Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சீமானிசம் Vs பிரபாகரனிசம்... 'நாம் தமிழர்' தகராறு!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான்.

``உறவுகளே’’

சீமான் தன் கட்சித் தொண்டர்களை இப்படித்தான் அழைப்பார். அந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரிவும் பிரச்னைகளும்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு?

கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’ மேடைகளில் பகுத்தறிவு, தமிழின உணர்வு, ஈழ ஆதரவு, சாதி மறுப்பு ஆகியவற்றைப் பேசக்கூடிய பேச்சாளராக அரசியல் உலகத்துக்கு அறிமுகமானார் சீமான்.

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான். திராவிடக் கட்சிகளின்மீது அதிருப்தியில் இருந்தவர்கள், 2009-க்குப் பிறகு ஈழ ஆதரவு அரசியலைப் பேசிய இளைஞர்கள் என இருதரப்பினரையும் தன் பேச்சால் கவர்ந்தார் சீமான்.

2012-ல் வெளியிடப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி ஆவணம்’, தமிழ்பேசும் சாதிகள்தான் தமிழர்கள் என்று வரையறுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர், மலைவாழ் மக்கள், உருது பேசும் முஸ்லிம்கள் எனப் பலரையும் தமிழர் அடையாளத்திலிருந்து தள்ளிவைத்தது, ‘கன்னடரான பெரியார் தமிழர்களின் விரோதி’ என்று நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்தது, ‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்’, ‘சிங்களர்களால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, எங்கள் ஆட்சியில் ஐம்பதாயிரம் பேரைக் கொண்ட சிறப்புக் காவல் படை அமைப்போம்’ என்றெல்லாம் அவ்வப்போது அதிரடிக்கருத்துகளை அள்ளிவிடுவது, பகுத்தறிவு பேசிய சீமான் திடீரென்று ‘வீரத்தமிழர் முன்னணி’யை ஆரம்பித்து, ‘முப்பாட்டன் முருக’னுக்குக் காவடி தூக்கியது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியது ‘நாம் தமிழர்.’

சீமான்
 
சீமான்

இவையெல்லாம்கூட கொள்கை அடிப்படையில் சீமானிடம் ஏற்பட்ட மாற்றங்கள். ஆனால் சீமான் தன் பிம்பத்துக்குத் தானே குழி தோண்டியது, ஈழம் - பிரபாகரன் சந்திப்பு குறித்த பேச்சுகளின்போதுதான். ‘அண்ணன் என்னை ஆமைக்கறி சாப்பிடச் சொன்னார்’, ‘பிரபாகரன் நாற்பதாயிரம் டன் உள்ள ஆஸ்திரேலிய அரிசிக்கப்பலை சுட்டுப்பழகப் பயிற்சி கொடுத்தார்’, ‘பிரபாகரன் நான் சாப்பிடும்போது என்னென்ன சாப்பிடுகிறேன் என்று குறிப்பெழுத ஒருவரை நியமித்தார்’, ‘பொட்டு அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லியை உடைத்துப்பார்த்தால் உள்ளே கறி இருந்தது’ என்றெல்லாம் அவர் பேசிய பேச்சுகள் சீமானைக் கேலிப்பொருளாக்கின. 30 ஆண்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கத்தை ‘தமிழீழ முனியாண்டி விலாஸ்’-ஆக சீமான் மாற்றுகிறார் என்று குற்றச்சாட்டுகள் வலுத்தன. ‘சீமான் தன்னை மட்டுமல்ல, பிரபாகரனையும் சேர்த்து கேலிப்பொருளாக மாற்றுகிறார்’ என்று ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்தன. ‘`சீமான் பொய் சொல்கிறார். அவர் பிரபாகரனைச் சந்தித்ததே எட்டே நிமிடங்கள்தான்” என்றார் வைகோ. கொளத்தூர்மணியும்் சீமானின் ‘தமிழீழ சமையல் சாதம், ஆமைக்கறி பிரமாதம்’ பேச்சுகளை மறுத்தார். இதனாலேயே சீமான் கடும் கண்டனங்களும் கிண்டல்களுக்கும் ஆளானார். சரி, இப்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய கல்யாணசுந்தரமும் ராஜிவ்காந்தியும் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்?

‘தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் வசூலிக்கப்பட்ட நிதிக்கு முறையான கணக்குவழக்குகள் இல்லை. ‘மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது’ என்று மேடையில் பேசிவிட்டு சீமான் மது அருந்துகிறார், புகைபிடிக்கிறார். நாங்கள் போன் செய்தால் சீமான் எடுப்பதில்லை, எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் அனுப்புவதில்லை.’ இதற்கு சீமானின் பதில்கள் என்ன? `அவர்கள் என் மனதைப் புண்படுத்தியதால்தான் நான் போனை எடுப்பதில்லை. அவர்கள் கட்சியை வளர்க்கவில்லை, அவர்களைத்தான் வளர்த்துக்கொண்டார்கள். ஃபேஸ்புக்கில் எனக்கு எதிராகப் போடப்படும் பதிவுகளை அவர்கள் தடுப்பதில்லை.’

மொத்தச்சண்டையே ‘சிகரெட் குடிக்கிறார், ஃபேஸ்புக் பதிவு, போனை எடுக்கவில்லை’ என்கிற தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாக இருக்கின்றனவே தவிர, கொள்கைரீதியிலான பிரச்னைகளாகத் தெரியவில்லை. ``சீமானிசத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள்’’ - இது சீமானின் ஆதங்கம். “நாங்கள் பிரபாகரனிசத்தைத்தான் ஏற்போம்’’ - இது கல்யாணசுந்தரத்தின் பதில்.

சீமான்
 
சீமான்

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளே ‘பிரபாகரனிசம்’ என்று எதையும் முன்வைத்ததில்லை. சமூகத்தின் பிரச்னைகளுக்கான காரணங்கள், அதன் இயங்குநிலை, தீர்வுகள் குறித்த தத்துவப்பார்வைகளே ‘இயம்’ என்று அழைக்கப்படுகின்றன. மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என்பவை இந்த அடிப்படையிலானவைதான். தத்துவத்தைச் செயல்படுத்துபவர்கள், போராளிகள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் அவர்கள் பெயரால் சேகுவேராயிசம், காஸ்ட்ரோயிசம், நல்லகண்ணுயிசம் என்றெல்லாம் அழைக்கப்படுவதில்லை. எனவே, ‘சீமானிசமா, பிரபாகரனிசமா’ சண்டைகளில் எந்த அர்த்தமும் இல்லை.

மேடைகளில் சீமானின் உடல்மொழியிலேயே பேசும் கணிசமான இளைஞர்களைச் சீமான் உருவாக்கியிருக்கிறார்.சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, கொசுபேட் அடிப்பதைப்போல சட்டென்று கைகளை உள்வாங்கி, மைக் உள்ள மேஜையில் அடித்து உரத்த குரலெழுப்பிப் பேசுவது, ஜெபக்கூட்டத்தின் ரிதத்தில் அமைந்த ஏற்ற, இறக்கப் பேச்சுகள் என்று அப்படியே டிட்டோ சீமான்கள். ஆனால் அவர்களுக்கான எதிர்காலப் பாதைதான் என்ன?

‘பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தவர் போட்டி’ ‘கூட்டணி இல்லை’, ‘மகளிருக்கு 50 சதவிகித இடங்கள்’ ஆகிய சீமானின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவை. ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் 1969-ல் இருந்து இங்கே பெரிய கட்சிகள்கூட கூட்டணி வைத்தே வெற்றிபெற்றிருக்கின்றன. (2014 ‘மோடியா, லேடியா’ நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது மட்டும் விதிவிலக்கு) நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி அதிகரிக்கிறது, சில இடங்களில் மூன்றாம் மற்றும் நான்காமிடம் கிடைக்கிறது. ஆனால் இவையெல்லாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போதாது. ஒவ்வொரு தேர்தலிலும் செலவழித்து, பணமிழந்து அதன்பின் ஒதுங்கிப்போகிற நாம் தமிழர் தம்பிகள் எத்தனையோ பேர்!

தேர்தல் அரசியலிலும் நடைமுறை எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. லட்சியவாதத்திலும் சாத்தியமற்ற, நம்ப முடியாத பேச்சுகளால் கிண்டலுக்கு ஆளாகும் நிலை. தன்னை நம்பிவந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் நம்பிக்கைக்கும் எதிர்காலத்துக்கும் சீமானிடம் என்ன தீர்வுகள் இருக்கின்றன? ஒதுங்கிப்போன உறவுகளுக்கு உள்ளூர இந்தக் கேள்விகள் இருந்திருக்கும்.

நன்றி
விகடன்
https://www.vikatan.com/government-and-politics/politics/naam-tamilar-katchi-inter-party-issue-seemanism-vs-prabhakaranism

 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!😎

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Justin said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!😎

உங்கடை கருத்தை வையுங்க தனிப்பட்ட தாக்குதலை செய்யாதீங்க நீங்க செய்வது உங்களுக்கே தெரியும் நல்லது இல்லை என்று ........................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

உங்கடை கருத்தை வையுங்க தனிப்பட்ட தாக்குதலை செய்யாதீங்க நீங்க செய்வது உங்களுக்கே தெரியும் நல்லது இல்லை என்று ........................

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

அவர் எழுதிய வசனத்தை இடைவெளி விடாது வாசித்து விளங்கிக்கொள்ளுங்கள்.    💐 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

பிழம்பர் தீனி போட்டா நீங்க ஏன் திங்க போறீங்க.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிசம் - சீமானிசம் இரண்டும் யாதெனில் ? | முனைவர். செந்தில்நாதன் | Tamizham

பிரபாகரன் என்ற பெருந்தலைவர் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களை சிங்கள இனவெறி தொடுத்த தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றிய இறைவனாக எங்கள் தலைவர் பிரபாகரனின் மக்கள் காப்பு அணுகுமுறை பிரபாகரனிசம்.

அந்த மாபெரும் தலைவனை பின்தொடர்ந்து தமிழ் நிலத்தில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போரை தொடுத்து வரும் நாம்தமிழர் கட்சியை உருவாக்கி கொள்கையை வகுத்து வரும் அண்ணன் சீமான் அவர்களின் கொள்கை சீமானிசம்.

பிரபாகரனிசம் என்பது ஆலமரம் சீமனிசம் என்பது அதன் விழுது 

பிரபாகரனிசம் என்பது சூரியன் சீமனிசம் என்பது சூரியனில் இருந்து ஒளிபெறும் நிலவு.

 

https://yarl.com/forum3/topic/195447-நாம்-தமிழர்-அரசியல்-பாகம்-2/page/96/

இனி கதைப்பவர்கள் மேலே உள்ள காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு கருத்திடவும்.. அல்லது எல்லோரும் அரைகுறை தான்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

கண்டு கொள்ளாதையுங்கோ! அது பெருமாளுக்கு மட்டும் தெரியும் ஒரு தோற்றம், இப்ப உங்களுக்குத் தெரியாது!

(இங்க கன பேருக்கு பிழம்பர் யாரெண்டு தெரியாது, அது தான் நான் அவரைத் தாக்குகிறேன் என தவறாக நினைக்கக் காரணம்!)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது ஈழவிடுதலை பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி பகிர்ந்த விடயம். போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது அடியே அடியே சந்திரிகா என்று அறிவுமதி எழுதிய பாடல் பிரபாகரனின் மேற்பார்வைக்கு சென்றபோது என்ன இருந்தாலும் அவர் ஒரு பெண் அல்லவா இப்படி அவமதித்து எழுத கூடாது என்று பாடலை நிராகரித்து விட்டாராம். அறிவுமதி பிறகு பாடலை மாற்றி எழுதியதாக கூறினார்.

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு. தொலைக்காட்சி விவாதங்களில் கூட சக கருத்தாளர்களுடன் ஒருமையில் அசிங்கமாக பேசி தொலைக்காட்சி நெறியாளரால் கண்டிக்கப்பட்ட  நபர் சீமான்.

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள கட்டுரையில் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் காட்டவில்லை. கம்யூனிசம் என்ற ஒரு குடையின் கீழ் ரஷ்யாவைக் கொண்டு வந்த பிறகு, சில தலைவர்கள் தங்களை மையப் படுத்திய சித்தாந்தங்களை லெனினிசம், ஸ்ராலினிசம், ட்ரோக்கியிசம் என்று நடைமுறைப்படுத்தினர் அல்லது ஊக்குவித்தனர். அதுவே கம்யூனிசம் கெட்ட பெயரெடுக்க முதல் காரணம். ரஷ்யாவின் வரலாற்றைப் பார்த்தால் ஸ்ராலினிசத்திற்குப் பின்னர், "குருஷேவிசம்" என்ற ஒன்றை நிகிரா குருஷேவ் அறிமுகம் செய்ய முயலவில்லை! வரலாற்றியலாளர்கள் குருஷேவிசம் என்று குறிப்பிடுவது "ஸ்ராலினிசத்திலிருந்து விலகிச் செல்லும் dismantling Stalinism என்பதைத் தான்" . இதனால் தான் இந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவினால் நேட்டோவுடன் தாக்குப் பிடித்து கம்யூனிசத்தை வேறு பல நாடுகளிலும் பரப்பவும் முடிந்தது.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது தான்: ஒரு தனிமனித வழிபாட்டை அடிப்படையாக் கொண்ட சமூக இயக்கம் ஒரு நாளும் நன்மையில் முடியாது! முட்டையையெல்லாம் ஒரே பாத்திரத்தில் வைத்து விட்டு, பாத்திரம் சுக்கு நூறாய்ச் சிதறிய பிறகு முதல் சதுரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும்!  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது ஈழவிடுதலை பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி பகிர்ந்த விடயம். போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது அடியே அடியே சந்திரிகா என்று அறிவுமதி எழுதிய பாடல் பிரபாகரனின் மேற்பார்வைக்கு சென்றபோது என்ன இருந்தாலும் அவர் ஒரு பெண் அல்லவா இப்படி அவமதித்து எழுத கூடாது என்று பாடலை நிராகரித்து விட்டாராம். அறிவுமதி பிறகு பாடலை மாற்றி எழுதியதாக கூறினார்.

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு. தொலைக்காட்சி விவாதங்களில் கூட சக கருத்தாளர்களுடன் ஒருமையில் அசிங்கமாக பேசி தொலைக்காட்சி நெறியாளரால் கண்டிக்கப்பட்ட  நபர் சீமான்.

சீமான் பேசிய அந்த பேச்சை கேட்டீர்களா???

நான்  முழுமையாக கேட்டேன்

அவர் தலைவரை உயர்த்தித்தான்  பேசுகிறார்

ஆனால்  நான்  அவரளவுக்கு நல்லவனல்ல  என்கிறார்

இத  சாதாரணமாக யாரும் சொல்வது தான்...

நானும்  சொல்வேன்

நான் தலைவரது இடத்தில்  இருந்திருந்தால்

அரைவாசி  சிங்களவரையாவது  அழித்திருப்பேன்   நாட்டைப்பிடித்திருப்பேன் என்று.

அந்தளவுக்கு பலமும் வளமும் தலைவரிடமிருந்தது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

சீமான் பேசிய அந்த பேச்சை கேட்டீர்களா???

நான்  முழுமையாக கேட்டேன்

அவர் தலைவரை உயர்த்தித்தான்  பேசுகிறார்

ஆனால்  நான்  அவரளவுக்கு நல்லவனல்ல  என்கிறார்

இத  சாதாரணமாக யாரும் சொல்வது தான்...

நானும்  சொல்வேன்

நான் தலைவரது இடத்தில்  இருந்திருந்தால்

அரைவாசி  சிங்களவரையாவது  அழித்திருப்பேன்   நாட்டைப்பிடித்திருப்பேன் என்று.

அந்தளவுக்கு பலமும் வளமும் தலைவரிடமிருந்தது

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! அவ்வாறான நிதானம் பேச்சில் கூட இல்லாதவரைச் சுற்றி ஈழத்தின் தமிழ் தேசிய அரசியலை பின்னுவதைத் தான் நான் எதிர்க்கிறேன். "சீமானிசத்தில்"  இருந்து ஈழவருக்கு ஒரு நன்மையும் வராது! சீமானுக்கு நன்மை வரலாம், நமக்கு வராது! 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு.

சரியாக சொன்னீர்கள்.
நேற்று யாழ்கள கருத்தாளர்  இப்படி பேசும் இனவெறி சீமானை நாடுகளில் உள்ள பசுமைவாத கட்சிகளோடு ஒப்பிட்டதும் கவலையானது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! அவ்வாறான நிதானம் பேச்சில் கூட இல்லாதவரைச் சுற்றி ஈழத்தின் தமிழ் தேசிய அரசியலை பின்னுவதைத் தான் நான் எதிர்க்கிறேன். "சீமானிசத்தில்"  இருந்து ஈழவருக்கு ஒரு நன்மையும் வராது! சீமானுக்கு நன்மை வரலாம், நமக்கு வராது! 

உங்களது கருத்தை 

பார்வையை ஏற்றுக்கொள்கின்றேன்

ஆனால்  மேடைப்பேச்சுக்களில்

அதிலும்   தமிழக அரசியல்  மேடைகளில்  பேசப்படுபவை எதையும்

நான் வேத  வாக்காக

அல்லது நடைமுறைக்கு உகந்ததாக

அல்லது செயற்பாடுடையதாக எடுத்துக்கொள்வதில்லை

Edited by விசுகு
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடீயோவின் முன்னும், பின்னும் வெட்டி சொல்ல வந்த கருத்தினை மடை மாத்தி..... இந்த கபடம் இன்னும் முடியவில்லை.

🤦‍♂️😁

 

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மார்க்ஸிசம்.. லெனினிசம்.. ரஷ்சியாவை தாண்டி.. எல்லாம் பேசப்படும் போது..போற்றப்படும் போது.. பிரபாகரனிசம்.. சீமானிசம்.. ஏன் பேசப்படக் கூடாது.. போற்றப்படக் கூடாது.

பிரபாகரனிசம்.. சீமானிசத்தின் கருவறை.. தாய் என்பது தான் யதார்த்தம். அதை யாரும் நிராகரிக்கவில்லை.

பிரபாகரனிசம்.. இருப்பதால்.. சீமானிசம்.. பிறப்பெடுக்கவே கூடாது என்றால்..

மார்க்ஸிசம்.. இருப்பதால்.. லெனினிசம்..பிறந்தே இருக்கக் கூடாது என்று வாதம் வைத்தால்.... என்னாகும்.. ??!

வாதம் வைச்சாலும்.. இசங்கள் பிறப்பெடுப்பது மக்களின் உரிமை மீட்பில் இருந்து உருவெடுக்கிறது. அந்தத் தேவையை உருவாக்கும் வரை.. இசங்கள் பிறந்து கொண்டே இருக்கும்.

சீமானிசம்.. பிரபாகரனிசத்தை முறியடிக்கும்.. பின் தள்ளும்.. தோற்கடிக்கும்.. மழுங்கடிக்கும் என்று பசப்புக் காட்டுபவர்கள் போக.. இரண்டும் தனித்துவப் பண்புகளை கொண்ட தெற்காசிய புதிய இசங்கள் என்பது என்னவோ.. யதார்த்தமாகிறது. 

பிரபாகரனிசம்.. ஆயுதத்தால் சாதிக்க நினைத்ததை.. அது அந்தக் காலத்தில் சாத்தியாமவும் இருந்தது..

சீமானிசம்.. அறிவாயுதத்தால்.. சாதிக்க நினைக்கிறது.. இது இந்தக் காலத்தில் சாத்தியமாக உள்ளது. 

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சரியாக சொன்னீர்கள்.
நேற்று யாழ்கள கருத்தாளர்  இப்படி பேசும் இனவெறி சீமானை நாடுகளில் உள்ள பசுமைவாத கட்சிகளோடு ஒப்பிட்டதும் கவலையானது.

சிறிலங்காவில் நடக்கும் இன  அத்துமீறலுக்கு வராத கவலை...
திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வு தடைக்கு வராத கவலை...
காணாமல் போனோர் பிரச்சனை முடிவுக்கு வரவில்லையே என வராத கவலை...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு விசாரணை இல்லையே என்று வராத கவலை...
தமிழர் விவசாயங்கள் மழுங்கடிக்கப்படுகின்றதே என நினைத்து வராத கவலை...

என் நிலம்
என் உரிமை
என் மக்களுக்கு முதலிடம்
என் தமிழுக்கு முதலிடம்
விவசாயத்திற்கு முதலிடம்
மழை நீரை சேமிப்போம்
இயற்கையை பாது காப்போம்
குளங்களை தூர் வார்வோம்
காட்டில் வாழும் மிருகங்கள் பறவைகளை பாதுகாப்போம்
தொழில்கல்விகளை ஊக்கப்படுத்துவோம் என்று சொல்லும் சீமான் இனவெறியன். அதை நினைக்க தங்களுக்கு கவலை கவலையாய் வருகின்றது.
 

Edited by குமாரசாமி
 • Like 2
 • Thanks 2
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 19:47, பிழம்பு said:

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான்.

``உறவுகளே’’

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 15:31, Justin said:

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! 

இந்த ஒரு விசயத்தினை மட்டும் விவாதிக்க ஆவல்..

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் வன்னி பெருநிலத்தில் சிங்களத்தினை துடைத்து எறிந்த புலிகளை தடுக்காமல் வவுனியாவினை பிடித்திருக்கலாம். 

அல்லது ஆனையிறவு தாக்குதலுடன், யாழ்பாணத்தினை விடுவித்திருக்கலாம்.

சிங்களத்தின் மனபலம் சிதைந்த நிலையில், பெரு வெற்றி அடைந்திருக்கலாம். உண்மையிலேயே, இந்தியா வரக்கூடும் என்று தயங்கிய படியால், நிதானம் தான் அழிவில் முடிந்தது.

மேலும் சமாதானம் என்று நிதானித்த காலத்தில் தான், அழிவுக்கான நிகழ்ச்சி நிரலே எதிரியினால் போடப்பட்டது.

ஒரு யுத்த தலைவன் நிதானிப்பது தவறு.... வரலாறில் பல உதாரணங்கள் உள்ளன.

30 ஆண்டுகால போராட்டம் நீண்ட ஒரு காலம். அதிலே வெற்றி அடைந்தபின் நிதானித்திருக்க்க வேண்டும். மாறாக இடையில் நிதானித்ததே, கருணா உட்பட இழப்புகளுக்கும், பின்னர் வந்த பேரழிவுகளுக்கும் காரணம்.  

அங்கு மட்டுமல்ல அரசியலும் தான்.

ரணில் விக்கிரமசிங்க என்கிற அரசியவாதி, மைத்திரியினை கிளப்பியபின்னர், நிதானிக்காமல் தானே போட்டி இட்டு இருந்தால், அவர் அரசியலே வேறாகி இருக்கும். 

Edited by Nathamuni
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

பலரது கருத்து மட்டுமல்ல உண்மையும் அதுதான்.

கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால்........

வேதம் புதிது திரைப்படத்தில் பாரதிராஜா ஒரு கருத்தை அருமையாக சொல்லியிருப்பார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த ஒரு விசயத்தினை மட்டும் விவாதிக்க ஆவல்..

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் வன்னி பெருநிலத்தில் சிங்களத்தினை துடைத்து எறிந்த புலிகளை தடுக்காமல் வவுனியாவினை பிடித்திருக்கலாம். 

அல்லது ஆனையிறவு தாக்குதலுடன், யாழ்பாணத்தினை விடுவித்திருக்கலாம்.

இந்தியா வரக்கூடும் என்று தயங்கிய படியால், சிங்களத்தின் மனபலம் சிதைந்த நிலையில், பெரு வெற்றி அடைந்திருக்கலாம். உண்மையிலேயே, நிதானம் தான் அழிவில் முடிந்தது.

மேலும் சமாதானம் என்று நிதானித்த காலத்தில் தான், அழிவுக்கான நிகழ்ச்சி நிரலே எதிரியினால் போடப்பட்டது.

ஒரு யுத்த தலைவன் நிதானிப்பது தவறு.... வரலாறில் பல உதாரணங்கள் உள்ளன.

30 ஆண்டுகால போராட்டம் நீண்ட ஒரு காலம். அதிலே வெற்றி அடைந்தபின் நிதானித்திருக்க்க வேண்டும். மாறாக இடையில் நிதானித்ததே, கருணா உட்பட இழப்புகளுக்கும், பின்னர் வந்த பேரழிவுகளுக்கும் காரணம்.  

அங்கு மட்டுமல்ல அரசியலும் தான்.

ரணில் விக்கிரமசிங்க என்கிற அரசியவாதி, மைத்திரியினை கிளப்பியபின்னர், நிதானிக்காமல் தானே போட்டி இட்டு இருந்தால், அவர் அரசியலே வேறாகி இருக்கும். 

பிரபாகரன் நிதானித்தமைக்குக் காரணம் இருந்ததா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

காசா பணமா எடுத்து விடுங்க....

10 minutes ago, zuma said:

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

தலைவரைப்பற்றி இங்கேயே பலர் அவதூறு எழுப்பும் போது எங்க போனீங்க ராசா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால்........

வேதம் புதிது திரைப்படத்தில் பாரதிராஜா ஒரு கருத்தை அருமையாக சொல்லியிருப்பார்.

அந்த படம் தெரியாது.படத்தில் சொல்லபடுவதை எல்லாம் நம்பவது நல்லது இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அந்த படம் தெரியாது.படத்தில் சொல்லபடுவதை எல்லாம் நம்பவது நல்லது இல்லை.

உதுக்கேன் பாரதிராஜாவிடம் போறியள்...

சண்டியணுக்கு சந்தீல தான் சாவு எண்ட பழமொழியின் மறுபக்கம்..... எந் நேரமும் அலேட் ஆக இருக்கவேண்டும், சண்டியண

நின்று, நிதானித்தால்.... சாவு, சந்தீல தான்.

இத விளங்க நினைப்பியள் எண்டு என்று நினைக்கிறன்.

Edited by Nathamuni
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இங்கிலாந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அரசு முடிவு! தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் இருந்து நீக்குவது குறித்து பிரித்தானிய பி.ஓ.ஏ.சி. ஆணைக்குழுவின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய போவதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் டுவிட்டர் பதிவென்றை விடுத்துள்ளதுடன் வெளிவிவகா அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமரின் டுவிட்டர் பதிவில்,  இலங்கை விடுதலைப் புலிகளை தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தின் எச்சங்கள் உலகம் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டுள்ளன மற்றும் எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. எல்.ரீ.ரீ.ஈ மீதான தடையை பிரிட்டிஷ் அரசு நீடிக்கும் என்று நம்புகிறேன். என பதிவிட்டுள்ளார். இது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் 2020 அக்டோபர் 21 ஆந் திகதிய திறந்த தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மார்ச் 08 ஆந் திகதியிட்ட ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க செயலாளரின் தீர்மானத்தை எதிர்த்து எல்.ரீ.ரீ.ஈ. முற்போக்கு அமைப்பால் 2019 மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பிரதிபலிப்பாக அமையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் இந்த தீர்மானமானது, 2000 ஆம் ஆண்டின் ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ.) மீதான தடையை நீக்குவதற்காக குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இந்த நடவடிக்கைகளுக்கான ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இல்லாத காரணத்தினால், நேரடியான பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ள முடியவில்லையாயினும், தொடர்ச்சியாக இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பானது மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் அதே வேளையில், மேலதிக விசாரணைகளுக்கும் சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், இங்கிலாந்தில் இடம்பெறும் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கமான அவதானங்களை செலுத்தும். வன்முறையைத் தூண்டி, நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படும் எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தங்களுடன் இணைந்த குழுக்களின் எச்சங்கள் வெளிநாடுகளில் செயலில் உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான போதுமான சான்றுகள் இலங்கை அரசாங்கத்திடம் காணப்படுகின்றன. இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அவதானமாக இருப்பதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எப்பொழுதும் தனது ஆதரவுகளை வழங்கும். https://www.virakesari.lk/article/92766
  • இரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி ! இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 17 வது சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது. 20 ஆவது திருத்தத்தில் உள்ள இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்திற்கு தனி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இவ் வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியிலிருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள்  இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/92765
  • ஹஹ்ஹா... வழக்கப் போல் முஸ்லிம் காங்கிரஸ் பல்டி அடித்து விட்டது. இனி அமைச்சர் பதவிகள் தான்.  கிழக்கு முன்னாள் முதலமைச்சருக்கு அமைச்சு பதவி கொடுத்தால் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மேலும் ஒதுக்கப்படுவார்கள்.
  • திராவிடர்கள் அண்மையில் வெளியிட்ட தமிழ்நாட்டு கொடி எடுபடாது!  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.