Jump to content

Recommended Posts

ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்
ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்
அன்று நீ காணாமற் போனாய்..
சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்
சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்தது
நீ இறந்திருக்கலாமென
பலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்
காலமும் ஓடிப்போயிற்று
வழமை போலவே தியாகங்களும்
நினைவுகளும் எமக்குள்
மங்கிப்போயின..

சுரணை அற்ற வாழ்வுக்காக
தொலை தேசத்திற்கு நான்
வந்திருந்தபோது
பனிப் பொழிவினிடையே
உன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!
அது நிச்சயமாக நீதான்
அதே கூர் மூக்கு,தெத்திப்பல்
ஆயின்..
நீ இறக்கவில்லை..!
ஆனால் இறந்திருந்தாய்
நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்
காலைச் சவட்டியபடி,

கல்லூரிக் காலங்களில்
எப்படி எல்லாம் கலகலப்பாய்
இருந்தாய்..! இப்போதோ
பேச்சுக் கொடுத்தாலும்
பெரும் மெளனம் காக்கின்றாய்..
முட்கம்பிகள் உன் குதத்தைக்
கிழித்த போதும்
மின்சாரம் உன் குறியை
எரித்த போதும்
கேள்விகளாலும் கம்பிகளாலும் நீ
துளையிடப்பட்ட போதும்
நீ காட்டிய அதே மெளனம்
இது கூட நல்லது தான் நண்பனே

ஒருவேளை
வதையின் போது நீ 
வாய் திறந்திருந்தால்
ஐம்பது குடும்பமாவது
அலறி இருக்காதா..?
தேவை அற்ற இடங்களில்
நீ அதிகம் பேசி இருந்தாலும்
தேவையான இடத்தில் நீ
மெளனமாகத்தான் இருந்திருக்கிறாய்
நல்லது 
போய்வருகிறேன் என் அன்பு நண்பனே..!

இனி நீ காணப்போகிற உலகும்
கடக்கப்போகிற மனிதர்களும்
ஒவ்வொரு தியாகங்களைப் பற்றியும்
இப்போது 
பேசத்தொடங்கி இருப்பதைப் போலவே
உன்னைக் கடந்து செல்கின்ற போதும்
அவர்கள் பேசிக்கொள்வார்கள்

இவன்
வேறு வேலை அற்றவன்
வாழத் தெரியாதவன் 
என்றும்..

- திரு.திருக்குமரன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கனமான கவிதை. எத்தனை எமது மக்களை இந்த சிங்கள பாசிச இனம் சித்திரவதை செய்து கொன்றுவிட்டார்கள், பெளத்தமென்று உள்ள இவர்களுக்கு தகுதியில்லை, காவிகளை கழட்டிவிட்டு பிக்குகள் சாதரண வாழ்க்கைக்கு திரும்பலாம். காவி அணிவதற்கே தகுதியற்ற காவாலிகள்

Link to comment
Share on other sites

ஆளமான கருத்தை சொல்லும் வரிகள். பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை வளமிக்க கனமானதொரு கவிதை. வாழ்த்துக்கள்.
 தொடர்ந்தும் எழுதுங்கள் திரு.

Link to comment
Share on other sites

On 9/18/2020 at 04:04, திரு said:

எவ்வளவு வலிமையான வலி மிகுந்த வரிகள்... மிக கனதியான அதிர்வுகளை உருவாக்கி விட்டது உங்கள் கவிதை.

தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 10:04, திரு said:

ஒருவேளை
வதையின் போது நீ 
வாய் திறந்திருந்தால்
ஐம்பது குடும்பமாவது
அலறி இருக்காதா..?
தேவை அற்ற இடங்களில்
நீ அதிகம் பேசி இருந்தாலும்
தேவையான இடத்தில் நீ
மெளனமாகத்தான் இருந்திருக்கிறாய்
நல்லது 
போய்வருகிறேன் என் அன்பு நண்பனே..!

பிறருக்காக வாழ்ந்த வீரன்.
மனதை, கலங்க வைத்த கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 03:04, திரு said:

மனது கனக்கிறது 

Link to comment
Share on other sites

இந்தக் கவிதையின் சொந்தக்காரன் திரு பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் வரும் இணைப்புக்கு செல்லுங்கள்.

வாழத்தெரியாதவனின் வாழ்வை கவிதையாகத் தந்த திரு தன் வாழ்வையும் சிறைகளிலும் வதைமுகாம்களிலும் கழித்த வரலாறுகளையும் எழுத வேண்டும். 

https://ta.m.wikipedia.org/wiki/திருச்செல்வம்_திருக்குமரன்?fbclid=IwAR0NEoeyEROtEaMb_j69MMTCTPhjIHmirGR9ok1TAKpioiGm8Lal7lBShjA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலி மிகுந்த வரிகளை சுமந்து நிற்கும் கனதியான  கவிதை. உங்கள் அனுபவங்களையும் தொடருங்கள் திரு. மாவீரச் செல்வங்களின் தியாகங்கள் மறக்கக் கூடியவையா? 

Link to comment
Share on other sites

On 18/9/2020 at 09:24, உடையார் said:

 கனமான கவிதை. எத்தனை எமது மக்களை இந்த சிங்கள பாசிச இனம் சித்திரவதை செய்து கொன்றுவிட்டார்கள், பெளத்தமென்று உள்ள இவர்களுக்கு தகுதியில்லை, காவிகளை கழட்டிவிட்டு பிக்குகள் சாதரண வாழ்க்கைக்கு திரும்பலாம். காவி அணிவதற்கே தகுதியற்ற காவாலிகள்

தங்களது கருத்திற்கு நன்றி 

On 24/9/2020 at 18:25, Kavallur Kanmani said:

வலி மிகுந்த வரிகளை சுமந்து நிற்கும் கனதியான  கவிதை. உங்கள் அனுபவங்களையும் தொடருங்கள் திரு. மாவீரச் செல்வங்களின் தியாகங்கள் மறக்கக் கூடியவையா? 

தங்களது கருத்திற்கு மிக்க நன்றி 

On 23/9/2020 at 06:24, shanthy said:

இந்தக் கவிதையின் சொந்தக்காரன் திரு பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் வரும் இணைப்புக்கு செல்லுங்கள்.

வாழத்தெரியாதவனின் வாழ்வை கவிதையாகத் தந்த திரு தன் வாழ்வையும் சிறைகளிலும் வதைமுகாம்களிலும் கழித்த வரலாறுகளையும் எழுத வேண்டும். 

https://ta.m.wikipedia.org/wiki/திருச்செல்வம்_திருக்குமரன்?fbclid=IwAR0NEoeyEROtEaMb_j69MMTCTPhjIHmirGR9ok1TAKpioiGm8Lal7lBShjA

மிக்க நன்றி 

On 22/9/2020 at 11:27, theeya said:

மனது கனக்கிறது 

கருத்திற்கு மிக்க நன்றி 

On 24/9/2020 at 18:25, Kavallur Kanmani said:

வலி மிகுந்த வரிகளை சுமந்து நிற்கும் கனதியான  கவிதை. உங்கள் அனுபவங்களையும் தொடருங்கள் திரு. மாவீரச் செல்வங்களின் தியாகங்கள் மறக்கக் கூடியவையா? 

மிக்க நன்றி

On 22/9/2020 at 04:21, தமிழ் சிறி said:

பிறருக்காக வாழ்ந்த வீரன்.
மனதை, கலங்க வைத்த கவிதை.

மிக்க நன்றி 

On 22/9/2020 at 03:52, ஈழப்பிரியன் said:

கனதியான கவிதை.
பாராட்டுக்கள்.

மிக்க நன்றி 

On 22/9/2020 at 03:49, நிழலி said:

எவ்வளவு வலிமையான வலி மிகுந்த வரிகள்... மிக கனதியான அதிர்வுகளை உருவாக்கி விட்டது உங்கள் கவிதை.

தொடர்ந்து எழுதுங்கள்.

மிக்க நன்றி.. 

Link to comment
Share on other sites

On 22/9/2020 at 03:40, Sasi_varnam said:

வார்த்தை வளமிக்க கனமானதொரு கவிதை. வாழ்த்துக்கள்.
 தொடர்ந்தும் எழுதுங்கள் திரு.

மிக்க நன்றி 

On 22/9/2020 at 02:51, nige said:

ஆளமான கருத்தை சொல்லும் வரிகள். பகிர்வுக்கு நன்றி 

நன்றி 

On 18/9/2020 at 09:24, உடையார் said:

 கனமான கவிதை. எத்தனை எமது மக்களை இந்த சிங்கள பாசிச இனம் சித்திரவதை செய்து கொன்றுவிட்டார்கள், பெளத்தமென்று உள்ள இவர்களுக்கு தகுதியில்லை, காவிகளை கழட்டிவிட்டு பிக்குகள் சாதரண வாழ்க்கைக்கு திரும்பலாம். காவி அணிவதற்கே தகுதியற்ற காவாலிகள்

மிக்க நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை கிடைக்கும் என்று இப்படி எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேர் தமது வாழ்வை இளவயதில் அர்ப்பணித்திருக்கின்றார்கள். மரணித்தவரையும், உயிரோடு எஞ்சியிருப்பவரையும் மறந்து தமிழினம் சுயநலமாக மாறியும் வருடங்கள் ஓடிவிட்டன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.