Jump to content

ஐபிஎல் 2020: செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CSK VS KXIP : தொடர் தோல்வியிலிருந்து வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை

SayanOctober 4, 2020
 

 

1601833143391.jpeg


 துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது. 

 

பஞ்சாப் அணிக்காக அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 63 ரன்களை குவித்திருந்தார்.

 

இதனையடுத்து சென்னை அணி 179 ரன்களை விரட்டியது.

 

சென்னை அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வாட்சனும், டூப்ளஸியும் இணைந்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 

 

17.4 ஓவர் முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 181 ரன்களை குவித்து 14 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது சென்னை

 

http://www.battinews.com/2020/10/csk-vs-kxip.html

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமையான விளையாட்டு வாட்சனும் டூபிளசிசும்.இந்த முறையும் தோற்றால் இவங்களின் ஆட்டத்தை பார்ப்பதில்லை என்று இருந்தன் என் எண்ணத்தில் "ரன்" அள்ளிப் போட்டுட்டாங்கள்.  ........பீல்டிங்கும் சூப்பர் ........சென்னை அணிக்கு ஒரு   💐 ......!

பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி முடிவில் ராகுலுக்கு டோனி நன்றி சொன்ன மாதிரி இருந்துச்சு.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துவண்டு கிடந்த விசில் போடும் கூட்டத்துக்கு இந்த வெற்றி ஒரு கோப்பை போன்வீட்டா🤣

ஆட்டுக்குள் மாட்டை விடவில்லை. யாராவது இங்கிலாந்து உள்ளூர் T20 போட்டி அரையிறுதி பார்தீர்களா?

நொட்டிங்கம் கடைசி பந்தில் 3 ஓட்டம் எடுத்தால் வெற்றி, 2 எடுத்தால் சமநிலை எனும் நிலையில், மிட் ஓவ் நோக்கி தட்டி விட்டு ஓட, தடுப்பாளர் காலுக்கால் “போக்கு” விட்டு பந்து எல்லை கோட்டைத் தாண்டியது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி படுதோல்வி

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி படுதோல்வி
பெங்களூர் வீரர் அவுட் ஆனதை கொண்டாடும் டெல்லி வீரர்கள்

துபாய்:    

 

ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செயதது.

 

அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தை அளித்த பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி பெங்களூர் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். 

அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 23 பந்தில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 42 ரன்கள் விளாசி சிராஜ் பந்து வீச்சில் வெளியேறினார். அதேபோல் மற்றொரு வீரரான ஷிகர் தவான் 28 பந்தில் 32 ரன் குவித்து உடானா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

 

 4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். 

 

25 பந்தில் 3 பவுண்டரில் 2 சிக்சர் உள்பட 37 ரன் எடுத்த நிலையில் பண்ட் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 இக்சர்கள் உள்பட 53 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

 

இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. பெங்களூர் தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதையடுத்து, 197 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

 

4 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதேபோல் 13 ரன் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் வெளியேறினார். 

 

அடுத்துவந்த கேப்டன் விராட் கோலி சற்று நிலைத்து நின்று ஆடி 43 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் ரபாடாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 

 

இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுதோல்வியடைந்தது.

 

டெல்லி தரப்பில் அந்த அணியின் ரபாடா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.   

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/05233903/1942387/Royal-Challengers-Bangalore-Losses-by-59-runs-against.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகள் வீரரை நையாண்டி செய்த ஆர் ஜே பாலாஜி.

Link to comment
Share on other sites

 

சென்னையின் தோல்விக்கு காரணம்??
டோனியா ? கேதார் ஜாதவா??
மீண்டும் சொதப்பிய சென்னை !!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: சென்னை அணியின் ஐந்தாவது தோல்வி!

spacer.png

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியிடமும் தோல்வியைத் தழுவி தனது ஐந்தாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு (அக்டோபர் 10) துபாயில் அரங்கேறிய 25ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸைச் சந்தித்தது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கேதர் ஜாதவுக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். இதில் ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணி சென்னை அணியின் பந்து வீச்சில் திணறியது. ஆரோன் பிஞ்ச் (2 ரன்), தீபக் சாஹர் வீசிய இன்ஸ்விங்குக்கு காலியானார். தேவ்தத் படிக்கல் (33 ரன்), டிவில்லியர்ஸ் (0), வாஷிங்டன் சுந்தர் (10 ரன்) சீரான இடைவெளியில் நடையைக் கட்டினர்.

இதற்கிடையில் கேப்டன் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று போராடினார். 15ஆவது ஓவர் வரை ஆட்டம் சென்னை அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்தபோது அந்த அணி 150 ரன்களைக் கடக்குமா என்பதே கேள்விக்குறியாக தெரிந்தது.

ஆனால் கடைசி கட்டத்தில் கோலி ரன் வேட்டை நடத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். சாம் கர்ரன், ஷர்துல் தாகூர் ஓவர்களில் பந்தை எல்லைக்கோட்டுக்குப் பறக்க விட்டார். அவருக்கு ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவும் (22 ரன், 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஒத்துழைப்பு தந்தார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்தது. விராட் கோலி 90 ரன்களுடன் (52 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி 4 ஓவர்களில் மட்டும் 66 ரன்கள் திரட்டினர். சென்னை தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், சாம்கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் பிளிஸ்சிஸ் ( 8 ரன்), ஷேன் வாட்சன் (14 ரன்) இருவரும் வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். இந்தப் பேரிடியால் சென்னை அணியின் ரன்வேகம் மந்தமானது.

 

இதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், ஜெகதீசனும் ஜோடி சேர்ந்து அணியின் சரிவைத் தடுத்தனர். ஆனால் பெங்களூரு பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் திண்டாடினர். 10 ஓவர் வரை ரன்ரேட் 6-க்கும் குறைவாகவே இருந்தது.

spacer.png

ஸ்கோர் 89 ரன்களை (14.2 ஓவர்) எட்டிய போது ஜெகதீசன் (33 ரன், 28 பந்து, 4 பவுண்டரி) ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த டோனி (10 ரன்) யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் ஒரு சிக்சர் அடித்து விட்டு மீண்டும் சிக்சருக்கு முயற்சி செய்து விக்கெட்டை தாரை வார்த்தார்.

அத்துடன் சென்னை அணி முழுமையாக தடம் புரண்டது. சாம் கர்ரன் (0), ரவீந்திர ஜடேஜா (7 ரன்), பிராவோ (7 ரன்) ஆகியோரும் கைகொடுக்கவில்லை. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ரன்கள் (40 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்டுக்கு 132 ரன்னில் முடங்கியது. இதன் மூலம் பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆறாவது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். ஏழாவது லீக்கில் விளையாடிய சென்னை அணிக்கு ஐந்தாவது தோல்வியாகும்.


 

https://minnambalam.com/entertainment/2020/10/11/12/ipl-2020-news-chennai-vs-bangalore

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: முதலிடத்தில் மும்பை அணி

spacer.png

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அணிகளின் பட்டியலில் மும்பை அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்றிரவு (அக்டோபர் 11) அரங்கேறிய 27ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணியில் காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்குப் பதிலாக அலெக்ஸ் கேரி இடம்பிடித்தார். இதேபோல் ஹெட்மயர் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா (4 ரன்) கேட்ச் ஆனார். ஆனால், இந்த முறை மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் பெரிய அளவில் அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. மறுமுனையில் ரஹானே (15 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (42 ரன்), ஸ்டோனிஸ் (13 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர்.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. இந்த சீஸனில் முதன்முறையாக அரைசதம் கடந்த ஷிகர் தவான் 69 ரன்களுடனும் (52 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

spacer.png

பின்னர் 163 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்னில் ஏமாற்றினாலும் குயின்டான் டி காக்கும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து அரைசதம் விளாசி அணியை தூக்கி நிறுத்தினர். டி காக் 53 ரன்களில் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அஸ்வின் சுழலில் சிக்கினார். சூர்யகுமார் யாதவ் 53 ரன்களில் (32 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா ரன் இன்றியும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் கடைசி பகுதியில் சற்று தடுமாறிய மும்பை அணி வெற்றிக்காக கடைசி ஓவர் வரை போராட வேண்டியதாகி விட்டது.

மும்பை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் (11 ரன்), குருணல் பாண்ட்யா (12 ரன்) அவுட் ஆகாமல் நின்றனர்.

ஏழாவது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது ஐந்தாவது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. டெல்லிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.


 

https://minnambalam.com/entertainment/2020/10/12/13/ipl-mumbai-vs-delhi

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முதல் மாட்ச் ஹைதராபாத் vs ராஜஸ்தான் றோயல் மாட்ச் பார்த்திருக்க வேண்டும். கடைசி நான்கு ஓவரில் வெகு தூரத்தில் இருந்த ரன்சுக்கு  சும்மா அடிச்சு துவைச்சு கொண்டுவந்து ராஜஸ்தான் ராயல் வெற்றியடைந்தது......சூப்பர்.....!  🏏

மும்பையும் அருமையான விளையாட்டு .....! 

ம்......எல்லோரும் நல்லா ஆடுறாங்கள்....csk யை நினைக்கத்தான் கண்ணெல்லாம் வேற்குது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆரு சாமி இவரு..? கேதர் ஜாதவால் கலங்கும் சிஎஸ்கே ரசிகர்கள்..😢..😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த சென்னை!

spacer.png

 

சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு (அக்டோபர் 13) துபாயில் அரங்கேறிய 29ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸும், ஐதராபாத் சன்ரைசர்ஸும் மோதின. இதில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக தமிழக வீரர் ஜெகதீசன் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த சீசனில் சென்னை அணி முதலில் பேட் செய்வது இதுவே முதன்முறையாகும். அது மட்டுமின்றி இந்த முறை தொடக்க வரிசையிலும் மாற்றம் செய்யப்பட்டது. வாட்சன் இரண்டாவது வரிசைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து சாம் கர்ரனும், பாப் டு பிளிஸ்சிஸ்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஆனால், இந்த புதிய வியூகத்துக்கும் பலன் கிடைக்கவில்லை. பிளிஸ்சிஸ் (0) சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கினார். இதன் பின்னர் சாம் கர்ரனுடன், ஷேன் வாட்சன் இணைந்தார். கலீல் அகமதுவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விரட்டி அமர்க்களப்படுத்திய சாம்கர்ரன் (31 ரன், 21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் அவுட்டானார்.

இதைத் தொடர்ந்து வாட்சனும், அம்பத்தி ராயுடும் கைகோத்து மிடில் ஓவர்களில் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். கடினமான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த இவர்கள், ரஷித்கானின் சுழலில் சிக்ஸரைப் பறக்கவிட்டு அசத்தினர். அணியின் ஸ்கோர் 116 ரன்களாக (15.2 ஓவர்) உயர்ந்தபோது அம்பத்தி ராயுடு 41 ரன்களில் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து ஷேன் வாட்சனும் (42 ரன், 38 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். அவர் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் வீசிய புல்டாஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஸ்கோரை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். நடராஜனின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த டோனி அவரது மற்றொரு ஓவரில் 102 மீட்டர் தொலைவுக்குப் பிரமாதமான ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே நடராஜன் பழி தீர்த்துக்கொண்டார். ஆப்-சைடில் சற்று புல்டாசாக விழுந்த பந்தை டோனி (21 ரன், 13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தபோது சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்தை வில்லியம்சன் கேட்ச் செய்தார். பின்னர் இறங்கிய வெய்ன் பிராவோ டக்-அவுட்டானாலும் கடைசி ஓவரில் ஜடேஜா பவுண்டரி, சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை 160 ரன்களை கடக்க வைத்தார்.

 

20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 25 ரன்களுடனும் (10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தீபக் சாஹர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் டி.நடராஜன், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 168 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை சென்னை பவுலர்கள் சீக்கிரமாகவே வெளியேற்றினர். கேப்டன் டேவிட் வார்னர் (9 ரன்), சாம்கர்ரனின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பேர்ஸ்டோ (23 ரன்) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். இதற்கிடையே இரண்டாவது விக்கெட்டுக்கு இறங்கிய மனிஷ் பாண்டே (4 ரன்) ரன்-அவுட்டானார். ஒரு கட்டத்தில் 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தத்தளித்த ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் நம்பிக்கை கொடுத்தார். நேர்த்தியாக விளையாடி அணியைச் சரிவில் இருந்து மீட்டார். இருப்பினும் ரன் தேவை அதிகரித்துக்கொண்டே போனதால் அவரும் நெருக்கடிக்குள்ளானார். மறுமுனையில் பிரியம் கார்க் 16 ரன்னிலும், விஜய் சங்கர் 12 ரன்னிலும் வீழ்ந்தனர்.

சென்னை அணியினரை அச்சுறுத்திக்கொண்டிருந்த வில்லியம்சன்( 57 ரன், 39 பந்து, 7 பவுண்டரி) 18-வது ஓவரில் கரண் ஷர்மாவின் பந்து வீச்சை சிக்ஸருக்கு அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆனார். அதன் பிறகே சென்னை வீரர்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர். அடுத்து வந்த ரஷித்கான் 14 ரன்னில் அவுட் ஆனார். பரபரப்பான கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய மிதவேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தி சிக்கலின்றி வெற்றியை உறுதி செய்தார்.

ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்களே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. சென்னை தரப்பில் கரண் ஷர்மா, வெய்ன் பிராவோ தலா 2 விக்கெட்டும், சாம் கர்ரன், ஜடேஜா, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

எட்டாவது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். ஏற்கெனவே இதே மைதானத்தில் ஐதராபாத்திடம் 7 ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐதராபாத்துக்கு இது ஐந்தாவது தோல்வியாகும்.

 

https://minnambalam.com/entertainment/2020/10/14/4/ipl-csk-won

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய விளையாட்டில் மீனுக்கு தூண்டிலில் புழுவை கொழுவி எறிகிறதுபோல் புல்டோஸ் போல் போட்டு csk யின் 3 / 4 வீரர்களை அவுட்டாக்கி இருக்கின்றார்கள், அவர்களின் இலக்குக்கு தோனியும் தப்பவில்லை......!

மேலும் சென்னை அணி கடைசி ஓவர்கள் போடும்போது தோனி ஓவ் லைனில் பந்து வீசச்சொல்வதும் அவர்கள் wd போலாக வீசி ஓட்டங்கள் கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.....!

ஆனாலும் சென்னை நேற்று ஏமாற்றி விட்டது. நான் தோற்கும் என்றே நம்பினேன் ஆனால் சிறப்பு, மகிழ்ச்சி .....!   🏏  👍

Link to comment
Share on other sites

பெங்களூரை வென்ற பஞ்சாப்

 

Shanmugan Murugavel   / 

 

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி; றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 171/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 48 (39), கிறிஸ் மொறிஸ் ஆ.இ 25 (08), இசுரு உதான ஆ.இ 10 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: முருகன் அஷ்வின் 2/23 [4], கிறிஸ் ஜோர்டான் 1/20 [3], கிளென் மக்ஸ்வெல் 0/28 [4])

கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 177/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 61 (49), கிறிஸ் கெய்ல் 53(45), மாயங்க் அகர்வால் 45 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: நவ்தீப் சைனி 0/21 [4], கிறிஸ் மொறிஸ் 0/22 [4], இசுரு உதான 0/14 [2])

போட்டியின் நாயகன்: லோகேஷ் ராகுல்

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பெங்களூரை-வென்ற-பஞ்சாப்/44-256928

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

பெங்களூரை வென்ற பஞ்சாப்

 

Shanmugan Murugavel   / 

 

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி; றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 171/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 48 (39), கிறிஸ் மொறிஸ் ஆ.இ 25 (08), இசுரு உதான ஆ.இ 10 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: முருகன் அஷ்வின் 2/23 [4], கிறிஸ் ஜோர்டான் 1/20 [3], கிளென் மக்ஸ்வெல் 0/28 [4])

கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 177/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 61 (49), கிறிஸ் கெய்ல் 53(45), மாயங்க் அகர்வால் 45 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: நவ்தீப் சைனி 0/21 [4], கிறிஸ் மொறிஸ் 0/22 [4], இசுரு உதான 0/14 [2])

போட்டியின் நாயகன்: லோகேஷ் ராகுல்

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பெங்களூரை-வென்ற-பஞ்சாப்/44-256928

பஞ்சாப் அணிக்கு பினிசிங்கில நெடுக பிரச்சனைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கெய்லின் ஆட்டம் மிகச்சிறப்பு.......அவரின் அதிரடி மழையில் ஆறுகள் வானில் ஆறாகப் பாய்ந்தன......!  🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: கடைசி ஓவரில் வெற்றியைத் தவறவிட்ட சென்னை!

spacer.png

 

கடைசி ஓவரின் மாற்றத்தாலும், ஷிகர் தவானின் அதிரடியான சதத்தாலும் சென்னை அணி கடைசி ஓவரில் வெற்றியைத் தவறவிட்டது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 34ஆவது ஆட்டத்தில் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரண் மற்றும் பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். அந்த ஜோடியில் சாம் கர்ரண் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஷேன் வாட்சன், டூ பிளஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார்.

சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வந்த இந்த ஜோடியில் ஷேன் வாட்சன் 36 (28) ரன்களில் போல்டு ஆனார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளஸ்சிஸ் 39 பந்துகளில் தனது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய டூ பிளஸ்சிஸ் 58 (47) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டோனி 3(5) ரன்னில் கேட்ச் ஆனார்.

அடுத்ததாக ராயுடுவுடன், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடி, டெல்லி அணியினரின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். இறுதியில் ஜடேஜா 33 (13) ரன்களும், அம்பத்தி ராயுடு 45 (25) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 180 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா ரன் எதுவும் இன்றி டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் நங்கூரம் போல நிலைத்து நின்றாலும், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ரகானே ( 8 ரன்கள் ), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (3 ரன்கள்) என ஆட்டமிழந்தனர்.

 

எனினும், ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினார். இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் சதம் அடித்ததோடு டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். 19.5-ஓவரில் 185 ரன்கள் எடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது ஏழாவது வெற்றியாகும். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஆறாவது தோல்வியாகும்.

‘இந்தப் போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன்... இதனால்தான் சென்னை தன் வெற்றியைத் தவறவிட்டது’ என்ற கருத்து சென்னை ரசிகர்களுக்கு எழுந்தது.

இதற்கு சென்னை கேப்டன் டோனி, “பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால், களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்துக்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்சுகளை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார்.

எனவே, அவரது விக்கெட் மிகவும் முக்கியமானது. அதேபோல், முதல் இன்னிங்ஸுக்கும் இரண்டாவது இன்னிங்ஸுக்கும் பல்வேறு வேறுபாடு இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் (ஆடுகளம்) பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார்” என்று விளக்கமளித்துள்ளார்.

 

https://minnambalam.com/entertainment/2020/10/18/4/ipl-csk-lost-victory

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை பழி போட ஒருத்ரும் மாட்ட வில்லை.ஜெனதீசனையும் எடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஓவரில் பேர்குசனின் பந்து வீச்சில் சரணடைந்த ஐதராபாத்

சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 35 ஆவது போட்டி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

அபுதாபியில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப் ‍போட்டியில் முதலில் துடுத்பெடுத்தாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது.

கொல்கத்தா அணி சார்பில் சுப்மன் கில் 36 ஓட்டங்களையும், இயன் மோர்கன் 34 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 29 ஓட்டங்களையும், நிட்டிஸ் ராான 29 ஓட்டங்களையும், ராகுல் திரிபாதி 23 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

spacer.png

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், பசில் தம்பி, விஜய் சங்கர்  மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

164 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.

இதனால் ‍போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

ஐதராபாத்  அணி சார்பில் அதிகபடியகா ஜோனி பெயர்ஸ்டோ 36 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 29 ஓட்டங்களையும், அப்துல் சமாட் 23 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 47 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்து வீச்சில் லொக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், வருன் சக்கர்த்தி, பேட் கம்மின்ஸ், சிவம் மாவி ஆகியோர் தலா ஒவ்‍வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் முதல் விக்கெட் முதல் பந்துலேயே வீழ்த்தப்பட்டது. 

அதன்படி டேவிட் வோர்னர் லொக்கி பெர்குசனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அப்துல் சமாட் களமிறங்கி, முதல் பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்று அடுத்த பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

spacer.png

சூப்பர் ஓவரின் விதிப்படி ஐதராபாத் அணியின் இரண்டு விக்கெட்டுகளும் 2 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட கொல்கத்தாவுக்கு வெற்றியிலக்காக 3 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

‍வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா அணியின் ஆரம்ப வீரர்களாக இயன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர்.

ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள கொல்கத்தா அணியானது நான்காவது பந்து வீச்சில் வெற்றி பெற்றது.

இதேவேளை துபாயில் ஆரம்பமாகவுள்ள மற்றொரு போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.
 

 

https://www.virakesari.lk/article/92421

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்கள் ; திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்

13 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஐதராபாத்-கொல்கத்தா, மும்பை-பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிய இரு ஆட்டங்களும் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. 

spacer.png

அதிலும் மும்பை - பஞ்சாப் ஆட்டத்தின் முடிவுக்கு இரு சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டன. இதனால் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காண நேர்ந்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். 

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 35 ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாத்தும் சூப்பா் ஓவா் முறையில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வென்றது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்ங்களை எடுக்க, அடுத்து ஆடிய ஐதராபாத் அணியும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்தது. 

வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் 3 பந்துகளில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் சோ்த்தது. 

கொல்கத்தா வீரா் லொக்கி பொ்குசன் வீசிய முதல் பந்திலேயே வோர்னர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, 2 ஓட்டங்களை சோ்த்த அப்துல் சமட் 3 ஆவது பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

பின்னா் ஆடிய கொல்கத்தா 4 பந்துகளில் 3 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இயான் மோா்கன் - தினேஸ் காா்த்திக் களம் கண்ட நிலையில், ஐதராபாத் தரப்பில் ரஷித் கான் பந்துவீசினாா். 

மோா்கன் 2 ஆவது பந்தில் ஒரு ஓட்டங்களை எடுக்க, தினேஸ் கார்த்திக் 4 ஆவது பந்தில் 2 ஓட்டங்களை சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்தனா்.

spacer.png

இதன் பின்னர் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 36 ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்தது.

ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் தலா 5 ஓட்டங்களை எடுக்க ஆட்டம் மீண்டும் சமனானது.

அதன்படி வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 2 விக்கெட் இழப்புக்கு 5 ஓட்டங்களை எடுத்தது. லோகேஷ் ராகுல் 4 ஓட்டங்களுடனும், நிகோலஸ் பூரன் ஓட்டமின்றியும் ஆட்டமிழக்க தீபக் ஹூடா ஒரு ஓட்டங்களை சேர்த்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பையும் ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ஓட்டங்களை சோ்த்து போட்டியை சமன் செய்தது. டிகொக் 3 ஓட்டங்களை சோ்த்து ஆட்டமிழக்க, ரோஹித் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இதையடுத்து நடைபெற்ற 2 ஆவது சூப்பா் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ஓட்டங்களை சோ்த்தது. 

இதில் ஹாா்திக் பாண்டியா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, கிரன் பொல்லார்ட் 8 ஓட்டங்களை சேர்த்தார். 2 உதிரி ஓட்டங்கள் கிடைக்கப் பெற்றன.

பின்னா் ஆடிய பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்ப வீரராக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் ஒரு சிக்ஸா் உட்பட 7 ஓட்டங்களையும், மயங்க் அகா்வால் 2 பவுண்டரிகள் விளாசி 8 ஓட்டங்களையும் சோ்த்தனா்.

spacer.png

ஐ.பி.எல். போட்டியில் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு நேற்று கிடைத்தது. 

 

 

https://www.virakesari.lk/article/92453

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kx1p vs mi சூப்பர் ஓவர் 1 & சூப்பர் ஓவர் 2....அசத்தலான தருணங்கள்....!  🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK vs RR: தோனி இளம் வீரர்கள் குறித்து கூறியது சரியா? - ஜாதவ் மீது தொடரும் விமர்சனம்

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
Chennai failed to make Dhoni's 200th match Rajasthan won

பட மூலாதாரம், BCCI / IPL

 

சில விளையாட்டு போட்டிகள் நம்பிக்கை அளிக்கும், சில போட்டிகள் ஏமாற்றமளிக்கும், கேள்விகளை எழுப்பும். வேறு சில போட்டிகள் வியப்பளிக்கும். இவை அனைத்தையும் ஒருசேர அளிக்கும் வல்லமை மிக சில போட்டிகளுக்குத்தான் உள்ளது.

அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக திங்கட்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் லீக் போட்டியில் அப்படித்தான் நடந்தது.

சென்னை அணி இந்த தொடரில் மற்றொரு மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இம்முறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தரப்பில் அழுத்தமான கேள்விகள் மற்றும் ஏமாற்றங்கள் வெளிப்பட்டன.

இதுவரை 3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி, 8 முறை இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளது. தான் விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

வெல்ல முடியாத அணி என்று முன்பு புகழப்பட்ட சிஎஸ்கே, தொடர்ந்து அளித்து வரும் மோசமான பங்களிப்பு எதிரணி ரசிகர்களுக்கும் வியப்பையே அளித்துள்ளது.

களையிழந்த 200-வது போட்டி

ஐபிஎல் வரலாற்றில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையுடன் களமிறங்கிய தோனிக்கு மறக்கமுடியாத போட்டியாக அது அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். உண்மை தான், அவரால் மறக்கவே முடியாத போட்டியாக அமைந்தது.

டாஸ் வென்ற தோனி மீண்டும் பேட்டிங் தேர்வு செய்ய, கடந்தமுறையை போலவே இம்முறையும் பவர் பிளே ஓவர்கள் சரியாக அமையவில்லை. 

டூ பிளஸிஸ் மற்றும் வாட்சன் ஆகிய இருவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்துவிட, மற்றொரு தொடக்க வீரரான சாம் கரனால் தனது வழக்கமான அதிரடி பேட்டிங் பாணியை தொடரமுடியவில்லை.

ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

Chennai failed to make Dhoni's 200th match Rajasthan won

பட மூலாதாரம், BCCI / IPL

 

இரு முனையிலும் ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகிய இருவரும் நன்றாக பந்துவீசினர்.

இந்த தருணத்தில் சாம் கரன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் ஆட்டமிழக்க சென்னை அணி மேலும் தடுமாறியது.

தோனி 28 ரன்கள் எடுத்தார். ஜடேஜா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார்.

மீண்டும் ட்ரோல் செய்யப்படும் ஜாதவ் 

இறுதி ஓவர்களில் பேட்டிங் செய்த கேதர் ஜாதவால் ஒரு பவுண்டரி கூட அடிக்கமுடியவில்லை. 7 பந்துகளில் 4 ரன்கள்தான் எடுத்தார். அவர் கொடுத்த கேட்ச்சை ஜோஃப்ரா ஆர்ச்சர் பிடித்திருந்தால் 1 ரன்னில் ஆட்டமிழந்திருப்பார். 

காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

மீண்டும் சமூகவலைத்தளங்களில் ஜாதவ் ட்ரோல் செய்யப்படுகிறார். ஆனால் தோல்விக்கான காரணம் அவர் மட்டுமா?

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தபோதிலும், சென்னை அணியின் பேட்டிங் மிகவும் மோசமாகவும், எந்த எத்தனிப்பும் இல்லாமல் இருந்ததே 125 என்ற குறைவான ரன்களை பெற்றதற்கு முக்கிய காரணம்.

சுழல் பந்துவீச்சை சமாளிக்க ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற வித்தியாசமான ஷாட்கள் எதையும் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் முயலவில்லை.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் சென்னை ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை இருந்தது. 

ஆனால் குறைந்த இலக்கு என்பதாலும், ஜோஸ் பட்லரின் சிறப்பான பேட்டிங்காலும், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் எளிதாக வென்றது.

48 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த பட்லர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

எடுபடாத சிஎஸ்கே பந்துவீச்சு 

சாவ்லா, ஜடேஜா போன்ற சென்னையின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அவர்கள் பந்துவீசிய சமயத்தில் ஆடுகளம் பெரிய அளவில் சாதகமாக இல்லாததால் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

Chennai failed to make Dhoni's 200th match Rajasthan won

பட மூலாதாரம், BCCI / IPL

 

போட்டி முடிந்தவுடன் பேசிய தோனி, தாங்கள் பந்துவீசும்போது சுழல் பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இல்லை என்று குறிப்பிட்டார்.

இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கபடுவதில்லை என்று கூறப்படுவதற்கு 'ஒருவேளை இம்முறை சில இளம்வீரர்களிடம் தேவைப்படும் தீப்பொறி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இனி வரும் போட்டிகளில் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாட வாய்ப்பளிக்கப்படும்' என்று கூறினார்.

தோனி கூறியது சரியா?

இது குறித்து சமூகவலைதளத்தில் அதிக அளவில் கேள்விகள் எழுப்பப்பட்டன. சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஜாதவ் தொடர்ந்து விளையாடி வருவது குறித்தும், ஒரு போட்டிக்கு பிறகு வாய்ப்பளிக்கப்படாத தமிழக வீரர் ஜெகதீசன் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தோனி கூறியது மற்றும் அவரின் முடிவுகள் குறித்த விமர்சனங்கள் குறித்து கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ரகுராமன் பிபிசி தமிழிடம் பேசினார்.

''தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது பற்றி கூறியது ஒரு வரிதான். அது சிலரால் மிகைப்படுத்தப்படுகிறது என்று எண்ணுகிறேன்.

Chennai failed to make Dhoni's 200th match Rajasthan won

பட மூலாதாரம், BCCI / IPL

 

ஆனால் குறைந்த பந்துகளில் 33 ரன்கள் எடுத்த ஜெகதீசன் ஒரு போட்டிக்கு பிறகு ஏன் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறித்தும், ஜாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்தும் தோனி தான் விளக்கவேண்டும்.

நிச்சயம் அதற்கு வலுவான காரணம் இருக்கலாம். ஆனால் தற்போது தொடர்ந்து தோல்விகள் ஏற்படுவதால் அவரது முடிவுகள் மற்றும் தலைமை விமர்சனத்துக்குள்ளாகிறது.

இதே அணி வெற்றி பெற்றால், இவை குறித்து பெரிதாக கேள்விகள் எழாது. இனி சிஎஸ்கே அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும். ஆனால் அது மிகவும் சிரமம்'' என்று ரகுராமன் குறிப்பிட்டார்.

2020 ஐபிஎல் தொடரில், இதுவரை தான் விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே சென்னை அணி வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிளே ஆஃப் சுற்றில் நுழைவது குறித்த கணக்கையும், விவாதத்தையும் சிஎஸ்கே ரசிகர்கள் தொடங்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில் வெல்வது மட்டுமல்ல, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலையில் அந்த அணி உள்ளது.
 

 

https://www.bbc.com/tamil/sport-54610459

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் அனி இந்த முறைதான் ஒழுங்கான வெற்றியை பெற்றிருக்கு.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.