Jump to content

ஐபிஎல் 2020: செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஐபிஎல்

பட மூலாதாரம், ROBERT CIANFLONE/GETTY IMAGES

 

கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 

ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. 

அதேவேளையில், இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களுக்கும், 2020 ஐபிஎல் தொடருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. 

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் புதியது. 

ஐபிஎல் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது மைதானத்தில் ஒலிக்கும் ஆரவார கோஷங்களும், நடனங்களும் தான். ஆனால், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளால், இந்த தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கும் பாதிப்பை தரக்கூடும். 

இழப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல 

தங்களின் பெளண்டரி, சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் எழுப்பும் கரகோஷமும், விக்கெட் வீழ்த்தும்போது மைதானத்தில் எழும் ஆரவாரமும் இம்முறை கிடைக்க போவதில்லை என்ற நிலையில் , புதிய சூழலுக்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக் கொண்டு பங்களிப்பவர்களாலேயே இத்தொடரில் சாதிக்க முடியும்.

அதேபோல், தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை காணும் ரசிகர்களுக்கும் ஆளில்லாத மைதானத்தில் விளையாடப்படும் போட்டி புதிய அனுபவத்தை தரக்கூடும்.

தொலைக்காட்சி வர்ணனையாளர்களின் பங்கு இந்த தொடரில் அதிக முக்கியத்துவம் பெறும். ரசிகர்கள் இல்லாத அரங்கத்தில் நடப்பதை சுவாரஸ்யமாக எடுத்துக்கூறி போட்டியின் பரபரப்பை அவர்களால் மட்டுமே ரசிகர்களிடம் எடுத்துச்செல்லமுடியும். 

ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் வழக்கமான சுவராஸ்யத்தை தருமா என சில ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விவாதித்து வந்தனர். ஆனால், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் தொடர் என்பதே 2020 ஐபிஎல் போட்டி தொடருக்கு பலமாக அமையும் என்று ரசிகர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர். 

மீண்டும் நீயா- நானா போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் 

ஐபிஎல் டி20

பட மூலாதாரம், GETTY IMAGES

 

இந்நிலையில், ஐபிஎல் தொடர்களில் அதிக அளவு சாம்பியன்ஷிப் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் போட்டியில் (சனிக்கிழமை) சந்திக்கவுள்ளன.

கடந்த (2019) ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்தில் இவ்விரு அணிகளே மோதின. மிகவும் பரபரப்பான அந்த போட்டியின் இறுதி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனது அணிக்கு கோப்பையை உறுதி செய்தார்.

இதுவரை 4 முறை ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ள நிலையில், அதில் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 1 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலுவான பேட்டிங் வரிசை கொண்டது. பொலார்ட், ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா ஆகியோரால் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்கள் குவிக்க முடியும். ஜஸ்ப்ரீத் பூம்ரா மற்றும் டிரண்ட் போல்ட் போன்ற உலகத்தரம் மிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு அந்த அணிக்கு பெரிதும் உதவும். 

ஐபிஎல் டி20

பட மூலாதாரம், CHENNAI SUPER KINGS / TWITTER

 

அதேவேளையில் மற்றொரு அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த தொடருக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது பல சர்ச்சைகள் மற்றும் விலகல்களால் நெருக்கடியை சந்தித்தது. 

அந்த அணி மூன்று முறை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த எம்.எஸ். தோனி கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் எந்த அழுத்தமும் இல்லாமல் தற்போது விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் சூழலை பயன்படுத்தும் வகையில் இம்ரான் தாஹீர் உள்ளிட்ட சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பது அணிக்கு சாதகமான அம்சம். மேலும் பிராவோ, வாட்சன் ஆகியோரின் அனுபவம் அணிக்கு மற்றொரு பலம். 

எதிர்பாராத திருப்பங்கள், இன்ப அதிர்ச்சிகள், கடும் அதிர்ச்சி தோல்விகள் என எல்லாம் கலந்த கலவையே விளையாட்டு. ஒரு சில வினாடிகளில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் விளையாட்டுதான் கிரிக்கெட். குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். 

ஏராளமான தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் சர்ச்சைகளை தாண்டி இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரும் அந்த வரிசையில் இடம்பெறும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

https://www.bbc.com/tamil/sport-54208949

 

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply

ராயுடு – ப்ளஸிஸ் கலக்கல்; வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ்

 

 

IMG_20200919_231625-960x640.jpg?189db0&189db0

கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடர் கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் இன்று (19) ஆரம்பமாகியுள்ளது.

இந்தத் தொடரின் முதலாவது போட்டி, அபுதாபியில் உள்ள செய்க் ஷயெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவுா7.30 மணிக்கு ஆரம்பமாகியது. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுக்களினால் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, குயின்ரன் டி கொஹ் மற்றும் திவாரி ஆகியோரின் நிதான துடுப்பாட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், சவுரப் திவாரி 42 ஓட்டங்களையும் குயின்ரன் டி கொஹ் 33 ஓட்டங்களையும் கிரன் பொலார்ட் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்னை அணி சார்பில், லுங்கி நெகிடி மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 163 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட களமிறங்கி சென்னை சுப்பர் கிங்ஸ் 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.

சென்னையின் துடுப்பாட்டத்தில் அம்பாத்தி ராயுடு 48 பந்துகளில் 71 ஓட்டங்களையும், பப்டூ ப்ளசிஸ் ஆட்டமிழக்காது 44 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மும்பையின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட், ஜேம்ஸ் பட்ரின்சன், ஜஸ்விந்தர் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2020: அம்பட்டி ராயுடு - மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சாதித்த கதை

  • சிவக்குமார் உலகநாதன் 
  • பிபிசி தமிழ் 
7 மணி நேரங்களுக்கு முன்னர்
அம்பட்டி ராயுடு

பட மூலாதாரம், ROBERT CIANFLONE/GETTY IMAGES

 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி 2019 மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறுவோம் என்று நம்பிய ஒரு பேட்ஸ்மேனின் பெயர் அதில் இடம்பெறவில்லை.

மிடில் ஆர்டர் பேஸ்ட்மேனான அம்பட்டி ராயுடு தான், உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற தவறிய அந்த வீரர். 

ராயுடுவுக்கு ஏன் வாய்ப்பில்லை என்று விளக்கிய தேர்வாளர் ஒருவர், ராயுடுவுக்கு பல வாய்ப்புகள் தந்துள்ளோம், ஆனால் சில காரணங்களால் மற்றொரு வீரரை தேர்வு செய்ததாக குறிப்பிட்டார்.

உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் தேர்வான அந்த வீரர் பேட்டிங், பெளலிங், பீல்டிங் என மூன்று அம்சங்களில் சிறப்பாக பங்களிப்பவர் என அந்த தேர்வாளர் அப்போது கூறியிருந்தார். 

இந்த நிலையில்,அதை கிண்டல் செய்வது போல உலகக்கோப்பை போட்டிகளை காண, தான் 3டி கண்ணாடி வாங்கியுள்ளதாக அம்பத்தி ராயுடு ட்வீட் வெளியிட்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதன் பின்னர் அந்த உலகக் கோப்பையில் ஓரிரு போட்டிகளுக்கு ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடுவின் பெயர் இல்லை.

புறக்கணிப்பை தொடர்ந்து ஒய்வு அறிவிப்பை வெளியிட்ட ராயுடு 

மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளான அம்பட்டி ராயுடு, அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவித்தார். 

அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் ஓய்வில் இருந்து திரும்பி வந்தார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை இக்கட்டான தருணத்தில் ராயுடு சந்தித்தார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தனது ஆட்டத்தை துவக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் முடிவில் 6 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி, 2 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடக்கமே அதிர்ச்சி; போராடிய ராயுடு 

வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் டிரண்ட் போல்ட் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசினர். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. 

பும்ரா மற்றும் பாண்டியா சகோதரர்கள் இன்னும் பந்து வீச வேண்டியிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் எதிர்பார்த்தது போல பங்களிக்க முடியாதது, இனி இந்திய அணியில் விளையாட முடியாதோ என்ற ஏமாற்றம், சென்னை அணியில் ஆடும் பேட்ஸ்மேன்களுக்குள் உள்ள போட்டி என பல அழுத்தங்களின் மத்தியில் ராயுடு, நிதானமாக தொடங்கி, தேவைப்பட்ட நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ராயுடுவை சாதிக்க தூண்டியது எது?

ராயுடு

பட மூலாதாரம், THARAKA BASNAYAKA/NURPHOTO VIA GETTY IMAGES

 

நிச்சயம் அவர் சந்தித்த போராட்டங்களும், ஏமாற்றங்களும் தான். ஏன் சில சர்ச்சைகள் கூட எனலாம்.

உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது மற்றும் ஒய்வு முடிவை அறிவித்தது மட்டுமல்ல, ராயுடு தனது கிரிக்கெட் பயணத்தில் ஏராளமான சர்ச்சைகள் மற்றும் ஏமாற்றங்களை சந்தித்துள்ளார். 

மிக தாமதமாக தனது 27-வது வயதில் தான், முதல் சர்வதேச போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இளம் வயதில் சிறப்பாக விளையாடி வந்த அவர், 2004-ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். 

அதன் பின்னர் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராயுடு, பிசிசிஐ அங்கீகரிக்காத இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமல்ல, ரஞ்சி அணியில் இடம்பெறுவது கூட முடியாத காரியமானது.

பெரும் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு 

ராயுடு

பட மூலாதாரம், JEKESAI NJIKIZANA/AFP VIA GETTY IMAGES

 

2009-ஆம் ஆண்டு ஐசிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தமான பல வீரர்களுக்கு மன்னிப்பு அளித்து அவர்களை சர்வதேச கிரிக்கெட் போட்டி தேர்வுக்கு பரிசீலிப்பது என்ற முடிவை பிசிசிஐ எடுத்தது.

நீண்ட தாமதத்துக்கு பின்னர், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ராயுடு துவக்கினார்.

55 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர், 3 சதங்கள் எடுத்துள்ளார். மேலும் அவரின் பேட்டிங் சராசரியும் 47 என்ற நல்ல நிலையில் உள்ளது.

ஆனாலும் வலுவான பேட்டிங் வரிசை உள்ள இந்திய அணியில், அம்பட்டி ராயுடுவுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, ராயுடுவின் பெயர் பல சர்ச்சைகளிலும் இடம்பெற்றது.

2005-ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் எதிரணி வீரருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. அதேபோல், 2016- ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங்குடன் களத்தில் அவர் பலமான கருத்து மோதலில் ஈடுபட்டார்.

ஓரிரு முறைகள் நடுவர்களுடன் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், இந்த சர்ச்சைகள், ஏமாற்றங்களை தாண்டி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் முடிந்தவரை அவர் பங்களித்து வந்தார்.

சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்ல, ஐபிஎல் தொடர்களும் கடுமையான அழுத்தம் மற்றும் போராட்டத்தில் இருந்து மீண்டு சாதிக்கும் வீரர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமையன்று சிறப்பாக பங்களித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற அம்பட்டி ராயுடு 2020 ஐபிஎல் தொடரில் தனது பயணத்தை அற்புதமாக துவக்கியுள்ளார் என்றே கூறலாம்.

 

https://www.bbc.com/tamil/sport-54222595

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல் 2020 தொடரில் புதிய கிரிக்கெட் நட்சத்திரங்களாக உருவாக வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
2019ல் ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

2019ல் ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியல் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நேற்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கின.

இந்தியா மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் போட்டி உலகில் மிகுந்த பணக்கார விளையாட்டாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளின்போது, இந்தியா முழுக்க ஸ்டேடியங்கள் ரசிகர்களால் நிரம்பி வழியும். பாலிவுட் நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் அதில் இடம் பெற்றிருப்பர்.

ஆனால், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, இந்த முறை எல்லாமே மாறுபட்டு இருக்கப் போகின்றன. காலி ஸ்டேடியங்களில் போட்டிகள் நடக்கப் போகின்றன. வழக்கமான உற்சாகக் கொண்டாட்டங்கள் இருக்காது.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கப் போகிறது - புதிய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களை உருவாக்குதல் என்ற இந்தப் போட்டியின் வரலாறு மாறாமல் இருக்கப் போகிறது.

எல்லா அணிகளுமே புதிய வீரர்களை வாங்கியுள்ளன. அவர்களில் சிலர் இந்தியாவில் 19 வயதுக்கு உள்பட்டோர் அணியைச் சேர்ந்தவர்கள்.

தங்கள் அணிகளுக்கு வெற்றியை தேடித் தரக்கூடிய திறமைவாய்ந்த சில வீரர்களை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

19 வயதுக்கு உள்பட்டோருக்கான 2020 உலகக் கோப்பை போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஸ்டைலான பேட்ஸ்மேன் என கருதப்படும் இவர் கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துபவராக இருக்கிறார். அவரை சந்தித்து அவரிடம் நுட்பங்களைக் கற்றுக் கொள்வது பற்றியே எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவர்.

கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி முடிந்து இந்தியா திரும்பியதும் அந்தக் கனவு நனவானது. அவரை டெண்டுல்கர் சந்தித்து, போட்டியில் திறமையாக விளையாடியதற்காகப் பாராட்டு தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையே எழவில்லை. இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகம் ஆகிறார்.

ipl 2020 cricket dubai
 

அவருடைய அணிக்கு அவரிடம் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. 19 வயதுக்கு உள்பட்டோருக்கான 2020 உலகக் கோப்பை போட்டியில் அவர் எடுத்த ஸ்கோர்களை பார்த்தால், அதற்கான காரணம் நமக்குப் புரியும். 88, 105 நாட் அவுட், 62, 57 நாட் அவுட், 29 நாட் அவுட், 57 என்று அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் குவித்தார். இந்த ஆண்டு நடந்த போட்டியில் அதிகபட்ச ரன்களை எடுத்தவர் இவர்தான். இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் ஐந்து அரை சதங்களை அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் ஆகவும் உள்ளார்.

அவருடைய பின்னணியும்கூட, அவரது கிரிக்கெட் சாதனைகளைப் போல உந்துதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறிய நகரில் இருந்து, கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மும்பைக்கு வந்தவர் ஜெய்ஸ்வால். தெருக்களில் தூங்கி இருக்கிறார். வாழ்க்கைக்காக தெருக்களில் தின்பண்டம் விற்றிருக்கிறார்.

உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு, அடைக்கலம் கொடுத்தார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட்டது. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் போன்ற சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நிறைந்த தனது அணியில் தடம் படிப்பது ஜெய்ஸ்வாலுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது.

ஆனால் சூழ்நிலை கடுமையாக இருக்கும்போது, எப்படி தடம் பதிக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.

ரவி பிஸ்னோய்

ரவி பிஸ்னோய்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

பிஸ்னோய் நம்பிக்கைக்குரிய சுழற்பந்து வீச்சாளர்.

இந்தியாவின் அடுத்த ``சுழற்பந்து சூறாவளி'' என்று இவரை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வர்ணித்திருக்கிறார். 

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இவருடைய அற்புதமான பந்துவீச்சைப் பார்த்தால், இந்தப் பாராட்டு ரொம்ப அதிகமானது என்று தோன்றாது. அவர் 17 விக்கெட்டுகளை எடுத்தார். எல்லாமே இந்தியாவின் வெற்றிக்கு தேவைப்பட்ட நேரங்களில் கிடைத்த விக்கெட்டுகள். இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்திடம் இவரின் அணி தோற்றது. ஆனால் இந்தப் போட்டியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக பிஸ்னோய் உருவானார்.

ஐ.பி.எல். போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இவர் விளையாடுகிறார். அந்த அணியில் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிங்க்ஸ் அணி பெரும்பாலும் நடுத்தரமான அணியாகக் கருதப்படுகிறது. உலகக்கோப்பை போட்டியில் வெளிப்படுத்திய அசத்தலான ஆட்டத்தை பிஸ்னோய் இந்தப் போட்டியில் தங்களுக்காக வெளிப்படுத்துவார் என்று கிங்க்ஸ் அணி நம்பிக்கை கொண்டுள்ளது.

பிரியம் கார்க்

பிரியம் கார்க்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடைப்பட்ட நிலையில் களம் இறங்குபவர் கார்க்.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து இறுதிப் போட்டி வரை தன் அணியை கொண்டு சென்றவர். அவருடைய ஸ்கோர்கள் சராசரி அளவில் இருந்தாலும், அவருடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதாக அவை இல்லை.

உறுதியான கட்டுப்பாட்டுடன் அணியை வழிநடத்தியவர், முக்கியமான நுட்பமான முடிவுகளை எடுக்கும் சமயங்களில் தன் திறன்களை வெளிப்படுத்தியவர்.

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக பிரபலமாக இருக்கக் கூடியவர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருப்பவர். 2018 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநில அணிக்காக விளையாடியதுதான் அவருடைய முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளுக்கான அறிமுகம். அப்போது அவர் இரட்டை சதம் அடித்து, பெரிய அரங்கிற்கு தாம் வந்திருப்பதைப் பதிவு செய்தார்.

மற்ற போட்டிகளிலும் அவர் அதிக ரன்கள் எடுத்தார். அவைதான் அவரை 19 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியின் கேப்டன் பொறுப்புக்கு அழைத்துச் சென்றன.

இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. முந்தைய வரலாற்றைப் பார்க்கும்போது, கார்க் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்பதற்கான வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது.

19 வயதுக்கு உள்பட்டோர் அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்துள்ள இந்திய அணியின் இப்போதைய கேப்டன் விராட் கோலி, பிரித்வி ஷா, முகமது கைஃப், பார்த்திவ் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் நிலை வரை உயர்ந்து, கிளப் கிரிக்கெட்டிலும் நல்ல முறையில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

புள்ளிகள் வரிசையில் அட்டவணையில் முதல் பாதிக்குள் சன்ரைசர்ஸ் அணி இடம் பெறுவதற்கு கார்க் உதவியாக இருந்தால், இந்திய அணியில் அவர் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

கார்த்திக் டியாகி

டியாகியின் பந்துவீச்சில் நல்ல வேகம் இருக்கிறது.

பட மூலாதாரம், KARTIK TYAGI/FACEBOOK

 
படக்குறிப்பு, 

டியாகியின் பந்துவீச்சில் நல்ல வேகம் இருக்கிறது.

தன்னுடைய கூக்ளிகள் மூலம் பேட்ஸ்மேன்களை குழப்பம் அடையச் செய்பவர் பிஸ்னோய் என்றால், நல்ல வேகத்துடன் பந்தை இரு புறமும் திரும்பிச் செல்லும்படி ஸ்விங் செய்யும் திறமையால் பேட்ஸ்மேனுக்கு அதிர்ச்சி தருபவராக டியாகி இருக்கிறார்.

அவர் 11 விக்கெட்டுகளை சாய்த்து 13.90 என்ற சராசரியை வைத்துள்ளார். அதன் மூலம் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்ந்த தேர்வுகளின் வரிசையில் இவர் இடம் பிடித்திருக்கிறார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் அரோன், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் இவருடைய அணியில் உள்ளனர். ராயல்ஸ் அணியின் வேகப்பந்து தாக்குதல் குழுவாக இந்த மூவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடைய துல்லியமான பந்துவீச்சு, வேகத்தை மாற்றிக் கொள்ளும் திறன் காரணமாக, ஐக்கிய அமீரகத்தின் குறைந்த ரன்கள் கொடுக்கும் மைதானங்களில் இவர் மிகவும் பயனுள்ளவராக இருப்பார்.

போட்டியின் முதல்பாதி ஆட்டங்கள் வரை பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க முடியாமல் போனால் (அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது), தனது அணியின் முன்வரிசை பந்துவீச்சாளர்களில் டியாகி இடம் பெறுவார்.

 

 

https://www.bbc.com/tamil/sport-54217370

Link to comment
Share on other sites

இட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது: சென்னை வெற்றி குறித்து சேவாக் கருத்து

இட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது: சென்னை வெற்றி குறித்து சேவாக் கருத்து

 

ஐ.பி.எல். 2020 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆரம்ப போட்டியே பரபரப்பாகவும், விறுப்பாகவும் சென்றது. முதல் போட்டியிலேயே ரசிகர்கள் சுண்டி இழுக்கப்பட்டனர். 

முதல் போட்டியே பரபரப்பாக சென்றுள்ளதால் இதுகுறித்து விரேந்தர் சேவாக் கூறியிருப்பதாவது:-


 
ஐ.பி.எல். போட்டிக்கு இது சிறந்த தொடக்கம். இந்த போட்டியை பார்க்கும்போது இத்தொடர் பட்டைய கிளப்பும் பட்டாசாக இருப்பது போல் தெரிகிறது. அம்பதி ராயுடு, டு பிளிஸ்சிஸ் சூப்பராக விளையாடினர், ஆனால், இறுதியில் சாம் கர்ரனின் கேமியோ மாறுபட்டதாக இருந்தது.

வடா பாவ்-ஐ மீண்டும் இட்லி வென்றது #CSKvMI

இவ்வாறு சேவாக் அதில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.maalaimalar.com/news/sports/2020/09/20150228/1898746/IPL-2020-MIvCSK-Idli-beats-Vada-Pav-again.vpf

Link to comment
Share on other sites

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிடல்ஸ்!

September 20, 20201 viewPosted By : NirubanAuthors

Image

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2  அவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி  இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. 

 

கொரோனா அச்சுறுத்தலால் முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய  அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த  தொடரின்  இன்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ்  லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. 

 

இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிக்கர்  தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2 ஆவது ஓவரின் போது ஷிக்கர்  தவான் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் அந்த அணியின் பிரித்வி  ஷாவும் ஹெட்மயரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து டெல்லி அணிக்கு  அதிர்ச்சியை அளித்தனர்.  அணியின் ஸ்கோர் 13 ஆக இருந்த போது களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ்  ஐயரும் ரிஷப் பந்தும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின்  ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களிலும் ரிஷப் பந்த்  31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

 

இதன் பின்னர் வந்த அக்ஸர் பட்டேலும் அஸ்வினும் சொற்ப ரன்களில்  ஆட்டமிழந்ததால் அந்த அணி ஒரு கட்டத்தில் 120 ரன்களை கடக்குமா என்ற  சந்தேகம் டெல்லி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதன் பின்னர் என்ரிச் நார்ட்ஜுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் அபார  ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பஞ்சாப் அணியின் பந்து வீச்சை நாளாபுறமும்  சிதறடித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 20 பந்தில் அரை சதம்  கடந்து அசத்தினார். இதனை அடுத்து 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. இதில் மார்கஸ்  ஸ்டொய்னிஸ் 53 ரன்களுடனும்  ஏன்ரிச் நார்ட்ஜெ 3 ரன்களுடனும் இறுதிவரை  களத்தில் இருந்தனர். 

 

பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை முகமது ஷமி 3  விக்கெட்டுகளையும் ஷெல்டன் கார்டல் 2 விக்கெட்டுகளையும் ரவி பிஷோனி 1  விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப்  அணியினர் விளையாடி வருகின்றனர். 

https://ns7.tv/ta/tamil-news/newsslider-important-sports/20/9/2020/marcus-stoinis-fifty-helps-delhi-capitals-set-158

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டில்லி கெபிட்டல்ஸ் அபார வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 2 ஆவது போட்டி செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இடம்பெற்றது.

இப்போட்டியில், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டில்லி கெபிட்டல்ஸ் அணியும் மோதின.

spacer.png

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

spacer.png

அதன்படி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேரினர்.

spacer.png

டில்லி கெபிட்டல்ஸ் சார்பாக 4 ஆவது விக்கெட்டுக்கு அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ரிஷப் பண்ட் 31 ஓட்டங்களுடனுட் ஷ்ரேயாஸ் ஐயர் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

spacer.png

இறுதி கட்டத்தில்  சகலதுறை ஆட்டக்காரர் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். அவர் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைச்சதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ஓட்டங்களை குவித்தார்.

இறுதியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை குவித்தது.

பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

spacer.png

இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

spacer.png

ஆரம்ப ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் டில்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்களை எடுத்து தடுமாறியது.

spacer.png

மயங்க் அகர்வால் தனியாக போராடினார். கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சராக விரட்டினார். அவர் இறுதி வரை போராடினார். அகர்வால் 60 பந்தில் 89 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் டில்லி கெபிட்டல்ஸ் சார்பில் ரபடா, அஸ்வின் மற்றும் ஸ்டெய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டகளை வீழ்த்தினர்.

spacer.png

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்ததினால் ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது. 

இதையடுத்து, சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. டில்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 3 ஓட்டங்களை பெற்று சுப்பர் ஓவரில் அபார வெற்றிபெற்றது.

 இப் போட்டியில் வெற்றிபெற்ற டில்லி கெபிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளைப் பெற்றது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 21 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் இடம்பெறும் 3ஆவது போட்டியில், டுபாயில் டேவிட் வோனர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் சலன்ஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
https://www.virakesari.lk/article/90338
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2020 கிரிக்கெட்: ஷார்ட் ரன் என்றால் என்ன? தவறான தீர்ப்பால் பஞ்சாப் அணியின் வெற்றி பறிபோனதா?

21 செப்டெம்பர் 2020, 05:22 GMT
டெல்லி மற்றும் பஞ்சாப் அணி போட்டி

பட மூலாதாரம், BCCI / IPL

 

ஐபிஎல் 2020 தொடரின் இரண்டாம் ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப் அணியும் நேற்று மோதிக் கொண்டன.

பரபரப்பான சூப்பர் ஓவரில் முடிந்தது நேற்றைய ஆட்டம். சூப்பர் ஓவர் ஆட்டத்தின் முடிவை தலைகீழாக மாற்றியது என்றே சொல்ல வேண்டும். முதல் 10 பத்து ஓவர்களில் தடுமாறிய டெல்லி அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

சூப்பர் ஓவரில் முடிந்த ஆட்டம்

சூப்பர் ஓவரில் முதலில் வந்து ஆடிய பஞ்சாப் அணி வெறும் இரண்டு ரன்களையே எடுத்து டெல்லி அணிக்கு மூன்று ரன்களை மட்டுமே இலக்காக வைத்தது. அந்த அணியின் கே.எல்.ராகுல் இரண்டு ரன்களை எடுத்து ரபாடாவின் பந்தில் அவுட் ஆனார்.

மூன்று ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியை நோக்கி பந்து வீசிய முகமத் ஷமி 'வயிட்' பந்தை வீசினார். அதன்பின் டெல்லியின் ரிஷப் பந்த் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ரபாடாவின் சிறப்பான பந்து வீச்சு

டெல்லி மற்றும் பஞ்சாப் அணி போட்டி

பட மூலாதாரம், BCCI / IPL

 

பெரும் அழுத்தத்திற்கு மத்தியிலும் தன்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை ரபாடா நிரூபித்துள்ளார். சூப்பர் ஓவரில் உள்ள அழுத்தத்தை தாண்டி முதலில் கே.எல்.ராகுலை அவுட் ஆக்கினார். பின் நிக்கோலஸ் புரானாவை அவுட் செய்தார்.

இந்த தருணம் மட்டுமல்ல இதற்கு முன்பும் இம்மாதிரியான பல தருணங்களில் ரபாடா தனது திறமையை காட்டியுள்ளார். 

நேற்றை ஆட்டத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு வீரர் ஸ்டோனிஸ்.

 
 

டெல்லியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது ஸ்டோனிஸின் பேட்டிங்தான். முதல் 10 ஓவர்களில் ஐம்பது ரன்களைகூட எடுக்க முடியாமல் தடுமாறியது டெல்லி அணி. அதன்பின் கடைசி ஐந்து ஓவர்களில் ஸ்டோனிஸ் தனது அணிக்காக ரன்களை சேர்த்தார். டெல்லி அணி இந்த ஐந்து ஓவர்களில் மட்டும் 64 ரன்களை எடுத்தது.

ஸ்டோனிஸ் 21 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடித்து 53 ரன்களை எடுத்தார். 

பஞ்சாப் அணியின் மாயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் பஞ்சாப் அணியின் வெற்றி விதியை மாற்றியது சூப்பர் ஓவர்.

ஆட்டத்தின் முடிவை மாற்றிய ஷார்ட் ரன்

டெல்லி மற்றும் பஞ்சாப் அணி போட்டி

பட மூலாதாரம், BCCI / IPL

 

பஞ்சாப் அணியின் மாயங்க் அகர்வால் நின்று ஆடி பஞ்சாப் அணிக்கு 89 ரன்களை சேர்த்தார். 19ஆவது ஓவரில் அவரும் க்றிஸ் ஜோர்டனும் ஆடிக் கொண்டிருந்தபோது டெல்லி அணியின் ரபாடா பந்து வீசினார். ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் இரண்டு ரன்களுக்கு ஓடினர். 

ஆனால் கிறிஸ் ஜோர்டன் க்ரீஸை தொடாமல் ரன் எடுத்ததாக நடுவர் தெரிவித்தார். அதாவது ஓடப்பட்ட இரு ரன்னில் ஒன்று ஷார்ட் ரன் என நடுவர் தெரிவித்தார். ஆனால் அதன்பின் அந்த காட்சி மறுஒளிபரப்பு செய்யப்பட்டபோது அது ஷார்ட் ரன் இல்லை என்பது தெரியவந்தது. ஷார்ட் ரன் என்றால் கோட்டை தொடாமல் ஓடி ரன் எடுப்பது என்று அர்த்தம்.

அந்த ஒரு ரன் பஞ்சாப் அணியின் வெற்றியை மாற்றியதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆம் போட்டி டையில் முடிந்தது. அதாவது இரு அணிகளுமே 157 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவர் நடைபெற்றது.

அதில் டெல்லி அணி வெற்றியை தன் வசமாக்கியது.

`ஷார்ட் ரன் இல்லை`

போட்டியின் விதியை மாற்றிய அந்த நடுவரின் முடிவு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஒரு ரன் இருந்திருந்தால் சூப்பர் ஓவரின் தேவை இருந்திருக்காது என்றும், பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். 

அது ஷார்ட் ரன் இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவின் முடிவு, 1

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

 


 

 

https://www.bbc.com/tamil/sport-54231523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேர்ஸ்டோ விக்கெட்டுக்கு பிறகு ஆர்சிபியிடம் சரணடைந்த சன்ரைசர்ஸ்..! சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல்லும் ஆரோன் ஃபின்ச்சும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் ஆடிய படிக்கல், அறிமுக போட்டியிலேயே அருமையாக அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரிலேயே ஃபின்ச் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

padikkal-new-jpg.jpg

விராட் கோலியும் 14 ரன்களில் அவுட்டாக, டெத் ஓவரில் ஒருசில பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ், அணியின் ஸ்கோர் 163ஆக உதவினார். இதையடுத்து 20 ஓவரில் 163 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 164 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.

164 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான வார்னர், ஸ்டெய்ன் வீசிய 2வது பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டினார். ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்திருந்த வார்னர், 2வது ஓவரில் ரன் அவுட்டானார்.

warner-sad-jpg.jpg

உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ஸ்டிரைட் திசையில் அடித்த பந்தை உமேஷ் யாதவ் தடுக்க முயல, பந்து அவரது கையில் பட்டு ஸ்டம்பில் பட்டது. ரன் ஓடுவதற்காக க்ரீஸிலிருந்து நகன்று வந்த வார்னர், உமேஷின் கையில் பட்டு பந்து ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

2வது ஓவரிலேயே வார்னரின் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின்னர் பேர்ஸ்டோவும் மனீஷ் பாண்டேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 71 ரன்களை சேர்த்தனர். 33 பந்தில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்திருந்த மனீஷ் பாண்டேவை வீழ்த்தி, பார்ட்னர்ஷிப்பை உடைத்து ஒரு பிரேக் கொடுத்தார் சாஹல். 

bbac21330e9f42c635c069b9bfe89149-jpg.jpg

அரைசதம் அடித்து ஆர்சிபிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்த ஜானி பேர்ஸ்டோவை 16வது ஓவரில் 61 ரன்களில் வீழ்த்தினார் கிளீன் போல்டாக்கி அனுப்பிய சாஹல், அதற்கடுத்த பந்திலேயே விஜய் சங்கரையும் கிளீன் போல்டாக்கினார்.

பேர்ஸ்டோ ஆட்டமிழந்த பின்னர், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் அடுத்தடுத்து மளமளவென சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் பந்துவீசும்போது காலில் காயமடைந்து சென்ற மிட்செல் மார்ஷ், கடைசியில் களத்திற்கு வந்தார். ஆனால் வலியை பொறுத்துக்கொண்டு அவரால் பெரிய ஷாட்டை ஆடமுடியவில்லை. காலில் காயம் என்பதால், பேலன்ஸ் செய்து ஆடமுடியாமல் தவித்த மார்ஷ், அப்படியும் ஒரு ஷாட் ஆடமுயன்று, ஆனால் அது கேட்ச்சாகி வெளியேறினார். சந்தீப் ஷர்மா கடைசி ஓவரில் அவுட்டாக, சன்ரைசர்ஸ் அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை சாஹல் வென்றார்.  

 

 

https://tamil.asianetnews.com/ipl-cricket/rcb-beat-sunrisers-hyderabad-and-start-with-win-ipl-2020-qh0tl6

 

 

Link to comment
Share on other sites

பயஸ்டோவின் சிறப்பாட்டம் வீணாகியது; பெங்களூரிடம் வீழ்ந்தது ஹைதராபாத்

 

 

IMG_20200921_235245-960x640.jpg?189db0&189db0

 

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 3வது போட்டி இன்று (21) சற்றுமுன் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, தேவதத் படிக்கல் 56 ஓட்டங்களையும், ஏ.வி.டி.வில்லியர்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஹைதராபாத்தின் பந்துவீச்சில், ரி.நடராஜன், அபிசேக் சர்மா, விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 164 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.

அணிசார்பில் துடுப்பாட்டத்தில் ஜோனி பயஸ்டோவ் 61 ஓட்டங்களையும் மனிஷ் பாண்டே 34 ஓட்டங்களையும் பெற்றனர். பெங்களூரின் பந்துவீச்சில் ஜஸ்விந்தர் ஷஹால் 3 வி்கெட்களையும், நவ்தீப் சைனி, சிவம் டுபே ஆகியோர் இவ்விரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Link to comment
Share on other sites

தோல்வியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் திரும்பும்: அனில் கும்ப்ளே

தோல்வியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் திரும்பும்: அனில் கும்ப்ளே

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், கடைசி மூன்று பந்தில் ஒரு ரன் அடிக்க முடியாமல் போனது.
 
இதனால் போட்டி ‘டை’யில் முடிந்து சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அடுத்த போட்டியில் விசயங்களை சரியாக செய்வோம் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய விதம் மிகவும் பெருமையாக இருக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றிருக்கனும், துரதிருஷ்டவசமாக, சூப்பர் ஓவர் வரை சென்றுவிட்டது. சூப்பர் ஓவரில் குறைந்தது 10 முதல் 12 ரன்கள் தேவை. எங்களால் அதை எடுக்க முடியவில்லை. டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டோம். ஆனால், தொடரின் முதல் போட்டி என்பதால் விளையாடிய விதம் திருப்தி அளிக்கும் விதமாக இருந்தது. ஆடுகளத்தில் நாங்கள் செய்ய வேண்டிய சிறு சிறு விசயங்களை சரிசெய்து கொள்வோம்’’ என்றார்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையை வெளுத்து வாங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.stream2watch.io/live-sports/rajasthan-royals-vs-chennai-super-kings-live-stream
 

போட்டிகளைப் பார்ப்பதற்கு
2-3 தடவை விளம்பரங்ளை வெளியேற்றிவிட்டால் ஒழுங்காக பார்க்கலாம்.

INNINGS BREAK
4th Match (N), Sharjah, Sep 22 2020, Indian Premier League
335977.pngRR
(20 ov)
216/7 
335974.pngCSK
 
Super Kings chose to field. CRR: 10.8
Current RR
10.8
Last 5 ov (RR)
62/3 (12.40)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்..! சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ராஜஸ்தான் ராயல்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன், அறிமுக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன், ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் சிறியது என்பதால், ஜடேஜா, பியூஷ் சாவ்லா ஆகியோரின் பவுலிங்கை பொளந்துகட்டினார் சஞ்சு சாம்சன். ஜடேஜா வீசிய 7வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசிய சாம்சன், சாவ்லா வீசிய 8வது ஓவரில் 3 சிக்ஸர்களையும் விளாசினார். சாவ்லாவின் அந்த ஓவரில் ஸ்மித்தும் ஒரு சிக்ஸர் அடித்தார். மீண்டும் சாவ்லா வீசிய 10வது ஓவரில் ஸ்மித் 2 சிக்ஸர்களையும் சாம்சன் ஒரு சிக்ஸரையும் அடிக்க, 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 119 ரன்களை குவித்துவிட்டது.

sanju-samson-1-jpg.jpg

சஞ்சு சாம்சன் ஆடிய விதத்தில், என்ன செய்வதென்று தெரியாமல் தல தோனியே நிராயுதபாணியாக நின்றார். போகிற போக்கில் போகட்டும்; பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கே தோனி சென்றுவிட்டார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சாம்சன், லுங்கி இங்கிடி வீசிய இன்னிங்ஸின் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

சாம்சன், 32 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் மில்லர்(0), உத்தப்பா(5), ராகுல் டெவாட்டியா(10), ரியான் பராக்(6) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அரைசதம் அடித்த ஸ்மித், கடைசி வரை களத்தில் நின்று நன்றாக ஃபினிஷிங் செய்ய வேண்டும் என நினைத்தார். ஆனால் ஸ்மித் 47 பந்தில் தலா 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

csk-6-jpg.jpg

சாம்சன் ஆடிய ஆட்டத்திற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போன வேகத்திற்கு பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஓவரில் 186 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் யாருமே எதிர்பார்த்திராத விதமாக லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ஜோஃப்ரா ஆர்சச்ர், 4 சிக்ஸர்களை விளாசினார். அதில் 2 நோ பால்களும் கூட. மேலும் ஒரு வைடையும் இங்கிடி வீசினார். எனவே கடைசி ஓவரில் மட்டும் ராஜஸ்தான் அணி 30 ரன்களை விளாச, 20 ஓவரில் 216 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்து, 217 ரன்கள் என்ற கடின இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.

rr1-jpg.jpg

217 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சனும் முரளி விஜயும் ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தையே அமைத்தனர். ஆனால் செட்டில் ஆகி நல்ல ஷாட்டுகள் கனெக்ட் ஆக தொடங்கிய மாத்திரத்திலேயே ஷேன் வாட்சன், 21 பந்தில் 33 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராகுல் டெவாட்டியாவின் சுழலில் போல்டாகி சென்றார்.

முரளி விஜய் மந்தமாக ஆடி 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து சாம் கரன் 17 ரன்களிலும், அறிமுக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்திலேயே ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி மீதான அழுத்தம் அதிகரித்தது. கேதர் ஜாதவும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, டுப்ளெசிஸுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார்.

raydu--jpg.jpg

13.4 ஓவரில் சிஎஸ்கே அணி 114 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், நெருக்கடியான சூழலில் டுப்ளெசிஸுடன் தோனி ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிவந்த டுப்ளெசிஸ், உனாத்கத் வீசிய 17வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி அரைசதம் கடந்ததுடன், 18வது ஓவரில் ஒரு சிக்ஸரும் 19வது ஓவரில் ஒரு சிக்ஸரும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தி, வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை சிஎஸ்கேவிற்கு அளித்தார். ஆனால் 19வது ஓவரின் ஐந்தாவது பந்தை அபாரமாக பவுன்ஸராக வீசி, டுப்ளெசிஸை வீழ்த்தினார் ஆர்ச்சர்.

இதையடுத்து கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கு வாய்ப்பே இல்லையென்றாலும், டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் தோனி 3 சிக்ஸர்களை விளாசினார். சிஎஸ்கே அணி 20 ஓவரில் 200 ரன்களை குவித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியிலேயே வலுவான சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.  

 

https://tamil.asianetnews.com/ipl-cricket/rajasthan-royals-beat-csk-in-its-first-match-of-ipl-2020-qh2o42

Link to comment
Share on other sites

சாம்சனின் சிதறடி; சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 4வது போட்டி இன்று (22) சற்றுமுன் நிறைவுக்கு வந்தது. சென்னையுடனான விறுவிறுப்பான இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஸ்மித்தின் நிதான ஆட்டம் மற்றும் சாம்சனின் அதிரடியாலும் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து அபாரமாக 216 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, சஞ்சு சாம்சன் 32 பந்தில் 9 சிக்ஸ்சர்கள், ஒரு பவுண்டரியுடன் ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 47 பந்தில் 4 சிக்ஸ்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்களையும், ஜே.சி அர்சர் 8 பந்தில் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சென்னையின் பந்துவீச்சில், அதிகபட்சம் சாம் குர்ரன் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 217 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 6 விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 200 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.

அணிசார்பில் துடுப்பாட்டத்தில் பப்டூ ப்ளஸிஸ் 37 பந்தில் 7 சிக்ஸ்சர்கள், ஒரு பவண்டரியுடன் 72 ஓட்டங்களையும் சேன் வட்சன் 33 ஓட்டங்களையும், எம்.எஸ். டோனி 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

ராஜஸ்தானின் பந்துவீச்சில் ராகுல் தெய்வதியா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி - தோனி பேட்டிங் வரிசை, நிகிடி வீசிய கடைசி ஓவர் - எது காரணம்?

விளையாட்டில் வெற்றி மற்றும் தோல்வி மாறிமாறி வருவது இயற்கை. ஆனால், பொதுவாக வெற்றியை விட தோல்விக்கான காரணங்கள் அதிகமாக விவாதிக்கப்படும்.

முதல் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே அணி ) 2020 ஐபிஎல் தொடரில் வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.

இரண்டாவது போட்டியில் மீண்டும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே, 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

சென்ற போட்டியில் சென்னை அணியின் சார்பாக சிறப்பாக விளையாடிய அம்பட்டி ராயுடு இரண்டாவது போட்டியில் உடல்தகுதி காரணமாக விளையாடவில்லை.

ஸ்மித், சஞ்சு சாம்சனை கட்டுப்படுத்த இயலாத பந்துவீச்சாளர்கள் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டை எளிதில் கைப்பற்றியபோதும்,

ஸ்மித் மற்றும் சாம்சன் நடத்திய வான வேடிக்கையை சிஎஸ்கே அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சுழல்பந்துவீச்சாளர்களான ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லாவால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

நிகிடியின் ஒரே ஓவரில் 30 ரன்கள்

16 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்த நிலையில், நிகிடி பந்துவீசிய இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுக்கப்பட்டது.

2 நோபால்கள் மற்றும் 1 வைட் அடங்கிய நிகிடியின் இந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.

இது ஆட்டத்தின் முடிவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

ஏமாற்றமளித்த முரளி விஜய், வாட்சன்

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த

போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பலரும் தங்கள் அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் தான் இருந்தனர்.

5 ஓவர்களுக்கு பிறகு ஷேன் வாட்சன் ஆடிய அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

ஆனால், அது வெகுநேரம் நீடிக்கவில்லை. 7-ஆவது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அதை விட ஏமாற்றம், கடந்த போட்டியில் சிறப்பாக பங்களிக்காத முரளி விஜய் இம்முறையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனி முன்வரிசையில் எப்போதுதான் களமிறங்குவார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

அதிக எண்ணிக்கையிலான இலக்கை துரத்தும் பின்வரிசையில் களமிறங்கி இறுதி கட்டத்தில் ரன்களை விளாசி அணியை வெல்ல வைப்பது தோனியின் பாணி.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அந்த பாணியை சற்று மாற்றிக் கொண்டு தோனி முன்னரே களமிறங்க இறங்கவேண்டும் என அண்மைகாலமாக ஒலித்து வரும் கருத்து, இந்த போட்டிக்கு பிறகும் எதிரொலித்தது. கவாஸ்கர் போன்றோரும் இந்த கருத்தை எடுத்து வைத்தனர்.

16 ரன்களில் தான் தோல்வி என்ற நிலையில், தோனி ஆரம்பத்திலேயே களமிறங்கி இருந்தால் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்த டூ பிளஸிஸ்க்கு பக்கபலமாக விளையாடி வெற்றி பெற வைத்திருக்கலாம் என்ற கருத்து சில ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ipl 2020 time table
 

பிற செய்திகள்:

 

https://www.bbc.com/tamil/sport-54260599

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி..! 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். டி காக் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித் சர்மாவும் சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 90 ரன்களை குவித்தனர்.

ஒருமுனையில் சூர்யகுமார் யாதவ் அடித்து ஆடி பவுண்டரிகளை விளாச, மறுமுனையில் ரோஹித் சர்மா தனக்கே உரிய பாணியில் சிக்ஸர்களை விளாசினார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்களில் ரன் அவுட்டாக, அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 54 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார். சூர்யகுமார் யாதவ், 28 பந்தில் 47 ரன்கள் அடித்தார். 

rohit-sharma-jpg.jpg

ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகிய பவர் ஹிட்டர்கள் பதின்களில் தான் ஸ்கோர் செய்தனர். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்கள் அடித்து கேகேஆருக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணி, ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த சந்தர்ப்பத்திலுமே, மும்பை இந்தியன்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தவே இல்லை. சுனில் நரைன், ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக், இயன் மோர்கன், ரசல், நிதிஷ் ராணா என யாருமே பெரியளவில் அடித்து ஆடவில்லை.

அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் தான் 33 ரன்கள் அடித்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் அடித்தார். அதிரடி மன்னர்களும் பெரிய எதிர்பார்ப்புக்குரியவர்களுமாக இருந்த ரசல் மற்றும் மோர்கன் ஆகிய இருவரையும் முறையே 11 மற்றும் 16 ரன்களில் பும்ரா வீழ்த்தினார். கம்மின்ஸ் கடைசி நேரத்தில் 4 சிக்ஸர்களை விளாசினார். அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே அடித்து, 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.  
 

https://tamil.asianetnews.com/ipl-cricket/mumbai-indians-beat-kkr-by-49-runs-in-ipl-2020-qh4j7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டு கட்டு போல் சரிந்த விக்கெட். பஞ்சாப் அணியிடம் பரிதாபமாக வீழ்ந்தது பெங்களூரு

  Web Team 

Published : 24,Sep 2020 11:21 PM

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 6வது போட்டி பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 26 (20) ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் போல்ட் ஆனார். அவரைத்தொடர்ந்து வந்த நிகோலஸ் பூரான் 17 (18) ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இதற்கிடையே அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுல் சதம் அடித்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத கே.எல்.ராகுல் 132 (69) ரன்களை விளாசினார். பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 207 ரன்கள் என்ற இமால இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் சரிந்தன. கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்தப் போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய படிக்கல் இந்தப் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 30, டிவில்லியர்ஸ் 28, பின்ச் 20 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பெங்களூரு அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் பிஸ்னோவ், முருகன் அஸ்வின் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். காட்ரெல் இரண்டு விக்கெட் சாய்த்தார்.

பஞ்சாப் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

http://www.puthiyathalaimurai.com/newsview/82014/IPL-2020-KXIP-Vs-RCB-Punjab-Ride-On-KL-Rahul-Record-Century-To-Rout-Bangalore-By-97-Runs

Link to comment
Share on other sites

தனியொருவனாக பெங்களூருக்கு பயம்காட்டிய ராகுல்; அபாரமாக வென்றது பஞ்சாப்!

 

 

IMG_20200924_214057-960x663.jpg?189db0&189db0

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 6வது போட்டி இன்று (24) பின்னிரவு நிறைவுக்கு வந்தது. பெங்களூர் அணியுடனான இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 97 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி லோகேஸ் ராகுலின் அதிரடி சதத்துடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபாரமாக 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, ராகுல் 69 பந்துகளில் 7 சிக்ஸ்சர்கள், 14 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களையும், மயங் அகர்வால் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பெங்களூரின் பந்துவீச்சில், அதிகபட்சம் சிவம் டுபே 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 207 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 17 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றுத் படுதோல்வியடைந்தது.

அணிசார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் 30 ஓட்டங்களை பெற்றார்.

பஞ்சாப்பின் பந்துவீச்சில் முருகன் அஸ்வின், ரவி பிஸ்நொய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தோல்வியடைந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 44 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது போட்டி மஹேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இன்று துபாயில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை டெல்லிக்கு வழங்கினார்.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.

176 என்ற இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் முதல் 10 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது. 

அதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்காக கேதர் யாதவ் மற்றும் டூப்பிளஸ்ஸி ஜோடி சேர்ந்து சென்னை அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.

இதனால் சென்னை அணி ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. எனினும் கேதர் யாதவ் 15.4 ஆவது ஓவரில் 26 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் (98-4).

பின்னர் களமிறங்கிய தோனி டூப்பிளஸ்ஸுடன் கைகோர்த்து அதிரடி காட்ட சென்னை அணிக்கு ஒரு கட்டத்தில் 18 பந்துகளுக்கு 65 ஓட்டம் என்ற இக்கட்டான நிலை வந்தது.

spacer.png

இந்த இக் கட்டான தருணத்தில் டூப்பிளஸ்ஸி 35 பந்துகளில் 43 ஓட்டத்துடன் ரபடாவின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 44 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. ஆடுகளத்தில் சாம் கரன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

பந்து வீச்சில் ரபாடா 3 விக்கெட்டுக்களையும், அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டினையும், அன்ரிச் நார்ட்ஜே இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

spacer.png

 

 

https://www.virakesari.lk/article/90784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹேலவின் மும்பையை வீழ்த்திய உதானவின் பெங்களூர்!

இப்போதெல்லாம் ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்னர் இதயம் பலவீனமானவர்கள் இந்த போட்டியை பார்க்காதீர்கள் என்று போர்டு வைக்கலாம் போலுள்ளது. நேற்று 223 ஓட்டங்களை ராஜஸ்தான் அணி துரத்தி அடித்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத ரசிகர்கள் இன்று ஒரு High Scoring த்ரில்லர் பார்த்து வாயடைத்து போயிருந்தாலும் வியப்பில்லை.

டுபாயில் நேற்று நடந்த ஐ.பி.எல்லின் 10 ஆவது போட்டியில் விராட் கோலியின் ரோயல் சாலஞ்சர்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

எங்களுக்கு எதற்கு ரோஹித்தும் கோலியும் என்று இருந்துவிடலாம் என்றால் கூட மும்பை அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேல இருப்பதால் அத்தனை இலகுவில் மும்பையை தள்ளி வைக்க முடியவில்லை. சரி பெங்களூரில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால் இலங்கை சார்பில் இம்முறை ஐ.பி.எல்லில் விளையாடும் ஒரே வீரர் இசுறு உதான அங்கே தான் விளையாடுகிறார்.

spacer.png

ஒவ்வொரு இலங்கை ரசிகருக்கும் இந்த போட்டி முக்கியமாய் மாறிவிட இந்த இரு காரணங்களே போதும். இதைத் தாண்டி ஒரு கிரிக்கட் ரசிகராக பார்த்தல் பின்ஞ், டிவிலியர்ஸ், கோலி, படிக்கால் என்று திடமான துடுப்பாட்ட வரிசையில் மிகச்சிறந்த வீரர்களைக்கொண்ட பெங்களூருக்கும் பும்ரா, போல்ட், பட்டின்சன், ஹார்திக், சஹர், குருனால் என்று மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணிக்கும் இடையிலான ஒரு சவாலான போட்டி. இந்தியாவை பொறுத்தவரை இந்திய தலைவராக கோலியே நிலைக்க வேண்டுமா இல்லாவிட்டால் ரோஹித் தலைமை வகிக்க வேண்டுமா என்கிற கேள்விக்கான விடையை தேடிய போட்டியாக அமைந்திருந்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற ரோஹித் ஷர்மா முதலில் பெங்களூர் அணியை துடுப்பெடுத்தாட பணித்திருந்தார். ஆரம்பம் முதலே இணைப்பட்டதை கட்டியெழுப்பிய பின்ஞ் படிக்கால் ஜோடி 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில் அரைச்சதமடித்த பின்ஞ் ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த கோலியும் 3 ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினார். 

தொடர்ந்து அடுத்ததாக மிஸ்டர் 360 ஏ.பி.டிவிலியர்ஸ் களமிறங்க மறுபுறம் படிக்கால் தன் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். தன் பங்குக்கு டிவிலியர்ஸும் 24 பந்துகளில் அரைசதம் விளாச 20 ஓவர்களின் நி‍றைவில் 201 என்கிற மிகச்சிறந்த எண்ணிக்கையை தன்வசப்படுத்தியது பெங்களூர்.

spacer.png

20 ஓவர்களில் 202 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை அணிக்கு தலைவர் ரோஹித்தும் விக்கெட் காப்பாளர் டி காக்கும் துடுப்பெடுத்தாட வந்தனர். இதுவரை காலமும் எங்கள் வீரர்கள் விளையாட மாட்டார்களா என்று ஏங்கியிருந்த இலங்கை ரசிகர்களுக்கு தன் அறிமுகப்போட்டியிலேயே முதல் ஓவர் வீசி குஷியாக்கினார் இசுறு. 

ஆனால் விளையாடுகிறார் என்று சந்தோஷப்பட்டவர்கள் இனி இலங்கையில் இருந்து யாருமே விளையாட மாட்டார்களோ என்று பயப்படும் வகையில் முதல் ஓவரிலேயே 14 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஏமாற்றம் கொடுத்தார். 

அடுத்த ஓவரை வீச தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சகலதுறை வீரர் என்ற பெயரை தமிழ் நாடு பிரீமியர் லீக்கில் உறுதிப்படுத்தும் வொஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டார். கோலியின் கனவுகளை நிறைவேற்ற வந்த கடவுள் போல ரோஹித்தின் விக்கட்டை படிக்காலிற்கு பதிலாக களத்தடுப்பில் இருந்த 12 ஆம் வீரர் நெகியின் கைகளுக்கு சொந்தமாக்கினார். 

ஸ்டெய்ன் உமேஷ் யாதவ் இருவருமே இல்லாமல் களமிறங்கிய பெங்களூர் அணியின் ஆரம்ப பந்துவீச்சை இசுருவும் சுந்தரும் பொறுப்பெடுத்தனர். 

சுந்தர் வெறுமனே ரோஹித்தின் விக்கட்டை எடுத்ததோடு நின்றுவிடாது பவர்பிளேயில் வீசிய மூன்று ஓவர்களில் வெறுமனே 7 ஓட்டங்களையே வழங்கியிருந்தார். 202 என்ற இலக்கை துரத்தும் போது இந்த பவர் பிளே மும்பைக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே இருந்தது.

spacer.png

அடுத்தடுத்து டி கொக், ஹார்திக் ஆகியோர் ஆட்டமிழக்க இஷான் கிஷான், கைரன் பொல்லார்ட் ஜோடி ஆடுகளத்தில் எஞ்சியிருந்தது. வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று எல்லோரும் முடிவு செய்து இருந்த நேரம் ஆடம் சம்பா வீசிய 17 ஆவது ஓவர் போட்டியையே திருப்பி போட்டது.

சம்பாவின் ஓவருக்கு 27 ஓவரை பொல்லார்ட் விளாச கடைசி மூன்று ஓவர்களில் 53 ஓட்டங்கள் தேவையாய் இருந்தது.  ஏற்கனவே ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு அவ்வளவு ஓட்டங்கள் போன பின்னரும் சிவம் டுபே போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருக்க மீண்டும் சஹாலிற்கு ஓவரை வழங்கினார் கோலி. 22 ஓட்டங்களை அப்படியே தாரை வார்க்கும் நிலை பெங்களூர் அணிக்கு உருவானது.

பொல்லார்ட் 20 பந்துகளில் அரைச்சததை பூர்த்தி செய்தார். கடைசி 2 ஓவர்களில் 31 ஓட்டங்கள் தேவை. பெங்களூரின் வருங்கால நட்சத்திரம் நவ்தீப் சைனி பந்து வீசுகிறார். எதிர்பார்த்ததுபோல் பௌண்டரிகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சிக்ஸர். மொத்தமாக 11 ஓட்டங்கள் கிடைத்திருந்தாலும் மும்பையால் மீண்டும் வெற்றியை அண்ணாந்து பார்க்க மட்டுமே முடியும் போல் இருந்தது.

கடைசி ஓவர். மீண்டும் இசுரு உதான. இஸ்ஹாக்கிஷானும் பொல்லார்டும் ஒரு ஓட்டத்தை முதல் இரு பொந்துகளிலும் முறையே பெற்றார்கள். மூன்றாவது பந்து மீண்டும் இஷான் கிஷான் சிக்ஸராக மாற்றினார்.

3 பந்துகளில் 11 தேவை.

அடுத்த பந்து... மீண்டும் சிக்ஸர். 

இரண்டு பந்துகளில் 5 தேவை. இஷான் கிஷான் 99 ஓட்டங்களோடு ஆடிக்கொண்டிருக்கிறார்.

அடுத்த பணத்தையும் உயர்த்தி அடிக்க நேராக படிக்காலின் கைகளை சென்றடைந்தது பந்து. ஒன்றரை மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. கையில் இருந்த சத்தத்தை ஒரு ஓட்டத்தால் தவற விட்டார் இஷான் கிஷான்.

கடைசி பந்து. 5 ஓட்டங்கள் தேவை.

உதான வீசுகிறார். பொல்லார்ட் அதனை லெக் திசையில் அடிக்க 4 ஓட்டங்களாக மாறி போட்டி சம நிலையானது. 

இஷான் கிஷான் கண் கலங்கி உட்கார்ந்திருப்பதை கமராக்கள் வட்டமிட தொடங்கின. 

சூப்பர் ஓவருக்கு யாரை துடுப்பெடுத்தாட அனுப்புவது என்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பொல்லார்டும் ஹார்திக்கும் களமிறங்கினார்கள்.

19 ஆவது ஓவரில் மும்பையை திணற வாய்த்த சைனி மீண்டும் பந்துவீசினார். எல்லா பந்துகளையும் அடித்தாட முயன்றும் 7 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. பொல்லார்ட் ஆட்டமிழந்தும் இருந்தார்.

spacer.png

தொடர்ந்து 8 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட கிரிக்கெட்டின் ரொனால்டோ மெஸ்ஸி என்று வர்ணிக்கப்படும் டிவிலியர்ஸும் கோலியும் களம் புகுந்தனர். 

பந்து வீச சூப்பர் ஓவரில் இதுவரை தோல்வியே தழுவாத பும்ரா.

முதல் இரு பந்துகளும் ஒரு ஓட்டங்கள். மூன்றாவது பந்திற்கு விக்கெட் காப்பாளர் பிடியெடுத்ததாக கேட்கப்பட்ட அப்பீலிற்கு நடுவர் ஆமோதிக்க டிவில்லியர்ஸ் அதனை மீள் பரிசீலனை செய்தார். 3ம் நடுவரால் அது ஆட்டமிழப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட 3 பந்துகளிற்கு 6 ஓட்டங்கள் தேவை.

நான்காம் பந்து எட்ஜ் முறையில் உயரமாக சென்று 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. அடுத்த பந்தில் ஒரு ஓட்டம். கடை பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் கோலி அதனை 4 ஓட்டங்களாக்கி வெற்றியை மீண்டும் இருக்க அணைத்துக்கொண்டார்.

பும்ரா பந்து வீசி தோற்ற முதல் சூப்பர் ஓவர் போட்டியாக இது பதிவானதுடன் 99 ஓட்டங்களில் ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்டமிழந்த 3வது வீரராக இஷான் கிஷான் பதிவானார்.

மேலும் சமநிலையில் முடிந்த போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகவும் இது பதியப்பட்டது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் அணியின் டிவிலியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
 

https://www.virakesari.lk/article/90972

Link to comment
Share on other sites

சன் ரைசர்ஸ் அணிக்கு முதல் வெற்றி: ஃபார்முக்கு திரும்பிய ரஷித் கான்; ஆபத்பாந்தவன் வில்லியம்யன்ஸ்: டெல்லி தோல்விக்கு காரணம் என்ன?

rashid-khan-kane-williamson-help-sunrisers-hyderabad-topple-delhi-capitals சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷித் கான் : படம் உதவி ட்விட்டர்
 

அபு தாபி


ரஷித் கானின் மாயஜால சுழற்பந்துவீச்சு, வில்லியம்ஸனின் ஃபிஷினிங் கேம், பேர்ஸ்டோவின் அரைசதம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்களில் தோற்கடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன்

4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்று மீண்டும் டி20 போட்டியில் தனது வழக்கமான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

1601430223756.jpg

துல்லியமான கட்டுக்கோப்பான பந்துவீச்சு

கடந்த இரு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. பேட்டிங்கில் வலிமையான வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி அணிக்கு நேற்றைய ஸ்கோர் எளிதாக அடையக் கூடிய இலக்குதான் என்றாலும் தனது வலிமையான, துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி குறைந்த ஸ்கோரை அடித்தும் வெற்றி பெற்றதற்கு ரஷித் கான், புவனேஷ்வர் பந்துவீச்சு பிரதான காரணம். அருமையான தொடக்கத்தை அளித்த பேர்ஸ்டோ, நல்ல பினிஷிங் கொடுத்த வில்லியம்ஸன் முத்தாய்ப்பு.

நிரூபித்த வில்லியம்ஸன்

1601430236756.jpg

கடந்த இரு போட்டிகளிலும் வில்லியம்ஸன் தன்னை களமிறக்காமல் இருந்தது தவறு என்பதை கேப்டன் வார்னருக்கு நேற்றைய ஒரு போட்டியில் நிரூபித்துவிட்டார். 26 பந்துகளைச் சந்தித்த வில்லியம்ஸன் 41 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் இந்த ஸ்கோரை அடைவதே கடினமாக இருந்திருக்கும்.

நடுவரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிஷ் பாண்டே ஏமாற்றம் அளித்த பின், பேர்ஸ்டோவுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தியவர் வில்லியம்ஸன்தான். ஆதலால், சன்ரைசர்ஸ் அணியின் நடுவரிசையை பலப்படுத்த வில்லியம்ஸன் அடுத்துவரும் போட்டிகளி்ல் இடம் பெறுவது சன்ரைசர்ஸ் அணிக்குமிகப்பெரிய பலமாகும்.

புவேஷ்வர் பந்துவீச்சு

பந்துவீச்சில் கடந்த இரு போட்டிகளிலும் விக்கெட் இன்றி தவித்த புவனேஷ்வர் குமார் நேற்றை ஆட்டத்தில் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். சில பந்துகள் அவருக்கே உரிய ஸ்டைலில் நன்றாக ஸ்விங் ஆகின. பிரித்வி ஷா, ஹெட்மயர் ஆகிய இரு முக்கிய விக்ெகட்டுகளை புவனேஷ்வர் வீழ்த்தினார்.

1601430260756.jpg

திணறவிட்ட ரஷித்கான்

டி20 போட்டிகளுக்கு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஷித் கான். கடந்த இரு போட்டிகளிலும் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்து முடியாமல் சிரமப்பட்ட ரஷித் கானுக்கு நேற்று நல்ல வாய்ப்பு கிடைத்தது.

ஆடுகளமும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், தனது மாயஜால சுழற்பந்துவீச்சால் டெல்லி வீரர்களை கட்டிப்போட்டார். 4 ஓவர்களை வீசிய ரஷித்கான் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்ெகட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணியின் விக்கெட் சரிவுக்கு ரஷித் கான் முக்கியக் காரணமாகும்.

கவனிக்கப்படுவாரா நடராஜன்

தமிழக வீரர் நடராஜன் தனது பந்துவீச்சால் நேற்று கவனிக்கவைத்துள்ளார். ஸ்டாய்னிஷ்க்கு அவர் வீசி 5 யார்கர்களும் அற்புதமானவை. தொடர்ந்து நடராஜன் இவ்வாறு பந்துவீசினால் பிசிசிஐயால் கவனிக்கப்படுவார்.

தோல்விக்கு காரணமென்ன

டெல்லி அணியைப் பொறுத்தவரை வலிமையான பேட்டிங் வரிசை, நடுவரிசையிலும் திறமையான வீரர்களை வைத்திருந்தும் நேற்று பேட்டிங்கில் கோட்டைவிட்டது. வழக்கம்போல் பிரித்வி ஷா அவசரப்பட்டு ஆடி விரைவாக ஆட்டமிழந்தார். தேவையில்லாத ஷாட்டை ஆடி தவண் வெளியேறினார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் கைக்கு கேட்சைக் கொடுத்துச் சென்றார்.

62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் ரிஷப் பந்த், ஸ்டாய்னிஷ், ஹெட்மயரும் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. மொத்தத்தில் பேட்டிங்கில் டெல்லி அணி சொதப்பிவிட்டது. டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 47 டாட்பந்துகளை விட்டுள்ளனர்.

1601430276756.jpg

அதாவது ஏறக்குறைய 8 ஓவர்களில் எந்தவிதான ரன்களும் அடிக்கவில்லை. இந்த மிகப்பெரிய இமாலய தவறே தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகும். டி20 போட்டிகளில் ஒவ்வொரு பந்திலும் சேர்க்க வேண்டிய நிலையில் இதுபோன்று அதிகமான டாட் பந்துகளை விடுவது பேட்டிங்கை பலவீனப்படுத்தும்.

பந்துவீச்சிலும் ரபாடா, அமித் மிஸ்ரா மட்டுமே நன்றாகப் பந்துவீசி வி்க்கெட் வீழ்த்தினர். இசாந்த் சர்மா, நார்ஜே எதிர்பார்த்த அளவுக்கு நேற்று பந்துவீசவில்லை, ரன்களையும் வாரிக் கொடுத்தனர்.

விக்கெட் சரிவு

163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பிரித்வி ஷா, தவண் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து பிரித்வி ஷா 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளே வந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யரும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ரஷித்கான் பந்துவீச்சில் 17 ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். மந்தமாக ஆடிய டெல்லி அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

1601430321756.jpg

ரஷித் கான் பந்துவீச்சை தேவையில்லாமல் ஸ்வீப் ஷாட் ஆடிய ஷிகர் தவண் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹெட்மயர், ரிஷப்பந்த் 4-வது வி்க்கெட்டுக்கு ஓரளவுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்.

நடுவரிசையும் பலீவனம்

ரஷித் கான், நடராஜனின் பந்துவீச்சை விளையாடுவதற்கு கடினமாக இருந்ததால் ரன் சேர்க்க ஹெட்மயர், ரிஷப்பந்த் திணறினர். இருப்பினும் அவ்வப்போது அடித்த பவுண்டரிகளும், சிஸ்கர்களும் ஸ்கோரை விரைவாக உயர்த்தவில்லை. 15-வது ஓவரில்தான் டெல்லி அணி 100 ரன்களை எட்டியது.

சன்ரைசர்ஸ் அணி்க்கு ஹெட்மயர் பெரும் தலைவலியாக மாறி வந்தநிலையில் 16-வது ஓவரில் புவனேஷ்குமார் அவரின் விக்கெட்டை சாய்த்தார். ஹெட்மயர் 2 சிக்ஸ் உள்பட 21 ரன்னில் வெளியேறினார். ரிஷ்ப் பந்த், ஸ்டாய்னிஷ் ஓரளவுக்கு அடித்து ஆடத் தொடங்கினர்.

1601430289756.jpg

ரஷித் கான் வீசிய 17-வது ஓவரில் ரிஷ்ப்ந்த் 28 ரன்கள் சேர்த்த நிலையில் கார்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 18-வது ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன், அருமையான யார்கர்களை ஸ்டாய்னிஷ்க்கு வீசி திணறவிட்டார், அந்த ஓவரில் கால்காப்பில் வாங்கிய ஸ்டாய்னிஷ் 11 ரன்னில் வெளியேறினார்.

அடுத்துவந்த அக்ஸர் படேல் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ரபாடா 15 ரன்னிலும், நார்ஜோ 3 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்னில் தோல்வி அடைந்தது.

நல்ல தொடக்கம்

முன்னதாக சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. வார்னர், பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்தை அளித்தனர். வார்னர் 45 ரன்கள்சேர்த்து மிஸ்ரா பந்துவீச்சில் வெளியேறினார். முதல்விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 3 ரன்னில் மிஸ்ரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

1601430305756.jpg

3-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், பேர்ஸ்டோ கூட்டணி அணியை நகர்த்திச் சென்றனர். பேர்ஸ்டோ 44 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் அப்துல் சமது களமிறங்கினார்.

அதிரடி வில்லியம்ஸன்

கடைசி நேரத்தில் வில்லியம்ஸன் சில அதிரடியான ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்து 41 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார். அப்துல் சமது 12 ரன்னிலும், அபிஷேக் ஒருரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது.

டெல்லி அணி தரப்பில் மிஸ்ரா , ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

https://www.hindutamil.in/news/sports/585104-rashid-khan-kane-williamson-help-sunrisers-hyderabad-topple-delhi-capitals-10.html

 

Link to comment
Share on other sites

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை ஈர்த்த தமிழக யோக்கர் புயல் நடராஜன்..!
வில்லியம்சன் வரவால் SRH வெற்றி.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.