை விளைவிக்காதா?

2. எமது கட்சியில் அரசியல் பற்றி பேசுபவர்களை சில தோழர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். குறிப்பாக எமது கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட எச் முகாம் தோழர்கள் அரசியல் படிப்பதற்காகவும் நோயாளர்களின் நோயை தீர்ப்பதற்காகவும் தவறு விடுபவர்களை திருத்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கபட்ட இதைக் கூட மூடப்போகின்ற அதிர்ச்சி தரும் தகவலை அறிந்தோம். அரசியல் எமது கட்சிக்கு என்ன விதிவிலக்கா? அல்லது விஷமா?

3. விடுதலைப் போராட்டத்திற்கு தங்களை அர்ப்பணித்து வந்திருக்கின்ற போராளிகள் நீண்டகாலமாக பின்தளத்தில் இருப்தாலும் எமது பின் தளம் அயல் நாட்டில் இருப்பதாலும் அப்போராளிகள் அவ்விடத்தின் சூழலுக்கும் சுவாத்தியத்திற்கும் ஏற்ப மாற்றமடைகின்றார்கள். அத்தோடு PLOT என்ற பெயர் சூட்டிக்கொண்டு மக்களை தோழர்களை நேசிப்பது குறைவாக இருக்கின்றது. இந்த நடவடிக்கையினுடாக நமது கட்சி மக்களிடமிருந்தும் தோழர்களிடமிருந்தும் அன்னியப்படுவதற்கு சாத்தியகூறுகள் இருக்கின்றதா? இல்லையா?

4. நமது தமிழீழத்திற்கு அரசியல் தீர்வு காணப்பட்டு ஒரு சுமூகமான நிலை ஏற்பட்டால் நாம் சரணடைய வேண்டிய நிலையும், போராட்டம் மாறுபட வேண்டிய நிலையும் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த விடயமாகும். இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் நமது கட்சி முதலில் தமிழீழத்தில் எந்தவிதமான போராட்டம் நடத்த வேண்டும். சித்தந்த போராட்டமா? ஆயுதப் போராட்டமா? சித்தந்த போராட்டம் என்றால் சகல தோழர்களுக்கும் அரசியல் ஞானம் இருக்க வேண்டுமா? இருக்க வேண்டாமா?

5. தமிழீழ விடுதலைக்கும் எமது கட்சியின் வளர்ச்சிக்கும் போராட்டத்தை முன்னேடுக்க பயிற்சி முகாங்களுக்கு வருகின்ற தோழர்களுக்கு சுகையீனமும் உளவியல் ரீதியான அதிருப்தியும் உருவாகின்றது. இதை மாற்றுவதற்கு அதிகாரத்தை பயன்படுத்துவதா? அல்லது அவர்களை உணர்வு பூர்வமாக அணுகுவதா?

6. சோசலிச கொள்கை கொண்டு செயற்படும் கட்சிக்குள் ராணுவம் அரசியலுக்கு கட்டுப்பட்டதா? அல்லது அரசியல் இராணுவத்துக்கு கட்டுப்பட்டதா? எனும் ஓர் கோள்வி இன்று பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

எமது இயக்கத்தில் (அரசியல் பிரிவு, இராணுவப்பிரிவு, செய்தித் தொடர்புப்பிரிவு) பல பிரிவுகள் செயற்படுவதால் ஓர் ஒற்றுமையின்மையை கொண்டு வருகின்றது. இக்கேள்விகளையும் அதனால் எழும் முரன்பாடுகளையும் யார் சீர்படுத்துவது? இவ்நிலை கட்சியை வளர்ச்சியடைய செய்யுமா? அல்லது வீழ்ச்சியடையச் செய்யுமா?

7. நமது கட்சி கொள்கைக்கு மாறாக செயல்பட்டால் அதைத்தட்டிக் கேட்கவும் சுட்டிக்காட்டவும் உரிமையுண்டெனவும் கட்சியின் கொள்கை தான் கூறுகின்றது. ஆனால் இங்கோ பேச்சுரிமைக்கு இடமளிப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது

இவற்றைப் பார்க்கும்போது இப்போக்கு ஒரு முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்தை மறைமுகமாக எடுத்துக்காட்டுகின்றது. எனவே நாம் இவற்றை எமது தூய்மையான கட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது அத்தயாவசியமானதா? அல்லது அனாவசியமானதா?

மேற்படி இப்பிரச்சனைகள் இங்குள்ளன என்பது தோழர்களின் ஏகமனதான கருத்தாகும். இப்பிரச்சனைகள் கட்சிக்குள் பொதுவாக நிலவுகின்றது. எனவே இந்த அறிக்கை கிடைக்கப்பெற்று ஏழு தினங்களுக்குள் உடனடியாக ஒரு விசாரணை குழு எங்களை வந்து பார்வையிட்டு பிரச்சனைகளை மிகவும் விரிவாக ஆராயவேண்டும். என்பதனை அனைத்து தோழர்களும் மிகவும் அதிகபட்சமான ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.

இந்த அறிக்கைக்கு கிடைத்த பின்னால் கட்சி உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பது எங்கள் கருத்தாக மனதில் கொள்ளப்பட்டு இந்த புனரமைப்பு அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்கின்றோம். இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை மீண்டும் மீண்டும் அனைத்து தோழர்களுக்கும் வலியுறுத்துகின்றோம்.

இவ்வண்ணம்

உண்மையுள்ள கழகத் தோழர்கள்

இந்த அறிக்கையில் ஏச் முகாமில் இருந்த 88 பேர் கையொப்பம் இட்டிருந்தனர். இவ்வாறு நாம் ஏழுநாட்கள் காலக்கெடு கொடுத்து, இதை ஜிம்மி, உதயன் மூலம் அனுப்பி வைத்தோம். ஏழுநாட்களில் பதில் தராது விட்டால் என்ன செய்வது என்றும் எமது முகாமில் விவாதம் எழும்பியது. அப்போது சோசலிசம் சிறியால் இவர்கள் பதில் தராவிட்டால் நாம் மறுநாள் முகாமைவிட்டு வெளியேறி பாதயாத்திரையாக செல்வதுடன், அமைப்புக்குள் நடக்கும் சித்திரவதைகள், கொடுமைகள் தொடர்பாக தமிழக பொலிசிலும் முறையிடுவது என முடிவிற்கு வந்தோம்.

தொடரும்

 

http://poovaraasu.blogspot.com/2020/10/8_11.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 9)

spacer.png

 

புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர்...

எத்தனையோ அராஜகங்கள் தவறுகள் புளாட் முகாம்களில் நடந்து கொண்டிருந்தது. நாம் அதை புளாட்டின் வளர்ச்சிக்காக, தவறுகளைக் களைவதற்காக கழக உயர்மட்டத்தினருக்கு எம் அறிக்கை மூலம் முன்வைத்தோம். அதனால் எமது உயிருக்கு ஆபத்து வரும் என்றும் உணர்ந்திருந்தோம். தீப்பொறியினரைப்போல தமது உயிர்களுக்கு பாதுகாப்புத்தேடி, கழகத்தில் இருந்து தப்பிஒடியதைப் போன்று நாம் செய்யவில்லை. மாறாக எமது உயிர்களைப் பணயம் வைத்ததே அப்போராட்டத்தை முன்னெடுத்தோம். எமது அன்றைய அரசியல் வளர்ச்சியின் அடிப்படையில் எது எமக்குச் சரியாகப்பட்டதோ, அதைச் செய்தோம்.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடையம், "தீப்பொறியாக" கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நாம் மகஜர் அனுப்பும் காலத்தில் அமைப்பில் உயர்ந்த பதவிகளில் இருந்தனர். அவர்கள் தமது விசுவாசத்தை, தலைமைக்கு காட்டிய வண்ணம் இருந்தனர். அத்துடன் அவர்கள் எம்முடன் சேர்ந்து போராடாது, எமது போராட்டத்தை ஒடுக்க முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கு துணைபோனர்கள். காரணம் எமக்கு அதரவு தந்தால், தாங்கள் இரகசியமாக வெளியேறத் தீட்டியிருந்த திட்டம் அம்பலப்பட்டு விடுமே என்ற சுயநல சிந்தனையேயாகும்.

எமது மகஜரை எழுதுவதில் முன்னணியாக நின்ற தோழர்கள், ஒரே இடத்தில் படுப்பதில்லை. முன்பு எதிரிகளுக்காக முகாமைச்சுற்றி பாதுகாப்பது பணி செய்வது வழக்கம். ஆனால் இந்த போராட்டம் ஆரம்பமானவுடன், கழகத்தினரால் எமக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் முகாமைச் சுற்றிப் பாதுகாப்பு போட்டோம். "பாதுகாப்பு" என்றவுடன் நாங்கள் ஆயுதங்கள் வைத்திருந்தோம் என நீங்கள் நினைக்கலாம். இல்லை, இல்லவேயில்லை. எம்மிடமிருந்தது, கொட்டான் தடிகள் மட்டுமே. எமது முகாமில் இன்னுமொரு கூடாரம் அமைப்பதற்காக, காடுகளுக்குச் சென்று மரங்கள் வெட்டி வைத்திருந்தோம். அந்த மரங்களைத் தான், நாம் கொட்டான்களாக வெட்டி வைத்திருந்தோம்.

எமது மகஜரை எடுத்துச் சென்ற ஜிம்மி, உதயன் இருவரும் அதைக் கொடுத்து விட்டு திரும்பி வந்தால், மீண்டும் ஓரத்த நாட்டுக்கு போக அவர்களை விடமாட்டோமென அவர்களிடம் கூறினோம். எமது முகாமில் ஒரு முக்கியமான நடைமுறை கையாளப்பட்டது. எந்த விடையமாக இருந்தாலும், அது பொதுச் சபையில் பகிரங்கமாகக் கூறப்பட்டு விவாதித்து முடிவெடுப்பது என்பதுதான் அந்த நடைமுறை . இதனடிப்படையிலேயே, பொதுச் சபையின் முடிவிற்கேற்ப அவர்களிடம் திரும்பிப் போக முடியாது என்ற விடயத்தை கூறியிருந்தோம்.

ஆனால் நடந்ததோ வேறு, மகஜரைக் கொண்டு போனவர்கள் வந்தால் தானே! இரவு வழமையாக திரும்பி வருபவர்கள், அன்று வரவில்லை. இதனால் எமக்குள் சந்தேகம் எழுந்தது. இரவு நேர ஒன்று கூடலில் இதைப்பற்றி விவாதித்தோம். மறுநாள் காலையில் கூட எந்த எதிர்ப்போ அல்லது தகவலோ தலைமையிடமிருந்து வரவில்லை.

இதனால் ஒரு சில தோழர்கள் நாம் கொடுத்த மகஜரை இவர்கள் ஏற்றுக்கொண்டு, விவாதித்து நல்ல பதிலை தரப்போகின்றார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இன்னும் சிலர் இல்லை, அவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்றனர். அத்துடன் அவர்கள் எமது முகாமை மூடிவிடுவார்கள் என்றனர். இப்படி கூடலின்போது இதை விவாதித்ததுடன், முகாமை மூடினால் என்ன செய்வது என்ற கோள்வியையும் முன்வைத்தனர் சிலர். தலைமை சரியான பதில் தராத பட்சத்தில், நாம் முகாமை விட்டு புறப்பட்டு ஊர்வலமாக ஓரத்த நாட்டுக்கு செல்வதென்றனர் ஒரு சிலர். மற்றவர்கள் நாம் தமிழ்நாடு காவல் துறையில் இது தொடர்பாக முறையிடுவது என்ற கருத்தை முன்வைத்தனர்.

இதில் நான் ஊர்வலமாகப் போவது தான் நல்லது என்று விவாதித்தேன். விவாதம் நீண்டதால் வழமைக்கு மாறாக நீண்டநேரம் எல்லோரும் விழித்திருந்தோம். தொடர்ச்சியாக நடந்த விவாதத்தில், தலைமையிடமிருந்து இருந்து ஒரு கிழமைக்குள் பதில் வராத பட்சத்தில் மட்டுமே ஊர்வலம் போவது என்று முடிவிற்கு வந்தோம். நாம் வழமையான இடங்களில் படுப்பதை தவிர்த்ததால், நான் முகாமின் ஒரு மூலையில் சென்று உறங்கினேன்.

யாரோ ஒருவர் காலால் எனது காலை மிதித்து எழும்பு என்றார். நான் எழுந்ததும், நீதானே காந்தன் என்றார். நானும் ஆம் என்றேன். அவரின் கையில் ஏ.கே-47 துப்பாக்கி இருந்தது. சரி பெனியனைப் போட்டுக் கொண்டு வா என்று கூறினார். அவரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் எம்முகாமை தலைமையின் அடியாட்கள் கைப்பற்றிவிட்டார்கள் என உணர்ந்தேன். எனது பெனியனைக் தேடத் தொடங்க, மறுபடியும் அந்த நபர் கத்தினான். அருகில் இருந்த தோழர் டிஸ்கோவின் பெனியனை எடுத்து போட்டுக்கொண்டு அவருடன் பின் தொடர்ந்தேன். அந்த நபர் என்னை ஒரு வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது சில தோழர்கள் தரையில் குப்புறப்படுக்க வைக்கப்பட்டிருந்தனர். என்னையும் அவர்களுடன் அதில் போய்ப்படு என்றதுடன், ஒருவருடனும் கதைக்கப்படாது, எனவும் மிரட்டினான் கையில் ஏ.கே-47 துப்பாக்கி வைத்திருந்தவன்.

அப்போது யார் யாரெல்லாம் எனக்கு அருகில் வரிசையாகப் படுத்திருந்தனர் என மட்டுக்கட்ட முடியவில்லை. கொஞ்சம் தலை அசைத்தாலும், பெரிய சத்தத்துடன் தலையை அசைக்க வேண்டாம் என்றனர் அங்கு எம்மை துப்பாக்கி முனையில் குப்புறப்படுக்க கட்டளையிட்டோர் . இன்னும் ஒருசிலரையும் எமக்கு அருகில் குப்புறப்படுக்குமாறு கட்டளையிட்டார்கள். சில மணித்தியாலங்களின் பின்னர் எம்மை அங்கே நின்ற வண்டியில் ஒவ்வொருவராக ஏற்றினர். முதலில் குப்புறப்படு எனக் கூறியவர்கள், இப்போது வாகனத்தில் இடப்பற்றாக் குறையால் எழுந்து அமர்ந்திப்பதுடன் தலையைக் குனிந்தபடி இருக்க வேண்டும் என பணித்தார்கள்.

வண்டி புறப்படத் தொடங்கியது. எம்மைச் சுற்றி நால்வர் ஆயுதங்களுடன் காவலுக்கு நின்றனர். அவர்கள் அனைவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தவர்கள். நான் ஒருவாறு என்னுடன் யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முயன்றேன் .எனக்கு அருகாமையில் விஜி என்ற தோழர் இருந்தார். அவர் தேனி முகாமில் பயிற்சி எடுத்தவர். வண்டி குறிப்பிட்ட நேரம் ஓடியபின் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டது. எங்களை ஒவ்வொருவராக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

அப்போதுதான் யார் யார் என்னுடன் வந்தார்களென முழுமையாக அறியமுடிந்தது. அதாவது மகஜர் எழுதுவதற்கு முன்னின்றவர்களும், அது பற்றிய விவாதத்தில் அதிகமாக கதைத்தவர்களும் தான் கைது செய்யப்பட்டிருந்தனர். எம்முடன் தோழர் தங்கராஜாவும் இணைக்கப்பட்டிருந்தார்.

அங்கே எம்மை மீரான் மாஸ்டர் விசாரித்தார். மீரான் மாஸ்டர் என்ற பிரபலமான கொம்மியுனிஸ்ட் தலைவரின் மகன் அன்றைய காலத்தில் புளொட்டின் வெளி உளவுப்படைக்கு பொறுப்பாக இருந்தார். என்னிடம் அவர் கேட்ட கேள்வி, உனக்கும் புலிக்கும் தொடர்பு இருக்கிறதா?

நான் பயந்தவாறு இல்லை என்றேன். அப்படியானால் யாருடைய தூண்டுதலில் இதைச் செய்தாய் என்றார். இது வெளியார் ஒருவருடைய சதியும் அல்ல. இது எமது முகாமில் நாம் கூட்டாக எடுத்த முடிவு என்றேன். 

நீ எமது இயக்கத்தை ஒழிக்க வந்திருக்கின்றயா? இல்லை என்றேன்.

உனக்கும் சந்ததியாருக்கும் என்ன தொடர்பு? நான் ஒன்றும் இல்லை என்றேன். 

என்னைப் பக்கத்துக்கு அறைக்குப் போகும்படி மீரான் மாஸ்டர் கட்டளையிட்டார். எமது முகாமில் கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர். நான், விஜி, அன்ரனி, கே.ஆர். விஜயன், சோசலிசம் சிறி, ஆனந்தன், சண், சலா, ஜெகன் ஆகியோர் ஓர் அறைக்குள் தள்ளப்பட்டோம். ஏனையோர் அந்த அறைக்குள் வரவில்லை. சிறிது நேரத்தில் எம்மை ஏற்றி வந்த வண்டி ஓட்டுனர், அந்த அறைக்குள் பொருட்கள் எடுப்பதற்காக வந்தார். அவரை வெள்ளை அண்ணை என்று அழைப்போம். அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் என்னைக் கண்டதும், ஒரு பரிதாபமாக என்னைப் பார்த்தார். "ஏன் உனக்கு உந்தத் தேவையில்லாத வேலை" எனக் கூறியபடி, தனக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார்.

தொடரும்

 

http://poovaraasu.blogspot.com/2020/10/9_18.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 10)

 

மாணிக்கதாசன்


எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படி...

சுத்த இராணுவத்தனமாக முன் கூட்டியே தீர்மானித்த வன்மத்துடன் விசாரணை தொடங்கியது. மாற்று இயங்கங்களுடன் எமக்கு ஏதாவது தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணைகள் நடந்தது. இதில் பலராலும் நம்ப முடியாத ஒரு விடையம் கூட நடந்தது. வழமையாக கைது செய்யப்படுவோரை சித்திரவதை செய்து விசாரணை நடத்துவதிற்கு பெயர் போன சங்கிலியோ, அல்லது மொட்டை மூர்த்தியோ எம்மை விசாரிக் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்று, அன்று எமக்குப் புரியவில்லை.

பின்னாளில் எம்மை முதலில் விசாரித்த மீரான் மாஸ்டரை சந்தித்த போது, இது தொடர்பாக அவரிடம் விசாரித்தேன். அவர் அதற்கு, எமது மகஜர் தொடர்பாக இரண்டுபட்ட கருத்துக்கள் தலைமைக்குள் இருந்ததாகவும். அதில் எந்தக் கருத்தும் நாம் மகஜர் அனுப்பிதை ஆதரிக்கவில்லை என்றும், எவ்வாறு எங்களைத் தண்டிப்பது என்பதில் மட்டுமே இரண்டு வகைக் கருத்துக்கள் நிலவியதாகவும் மீரான் மாஸ்டர் கூறினார். அத்துடன், முதலில் இலகுவான முறையில் விசாரணை நடத்த தலைமை விரும்பியதனால், தன்னை விசாரணைக்கு அனுப்பியதாகவும். இதன் அடிப்படையிலேயே சங்கிலியை உடனடியாக விசாரணையில் ஈடுபடுத்தவில்லை எனவும் கூறினார்.

இதன் பின் எம்மை மீண்டும் வண்டியில் ஏற்றினார்கள். அவ்வண்டியின் பின்புறத்தின் நான்கு மூலையிலும், நான்கு பேர் ஏ.கே 47 துப்பாகியுடன், நாம் தப்பிச் செல்லாது பாதுகாப்பிற்காக நின்றார்கள். வண்டியின் முற்பகுதியில் இருவர் இருந்தனர். அதில் ஒருவர் மாணிக்கதாசன். அவரும் எம்மை ஏ.கே 47 துப்பாகியுடன் காவல் புரிந்த நால்வர் போல பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி பெற்றவர்தான்.

வாகனத்தில் ஏற்றப்பட்ட எம்மை, நீண்ட நேர ஒட்டத்தின் பின்பு ஒரு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கே எமக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டோம். அக் கூடாரம் அந்த முகாமில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக, அந்த முகாமின் கிணற்றுக்கு அருகில் இருந்தது. இரவுநேரம் என்பதால் முகாம் அமைதியாகவே இருந்தது. அங்கே தான் தோழர் தங்கராஜாவும், கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்தோம். தோழர் தங்கராஜாவையும் சேர்த்தால் தற்போது நாம் பத்துப்பேர். எல்லோரும் அந்த கொட்டிலுக்குள் சென்றதும், ஒருவரோடு ஒருவர் கதைக்ககூடாது என்றனர். அப்படி கதைத்தால் கடும் தண்டனை கிடைக்கும் என மாணிக்கதாசன் மிரட்டினான். வெளியே கொட்டிலைச் சுற்றி பாதுகாப்புக் கடமையில் நின்றவர்களிடம், இவங்கள் ஏதாவது தங்களுக்குள் கதைத்தால் தனக்கோ அல்லது முகாம் பொறுப்பாளருக்கோ உடனே கூறும்படியும் கட்டளையிட்டான். அத்துடன் காவலுக்கு நின்றவர்களையும் எம்முடன் கதைக்கக்கூடாதென்று அறிவுறுத்தினான். மீறினால், கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்றும் அவர்களிடம் கூறிவிட்டு, வண்டியில் ஏறிச் சென்றான். நாம் அந்த கூடாரத்துக்குள், அதன் மண் தரையில் உறங்க முற்பட்டோம். ஆனால் முடியவில்லை. காரணம் பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

மறுநாள் காலை முகம் கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்தவர்கள், எங்களை விசித்திரமாக பார்த்தார்கள். அவர்களின் பார்வையில் எம்மீது ஒரு கோபம், ஏளனம் தெரிந்தது. ஆரம்பத்தில் அவர்களின் அந்தப் பார்வை ஏனென்று எமக்குப் புரியவில்லை. ஒருசில கிழமைகளில் நாம் அதைப் புரிந்துகொண்டோம். எம்முடன் கதைக்க முயன்ற சிலர் எம்மைப் பார்த்து கேட்டனர்,

"நீங்கள் எமது இயக்கத்தை அழிக்க முயற்சித்தவர்கள் தானே...? இயக்கத்தை பிளவுபடுத்த வந்தவர்களா நீங்கள்...?" என கேட்டனர். அவ்வாறு தான் அந்த முகாமில் எம்மை பற்றி பிரச்சாரம் செய்திருந்தனர். அமைப்பின் தவறைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர், அமைப்பை உடைக்கவும் அழிக்கவும் வந்தவர்கள் என்பதுதான்.

நாம் மலம் கழிக்கவோ அல்லது சிறுநீர் கழிக்கப் போனாலும், எம்முடன் நால்வர் பாதுகாப்பிற்கு வருவார்கள். அதுவும் ஒருவர் மட்டும் தான் போகவேண்டும். போகும்போது முன்னால் இருவர், பின்னால் இருவர் வருவார்கள். எமக்கு பாதுகாவலர்களாக வருபவர்களுக்கு கட்டளை, நாம் மலம் கழிப்பதற்கு சென்றால், நாம் மலம் கழிக்கும் போது எமக்கு மிக அருகாமையில் காவல் புரியும்படி. ஆதலால் அவர்கள் எமக்கு அருகாமையிலேயே எப்போதும் நிற்பார்கள். அப்போது அத்தோழர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாகவிருக்கும்.

எமக்கான உணவைத் தரும்போது கூட அவர்கள் ஒரு வெறுப்புடனேயே தந்தார்கள். அன்று பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இந்த இடைவெளியில் எமக்கிடையே அமைதியான சம்பாசனைகள் நடந்தன. தோழர் தங்கராஜா தனது உயிருக்கும், எமது உயிருக்கும் ஏதாவது ஆபத்து நடக்கலாம் என்ற ஐயத்தினை வெளிப்படுத்தினார். எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும், உறவினர்களுக்கு அறியப்படுத்தும் படியும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் எம்முடைய முழு விபரங்களையும் (உண்மையான பெயர், ஊர்) என்பவற்றை எல்லாம் எமக்குள்ளேயே பரிமாறிக் கொண்டோம். அப்போது அந்த முகாமின் பொறுப்பாளராக இருந்தவர் வளவன். அவர் தேனீ முகாமில் பயிற்சி பெற்றவர். இந்த வளவன் சில வருடங்களின் பின், இந்தியன் ஆமி இலங்கையில் புலிகளுடன் யுத்தம் செய்த போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தபடி இந்தியன் ஆமிக்கு எதிராக போரிட்டவர்.

பின்னாளில் வளவனைப் பற்றி நான் விசாரித்ததில், அவர் புலியின் உளவாளி என்றும், அக்கடமையை செய்வதற்காகவே கழகத்தில் இணைந்தார் என்றும் கூறப்பட்டது. அத்துடன் நான் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இலங்கையில் வேலை செய்ததை நான் நேராகக் கண்டேன். ஏற்கனவே ஒரு இயக்கத்தில் இருந்தவர்களை, புலி உடனடியாக முக்கிய பொறுப்பில் அமர்த்தாது என்பதை வைத்து பார்க்கும்போது, வளவன் ஒரு புலி உளவாளி என நானும் நம்புகின்றேன்.

ஒரு அமைப்பின் தவறை, அதன் கட்டமைப்பிற்குள்ளேயே நேர்மையான வழியில் சுட்டிக் காட்டப் புறப்பட்ட நாம் துரோகிகள் ஆக்கப்பட்டோம். ஆனால் உளவு பார்க்க புலிகளால் அனுப்பப்பட்டவன், எல்லோரையும் காக்கா பிடித்து, எல்லோருக்கும் நல்லவனாக நடித்த உண்மையான துரோகி, நல்லவனாகவும் அமைப்பிற்கு விசுவாசியாகவும் அமைப்பின் தலைமையால் கருதப்பட்டான். 

அன்று இரவும் எவரும் எம்மை சந்திக்க வரவில்லை. மறுநாள் பகல் முழுவதும் எவரும் சந்திக்க வரவில்லை.

தொடரும்

 

http://poovaraasu.blogspot.com/2020/10/10_24.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதை படிக்கும்போது  தன்னைத்தானே உடம்பில் சதையை வெட்டி உண்ணும் மனிதர்களின்  கதைகள்  நினைவுக்கு வருவதை தடுக்க முடியல autocannibalism என்று கூகிளில் அடித்தால் நிறைய கதைகள் வரும் .

தமிழீழம் காணுவம் என்று கிளம்பிய அன்றைய இளையோர்களை கடைசியாக இருந்த பிளட் தலைமைகளின் சைக்கோதணத்தால் கொன்று குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

 இதை படிக்கும்போது  தன்னைத்தானே உடம்பில் சதையை வெட்டி உண்ணும் மனிதர்களின்  கதைகள்  நினைவுக்கு வருவதை தடுக்க முடியல autocannibalism என்று கூகிளில் அடித்தால் நிறைய கதைகள் வரும் .

தமிழீழம் காணுவம் என்று கிளம்பிய அன்றைய இளையோர்களை கடைசியாக இருந்த பிளட் தலைமைகளின் சைக்கோதணத்தால் கொன்று குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் .

இதில் என்ன பகிடி என்றால் இந்த சைக்கோ கூட்டம் 
புலிகளை விம்சிப்பதுதான் 
அதையும் கொண்டுவந்து இணைப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இதில் என்ன பகிடி என்றால் இந்த சைக்கோ கூட்டம் 
புலிகளை விம்சிப்பதுதான் 
அதையும் கொண்டுவந்து இணைப்பார்கள். 

 

மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது  புளட் அமைப்பு.

ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது தமிழர்களிடம் இல்லாத பண்பு. அதைத்தான் எல்லா இயக்கங்களும் பிரதிபலித்தன. இதில் புளட்டுக்கும், புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் வித்தியாசமில்லை.

ஆயுதப் போராட்டம் இல்லாத கடந்த 11 வருடங்களில்கூட மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் தாங்கள் சொல்வது மாத்திரமே  சரியானது என்று பிடிவாதமாக நிற்பதோடு மட்டுமல்லாமல் பிடிக்காத குரல்களை வெளிவராமல் தடுக்கும் “ஜனநாயக” வெளியில்தான் இப்போதும் பலர் நிற்கின்றார்கள். அதனால் நான் கொண்டுவந்து இணைப்பவை மருதர் உட்பட ஒரு சிலருக்கு ஒவ்வாமையத் தரும் என்று தெரியும்.😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-10-25-12-49-55-464-com-a புளொட்டு - போட்டு -  மாலை தீவு -  றோ .. 

படிக்க ஆவலோடு உள்ளோம்.👍

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும், புளொட் உம் military-politico அமைப்புகள்.

அவற்றுக்கிடையே உள்ள சிறிய தத்துவ, அரசிய,இராணுவ  அணுகுமுறை போன்ற வேறுபாடுகளே அவை மக்களின் அபிமானத்தை பெற்றது.தட்டார் வளர்ச்சியின் காரணங்கள் போல இருக்கிறது. 

ஆரம்ப கால புலிகள் உறுறுப்பினர்களிடம் கதைத்த போது அவர்களிடத்தில், இயற்கை நீதி என்ற உணர்வு இருந்ததை காண முடிந்தது.

இந்திய படை இருக்கும் பொது, பொறுப்பாளர்களால் முடிவு எடுக்கப்படலாம் என்ற நிலையில், தவறுகள் பல செய்தவர்காளால் நேரடியாக பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டது.

இது பிரபாகரன், பின்னாளில் பாரிய வளர்ச்சியின் பின்பும், தவறுகளுக்காக தனிப்பட்டவர்கள் இடத்தில மன்னிப்பு கேட்டது வரை தெடர்ந்து இருக்கிறது.

பொது வாழ்வு, புலிகள் அமைப்பில் இருக்கும் போது, ஒவொரு றுப்பினரும் சமூகத்தால் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள், ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்ற உணர்வு இருந்ததை காண முடிந்தது.

மற்றது, புலிகள் கமியூனிசத்தில் உள்ள, தமிருக்கும் சமோகத்திடற்கு ஏற்ற கருத்துக்களையே அரசியலாக எடுத்தார்கள்.

அவர் சொல்லும் புளொட் அங்கத்தவர் போலன்றி,  புலிகள் அங்கத்தவர்கள் ஆரம்ப காலத்தில் உடனடியாக இணைக்கப்பட மாட்டார்கள். இணைக்கப்பட்டவர்கள் கூட உடனடியாக பயிற்சிக்கு அனுப்படமாட்டார்கள்.    

புலிகளும் நிச்சயமாக பெரிய தவறுகள் விட்டு இருக்கிறார்கள், பொதுபவாக  அவை அந்த தவற்றோடு கட்டிவைக்கப்பட்டு இருக்கும். சமூகத்திடற்குள்ளோ அல்லது அமைப்பிற்குள்ளோ பரவி, ஊடுருவி ஓர் கலாசாரமாக   உருவெடுக்க விடவில்லை.

புலிகள் தாமிருந்த  சமூகத்திற்குள் இருந்து, கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை, ஆனால்  அமைபின் உள் வர அனுமதித்தார்கள்.   

பொதுவாக புலிகள், நியாயாதிக்கம் (legitimacy), இயற்றகை நீதி   என்பதை பல படிகளில், அவர்களுக்கு தெரியாமலேயே, மிகவும் சீரியஸ் ஆக எடுத்து இருந்தார்கள்.  

இப்படி பல. 

இது சாதரண மனித உணர்வாகும். 

ஆனால், இவை எல்லாம் திட்டமிட்டு  நடக்கவில்லை.

புளொட், அது தான் பயிற்றசை பெற்ற பலஸ்தீன் அமைப்புகள், மற்றும் ஆயுத கம்யூனிஸ்ட்ஸ் அமைப்பு  போன்ற சிந்தனை ஓட்டங்களால் அது அறியாமலேயே mould பண்ண பட்டு விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

 

மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது  புளட் அமைப்பு.

 

ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது தமிழர்களிடம் இல்லாத பண்பு. அதைத்தான் எல்லா இயக்கங்களும் பிரதிபலித்தன. இதில் புளட்டுக்கும், புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் வித்தியாசமில்லை.

ஆயுதப் போராட்டம் இல்லாத கடந்த 11 வருடங்களில்கூட மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் தாங்கள் சொல்வது மாத்திரமே  சரியானது என்று பிடிவாதமாக நிற்பதோடு மட்டுமல்லாமல் பிடிக்காத குரல்களை வெளிவராமல் தடுக்கும் “ஜனநாயக” வெளியில்தான் இப்போதும் பலர் நிற்கின்றார்கள். அதனால் நான் கொண்டுவந்து இணைப்பவை மருதர் உட்பட ஒரு சிலருக்கு ஒவ்வாமையத் தரும் என்று தெரியும்.😁

"மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது  புளட் அமைப்பு"

சிலர் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட இயக்கங்களை உருவாக்கினார்கள் 
புல்லட் போன்றவை உமா மகேஸ்வரன் போன்றவர்களுக்கு காவடி ஆட இயக்கம் உருவாக்கினார்கள் இது சிறுவர்களாக இருந்த எமக்கே தெரியும்போது .. இவர்கள் எல்லாம் 60 ஆண்டுளில் பிறந்தவர்கள் இவர்களுக்கு தெரியாதா? ஏன் போகிறோம் எனும்போது.... எங்கு போகவேண்டும் என்று?

 

"ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது தமிழர்களிடம் இல்லாத பண்பு. அதைத்தான் எல்லா இயக்கங்களும் பிரதிபலித்தன. இதில் புளட்டுக்கும், புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் வித்தியாசமில்லை."

இதை எந்த ஆதார அடிப்படையில் எழுதுகிறீர்கள்?
யாரவது புலிகளில் இருந்து விலகி வந்தவர்கள் இவ்வாறு எங்கேயாவது எழுதுகிறார்களா?
துரோகி கருணா போன்றவர்களே தலைமை மீது எந்த பழியையும்  போடாததை நீங்களே வாசித்து இருப்பீர்கள். காரணம் அவர்கள் போராடுவதுக்கு இயக்கம் உருவாகக்கினார்கள் அதுக்கே நேரம் போதுமாக இருந்தது. தவிர இந்திய இராணுவம் வெளியேறி போன போதே 1990களில் மக்களின் கருத்துக்களை அறிய அபிப்பிராய பெட்டி என்று எல்லா ஊர்களிலும் வைத்தார்கள் நீங்கள் பெயர் போடாது உங்கள் எண்ணங்களை குறைகளை எழுதி போடலாம்  அதுக்கு புலிகளின் குரல் அப்போது ஒரு போர்டில் பதில் எழுதி வந்தார்கள் 1987களிலேயே எந்த பொறுப்பாளரும் இன்னொரு போராளிக்கு காய் நீட்டி அடிக்க முடியாது என்று சட்டம் கொண்டுவந்தார்கள் ...பொறுப்பாளர்  மீதான நிறை குறை களை  அவருக்கு மேலே இருக்கும் பொறுப்பாளர் ஊடாக தலைமைக்கு கொண்டுசெல்லும் போக்கு இந்திய பயிற்சி காலத்திலேயே லெப்டினன் கேணல் ராதாவால் உருவாக்கபட்டிருந்தது.  இப்படியே சேற்றுக்குள் சுற்றிக்கொண்டு இருந்தால் .. ஆதாரங்களை அற்ற பொய்களை தான் எழுதிக்கொண்டு இருப்பீர்கள் என்பதால்தான் காலை பார்த்து வையுங்கள் என்று எழுதுவதுண்டு  

 

 

"ஆயுதப் போராட்டம் இல்லாத கடந்த 11 வருடங்களில்கூட மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் தாங்கள் சொல்வது மாத்திரமே  சரியானது என்று பிடிவாதமாக நிற்பதோடு மட்டுமல்லாமல் பிடிக்காத குரல்களை வெளிவராமல் தடுக்கும் “ஜனநாயக” வெளியில்தான் இப்போதும் பலர் நிற்கின்றார்கள். அதனால் நான் கொண்டுவந்து இணைப்பவை மருதர் உட்பட ஒரு சிலருக்கு ஒவ்வாமையத் தரும் என்று தெரியும்."😁

நீங்கள் எதையாவது கொண்டுவந்து இணையுங்கள். வெறும் வாந்திகளை இணைக்காதீர்கள் 
யாழ்களத்தை குப்பை கொட்டும் இடமாக பாவிக்காதீர்கள் என்றுதான் நான் எழுதுகிறோம்.
ஒரு முறை வாசித்து உங்கள் ஆறறிவுக்கு உட்படுத்தி இணையுங்கள் என்றுதான் எழுத்துகிறோம் 

அல்லது ஓரமாக இணைத்துவிட்டு போன்கள் 
இந்த விட்ட பிழைகளை திருத்துக்கிறோம் அது இது என்று பம்மாத்து காட்டாதீர்கள் என்றுதான் எழுதுவதுண்டுபுலிகள் போன்றதொரு விடுதலை இயக்கத்தை உருவாக்குவது என்பது அது பிராபகரனுக்கு மட்டுமே முடிந்த ஒன்று. வாந்தி கட்டுரை எழுதும் நாய்கள் கடந்த 30 வருடமாக என்ன செய்கிறது என்பது எமக்கு தெரியும் புலிகளின் பிழைகளை திருத்தி அந்த நாய்கள் ஒரு புண்ணாக்கும் புடுங்க போவதில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழர்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை.

முதலில் மாற்று கருத்து என்றால் என்ன என்பதுக்கான வரைவிலக்கணத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் (இப்படி எழுத கூடாது ... இதை உங்கள் மீது செய்யும் தனிமனித தாக்குதல்கவும் கொள்ளலாம் .. அந்த நோக்கில் எழுதவில்லை) மாற்றுக்கருத்து என்பது ஏற்கனவே இருக்கும் ஒரு கருத்தை ... இன்னொரு ஆதாரத்துடன்  மறுதலிப்பதாகும். அல்லது அதே கருத்தை இன்னொரு கோணத்தில் கருதுவதாகும்.
 நீங்கள் இணைக்கும் இணைப்புகளில் அப்படி ஏதும் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். 

இந்த கட்டுரை நல்ல விடயம்தான் தொடர்ந்து இணையுங்கள் ..... 
இது ஒருவரின் சொந்த அனுபவமும்  சொந்த கருத்தும்.
இப்படியே தொடர்ந்தால் நன்று 
பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் விடுதலை போராட்ட வகுப்பு எடுக்க வெளிக்கிட்டால்தான் 
நாங்கள் எழுதவேண்டி வரும்............. வருகிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது தமிழர்களிடம் இல்லாத பண்பு. அதைத்தான் எல்லா இயக்கங்களும் பிரதிபலித்தன. இதில் புளட்டுக்கும், புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் வித்தியாசமில்லை.

இதில் மூன்று விதம். மாற்று கருத்துக்களை கேட்பது, சகித்து கொள்வது, ஏற்றுக் கொள்வது.

புலிகள், இதில் கேட்பதை முழுழுமையாகவும், சகிப்பது, ஏற்றுக்கொள்வதை பகுதியாகவம் செய்தார்கள் என்பதே நான் விளங்கி கொண்டது.

ஆனால் புளொட் இல் மாற்று கருத்து என்பதற்கு இடம் இருந்ததாக நான் அறியவில்லை.

வெளிப்படையான புளொட் உதாரணங்கள் இருந்தால் சொல்லுங்கள்.      
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

இவர்கள் எல்லாம் 60 ஆண்டுளில் பிறந்தவர்கள் இவர்களுக்கு தெரியாதா? ஏன் போகிறோம் எனும்போது.... எங்கு போகவேண்டும் என்று?

82 - 84 க்கு இடையில்தான் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலில் பலர் இயக்கங்களுக்கு அள்ளுப்பட்டார்கள். ஆனால் அப்போதும் புலிகள் பெரும் தொகையில் இயக்கத்திற்கு சேர்க்கவில்லை. இதனால்தான் உணர்வுமிக்க இளைஞர்கள் பலர் புளட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் போன்ற இயக்கங்களுக்கு போய் அந்த இயக்கங்கள் வீங்கின.

உண்மையில் அந்தக் காலத்தில் இயக்கத்தின் கொள்கைகளைப் பிரித்தறியக் கூடிய தெளிவு மருதரைப் போல சிறுவர்களாக இருந்ததைப் போல இப்படிப் போனவர்களுக்கும் இருந்திருந்தால் தமிழீழம் எப்போதே கிடைத்திருக்கும்😃

33 minutes ago, Maruthankerny said:

இதை எந்த ஆதார அடிப்படையில் எழுதுகிறீர்கள்?
யாரவது புலிகளில் இருந்து விலகி வந்தவர்கள் இவ்வாறு எங்கேயாவது எழுதுகிறார்களா?

மாற்றுக் கருத்துக்களை மதிப்பது எப்படி மதிக்கின்றார்கள் என்பதை யாழ் கள உரையாடல்களிலும், முகப்புத்தக உரையாடல்களிலும் சர்வசாதாரணமாகக் காணும்போதே ஆதாரம் காட்டு என்று கேட்கும் மருதரைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.

புலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது தெரிந்தும் நீங்கள் அதைப் பற்றிக் கேட்பது புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Maruthankerny said:

நீங்கள் எதையாவது கொண்டுவந்து இணையுங்கள். வெறும் வாந்திகளை இணைக்காதீர்கள் 
யாழ்களத்தை குப்பை கொட்டும் இடமாக பாவிக்காதீர்கள் என்றுதான் நான் எழுதுகிறோம்.
ஒரு முறை வாசித்து உங்கள் ஆறறிவுக்கு உட்படுத்தி இணையுங்கள் என்றுதான் எழுத்துகிறோம் 

 

வாசிக்காமல் இணைப்பதில்லை என்று முன்னரே வேறு திரிகளில் சொல்லியிருக்கின்றேன். வாந்தி என்று நீங்கள் நினைப்பது உங்கள் பார்வையில் மட்டும்தான். ஒரு காலத்தில் நாட்டுக்காகப் போராடப்போனவரின் வாக்குமூலத்தை அறியவும் அதிலிருந்து படிப்பினைகளைப் பெறவும் இப்போதும் சந்தர்ப்பம் இருக்கின்றது. ஏன் தமிழினம் இன்னமும் சிங்களவர்களால் அடக்கப்படுகின்றார்கள் என்பதற்கு இவைகளும் காரணங்கள்தான்.

44 minutes ago, Maruthankerny said:

நீங்கள் இணைக்கும் இணைப்புகளில் அப்படி ஏதும் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். 

மருதருக்கு முள்ளாகக் குத்தினது இதுதான் என்று நினைகின்றேன்.

Quote

பின்னாளில் வளவனைப் பற்றி நான் விசாரித்ததில், அவர் புலியின் உளவாளி என்றும், அக்கடமையை செய்வதற்காகவே கழகத்தில் இணைந்தார் என்றும் கூறப்பட்டது. அத்துடன் நான் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இலங்கையில் வேலை செய்ததை நான் நேராகக் கண்டேன். ஏற்கனவே ஒரு இயக்கத்தில் இருந்தவர்களை, புலி உடனடியாக முக்கிய பொறுப்பில் அமர்த்தாது என்பதை வைத்து பார்க்கும்போது, வளவன் ஒரு புலி உளவாளி என நானும் நம்புகின்றேன்.

ஒரு அமைப்பின் தவறை, அதன் கட்டமைப்பிற்குள்ளேயே நேர்மையான வழியில் சுட்டிக் காட்டப் புறப்பட்ட நாம் துரோகிகள் ஆக்கப்பட்டோம். ஆனால் உளவு பார்க்க புலிகளால் அனுப்பப்பட்டவன், எல்லோரையும் காக்கா பிடித்து, எல்லோருக்கும் நல்லவனாக நடித்த உண்மையான துரோகி, நல்லவனாகவும் அமைப்பிற்கு விசுவாசியாகவும் அமைப்பின் தலைமையால் கருதப்பட்டான். 

இதை வாசித்தபோது புலிகள் இயக்கம் தூரநோக்கோடு புலனாய்வுப் பிரிவை அப்போதே திறமையாக வளர்த்துள்ளது என்ற பெருமிதம்தான் வந்தது. அத்துடன் யுத்த காலத்தில் இயக்கத்தை விட்டுவிலகாமல் இயக்கத்திற்கு விசுவாசமாகச் செயற்பட்ட வளவன் போன்ற போராளிகள்மேல் மதிப்புத்தான் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

புலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது தெரிந்தும் நீங்கள் அதைப் பற்றிக் கேட்பது புரியவில்லை.

இப்படியான நிபந்தனை, இங்கே சனநாயக நாடுகள் என்று பீற்றிக்கொள்ளும் நாடுகளில் உள்ள உளவு, ராணுவ மற்றும் அரசின் political, policy, செக்யூரிட்டி sensitive ஆனா பகுதியில் வேலை செய்பவர்களுக்கும் இருக்கிறது.

ஏன், அப்படி அரசுக்கு வேலை செய்யும் தனியார் நிறுவனங்களிலும் இருக்கிறது.

பலல, னியார் நிறுவனங்களிலும் இருக்கிறது, கால எல்லையுடன்.

எல்லாத்தையும், official secrecy law என்பதால் நியாயப்படுத்துகிறார்கள்.

புலிகள், அதை crude ஆக, வாயை மூடிக் கொண்டு இரு என்று செயற்றப்படுத்தினார்கள்.

என்னை பொறுத்தவரையில், புலிகள் வாழ்வா, சாவா என்பதை ஒவொரு கணமும் எதிர் நோக்கும் நிலையில், ஓர் சர்வதேச அங்கீகாரமும் இல்லாத நிலையில்,  விலகுவோரை அப்படி நிபந்தனை விதிப்பது, நியாயாதிகமாகவே தெரிந்தது, தெரிகிறது.          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரத்தில்  முதன் முதல் புளொட் அமைப்பால் புலிகளை சித்திரவதை படுத்தி கொலை செய்து உடலங்களை புதைத்த சகோதரப்படுகொலை கலாச்சாரத்தை ஈழத்தில் தொடக்கியவர்கள் . அப்பவெல்லாம் நாங்க நம்பவில்லை மனதின் ஓரத்தில் இப்படியும் செய்வார்களா என்று ஒரு கேள்வி ஓடிகொண்டே  இருக்கும் .துரதிஷ்டாவசமாக இந்த குளிர் நாடுகளில் வாழ  வெளிக்கிட்டு அவர்களின் ஒப்புதல் வாக்கு மூல நாவல்கள் சுய சரிதைகள் மூலம் அறிந்த போது இந்த மாற்று அமைப்புகளை  தடை செய்து இருக்கிற கொஞ்சநஞ்ச உறுப்பினர்களுக்கும் நிம்மதியய் கொடுத்ததில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை .

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் ஐ பற்றி அதில் இருந்தவரே எழுதுவதை பார்க்கும் போது, புளொட் ஆனாது புலிகள் இடத்தில வந்து இருந்தால், ஏறத்தாழ ஓர் பொல்பொட், கமெரூஜ் (Khmer Rouge) போலவே இருந்து இருக்கும் என்றே தோன்றுகின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

 

ஆனால் புளொட் இல் மாற்று கருத்து என்பதற்கு இடம் இருந்ததாக நான் அறியவில்லை.

வெளிப்படையான புளொட் உதாரணங்கள் இருந்தால் சொல்லுங்கள்

புதியதோர் உலகம் படித்ததில் இருந்தும், தீப்பொறியினரின் கட்டுரைகளில் இருந்தும் அவர்கள் மாற்றுக் கருத்துக்களை மதித்ததாக அறியவில்லை. சித்தாந்தங்களின் பின்னால் போன புளட் அமைப்பினர் கூட மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கமுடியாமல் இருந்தது தமிழர் அடிப்படையில் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்றுதான் காட்டுகின்றது.

12 minutes ago, Kadancha said:

புளொட் ஐ பற்றி அதில் இருந்தவரே எழுதுவதை பார்க்கும் போது, புளொட் ஆனாது புலிகள் இடத்தில வந்து இருந்தால், ஏறத்தாழ ஓர் பொல்பொட், கமெரூஜ் (Khmer Rouge) போலவே இருந்து இருக்கும் என்றே தோன்றுகின்றது.  

வளர முன்னர் தாங்களே அழிந்திருப்பார்கள். சிங்களப் படைகளுக்கும் போரிடவேண்டிய தேவை இருந்திருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

புளொட் ஐ பற்றி அதில் இருந்தவரே எழுதுவதை பார்க்கும் போது, புளொட் ஆனாது புலிகள் இடத்தில வந்து இருந்தால், ஏறத்தாழ ஓர் பொல்பொட், கமெரூஜ் (Khmer Rouge) போலவே இருந்து இருக்கும் என்றே தோன்றுகின்றது.  

விடுதலை என்று கிளம்பி தங்களை தாங்களே நரபலி ஆடியுள்ளார்கள் போதாக்குறைக்கு சகோதரப்படு கொலைகளையும் ஒருவித சைக்கோ தனத்துடன் தொடக்கி வைத்தவர்கள் .இந்த கொலைகளில் பாதி  கொலைகளை சிங்கள ஆமி மீது செய்து இருந்தால் சிங்களவன் கண்டிக்கு மேல் வராமல் ஒதுங்கியிருப்பான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் இல் ஆயுத கம்யூனிச தன்மை என்பது, அதி உயர் தலைமை பீடம், தன்னைக்கு கீழே உள்ள படித் தலைமைகள்,   அதி உயர் தலைமை பீடத்தின் விருப்புக்கே ஏற்ப நடந்தால் சரி என்றவாறே தலைமைத்துவத்தை வழங்கி இருக்கிறார்கள். இது புளொட் இல் மேலிருந்து, கீழாக அடித்த தலைமை வரை பரவி உள்ளது.

பொதுவான, ஆயுத கம்யூனிச அமைப்புகளின் அனுபவமாகும். 

கமெரூஜ் (Khmer Rouge) இந்த அனுபவமும் இதுவே.

சீனாவின் மாசே தூங் இன் கீழும் இது நடைபெற்றது, ஆனால் அளவில் பெரியதாலும், வேறு எதிர்க்க கூடிய சக்திகள் இல்லாததாலும்   தப்பி விட்டது.

அதாவது, ஓர் பொதுவிதி வைத்து  அமைப்பை நடத்தவில்லை.   

இதில் பிரச்னை என்னவென்றால், தனிப்பட்டவர்களின் whims and fancies, கொள்கைகளாக வருவது. இதுவே khemer rouge யிலும் நடந்தது. பின்பு, social experiments என்று சொல்லி, முழு சமூகத்தையும் கிராமத்துக்கு குடி பெயர்த்து, விவசாயம் என்று தொடங்கி, பஞ்சம் வரை வந்து, நிறுத்தாமல் எதிர்த்தவர்களை (அதாவது தமது இனத்தவரையே), இனப்படுகொலையில் என்று முடிந்தது.      
    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக ஆழமாக புளொட்டின் செயல்களை ஆராயும் தீவிரம் மிக நல்ல விடயம்! இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது

(அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா? எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது!😊)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.