Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்


Recommended Posts

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்

 

கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அவற்றையெல்லாம் புறந்தள்ளி, பொதுவான சிந்தனைக்குள் வேற்றுமையில் இவர்கள் ஒற்றுமை கண்டிருப்பது, தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதிலும், உரிமைப் பிரச்சினைகள் மாத்திரமின்றி, சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கும் தீர்வு தர வேண்டும்.

இவர்களைப் பின்பற்றி, முஸ்லிம் கட்சிகளும் சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.

தேசிய ஐக்கிய முன்னணியானது, சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கு பல தடவை முயற்சித்தது. ஆகக் குறைந்தது முஸ்லிம் கட்சிகளையாவது ஒன்றுபடச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகின. தலைமைத்துவங்களின் தலைக்கனங்களும் கௌரவப் பிரச்சினைகளுமே இந்தச் சமூகத்தின் சாபக்கேடாகியுள்ளன.

பொதுத்தேர்தலில் எதிரணியில் நின்று வெற்றிபெற்றவர்கள், இப்போது சமூகம் தொடர்பில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாது ஆளுங்கட்சியில் தாவப் பார்க்கின்றனர்.

எனவே, முஸ்லிம் கட்சிகள் தமது நலன்களுக்கு அப்பால் சமூகத்துக்காக உழைக்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது என அவர் தெரிவித்தார்.
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை.நல்ல நகைச்சுவை.

Link to post
Share on other sites
On 21/9/2020 at 15:18, சுவைப்பிரியன் said:

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை.நல்ல நகைச்சுவை.

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-61)- நிராஜ் டேவிட்  
    • நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் Bharati October 29, 2020நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்2020-10-29T21:52:46+05:30 FacebookTwitterMore நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும். சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள். அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். 19 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/84428
    • நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா பரவியது; மொத்த எண்ணிக்கு 10 ஆயிரத்தை நெருங்குகின்றது Bharati October 30, 2020நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா பரவியது; மொத்த எண்ணிக்கு 10 ஆயிரத்தை நெருங்குகின்றது2020-10-30T05:01:18+05:30 FacebookTwitterMore நாட்டில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள். ஏனைய 115 பேரும் பேலியகொடை கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மட்டும் 600 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில்தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான பாதிப்பு 9 ஆயிரத்து 800 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் தொற்று கண்டறியப்பட்டோரில் இதுவரை 4 ஆயிரத்து 142 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளஅதேவேளை இன்னும் 5 ஆயிரத்து 600 பேருக்கு மேல் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/84453
    • இப்பிடி எழுதுறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும் கண்டியளோ.... 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.