Jump to content

ராஜபக்ஷக்கள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அளித்திருந்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; சுமந்திரன் நேர்காணல்


Recommended Posts

ராஜபக்ஷக்கள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அளித்திருந்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; சுமந்திரன் நேர்காணல்

போருக்குப் பின்னரான தசாப்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஆறு இடங்களை இழந்திருக்கிறது. பாராளுமன்றில் கூட்டமைப்பின் இருப்பு பலவீனமடைந்து, ராஜபக்ஷக்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில், அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கைக்கான வாய்ப்புகள் என்ன?

கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பாக எடை போடுகிறார் “இந்து’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக விரிவாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார். பேட்டி வருமாறு;

ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது, மேலும் தமிழ் தேசியவாதிகள் மற்றும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் கூட்டாளிகள் ஆகிய இரு கடும்போக்காளர்க ளும் களமிறங்கியுள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பின் பிரதிபலிப்புகள் யாவை?

இது மிகவும் பாரதூரமான பின்னடைவு. பாராளுமன்றத்தில் 16 இடங்களிலிருந்து 10 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளோம். இது 2018 பெ ப்ரவரி8 உள்ளூர் அதிகாரசபை தேர்தல் முடிவுகளிலிருந்தும் அதிகம் வேறுபட்டதல்ல முதன்மைக் காரணங்களில் ஒன்று, 2015 முதல் 2019 வரை சிறிசேன விக்ரமசிங்க அரசாங்கத்தை நாங்கள் ஆதரித்தோம். அப்போது மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படும் என்று அவர்கள் நம்பினர். பெரும்பாலான விடயங்களில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டாலும், அனைத்துப் பிரச்சினைகளும் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து நிலுவையில் உள்ளன முழுமையானதாக தீர்க்கப்படவில்லை. அந்த விடயத்தில் நிறைய ஏமாற்றங்கள் இருந்தன என்று நினைக்கிறேன்.

தமிழ் மக்களின் வரலாற்றுபூர்வ கோரிக்கையான அரசியல் தீர்வு கூட, வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படவில்லை. அந்த விடயத்தில் நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தோம். ஆனால், இறுதியாக அது அடையப்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வி. அது அடையப்படாதபோது, அது தோல்வி என்று எண்ணப்பட்டது.

இராணுவத்தின் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பாக, கணிசமான அனுகூலங்கள் கிடைத்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாததால் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துவந்த போதிலும், ஆட்சிக்கு எதிரான உணர்வினால் நாங்க ளும் பாதிக்கப்பட்டோம். இரண்டாவதாக, எங்கள் கட்சி பிரதானமாக, அல்லதுமுழுமையாக அரசியல் தீர்வொன்றை தேடிக்கொண்டிருக்கின்றது என்று கூற முடியும். எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் ஏராளமான பொருளாதார பிரச்சினைகளை நாங்கள் கவனிக்காமலிருந்து வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த பொருளாதார சிக்கல்களில் சிலவற்றை நாங்கள் தீர்க்க முயற்சித்தோம், ஏனென்றால் பதவியில் உள்ள அரசாங்கம் எங்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனாலும் மக்கள் உணர்ந்த நன்மைகளை உண்மையில் காணவில்லை. அரசியல் தீர்வும் எம்மைவிட்டு நழுவிசென்றதால், குறைந்த பட்சம் தங்களின் பொருளாதாரமாவது சிறப்பாக அமையும் என்று நம்பிய மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

வேறு காரணங்களும் இருக்கலாம். ஆனால் முதன்மையாக நாங்கள் இரு தரப்பிலும் ஏன் தரையிறங்கினோம் என்பதை விளக்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். தமிழ் தேசிய பிரச்சினைக்கு இறுதி தீர்வை எதிர்பார்க்கும் கடுமையான தமிழ் தேசியவாத தரப்பு, மற்றும் சிறந்த பொருளாதார வாய்ப்புகளை எதிர்பார்க்கும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அரசாங்கத்தின் கூட்டாளிகள், முன்னோக்கிச் செல்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யும்? நல்லது, தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு கௌரவமான தீர்வின் நோக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம். அது அடிப்படைஅம்சமாக இருந்துவருகிறது. அந்த விடயத்தில் எங்கள் முயற்சிகள் தொடர வேண்டும்.

இப்போது நம்மிடம் உள்ளதைப் போன்ற ஜனநாயக இடைவெளியில், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள மற்றும் பௌத்தர்களாக இருப்பதால், ஒரு தீர்வு தோன்றுவதற்கு, குறைந்தபட்சம் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு கணிசமான பகுதியினரையா வது நாம் வெல்ல வேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது இல்லாமல், அதை அடைய முடியாது. நாம் அவர்களை விரோதப் போக்குடன் வைத்திருந்தால், அவர்களின் சொந்த அச்சங்களை அதிகரிக்கச்செய்தால் நிச்சயமாக அடைய முடியாது என்பது ஒன்று. மற்றொன்று, ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் எமது மக்களுக்கு சிறந்த பொருளாதார வாழ்க்கையை வழங்குவதில் நாம் ஈடுபட வேண்டும். இது சம்பந்தமாக அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்றால், எமது புலம்பெயர் சமூகத்தின் பங்கேற்பின் மூலம் நாம் குறைந்தபட்சம் வேலை வாய்ப்புகளை எளிதாக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக நாம் சில கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அது உண்மையில் களத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

நீதி சம்பந்தமான பிரச்சினைகள் என்னமாதிரி?

நீதி சம்பந்தமான பிரச்சினைகள் அரசியல் தீர்வுடன் தொடர்புபட்டவை. இன மோதல் காரணமாகவே நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பிரச்சினைகள் எழுந்தன. எங்களது நியாயபூர்வமான அரசியல் உரிமைகளை நாங்கள் கேட்ட போதெல்லாம் நாங்கள் வன்முறையை அனுபவித்தோம். எனவே அரசியல் உரிமைகளுக்கான முழு போராட்டமும் வன்முறையாக மாறியது, பின்னர் அவர்கள் அதை இப்போது இங்கே குறிப்பிடுவதுபோன்று முழு அளவிலான போரில் முடிந்தது. நீதிக்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயல்முறைகள் நிலைமாறுகால நீதியின் வடிவத்தை எடுத்தன. அதில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாதிருப்பதற்கான உத்தரவாதம் உள்ளது.

2015 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்பின் மூலம்மீள இடம்பெறாதிருப்பதற்கானதொரு உத்தரவாதமாக ஒரு அரசியல் தீர்வைவழங்க முன்வந்தது. நிலைமாறுகால கால நீதியின் மற்றைய அனைத்து விடயங்களும் முக்கியமானவை. அதையும் நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இறுதியில், அது மோதலின் மூல காரணத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். சில நேரங்களில், பிரச்சினைகளின் மூல காரணத்தை முதலில் தீர்ப்பது நல்லது, பின்னர் இடைக்காலத்தில் வந்த நீதிதொடர்பான, சிக்கல்களைப் பார்ப்பது நல்லது. இது தென்னாப்பிரிக்காவில் நாம் கற்றுக்கொண்ட தொன்றாகும்.

கடந்த காலத்தைப் பார்ப்பதற்கு முன் எதிர்காலத்தைப் பாதுகாக்கவேண்டும். இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மிகவும் விவேகமான வழிமுறை இதுவென்று நான் நினைக்கிறேன். அந்த காரணியால் தான். எங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஒரு அரசியல் தீர்வைப் பின்தொடர்வது முதன்மை இடத்தைப் பிடித்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த மற்றும் கடுமையாகப் பாதுகாத்த 19 ஆவது திருத்தம் மற்றும் நீங்கள் கட்டியெழுப்ப முயன்ற 13 ஆவது திருத்தம் ஆகிய இரண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இது குறிப்பாக தேசிய அரசியல் மற்றும் தமிழ்மக்கள் நலன்களை எவ்வாறு பாதிக்கும்?

தற்போதைய அரசாங்கம், 2015 இல் தோல்வியை சந்தித்த பின்னர் மீண்டும் பதவிக்கு வர முயன்றபோது, பெரும்பான்மை சமூகத்தினமத்தியிலுள்ள குறுகிய வகுப்புவாத சக்திகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. சிறுபான்மையினரில் மற்றவர்களைப் பற்றியஎண்ணிக்கையில் உள்ள அச்சங்களைத் தூண்டியது. துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு அரசியல் விளையாட்டு, இது பெரும்பாலும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல்வாதிகளால் நாடப்படுகிறது. 2015 மற்றும் 2019 க்கு இடையில் முன்னைய அரசாங்கத்தின் தரப்பில் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது, குறிப்பாக ஒரு ஐக்கிய தேசத்திற்குள் நல்லிணக்கத்தை வென்றெடுக்க தவறியமை தமிழ் மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல, சிங்கள பெரும்பான்மையினரின் நம்பிக்கையையும் பாதித்தது. எனவே,உண்மையில் அவர்கள் ராஜபக்ஷக்கள், நாட்டில் வாழும் மற்றவர்கள் மீது சிங்கள பௌத்த மக்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த விரும்பிய, மிகவும் கடும்போக்கு சிங்களக் கருத்தியலின் ஆதரவுடன்மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.

இயல்பாகவே ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இப்போது அந்த சக்திகளை திருப்திப்படுத்தவும், அவர்களின் வாக்குறுதியை அவர்களின் முக்கிய வாக்காளர்களுக்கு வழங்கவும் முயல்கிறது. அவர்கள் ஒரு புதிய அரசியலமைப்பு தொடர்பாக உறுதியளித்துள்ளனர். ஆனால் உடனடியாக அவர்கள் 20 ஆவது திருத்தசட்டமூலத்தை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதி அல்லது நிர்வாகி ஒரு வலுவான சிங்கள பௌதபெளர் ஆட்சியாளராகஇருப்பார். அவர் நாட்டில் உள்ள அனைவரையும் பரிசீலிக்கவும் பெரும்பான்மை சமூகத்தின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பையும் உறுதி படுத்துவார் என்பதனை காண்பிப்பதற்காக இது திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

20 ஆவது திருத்தம் 19 ஆவது திருத்தத்திற்கு முன்னரான சூழ்நிலைக்குச் செல்ல முற்படுகிறது, அங்கு நீங்கள் எந்தவொரு உண்மையான பரிசீலனைகளும் சமநிலையும் இல்லாமல். உலகில் வேறு எங்கும் இணையற்ற அதிகாரங்களைக் கொண்ட ஒருஅதி சக்திவாய்ந்த நிறைவேற்றுத் தலைவரைக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது தற்போதைய பதவியில் இருப்பவரின் கைகளில் இந்த அதிகாரங்கள் அதிகமாக இருப்பதாக அல்லது எதிர்காலத்தில் மற்றொரு ஜனாதிபதி இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வார் என்று நினைக்கும் அவர்களின் சொந்த ஆதரவாளர்களிடையே கூட இது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தோன்றுகிறது. எனவே, அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அவர்களின் முக்கிய வாக்காளர்களுக்கு காண்பிப்பதான அரசாங்கத்தின் முதல் முயற்சி சிக்கலில் சிக்கியி ருப்பதாக தென்படுகிறது. மேலும், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்க விரும்பும் ஒரு சூழல் நாட்டில் உள்ளது.

அத்துடன் பெரும்பான்மை சிங்கள சமூகம் கால்நூற்றாண்டுக்கும் மேலாக அதற்கான ஆணையை மீண்டும் மீண்டும் வழங்குகிறது. ஏனென்றால், அந்த அப்பதவிக்கு வருபவர்களால் நாடு மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அந்த துஷ்பிரயோகம் சிறுபான்மை சமூகங்களை மட்டுமல்லாமல் பெரும்பான்மை சமூகத்தையும் பாதிக்கிறது. நிறைவேற்று ஜனாதிபதி பதவியில் உள்ள கட்டுப்பாடற்ற அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததன் நினைவுகள் தெற்கில் உள்ள மக்களையும் எச்சரிக்கும் ஒன்றாகும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான ஆணை இந்த அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும், 20 ஆவது திருத்த வரைவு வந்தபோது, அந்த ஆணையை வழங்கியவர்கள் கூட சந்தேகம் அடைந்ததற்கு இதுவே காரணமாகும். அந்த மாதிரியான அதிகாரங்களை ஒருஆளுக்கு கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. இந்த முறையும் ராஜபக்ஷக்களுக்கு வழங்கப்பட்ட ஆணை தென்பகுதி வாக்காளர்களினால் குறைந்தபட்சம் 1994 முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வழங்கப்பட்டவற்றிலிருந்து வேறுபட்டதல்ல.

ஜனாதிபதியுக்கும் பிரதமருக்கும் இடையிலான செயல்பாட்டு ஏற்பாட்டைச் செய்வதிலும் இது அதிகமானது. மேலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதலினாலேஉயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் சாத்தியமானது. 19 ஆவது திருத்தமும் அதற்கு காரணமாக இருந்ததுஎன்றும் கூறப்படுகிறது. ஆனால் 19 ஆவது திருத்தத்திற்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதியிடம் இருந்த அதிகாரங்களை ஜனாதிபதியிடம் வழங்குவது மக்களிடமிருந்து எந்த ஆணையும் இல்லை. 13 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை, 1987 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அது தமிழ் தரப்பில் ஒருவரையும் திருப்திப்படுத்தவில்லை, அது போதாது என்றும் அதிகாரங்களை அர்த்தமுள்ள முறையில் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் தொடர்ந்து கூறப்பட்டது. ஆனால் மாகாண சபைகளை வலுப்படுத்துவது நாட்டின் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் அச்சங்களை அதிகரிப்பதற்கும் இது பங்களிப்பு செய்துள்ளது.

அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழ் தரப்பு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களைக் கோருகையில், சிங்களவர்களிடையே உள்ள கடும் போக்காளர்கள் இது நாட்டின் பிளவுக்கு வழிவகுக்கும் என்று கூறி அதனை எதிர்க்கின்றனர். அதுவும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பகுதியினர் மத்தியில் இது அதிர்வுகளைக் காண்கிறது. அந்த அச்சம், மாகாண சபைகளை வலுப்படுத்தினால் நாடு பிளவுபடும் என்பதாகும். அந்தத் தொகுதியின் உணர்வுகளை உறுதிப்படுத்துவதற்காக, மாகாண சபை முறையை முழுவதுமாக அகற்றுவதன் மூலமாகவோ அல்லது குறைந்தபட்சம் அதன் அதிகாரங்களைக் குறைப்பதன் மூலமாகவோ அவர்கள் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பார்கள் என்ற அரசாங்கத்தின் தரப்பிலிருந்து சொல்லாடலை நாங்கள் காண்கிறோம்.

20 ஆவது திருத்தவரைவு அந்த அச்சங்களைம் தீர்க்கக்கூடும். வலுவான ஜனாதிபதி இருந்தால், நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் உண்மையில் அந்த ஜனாதிபதியால் சமாளிக்க முடியும் என்றும் , பலவீனமான நிர்வாகியால், நாட்டில் எந்தவிதமான பிளவுகளையும் தடுக்க முடியவில்லை எனவும் சிங்கள மக்கள் நம்புகிறார்கள். நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக தெற்கில் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டிருந்த ஆணைகள் அதனை எவ்வாறு விளக்குகிகின்றன ?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிபதவியை ஒழிப்பதற்கான அழைப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்ற இந்த அதிகப்படியான அதிகாரங்களிலிருந்து வருகிறது. மக்கள் அந்த நிலையில் சீராக உள்ளனர். அரசாங்கத்தின் முக்கிய தொகுதியைப் பற்றி நான் கூறியது என்னவென்றால், ஒரு பிளவை எதிர்கொள்ளும் நாடு குறித்து அச்சங்கள் எழுந்தால், அதைக் கட்டுப்படுத்த அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு திரும்ப வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் கூட, மாகாண சபைகளை வலுப்படுத்தவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதோடு, நிறைவேற்று ஜனாதிபதியின் ஒரு பகுதி தக்கவைக்கப்படுவது பற்றியதாகவும் அது மாகாண சபைகள் மீதான ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பாகவும் இருந்தது.

பெரும்பான்மையினரின் அச்சங்களை இல்லாமல் செய்வதற்கு , மாகாணமொன்று பிரிந்து செல்வது தொடர்பான எந்தவொரு முயற்சியையும் தடுக்க மத்தியின் அதிகாரம் அவசியம் என்ற ஒரு “ஆறுதல் காரணி” என்றும் நாங்கள் குறிப்பிட்டோம். மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைத்தபோது முன்னைய அரசாங்கத்தை ஆதரித்ததற்காக தமிழ்க்கூட்டமைப்பு விமர்சனங்களையும் எதிர்கொண்டது. மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லை. மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களைக் கொண்ட புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாங்கள் ஈடுபட்டிருந்தோம். ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்கான அந்த முயற்சியில் அதிகாரப் பகிர்வு, ஒரு புதிய தேர்தல் முறை மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழித்தல் ஆகிய மூன்று முக்கியவிடயங்கள் இருந்தன.

ஒரு தேர்தல் முறைக்கு நாங்கள் உடன்பட வேண்டியிருந்தபோது, ஒரு கலப்பு தேர்தல் முறைமை எம்.எம்.பி தொடர்பாக ஒப்புக் கொள்ளப்பட்டது. பாராளுமன்றம், மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் மூன்று அடுக்குகளிலும் ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனால்தான், அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு முன்பே, அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட முறைமை உள்ளூராட்சித் தேர்தல் முறைக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த அமைப்பின் கீழ் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. புதிய அரசியலமைப்பில், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களும் கலப்பு முறைமைக்கு எம்.எம்.பி.க்கு மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது . மாகாணங்களுக்காக நடத்தப்பட்ட எல்லை நிர்ணய செயல்முறை பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால், மூன்று மட்டங்களிலும் ஒரு சீரான தேர்தல் முறை செயல்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, புதிய அரசியலமைப்பு செயற் படவில்லை. அதனால்தான் மாகாண சபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

புதிய அரசியலமைப்பிலிருந்து வெளிவரும் புதிய மாகாண சபைகள், பெற்ற அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், மிகவும் பயனுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்ஷ அரசு புதிய அரசியலமைப்பு தொடர்பாக உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005 மற்றும் 2015 க்கு இடையில் பதவியில் இருந்தபோது, அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது, ஆனால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. பின்னர், அடுத்துவந்த அரசாங்கத்துடன் நீங்கள் ஒரு புதிய அரசியலமைப்புதொடர்பாக ஈடுபட்டீர்கள். ஆனால் அது செயற் படவில்லை.

இரு அரசாங்கங்களுடனான உங்கள் அனுபவங்களைப் பொறுத்தவரை, ராஜபக்ஷக்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பு மற்றும் அரசியல் தீர்வுக்கான உண்மையான வாய்ப்புகள் என்ன?

யுத்தம் முடிவடைவதற்கு முன்பும், யுத்தம் முடிவடைந்த பின்னரும், ராஜபக்ஷக்கள் அவர்கள் முன்னர் பதவியில் இருந்தபோது, இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முறையான தீர்வு கிடைக்கும் என்று உலகிற்கு பலமுறை உறுதியளித்திருந்தனர். யுத்தம் முடிவடைவதற்கு முன்னர், இந்தியா, மேற்குலகு , மற்றும் ஒரு கட்டத்தில், இணைத் தலைமைகளான , அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு, புலிகள் தோற்கடிக்கப்பட்டவுடன், அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் நிபுணர்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டதன அடிப்படையில் சரியான வழிகளில் தீர்வு காணப்படும் என்று அவர்கள் உறுதியளித்திருந்தனர். இப்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு ஏபிஆர்சி மற்றும் நிபுணர்களின் குழு ஆகிய இரண்டின் அறிக்கைகளும் எங்களிடம் உள்ளன. அவை மிகவும் அர்த்தமுள்ளஅதிகார பகிர்வை வழங்குகின்றன. அந்த திசையில் தான் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று ராஜபக்ஷ ஆட்சி உலகுக்கு உறுதியளித்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், குறைந்தது மூன்று முறையாவது இந்தியாவுக்கு உறுதியளித்த ராஜபக்ஷ அரசாங்கம், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்காக அதைக் கட்டியெழுப்பவும் ஒப்புக்கொண்டது. மீண்டும் வாக்குறுதி அதிக அதிகாரப் பகிர்வுக்கான திசையில் இருந்தது. இப்போது, மீண்டும் ஒரு புதிய அரசியலமைப்பை நாட்டிற்கு வழங்க முற்படும் ஒரு ராஜபக்ஷ ஆட்சி, உலகுக்கு திரும்ப, திரும்ப பெருமளவில் அளித்திருந்த உத்தரவாதங்களை, மறந்து, எதிர் திசையில் பயணிக்க முயற்சிக்க முடியாது. அவர்கள் அந்த வரலாற்றுச் சூழலை, மிக சமீபத்திய வரலாற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு, தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

2011 ஆம் ஆண்டில் நாங்கள் 18 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது, அவர்களுடன் நாங்கள் நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம், பின்னர் நாங்கள் மற்றைய அரசாங்கத்துடன் சுமார் மூன்று ஆண்டுகள் அரசியலமைப்பு நிர்ணய சபை செயற்பாட்டில் ஈடுபட்டோம். செயல்முறைகளில் ஆக்கபூர்வமாக ஈடுபடுவோம். 2015 முதல் 2018 வரையிலான செயல்பாட்டில் கூட ஆக்கபூர்வமாக ஈடுபட்டோம்., ஐக்கியமாக்கல் சுதந்திர முன்னணியெனபாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ராஜபக்ஷ முகாம் கூட , வழிநடத்தல் குழுவிலும், பல்வேறு துணைக் குழுக்களிலும் தங்கள் பிரதிநிதிகள் மூலம் அதிக அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொண்டது. அதிகாரப் பகிர்வுபிரச்சினை தொடர்பாக பெருமளவு ஒருமித்த கருத்து இருந்தது. கருத்து வேறுபாடுகள் பெரும்பாலும் நிறைவேற்று ஜனாதிபதி பதவி மற்றும் தேர்தல் முறை தொடர்பாகவே இருந்தன.

ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒரு பெரிய அளவுஒருமித்த கருத்து இருந்தது. எனவே, அவர்கள் பதவியில் இருந்தபோதும், அவர்கள் பதவியில் இருந்தபோதும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்தனர், மேலும் அந்த நிலைப்பாடு புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயல்முறையிலும் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மாகாண சபைகள் பலப்படுத்தப்படும்போது பிரிவினைஏற்படுமென அஞ்சும் ராஜபக்ஷக்களின் முக்கிய தொகுதியை நீங்கள் சுட்டிக்காட்டினீர்கள். அதேவேளை தெற்கு மக்களின் மனங்களை வெல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினீர்கள். அதிகாரப் பகிர்வைச் சுற்றி சந்தேகம் அதிகமாக இருக்கும்போது இதை எவ்வாறு அடைய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

யுத்தம் முடிவடைந்த பின்னர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்ட விதம், தீர்வு , பிரிக்கப்படாதஒரு ஐக்கிய நாட்டிற்குள் இருக்கும் என்று தெற்கில் உள்ள மக்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளிப்பதாகும். அரசியலமைப்பு நிர்ணயசபை சபை செயற் பாட்டில், அரசின் விளக்கத்தில் “பிரிக்க முடியாத” என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்தோம். இரண்டாவதாக, புதிய அரசியலமைப்பை இலங்கை மக்கள் வாக்கெடுப்பில் அங்கீகரிக்க வேண்டும் என்று நாமே கேட்டுக்கொண்டோம். இதன் பொருள் அவர்களின் முதுகுக்குப் பின்னால் எதையும் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

புதிய அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு பெரும்பான்மையான சமூகம் சவுகரியமானதாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அந்த வெளிப்படையான அணுகுமுறை சிங்கள மக்கள் மனதை வெல்லும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்களிடையே முற்போக்கான சக்திகளும் அத்தகைய ஒரு வலுவான தன்மை தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஆகஸ்ட் பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரத்தின்போது, பல வேட்பாளர்கள் சிலர் இப்போது எம்.பி.க்கள் தீர்க்கப்படாமல் உள்ள அரசியல் தீர்வு பற்றி குறிப்பிடும்போது இந்தியாவை வேண்டிக்கொண்டிருந்தனர். ராஜபக்ஷக்கள் பெரியதொரு ஆணைமீது சவாரி செய்கிறார்கள் என்பதால், புவி சார் அரசியல் கவலைகள் உட்பட இந்தியா அல்லது சர்வதேச சமூகம் தங்களின் மற்ற கருத்தாய்வுகளை என்ன செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இலங்கை அமைப்பு ரீதியாக ஒரு தீவு, ஆனால் உருவகமாக எந்த நாடும் ஒரு தீவாக இருக்க முடியாது. இன்றைய உலகில், நாம் அனைவரும் சில உலகளாவிய மதிப்புகளைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் கவலைகளை மதிக்க வேண்டும். இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் எப்போதுமே அதை நினைவில் வைத்திருக்கின்றன. அதன் நெருங்கிய அண்டை நாடான இந்தியாவின்இந்த தீவின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த கவலைகள், அனைத்து இலங்கையர்களும் மிகவும் பாராட்டுவதும் பெறுமதியானதாக கருதுவதுமாகும். அதனால்தான் 1983 ஆம் ஆண்டில், பிரதமர் இந்திரா காந்தி தனது நல்லெண்ணத்தை வழங்கியபோது, அது இலங்கை அரசாங்கத்தால் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த உணர்வு இன்றுவரை தொடர்கிறது.

இந்த தீவில் ஏற்பட்ட மோதல் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மூன்று தசாப்த கால யுத்தத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த தீவில் இந்த மோதல்கள் இந்தியாவுக்கோ அல்லது உலகின் பிற நாடுகளுக்கோ எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்வது முட்டாள்தனம். அதனால்தான் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவுடனும் மற்ற சர்வதேச சமூகத்துடனும் தொடர்பு கொண்டு கடந்த காலங்களில் இந்த உத்தரவாதங்களை அளித்தன. அந்த அளவிற்கு, இந்தியாவின் தொடர்ச்சியான நல்லெண்ணங்கள் அவசியமானதாக இருக்கும், மேலும் இந்த மோதலை இறுதியாக தீர்வுகாணப்படும்போது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும்.

ஏனைய சர்வதேச சமூகத்துடன் ஈடுபடுவதும் முக்கியமானதாகும்.. சமீபத்தில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற ஆரம்ப அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்,மேலும் நாட்டில் . 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியையும், அது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்மறையானதாக பாதிக்கும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. அந்த பெறுமதியான கவலைகள் ,கரிசனைகள் தொடர்பாக தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுடன் அரசாங்கத்தால் தீர்வுகாணப்படவேண்டும்.

 

http://thinakkural.lk/article/70539

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.