Jump to content

தமிழர்களுக்கு அழிவுதான் – மட்டு. சுமணரத்ன தேரர் எச்சரிக்கை!


Recommended Posts

தமிழர்களுக்கு அழிவுதான் – மட்டு. சுமணரத்ன தேரர் எச்சரிக்கை!

 

 

InShot_20200920_195144189-960x960.jpg?189db0&189db0

 

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்னதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கலடி ரஜமஹாவிகாரையில் காணிகள் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன என்று குற்றம் சுமத்தியுள்ள தேரர், இன்னும் ஒரு வாரத்திற்குள் இது நிறுத்தப்படாவிடின் மட்டக்களப்பு பெரும் விளைவினை எதிர்நோக்கும் என்று மிரட்டியுள்ளார்.

செங்கலடி பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்த அவர், அங்குள்ள வெட்டாந்தரைகளைக் காண்பித்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். மேலும்,

“இயந்திரங்களால் தோண்டப்பட்டுள்ள இந்த இடத்தில் இதற்கு முன்னர் புத்தர் சிலைகளும், புராதான சின்னங்களும் இருந்தன. 2016இல்தான் இந்த புராதன பிரதேசத்தைக் கண்டுபிடித்தோம்.

இதற்காக அப்போது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராகவிருந்த வியாழேந்திரன் எனக்கு கொலை அச்சுறுத்தல் விட்டிருந்தார். இப்பொது அவர் இராஜாங்க அமைச்சராக உள்ளபடியால் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து விடயத்தை மூடி மறைத்துள்ளார்.

எனக்கெதிராக எழுபது வழக்குகள் உள்ளன. அதையெல்லாம் தள்ளுபடி செய்து கிழக்கு மாகாண தொல்பொருள்களை பாதுகாக்க எனக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/தமிழர்களுக்கு-அழிவுதான்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செங்கலடியில் விகாரையா ? 50 வருடத்திற்கு முன்பு இல்லாத விகாரை இப்ப எப்படி? 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அம்பிட்டி சுமணரத்ன தேரருக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு பன்குடாவெளியில் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதமன்றின் ஆஜரான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் உட்பட மூவரையும் பிணையில் செல்ல நீதவான் ஜீவராணி கருப்பையா அனுமதி வழங்கியுள்ளார்.

செப்டம்பர் மாதம் 21ம் திகதி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் உட்பட மூவர் பன்குடாவெளியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு ஆய்வுக்குட்படுத்தபடும் பகுதிக்குள் அத்துமீறி நுளைந்து மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை குறித்த இடத்திற்கு வரவைழைத்து அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகரிகளின் முறைப்பாட்டிற்கமைய கரடியனாறு பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதவான நீதிமன்றில் தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 183,344, 323 ஆகியவற்றில் கீழ் வழக்கு தாக்கல் செய்யபட்டடிருந்தது.

இதனடிப்படையில் ஏறாவூர் சுற்றுலா நீதவான நீதிமன்றினால் சந்தேக நபர்களை 30.09.2020 புதன்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணை புதன்கிழமை (30) ஏறாவூர் சுற்றுலா நீதவான நீதிமன்ற நீதவான் ஜீவராணி கருப்பையா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரச தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாரினால் கடுமையான எதிா்ப்பு வெளியிட்ட நிலையில், குற்றச் சாட்டு நிரூபிக்கப்படாததன் காரணமாக சந்தேக நபர்கள் மூவரையும் தலா இரண்டு இலட்சம் கொண்ட சரீர பிணையின் செல்ல அனுமதி வழங்கியதுடன் வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் மற்றும் அவரது உதவிளார் இருவர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.முகமட் அமீன் மற்றும் சட்டத்தரணி தாவூத் உவைஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

http://www.ilakku.org/அம்பிட்டி-சுமணரத்ன-தேரரு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.