Jump to content

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

Recommended Posts

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Link to comment
Share on other sites

அடுத்த மாகாண சபை தேர்தல் வரை இப்படி நாடகங்களை காணலாம். பொருளாதாரம் பாதளத்தை நோக்கி போக இப்படிப்பட்ட நாடகங்கள் உதவி செய்யும்

Link to comment
Share on other sites

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nirmalan said:

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

சிங்கப்பூரைப்போல இலங்கை விரைவில் வளர்ந்துவிடும்
சும்மா இந்த இனப்பிரச்சனை சனப்பிரச்சனை
என்ற கதையெல்லாம் இருக்கக் கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 15:03, செண்பகம் said:

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

புத்தளத்தில் ஓர் தொலகட்டி உருவாகின்றதா?நெல்லி ரசம்.... பாதிரிமார்  திராட்சை தோட்டம்,இந்து சாமிமார் வாழைதோட்டம்,மெளலவிமார் பேரீட்சை பழதோட்டம்,......பிக்குமார் இனவாத தோட்டம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

புத்தளத்தில் ஓர் தொலகட்டி உருவாகின்றதா?நெல்லி ரசம்.... பாதிரிமார்  திராட்சை தோட்டம்,இந்து சாமிமார் வாழைதோட்டம்,மெளலவிமார் பேரீட்சை பழதோட்டம்,......பிக்குமார் இனவாத தோட்டம்..

எல்லா தோட்டங்களும் சேர்ந்து பணத்தோட்டம் வரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 23:24, nirmalan said:

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

வக்சீன் கண்டுபிடிக்காமல் விமானம் ஏறாதீங்க நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மார்த்தாண்டன் said:

வக்சீன் கண்டுபிடிக்காமல் விமானம் ஏறாதீங்க நண்பா

சிறிலங்காவில் வக்சீன் நம்ம கோத்தா....அவர் இருக்க பயம் ஏன் ? 

5 hours ago, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

 கண்டபடி வாகனங்களில் திரியக்கூடாது....தேசியபாதுகாப்புக்கு கெடுதல் விளைவித்தீர்கள் என குற்றம் சாட்டுவோம்..

Link to comment
Share on other sites

On 23/9/2020 at 10:01, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

எங்களுக்கு ஏன் போட்டுக் கொடுக்கின்ற வேலை. தற்போதுதானே போராட்டமும் இல்லை. வேறு சோழியும் இல்லை. இதில் எதனை காட்டிக் கொடுத்து எவனுக்கும் எதுவும் ஆகப் போவது இல்லை.

வெளிநாட்டில் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள்தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதற்கு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகராமல் நாட்டில் உள்ளவர்களையும் குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன்.

கோத்தபாய வழமையான அரசியல்வாதிகள் போன்று செய்யாமல் மகிந்த, நாமல் போன்றவர்களின் பரிந்துரை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடம் கொடுப்பவராக தெரியவில்லை.

அரச திணைக்களங்களில் இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அங்கஜன் இராமநாதன் சிறிது நாள் ஆடிய ஆட்டத்தினை கோத்தபாய எப்படி அடக்கினார் என்பதே இதற்கு சிறந்த உதாரணம்.

இதுவே மகிந்த அரச தலைவராக இருந்து இருந்தால் அங்கஜனின் ஆட்டத்தினை கண்டு கொள்ளளாமல் விட்டு விடுவதோடு, டக்ளசுக்கும் அங்கஜனுக்கும் இடையே மோதல் போக்கினை தொடர அனுமதித்தும் இருப்பார்.

இங்கே நான் கோத்தபாய புராணம் படிப்பதாக யாரும் தவறாக கருத வேண்டாம். தற்போதைய அரசியல் நிலவரத்தினையும் ஊடக நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.

கோத்தபாயவும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறுவாரா என்பதனை காலம்தான் பதில் கூற வேண்டும். அதுவரைக்கும் நடப்பதனை கண்டு கொள்ள வேண்டியதுதான்.

கோத்தபாய மிகவும் மோசமான இனத் துவேசம் பிடித்தவர். அதனை யாராலும் மறுக்க முடியாது. கோத்தபாயவின் காலத்தில் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர்காலத்தில் சந்திக்க போகின்றனர் என்பது மட்டும் உண்மை. 

இதனை எதிர் கொள்வதற்கான யதார்த்த அரசியலை புலம்பெயர் சமூகத்தினராகிய நாம் வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முட்டாள்த்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வீர வசனங்கள் பேசுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது. 

கோத்தபாய மிகவும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் சிறந்தவர்களை தெரிவு செய்து காய் நகர்த்துகின்றார். எம்மால் இன்று வரை இந்தியாவுடனான நட்புறவை புதுப்பிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய சிங்களவர்களுக்கு என்ன செய்கிறார் என்பதையும் அதை அங்கிருக்கும் தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கீழவரும் முகநூல் பதிவையும் இடப்பட்ட comments ஐயும் பாருங்கள் மக்களே 🤪

உடனே உங்கள் வீரத்தை என்னில் காட்டாதீங்க. கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nirmalan said:

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக மிகவும் கவலையும் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

தயவு செய்து உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள்.

அப்படியாரும் அணுகாமல் இல்லை. ஆனால் அவர்களின் மீண்டும் ஒரு மென்மையான வன்முறை நிபந்தனைக்கு தயார் இல்லையால் அவை முறிந்துபோனது என்று.

அவர்கள்(இந்தியா) தங்களுக்கு என்ன தேவை என்பதை எங்களை வைச்சு செய்யட்டும் ஆனால் எங்களுக்கு என்ன தேவை என்பதில் பாதியாவது செய்து காட்டி நம்பிக்கையை ஊட்டச்சொல்லுங்க.

பழைய விட்டுப்போன சந்திப்புக்களை தொடர தயாராக தமிழர் தரப்பு காத்திருப்பதாகவும் சொல்லுங்க.🙏🏻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய அவர்கள் நாட்டின் ஜனாதிபதி என்ற  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராணுவத்தினர்  தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளைத் துடைத்து, தான்  ஒரு நல்ல மனிதர் என்பதை உலகிற்கு காட்டி,  
சிங்கள அரசுகள் தமிழர்களுக்குச்  செய்த எல்லாப்பிழைகளையும்
சரியானது என்று நிரூபிக்க முயல்வது அவருடைய  அண்மைய செயற்பாடுகளில் இருந்து தெரிகின்றது

Link to comment
Share on other sites

1 hour ago, முதல்வன் said:

கோத்தபாய சிங்களவர்களுக்கு என்ன செய்கிறார் என்பதையும் அதை அங்கிருக்கும் தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கீழவரும் முகநூல் பதிவையும் இடப்பட்ட comments ஐயும் பாருங்கள் மக்களே 🤪

🤣🤣🤣

 சிலவற்றை வாசித்துப் பார்த்தேன்

>பல தமிழர்கள் அவரை பாராட்டுகின்றனர்
>பலர் இலங்கையை தம் தாய் நாடு என்று பாசத்துடன் அழைக்கின்றனர்
> அனேகமாக எல்லாரும் தமிழ் அரச அதிகாரிகளை கடுமையாக குறை கூறுகின்றனர்
> பலர் தம் இடங்களுக்கு வந்து பார்க்க அழைக்கின்றனர்

Quote

கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 

தமக்கு தாமே வைத்த குண்டு என்றுதான் நான் நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

அனேகமாக எல்லாரும் தமிழ் அரச அதிகாரிகளை கடுமையாக குறை கூறுகின்றனர்
> பலர் தம் இடங்களுக்கு வந்து பார்க்க அழைக்கின்றனர்

உண்மைதான் சிங்களவன் எங்களுக்கு செய்யும் அநியாயங்களுக்குள் தமிழர்கள் குறிப்பாக அரச அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் தமிழர்களாக இருந்துகொண்டு செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களும், செல்வாக்குகளும், பாராமுகமும் எம் மக்களுக்கு சில வேளைகளில் சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கவைக்கின்றன.

கோத்தபாய செய்வது போல எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீர் விஜயம் செய்து குறைகளை வெளிப்படுத்தலாம்.

அன்றும் சரி இன்றும் சரி பயம் தான் சரியாக வழிநடத்துகிறது. உணர்வோ தேசியமோ இரண்டாம் பட்சம் தான். அல்லது மிக சொற்பம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nirmalan said:

எங்களுக்கு ஏன் போட்டுக் கொடுக்கின்ற வேலை. தற்போதுதானே போராட்டமும் இல்லை. வேறு சோழியும் இல்லை. இதில் எதனை காட்டிக் கொடுத்து எவனுக்கும் எதுவும் ஆகப் போவது இல்லை.

வெளிநாட்டில் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள்தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதற்கு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகராமல் நாட்டில் உள்ளவர்களையும் குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன்.

கோத்தபாய வழமையான அரசியல்வாதிகள் போன்று செய்யாமல் மகிந்த, நாமல் போன்றவர்களின் பரிந்துரை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடம் கொடுப்பவராக தெரியவில்லை.

அரச திணைக்களங்களில் இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அங்கஜன் இராமநாதன் சிறிது நாள் ஆடிய ஆட்டத்தினை கோத்தபாய எப்படி அடக்கினார் என்பதே இதற்கு சிறந்த உதாரணம்.

இதுவே மகிந்த அரச தலைவராக இருந்து இருந்தால் அங்கஜனின் ஆட்டத்தினை கண்டு கொள்ளளாமல் விட்டு விடுவதோடு, டக்ளசுக்கும் அங்கஜனுக்கும் இடையே மோதல் போக்கினை தொடர அனுமதித்தும் இருப்பார்.

இங்கே நான் கோத்தபாய புராணம் படிப்பதாக யாரும் தவறாக கருத வேண்டாம். தற்போதைய அரசியல் நிலவரத்தினையும் ஊடக நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.

கோத்தபாயவும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறுவாரா என்பதனை காலம்தான் பதில் கூற வேண்டும். அதுவரைக்கும் நடப்பதனை கண்டு கொள்ள வேண்டியதுதான்.

கோத்தபாய மிகவும் மோசமான இனத் துவேசம் பிடித்தவர். அதனை யாராலும் மறுக்க முடியாது. கோத்தபாயவின் காலத்தில் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர்காலத்தில் சந்திக்க போகின்றனர் என்பது மட்டும் உண்மை. 

இதனை எதிர் கொள்வதற்கான யதார்த்த அரசியலை புலம்பெயர் சமூகத்தினராகிய நாம் வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முட்டாள்த்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வீர வசனங்கள் பேசுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது. 

கோத்தபாய மிகவும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் சிறந்தவர்களை தெரிவு செய்து காய் நகர்த்துகின்றார். எம்மால் இன்று வரை இந்தியாவுடனான நட்புறவை புதுப்பிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

நீங்கள் இந்திய  அனுதாபியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முதல்வன் said:

உடனே உங்கள் வீரத்தை என்னில் காட்டாதீங்க.

🤣

7 hours ago, நிழலி said:
Quote

கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 

தமக்கு தாமே வைத்த குண்டு என்றுதான் நான் நினைக்கின்றேன். 

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nirmalan said:

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

இஞ்ச பாருங்கோ நிர்மலன், 

என்னைப் பொருற்தவர தமிழற்ற நிலம இனி மீழுறதுக்கு வாய்ப்பே இல்ல எண்டுதான் நினைக்கிறன். ஏனெண்டா எங்களட்ட சனத் தொகையும் இல்ல, பொருளாதார வசதியும் இல்ல, களைச்சுப்போனோம். இதுக்கு மேலால எங்களட்ட ஒற்றுமை இல்ல. கிழக்குத் தமிழன் வடக்குத் தமிழன் வேண்டாம் எண்டு சொல்லுறான். வடக்கிலுள்ள சில புல்லுருவிகளோ இருக்கிற கொஞ்ச நெஞ்சத் தமிழரையும் சமயத்தால பிரிக்க நிக்கினம். திரும்பவும் சாதிப் பிரச்சன தொடங்குது. இப்பிடி எல்லாப் பிரச்சனையும் ஒண்டா வந்து நிக்கேக்க நான் ஏன் இந்தியன்ர பிரச்சனயப் பற்றி நினைக்கோணும். 

வடிவாப் பாருங்கோ.. இனப்பிரச்சனய ஆயுதப் போரா மாத்தினது இந்தியா. தமிழன் ஒற்றுமையா இருந்தா தன்ர சொல்லக் கேட்கமாட்டான் எண்டு கனக்கக் குழுக்கள உண்டாக்கி அவங்கள அடிபட வச்சது இந்தியா. கடசியிலபோராட்டத்த தன்ர ஆமிய இறக்கி அழிச்சதும் இந்தியா. இப்ப எனன மயி....கு(😡) எங்களட்ட திரும்ப வருகினம். தன்ர தேவைக்கு எங்கள ஆயுதம் தூக்க வச்சவங்க பிறகு தங்கட தேவைக்கு எங்கள அழிச்சவங்க இப்ப இலங்க சீனாட்டப்  போனவுடன திரும்பவும் எங்கட்ட வருகினம் ? இருக்கிற மிச்ச சொச்ச சனத்தையும் அழிக்கிறதுக்கா 😡 அவனுக்குத் தேவையெண்டா அவன சிங்களவனோட முண்டச் சொல்லுங்கோ. 😏

இந்திய கொள்கை வகுப்பாரிட்டச் பிரபாகரன்ர படத்தக் கழுவிக் குடிக்கச் சொல்லுங்கோ. அப்பயாவது நேர்மை, பற்றுறுதி, மானம் ரோசம் கொஞ்சமாவது வருகுதா எண்டு பார்ப்போம். உங்கட ஊடக நண்பரைச் சொல்லுங்கோ கொஞ்சம் உப்புப் போட்டுச் சாப்பிடச் சொல்லி. அப்பத்தான் தன்ர இனத்துக்கு விசுவாசமா இருக்கிறதுக்கு மான ரோசம் கொஞ்சமாவது வரும் எண்டு

சிங்களவன் எனக்கு எதிரி, ஆனா இந்தியன் எனக்குத் துரோகி. 

சாட்சிக்காறன் காலில விழுவதைவிட சண்டைக்காறன் காலில விழுவதற்கு நான் ரெடி. 😡

(ஆக்கபூர்வமான வாதத்திற்கு ஆயத்தமாக உள்ளேன். ஆனால் எமது மக்களின் மேல் பழி போடுவதை முதலில் நிறுத்த வேண்டும்)

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

உங்கழுக்கு என்னதான் பிரச்சனை.

ஆக்கபூர்வமாக ஒரு திரி போக விரும்பினாலும் எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை எதிரிக்குச் சகுனப்பிழையா அமைய வேணும் என்கின்ற நிலைப்பாட்டில் திரியைக் குழப்ப நினைக்கிறீர்கள். ☹️

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2020 at 21:36, விளங்க நினைப்பவன் said:

🤣

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள் என்று சொல்லுமளவுக்கு சிங்கள விசுவாசமாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள் என்று சொல்லுமளவுக்கு சிங்கள விசுவாசமாக்கும் .

சரத் பொன்சேகா அப்படி  கூறியுள்ளாரே, கோத்தாத்தான் குண்டு வைத்து நாடகமாடியது என்று.   

கோத்தபாயா சிங்களவரினால் மட்டும் தெரிவு செய்யப்பட்டவராமே. அவரது அபிவிருத்தி, எழுச்சி எல்லாம் அவர்களுக்கே.

On 24/9/2020 at 20:55, nirmalan said:

இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

ஒரு கள்ளனாற்தான் இன்னொரு கள்ளனை பிடிக்கமுடியும். இவர் செய்த ஊழலையும், கொலை, கொள்ளைகளையும் யார் விசாரித்து தண்டனை குடுப்பது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 06:03, செண்பகம் said:

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

எங்கையடாப்பா சமூக இடைவெளி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.