Jump to content

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்– இரா.சாணக்கியன்


Recommended Posts

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்– இரா.சாணக்கியன்

http://athavannews.com/wp-content/uploads/2020/09/a13-1-720x450.jpg

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒரு தேரரின் அடாவடித்தனத்தினைப்பற்றி இந்த இடத்தில் சில வார்த்தைகளை சொல்லத்தான் வேண்டும்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சபையில் இந்த விகாராதிபதிக்கு எதிராக உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள மக்களுக்காக பேசவேண்டும் என்ற ஒரு வினயமான கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக திருப்தியடைய முடியாது.

அவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளார். அவர் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

பொலிஸாரை, கிராம சேவகரை. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வீதிக்கு வருமாறு அச்சுறுதல் விடுத்துள்ளார்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக இதுவரையில் சரியான முறையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து நான் பொலிஸ்மா அதிபர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் கைது செய்யப்பட்டார்.

எனினும்,அவர் தொடர்ந்தும் அரச அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் இணைந்து புனர்வாழ்வளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நாங்கள் மத குருமாரை மதிக்கின்றோம். நாங்கள் அவர்களை மதிக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/அம்பிட்டிய-சுமனரத்ன-தேரர/

Link to comment
Share on other sites

கொலை மிரட்டல் விடுத்த சுமனரத்ன தேரருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

 

 

IMG_20200922_113435.jpg?189db0&189db0

அரச அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அம்பிட்டிய சுமனரத்ன தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (22) அழைப்பாணை விடுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இன்று அறிக்கையிட்டதை தொடர்ந்து மன்றில் ஆஜராகுமாறும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் பொலிஸ் விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

=======

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் நேற்று (21) தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை சிறைப்பிடித்து அடாவடியில் ஈடுபட்ட சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

செங்கலடி – பன்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தின் ஒரு பகுதியை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அடையாளமிடாமல் விவசாயத்துக்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தே அம்பிட்டிய சுமனரத்தின தேரர் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அங்கிருந்த அதிகாரி ஒருவரை நோக்கி “உயர் அதிகாரிகளை வரச் சொல்லு. சிறைக்கு போனாலும் பரவாயில்லை கழுத்தை நெரிப்பேன். உங்களை அடித்துக் கொலை செய்வேன். உயிரிழக்கும் விதமாக அடிப்பேன்” என்று உயிர் அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் மேற்கொள்ளவும் முயன்றிருந்தார்.

அத்துடன் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்திருந்த தேரர், உயர் அதிகாரிகள் வரும் வரை அவர்களை விடமாட்டேன் என்று அடாவடியாக செயற்பட்டுள்ளார். இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து வைத்த தேரர், சம்பவ இடத்திற்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் பொலிஸார் உடன் வரவேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் அங்கு வந்து சமரசம் பேசிய பொலிஸ் அதிகாரியை அநாகரிகமாக திட்டிய தேரர் குழப்பத்தை தொடர்ந்ததுடன், ஒருவாரத்துக்குள் குறித்த பகுதியை தொல்பொருள் இடமாக அடையாளப்படுத்தி, வர்த்தமானி வெளியிடப்படும் என்று அங்குவந்த அதிகாரிகள் வாக்குறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

 

https://newuthayan.com/மீண்டும்-அராஜகம்-புரிந்த/

Link to comment
Share on other sites

சுமந்திரன் கொடுத்த விளக்கத்தால் அடங்கிய ஆளும் தரப்பு எம்.பிக்கள்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் களேபரத்தில் ஈடுபட்ட அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரன் நாடாளுமன்றில் இன்று கோரிக்கை முன்வைத்தார்.

எனினும் மதத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என்று கருணாகரன் எம்.பி மீது சீறிப்பாய்ந்த பொதுஜன முன்னணியினர் அவரது கூற்றை ஹான்சாட்டிலிருந்து நீக்கும்படியும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் கூட்டமைப்பின் மற்றுமொரு எம்.பியான சுமந்திரன் இது தொடர்பில் விரிவான விளக்கத்தை அளித்த நிலையில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் தமது சீற்றத்தை தணித்துக் கொண்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் நாடாளுமன்றில் இன்று உரையாறடறும்போது கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

கோவிந்தன் கருணாகரன், மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த மொட்டுக்கட்சி எம்.பி மொஹமட் முஸம்மில், அவரது கருத்தை ஹான்சாட்டிலிருந்து நீக்கும்படி வலியுறுத்தினார்.

கருணாகரன் எம்.பியின் உரையினிடையே குறுக்கீடு செய்த மற்றுமொரு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இவரது கருத்தானது நாட்டில் மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என எச்சரித்தார்.

எனினும் கோவிந்தன் கருணாகரனின் உரைக்குப் பின் சபையில் எழுந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சக எம்.பியின் கருத்தானது மதத்தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதாக அமையவில்லை. மாறாக ஒரு பிக்குவின் செயற்பாடு அரசாங்கத்திற்கு அகௌரவப்படுத்தியிருப்பதால் அதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தினார் என்று சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து ஆளும்தரப்பு எம்.பிக்கள் தமது சீற்றத்தை தணித்துக் கொண்டனர்.

 

https://www.ibctamil.com/srilanka/80/151019?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளிலும் மறை கழண்டது இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2020 at 20:00, nunavilan said:

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும்

அதுக்கு புனர் வாழ்வளிப்பதற்கு முன், மனநல வைத்தியம் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் மக்களுக்கு ஆபத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைவிட மோசமான நிலைமை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மூலமாக ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் இ.விஸ்னுகாந்தன்  குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாகிஸ்தானிலிருந்து தௌஹீத் ஜமாத் அமைப்பினர் இலங்கைக்கு வருகின்றனர் என்றும் அவர்கள் கல்விக்காக வரவில்லை, ஆயுதப் பயிற்சிக்காகவே வருகின்றனர் என்றும் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்படப்போகின்றதென்றும் நான் 2015ஆம் ஆண்டிலேயே கூறியிருந்தேன். ஆனால் கடந்த அரசாங்கமானது அதனை கணக்கிலெடுக்காமல் கண்மூடித்தனமாக இருந்தது.

ஆனால் அதைவிட மோசமான நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மூலமாக ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதியின் பிரச்சினையானது இன்று நேற்றல்ல பலநாட்களாக நடந்து வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் அடாவடித்தனமான வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றார்.

கடந்த அரசாங்கமோ அல்லது தற்போதுள்ள அரசாங்கமோ இவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இன்று ஏறாவூர் நீதிமன்றத்தில் அவர் 30ஆம் தகதி ஆஜராகவேண்டுமென அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இவருடைய அடாவடித்தனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றது.

கிராமசேவகரை தாக்குவது, மின்சாரசபை ஊழியரை தாக்குவது,என அரச உத்தியோகத்தர்களை தாக்குவதென்பது இவருக்கு அரச உத்தியோகத்தர்கள் மீது வெறுப்புணர்வு உள்ளதென்பதையே காட்டுகின்றது.

அரச உத்தியோகத்தர்களை இவர் தாக்குகின்றாரென்றால் இவருக்கு அரசஉத்தியோகத்தர்கள் மீது ஏதோ கருப்பு விடயம் இருக்கின்றது.  மேலும் சுமனரத்ன தேரர் என்பவர் சண்டித்தனம் பண்ணுகின்ற ஒருவராக இருக்கின்றார்.

புத்த பெருமானை பின்பற்றுகின்றவர் புத்த துறவியாக இருக்கின்றவர் எல்லாவற்றையும் துறந்து துறவியின் கோலத்தில் இருக்கின்ற ஒருவர் ஒரு எறும்பைக்கூட கொல்லக்கூடாது. அப்படியிருக்கின்றபோது சுமனரத்ன தேரர் மங்களாராம விகாரையினுடைய மதகுருவாக இருப்பதற்குத் தகுதியற்றவர்.

ஏனென்றால் மட்டக்களப்பு மாவட்டமானது தமிழர்களுடைய பாரம்பரியம் அதிகமாக இருக்கின்ற மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள விகாரையின் விகாராதிபதியாக இருக்கின்றவர் தமிழ் மக்களோடு சார்ந்த தமிழ் மக்களுக்கு சேவையாற்றக்கூடியவராகவும் புத்த பெருமானுடைய விடயங்களை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவராகவும் இருக்க வேண்டும். அப்படியான ஒருவர்தான் மட்டக்களப்பில் இருப்பது நல்லது.

இவர் செய்கின்ற அடாவடித்தனம் எதிர்காலத்தில் மிகவும் மோசமானதொரு நிலைமைக்கு கொண்டுசென்றுவிடக்கூடியது. நடந்து முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில்கூட சுயேச்சையாக களமிறங்கியிருந்தார். வெளி தேசத்திலிருந்தும் இவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. இன்றும் அவர் வைத்திருக்கின்ற வாகனம், சுகபோகங்கள், அவர் வைத்திருக்கின்ற ஆட்கள் குறித்து  நன்கு விசாரிக்க வேண்டும்.

சுமனரத்தன தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சமன் அனுப்பப்பட்டுள்ளது. 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த தேரரை கைதுசெய்வதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அவரை கைது செய்யப்போனால் நாட்டில் உள்ள பௌத்த பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பக்கூடிய நிலைமை இருப்பதன் காரணமாக அது தவிர்க்கப்பட்டது.

இவர் செய்யும் அட்டகாசத்தினை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று தமிழ் மக்கள் தவறாக கருதிவிடவேண்டாம்.  சுமனரத்ன தேரர் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் வைத்து கைது செய்யப்படுவார். இந்த சுமனரத்ன தேரர் ஊடாக இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-சிங்கள மக்கள் உறவு பாரதூரமான நிலைக்கு செல்லும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இவரின் செயற்பாடு தொடர்ந்து நீடிக்குமானால், அது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும். அதன் காரணமாக இவரை நீதிமன்றம் ஊடாக கைது செய்து இனியொருபோதும் கிழக்கு மாகாணத்தில் காலூன்றாத நிலையினை ஏற்படுத்தவேண்டும்”. என்றார்.

 

http://www.ilakku.org/ampitiya-sumanaratne-thero-i-visṉukantaṉ-இ-விஷ்ணுகாந்தன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2020 at 12:22, செண்பகம் said:

மதத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என்று கருணாகரன் எம்.பி மீது சீறிப்பாய்ந்த பொதுஜன முன்னணியினர் அவரது கூற்றை ஹான்சாட்டிலிருந்து நீக்கும்படியும் வலியுறுத்தினார்கள்

ஒரு மனநோயாளியின் அடாவடியைப்பற்றியே அவர் பிரஸ்தாபித்திருக்கிறார். ஒன்று பிக்கு அடாவடியை விட்டு மதத்தை பிரதிபலிக்கும் செயற்பாடுகளை செய்ய வேண்டும், அல்லது மதத்தை விட்டு அடாவடியை செய்ய வேண்டும். ஒரு அடிதடியை மதத் தலைவர் என்று இழுத்து மூடுவதை இவர்கள் நிறுத்த வேண்டும். மதம் என்பது மனித இனபேதங்களை ஒழித்து நன்மையையே செய்ய வேண்டும்.  கள்ளரும், கொள்ளைக்காரரும் நிறைந்த அரசும், மதமும் வாய் கிழிய ஜனநாயகப் பேச்சு. 

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிய அம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு
** தம்மை சிறையிலிடுவதால் பலனில்லை என தேரர் தெரிவிப்பு

 

Link to comment
Share on other sites

சுமனரத்ன தேரர் விடயத்தில் சட்டம தன் கடமைை செயய வேண்டும்!

 

IMG_0135-960x640.jpg?189db0&189db0

இலங்கை திருநாட்டில் பல்லின மக்களை ஒன்றிணைத்து இனங்களிடையே சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக செயற்படுகின்ற அமைப்புகளில் பௌத்த மதத்தினை சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து செயற்படுவதாக மௌலவி ஷாஜஹான் தெரிவித்தார்.

போதனையை சொல்லிக் கொடுக்கும் நாங்கள் பிரச்சினைகளுக்கும் கலவரங்களுக்கும் முன்னணியில் இருந்தால் இந்த மாவட்டத்தில் மிகவும் ஒரு சிக்கலான நிலைமையினை ஏற்படுத்துவதற்கு வழியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பல் சமயங்களின் ஒன்றியமானது நேற்று அவசரமாக ஒன்று கூடி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இரண்டு நாட்களுக்கு முன்னர் பன்குடாவௌி எனும் கிராமத்தில் சமூகதிற்கு ஒவ்வாத சட்ட ஒழுங்குக்கு மாறாக நடந்து கொண்ட விடயம் தொடர்பாக ஆராய்ந்தது.

அதனடிப்படையில் விசேட ஊடகவியலாளர் மாநாட்டைனை கூட்டி தேரர் தொடர்பில் மதத்தலைவர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

பஞ்சசீல கொள்கையினை புத்தபெருமான் போதித்தததை மக்களுக்கு போதிக்கும் பௌத்த தேரர்கள் உங்களது மனப்பாங்கினை மாற்றிக் கொண்டு சமாதானத்திற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த சிவஸ்ரீ எஸ்.சிவபாலன் குருக்கள் தெரிவித்தார்.

அம்பிட்டிய சுமனரத்ன தேரரை மதத்தலைவர்கள் சென்று சந்தித்து கதைப்பதற்கு அச்சம் கொள்ளும் நிலையே இருந்துவருவதாக இங்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜோசப் மேரி தெரிவித்தார்.

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளை சுமனரத்ன தேரர் சந்திக்கவிரும்பியபோது அவரை தான் அழைத்துச்சென்று அவர்களை சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

சுமனரத்ன தேரர் தொடர்பில் சட்டம் தன் கடமையினை செய்ய வேண்டும், இல்லாதுவிட்டால் அவர் தொடர்பில் பௌத்த பீடங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

சிறந்த மதத்தின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வது அனைத்து மததத்தலைவர்களுக்கும் இழுக்கான செயல் எனவும் அவர் தெரிவித்தார். (150)

 

https://newuthayan.com/அம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செண்பகம் said:

சுமனரத்ன தேரர் தொடர்பில் சட்டம் தன் கடமையினை செய்ய வேண்டும், இல்லாதுவிட்டால் அவர் தொடர்பில் பௌத்த பீடங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும்

எங்கும் எதிலும் ரௌடிசம். யார் யார்மேல் நடவடிக்கை எடுப்பது? தமிழருக்கொரு சட்டம், சிங்களவருக்கொரு சட்டம். சட்டம் என்பது தமிழருக்கு மட்டுமே பாயும்.

Link to comment
Share on other sites

கடும் எச்சரிக்கையுடன் சுமனரத்ன தேரருக்கு பிணை!

மட்டக்களப்பு ஸ்ரீமங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரர் உட்பட மூவரை, 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஏற்றாவூர் சுற்றுலா நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

மேலும், கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் நீதிபதி அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பண்குடாவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் அம்பிட்டிய சுமனரத்தன தேரர் உட்பட மூவர் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பான மனுவை விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதி பிணையில் அவர்களை விடுவித்ததுடன் நவம்பர் 27ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பண்குடாவெளி பகுதியில் பௌத்த மத அடையாளம் இருப்பதாக குறித்த பகுதியில் கடந்த காலங்களில் சுமனரத்தன தேரா சென்ற நிலையில், பல சர்ச்சைகள் இடம்பெற்று நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவருகின்றது

குறித்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்துடன் தொடர்புபட்ட அடையாளங்கள் இனங்காணப்பட்டமையினால், தொல்பொருள் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 21ம் திகதி அங்கு சென்ற சுமனரத்தன தேரர், தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து, கொலை அச்சுறுத்தல் விடுத்து தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கரடியானு பொலிஸார், அம்பிட்டிய சுமனரத்தன தேரர் உட்பட மூவருக்கு எதிராக அதிகாரிகளை தாக்கியமை, அவர்களை தடுத்து வைத்தமை, அதிகாரிகள் கடமையை செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டு சாட்டப்பட்டு வழக்கு தாக்குதல் செய்தனர்.

இதனையடுத்தே இன்று, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சுமனரத்தன தேரர் உட்பட மூவர் ஆஜராகினர். இதன்போது இவர்களை நீதிவான், தொல்லியல் திணைக்களத்துக்கு இடையூறு வழங்க கூடாது, பொதுமக்களை அச்சுறுத்தக் கூடாது என எச்சரித்து பிணையில் விடுவித்துள்ளார்.

https://newuthayan.com/கடும்-எச்சரிக்கையுடன்-சு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.