Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் இன்னும் ஓர் இடம் காட்டப்படுகிறது குப்பைகள் கழிவுகளை நீர் நிலையோரம் கொட்டி சென்றுள்ளதையும் அதனை அண்டி  மக்கள் வாழ்வதையும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காணொளியை பார்க்க... அதிர்ச்சியாக உள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவே கஷ்ரமாக உள்ளது...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

காணொளியை பார்க்க... அதிர்ச்சியாக உள்ளது.

நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்  😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்  😂

இந்த, உலகத்தில்தான்... இருக்கின்றேன் கபிதன்.
மயிலிட்டியை... சேர்ந்த, முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்...
மாவை சேனாதிராசா... இவர்களுக்காக, அக்கறை காட்டியிருந்தால்...
இவர்களின்  துன்பமும் நீங்கியிருக்கும், 
மாவையும்.... மீண்டும் பாராளுமன்றம் போயிருப்பார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்

அபிவிருத்தி தாறோம் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்கிறார்களே.யுத்தம் முடிந்து இப்படி எத்தனை எம் இனம் அலைந்து கொண்டிருக்கிறது.அபிவிருத்தியும் இல்லை அரசியல் தீர்வும் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முன்னர் காவலரண் அகற்று அரசியல் செய்தவர்கள்.. இப்போ அபிவிருத்தி அரசியல் என்று கொண்டு மக்களை ஏமாற்றி வாக்கைப் பறித்துவிட்டு.. தங்கள் அலுவலை மட்டும் பார்த்துக் கொள்கின்றனர்.

தெற்கில் இருந்து வந்த பவதாரணி மேடத்துக்கு என்னாச்சு.. அங்கஜன் சார்பில் வாக்குக் கேட்டார்.. வந்தார் வாக்குறுதி தந்தார் போனார் என்றாகிவிட்டது.

ஆனால்.. யாழ் ஊடகங்களும்.. சில சிங்கள சார்ப்பு ஊடகங்களும்.. இதோ அம்மணியின் புகழ் ஓங்குகிறது.. வெற்றி நிச்சயம் என்றார்கள். அம்மணியும்.. வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளை வாங்கிட்டு.. போனதுதான் போக்கு. 

மற்றவரை மீன்பிடிக்குள் அமுக்கி விட்டாங்கள். அவரும் பெரிய அமைச்சுக்கு ஆசைப்பட்டது தான் மிச்சம். 

சிங்களவன் தெளிவாக இருக்கிறான் தமிழ் அடிவருடிகளை எங்க வைக்கனும்.. தமிழர்களை எங்க வைக்கனும் என்று. நாம் தான் இன்னும் சிங்கள எஜமான விசுவாசத்தைக் காட்டி ஏதாவது பிச்சை கிடைக்குமா என்று இலவு காக்கிறோம். 

இதை விடக் கஸ்டம்.. புங்குடுதீவில் உள்ள கிராமங்கள். மக்கள் மிகுந்த ஏழ்மையில்.. வீதி ஓர வியாபாரம் செய்து பிழைக்கின்றனர். ஆனால்.. சிங்களக் கடற்படைக்கு மட்டும் சொகுசு வாழிடங்களும்.. வசதிகளும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அண்ணா புங்குடுதீவுக்கு உதவி திட்டங்கள் போய் கொண்டு தான் இருக்கிறது..ஆனால் பணம்  சேகரிப்பவர்கள் ஒழுங்காக மக்களை கவனிக்கும் பணியில் இல்லை போல் உள்ளது..பசுமை புரட்சி என்று சும்மா மரங்களை நட்டும் கால் நடைகளுக்கு பயன் படுத்துவதிலுமே நிக்கிறார்கள்.மக்கள் அன்றாடம் வாழ்வாதாரம் இல்லாது சாகும் போது பசுமைப் புரட்சி தேவையா.எல்லாம் தங்கள் பெயர் நிலைக்கக வேண்டும் என்பதற்காகவே..தோட்ட வைக்க ஊக்கு விக்கிறார்களாம் அதில வேறு போட்டி நிகழ்ச்சி..கேட்டால் 'நீ" குடுத்தியா என்ற கேள்வி வேறு வருகிறது..உண்மையா இல்லயா புங்குடுதீவு மக்கள் வந்து உணமையை சொல்லுங்கள்...எப்படி எல்லாம் வெளி நாடுகளிலிருந்து பணம் அங்கு போகிறது..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, யாயினி said:

நான் நேரடியாக பார்த்த அளவில்.. சில பிரபல்ய கோவில்கள் நல்ல வளர்ச்சி கண்டிருக்குது. மிச்சம் சிங்களக் கடற்படை தான் சொகுசாக உள்ளது. நுழைவாயிலில் இருந்து துறை வரைக்கும்.. கடற்படை கண்காணிப்பு தான். இந்த புங்குடுதீவுக்குள்.. நடந்த அத்தனை படுகொலைகளுக்கும்... கடற்படை பங்களிப்பு.. ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நடந்திருக்க முடியாது. காரணம்.. நுழைவாயிலியே சிங்கள மொழி வரவேற்புப் பலகையோடு உயர் நிலை காவலரண்கள் அமைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது கடற்படை.

மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகள்.. சரியான திட்டங்களின் ஊடாக மக்களுக்கு நிரந்தர வருவாய் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை.. இதனால்.. மக்களில் அநேகர்.. தொடர்ந்து வறுமையில் தான் இருக்கின்றனர். 

அதுபோக.. தென்னிலங்கை உல்லாசப் பயணிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால்.. அழகிய புங்குடுதீவு கண்டற்காடு கடற்கரைகள்.. பிளாஸ்டிக் மாசுகளால்.. பீடிக்கப்பட்டிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. பிளாஸ்டிக் கழிவுகள்.. கடலில் கலக்கும் அளவுக்கு பரந்து கிடக்கிறது. 

அது புங்குடுதீவுக்கு மட்டுமான ஆபத்தல்ல.. மொத்த பூமிக்குமான ஆபத்து ஆகும். 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதேபோல் இன்னும் ஓர் இடம் காட்டப்படுகிறது குப்பைகள் கழிவுகளை நீர் நிலையோரம் கொட்டி சென்றுள்ளதையும் அதனை அண்டி  மக்கள் வாழ்வதையும்

நீங்கள் வாக்கு போட்டு கொழும்புக்கு அனுப்பினவையை ஒண்டும் கேக்கேலாதோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த கிராமத்திற்கு உதவி செய்ய யாழினூடு நோர்வே அமைப்பிற்கு உதவி செய்யப் போகின்றேன். அவர்கள் இவர்களின் முதலீட்டிற்கு உதவினால் நன்று. நான்  குறைந்தது USD 500 அனுப்பலாமென்றிருக்கின்றேன் வரும் வாரம்.

நீங்களும் நினைத்தால் இம்மக்களின் வருமானத்திற்கு அடிப்படை முதலீடு செய்து கொடுக்கலாம்.

2-3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு கிராமத்தை யாழ் கள உறவுகள் தெரிவு செய்யும் கிராமத்தை தத்தெடுத்து நிலையான முதலீட்டை செய்வதின் மூலம் முன்னேற்றலாம் உறவுகள் நினைத்தால். 

 • Like 3
Link to post
Share on other sites

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும்  சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர்  பொன்.இராமநாதன் ஆகும். 

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது 'வேளாளருக்கும் தனவந்தருக்கும்' மட்டுமே வாக்குரிமை  வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று  சாட்சியம்  சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான். 

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது    
ஜி.ஜி பொன்னம்பலம்  சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர்   சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள். 

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும  மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து 'சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்' என்று அரச கரும  மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று   காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள்  ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற  தலைமைகளேயாகும்.  

1947ல்  பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான். 

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி  என்றும் 'அடங்கா தமிழன்' என்கின்ற 'பெருமைமிகு' அடைமொழியாலும்   போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த  மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.  

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது 'கண்ட கண்டவர்களுக்கு' கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது  சொந்த லன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும்  அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது. 

படித்ததில் கடித்தது

சிங்கவளனுக்கு கற்றுக்கொடுத்ததே நம்மவன்தான். சிங்களவனுக்கு தமிழர் சிறுபான்மை தமிழர்க்கு ஏழைகள் சிறுபான்மை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ellam Theringjavar said:

எ.த, சில விடயங்கள் முதல் முதலாக கேள்விப் படுகின்றேன். இந்த செய்தியின் உண்மைத்தன்மை அறிய ஆவல்.

இனவெறி பேசும் சரத் வீரசேகர, பிரபாகரன் வெள்ளாளர் எனவும் சாதி வெறியர் என்பதாக சிங்களத்தில் பேசிவந்தார்.

அவர் சிங்களத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்.

ஒருவர் சிங்கள மொழியில், பொய் பேசாதே, புரிந்து பேசு, என்று பிரபாகரன் பின்னனி குறித்தும், இயக்கத்தில் சாதியம் இருக்கவில்லை என்றும் பேச அடங்கிவிட்டார்.

ஆனாலும் வெள்ளாளர் குறித்து அண்மையில் கூட பாராளுமன்றில் கருத்து சொல்லியிருந்தார்.

ஆகவே இந்த செய்தி கூட அந்த நோக்கத்தின் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

நான் இந்த கிராமத்திற்கு உதவி செய்ய யாழினூடு நோர்வே அமைப்பிற்கு உதவி செய்யப் போகின்றேன். அவர்கள் இவர்களின் முதலீட்டிற்கு உதவினால் நன்று. நான்  குறைந்தது USD 500 அனுப்பலாமென்றிருக்கின்றேன் வரும் வாரம்.

நீங்களும் நினைத்தால் இம்மக்களின் வருமானத்திற்கு அடிப்படை முதலீடு செய்து கொடுக்கலாம்.

2-3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு கிராமத்தை யாழ் கள உறவுகள் தெரிவு செய்யும் கிராமத்தை தத்தெடுத்து நிலையான முதலீட்டை செய்வதின் மூலம் முன்னேற்றலாம் உறவுகள் நினைத்தால். 

உங்கள் அக்கறைக்கும் உதவிக்கும் மனம் நிறைந்த நன்நிகள் அண்ணா..கொடுக்கும் உதவிகள் உ;ண்மையாக பாதிக்கபட்ட மக்கள் கைகளுக்கு போய் சேர வேண்டும.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

நான் நேரடியாக பார்த்த அளவில்.. சில பிரபல்ய கோவில்கள் நல்ல வளர்ச்சி கண்டிருக்குது. மிச்சம் சிங்களக் கடற்படை தான் சொகுசாக உள்ளது. நுழைவாயிலில் இருந்து துறை வரைக்கும்.. கடற்படை கண்காணிப்பு தான். இந்த புங்குடுதீவுக்குள்.. நடந்த அத்தனை படுகொலைகளுக்கும்... கடற்படை பங்களிப்பு.. ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நடந்திருக்க முடியாது. காரணம்.. நுழைவாயிலியே சிங்கள மொழி வரவேற்புப் பலகையோடு உயர் நிலை காவலரண்கள் அமைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது கடற்படை.

மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகள்.. சரியான திட்டங்களின் ஊடாக மக்களுக்கு நிரந்தர வருவாய் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை.. இதனால்.. மக்களில் அநேகர்.. தொடர்ந்து வறுமையில் தான் இருக்கின்றனர். 

அதுபோக.. தென்னிலங்கை உல்லாசப் பயணிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால்.. அழகிய புங்குடுதீவு கண்டற்காடு கடற்கரைகள்.. பிளாஸ்டிக் மாசுகளால்.. பீடிக்கப்பட்டிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. பிளாஸ்டிக் கழிவுகள்.. கடலில் கலக்கும் அளவுக்கு பரந்து கிடக்கிறது. 

அது புங்குடுதீவுக்கு மட்டுமான ஆபத்தல்ல.. மொத்த பூமிக்குமான ஆபத்து ஆகும். 

ஆம் சில ஆலயங்களுக்கு மித மிஞ்சிய வருமானங்கள் போய் சேர்கிறது..அனேகமாக அதுவும் வெளி நாடுகளிலிருக்கும் உறவுகளாலயே போய் கொண்டு இருக்கிறது..அங்கு ஒரு ஆலயத்திற்கு இந்தியாவிருக்கும் ஓரு பெயர் பெற்ற ஆலயம் போல் தூண்கள் அமைக்கிறதார்களாம் கொஞ்ச நஞ்ச காசு அல்ல ஒரு தூண் ஒரு லட்சத்திற்கு கிட்டவாக இருக்கிறது..எனது மிக நெருங்கிய ஒரு உறவினர் எல்லா இடமும் போய் பார்த்துட்டு வந்து சொன்னார்..இது வேணுமா............ இவற்றுக்கு செலவளிக்கும் பணத்தில் கால் பகுதியையாவது அந்த ஊர் வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களுக்கும் கொடுக்கலாம் அல்லவா..நான் பெரும்பாலும் எழுத விரும்புதில்லை..ஆனால் சில வற்றை எழுதித்தான்  ஆக வேண்டி இருக்கிறது.வெளி நாடுகளில் யாராவது இறந்தால் அவரக்ளது நினைவாக  வளைவுகள்..இப்படி எத்தனை தேவை அற்ற விடையங்கள் நடந்தேறிக் கொண்டு இருக்கிறது..சரியான மக்கள் எந்த ஒரு உதவித் திட்டங்களையும முன் நின்று செயல்படுத்துவதில்லை..பெரும்பாலும்; ஏதோ ஒரு விதத்தில் தேவை அற்ற  முன்னெடுப்புக்கள் நடந்தேறிக் கொண்டு இருக்கி;றது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • விசுகர்! திரைக்கதை வசனம் இசையமைப்பு எல்லாமே அங்கிருந்து தானாம் வந்தது என காற்றிலை தென்றலாய் வீசுது.
  • வறுமை இல்லாதொழிய ஒரு செல்வந்தன் தான்புரட்சி செய்ய வேண்டும். ஏழைகள் அல்ல. சாதி இல்லாதொழிய உயர்சாதியிரனர்தான் முன்வரவேண்டும். தாழ்ந்த சாதிகள் அல்ல. எங்கே கையை தூக்கங்கள் பார்க்கலாம்? யாழ் நிர்வாகம் உட்பட. சீ.சீ பொன்னம்பலம், பொன். இராமநாதன், சுந்தரலிஙகம் இவர்கள் வறுமையும் சாதியும் அழிந்து போகப்பாடுபட்டவர்கள்.? இன்னமும் எரிந்து கொண்டேயிருக்கிறது. சிங்களவர் தமிழர்களை அழிக்க அடியெடுத்தக்கொடுத்தவர்கள்
  • என்ன மருதங்கேணியார் நீங்கள்? குஷ்புவுக்கு கோயில் கட்டின பூமியிலை இருந்து என்னத்தை எதிர்பாக்கிறியள்?நல்லது தெரிந்தால் இன்று அது வல்லரசெல்லோ
  • புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 9)   புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர்... எத்தனையோ அராஜகங்கள் தவறுகள் புளாட் முகாம்களில் நடந்து கொண்டிருந்தது. நாம் அதை புளாட்டின் வளர்ச்சிக்காக, தவறுகளைக் களைவதற்காக கழக உயர்மட்டத்தினருக்கு எம் அறிக்கை மூலம் முன்வைத்தோம். அதனால் எமது உயிருக்கு ஆபத்து வரும் என்றும் உணர்ந்திருந்தோம். தீப்பொறியினரைப்போல தமது உயிர்களுக்கு பாதுகாப்புத்தேடி, கழகத்தில் இருந்து தப்பிஒடியதைப் போன்று நாம் செய்யவில்லை. மாறாக எமது உயிர்களைப் பணயம் வைத்ததே அப்போராட்டத்தை முன்னெடுத்தோம். எமது அன்றைய அரசியல் வளர்ச்சியின் அடிப்படையில் எது எமக்குச் சரியாகப்பட்டதோ, அதைச் செய்தோம். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடையம், "தீப்பொறியாக" கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நாம் மகஜர் அனுப்பும் காலத்தில் அமைப்பில் உயர்ந்த பதவிகளில் இருந்தனர். அவர்கள் தமது விசுவாசத்தை, தலைமைக்கு காட்டிய வண்ணம் இருந்தனர். அத்துடன் அவர்கள் எம்முடன் சேர்ந்து போராடாது, எமது போராட்டத்தை ஒடுக்க முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கு துணைபோனர்கள். காரணம் எமக்கு அதரவு தந்தால், தாங்கள் இரகசியமாக வெளியேறத் தீட்டியிருந்த திட்டம் அம்பலப்பட்டு விடுமே என்ற சுயநல சிந்தனையேயாகும். எமது மகஜரை எழுதுவதில் முன்னணியாக நின்ற தோழர்கள், ஒரே இடத்தில் படுப்பதில்லை. முன்பு எதிரிகளுக்காக முகாமைச்சுற்றி பாதுகாப்பது பணி செய்வது வழக்கம். ஆனால் இந்த போராட்டம் ஆரம்பமானவுடன், கழகத்தினரால் எமக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் முகாமைச் சுற்றிப் பாதுகாப்பு போட்டோம். "பாதுகாப்பு" என்றவுடன் நாங்கள் ஆயுதங்கள் வைத்திருந்தோம் என நீங்கள் நினைக்கலாம். இல்லை, இல்லவேயில்லை. எம்மிடமிருந்தது, கொட்டான் தடிகள் மட்டுமே. எமது முகாமில் இன்னுமொரு கூடாரம் அமைப்பதற்காக, காடுகளுக்குச் சென்று மரங்கள் வெட்டி வைத்திருந்தோம். அந்த மரங்களைத் தான், நாம் கொட்டான்களாக வெட்டி வைத்திருந்தோம். எமது மகஜரை எடுத்துச் சென்ற ஜிம்மி, உதயன் இருவரும் அதைக் கொடுத்து விட்டு திரும்பி வந்தால், மீண்டும் ஓரத்த நாட்டுக்கு போக அவர்களை விடமாட்டோமென அவர்களிடம் கூறினோம். எமது முகாமில் ஒரு முக்கியமான நடைமுறை கையாளப்பட்டது. எந்த விடையமாக இருந்தாலும், அது பொதுச் சபையில் பகிரங்கமாகக் கூறப்பட்டு விவாதித்து முடிவெடுப்பது என்பதுதான் அந்த நடைமுறை . இதனடிப்படையிலேயே, பொதுச் சபையின் முடிவிற்கேற்ப அவர்களிடம் திரும்பிப் போக முடியாது என்ற விடயத்தை கூறியிருந்தோம். ஆனால் நடந்ததோ வேறு, மகஜரைக் கொண்டு போனவர்கள் வந்தால் தானே! இரவு வழமையாக திரும்பி வருபவர்கள், அன்று வரவில்லை. இதனால் எமக்குள் சந்தேகம் எழுந்தது. இரவு நேர ஒன்று கூடலில் இதைப்பற்றி விவாதித்தோம். மறுநாள் காலையில் கூட எந்த எதிர்ப்போ அல்லது தகவலோ தலைமையிடமிருந்து வரவில்லை. இதனால் ஒரு சில தோழர்கள் நாம் கொடுத்த மகஜரை இவர்கள் ஏற்றுக்கொண்டு, விவாதித்து நல்ல பதிலை தரப்போகின்றார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இன்னும் சிலர் இல்லை, அவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்றனர். அத்துடன் அவர்கள் எமது முகாமை மூடிவிடுவார்கள் என்றனர். இப்படி கூடலின்போது இதை விவாதித்ததுடன், முகாமை மூடினால் என்ன செய்வது என்ற கோள்வியையும் முன்வைத்தனர் சிலர். தலைமை சரியான பதில் தராத பட்சத்தில், நாம் முகாமை விட்டு புறப்பட்டு ஊர்வலமாக ஓரத்த நாட்டுக்கு செல்வதென்றனர் ஒரு சிலர். மற்றவர்கள் நாம் தமிழ்நாடு காவல் துறையில் இது தொடர்பாக முறையிடுவது என்ற கருத்தை முன்வைத்தனர். இதில் நான் ஊர்வலமாகப் போவது தான் நல்லது என்று விவாதித்தேன். விவாதம் நீண்டதால் வழமைக்கு மாறாக நீண்டநேரம் எல்லோரும் விழித்திருந்தோம். தொடர்ச்சியாக நடந்த விவாதத்தில், தலைமையிடமிருந்து இருந்து ஒரு கிழமைக்குள் பதில் வராத பட்சத்தில் மட்டுமே ஊர்வலம் போவது என்று முடிவிற்கு வந்தோம். நாம் வழமையான இடங்களில் படுப்பதை தவிர்த்ததால், நான் முகாமின் ஒரு மூலையில் சென்று உறங்கினேன். யாரோ ஒருவர் காலால் எனது காலை மிதித்து எழும்பு என்றார். நான் எழுந்ததும், நீதானே காந்தன் என்றார். நானும் ஆம் என்றேன். அவரின் கையில் ஏ.கே-47 துப்பாக்கி இருந்தது. சரி பெனியனைப் போட்டுக் கொண்டு வா என்று கூறினார். அவரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் எம்முகாமை தலைமையின் அடியாட்கள் கைப்பற்றிவிட்டார்கள் என உணர்ந்தேன். எனது பெனியனைக் தேடத் தொடங்க, மறுபடியும் அந்த நபர் கத்தினான். அருகில் இருந்த தோழர் டிஸ்கோவின் பெனியனை எடுத்து போட்டுக்கொண்டு அவருடன் பின் தொடர்ந்தேன். அந்த நபர் என்னை ஒரு வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது சில தோழர்கள் தரையில் குப்புறப்படுக்க வைக்கப்பட்டிருந்தனர். என்னையும் அவர்களுடன் அதில் போய்ப்படு என்றதுடன், ஒருவருடனும் கதைக்கப்படாது, எனவும் மிரட்டினான் கையில் ஏ.கே-47 துப்பாக்கி வைத்திருந்தவன். அப்போது யார் யாரெல்லாம் எனக்கு அருகில் வரிசையாகப் படுத்திருந்தனர் என மட்டுக்கட்ட முடியவில்லை. கொஞ்சம் தலை அசைத்தாலும், பெரிய சத்தத்துடன் தலையை அசைக்க வேண்டாம் என்றனர் அங்கு எம்மை துப்பாக்கி முனையில் குப்புறப்படுக்க கட்டளையிட்டோர் . இன்னும் ஒருசிலரையும் எமக்கு அருகில் குப்புறப்படுக்குமாறு கட்டளையிட்டார்கள். சில மணித்தியாலங்களின் பின்னர் எம்மை அங்கே நின்ற வண்டியில் ஒவ்வொருவராக ஏற்றினர். முதலில் குப்புறப்படு எனக் கூறியவர்கள், இப்போது வாகனத்தில் இடப்பற்றாக் குறையால் எழுந்து அமர்ந்திப்பதுடன் தலையைக் குனிந்தபடி இருக்க வேண்டும் என பணித்தார்கள். வண்டி புறப்படத் தொடங்கியது. எம்மைச் சுற்றி நால்வர் ஆயுதங்களுடன் காவலுக்கு நின்றனர். அவர்கள் அனைவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தவர்கள். நான் ஒருவாறு என்னுடன் யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முயன்றேன் .எனக்கு அருகாமையில் விஜி என்ற தோழர் இருந்தார். அவர் தேனி முகாமில் பயிற்சி எடுத்தவர். வண்டி குறிப்பிட்ட நேரம் ஓடியபின் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டது. எங்களை ஒவ்வொருவராக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர். அப்போதுதான் யார் யார் என்னுடன் வந்தார்களென முழுமையாக அறியமுடிந்தது. அதாவது மகஜர் எழுதுவதற்கு முன்னின்றவர்களும், அது பற்றிய விவாதத்தில் அதிகமாக கதைத்தவர்களும் தான் கைது செய்யப்பட்டிருந்தனர். எம்முடன் தோழர் தங்கராஜாவும் இணைக்கப்பட்டிருந்தார். அங்கே எம்மை மீரான் மாஸ்டர் விசாரித்தார். மீரான் மாஸ்டர் என்ற பிரபலமான கொம்மியுனிஸ்ட் தலைவரின் மகன் அன்றைய காலத்தில் புளொட்டின் வெளி உளவுப்படைக்கு பொறுப்பாக இருந்தார். என்னிடம் அவர் கேட்ட கேள்வி, உனக்கும் புலிக்கும் தொடர்பு இருக்கிறதா? நான் பயந்தவாறு இல்லை என்றேன். அப்படியானால் யாருடைய தூண்டுதலில் இதைச் செய்தாய் என்றார். இது வெளியார் ஒருவருடைய சதியும் அல்ல. இது எமது முகாமில் நாம் கூட்டாக எடுத்த முடிவு என்றேன்.  நீ எமது இயக்கத்தை ஒழிக்க வந்திருக்கின்றயா? இல்லை என்றேன். உனக்கும் சந்ததியாருக்கும் என்ன தொடர்பு? நான் ஒன்றும் இல்லை என்றேன்.  என்னைப் பக்கத்துக்கு அறைக்குப் போகும்படி மீரான் மாஸ்டர் கட்டளையிட்டார். எமது முகாமில் கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர். நான், விஜி, அன்ரனி, கே.ஆர். விஜயன், சோசலிசம் சிறி, ஆனந்தன், சண், சலா, ஜெகன் ஆகியோர் ஓர் அறைக்குள் தள்ளப்பட்டோம். ஏனையோர் அந்த அறைக்குள் வரவில்லை. சிறிது நேரத்தில் எம்மை ஏற்றி வந்த வண்டி ஓட்டுனர், அந்த அறைக்குள் பொருட்கள் எடுப்பதற்காக வந்தார். அவரை வெள்ளை அண்ணை என்று அழைப்போம். அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் என்னைக் கண்டதும், ஒரு பரிதாபமாக என்னைப் பார்த்தார். "ஏன் உனக்கு உந்தத் தேவையில்லாத வேலை" எனக் கூறியபடி, தனக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார். தொடரும்   http://poovaraasu.blogspot.com/2020/10/9_18.html  
  • திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்  -ஜோன் கென்னி (தமிழாக்கம்: டிசே தமிழன்)   நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா?………………………………….நான் இருக்கின்றேன்.பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.இலேசான ஓர் இரவுணவு.குளியல்.அவ்வளவு போதையேறாத குடி.அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும்அந்த 'விடயம்'படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ-போன்களைப் பார்ப்பது.   http://kanali.in/john-kenney-poems/?fbclid=IwAR1HWFpg-uTF2Dtg1QHtQNtyEkD_KNTXwSETDaYd_LPYOVDGDlqBoOejNW4      
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.