Jump to content

ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள்


nunavilan

Recommended Posts

ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள்

சிவதாசன்

ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள் 1
‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ தயார், நோபல் பரிசு தயாரா?

ட்றம்ப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அதை உண்மை பார்க்குமளவுக்கு (fact check) அவர் தன்னைத் தானே ஒரு நகைச்சுவை நாயகனாக்கியிருக்கிறார். அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது என்பது ஒரு கணிப்பு.

இக் காரணங்களுக்காக, ட்றம்ப் ஒரு ‘தற்செயல் ராஜதந்திரி’ (accidental diplomat) என அரசியல் ஞானிகள் அழைக்கவாரம்பித்திருக்கிறார்கள். தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அது ஒரு கோமாளித் தனமான எதிர்பார்ப்பாக இருந்தாலும், ஒபாமாவுக்கு அப் பரிசு கொடுக்கப்பட்டதை விட ட்றம்பிற்குக் கொடுக்கவேண்டுமென்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

மத்திய கிழக்கை எடுத்துக்கொள்வோம். இன்று ஐக்கிய அரபு எமிரேட் (United Arab Emirate (UAE)) மற்றும் பாஹ்ரெய்ன் (Bahrain) நாடுகளுக்கும் பாரம்பரிய எதிரி நாடான இஸ்ரேலுக்கும் உறவுகளை மீள ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள் வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் பாஹ்ரெயின் – இஸ்ரேலிய ஒப்பந்தம் அரபுப் பயங்கரவாதத்தின் உச்சமெனக் கருதப்படும் 9/11 நாளன்று ட்றம்ப் தாரை தப்பட்டைகளுடன் அறிவித்திருந்தார். ‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் அரபு எமிரேட்டுடனான இஸ்ரேலிய ஒப்பந்தம், மற்றும் பாஹ்றேயின் ஒப்பந்தங்களை ‘வசதிக்கான கல்யாணம்’ எனச் சிலர் வர்ணிக்கிறார்கள். உண்மையாகவுமிருக்கலாம். நமக்கு விருப்பமோ விருப்பமில்லையோ இது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுகள்.

ட்றம்ப் பதவியேற்றதிலிருந்து சொல்லிவரும் ஒரு விடயம், அமெரிக்கப் படைகளுக்கு வெளி நாடுகளில் வேலை இல்லை, அவர்களை நான் திருப்பியழைப்பேன் என்பது. அது அமெரிக்கர்களின் உயிர் மீதான கரிசனையால் அல்ல, அமெரிக்கப் பணம் வீணடிக்கப்படுகிறது என்பதற்காக.

2019 இல் அமெரிக்கா பாதுகாப்பு காரணங்களுக்காக ஒதுக்கிய தொகை $686 பில்லியன். மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு வருடா வருடம் கொடுக்கப்படும் உதவி ஏறத்தாள $4 பில்லியன். 1980 இலிருந்து இன்று வரை எகிப்துக்கு அமெரிக்கா வழங்கியிருக்கும் இராணுவ, பொருளாதார உதவி $70 பில்லியன். இஸ்ரேலைச் சூழவுள்ள எதிரி நாடுகளான அரபு நாடுகளிடமிருந்து அதைப் பாதுகாக்க அது அமெரிக்காவை நம்பியிருக்கிறது. இந் நிலையில் அமெரிக்காவிற்கு வரவு இல்லாத செலவுகள் மட்டுமே மிஞ்சுகிறது. போதாததற்கு மத்திய கிழக்கில், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளை நிர்வகிக்கும் செலவு வேறு.

https://marumoli.com/ட்றம்பிற்கு-நோபல்-பரிசு/?fbclid=IwAR1zATc8BY6yEgZHvcdkG_E8SVDKzRhczeAu4LA9DymLbd72DmcMRvONt9Q

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Die wichtigsten Punkte des Trump-Interview mit der New York Times ⋆  Kotzendes Einhorn

சிறந்த கோமாளிகளுக்கு.... நோபல் பரிசு கொடுப்பதென்றால், ட்ரம்ப் அதற்கு.. தகுதியானவரே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.