Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர்

புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள். இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது.

17ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள், 18ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர். 18ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள் 19வது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர்.

தற்போது அவர்களே 20ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரிக்க தயாராகி வருகின்றனர். இதுதான் எமக்குள்ள பிரச்சினை.

தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டது போல் எவரும் செயற்பட முயற்சித்தால், அது வரலாற்று ரீதியாக செய்யும் தவறு.குறிப்பாக இரட்டை குடியுரிமையை எடுத்து கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கை பிரஜை எனக் கூறி நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.

எப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன். இலங்கை சீனாவின் காலனியாக மாறிதானே வருகிறது.

அத்துடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரும் இதனை செய்ய முடியும். அதேபோல் இந்திய பிரஜையும் நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.

நாட்டின் மீது அளவு கடந்த அன்பு இருந்தால், ஏன் குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு நாட்டில் அரசியலில் ஈடுபட முடியாது?. புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும்.

கொள்முதல் மற்றும் கணக்காய்வு விடயங்களை எடுத்துக்கொண்டால் மிகவும் பாரதூரமான இடத்தில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காணப்படுகிறது.

ஒரு குடும்பத்திற்கு ஏற்ற வகையில் இதனை செய்ய முடியாது என நாங்கள் நினைக்கின்றோம். அந்த நிலைமையை கடந்து வந்து விட்டோம்.

இதனால் விரிவான கலந்துரையாடல்கள் மூலம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/150799?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உந்த மொட்டைக்கு வெளியே ஒண்டும், இல்லையெண்டால், உள்ளயும் தான்.

பிக்கரே, இரட்டைக்குடியுரிமை என்றால், அடிப்படையில் அவர் இலங்கையில் பிறந்து, வெளிநாட்டு குடியுரிமை பெற்றதால் அதை இழந்தவர்.

இந்தியாவில் இரட்டைக்குடியுரிமை திட்டமே இல்லை. சீனாவிலும் இராது. அவர்கள் இலங்கை பிரஜை ஆனால் தமது நாட்டு பிரஜாயுரிமை இழப்பர்.

சும்மா அலம்பறை பண்ணப்படாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்தப் பிக்குவுக்கு  கொஞ்சம் மூளை வேலை செய்திருக்குது. கண்டிப்பாய் இலங்கை  எதிர்காலத்தில்  சீனாவின் கொலனியாக மாறுவதை எந்த சிங்களவனாலும் மாற்ற முடியாது. எதுக்கும் சீனனை ஏமாற்றி  நாட்டைக் காப்பாற்றுகிற வழியைப் பாருங்கள். பிக்குகளை ஏமாற்ற பவுத்தத்துக்கு முன்னுரிமை, சிங்கள மக்களை ஏமாற்ற சிங்களத்துக்கு முதன்மை, தமிழர் வந்தேறுகுடிகள் என்கிற போர்வையால் மூடிப் போர்த்துவிட்டு, யாருக்கும் இல்லாமல் நாட்டை  விற்று விட வேண்டியான். விற்றவர்கள் அவரவர் தாங்கள்  குடியேறிய நாட்டின் பிரஜைகள் ஆகிவிடுவார்கள். எங்களை அடக்கி ஆள நினைத்தவர்கள் நினைவில் இருந்து  மீளாமலே  சீனனால் ஆளப்படுவார்கள். 

 • Like 2
Link to comment
Share on other sites

ஆமந்துறு என்னதான் உலக அறிவில்லாமல் கதைச்சாலும் சீனாவின் காலனியாக மாறும் என்றான் பார் அங்கதான் நிக்கிறான். 😀 உண்மை 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, theeya said:

ஆமந்துறு என்னதான் உலக அறிவில்லாமல் கதைச்சாலும் சீனாவின் காலனியாக மாறும் என்றான் பார் அங்கதான் நிக்கிறான். 😀 உண்மை 

சீனா காலை சுத்தின பாம்பு... அதுவும் மலைப்பாம்பு.... விழுங்கும்.... சிங்களவனை....

வரலாறு திரும்பும்.... இதுக்கு முன்னம், அண்ணன் தம்பிமார் ஆண்டபோது அவையளுக்கு பிரச்னை வரேக்க, மூத்த அண்ணனுக்கு ஆயுத உதவி கடனுக்கு கொடுத்தவன் போர்த்துகேயன். உள்ளேவந்தான்.. அவனை அனுப்ப ஒல்லாந்தன்.... அவனை அனுப்ப பிரிட்டிஷ் காரன்.... சுதந்திரம்.

இன்றும் அதே அண்ணன் தம்பி கதை... உள்ள வந்து நிக்கிறான் சீனன்....😇

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

சீனா காலை சுத்தின பாம்பு... அதுவும் மலைப்பாம்பு.... விழுங்கும்.... சிங்களவனை....

வரலாறு திரும்பும்.... இதுக்கு முன்னம், அண்ணன் தம்பிமார் ஆண்டபோது அவையளுக்கு பிரச்னை வரேக்க, மூத்த அண்ணனுக்கு ஆயுத உதவி கடனுக்கு கொடுத்தவன் போர்த்துகேயன். உள்ளேவந்தான்.. அவனை அனுப்ப ஒல்லாந்தன்.... அவனை அனுப்ப பிரிட்டிஷ் காரன்.... சுதந்திரம்.

இன்றும் அதே அண்ணன் தம்பி கதை... உள்ள வந்து நிக்கிறான் சீனன்....😇

நாதமுனி... நீங்கள், சொல்லும் விடயங்கள்... என்னை பிரமிக்க வைக்கும்.
எப்படி... இவை, எல்லாவற்றையும்... 
விரல் நுனியில் வைத்தியிருக்கின்றீர்கள் என்று, ஆச்சரியப்  படுவேன். 
தகவலுக்கு... நன்றி, நாதம்ஸ். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொலைகாரங்களை எல்லாம் பாராளுமன்றத்துக்குள் மதிப்பளிக்கிறாங்கள்.. தனக்கு இல்லையே என்ற கவலையில் மொட்டை கத்துது.

இதே மொட்டை தான்.. கோத்தாவின் வெற்றியோடு.. தனது கட்சியை கலைக்கப் போகிறேன்.. நாங்கள் வேண்டிய தலைவர் எமக்கு கிடைத்துவிட்டார் என்று அறிக்கை விட்டவர். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி... நீங்கள், சொல்லும் விடயங்கள்... என்னை பிரமிக்க வைக்கும்.
எப்படி... இவை, எல்லாவற்றையும்... 
விரல் நுனியில் வைத்தியிருக்கின்றீர்கள் என்று, ஆச்சரியப்  படுவேன். 
தகவலுக்கு... நன்றி, நாதம்ஸ். :)

சிறியர்...

அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில சிங்களத்தின் சிக்கல் தொடங்கும்.

அதே நேரத்தில், நாம் வெறுமனே பிரிட்டிஸ் காரரை போட்டுத் தாக்காமல், அந்தந்த நாடுகளில் உள்ள, போர்த்துக்கேய, ஒல்லாந்து தூதரகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்து எமது விடுதலைக்கான ஆதரவினைக் கோர வேண்டும்.

எமது ராசாக்களை கொன்று பிடித்த ராசதானிகளை சிங்களவரிடம் விட்டு சென்ற தவறை திருத்த ஆதரவு கோர வேண்டும்.

போர்த்துக்கல், இவ்வகையான தார்மீக ஆதரவை கிழக்கு தீமோருக்கு கொடுத்தது.

இந்த தடவை இலங்கை அரசு யுத்த குற்ற வாளிகளை கொண்டிருப்பது, எமக்கான மகத்தான வாய்ப்பு.

அதனை சரியாக பயன்படுத்த தயாராக வேண்டும்.

 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, theeya said:

ஆமந்துறு என்னதான் உலக அறிவில்லாமல் கதைச்சாலும் சீனாவின் காலனியாக மாறும் என்றான் பார் அங்கதான் நிக்கிறான். 😀 உண்மை 

தீயா... இது, சரியான குசும்பு. :grin:

ஆமத்துறு,  ஆமந்துறு.. இதில் எது சரியான வார்த்தை.
எனக்கு,  சிங்களம் அறவே... தெரியாது.  
நான்... இதுவரை, ஆமத்துறு  என்றே எழுதி வந்தேன்.
தீயா... வேறுமாதிரி எழுதியவுடன்...
நான்... பிழையாக எழுதி உள்ளேனோ.. என்ற சந்தேகம் வந்து விட்டது. 

டிஸ்கி: எனது சிங்களத்தை... மேம்படுத்த,  ஹெல்ப்  பண்ணுங்களேன். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

தீயா... இது, சரியான குசும்பு. :grin:

ஆமத்துறு,  ஆமந்துறு.. இதில் எது சரியான வார்த்தை.
எனக்கு,  சிங்களம் அறவே... தெரியாது.  
நான்... இதுவரை, ஆமத்துறு  என்றே எழுதி வந்தேன்.
தீயா... வேறுமாதிரி எழுதியவுடன்...
நான்... பிழையாக எழுதி உள்ளேனோ.. என்ற சந்தேகம் வந்து விட்டது. 

டிஸ்கி: எனது சிங்களத்தை... மேம்படுத்த,  ஹெல்ப்  பண்ணுங்களேன். :)

Hamathuruwani -  ஹமதுருவாணி

ஹமதுரு

Edited by Nathamuni
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

சிறியர்...

அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில சிங்களத்தின் சிக்கல் தொடங்கும்.

அதே நேரத்தில், நாம் வெறுமனே பிரிட்டிஸ் காரரை போட்டுத் தாக்காமல், அந்தந்த நாடுகளில் உள்ள, போர்த்துக்கேய, ஒல்லாந்து தூதரகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்து எமது விடுதலைக்கான ஆதரவினைக் கோர வேண்டும்.

எமது ராசாக்களை கொன்று பிடித்த ராசதானிகளை சிங்களவரிடம் விட்டு சென்ற தவறை திருத்த ஆதரவு கோர வேண்டும்.

போர்த்துக்கல், இவ்வகையான தார்மீக ஆதரவை கிழக்கு தீமோருக்கு கொடுத்தது.

இந்த தடவை இலங்கை அரசு யுத்த குற்ற வாளிகளை கொண்டிருப்பது, எமக்கான மகத்தான வாய்ப்பு.

அதனை சரியாக பயன்படுத்த தயாராக வேண்டும்.

நாதமுனி.... 
இப்படியான விடயங்களை... யாழ். இணைய உறவுகள் மூலம்,
ஒருங்கிணைத்து... செய்யக் கூடிய, சாத்தியங்கள் இருக்கின்றது தானே...

எத்தனையோ... படித்தவர்கள்,  ஈழ அரசியலை தெரிந்தவர்கள்... இருக்கும் இடத்தில், 
ஈழத் தமிழரின்,  எதிர்கால சந்ததியை கருத்தில் கொண்டு....  
எல்லோரும்... ஒரு, ஒத்த கருத்துடன்..  வருவார்கள் என நம்புகின்றேன்.

அந்த வாய்ப்பை... பயன் படுத்த, இப்பவே.. ஒரு, தலைப்பை ஆரம்பியுங்களேன்.

நாம்... அரசியல்வாதிகளை, நம்பி ஏமாந்து போன இனம்.
தற்போது... இதனை, யாழ்.களம்  மூலமாக முயற்சித்தால்...
எல்லோருக்கும்,  நன்மை  தானே... ❤️

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

அந்த வாய்ப்பை... பயன் படுத்த, இப்பவே.. ஒரு, தலைப்பை ஆரம்பியுங்களேன்

திரிக்கான தலைப்பினை தேடுவோமே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

திரிக்கான தலைப்பினை தேடுவோமே

அடுத்த ஜெனிவா மாநாட்டுக்கு...  உங்கள், உடனடி உதவி... வேண்டப் படுகின்றது.

என்று போட்டு... உள்ளுக்குள், விரிவாக எழுதலாம் என்பது, எனது அபிப்பிராயம். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இதே மொட்டை தான்.. கோத்தாவின் வெற்றியோடு.. தனது கட்சியை கலைக்கப் போகிறேன்.. நாங்கள் வேண்டிய தலைவர் எமக்கு கிடைத்துவிட்டார் என்று அறிக்கை விட்டவர். 

இப்போ, இந்த மொட்டையை இன்னொரு நிறுவனம் வாடகைக்கு அமர்த்தியுள்ளது போலுள்ளது! கோத்தா ஒரு வெருட்டு வெடி வைத்தால் போதும் சுருண்டு காலடியில் விழுந்து விடுவார். குடுக்கிற காசுக்கும், ஊத்துற திரவத்துக்கும் ஏற்ப கூவுவார். வெளியில காவி, முழுமையில் ரவுடி. நாடும் சரியில்லை, இதின் மதமும் இதை கட்டுப்படுத்தாமல் கட்டவிழ்த்து விட்டிருக்குது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Hamathuruwani -  ஹமதுருவாணி

ஹமதுரு

என்ன... இழவாக இருந்தாலும், 
எனக்கு... ஆமத்துறு, என்று அழைப்பது...
நன்றாக...  🔔 "கிளிங்" 🔔    பண்ணுவது போல் உள்ளது. :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

என்ன... இழவாக இருந்தாலும், 
எனக்கு... ஆமத்துறு, என்று அழைப்பது...
நன்றாக...  🔔 "கிளிங்" 🔔    பண்ணுவது போல் உள்ளது. :)

ஐயர்வால் என்பதுக்கும் அய்யர் என்பதுக்கும் உள்ள வித்தியாசம் தான் ஹமதுருவாணி - ஹமதுரு

ஆமத்துறு....  எண்டால் இவர்தான்

 

 

இவருக்கு இப்ப என்ன விளையாட்டு செய்திருக்குது எண்டால்.... வியாழேந்திரன், பிள்ளையார், மகிந்த பக்கம்... இவருக்கு போலீஸ் ஆதரவு இல்லை

 

 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

ஐயர்வால் என்பதுக்கும் அய்யர் என்பதுக்கும் உள்ள வித்தியாசம் தான் ஹமதுருவாணி - ஹமதுரு

ஆமத்துறு....  எண்டால் இவர்தான்

-------

இவருக்கு இப்ப என்ன விளையாட்டு செய்திருக்குது எண்டால்.... வியாழேந்திரன், பிள்ளையார், மகிந்த பக்கம்... இவருக்கு போலீஸ் ஆதரவு இல்லை

தூசணம் பேசுகின்ற...  ஒரு, ஆமத்துறுவுக்கு,  
நாப்பது  பொலிஸ்காரன்,காவல் காக்கின்ற.. 
அதிசய நாடு,  ஸ்ரீலங்கா மட்டுமே.   🙃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் காலனியாக இலங்கை மாறி வருகிறது; ஞானசார தேரர் எச்சரிக்கை

 

“இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது” எனப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு நேற்றுச் சென்றிருந்த ஞானசார தேரர் செய்தியாளர்களிடம் பேசியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத் துக்குத் தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.

தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டதுபோல் எவரும் செயற்படமுயற்சித்தால், அது வரலாற்று ரீதியாகச் செய்யும் தவறு. குறிப்பாக இரட்டைக் குடியுரிமையை எடுத்துக்கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கைப் பிரஜை எனக் கூறி பாராளுமன்றத்துக்கு வர முடியும். எப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன்” என்றார்.

http://www.ilakku.org/சீனாவின்-காலனியாக-இலங்கை/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

சீனர்களும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.

இன்னும் சில வருடங்களில், தான் குத்தகைக்கு பெற்ற நிலங்களில் மாடிக் குடியிருப்புகளை உருவாக்கி சீனாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கை வந்த சீனர்கள் குடியிருப்பார்கள். தொடர்ந்து குடும்பம், உறவுகள் என வந்து கொட்டிண்டு ஆக்கிரமிக்க, அவர்களது பிரச்னையை தீர்க்க அவர்கள் பிரதிநிதியாக ஒரு சிங்களவன் பாராளுமன்றம் போக மாட்டான். அவர்களுக்கு ஆலோசனை வழங்க நம்ம பக்கத்திலிருந்து ஒருவர் உதவுவார். பிறகு பங்குகேட்க மாட்டான் முழுவதும்  அவனுடையதே. எங்களுக்கு இழப்பதற்கு என்று  ஒன்றும் இல்லை. அதனால் நமக்கு ஒரு கவலையுமில்லை.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

இன்னும் சில வருடங்களில், தான் குத்தகைக்கு பெற்ற நிலங்களில் மாடிக் குடியிருப்புகளை உருவாக்கி சீனாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கை வந்த சீனர்கள் குடியிருப்பார்கள். தொடர்ந்து குடும்பம், உறவுகள் என வந்து கொட்டிண்டு ஆக்கிரமிக்க, அவர்களது பிரச்னையை தீர்க்க அவர்கள் பிரதிநிதியாக ஒரு சிங்களவன் பாராளுமன்றம் போக மாட்டான். அவர்களுக்கு ஆலோசனை வழங்க நம்ம பக்கத்திலிருந்து ஒருவர் உதவுவார். பிறகு பங்குகேட்க மாட்டான் முழுவதும்  அவனுடையதே. எங்களுக்கு இழப்பதற்கு என்று  ஒன்றும் இல்லை. அதனால் நமக்கு ஒரு கவலையுமில்லை.  

சிரிக்க... வைத்த, பதிவு என்றாலும்...
எமது.. தலைமுறையில், கொஞ்சம் போராடிப் பார்ப்போமே....
நம்பிக்கையை... இழக்காதீர்கள்.

உலகில்...  பல விடயங்கள், கடைசி நிமிடங்களில் ஏற்பட்டவையே.
எமக்கும்... ஒரு, திரு நாள் பிறக்கும்.  ✅

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

4 minutes ago, தமிழ் சிறி said:

கடைசி நிமிடங்களில் ஏற்பட்டவையே.

நம்மவர் கடைசி நிமிடத்தில் கொடிக்கம்பத்தை மாற்றி வைக்காமல் இருந்தால்

Link to comment
Share on other sites

பெளத்த துறவியின் வீடியோ தமிழாக்கம் மட்டுமே, இது எனது கருத்து அல்ல)
** இலங்கை "சிங்கள பெளத்த நாடு" என்று கங்கணம் கட்டுவது மகா தவறு;;
** உலகில் முஸ்லிம்களுக்கு என்று 25 நாடுகளும், தமிழர்களுக்கு என்று 5 நாடுகளும் இருக்கையில், சிங்களவருக்கு என்று இந்த "இலங்கை" யை தவிர வேறு நாடு இல்லை என்று கோஷம் போடுவது தவறு;;
** சிங்களம் பேசும் மக்கள் உலகில் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி போன்ற பல நாடுளில் வசிக்கின்றனர்;
** எங்க ஜனாதிபதி கூட புலம் பெயர் நாடான அமெரிக்காவில்தான் அந்நிய நாட்டு பிரஜா உரிமையை பெற்றிருந்தார்;;
** சிங்கள பெளத்த நாடு இல்லாமல் போய் விடும் என்று பூதாகாரமாக மக்கள் மனங்களில் விஷத்தை தெளித்து விடுவது கொடுமை;
** இந்த நிலைமையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்;;
** சிங்கள பெண்மணிகள் இஸ்லாமிய நாடுகளில் கடினமான கூலி வேலைகளை செய்கின்றனர்;;
** இந்த இனவாத கொள்கையினால் தமிழ் முஸ்லிம்கள் ஓரங் கட்டப் படுகின்றனர்;; தமிழர், முஸ்லிம்கள் இங்கு வாழ உரிமை இல்லை என்று கூற முடியாது;; அது அப்பட்டமான தவறு;;
** ஏன், வரலாறு என்ன சொல்கிறது;; ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்க அரசன் யார்;; சுத்த தமிழன் அவர்;; தமிழ் அரச குமாரர்கள் இந்த நாட்டை காலம் காலமாக அரசாண்டு வந்துள்ளனர்;
** தமிழ் அரசர்கள் ஏழு பேர் பொலநறுவையில் அரசாண்டுள்ளனர்;; எல்லாள மன்னன் அனுராதபுரியில் ஆட்சி செய்துள்ளான்;;
** அதனால் தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் போதுமான அளவு உரிமை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்;;
** இதை ஒரு பிரச்சனையாக்கி தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படக் கூடாது;;
** சிங்களவர்கள் இங்கு வந்தது விஜயனின் வருகையோடு மட்டுமே;;
** தமிழர்களும் பல தரப் பட்ட விதங்களில் இங்கு வந்துள்ளனர்; அவர்களும் இங்கு இன விருத்தி செய்கின்றனர்;; அப்போ அவர்களின் நாடு எது::
** மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல், அவர்களின் (தமிழர்களின்) நாடும் இந்த இலங்கைதான்;; அவர்களுக்கும் அந்த அபிமானம் இருக்கணும்;;
** நாம் "இலங்கை தமிழர்" "இலங்கை முஸ்லிம்கள்" என்று சொல்லும் திட சசங்கற்பம் இருக்க வேண்டும்;
** இது தனிச் "சிங்கள பெளத்த நாடு மட்டுமே" என்று கூறுவதால், தமிழர் முஸ்லிம்களின் அபிமானத்தை முற்றாக சிதைத்து விடுகின்றது;;
** இத்தகைய இனவாத பேச்சு இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் இல்லை;;
** இதற்கேற்ற விதமாக அரசியல் மட்டத்தில், அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் வகையில், மாற்றங்கள் கொண்டு வரப் பட வேண்டும்;;
** இதை விட்டிட்டு, விக்கினேஸ்வரன் (மாத்தையா) பாராளுமன்றில் வந்து "கா - கூ" என்று கூச்சல் போட்டு, சுய நிர்ணயம் தேசியம் அது இது என்று மீண்டும் இனவாத சூழலை உருவாக்குவதாகவே தெரிகின்றது;;
** இந்த கூச்சலால் சிங்கள மக்கள் சூடேறிப் போய் உள்ளனர்;; சிங்கள நாடு பறி போகப் போகின்றது என்று பதறிப் போய் உள்ளனர்;;
** இப்போ செய்யப் பட வேண்டியது;; "தமிழ் முஸ்லீம் சிங்களம் என்ற மூவினங்களும் சமத்துவமான உரிமையுடனும் மதிப்புடனும் வாழும் வகை"யை உருவாக்குவதே;; இன்றேல் இலங்கைக்கு விமோசனம் இல்லை;;
(Translation - Arun Chellappah)

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சாதியத்தின் அடிப்படையில், கோவிலுக்குள் விடுவதில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள். மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது.  அதையே தான், நிழலிக்கு சொன்னேன்.
  • ஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான். நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.  
  • 1.  நுனிப்புல் மேய்கின்றவர்களின் கருத்தாக தோன்றியது எனக்கு: உங்கள் கருத்தும் அப்படியே தான் தெரிகிறது, நிழலியர். இன்றும் கூட யாருமே மேல் ஆடை போட்டு உள்ளே போக முடியாது என்று இருக்கும் போது, சாதியம் அங்கே எவ்வாறு வந்திருக்க முடியும் என்று நீங்கள் விளக்கவில்லையே. 2. முண்டு அல்ல, கருத்து..... நான் கேட்டதை பகிர்ந்தேன் அன்றி, சமுக வெளியில் பரவலாக உள்ள கருத்து அல்ல.  இங்கே நான் விளக்கம் பெறவே கேள்விகளை கேட்க்கிறேன். நன்றி. ஒரு விளக்கம் தாருங்கள். இன்றும் கூட மேலாடை அணிந்து உள்ளே யாருமே போக முடியாது என்ற நிலையில், நீங்கள் சொன்ன சிவா சின்னப்பொடியரின் விளக்கம் சரியானதா? ** இருவருக்கும், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இது மிகவும் சென்சிட்டிவ் என்று புரியும். எனது புரிதலுக்காக மட்டுமே கேட்கிறேன். நன்றி.
  • யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னபொடி “நினைவழியா வடுக்கள்” என்ற நூல் எழுதியிருந்தார். அதில் தெளிவாக மேலாடை போடாமல் கோயிலுக்கு உள்ளே போவதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கடினமாக வேலை செய்யபவர்கள். ஏறுபட்டி,  இயனக்கூடு, தளைநார் கட்டி மரம் ஏறுபவர்கள் உடலில் சிராய்ப்புக்கள் எப்பவும் இருக்கும். யாரென்று விசாரிக்காமல் மேலுடம்பைப் பார்த்தே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணவே மேலாடை அணிவது யாழில் உள்ள கோவில்களில் தடுக்கப்பட்டது. அதை மரபு என்று இன்றும் தொடர்கின்றார்கள். ஒரு காலத்தில் (50 - 100 வருடங்களுக்கு உட்பட்ட காலம்தான்) ஆண்கள் வேட்டி, சால்வை, சேர்ட் அணியவும், பெண்கள் ரவிக்கை அணியவும் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அவற்றைப் போராடித்தான் பெற்றார்கள். இவற்றை சிவா சின்னப்பொடியின் புத்தகத்தை (அதன் பகுதிகள் யாழில் இருக்கின்றன என நினைக்கின்றேன்) அல்லது மேலே இணைத்த ராகவனின் ஆய்வைப் படித்தால் புரியும். ஆய்வில் இருந்து ஒரு மேற்கோள். “தலித் மக்களின் உரிமை சம்பந்தமான குரல் எழும் போது தற்போது சாதி இல்லை என்ற மறைப்பு அரசியல். ஒருவகையில் சாதியம் இல்லை என்பதன் பின்னால் உள்ள ஆதிக்க அரசியல் மிகவும் நுணுக்கமானது. தலித் மக்கள் தாங்கள் சாதிய ரீதியாக புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எதிர்ப்பு குரலை செயலிழக்கச் செய்யும் சாதுர்யமான ஆதிக்க சாதி அரசியல் இது. இந்த கருத்தியல் பின்புலத்தில் தான் சாதியம் தனது ஆதிக்கத்தை தற்சமயம் நிலை நாட்டுகிறது. ஆதிக்க சாதியின் நவீன நாவலர்கள் சாதிய ஆதிக்கத்தை பாதுகாப்பதில் கவனமாக இருந்து வருகிறார்கள். சாதி ஒழிந்து விட்டதென்று கூறிக்கொண்டு சாதியை பாதுகாக்கும் அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள்”   இன்றைக்கும், அதாவது இன்று, இந்தக் கொரோனா கெடுபிடிக்குள்ளும் திருவிழா நடக்கும் ஊர்க்கோவிலுக்குள் உள்ளே போகமுடியாது. புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலத்தில், ஐயர்மாரைத் தவிர ஒருவரும் உள்ளே போகமுடியாது என்று புனிதத்தை பேணினார்கள். புலிகள் 1995/96 இல் யாழைக் கைவிட்ட பின்னர் பழைய நடைமுறை வந்து, அப்படியே தொடர்கின்றது.      
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.