Jump to content

அன்பே எனது மனசிலிருந்து..! (பார்த்திபன் ) 1


shanthy

Recommended Posts

" பார்த்திபன் "
இன்று உங்கள் பிறந்தநாள்.
24 வயது..., 
இன்னும் என் கைகளுக்குள் குழந்தையாகவே இருக்கிறாய்.
 
கருவிலிருந்து இந்த வினாடி வரையும் நீ போராட்டக்காரனாகவே இருக்கிறாய். 
 
உன் குழந்தைக் காலம் உனக்கு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. 
அம்மாவுக்காக அம்மாவோடு கூட வந்த குழந்தை நீ.
 
அம்மா அழக்கூடாது என்பதற்காகவே எல்லாச் சுமைகளையும் என்னோடு சுமந்தவன். 
 
இலகுவாய் கிடைக்க வேண்டியவற்றையும் நீ போராடித்தான் பெற்றாய். 
 
நாங்கள் கடந்து வந்த தடைகள் கண்ணீர்ச் சுவடுகள்  நீங்கும் காலம் 2019ம் ஆண்டாக நம்பியிருக்க...,
 
12.01.2019 காலம் உன்னைத் தன்னோடு கொண்டு போக வந்தது. 
 
என்னை என்னிலிருந்து பிடுங்கியெடுத்த அந்த நாட்களில்....,உடைந்து  போனேன் என்பதை விட எப்படி உயிர் வாழ்ந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன் ! 
 
 என் துணிச்சல் தன்னம்பிக்கை எல்லாம் நடைகட்டி நெடுந்தூரம் போயிருந்த நாட்களவை.  
 
எது செய்தென்ன எங்களையே தொடரும் காலவிதி மீது கோபம். இனி எப்படி மீளவும் எழுவோமென்ற துக்கம். அந்த ஒருவருடம் பல யுகங்களின் துயர் சுமந்தேன்.
 
தினமும் கண்ணீரோடு அலைந்த என் நாட்களை நீ நம்பிக்கையால் நிறைத்தாய். 
 
இனி எதுவும் இல்லையென்ற மருத்துவமும்  நான் தேடிய பாதைகளும் அடைபட்டுப் பாதைகளெல்லாம் தடைப்பட்டுப் போனது. எனினும் நீ மீண்டு வருவாயென்ற என் சொட்டு நம்பிக்கையையும் உடைத்தார்கள். 
 
ஆனால் நீ மீண்டு அம்மாவென்று அழைப்பாய் அந்த ஒரு நம்பிக்கையை என்னோடு இறுக்கிக் பிடித்த படி அலைந்தேன்.
 
உனது தன்னம்பிக்கையால் நீயே உன்னைப் புதுப்பித்துப் பிறந்தாய்.
 
உன் ஆயுளுக்கு நாட்குறித்து வைத்திருந்த மருத்துவ உலகையும் காலதேவனையும் மிதித்துக் கொண்டு மீண்டாய்.
 
மருத்துவ உலகம் இன்னும் உனது ஆன்மபலத்தை அளந்துவிட முடியாது அதிசயித்து நிற்கிறது. ஆராய்ச்சிகள் செய்கிறது.
 
முடியவிருந்த பல்கலைக்கழக கல்வியை மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டுமென்றது காலம். 
 
உன்னால் எல்லாம் முடியுமென்று மீண்டும் இழந்த கல்வியை தொடரத் தொடங்கினாய். 
 
இனி எங்களை எந்தத் தடையும் நெருங்காது நீ வெற்றிகளைத் தொடுவாய். 2019 வருட இறுதியில் உன்னிடமிருந்து விடைபெறும் போது நம்பிக்கையுடன் திரும்பினேன். 
 
2020 உலகையே தன் கையில் வைத்திருக்கும் கொரோனா உன்னை மீண்டும் போராட வைத்தது. மறுபடியும் மருத்துவ உலகத்தை வியக்க வைத்து வந்திருக்கிறாய்.
 
"ஆன்மபலம் தன்னம்பிக்கை" இரு வார்த்தைகளும் உன்னிடமிருந்து தான் உண்மையான அர்த்தத்தை உணர்கிறது.
 
உன் குழந்தைக்காலக் கனவு "நானொரு விஞ்ஞானியாக வருவேன்"  ஏழு வயதில் நீ எழுதி வைத்த வாசகங்கள் இன்றும் வாசித்து பார்க்கிறேன்.
உன் கனவு விரைவில் மெய்யாகும் என் குழந்தையே.
 
குழந்தைகள் முன்னால் அம்மாக்கள் எப்பொழுதும் முட்டாள்கள் ஆகிவிடுகிறோம்.
 
உனது பிறந்தநாள்களில் யாருக்காவது உணவும் என்னால் முடிந்த உதவியைச் செய்தல் என் வரையில் மனநிறைவு. 
 
ஒருமுறை அதுபற்றி உனக்குச் சொன்ன போது என்னில் கோபித்தாய்.  
 
எனக்கு பிறந்த நாள் வரும் வரைக்கும் ஒராளின்ரை பசி காத்திருக்குமோ ? நீங்கள் மற்றவைக்கு உதவி செய்ய விரும்பினால் உங்களால எப்ப செய்ய ஏலுமோ அப்ப செய்யுங்கோ அம்மா. பிறந்த நாள் வரை காத்திருக்க வைக்கிறது பாவம்.
 
உன்னிடம் உதவ வசதி உள்ள போது காத்திருக்காமல் உடனே செய்யும் பழக்கத்தை உன்னிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்.
 
2016 நீ பல்கலைக்கழகம் போனாய். அந்த வருடம் உன் தங்கச்சி வவுனீத்தா 18வயதை அடைந்தாள். உங்கள் இருவருக்குமான அந்த வருடத்தின் பிறந்தநாள் பரிசாக தமிழில் இருவரின் பெயர்கள் பொறித்த சங்கிலியை உங்கள் இருவருக்கும் பரிசளித்தேன். 
 
கையில் வாங்கிப் பார்த்துவிட்டு " இது எவ்வளவு யூரோ வரும்" கேட்டாய்.
700யூரோ. என்றேன் நான். உடனே 700யூரோவுக்கு அன்றைய இலங்கைக்கான பணமாற்றீட்டு பெறுமதியைக் கணக்கிட்டுப் பார்த்தாய். 
 
உதை வித்திட்டு அங்கை சாப்பிட இல்லாத குழந்தைகளுக்கு அனுப்புங்கோ எனச் சொன்னாய். இன்றுவரை அந்தச் சங்கிலியை நீ அணிந்ததே இல்லை. 
 
உனக்காக நான் விரும்பிச் செய்த சங்கிலியது. பத்திரமாக வைத்திருக்கிறேன். உனது பிள்ளைக்கு அதைப் பரிசளிப்பதற்காக. 
 
பெரிதாக தங்கத்தில் ஆசைப்பட்டதோ அணிந்து கொண்டதோ இல்லை. இருந்த சில நகைகளை கடந்த வருடம் ஒவ்வொன்றாய் விற்றேன். இப்போது எதுவும் இல்லை. உனக்காக நான் விரும்பிச் செய்த சங்கிலியை மட்டுமே வைத்திருக்கிறேன். 
 
என் குழந்தையே உன்பற்றி உன்னோடு பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. 
 
விரைவில் நாம் சந்திப்போம் ஒன்றாக வாழும் நாளை எமக்கு காலம் தருகிறதோ இல்லையோ நாங்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வோம். 
 
அன்பே இனிமையான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
 
அன்புடன் அம்மா சாந்தி நேசக்கரம் 
15.07.2020.
 

 

Link to comment
Share on other sites

இவ்வளவு நாள் சென்றதா அக்கா இதை எழுதுவதற்கு.

உங்கள் தன்னம்பிக்கையும் மனவுறுதியும் எனக்கு இருந்தால் இப்போ நிலமை வேறு.

வாழ்த்துக்கள் இருவருக்கும். தொடர்ந்து முன்னேறுங்கள்.

விடியல் தொடும் தூரத்தில் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் மகனிற்கு.

சாதனையாளர்கள் எல்லோரும் பல தடைகளை தாண்டிதான் வெற்றி பெற்றார்கள்.

உங்கள் மகனும் வெற்றி பெறுவார் வாழ்க்கையில் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:
விரைவில் நாம் சந்திப்போம் ஒன்றாக வாழும் நாளை எமக்கு காலம் தருகிறதோ இல்லையோ நாங்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வோம். 
 
அன்பே இனிமையான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
 
அன்புடன் அம்மா சாந்தி நேசக்கரம் 
15.07.2020.

வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனிற்கு வாழ்த்துக்கள் சகோதரி. நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழ வேண்டும்.........!  💐

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் . உங்கள் வளர்ப்பின் மகத்துவம் உங்கள் மகனின் நடத்தையில்தெரிகிறது.உங்கள் அன்பின் பிணைப்பு எந்த இடையூறும் இல்லாமல் பல்லாண்டுகாலம் தொடர வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . மென்மேலும் முன்னேற இறைவன்

துணை கிடைக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள்
இங்கே பிள்ளை தங்கத்தையே தம் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கும் மனத்துடன்  வைரமாக ஜொலிக்கின்றார் .
வாழ்த்துக்களுடன்
அவரின் இளமைக்காலக்  கனவு நினைவேற அவரின் ஆத்மபலமும்  ஆண்டவனும்  துணைபுரிய வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 22/9/2020 at 09:36, பகலவன் said:

இவ்வளவு நாள் சென்றதா அக்கா இதை எழுதுவதற்கு.

உங்கள் தன்னம்பிக்கையும் மனவுறுதியும் எனக்கு இருந்தால் இப்போ நிலமை வேறு.

வாழ்த்துக்கள் இருவருக்கும். தொடர்ந்து முன்னேறுங்கள்.

விடியல் தொடும் தூரத்தில் தான்.

ஏற்பட்ட அனுபவம் இலகுவானதல்ல. அதை ஏற்று வர வருடம் கடந்து விட்டது. அன்புக்கு நன்றி. 

On 22/9/2020 at 09:40, உடையார் said:

பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் மகனிற்கு.

சாதனையாளர்கள் எல்லோரும் பல தடைகளை தாண்டிதான் வெற்றி பெற்றார்கள்.

உங்கள் மகனும் வெற்றி பெறுவார் வாழ்க்கையில் 🙏

நன்றி உடையார். வெற்றியை நோக்கிய ஓட்டத்தில் முதலில் இருந்து மீண்டும் ஓடத் தொடங்கியிருக்கிறான். 

Link to comment
Share on other sites

On 22/9/2020 at 12:25, theeya said:

வாழ்த்துகள்!

நன்றி. 

On 23/9/2020 at 12:34, suvy said:

உங்கள் மகனிற்கு வாழ்த்துக்கள் சகோதரி. நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழ வேண்டும்.........!  💐

நன்றி உறவே. 

On 23/9/2020 at 19:32, nige said:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் . உங்கள் வளர்ப்பின் மகத்துவம் உங்கள் மகனின் நடத்தையில்தெரிகிறது.உங்கள் அன்பின் பிணைப்பு எந்த இடையூறும் இல்லாமல் பல்லாண்டுகாலம் தொடர வாழ்த்துக்கள்...

உங்கள் வாழ்த்துகள் அவனை சென்றடையும். நன்றி. 

On 23/9/2020 at 20:16, நிலாமதி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . மென்மேலும் முன்னேற இறைவன்

துணை கிடைக்கட்டும்

நன்றி நிலாமதி. 

On 29/9/2020 at 12:27, ஏராளன் said:

வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

நன்றி. 

On 29/9/2020 at 13:32, வாத்தியார் said:

பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள்
இங்கே பிள்ளை தங்கத்தையே தம் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கும் மனத்துடன்  வைரமாக ஜொலிக்கின்றார் .
வாழ்த்துக்களுடன்
அவரின் இளமைக்காலக்  கனவு நினைவேற அவரின் ஆத்மபலமும்  ஆண்டவனும்  துணைபுரிய வேண்டுகின்றேன்

நன்றி வாத்தியார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.