Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள்


Recommended Posts

ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள்

சிவதாசன்

ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள் 1
‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ தயார், நோபல் பரிசு தயாரா?

ட்றம்ப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அதை உண்மை பார்க்குமளவுக்கு (fact check) அவர் தன்னைத் தானே ஒரு நகைச்சுவை நாயகனாக்கியிருக்கிறார். அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது என்பது ஒரு கணிப்பு.

இக் காரணங்களுக்காக, ட்றம்ப் ஒரு ‘தற்செயல் ராஜதந்திரி’ (accidental diplomat) என அரசியல் ஞானிகள் அழைக்கவாரம்பித்திருக்கிறார்கள். தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அது ஒரு கோமாளித் தனமான எதிர்பார்ப்பாக இருந்தாலும், ஒபாமாவுக்கு அப் பரிசு கொடுக்கப்பட்டதை விட ட்றம்பிற்குக் கொடுக்கவேண்டுமென்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

மத்திய கிழக்கை எடுத்துக்கொள்வோம். இன்று ஐக்கிய அரபு எமிரேட் (United Arab Emirate (UAE)) மற்றும் பாஹ்ரெய்ன் (Bahrain) நாடுகளுக்கும் பாரம்பரிய எதிரி நாடான இஸ்ரேலுக்கும் உறவுகளை மீள ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள் வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் பாஹ்ரெயின் – இஸ்ரேலிய ஒப்பந்தம் அரபுப் பயங்கரவாதத்தின் உச்சமெனக் கருதப்படும் 9/11 நாளன்று ட்றம்ப் தாரை தப்பட்டைகளுடன் அறிவித்திருந்தார். ‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் அரபு எமிரேட்டுடனான இஸ்ரேலிய ஒப்பந்தம், மற்றும் பாஹ்றேயின் ஒப்பந்தங்களை ‘வசதிக்கான கல்யாணம்’ எனச் சிலர் வர்ணிக்கிறார்கள். உண்மையாகவுமிருக்கலாம். நமக்கு விருப்பமோ விருப்பமில்லையோ இது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுகள்.

ட்றம்ப் பதவியேற்றதிலிருந்து சொல்லிவரும் ஒரு விடயம், அமெரிக்கப் படைகளுக்கு வெளி நாடுகளில் வேலை இல்லை, அவர்களை நான் திருப்பியழைப்பேன் என்பது. அது அமெரிக்கர்களின் உயிர் மீதான கரிசனையால் அல்ல, அமெரிக்கப் பணம் வீணடிக்கப்படுகிறது என்பதற்காக.

2019 இல் அமெரிக்கா பாதுகாப்பு காரணங்களுக்காக ஒதுக்கிய தொகை $686 பில்லியன். மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு வருடா வருடம் கொடுக்கப்படும் உதவி ஏறத்தாள $4 பில்லியன். 1980 இலிருந்து இன்று வரை எகிப்துக்கு அமெரிக்கா வழங்கியிருக்கும் இராணுவ, பொருளாதார உதவி $70 பில்லியன். இஸ்ரேலைச் சூழவுள்ள எதிரி நாடுகளான அரபு நாடுகளிடமிருந்து அதைப் பாதுகாக்க அது அமெரிக்காவை நம்பியிருக்கிறது. இந் நிலையில் அமெரிக்காவிற்கு வரவு இல்லாத செலவுகள் மட்டுமே மிஞ்சுகிறது. போதாததற்கு மத்திய கிழக்கில், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளை நிர்வகிக்கும் செலவு வேறு.

https://marumoli.com/ட்றம்பிற்கு-நோபல்-பரிசு/?fbclid=IwAR1zATc8BY6yEgZHvcdkG_E8SVDKzRhczeAu4LA9DymLbd72DmcMRvONt9Q

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Die wichtigsten Punkte des Trump-Interview mit der New York Times ⋆ Kotzendes Einhorn

சிறந்த கோமாளிகளுக்கு.... நோபல் பரிசு கொடுப்பதென்றால், ட்ரம்ப் அதற்கு.. தகுதியானவரே.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது😃

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அடுக்கு மல்லிகை முதல் நீக்கின் குடும்பம் / வீடு நடு நீக்கின் நீளம் / காகம்
  • யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் சான்றிதழை விமான நிலையத்தில் ஏற்க மறுப்பு November 30, 2020 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் பிசிஆர் பரிசோதனையின் பெறுபேறு செல்லாது என்றும், கொழும்பு நவலோகாவில் புதிய பரிசோதனை மேற்கொண்டு வருமாறும் விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்து நின்றவர்கள் உட்பட வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் அனைவரும் விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணித்தியாலங்களுக்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைச் சான்றிதழை சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இந்த நடைமுறைக்கு அமைய ஆரம்பத்தில் வடக்கிலிருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டசான்றிதழுடன் சென்ற வேளை விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தல் சகிதம் செல்பவர்களுக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்படுகின்றது. அவர்கள் கொழும்பிலுள்ள நவலோகா வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டு அந்தச் சான்றிதழைப் பெற்று வருமாறு பணிக்கப்படுகின்றனர். இதற்கமைய நவலோகா வைத்தியசாலையில் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் ஒருவருக்கு 9 ஆயிரம் ரூபா பணம் அறவிடப்படுவதாகவும் இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அறியவருகிறது.     https://thinakkural.lk/article/93939
  • மஹர சிறைச்சாலை கலவரத்தால் 8 பேர் உயிரிழப்பு! முடுக்கி விடப்பட்டுள்ள விசாரணை இரண்டாம் இணைப்பு மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கைதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 35 காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹர சிறைச்சாலையில் மேலும் கைதியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்பு பணிக்குழு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையில், மகரா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஏற்பட்ட தீயை அணைக்க பல தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இந் நிலையில் மஹர சிறைச்சாலை அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே குழுவொன்றை நியமித்துள்ளார். இதேவேளை, குழப்பத்தின் போது, உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகமவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளதுடன், மேலும் 43 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். எனினும் இந்த அனர்த்தத்தில் இரண்டு சிறை அதிகாரிகள் உட்பட 35 பேர் மாத்திரம் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹர சிறைச்சாலையில் தற்போதுவரை குழப்பமான நிலையே உள்ளதாகவும், நிலைமைகயை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் கூறியுள்ளது. மஹர சிறைச்சாலையில் 183 கைதிகள் முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 1,091 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.   https://www.ibctamil.com/srilanka/80/155258  
  • திவிநெகும மோசடி வழக்கு : பசில் உட்பட நால்வர் விடுதலை ! திவிநெகும மோசடி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேரும் நிரபராதிகள் என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ஷ தரப்பு சமர்ப்பிப்புகளை முன்வைத்தது. இந்த சாட்சியங்களை ஆராய்ந்த பின்னர் அரசு தரப்பும் சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்தது, அதாவது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த மோசடி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் 3 பேரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேவேளை இந்த வழக்கில் 3 மாதங்களுக்கு ஒரு தடவை குற்றப்புலனாய்வில் ஆஜராக வேண்டும் என விதிக்கப்பட்ட பிணை நிபந்தனையையும் அவருக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடையும் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றதினால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திவிநெகும-மோசடி-வழக்கு-ப/
  • ரொம்ப கற்பனை குதிரைய ஓட விட வேணாம் ..👍 "துதல் அல்வா" என்டு எதையோ கின்டி குடுத்தினம் .. முடியல 👌
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.