Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

18 இலங்கை பிரஜைகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 02:14 - 0     - 206

ஐக்கிய அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த இலங்கையர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இருந்து, கென்யாவின் நைரோப் நகரத்தின் ஊடாக, கென்ய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

38 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 18 பேர் மாத்திரமே நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய 20 பேர் திரும்பியனுப்படும் தினம் குறித்து நிச்சயமாக கூற முடியான என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாடு திரும்பியவர்கள் 21 நாள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த பின்னர்  குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளால் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/US-deports-18-Sri-Lankans/150-255700

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

நாடு திரும்பியவர்கள் 21 நாள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த பின்னர்  குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளால் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் எல்லாரும்... விசாரிக்க ஆயத்தமாக உள்ளதால்,
திருப்பி அனுப்பப் பட் டவர்கள்... தமிழர்ககளாக இருக்கலாம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:
6 hours ago, பிழம்பு said:

நிறைவுசெய்த பின்னர்  குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளால் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் எல்லாரும்... விசாரிக்க ஆயத்தமாக உள்ளதால்,
திருப்பி அனுப்பப் பட் டவர்கள்... தமிழர்ககளாக இருக்கலாம்.

சரியான தகவல் இதுவரை இல்லை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள் எல்லாரும்... விசாரிக்க ஆயத்தமாக உள்ளதால்,
திருப்பி அனுப்பப் பட் டவர்கள்... தமிழர்ககளாக இருக்கலாம்.

 இல்லவே இல்லை. செய்தியிலை இலங்கையர்கள் எண்டு இருக்கிறதாலை இது எங்கடை சிங்கள சகோதரங்கள் எண்டு சொல்லி நான்  ஒற்றைக்கால்லை நிக்கிறன் ..😂

  • Haha 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.