Jump to content

அதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம்


Recommended Posts

அதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம்

http://athavannews.com/wp-content/uploads/2020/09/Athaulla.jpg

அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். எம். அதாவுல்லா அணிந்திருந்த உடை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன.

அதாவுல்லாவை நாடாளுமன்றத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், உடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று நாடாளுமன்ற செயலகம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்தது.

இருப்பினும் அதாவுல்லாவின் உடையை தொடர்ந்து எதிர்த்த ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு செய்வதாகவும் அச்சுறுத்தியது.

இருப்பினும் இறுதியில் ஏ.எல். எம். அதாவுல்லா தானே சபையிலிருந்து விலகினார்.

http://athavannews.com/அதாவுல்லா-அணிந்திருந்த-உ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்ன உடை உடுத்தியிருந்தாராக்கும். குல்லாவும் சாறமுமா அல்லது மத்திய கிழக்கு உடையா ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

அப்படி என்ன உடை உடுத்தியிருந்தாராக்கும். குல்லாவும் சாறமுமா அல்லது மத்திய கிழக்கு உடையா ? 🤔

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

அப்படி என்ன உடை உடுத்தியிருந்தாராக்கும். குல்லாவும் சாறமுமா அல்லது மத்திய கிழக்கு உடையா ? 🤔

பாகிஸ்தானி (பட்டான்) அணியும் உடை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் – முக்கிய விடயத்தினை வெளியிட்டார் மனோ!

இலங்கை நாடாளுமன்ற சபைக்குள் உறுப்பினர்கள் அணியக்கூடிய ஆடை பற்றிய சம்பிரதாயம் உண்டு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் குறித்து நேற்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் அதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இலங்கை நாடாளுமன்ற சபைக்குள் உறுப்பினர்கள் அணியக்கூடிய ஆடை பற்றிய சம்பிரதாயம் உண்டு.

இதன்படி சம்பிரதாயமாக ஏற்றுக்கொள்ளப்படாத, ஆடையில் அதாவுல்லா எம்பி வந்ததால், சபை படைக்கலசேவிதரால் அவர் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

ஒருமுறை விஜயகலா எம்பி சல்வார்-கமிஸ் ஆடையில் சபைக்குள் வந்த போது வெளியேறுமாறு பணிக்கப்பட்டார். இதைவிட இன்னும் பல எம்பிக்களும் இப்படி வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதுவரை சம்பிரதாயத்தில் உள்ளடக்கப்படாத ஆடையும் சம்பிரதாய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என எவராவது விரும்புவார்கள் எனில், அது பற்றி கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு பிரேரித்து கலந்துரையாடி முடிவெடுக்கலாம்.

இதுதான் இன்றைய(22) நிகழ்வு பற்றிய பின்னணி. இதுபற்றி சில ஊடகங்கள் விளக்கமாக செய்தி வெளியிடாமை, கவலைக்குரியது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/அதாவுல்லாவின்-சர்ச்சைக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைப்பைப் பாத்திட்டு பதறிப்போனேன், மறந்துபோய் ****** உள்ளாடையோட  போட்டாரோ என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாஉல்லாக்கு நேற்று, பாராளுமன்றத்தில் நடந்தது என்ன...?

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா, அணிந்திருந்த ''குர்தா'' வகை ஆடையால் சபையில் பெரும் சர்ச்சை வெடித்தது. எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பு, படைக்கல சேவிதர்களின் வேண்டுகோள் ஆகியவற்றுக்குச் செவிமடுத்து அவர், சபையிலிருந்து தானாகவே வெளியேறினார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நேற்று (22) காலை 10 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆளும் தரப்பினரின் பதில் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை அமளி துமளிப்பட்டுக்கொண்டிருந்தது.  

அப்போது, ''குர்தா'' வகை ஆடையை அணிந்தவாறு, ஆளும் தரப்பு பக்கத்திலிருக்கும் கதவை மெதுவாகத் திறந்த ஏ.எல்.எம். அதாவுல்லா, புன்முறுவலுடன்  சபைக்குள் வந்தமர்ந்தார்.

அமளி துமளி, கூச்சல், குழப்பத்துக்கு மத்தியிலும் அதாவுல்லாவின் ஆடையைக் கண்டுவிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்  பண்டார, ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி, ''நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான வகையில் ஆடை அணிந்து வந்துள்ள அதாவுல்லாவை சபையிலிருந்து வெளியேற்றவும்'' எனக் கோரிநின்றார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ''அது அவரின் தேசிய உடை'' என்றார். அப்போது, ஓடோடிச்சென்ற உதவி படைக்கல சேவித்தர்களில் ஒருவர் அதாவுல்லாவிடம், ஏதோ கூறினார். அவரும் அவசர அவசரமாக, தனது ஆடைக்கு மேலாக போட்டிருந்த கோர்ட்டின் பொத்தான்களைப் பூட்டினார்.

அப்போது எழுந்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.மரிக்கார், “அதாவுல்லா அணிந்திருப்பது ஆப்கானிஸ்தான் உடையா? எனக் கேட்டுவிட்டார். இதனால், சிலர் கெக்கென சிரித்துவிட்டனர்.

தங்களுடைய எதிர்ப்பில் உறுதியாய் நின்ற எதிரணியினர், அவருடைய ஆடை, சம்பிரதாயங்களுக்கு முரணானது என்றனர். விடாப்பிடியாகவும் நின்றனர். அப்போது, படைக்கல சேவிதர் போய் அதாவுல்லாவிடம் ஏதோ கூறினார். அதாவுல்லாவும் அதற்குத் தலையசைத்து  மறுப்புத் தெரிவித்தார்.

அப்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி அதாவுல்லா ''எதிர்க்கட்சியினருக்கு 20ஆ, எனது ஆடையா  என்பதுதான்,  இப்போது பிரச்சினையாகி உள்ளது'' என்றார்.

இதன்போது ஆளும் தரப்பினர் சிலர், அதாவுல்லாவின் ஆசனத்துக்கு அருகில் சென்று, கூடி நின்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அவ்விடத்துக்குச் சென்ற படைக்கல சேவிதர், அதாவுல்லாவிடம் மீண்டும் ஏதோ கூறிவிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் ஏதோகூறினார்.  

இதனையடுத்து அதாவுல்லா எம்.பி. எழுந்து சபைக்கு வெளியே சென்றபோது அவருடன் துணையாக ராமேஸ்வரன்  எம்பி.யும்  வெளியேனார்.   எதிர்க்கட்சியினர் ''ஹூ''அடித்து அதாவுல்லாவைக் கிண்டலடித்தனர்.

http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_172.html

Link to comment
Share on other sites

மகிந்த கோஷ்டி அணியும் சிவப்பு நிறச் சால்வை சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதா?

Link to comment
Share on other sites

15 hours ago, நிழலி said:

மகிந்த கோஷ்டி அணியும் சிவப்பு நிறச் சால்வை சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதா?

இப்படியெல்லாம் கேட்க சிறுபான்மைக்கு அதிகாரமில்லை. நாங்கள் என்ன சொல்கிறோமோ செய்கிறோமே அதைமட்டும் செய்தால் சிறுபான்மையினம் இருக்கலாம், அல்லது இல்லாமல் செய்வோம். இது எம் ஆட்சி 

Link to comment
Share on other sites

15 hours ago, நிழலி said:

மகிந்த கோஷ்டி அணியும் சிவப்பு நிறச் சால்வை சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதா?

முதலில் எப்படியான ஆடைகளை அணியக்கூடாது என்று இங்கு கூறப்படவில்லை. இப்படியான ஆடைதான், அதை மட்டும்தான் அணியவேண்டுமென்றும் கூறப்படவில்லை. எனவே அதாவுல்லா அணிந்ததோ, இவர்கள் அணியும் சிவப்புநிற சடகய அணிவதோ தவறில்லை என்றே நினைக்கிறேன். இங்கு எல்லாமே இனவாதமாக பார்ப்பதால்தான் பிரச்சினை உருவாகின்றது. 

Link to comment
Share on other sites

8 hours ago, Robinson cruso said:

முதலில் எப்படியான ஆடைகளை அணியக்கூடாது என்று இங்கு கூறப்படவில்லை. இப்படியான ஆடைதான், அதை மட்டும்தான் அணியவேண்டுமென்றும் கூறப்படவில்லை. எனவே அதாவுல்லா அணிந்ததோ, இவர்கள் அணியும் சிவப்புநிற சடகய அணிவதோ தவறில்லை என்றே நினைக்கிறேன். இங்கு எல்லாமே இனவாதமாக பார்ப்பதால்தான் பிரச்சினை உருவாகின்றது. 

அப்ப எதற்காக எதிர்த்தார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

அப்ப எதற்காக எதிர்த்தார்கள்?

எல்லாம் பவர் (அதிகாரம்) செய்யும் வேலை

அற்பனுக்கு .......??????

Link to comment
Share on other sites

உள்ளுக்குள்ளே விகாரமான எண்ணங்கள். வெளியே உடுத்தும் ஆடைக்கு மட்டும் விதிமுறை. கொலை செய்தவன் கொள்ளையடிச்சவன் மரணதண்டனை விதிக்கப்பட்டவன் மன்றத்துக்குள் வரலாம். கேவலம் உடுப்புத்தான்பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:

முதலில் எப்படியான ஆடைகளை அணியக்கூடாது என்று இங்கு கூறப்படவில்லை. இப்படியான ஆடைதான், அதை மட்டும்தான் அணியவேண்டுமென்றும் கூறப்படவில்லை. எனவே அதாவுல்லா அணிந்ததோ, இவர்கள் அணியும் சிவப்புநிற சடகய அணிவதோ தவறில்லை என்றே நினைக்கிறேன். இங்கு எல்லாமே இனவாதமாக பார்ப்பதால்தான் பிரச்சினை உருவாகின்றது. 

அந்த உடையைச் சற்று ஊன்றிக் கவனியுங்கள். அவை குறிப்பாக காஸ்மீரிகள், ஆப்கான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் அதனைச் சுற்றியுள்ள நிலப் பரப்புக்களிலும் வாழும் மக்கள் கூட்டம் உடுத்துபவை. அதாவது தம்மை தூய ஆரிய வழித்தோன்றல்களாகக் கருதுபவர்கள்(?) அணிபவை. அவர்கள் அத்தனைபேரும் முசிலிம்கள். 

இந்த உடையை உடுத்துவதனூடாக அத்தாவுல்லா தன்னையும் தனது மதம்சார் மக்கட் கூட்டத்தையும் மேலே கூறப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்த முனைகிறாரோ  ? 

🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையளிக்கிறது - மங்கள சமரவீர

(நா.தனுஜா)

தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் என்பன நாட்டிற்கு ஒருபோதும் அவசியமானவை அல்ல. அவ்வாறிருக்க முன்னர் எதிர்க்கட்சியிலிருந்த பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையளிக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் வெளியிட்டிருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கடந்த புதன்கிழமை அணிந்துவந்த ஆடை பாராளுமன்றத்திற்குள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவுல்லா ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதைப்போன்ற ஆடையில் இலங்கையின் பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டியமை பற்றிய செய்திகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன.

அதனை மேற்கோள்காட்டி மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சியும் செயற்படுவது வருத்தமளிக்கிறது. இலங்கைக்கு ஒரு மாற்றுப்பார்வையே அவசியமானதாக இருக்கின்றதே தவிர, தற்போதைய அரசாங்கத்தின் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார்

https://www.virakesari.lk/article/90656

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென உறுப்பினர்கள் அணியும் ஆடை குறித்து சர்ச்சை எழுந்தது ஏன்?

7 மணி நேரங்களுக்கு முன்னர்
டிரஸ் கோட் சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

 

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி, ஆடை தொடர்பான சர்ச்சை ஒன்று ஏற்பட்ட நிலையில், தற்போது அது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை அன்றைய தினம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நாடாளுமன்ற விதிகளை மீறி, அதாவுல்லா ஆடை அணிந்திருந்ததாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபையில் தெரிவித்திருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஏ.எல்.எம்.அதாவுல்லா அணிந்த ஆடைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

நாடாளுமன்ற விதிகளை மீறி ஆடை அணிய அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தான் மேலாடையின்றி வருகைத் தருவதாக சபாநாயகரிடம் எஸ்.எம்.மரிக்கார் கூறியிருந்தார்.

ஏ.எல்.எம்.அதாவுல்லா, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதை போன்றதொரு ஆடையை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாகவும் எஸ்.எம்.மரிக்கார் அன்று குற்றம் சுமத்தியிருந்தார்.

பக்கச்சார்பின்றி, நேர்மையாக நாடாளுமன்றத்தில் கடமையாற்றுமாறு சபாநாயகரை பார்த்து, எஸ்.எம்.மரிக்கார் கோரியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகு ஏ.எல்.எம்.அதாவுல்லா சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஏ.எல்.எம்.அதாவுல்லா அணிந்திருந்த ஆடை

அதாவுல்லா அணிந்திருந்த ஆடை

பட மூலாதாரம், NIROSH

 
படக்குறிப்பு,

அதாவுல்லா நாடாளுமன்றத்தில் அணிந்திருந்த ஆடை

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா வெள்ளை நிற ஆடையொன்றின் மீது கறுப்பு நிறத்திலான மேலாடையொன்றை அணிந்து நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத் தந்திருந்தார்.

நாடாளுமன்ற சபைக்குள் அதிக குளிர் காரணமாகவே தான் இவ்வாறான ஆடையொன்றை அணிந்திருந்ததாக அவர் அன்றைய தினம் சபையில் அறிவித்திருந்தார்.

பின்னர் அன்றைய தினத்திற்கு மாத்திரம் அவருக்கு சபைக்குள் பிரவேசிக்க சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு அணிய கூடிய ஆடைகள் எவை?

இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு எவ்வாறான ஆடைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டும் என்று சில விதிகள் இருப்பதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை தொடர்பில் இலங்கை அரசியலமைப்பில் கூறப்படாத போதிலும், நாடாளுமன்ற விதிகளாக அது பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டு வேறு ஆடைகளை உறுப்பினர்கள் அணிய வேண்டுமென்றால், விசேட அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

 

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் அணியும் ஆடைகள்

இலங்கை கலாசாரத்திற்கு அமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவதற்கான சம்பிரதாய ரீதியிலான ஆடைகள் காணப்படுகின்றன.

இதன்படி, புடவை மற்றும் சிங்கள கலாசாரத்திலான ஒசரி (புடவை கட்டும் மற்றுமொரு விதம்) ஆகியவற்றை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவது சம்பிரதாயம் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இட்டவல தெரிவிக்கின்றார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகயீனம் ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்ற விசேட அனுமதியின் பிரகாரம், கலாசார ரீதியிலான வேறு ஏதேனும் ஒரு ஆடையை அணிய முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்கள் அணியும் ஆடைகள்

இலங்கை நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

 

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலத்தேய கலாசார ஆடையை அணிய வேண்டும் என நீல் இட்டவல தெரிவிக்கின்றார்.

அத்துடன், இலங்கை கலாசாரத்திற்கு அமைவான ஆடைகளை அணிய, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்டி மற்றும் முழு கையை கொண்ட சட்டை ஆகியவற்றை அணி முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அதைத்தவிர, கால் சட்டை மற்றும் முழு கையை கொண்ட சட்டை அணிந்தும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதைத் தவிர, வேறு விதமான ஆடைகளை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டும் என்றால், அதற்காக விசேட அனுமதியை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.https://www.bbc.com/tamil/sri-lanka-54275980

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.