Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறதா கூகுள், ஃபேஸ்புக்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளம்பரங்களை காண்பிப்பதை கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுத்த வேண்டுமென்று என்று வலியுறுத்தி அந்த நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.

இணையப் பயன்பாட்டாளருக்கு ஏற்ற விளம்பரத்தைக் காட்டுவது அவர்களது தனியுரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல், "பாதிக்கப்படக்கூடிய" இளம் தலைமுறையினரை நியாயமற்ற சந்தைப்படுத்துதலின் அழுத்தத்தின் கீழ் கொண்டுவருவதாக அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினரின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவரும் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு தனியுரிமை சார்ந்த கவலைகளை எழுப்புவதாக உள்ளது.

குழந்தை (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

 

இதுபோன்ற விடயங்களை வலியுறுத்தும் வகையிலேயே கூகுள், அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், மற்றொரு நடவடிக்கையின் ஒருபகுதியாக கூகுளுக்கு சொந்தமான யூடியூப் நிறுவனம் சட்டவிரோதமான வகையில் பிரிட்டனை சேர்ந்த 13 வயதுக்கும் குறைவான ஐம்பது லட்சம் குழந்தைகள் குறித்த தரவுகளை திரட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு சட்டங்கள் இளம் வயதினர் குறித்த தரவுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் திரட்டுவதை தடைசெய்யும் நிலையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

"ஒரு குழந்தைக்கு 13 வயதாகும்போது அது குறித்த 7.2 கோடி தரவுகள் இணையத்தில் விளம்பரம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வசம் இருப்பது என்பது எந்த அளவுக்கு சட்டத்திட்டங்கள் மீறப்படுகின்றன என்பதற்கு ஆதாரமாக உள்ளன. மேலும், இது பதின்ம வயதை தொடுவதற்கு முன்னரே குழந்தைகள் எந்தளவிற்கு கடுமையான கண்காணிப்பு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது" என்று பல்துறை வல்லுநர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இணைய உலகில் அசாத்திய பலம் கொண்ட நிறுவனங்களாக விளங்கும் உங்களுக்கு, உங்களது பயன்பாட்டாளர்களை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது" என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூடியூபின் சட்டப்போராட்டம்

யூடியூபின் சட்டப்போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

 

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த கடிதத்தை எழுதிய 23 பேரில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான கரோலின் லூகாஸ் மற்றும் மருத்துவ உளவியலாளர் டாக்டர் எலி ஹான்சன் ஆகியோரும் அடங்குவர். பிரண்ட்ஸ் ஆஃப் எர்த் அமைப்பும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆன்லைன் விளம்பரம் நுகர்வோரை துரிதப்படுத்துகிறது என்றும், இது உலகுக்கும் தேவையற்ற அழுத்தத்தை சேர்க்கிறது என்றும் அந்த அணியை சேர்ந்த குளோபல் ஆக்சன் பிளான் என்ற அமைப்பு வாதிடுகிறது.

இது ஒருபுறமிருக்க, தனியுரிமை குறித்த வழக்குரைஞரான டங்கன் மெக்கான், யூடியூப் நிறுவனம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்பு சட்டங்களை மீறி பிரிட்டனை சேர்ந்த 50 லட்சம் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணித்ததாக குற்றஞ்சாட்டி தனியே அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இது தொடர்பாக பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், யூடியூப் தளம் 13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்காக கட்டமைக்கப்படவில்லை என்ற வலுவான பதிலை அந்த நிறுவனம் முன்வைத்தது.

சட்டவிரோதமாக தரவுகள் பெறப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீடாக குறைந்தபட்சம் 100 முதல் 500 பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் சுமார் பத்து ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்) வரை அளிக்கப்பட வேண்டுமென்று மெக்கான் வாதிடுகிறார்.

https://www.bbc.com/tamil/science-54226016

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பாஜக நிர்வாகிகள் சட்டை கிழித்த விசிக கட்சியினர்  
  • இலங்கையில் நடந்தது போல் நடக்கும் 80 தெலுங்கு MLA க்களை உருவாக்குவோம்/ red pix / ntk / நாம் தமிழர்/ தமிழ் தேசியன்   ஆளுநருக்கு சகோதரி சரமாரி கேள்வி   
  • முதலாவது, எனது உவத்தலை, காய்தல்  புகுத்தாமலும், அப்படி சமூக அளவில்  உவத்தல், காய்தல் இருந்தால் அதை அகற்றாமலும் எனது பதிவுகள். எனது அனுபவங்களை, நான் கண்டதை, கேட்டதை எழுதுகிறேன். அது உவத்தல், காய்தல் அல்ல. நீங்கள் சொல்வது உங்கள் விருப்பம். ஆனால், அது யதார்த்தத்தில் இருக்காது. காலத்தை நீக்கி விட்டு ஒரு போதுமே நியாதிக்காக கண்ணோட்டம் எடுக்க முடியாது. அதனால் தான், அரிச்சந்திர காலத்தில் இருந்து, ஹிட்லரை தாண்டி, இன்று வரை வரலாற்று அனுபவங்களையும், அது ஏற்றப்படுத்திய பின்னோட்டமான நியாதிக்கத்தையும் உதாரணமாக, ஏன் ஊர் பேசிதையே சொன்னேன்.  உ.ம். ஆக இவைகளுக்கு ஓர் தீர்ப்பாயம் வெளியாரையும் உள்ளடக்கி வைக்கப்பட்டால், அது இங்கே நான் சொன்னதை விட பரந்து பட்ட வரலாற்று நியாயாதிக்கங்கள், அனுபவங்கள்  கருத்தில் எடுக்கப்பட்டே முடிவு எடுக்கப்படும்.   இன்னொன்று, நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே, காய்தல், உவத்தலோ, அல்லது அதற்கு மேலான நியாயாதிக்கம் (இருக்கிறதா அல்லது இல்லையா) என்பது பிறக்கிறது. அதிலேயே காலம் என்ற குறிப்பரை நீக்கிய நோக்கு இல்லாமல் போகிறது. மறுவளமாக,  எப்போதோ நடந்த குற்றத்திற்கு (செய்தவர் பிடிபடாமல், அல்லது யார் என்று அடையாளம் காணப்படாமல்), 30-40 வருடம் கழித்து அடையாளம் காணப்பட்டு, நீதி மன்ற கூண்டில் ஏற்றப்பட்டால், நீதிமன்றம் அந்த நேர நிலைமைகளையும், அந்த நேரத்தில் உருந்து அந்த குற்றம் பற்றிய சட்ட கோட்பாடு கூர்ப்படைந்து து உள்ளது, கூண்டில் ஏற்றப்படும் இருக்கும் சட்டம் என்பவற்றை கருத்தில் எடுத்தே தண்டனையை அடையும். அது கூட, பெரும்பான்மை jury ஆல் ஆமோதிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம், அதில் கூட பலரின் காலமம் சேர்த்த மற்றும் சேர்க்காத  குறிப்பரை முடிவை பாதிக்கிறது.         ஏன்னென்றால், நியாயாதிக்கம் (அல்லது எவ்வ்ளவு தவறி விட்டது) என்பது வரலாறு, அனுபவம், அந்த நேர நிலைமைகள் எந்தன் கூட்டு விளைவாக பிறக்கிறது.   எல்லா பக்கமும் ஆயுதம் தரித்து இருந்த போது, சகோதரப் படுகொலை என்று வகைப்படுத்த முடியுமா என்று ஓர்  கேள்வியும் இருக்கிறது. ஏனென்றால், இந்த இயக்கங்களை ஒன்றையும் சாரதா ஓர் ஆயுத அமைப்பு அந்த நேரத்தில் இருந்திருக்கிறது என்றும், அது எல்லாவற்றிலும் பலம் கூடியதாக இருந்து இருக்கிறது என்றும் வைத்து கொண்டால், அந்த அமைப்பு, அதன் பார்வையில், அந்த அமைப்பு தன்னை வேறு வெளிச்சக்திகளின் துணையோடு அழிக்க இடர்பாடுகள் நடப்பதாக அந்த அமைப்பு நம்பக் கொடிய சூழ்நிலையில்,  கொலையும் ஓர் தெரிவாக, கலைக்க முற்பட்டு இருக்க கூடிய  இடத்தில் செய்யப்பட்டு இருக்க கூடிய கொலைகளை சகோதர படுகொலைகள் என்று சொல்லப்பட்டு இருக்காது.         இதனால் தான், வன்முறை பிரயோகிக்கப்படக்கூடிய அதிகாரங்கள் இருக்கும் போது, அதன் தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் விதிகள் விதிக்கப்பட்டு, பின்பற்றப்பட வேண்டும்.     பிரபாகரன் இதில் காறாராகவே இருந்தார் என்பது 1983 -1985 இந்து ந்து ராம் எடுத்த பேட்டிகளில் இருந்து தெரியும். மேலும், புலிகள் மற்ற இயக்கங்களை, அதில் உள்ளவர்களை இயற்கை எதிரிகளாக (மற்ற இயக்கம் என்று) பார்க்கவில்லை, இங்கே புளொட் உறுப்பினர் சொல்வது மாதிரி. காரணத்தின் அடிப்படையிலேயே, எதிரிகளாக பார்த்தனர். இந்த காரணம், ஒன்று  புலிகள் தப்பி பிழைப்பது, மற்றது சித்தாந்த அடிப்படையில் தாம் எந்த காரணத்தினாலும் வெளி சக்தியினால் செல்லவாக்கு செலுத்தப்படக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது என்பது போன்றவை. அதிலும், பல இயக்கங்களை உருவாக்கி வெளிச்சக்தி ஊடுருவுவதை புலிகளும், புளொட் உம்  அறிந்து இருந்தது. டெலொ, eprlf, ஈரோஸ் இ பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால், ஈரோஸ் அதை அறிந்து கொள்ளாமல் இருந்தததற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து இருக்கும்.        இதை இன்னொரு நோக்கில், சொறி சிங்களதின், அரசு எனும் அடிப்படையில், வன்முறை பிரோயோகத்துக்கான வழிமுறைகள், பல படிகளில்,  legal frame work உம், due process உம், redress process  உம் இல்லை. இருந்த சாதாரண படிமுறைகளான, ஒருவர் எதிர்த்தோ அல்லது ஈதிர்ப்பு இல்லாமலோ  கொல்லப்பட்டால், உடனடியாக எல்லா உடல் உட்பட தடயங்களும் அழிக்கப்படலாம் என்பதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். இதனாலேயே, கிழக்கில் கிராமம், கிரமாக சுட்டு, கொளுத்தி சட்ட பூர்வமாக அழிக்கப்பட்டது.       மாறாக, புலிகள் (அல்லது அது போன்ற) அமைப்பு, என்னை பொறுத்தவரையில், சின்ஹல  அரசிலும் பார்க்க, மற்ற இயக்கங்களிலும் பார்க்க, எழுத்தில் இல்லா விட்டாலும்,   வன்முறை பிரோயோக தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் நியாயாதிக்கம், மற்றும் விதிகளை, அது அறியாமேலேயே பின்பற்றியது.   இவை வெளிப்படடையானவை.
  • மேலதிக தரவு கூட்டம் முதல் நீக்கின் வேடர்களும்  பயன் படுத்திய ஒரு கருவி நடு நீக்கின் நிறை அளக்கும் கருவி  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.