Jump to content

சாக்குப் போக்குக் கதைகளைக் கூறி அரசாங்கம் நழுவிவிட முடியாது; மாவை சேனாதிராஜா


Recommended Posts

சாக்குப் போக்குக் கதைகளைக் கூறி அரசாங்கம் நழுவிவிட முடியாது; மாவை சேனாதிராஜா

“நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது. நினைவேந்தல் தடை யுத்தரவுகளை உடன் நீக்கவேண்டும்” என வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா.

“தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக்கூறுகின்றோம். ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். தடை நீக்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும்” எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நினைவேந்தலுக்கான தடைகளை நீக்கக் கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசிடம் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை வரவேற்றுள்ள ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய சோசலிசக் கட்சி, விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் ஆகியவற்றுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடின் நாம் முன்னெடுக்கவுள்ள சாத்வீகப் போராட்டங்களுக்கும் மேற்படி கட்சிகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையையிட்டு நாம் பெருமகிழ்வு அடைகின்றோம். நாட்டிலுள்ள ஏனைய ஜனநாயகக் கட்சிகள், முற்போக்கு சக்திகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவையும் நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரையாற்ற வேண்டும் என்றும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

http://thinakkural.lk/article/70672

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, செண்பகம் said:

சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது

இதையே எத்தனை காலத்திற்குத்தான் பேசிக்கொண்டிருப்பார்களோ? சகிக்க முடியவில்லை. 50 களிலும் இதைத்தான் பேசினார்கள், 80 களிலும் இதைத்தான் பேசினார்கள், இப்போதும் இதையேதான் பேசுகிறார்கள். தாம் பேசுவது நூறுவீதம் பசப்பல் என்று தெரிந்தும் இவர்களால் இப்படித் தொடர்ந்தும் பேசமுடிவது எவ்வாறு? மக்கள் தம்மை தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்கிற தைரியத்தில்த்தானே?? வெட்கம் கெட்டவர்கள்.

Link to comment
Share on other sites

34 minutes ago, ரஞ்சித் said:

இதையே எத்தனை காலத்திற்குத்தான் பேசிக்கொண்டிருப்பார்களோ? சகிக்க முடியவில்லை. 50 களிலும் இதைத்தான் பேசினார்கள், 80 களிலும் இதைத்தான் பேசினார்கள், இப்போதும் இதையேதான் பேசுகிறார்கள். தாம் பேசுவது நூறுவீதம் பசப்பல் என்று தெரிந்தும் இவர்களால் இப்படித் தொடர்ந்தும் பேசமுடிவது எவ்வாறு? மக்கள் தம்மை தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்கிற தைரியத்தில்த்தானே?? வெட்கம் கெட்டவர்கள்.

சரியாக சொன்னீர்கள் ரஞ்சித். இவர்களின் சொல்லாடல் எல்லாம் உளூர் மக்களுக்கே தவிர நடைமுறையில் ஒன்றையும் சாதிக்க கூடிய வல்லமை இல்லை. முன்னைய அரசை  சாக்கு போக்கு கூறி நழுவ விடாமல் இருந்திருந்தால் இன்று இப்படி ஓலம் போடவேண்டிய நிலைமை வந்திராது. தனிமனித இருப்பை மாத்திரம் முன்னிறுத்தி செய்கின்ற அரசியல் ஒரு நாளும் எமக்கு பயன்தராது. 

இன்றைய ஒற்றுமை என்ற பெயரில் நடைபெறும் முயற்சிகள்,  தங்களது அரசியல் எதிர்காலத்தை தூக்கி நிறுத்துவது என்ற இலக்கில் இருந்து விலகி , அன்று திம்புவில் நடந்து போல ஒருமித்த கொள்கையுடன் நீண்ட பயணத்துக்கு எம்மை தயார் படுத்தும் உறுதியான ஒரு அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கவேண்டும். மாறாக நாங்கள் செய்தது எல்லாம் சரி, சுயபரிசோதை தேவையில்லை என்று காலம் கடத்தி அரசியல் எழுச்சி பெரும் மற்றைய சக்திகளையும் மளுக்கடிக்க முயடர்ச்சிப்பார்களேயானால் மீண்டும் மீண்டும் பழைய கதை தான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.