Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

DC vs KXIP: 2 நாள் இடைவெளியில் 2 சதமடித்த ஷிகர் தவான் - ஆனாலும் கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் டெல்லி கேபிட்டல்ஸ் தோற்றது ஏன்?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
IPL 2020: Punjab Dhawan's innings, Delhi Capitals

பட மூலாதாரம், BBCI / IPL

 

ஐபிஎல் போட்டிகளில் ஷிகர் தவான் தனது முதல் சதத்தை விளாச 13 ஆண்டுகள் ஆனது. ஆனால் இரண்டாவது சதமடிக்க வெறும் இரண்டு நாட்கள் இடைவெளி மட்டும்தான் தேவைப்பட்டது. 

கடந்த சனிக்கிழமையன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் சத்தத்தை பதிவு செய்த ஷிகர் தவான் நேற்றைய தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சதமடித்து அசத்தினார். ஆனால் அவரது அணி வெற்றி பெறவில்லை. 

புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கிறிஸ் கெயில் வருகைக்கு பிறகு யானை பலத்தை பெற்றுள்ளது, 

புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்த பெங்களூரு அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்திய பஞ்சாப் அணி, கடந்த ஞாயிற்று கிழமை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களை சந்தித்து வென்று சாதித்தது. நேற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியையும் வீழ்த்தி இருக்கிறது. 

இனி அவ்வளவுதான் என கருதப்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீனிக்ஸ் பறவையை போல எழுந்து வந்து மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து வென்று புள்ளிபட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்திருக்கிறது. 

இது எப்படி சாத்தியமானது?

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ரிஷப் பந்த், ஹெட்மேயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அந்த அணியின் துருப்புசீட்டு பந்துவீச்சாளர் அன்ரிச்சுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. 

IPL 2020: Punjab Dhawan's innings, Delhi Capitals

பட மூலாதாரம், BCCI /IPL

 

டெல்லி அணியில்  ஷிகர் தவான் சதமடித்தார். ஆனால் அந்த அணி 20 ஓவர்களில் குவித்த ரன்கள் 164 ரன்கள் மட்டுமே. தவானை தவிர  மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து  59 பந்துகளில் 58 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் ஷமி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஹெட்மேயர், ஸ்டாய்னிஸ், பிரித்வி ஷா என அதிரடி பட்டாளம் இருந்தபோதிலும் அவர்களால் மிகப்பெரிய ரன்களை குவிக்க முடியவில்ல. 

பஞ்சாப் அணி சேசிங் செய்தபோது அந்த அணிக்கு இதுவரை நன்றாக விளையாடி வந்த தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

ஆனால் கிறிஸ் துஷார் தேஷ்பாண்டே ஓவரில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசித்தள்ளினார். நான்கு ஓவர்கள் முடிவில் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி தேஷ்பாண்டே வீசிய ஐந்தாவது ஓவரில் மட்டும் 26 ரன்கள் விளாசியது. அந்த ஒரே ஓவரின் முடிவில்  ஆட்டம் பஞ்சாப் பக்கம் நகரத்துவங்கியது. 

கெயிலை ரவிச்சந்திரன் அஷ்வின் வீழ்த்தினார். ஆனால் கெயில் விட்ட இடத்தில்  இருந்து மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் வெளுத்துக்கட்டத் துவங்கினார். அவர் 28 பந்துகளில் ஆறு பௌண்டரி மூன்று சிக்ஸர்  விளாசி அரை சதமடித்து ரபாடா பந்தில் அவுட் ஆனார்.  

காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பஞ்சாப் அணிக்கு இதுவரை பேட்டிங்கில் சோபிக்காமல் இருந்த மேக்ஸ்வெல் நேற்று ஓரளவு ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணியின் ரன் குவிக்கும் வேகத்தை பார்க்கும்போது 16, 17 ஓவர்களிலே சேஸிங்கை முடித்துவிடும் என்பது போன்ற சூழல் இருந்தது. ஆனால் மேக்ஸ்வெல்லை ரபாடா வீழ்த்தியதும் ஒரு சிறு பதற்றம் உருவானது. ஆனால் ஜேம்ஸ் நீஷம், தீபக் ஹூடா இணை 19வது ஓவர் முடிவில் இலக்கை எட்டி வென்றது. 

பஞ்சாப் அணியில் மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடிய விதம் அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் வென்றாலும் தவானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கபப்ட்டது. 

இந்த போட்டியில் வென்றால் டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்ற சூழல் இருந்த நிலையில், மும்பை மற்றும் டெல்லி அணிகளின் சமீபத்திய தோல்விகள் இந்த ஐபிஎல்லில் இன்னும் ஏதேனும் திருப்புமுனை இருக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

 

https://www.bbc.com/tamil/sport-54625576

 

Link to post
Share on other sites
 • Replies 84
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பஞ்சாப் அணிக்கு பினிசிங்கில நெடுக பிரச்சனைதான்.

ராயுடு – ப்ளஸிஸ் கலக்கல்; வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ்     கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடர் கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் இன்று (

CSK VS KXIP : தொடர் தோல்வியிலிருந்து வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை SayanOctober 4, 2020      துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய பெங்களூரு!

spacer.png

 

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் 13ஆவது ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய (அக்டோபர் 21) 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

அபுதாபியில் உள்ள சேக் சையீது மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மார்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர்.

பெங்களூரு அணியின் அனல் பறக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் தடுமாறினர். பவர்பிளே முடிவதற்குள்ளாகவே கொல்கத்தா அணி 14 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

 

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிகக் குறைந்த ரன் வேகத்தில் கொல்கத்தா அணி திண்டாடியது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயன் மார்கன் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றார். இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 85 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, எந்த சிரமமும் இன்றி கொல்கத்தா பந்து வீச்சை எதிர்கொண்டது. 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

https://minnambalam.com/entertainment/2020/10/22/6/ipl-kolkatta-vs-delhi

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 கொல்கொத்தா அணி ....3 ஓட்டங்கள்  3 விக்கட்டுகள்  13 பந்துகள்....... சூப்பர் .....!  🏏

நேற்று கோலி ஒரே சந்தோசம்தான்.  Gurkeerat Singh நாலு நாலாக அடிக்க கோலி அதை ரசித்தது நன்றாக இருந்தது.......!  😂 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத்!

 

spacer.png

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய (அக்டோபர் 22) 40ஆவது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். ஜேசன் ஹோல்டர் வீசிய 4வது ஓவரில் ராபின் உத்தப்பா (19 ரன்கள்) ரன் அவுட் ஆனார். அடுத்த விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

ரஷீத் கான் வீசிய 13ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் (30 ரன்கள்) போல்டு ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 9 ரன்களில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் 19 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் அணியின் ரன் வேகம் குறைந்தது.

 

ரியான் பராக் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. ராகுல் திவதியா (2 ரன்கள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் (16 ரன்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் (4) மற்றும் பேர்ஸ்டோ (10) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

எனினும், அடுத்து விளையாடிய மணீஷ் பாண்டே ரன்களைக் குவிக்க தொடங்கினார். 8 சிக்சர்களையும் 4 பவுண்டரிகளையும் அவர் விளாசினார். ஆட்டத்தின் இறுதி வரை விளையாடிய அவர் 83 (47 பந்துகள்) ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 52 (51 பந்துகள் 6 பவுண்டரிகள்) எடுத்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

18.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு ஐதராபாத் அணி 156 ரன்களை எடுத்தது. இதனால் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வெற்றிப் பட்டியலில் எட்டு புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது ஐதராபாத்.
 

 

https://minnambalam.com/entertainment/2020/10/23/16/8-wickets-rajasthan-vs-hyderabad

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

☺️..😊

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தோனி தலைமையிலான சென்னையை நிலைகுலைய வைத்த மும்பை: 10 விக்கட்டுகளால் அபார வெற்றி

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பத்து விக்கட்டுகளால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி  அபார வெற்றி பெற்றுள்ளது.

ஷார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய ஐ.பி.எல் தொடரின் 41-வது லீக் போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

spacer.png

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்னயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 ரிக்கட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில், 115 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி  ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின்  அதிரடி ஆட்டத்தில் 116 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் வீகொக் ஆட்டம் இழக்காது 46 ஓட்டங்களையும், இஷான் கிஷான் ஆட்டம் இழக்காது 68 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

இந்தத் தோல்வியின் மூலம்   ஐ .பி.எல் இன் இந்த தொடரில் இருந்து  சென்னை அணி வெளியேறியது. அதேவேளையில், மும்பை அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது

 

https://www.virakesari.lk/article/92840

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

127 ஓட்டங்களை கூட பெற முடியாது மண்டியிட்ட ஐதராபாத்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 43 ஆவது ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். 

சந்தீப் சர்மா வீசிய 5 ஆவது ஓவரில் மந்தீப் சிங் 17 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 20 ஓட்டங்களுடன் ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ராஷித் கான் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் 27 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். 

spacer.png

இதற்கிடையில் மெக்ஸ்வெல் (12 ஓட்டங்கள்), தீபக் ஹோடா( டக்கவுட்), கிறிஸ் ஜோர்தன் (7 ஓட்டங்கள்), முருகன் அஸ்வின்(4 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் அணியின் ஓட்ட வேகம் கணிசமாக குறைந்தது.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை எடுத்தது. 

நிக்கோலஸ் பூரன் 32 ஓட்டங்களுடனும் ரவி பிஷ்னோய் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இதனை தொடர்ந்து 127 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடியது.

அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வோர்னர் மற்றும் பெயர்ஸ்டோ அதிரடியாக விளையாடினர்.  எனினும் வோர்னர் 35 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  அவருடன் சேர்ந்து விளையாடிய பெயர்ஸ்டோ 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

spacer.png

அதன்பின் மணீஷ் பாண்டே (15), அப்துல் சமது (7), விஜய் சங்கர் (26), ஹோல்டர் (5), ரஷீத் கான் (0), சந்தீப் சர்மா (0), கார்க் (3) மற்றும் அகமட் (0)  ஆகியோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனால் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 12 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
 

https://www.virakesari.lk/article/92903

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சென்னை வெற்றி.மும்பை தோல்வி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பெங்களூரின் பிளேஆஃப்ஸ் வாய்ப்பைத் தள்ளிவைத்த சென்னை!

spacer.png

 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபியின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. பேட்டிங் தேர்வு செய்தது.

விராட் கோலி 50 ரன்களும், டி வில்லியர்ஸ் 39 ரன்களும் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது.

பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.

 

சென்னை அணி 5.1 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 25 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். அடுத்து டோனி களம் இறங்கினார்.

ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ருத்துராஜ் கெய்க்வாட் 51 பந்தில் 65 ரன்களும், எம்எஸ் டோனி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த தோல்வியால் ஆர்சிபி-யின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.

 

https://minnambalam.com/public/2020/10/25/40/ipl- chennai-vs-bengaluru-playoff

 

spacer.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் : ராஜஸ்தானுக்கு இது 5வது வெற்றி!

பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.

spacer.png

அபு தாபியில் இன்று நடை பெற்ற  ஐபிஎல் தொடரின் 45-வது லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் குயின்டான் டி காக், இஷான் கிஷன் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.

மும்பை இந்தியன்ஸ் 12.2 ஓவரில் 96 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, டி காக் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 37 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்களாக  60 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

image

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 

ராஜஸ்தானின் வீரர்களாக  ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து 44 ஓட்டங்களை  எடுத்திருந்த நிலையில் ராபின் உத்தப்பா ஆட்டம் இழந்திருந்தார்.

இதனையடுத்து பென்ஸ்டோக்சுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஸ்டோக்ஸ் 107 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 54 ஓட்டங்களையும், அணிக்கு பெற்று கொடுத்தனர்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 196 ஓட்டங்களை குவித்து அபார வெற்றி பெற்றது. 

 ஸ்டோக்ஸ் சதமடித்ததுடன் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் பெற்ற 5வது வெற்றியாகவும் இது பதிவாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸை பொருத்தவரை பாட்டின்சன் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டது. 

 

 

https://www.virakesari.lk/article/92976

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தாவை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய பஞ்சாப்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 46 ஆவது லீக் ஆட்டம் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை எடுத்தது. 

அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57(45) ஓட்டங்களை எடுத்தார். 

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹட் ஷமி 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் ஜோர்தன, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெக்ஸ்வெல் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். 

சிறப்பான ஆரம்பத்தை தந்த இந்த ஜோடியில் கே.எல்.ராகுல் 28(25) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மந்தீப் சிங்குடன், அதிரடி வீரர் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். 

அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் மந்தீப் சிங், கிறிஸ் கெயில் ஆகியோர் தங்களது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினர். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி ஆட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. வெற்றிபெற 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் கிறிஸ் கெயில் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியில் சிறப்பாக ஆடிய மந்தீப் சிங் 66(56) ஓட்டங்களுடனும், நிகோலஸ் பூரன் 2(3) ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இறுதியில் பஞ்சாப் அணி 18.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. 

spacer.png

https://www.virakesari.lk/article/93051

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கெய்ல் நெவர் பெய்ல் ....... the boss  25 பந்துகளில் 51 ஓட்டங்கள்......அசத்தல்.....!    🏏 

Edited by suvy
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

88 ஓட்டங்களினால் டெல்லியை வீழ்த்திய ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணி 88 ஓட்டங்களினால் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற 47 ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

அதன்படி டேவிட் வோர்னரும், விருத்திமான் சஹாவும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித் வோர்னர் ஆரம்பித்திலிருந்தே அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டார். ரபடாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விரட்டியடித்து அதிரடி காட்டினார்.

25 பந்துகளில் தனது 47 ஆவது அரைசதத்தை பூர்த்தியும் செய்தார்.

spacer.png

அதனால் முதல் 6 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களை குவித்தது. 

வேர்னரின் அதிரடியால் ரன்ரேட் 10 ஓட்டங்களுக்கு மேலாக எகிறியது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 107 (9.4 ஓவர்) எட்டிய போது வோர்னர் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மனிஷ் பாண்டே களமிறங்கினார்.

வோர்னருக்கு பிறகு ரன்விகிதத்தை உயர்த்தும் பொறுப்பை கையில் எடுத்து கொண்ட விருத்திமான் சஹாவும், டெல்லி அணியின்பந்து வீச்சுகளை பந்தாடினார்.

எனினும் சதத்தை நோக்கி முன்னேறிய விருத்திமான் சஹா 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை குவித்தது. 

இந்த தொடரில் ஐதராபாத் அணியின் அதிகபட்சமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 

மனிஷ் பாண்டே 44 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் (0) முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் (5 ஓட்டம்) வெளியேறினார். 

இந்த சரிவில் இருந்து டெல்லி அணியால் இறுதிவரை நிமிரவே முடியவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (7 ஓட்டம்), ஹெட்மயரும் (16 ஓட்டம்) சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 36 ஓட்டங்களையும், ரஹானே 26 ஓட்டங்களையும் எடுத்தனர்.

spacer.png

முடிவில் டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 88 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

ஐதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் ரஷித்கான் 4 ஓவர்களில் 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சண்டிப் சர்மா, நடராஜன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், சபாஷ் நதீம், ஜோசன் ஹோல்டர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

 

https://www.virakesari.lk/article/93118

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை

பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். தொடரின்  48 ஆவது லீக் ஆட்டம்  நேற்றைய தினம் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே அபுதாபியில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பிலிப் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். 

ஜோஸ் பிலிப் 33(24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 9(14) ஓட்டங்களுடனும், டி வில்லியர்ஸ் 15(12) ஓட்டங்களுடனும், ஷிவம் டூப் 2(6) ஓட்டத்தையும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

spacer.png

மறுமுனையில் அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த நிலையில், 74(45) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கிறிஸ் மொரிஸ் 4(2) ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வொஷிங்டன் சுந்தர் 10(6) ஓட்டங்களுடனும், குர்கீரத் சிங் 14(11) ஓட்டங்களையும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், போல்ட், ராகுல் சாஹர், பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 165 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிகொக் 18(19) மற்றும் இஷான் கிஷன் 25(19) ஓட்டங்களையும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. 

இந்நிலையில் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார்.

மறுமுனையில் சவுரப் திவாரி 5(8) ஓட்டம், குருனால் பாண்டியா 10(10) ஓட்டம், ஹர்திக் பாண்டியா 17(15)ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும்  சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடி 43 பந்துகளில் 79 ஓட்டங்களை குவித்தார். 

இறுதியாக 19.1 ஓவர்களில் 166 ஓட்டங்களை குவித்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

spacer.png

 

https://www.virakesari.lk/article/93183

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜடேஜாவின் இறுதி சிக்ஸருடன் கலைந்தது கொல்கத்தாவின் கனவு

ஐ.பி.எல். போட்டியில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.

துபாயில் நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் நிட்டிஷ் ரானா 61 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

spacer.png

173 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்கை கடந்தது.

இறுதிப் பந்தில் ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையிருந்தபோது ஜடேஜா சிக்ஸரை விளாசித் தள்ளினார்.

spacer.png

சென்னை அணி சார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களை குவித்தார்.

இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் பிளே-ஒப் சுற்றுக்கான வாய்ப்பு மழுங்கடிக்கப்பட்டது.
 

 

https://www.virakesari.lk/article/93271

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெங்களூருவை வீழ்த்தி முன்னேறியது ஐதராபாத்

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 52 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

சார்ஜாவில் நேற்று ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி ஐதராபாத்தின் பந்து வீச்சுகளில் திணறிப்போனது. ஆரம்ப வீராக களமிறங்கிய தேவ்தத் பட்டிக்கல் (5 ஓட்டம்) விராட் கோலி (7 ஓட்டம் என சண்டிப் சர்மாவின் பந்து வீச்சுகளில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த டி வில்லியர்ஸ் (24 ஓட்டங்களுடன்) ஆட்டமிழந்து வெளியேறினார். பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணமே இருந்தது. 

அதனால் அந்த அணியின் ஓட்ட வேகம் மந்த கதியில் சென்றது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது.

பெங்களூரு அணி சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஜோஷ் பிலிப் மாத்திரம் அதிகபடியாக 32 ஓட்டங்களை எடுத்தார்.

ஐதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் சண்டிப் சர்மா மற்றும் ஹோல்டர் தலா இரு விக்கெட்டுகளையும், நடராஜன், நதீம் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 121 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் முதல் விக்கெட் 10 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

டேவிட் வோர்னர் 8 ஓட்டங்களில் வொஷிங்டன் சுந்திரின் பந்து வீச்சில் உதானவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டேயுடன் விருத்திமன் சஹா ஜோடி சேர்ந்து சற்று நேரம் நிலைத்தாடினார்.

எனினும் சஹா 39 ஓட்டங்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டேவின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தாலும், 26 ஓட்டங்களில் பிடிகொடுத்து அவரும் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் (8 ஓட்டங்கள்), அபிஷேக் சர்மா(8 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. 

இறுதியாக ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட  121 ஓட்டத்தை எடுத்து வெற்றி பெற்றது. 

ஜேசன் ஹோல்டர் ஓட்டங்களுடனும் மற்றும் அப்துல் சமத் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

spacer.png

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.

 

https://www.virakesari.lk/article/93362

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானை வெளியேற்றியது கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 60 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

spacer.png

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் ஆரம்பமான 54 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ரோயல்சும் மோதின. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, களத்தடுப்பை தேர்வு செய்ய கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா அணி 2 ஆவது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. நிதிஷ் ரான எதுவித ஓட்டமின்றி ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் பிடிகொடுத்து வெளியேறினார்ஆனார். 

இதன் பின்னர் சுப்மான் கில்லும், ராகுல் திரிபாதியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஓட்ட எண்ணிக்கை 73 எட்டிய போது சுப்மான் கில் 36 ஓட்டங்களில் (24 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 3 ஆவது விக்கெட்டுக்கு வந்த சுனில் நரேன் டக்கவுட்டுடன் ஆட்டமிழக்க, திரிபாதி 39 ஓட்டங்களுடனும் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக்கவுட்டுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் கொல்கத்தா அணி 99 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் பின்னர் அணித் தலைவர் இயான் மோர்கனும், ஆந்த்ரே ரஸல்லும் அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் மோர்கன் 2 பவுண்டரி, 2 சிக்சர்களை அடித்துத் தள்ளினார்.

spacer.png

சிறிது நேரமே தாக்குப் பிடித்து ஆடினாலும் ரஸல் 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 25 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய பேட் கம்மின்ஸுடன் இணைந்து மோர்கன் அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

குறிப்பாக பென் ஸ்டோக்சின் ஒரு ஓவரில் மோர்கனும், கம்மின்ஸும் இணைந்து 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் தெறிக்க விட்டனர். 

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை கடைசி வரை துவம்சம் செய்த மோர்கன் கடினமான வெற்றியிலக்கை அடைவதற்கு வித்திட்டார். 

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை குவித்தது.

மோர்கன் 35 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களுடனும், நாகர்கோட்டி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

192 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி சிக்ஸருடன் ஓட்ட கணக்கை அட்டகாசமாக தொடங்கியது. எனினும் அதிரடி காட்ட வேண்டிய இக்கட்டான நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

உத்தப்பா (6 ஓட்டம்), பென் ஸ்டோக்ஸ் (18 ஓட்டம்), ஸ்டீவன் ஸ்மித் (4 ஓட்டம்) ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் வரிசையாக வீழ்த்தினார்.

spacer.png

அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணியால் வெற்றியின் இலக்கை எட்டுக் கூட பார்க்க முடியவில்லை.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 60 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே-ஒப் சுற்றுக்கான வாய்ப்பு கைநழுவிப் போனதுடன், கொல்கத்தா அணி வாய்ப்பினை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
 

 

https://www.virakesari.lk/article/93434

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: வெற்றியுடன் விடைபெற்ற சென்னை அணி!

 

spacer.png

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற போட்டியில் சென்னை அணியுடன் மோதிய பஞ்சாப் அணி தோல்வி அடைய, வெற்றியுடன் இந்த ஐபிஎல் விடைபெற்றது சென்னை அணி.

ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.

5.2 ஓவரில் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்கோர் 62 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறி்ஸ் கெய்ல் (12), நிக்கோலஸ் பூரன் (2) ஆகியோரை இம்ரான் தாஹிர் வெளியேற பஞ்சாப் அணி 72 ரன்னுக்குள் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 120 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

 

மந்தீப் 14 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தாலும் தீபக் ஹூடா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணிக்கு சற்று நம்பிக்கையை அளித்தார். அவர் 26 பந்தில் அரைசதம் அடித்ததால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 150 ரன்னை தாண்டியது. பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 30 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

154 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் டாஸ் சுண்டிய போது வர்ணனையாளர் டேனி மோரிஸ்சன், “சிஎஸ்கேவுக்கான கடைசி போட்டியாக இது இருக்குமா?” என்று டோனியை பார்த்து கேட்டார்.

அதற்கு எம்.எஸ். “ டோனி நிச்சயமாக இல்லை! (Definitely Not!) ” எனப் பதில் அளித்தார். ஆக, எம்.எஸ் டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
 

https://minnambalam.com/entertainment/2020/11/01/55/ipl-csk-won-the-match

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தோல்வியடைந்தாலும் டெல்லியுடன் பிளே-ஒப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகளினால் வீழ்த்தி, டெல்லி அணி பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. 

இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்ற 55 ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தல‍ைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூ அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பெங்களூருக்கு வழங்கியது.

அதன்படி ஜோஷ் பிலிப்பும், தேவ்தத் படிக்கல்லும் பெங்களூரு அணியின் ஆரம்ப வீரர்களாக களம் புகுந்தனர். 

பிலிப் 12 ஓட்டங்களில் ரபடாவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 2 ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கி துடுப்பெடுத்தாட, சீரான வேகத்தில் ஓட்ட எண்ணிக்கை நகர்ந்தது. 

எனினும் விராட் கோலி அஸ்வினின் சுழலில் சிக்கி 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அஸ்வின் பந்தில் கோலி ஆட்டம் இழந்தது இதுவே முதல் முறையாகும்.

இதன் பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸுடன் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடிய படிக்கல் தொடரில் 5 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

spacer.png

 எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 112 ஓட்டங்களை எட்டியபோது அவரும் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிறிஸ் மோரிசும் அதே ஓவரில் எதுவித ஓட்டமின்றி விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஷிவம் துபே 17 ஓட்டங்களையும் டிவில்லியர்ஸ் 35 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி சார்பில் பந்து வீச்சில் நோர்டியா 3 விக்கெட்டுகளையும், ரபடா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

153 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை இலக்கை நோக்கி டெல்லி விளையாடியது. 

தொடக்க வீரர் பிரித்வி ஷா 9 ஓட்டத்துடன் விரைவில் ஆட்டமிழந்தார். எனினும் ஷிகர் தவானும், ரஹானேவும் கூட்டணி அமைத்து வேகமாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்தனர்.

அதனால் டெல்லி அணி 12.1 ஓவர்களில் 100 ஓட்டங்களை பெற்றது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி விரைவாக வெற்றி இலக்கை எட்டிவிடும் என்றுத் தோன்றியது.

எனினும் 12.4 ஆவது ஓவரில் தாவன் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அணியின் ஓட்ட வேகம் குறைந்தது.

தவானுக்கு அடுத்து வந்த ஸ்ரேயஸ் அய்யர் 7 ஓட்டங்களுடனும், ரஹானே 60 ஓட்டங்களுடனும், ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனால் டெல்லி அணி 17.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும் இதன் பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த், மார்கஸ் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தாட 19 ஓவர்களில் டெல்லி அணி பெங்களூரு நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

8 ஆவது வெற்றியை ருசித்த டெல்லி அணி அடுத்த பிளே-ஒப் சுற்றுக்கு அடியெடுத்து வைத்ததுடன் புள்ளி பட்டியலில் 2 ஆவது இடத்தையும் பிடித்தது. 

நாளை மறுதினம் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை அணியை டெல்லி மோதும்.

டெல்லியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணியும் பிளே-ஒப் வாய்ப்பை வசப்படுத்தி விட்டது. 

spacer.png

அதாவது 17.3 ஓவருக்குள் டெல்லி அணி இலக்கை எட்டியிருந்தால் ரன்ரேட்டில் பெங்களூரு அணி, கொல்கத்தாவுக்கு கீழ் சென்றிருக்கும். ஆனால் டெல்லி அணி 19 ஆவது ஓவரில் வெற்றியை பெற்றமையினால் பெங்களூரு அணி (14 புள்ளி), ரன்ரேட்டில் கொல்கத்தாவை விட (14 புள்ளி) முந்தியே உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி, மும்பையிடம் தோற்றால் கொல்கத்தாவுக்கு ‘பிளே-ஒப்’ அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐதராபாத் வெற்றி கண்டால் 4 ஆவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
 

 

https://www.virakesari.lk/article/93509

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். 2020: இறுதி லீக் போட்டியில் சன்றைசர்ஸ் அபார வெற்றி!

spacer.png

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் 56ஆவதும் இறுதியுமான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டி, சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றதுடன் இதில் 10 விக்கெட்டுகளால் சன்றைசர்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்தப்போட்டியில், சன்றைசர்ஸ் அணி நாணாயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 150 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய சன்றைசர்ஸ் அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ரித்தினம் சகா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தில் வெற்றியை சுவீகரித்தது.

இதில், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களையும் சகா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முப்பை இந்தியன்ஸ், டெல்லி ஹப்பிடல்ஸ், சன்றைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

அரையிறுதிப் போட்டி நவம்பர் ஐந்தாம் திகதி ஆரம்பமாகின்றது.

 

http://athavannews.com/ஐ-பி-எல்-2020-இறுதி-லீக்-போட்ட/

Edited by கிருபன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஐ.பி.எல். 2020: இறுதி லீக் போட்டியில் சன்றைசர்ஸ் அபார வெற்றி!

நடராஜனுக்காக சன்ரைசஸ் இறுதிப் போட்டிக்கு போக வேண்டுமென்று விரும்பினேன்.
சந்தோசம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறுதி அட்டவணை 

spacer.png

 

Play-offs

spacer.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிளே-ஒப் சுற்றின் முதல் போட்டி இன்று; மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள டெல்லி

ஐ.பி.எல். தொடரில் இன்று ஆர்பமாகும் பிளே - ஒப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

8 அணிகள் பங்கு பற்றிய இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.

இந் நிலையில் துபாயில் இன்று நடக்கும் பிளே - ஒப் சுற்றின் முதல் போட்டியில் தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இடங்களை பிடித்த மும்பை அணியும் டெல்லி அணியும் மோதவுள்ளன. 

9 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்த மும்பை அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை அணி 6 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

spacer.png

இதேவேளை டெல்லி அணி முதல் 9 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று ஆரம்பத்தில் வீறு நடைபோட்டது. எனினும் அதன் பிறகு வரிசையாக நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியமையினால் பிளே-ஒப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதே கேள்விக்குறியானது. 

எவ்வாறெனினும் இறுதி லீக்கில் பெங்களூருவை தோற்கடித்து 8 வெற்றிகளுடன் பிளே-ஒப் சுற்றில் கால்பதித்தது.

தற்போது விளையாடும் 8 அணிகளில் ஐ.பி.எல்.-ல் இறுதிசுற்றை எட்டாத ஒரே அணி டெல்லி தான். அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டி வரலாறு படைக்க அருமையான வாய்ப்பு டெல்லிக்கு கனிந்துள்ளது. 

spacer.png

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த இரண்டு லீக் போட்டிகளிலும் மும்பை அணி 9 விக்கெட் மற்றும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. 

இதில் ஒரு போட்டியில் டெல்லியை வெறும் 110 ஓட்டங்களில் சுருண்டது.

இப் போட்டியானது துபாயில் இன்று மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறாது. 

அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது தோல்வி அடையும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் (ஐதராபாத்- பெங்களூரு) வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்றில் மோதும்.
 

 

https://www.virakesari.lk/article/93695

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை துவம்சம் செய்து ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த மும்பை

டெல்லி அணியை 57 ஓட்டங்களினால் தோல்வியடையச் செய்து, மும்பை அணியானது ஆறாவது முறையாகவும் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. 

இதில் நேற்றிரவு துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியானான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மும்பைக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மாவும், குயின்டான் டிகொக்கும் களமிறங்கினர்.

ஓட்ட குவிப்பினை முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியுடன் அட்டகாசமாக தொடங்கியபோதும், 2 ஆவது ஓவரில் அஸ்வின் சுழலில் ரோகித் சர்மா டக்கவுட்டுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

2 ஆவது விக்கெட்டுக்கு டிகொக்குடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ஓட்டங்கள‍ை குவித்தது. ஓட்ட எண்ணிக்கை 78 ஓட்டங்களாக உயர்ந்த போது குயின்டான் டிகொக் 40 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் நடப்பு தொடரில் 4 ஆவது அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த பொல்லார்ட்  அஸ்வின் சுழலில் சிக்கி எதுவித ஓட்டமுமின்றி பெவிலியன் திரும்பினார். 

இதனால் மும்பை அணி 12.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களை குவித்து தடுமாறியது.

இந்த சூழலில் இஷான் கிஷனும், குருனல் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். எனினும் ஓரிரு ஓவர்களில் குருனல் பாண்டியா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து இஷான் கிஷனும், ஹர்திக் பாண்டியாவும் கைகோர்த்து இறுதி கட்டத்தில் வான வேடிக்கை காட்டினார்.

ரபடா, அன்ரிச் நார்ட்ஜேவின் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா தலா 2 சிக்சர்களை தெறிக்க விட்டு அசத்தினார். இதன் பின்னர் கடைசி பந்தில் இஷான் கிஷன் சிக்ஸரோடு மும்பை இந்தியன்ஸ் அணி 200 ஓட்டங்களை பெற்றது. இஷான் கிஷனும் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களை குவித்தது. 

இஷான் கிஷன் 55 ஓட்டங்களுடனும், பாண்டியா 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

spacer.png

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் மார்கஸ் ஸ்டொய்னஸ், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் 201 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே மும்பை அணியின் வேகப் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

அவரது ஓவரில் பிரித்வி ஷா டக்கவுட்டுடன் வெளியேற, அடுத்து வந்த ரஹானேயும் டக்கவுட்டுடன் ஆட்டமிழந்தார்.  அதன் பின்னர் ஷிகர் தவான் (0), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (12 ஓட்டம்) ஆகியோரை மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றினார்.

அதனால் டெல்லி அணி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. டெல்லி அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடிய மார்கஸ் ஸ்டொய்னஸ் (65 ஓட்டம், 6 பவுண்டரி, 3 சிக்சர்), அக்‌ஷர் பட்டேல் (42 ஓட்டம்) அணி 100 ஓட்டங்களை கடக்க உதவினர்.

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 143 ஒட்டங்களை பெற்று 57 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

spacer.png

பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், பொல்லார்ட் மற்றும் குருனல் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

தோல்வி அடைந்தாலும் டெல்லி அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்றில் நாளை மறுதினம் மோதும்.

 

https://www.virakesari.lk/article/93776

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.