Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.


Recommended Posts

கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.

     by : Litharsan

Selvam-Adaikkalanathan.jpg

கடந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டமைப்பு தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இராஜதந்திர முயற்சியையே மேற்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தேசியத் தலைவருடையது. அந்த உருவாக்கத்தில்தான் நாம் எல்லோரும் பயணித்தோம். அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகவே உள்ளது.

இவ்வாறு கூட்டமைப்பின் ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் போன்ற உறுப்பினர்கள் உயிரைக் கொடுத்த வரலாறு உள்ளது. இவ்வாறு பல நெருக்குதல் சூழ்நிலைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. ஆனால், இந்த வரலாறுகளை மக்களுக்கு நாம் சொல்வதில்லை.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகள் அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்தது என்று சொல்கிறார்கள். ஆனால், கடந்த அரசாங்கத்தில் அரசியல் சாசன திருத்தங்கள் சம்பந்தமாக நிறைய விடயங்கள் நடந்தன.

அது நடைமுறைக்கு வராதபோதும், அது சம்பந்தமான எழுத்து மூலமான நகல் ஐ.நா. வரைக்கும் சாட்சி சொல்லக்கூடிய வகையில் பெறப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் எவராக இருந்தாலும், புத்த பிக்குகளாக இருந்தாலும் யாருமே இனப் பிரச்சிகைக்குத் தீர்வைத் தரமாட்டர்கள் என்ற வரலாற்றை எழுத்துமூலமாக நாம் பெற்றுள்ளோம். இதனை நாம் சர்வதேசத்துக்கு சாட்சிபகிர முடியும்.

எனவே, நாம் முண்டுகொடுக்கவில்லை. எமது அரசியல் நடவடிக்கைகள் வெல்லப்பட வேண்டும் என்பதற்காக சில விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். இவ்வாறு ஆதரவு தெரிவிக்கும்போது கம்பரெலிய போன்ற பல விடயங்களும் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோல, இன்றைக்கு உள்ளதுபோல் அப்போது இராணுவ சோதனைச் சாவடிகள் இருக்கவில்லை. முக்கியமாக ஜனநாயக வழியில் போராடிய தியாகி திலீபனுடைய அஞ்சலி நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடையுத்தரவு போடுகின்றன.

அதைப்போல, கடந்த ஆண்டுகளில் எழுச்சியாக மாவீரர் துயிலுமில்லங்களில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளை இம்முறை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையுள்ளது.

மேலும், கடந்த அரசாங்கத்தில் பல போராட்டங்கள் நடந்தன. இப்போது போராட்டங்கள் நடந்தால் எந்தப் பிரிவுகளில் என்ன பிரச்சினை வரும் என்று தெரியாது.

ஆகவே, கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு இராஜதந்திர நகர்வை செய்ததே தவிர யாருக்கும் முண்டுகொடுக்கவில்லை.

இதேவேளை, நாம் மக்களைக் குறைசொல்ல முடியாது, ஏனென்றால் கூட்டமைப்புக்குள்ளே சண்டை, விடுதலைப் போராட்டத்தை சிலர் ஆதரிக்காத போக்கு போன்றவை கூட்டமைப்பு மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு இன்னொரு காரணம், கூட்டமைப்பின் நகர்வுகளை நேரடியாக நாம் மக்களுக்குச் சொல்லவில்லை.

என்றாலும், ஒரு சிலதைத் தவிர கூட்டமைப்புக்கு கிடைக்காத ஆசனங்கள் தேசியத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கே கிடைத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/கடந்த-அரசாங்கத்துக்கு-மு/

Link to post
Share on other sites

இரண்டு கோடி ஏன் கொடுக்கப்பட்டது ஏன வாங்கப்பட்து என விளக்கம் சொன்னால் நல்லாய் இருக்கும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிக சிறந்த ராய தந்திரி..👍

IMG-20200918-155753.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🐃எருமை மாடு, ஏரோப்பிளேன் ✈️   ஓடினது... என்று சொல்வானாம்.

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 18:34, தமிழ் சிறி said:

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🐃எருமை மாடு, ஏரோப்பிளேன் ✈️   ஓடினது... என்று சொல்வானாம்.

கேட்டுக்கெண்டிருப்பது கேணயர்கள் தானே அல்லது இவர்களை நம்பி பாராளுமன்றம் இந்த முறை அனுப்பியிருப்பார்களா? இன்னும் பல தமிழ் மக்கள் விழித்தெழ இருக்கு. இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் தமிழ் தேசிய பொது அரசியலுக்கு. அதற்கு இப்பவே வித்திட்டால் 10 வருடங்களுக்கு பிறகாவது நல்ல முன்னேறமிருக்கும்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திரமே நடந்தது. நிச்சயமாக. அவர்கள் மிக இராஜதந்திரமாக நடந்துகொண்டார்கள் . அவர்கள் மிக கச்சிதமாக தமிழர் வாழ்வில் நிரந்தரமான தீர்வுக்கு எதையும் செய்யாமல் தம்மை சர்வதேசத்தில் இருந்து காப்பாற்ற ஆகக்குறைந்த விடயங்களில் விட்டுக்கொடுப்பை காட்டினார்கள். இல்லாவிடில் ஆட்சி மாறின அடுத்தகணமே எல்லாம் தலைக்கீழாக மாறியிருக்கமாட்டாது. அவர்களது கட்சிகாரர்களே இன்று விடாமல் இனத்துவேசத்தை கக்குகிறார்கள். 

உங்கள் இராஜதந்திரம் அவ்வளவு உறுதியானது என்றால் ஒரு தூதரகமாவது இந்த விடயத்தில் தமது நிலைப்படடை உங்கள் சார்பில் அரசுக்கு சொல்லியுள்ளார்களா ? நீங்கள் மீண்டும் ஆனந்தசங்கரி மாதிரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி, அதில எல்லாரும் கையெழுத்து போடுற படம் எடுத்து எங்களுக்கு காட்ட வேண்டிய அளவுக்கு உங்களது காற்றிலே போன இராஜதந்திரம்!

நேர்மையோடு உங்களை வலுப்படுத்த பாடுபட்டவர்களை பட்டம்  சூட்டி புறம்தள்ளிவிட்டு நீங்கள் அவர்கள் வெட்டிய குழியில் விழுந்ததுதான் மிச்சம். ஓரிருவர் சேர்த்து உங்களுக்கு ஆமா போடுபவர்களையும் வைத்து கொண்டு விடயங்களை நகத்தினீர்கள். தீர்மானகளையும் அதன் விளைவுகளையும் சமகாலத்தில் ஆராய்ந்து எமது நகர்வுகளில் மாற்றம் செய்ய மறுத்தீர்கள். பலருடன் கலந்தாலோசித்து  கருத்துக்களை உள்வாங்கி திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த கூடிய கட்டமைப்புகளை கட்சிக்குள் உருவாக்க மறுத்தீர்கள் அல்லது அவை செயல் வடிவம் பெறாமல் தடை போடுவதில் காலத்தை வீணாக்கினீர்கள். இன்றும், இவ்வளவு நடந்தபின்னும் பலவற்றை சுயபரிசோதனை செய்யவிடாமல் நியாயப்படுத்துவதில் மிக மும்மரமாக உள்ளீர்கள். இதே பாணியில் தான் நீங்கள் பயணிப்பீர்கள் என்று அடம் பிடித்தால் விளைவுகளும் அப்படித்தான் இருக்கும். இன்று எவ்வாறு பலஸ்தீன விவகாரம் நீத்து போயுள்ளதோ அதே விளைவு அடுத்த பத்தாண்டுக்குள் தமிழருக்கு நடந்துவிடும். அவ்வளவே. 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுகள நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது 😉😉

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுகள நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது 😉😉

இன்னும் ஒரு வருடம் கொஞ்சம் இருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவர் எல்லாம் பிழைப்புக்காக அரசியல் செய்பவர். இதை விடடால் வாழ வேறு வலி இல்லை. அல்லது இதை விடடால் செய்யும் தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மக்கள் விழித்தெழும் வரைக்கும் இவர்களது காட்டில் மழைதான். மக்கள் உசார் மடையர்களாக இருக்கும்வரையும், கேணையர்களாக இருக்கும்வரைக்கும் இதே கதைதான். வன்னி மக்கள் எப்போது விழித்தெழுவார்களோ அப்பபோதுதான் இவர்களுக்கு ஆப்பு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொன்னதுபோல கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத அறிவிலிகள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

இவர்கள் களையப்படவேண்டும். 

அதேதான் இந்த முதியவர்கள் அனைவரும் களையப்பட்டால்  கட்சி உருப்பட வாய்ப்புள்ளது

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் – விசாரணைகள் ஆரம்பம்! October 21, 2020   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். எனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர், தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர். மறுநாள், 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவை, வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது. இதனிடையே, பல்கலைக்கழகத்துக்கும், அதன் துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட – மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் அனைவரையும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து கலைப்பீட விரிவுரையாளர்கள் அனைவரும் விரிவுரைகளைப் புறக்கணிக்கப் போவதாக கலைப்பீடச் சபை ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது. இதனை அடுத்து, மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் என நிர்வாகத்தினால் இனங்காணப்பட்ட 21 மாணவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 12 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் கலைப்பீட விரிவுரைகள் வழமைக்குத் திரும்பின. விசாரணைக்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்பட்டிருந்ததனால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருந்தது. எனினும் இன்று  முதல் விசாரணைகள் முழு வீச்சில் இடம்பெறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதற் கட்டமாக சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகிய விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அதிகாரிகளும் இன்று சாட்சியமளிக்கவுள்ளனர்.     https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழக-கலைப்ப/
  • நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்  வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை  சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை  காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்  நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே  பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே  ஓர் ஊமை காதலன் நானடி  நீயா பேசியது.... நீயா பேசியது.... நீயா பேசியது.... நீயா பேசியது.... நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை? எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்  வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை  சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை  காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்  ஏதோ நான் இருந்தேன்  என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்  காற்றை மொழி பெயர்த்தேன்  அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ? உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்  நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை  வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை  உனக்கென்றே உயிர் கொண்டேன்  அதில் ஏதும் மாற்றம் இல்லை  பிரிவென்றால் உறவு உண்டு  அதனாலே வாட்டம் இல்லை  மறைப்பதால் நீ மறைப்பதால்  என் காதல் மாய்ந்து போகுமா நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே  பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே  ஓர் ஊமை காதலன் நானடி  நீயா பேசியது.... நீயா பேசியது....    
  • ஜெயலலிதாவின் கூற்றை விட, முரளியின் கூற்று மோசமானதா? -எம்.எஸ்.எம். ஐயூப் கிரிக்கெட் விளையாட்டின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றி, தமிழகத்தில் ‘800’ என்ற பெயரில் தயாரிக்கப்படவிருந்த திரைப்படம் தொடர்பாக, அங்கு எழுந்திருக்கும் சர்ச்சை, இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினையே தவிர வேறொன்றும் அல்ல!   ‘டெஸ்ட்’ போட்டிகளில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி, முரளி சாதனை படைத்தமையால் இந்தப் படத்துக்கு, அதன் தயாரிப்பாளர்கள் ‘800’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்‌ஷவும் கோட்டாபய ராஜபக்‌ஷவும் தலைமை தாங்கும் அரசாங்கத்தை, முரளி ஆதரித்தார், ஆதரிக்கிறார் என்ற அடிப்படையிலேயே இந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், இந்த எதிர்ப்பு வேறு பல முரண்பாடுகளைப் பற்றியும், எம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.   முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரருக்கு எதிராக, தமிழகத்தில் சிலர் தெரிவிக்கும் எதிர்ப்பு, எந்தளவுக்கு என்றால், திரைப்படத்தில் முரளிதரனாக நடிக்கவிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி மீதும் அவர்களது கோபம் திரும்பியிருக்கிறது. முரளியாக நடிக்க முன்வந்த விஜய் சேதுபதி தமிழரா என்று, சிலர் கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்தச் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.   ஆரம்பத்தில், தமிழக அரசியல்வாதிகள் இடையே ஆரம்பித்த இந்த எதிர்ப்பு, பின்னர் தமிழகத் திரைப்படக் கலைஞர்களிடமும் பரவியுள்ளது. “ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு,  முரளிதரன் ஆதரவாக இருந்தமையால், உலகெங்கும் தமிழர்களால் ‘தமிழினத்தை காட்டிக் கொடுத்த ஒருவராக’ அடையாளபபடுத்தப்பட்டு உள்ளார்” என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இந்திய மேலவை உறுப்பினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளருமான வைகோ கூறியிருக்கிறார்.   போரின் போது காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடித் தருமாறு கோரி, அவர்களின் தாய்மார்களும் உறவினர்களும் உண்ணாவிரதம் இருந்த போது, முரளிதரன் அதை “நாடகம்” எனக் குறிப்பிட்டதாகவும் குற்றஞ்சாட்டிய வைகோ, ‘காட்டிக் கொடுத்தோனின்’ பாத்திரத்தை ஏற்று நடிப்பதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு, நடிகர் விஜய் சேதுபதியிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டொக்டர் ராம்தாஸூம் முரளியைக் காட்டிக் கொடுப்பவனாகவே குறிப்பிட்டுள்ளார். “சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை அறிந்து, அதிர்ச்சியடைந்தேன். தமிழக நடிகர், ஒரு காட்டிக்கொடுத்தல் வரலாற்றை ஆதரிக்கக் கூடாது” என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.    நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் இதே போன்ற வார்த்தைகளால் முரளியைச் சாடியிருக்கிறார்.  “சேதுபதி, இந்தப் படத்தில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டால், தமிழ் மக்கள் அவரை எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்வர். தமிழினம் காட்டிக் கொடுப்போரை ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை” என்று இயக்குநர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.  சமூக வலைத்தளங்களில், இவை போன்ற பல விமர்சனங்கள் வலம்வருகின்றன.   ‘800’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான Dar Motion Pictures, இவற்றுக்குப் பதிலளித்து புதன்கிழமை (14) ஓர் அறிக்கையை வெளியிட்டது. ‘இது, வெளிநாட்டு தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தைச் சித்திரிப்பதை நோக்கமாகக் கொண்ட, ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாறு மட்டுமே’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.    இந்தத் திரைப்படம், எந்தவொரு சமூகத்துக்கும் ஆதரவாக, எந்தவோர் அரசியல் கருத்தையும் கொண்டதல்ல; இது, தமது பயணத்தின் போது சந்திக்கும் இடையூறுகளைப் பொருட்படுத்தாது, இளைய தலைமுறையினர் தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான தூண்டுதலாகும். ஈழத் தமிழர்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் எந்தவொரு காட்சியும் இதில் உள்ளடங்காது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.    இத்தகைய எதிர்ப்புகளை அடுத்து, முரளிதரனும் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ‘நான், 2009ஆம் ஆண்டுதான், என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று, 2019ஆம் ஆண்டு கூறியதை, தமிழர்களைக் கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் எனத் திரித்து எழுதுகிறார்கள். ....போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில், வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள், வீடு திரும்பினால்தான் நிஜம் என்ற சூழ்நிலையில், போர் முடிவுற்றமையைப் பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாது போர் நிறைவடைந்ததால், கடந்த 10 வருடங்களாக உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே, 2009ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தில் தெரிவித்தேன்’ என்று, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.    “2009ஆம் ஆண்டு தான், என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘வியத் மக’ கூட்டமொன்றிலேயே முரளி கூறியிருக்கிறார். அந்த ‘வீடியோ’வையும் சமூக வலைத்தளங்களில் சிலர் இணைத்திருந்தார்கள்.  தாம் கூறியதைப் பற்றி, முரளி தரும் விளக்கம் சரியாக இருக்கலாம். ஆனால், அந்தக் கருத்தை அவர், தெரிவித்த மேடையின் காரணமாக, அக் கருத்துக்கு வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுவதும் தவிர்க்க முடியாது.    இந்த அறிக்கையில் முரளி, தாம் தமது மலையகத் தமிழர்களுக்குச் செய்த உதவிகளை விட, ஈழ மக்களுக்குச் செய்த உதவிகளே அதிகம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அவ்வாறு வடக்கு, கிழக்கு மக்களை, ‘ஈழத் தமிழர்’ என்று அழைத்தமை, சிங்கள மக்கள் மத்தியிலும் எதிர்ப்பை உருவாக்கலாம்.    இந்தக் குற்றச்சாட்டுகளை, முரளி ஏற்றுக் கொள்வது ஒரு புறமிருக்க, போர் இடம்பெற்ற மண்ணில் வாழும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில், இலங்கைத் தமிழர் எவரும், முரளியைக் குறைகூறியதாக இதுவரை தெரியவில்லை. அவர்கள், தமிழக அரசியல்வாதிகள், கலைஞர்களின் குற்றச்சாட்டுகளை ஆதரித்தும், இதுவரை எதையும் கூறியதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முரளியின் அரசியலைச் சாடுவதோடு, இந்தத் திரைப் பட முயற்சியை ஆதரித்து, முகநூலில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.   ‘மஹிந்த, கோட்டாபய ஆகியோரின் பொதுஜன பெரமுனவின் சார்பில், கடந்த பொதுத் தேர்தலின் போது, பிரசாரக் களத்தில் முரளி இறங்கியிருந்தார். அப்போது அவர், எமக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்’ எனவும் அதே பதிவில் மனோ கணேசன் குறிப்பிட்டிருக்கிறார்.   முரளியின் கருத்து, கொல்லப்பட்ட தமிழர்களுக்கு எதிரானது என வியாக்கியானம் தான் செய்ய முடியும். ஆனால், போர் மிகவும் மோசமாக நடைபெற்ற நாள்களில், தமிழகத் தலைவர்கள் போர் காலக் கொலைகளைத் தெளிவான வார்த்தைகளால் நியாயப்படுத்தினார்கள். புலிகளிடம் இருந்த கிளிநொச்சி நகரம், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்திடம் வீழ்ந்தமை, புலிகளின் தோல்வியைக் கோடிட்டுக் காட்டியது. அதிலிருந்து மே மாதம் வரை, வன்னி மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில் சிக்கிக் கொண்டனர். ஜனவரி மாதம் 17ஆம் திகதி, வடக்கில் அகோர போர் நடைபெறும் நிலையில்,  அப்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா, இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தினார். “இலங்கை இராணுவத்தின் நோக்கம், தமிழர்களைக் கொல்வது அல்ல; புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறப் பொது மக்களுக்கு இடமளித்தால், கொலைகளைத் தவிர்க்க முடியும். போரின் போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது; இது எந்த நாட்டுக்கும் பொருத்தமானது” என்றும் அவர் கூறினார்.    இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும் இதேதொனியில் கருத்துத் தெரிவித்து இருந்தார். 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மூன்றாம் திகதி நடைபெற்ற தி.மு.க நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “தமிழீழத்தில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவப் போவதாக, புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதை அடுத்து, 1987ஆம் ஆண்டிலேயே புலிகள் அமைப்பு, தி.மு.கவின் ஆதரவை இழந்ததாகவும், தாம் புலிகளை வெறுப்பதாகவும் கூறியிருந்தார்.  இவை, புலிகள் அமைப்பு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் கூறப்பட்டவை. இவை அனைத்தும் ஊடகங்களில் பல முறை வெளிவந்த செய்திகள். முரளி, இதை விட மோசமாக எதையும் கூறிவிட்டாரா?   முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் திறமை, அச்சமின்மை, தந்திரோபாயங்கள், தியாகம் இல்லாவிட்டால், அரச படைகள் போரில் வெற்றியடைந்திருக்காது என, போர் முடிவடைந்தவுடன், கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். போர் முடிவடைந்து, ஒரு வருடம் கூடச் செல்வதற்கு முன் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தலைவர்களின் ஆலோசனைப்படி, போர் முனையில் வாழ்ந்த தமிழ் மக்கள், சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்தனர். தமிழகத் தலைவர் எவரும் அதை விமர்சித்ததாகத் தெரியவில்லை.    மனோ கணேசன், தமது முகநூல் பதிவில் இவ்வாறு கூறுகிறார். ‘அவரது திரைப்படம், அவரது பொறுப்பற்ற அரசியலை நியாயப்படுத்தாத வரை வந்து போகட்டும்..! ஒரு தமிழரின், ஓர் இலங்கையரின், வாழ்க்கைப் போராட்டம், திரைப் படமாக வரட்டும்..!’      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெயலலிதாவின்-கூற்றை-விட-முரளியின்-கூற்று-மோசமானதா/91-257219  
  • பல பணி இழப்புகளை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழகம்:மூதவை கூட்டத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்   வடக்கில் தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வெற்றிடங்களை நிரப்புவதில் அசமந்தப் போக்குடன் இருப்பதனால் இளஞ் சந்ததிதியினர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழக மூதவையில் (செனற்) பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை நேற்று  செவ்வாய்க்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே பல்கலைக்கழகத்தில் வெற்றிடங்களை நிரப்புவதில் நிர்வாகம் காட்டும் அசமந்தப்போக்குகள் குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பல பீடங்கள் மற்றும் துறைகளில் வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்படாதிருப்பதுடன், சில துறைகளில் நீண்ட காலமாக – பல வருடங்களாகப் பல பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் விண்ணப்பங்கள் கோரப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வந்தமையையும் துணைவேந்தர் இன்றைய கூட்டத்தில் சுட்டிக் காட்டினார். நூலகத்தில் நிலவும் உதவி நூலகர் பதவிக்காக 2018 ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதற்காக சுமார் 160 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். எனினும் சுமார் இரண்டு வருடங்களாக நேர்முகத் தேர்வு நடாத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விசேட அனுமதியின் படி, நேற்று திங்கட்கிழமை முதல் நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், கணிசமான விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளிக்கவில்லை. இத்தகை நிலமை இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுமாறு இன்றைய மூதவைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   போதனை சார் வெற்றிடங்கள் மற்றும் நிர்வாக அதிகார வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்கும் வகையில் விண்ணப்பங்களின் செல்லுபடியாகும் காலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நீடிக்கப்பட்டுள்ள போதிலும், பல போதனை சாரா ஊழியர் பதவிகளுக்காக நேர்முகத் தேர்வுகள் முடிந்த பின்னரும் நியமனங்களை வழங்குவதில் பல்கலைக்கழக நிர்வாகம் காட்டிய அசமந்தப் போக்கின் காரணமாகக் கடந்த வருடம் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமையும், அதன் பின் அந்த நியமனங்களுக்கான நடைமுறைகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறுத்தி வைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.     https://www.thaarakam.com/news/8cd2b6c5-de80-4b13-b752-500bcc390b5f
  • உழுதவன் கணக்கு பத்தா ஒலக்க கூட மிஞ்சல அப்பா பாட்டன் காலத்தில் எழுதி வச்சான்பாட்டுல  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.