Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் அருணா

 

Sea-Tiger-Lieutenant-Colonel-Arunaa-scaled.jpg

துயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக் கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன்.

வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள மா, பலா, பனை, தென்னை போன்ற பயன்தரு மரங்களையும் தன் அணிகலனாக அணிந்திருந்தாள் துன்னாலை அன்னை. அருணா துள்ளி விளையாடிய பெருமைக்கும், கறுப்பு மலர் கரும்புலிகள் வரிசையில் தன் பெயரை முதலாவதாகப் பதித்த கப்டன் மில்லரை வளர்த்தெடுத்த பெருமைக்கும் உரியவள் இவளே.

இராசேந்திரம் பூமணி தம்பதிகளின் அருந்தவப் புதல்வனாக சசிகரன், கண்ணன் என்னும் செல்லப் பெயருடன் 16.12.1973ல் அவதரித்தான். அன்னை அரவணைப்பிலும் தந்தையின் வழிகாட்டலிலும் வளர்ந்து வரும் நாளில்….

பாரினில் தமிழ் வீரனாய் வீறுநடை போடும் விடுதலைப் போராட்டத்தில் 1989ம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டான். அன்று முதல் இவன் அருணா – அருணன் என அழைக்கப்பட்டான்.

‘தினேஸ் 11’ பயிற்சி முகாமில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து பல துறைகளிலும் செயற்பட்டு வரும் நாளில் 1991ம் ஆண்டு ஆ.க.வெ சமரிற்கு இவன் தலைமையில் 30 பேர் கொண்ட அணி அனுப்பப்பட்டது. எதிரியுடன் ஆவேசத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த வேளை. இவனது அக்கா கப்டன் லீமா வீரச்சாவடைந்த செய்தி இவன் செவிகளுக்கு எட்டிற்று. இரண்டு கண்களில் இருந்தும் நீர்ப்பூக்கள் மாலையாக உருவெடுத்து அக்காவிற்கு அணிவித்து மன உத்வேகத்துடன் போராடினான். பின்னர் கட்டைக்காட்டிலிருந்து புல்லாவெளி நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த இராணுவத்தினரை வழிமறிப்பதில் இவனுடைய அணி ஈடுபட்டிருந்த வேளை இவன் தலைப் பகுதியில் காயமுற்றான். மணலாற்றுப் பகுதியை முற்றுகையிடும் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்ததை அறிந்தவன் தானும் போர்க்களத்திற்கு சென்று போரிட எண்ணி பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டான். பூரணமாக குணமடைந்த பின் களத்திற்குச் செல்லலாம் என பொறுப்பாளர் கூறினார். அதற்கு ‘எனக்கு காயம் மாறிவிட்டது’ எனக் கூறி அனுமதி வேண்டினான். இச் சண்டைக்கும் 30 பேர் கொண்ட அணி இவன் தலைமையில் அனுப்பப்பட்டது. 25 நாட்கள் இச்சமர் நடைபெற்றது. இவனும் இவனுடைய அணியும் ஆவேசத்துடன் செயற்பட்டனர். இச்சமரின் போது மீண்டும் இவன் விழுப்புண் அடைந்தான.

இவனது திறமையையும், துணிச்சலையும், சுறுசுறுப்பையும் கண்ட பொறுப்பாளர் இவனை 1993ம் ஆண்டு வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக நியமித்தார். தன் கடமையைச் சிரமேற்கொண்டு திறம்படச் செயற்பட்டான். இங்குள்ள சிறு குழந்தைகளின் உள்ளங்களிலே இவனது அன்பு வேரூன்றிவிட்டது. இங்கு வாழும் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்று அவர்களின் அன்புக்குரியவன் ஆனான்.

வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கெனத் தெரிவு செய்யப்பட்டவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான். தன் திறமைகளை அங்கும் வெளிக்காட்டி நன்நிலை அடைந்தான்.

1995ஆம் ஆண்டு பலாலிப் பகுதியில் இவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார்த் தாக்குதலின் போது, எதிரியின் எறிகணை ஒன்றினால் தன் கால் ஒன்றினை இழந்தான். எனினும் மனந்தளரவில்லை. தொடர்ந்து யாழ் மாவட்ட நிர்வாக வேலைகளைத் திறம்படச் செய்தான். ‘சூரியக்கதிர்’ நடவடிக்கையின் போது பின்தள வேலைகளை வினைத்திறனுடன் செய்து முடித்தான். இதன் பின் வன்னிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணப் பகுதியில் நிற்கும் போராளிகளுக்கான உணவு மற்றும் விநியோகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான.

1996ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கடலன்னையுடன் விளையாட விரும்பி கடற்புலி அணியில் தன்னை இணைத்துக் கொண்டான். கடலிலே வரும் அந்நியனின் கலங்களை கதிகலங்கிடச் செய்யும் போர் முறைகளிலே தேர்ச்சி பெற்றான். இவனது துணிவும், மனவுறுதியும், செயற்பாடுகளும் இவனை ஓர் கடற்புலித் தளபதியாக பல அணிகளை வழிநடாத்தும் ஓர் வீரனாக உருவாக்கியது.

22.09.1998 அன்று காலைக்கதிரவன் கதிர்களைப் பரப்பி இருளை ஒழித்து ஒளிபரப்பும் நேரம். அதிகாலை 5:30 மணி. எதிரியின் கலங்கள் ‘நான்’ என்ற அகங்காரத்தில் அணிவகுத்து முல்லைக் கடற்பரப்பில் வந்து கொண்டிருந்தன. அவ்வேளை அருணாவின் அணியின் கலங்கள் கண்களைத் திறந்து கொண்டன. எதிரியின் படகுகள் சிதறி ஓடும்படி செய்தன. பின்நோக்கிச் சென்ற படகுகளை இடைமறித்துத் தாக்குவதற்காக அருணா அணியின் படகுகள் மிக வேகமாக, உற்சாகமாக சென்று கொண்டிருந்த வேளை எதிரியின் கலத்திலிருந்து ஏவப்பட்ட ரவை ஒன்று அருணாவை எம்மிடமிருந்து பிரித்தது. சுதந்திரத் தமிழீழக் காற்றை சுவாசிப்பதற்காக பத்து ஆண்டுகளாக எம்முடன் கலந்திருந்தவன், இன்று……. கடலன்னை மடியில் தலை வைத்து மீளாத்துயில் கொள்கின்றான்.

நினைவுப்பகிர்வு: போராளி லீமா (தலைமைச் செயலகம்)
நன்றி – எரிமலை இதழ் புரட்டாதி, 2000.

https://thesakkatru.com/sea-tigers-lieutenant-colonel-arunaa/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By உடையார்
   லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன்
    
    

    
   அவன் நிறைய சாதிக்க வேண்டியவன்.
   யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினும் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும் தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்கும் அல்லவா? இல்லையே?
   விதையை உடைத்து மண்ணைப் பிளந்து யாழ்மண்ணில் பலத்தையெல்லாம் திரட்டி காற்றைக் கிழித்து சூரியனைத் தொட்டுவிடத் துடிக்கும் பனைமரத்துடன் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வனையும் பார்க்கிறேன்.
   1990 யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிலிருந்து மீண்டும் தமிழர் படையாம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த நேரம்.
   மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளருக்கு முகவர்களாக செயற்பாட்டாளர்களாக ஆட்கள் தேவைப்பட, ‘கட்டைக்’ குணத்தாரை அணுகி “குணம் அண்ணா உங்கட ஊர்ப்பக்கம் புலனாய்வு வேலைகள் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஆட்கள் தேவை இருந்தால் ஒழுங்கபடுத்தித் தாருங்கோ” என பொறுப்பாளர் கூற குணத்தாரின் மூளையில் பொறியாய்த் தட்டுப்பட்டவனே பிரபாகரன் எனும் இயற்பெயரைக் கொண்ட கரன். குணத்தின் ஈருருளி பூவரசு, வடலி, மதில் ஒழுங்கைகளினூடாக விரைந்தோடி பண்டத்தரிப்பைக் கண்டு வடலி அடைப்பை அடைய, அப்பொழுதுதான் கொழும்பிலிருக்கும் தந்தையிடம் சென்று வந்த களைப்பில் அவன் நின்றான்.
   “கரன், புலனாய்வு வேலைகளுக்கு ஆட்கள் தேவையாம் – பகுதி நேரமாக வேலை செய்ய உன்னால் முடியுமே?” சுற்றி வளைத்துக் கதைக்கத் தெரியாத குணத்தார் நேராய்க் கேட்டார். சில நிமிட அமைதியின் பின் “அண்ணை என் தம்பி எனக்கு முன் தன்னை விடுதலைப் பாதையில் இணைத்துக் கொண்டது என் மனட்சாட்சியை நித்தமும் குடையுது. பகுதி நேரமாக விடுதலைக்காக உழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. முழுமையாக என்னை இணைத்துக் கொள்வதைப் பற்றியே சிந்திக்கிறேன்.” அவனது சோடனையற்ற தெளிவான பதிலை குணத்தார் எதிர்பார்க்கவில்லை. மூன்று சகோதரர்களில் ஒருவன் ஏற்கெனவே நீலவண்ணன் ஆக தன்னை முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் தாயாருக்கு ஆதரவின்றி, தமக்கைக்கு உதவியின்றி இவனை முழு நேரம் போராளியாகச் செயற்படும்படி கேட்க குணத்தாரின் கனிவு துணிவைக் கொடுக்கவில்லை.
   போரின் வடுக்களை அதிகம் சுமக்காத பண்டத்தரிப்பு சிற்றூரில் சிவபாக்கியநாதன் இராசமணி குடும்பமும் போரின் வடுக்களை அதிகம் சுமக்காத, விடுதலைப் போருடன் அதிகம் ஈடுபாடு கொண்டிராத குடும்பம். இருந்தும் குணத்தார் கதைத்துச் சிறிது காலத்தின் பின் 13.09.1991 புலிகள் அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்து விடுதலைப் பாதையில் பயணிக்க முதல் அடியை எடுத்து வைத்தான் செந்தமிழ்ச்செல்வன்.
   செந்தமிழ்ச்செல்வன் பெயரிலிருக்கும் அழகு, அறிவு, அமைதி, விருப்பு, ஈர்ப்பு, செழிப்பு எல்லாமே அவனிலிருந்தன. சிங்கத்தின் தோற்றத்தைப் பார்த்தே அதன் குணத்தை அறிந்து விடலாம். இவன் அப்படிப்பட்டவனல்ல. யானையைப்போல் அமைதி, அழகு, ஆழம், பக்குவம், வீரம் எல்லாமே. அதனால் அவனைப் புரிந்து கொள்ள அளவெடுக்க சிலருக்கு சிரமமாயிருந்தது.
   டேவிட் 01 பயிற்சி முகாம் வாழ்வே விளையும் பயிரை அடையாளப்படுத்தியது. பல்வேறு சாயல் உள்ள உபயோகமுள்ள பல்வகைப் பொருட்களை வைத்து சில மனித்துளிகளில் மனதில் பதித்து வெள்ளைத்தாளில் எழுதுமாறு கூறி பயிற்சிப் போராளிகளின் நினைவாற்றலை பயிற்சி ஆசிரியர் அமீன் பரிசீலிப்பார். எல்லோரும் எழுதத் தொடங்க “பேனாக்களை கீழே வையுங்கோ ஓடுங்கோ” என கட்டளை பிறக்கும். பிறகென்ன எல்லோரும் ஓடத் தொடங்க மனதில் உள்ளவை அனைத்தும் மறந்து விடும். இவன் மட்டும் ஒவ்வொரு தரம் விழுந்து எழும் போதும் ஒவ்வொரு பொருளாய் உச்சரிப்பான். “வெற்றி பெற வேணும் அல்லது செய்து காட்ட வேணும்” என்ற அவனது முயற்சி அதிக புள்ளிகளை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கும். அப் பயிற்சி முகாமிலிருந்து சிறப்பப் பணிக்கென தேர்வுசெய்த பதினைந்து போராளிகளினுள் இவனும் ஒருவன்.
   யாழ் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற அறிவும், இயல்பான புலனாய்வுச் சிந்தனையும்இ ஒல்லியான பளிச்சென்ற வெள்ளை உருவமும், அலட்டல் அற்ற அமைதித் தன்மையும் யாருக்கத்தான் பிடிக்காது. அவை புலனாய்வுப் பணிக்கான சாதகமான கூறுகள். ஆரம்ப புலனாய்வுப் பணிக்கான களங்களாக இவனுக்கு நல்லூர், பாசையூர், குருநகர் பிரதேசங்கள் அமைந்திருந்தன.
   1994 விடுதலைப்போர் வீரியமும், வீச்சம் பெற்றிருந்த காலம். விடுதலை வீச்சை, மூச்சை, அதன் வேரையே தன் வீட்டு நலனுக்காக, எஜமானிய இருப்புக்காக அரித்துவிடத் துணிந்த அயல் “வீட்டுக் கறையான்” களின் கரங்களை முறியடிக்க, முறித்தெறிய ஒழுங்மைக்கப்பட்ட புலனாய்வுப் பணியில் ‘மனிதனுக்கு இதயம்’ போன்ற அலுவலகப்பணி இவனுடையது. புலனாய்வுப் பணியில் சிறு தகவல் கூட பெரும் முடிச்சை அவிட்டுவிடும். போலித் தகவல்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே முடிச்சுக்களைப் போட்டு ஆபத்துக்களையும் உண்டுபண்ணிவிடும் – பாலையும் தண்ணீரையும் அன்னத்தால் வேறுபடுத்த முடியுமோ இல்லையோ புலனாய்வாளன் உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்தித் தான் ஆக வேண்டும்.
   புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையில், “சிறந்த புலனாய்வாளனின் வரலாறு என்பது, அவன் சேகரித்து ஆய்ந்து எழுதிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள், விடுதலைப் போரின் வளர்ச்சிக்கு, தமிழீழ கட்டுமாணத்திற்கு எத்துணை துணை புரிகிறதோ, அதுவே அவனது வரலாறாகிறது” என்ற அவரின் பார்வையில் தன் அலுவலுகப் பணிகளை, தூரநோக்குடன் காலம் கடந்தும் பயன்தரக்கூடியதாய் உண்மை பொய் அறிந்து, தகவல்களைக் கோவையாக்கி, தன் முக்கியத்துவம் விளங்கிஇ தன் பணி முக்கியத்துவம் விளங்கி புலர்வே இல்லாப் பொழுதுகளில் பணியாற்றியதை இவன் பொறுப்பாளர் இன்றும் சிந்தித்து நினைவு கூறுகிறார்.
   (இரகசியம் என்பதால் விரித்துரைக்க முடியவில்லை)
   நிர்வாகச் செயற்பாட்டின் பெறுபேறுகளை கோவையாக்குதல், தகவல்களைப் படிவங்களில் பூர்த்தி செய்தல், தேவையானவற்றினைப் பெறுதல்…என நீளும் அலுவலகப் பணிகளை தூரநோக்குடன் காலங்கடந்தும் பயன்தரக்கூடியதாய், புதிதாய் வரும் பொறுப்பாளன், போராளி பயன்படுத்தக் கூடியதாய் உண்மை, பொய்மை அறிந்து கோவையாக்கி, தன் பணி முக்கியத்துவம் விளங்கி புலர்வே இல்லாப் பொழுதுகளில் பணியாற்றியதை இவன் பொறுப்பாளர் இன்றும் சிந்தித்து நினைவு கூறுகிறார்.
   வழங்கப்பட்ட பணி முடிவடையவில்லை எனின் முகாமிலிருந்து ஐந்நூறு மீற்றர் முன்னுக்கே உந்துருளியின் இயக்கத்தை நிறுத்தி ஓசையின்றி அதனை உருட்டி முகாம் வந்து தன் பணி முடித்து மீண்டும் அதனை உருட்டி ஐந்நூறு மீற்றருக்கு அப்பால் இயக்கி தன் பணிக்காக விரையும் இவன் செயல் பொறுப்பாளர்களுக்குக் கொடுக்கும் மதிப்புக்கப்பால், தன் பணிக்குக் கொடுக்கும் மதிப்பையே முன் நிறுத்தும்.
   “தம்பிமாரே, சண்டைக்குபோக விருப்பமான ஆட்கள் கையை உயர்த்துங்கோ”
   புலனாய்வுப் பணியில் சலிப்பு வந்துவிட்டதா? என பார்ப்பதற்கான பொறுப்பாளரின் உத்தி இது. தயங்கித் தயங்கி ஆளையாள் பார்த்து கைகள் உயரும். ‘ஒரு நாள்’ உயர்ந்த கைகளினுள் இவனது கையும் ஒன்றாய் இருந்தது. பிறகென்ன, வழமைபோல் கடற்கரை வெட்டையில் தகதகக்கும் சுடு மணலில் உருட்டி உருட்டி சண்டைக்கான பயிற்சிகள் நடைபெறும். ஆனால் இறுதியில் சண்டைக்கான வாய்ப்பு மட்டும் கிடைக்காது போகும்.
   10.03.95 மீண்டும் ஒருதரம் யாழ்மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சிங்களப் படை நடவடிக்கையான இடிமுழக்கம் சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலைப் பார்ப்பதற்காக இவன் சென்ற போது தான் தற்செயலாக தனது தம்பி லெப். நீலவண்ணன் யாழ் மண்ணை தக்கவைக்கும் சமரில் வீரச்சாவைத் தழுவியிருந்தமையைக் கண்டான். சக போராளி என்பதற்கப்பால் இடுப்பில் சுமந்து திரிந்த கடைசித் தம்பியுமல்லவா? இறுதியில் அவனைத் தோளில் சுமந்து செல்லக்கூட இன்றைய போர்ச் சூழல் இவனுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை.
   1996, 1997 புலிகளே இல்லாத யாழ்ப்பாணத்தை சிங்களத் தலைமை கனவுகண்டு ஆக்கிரமித்திருந்த காலம். ஒடுங்கிய குடாப்பரப்பைச்சூழ படைவேலி அமைத்து, சந்திக்கு இரு படைத்தளம் அமைத்து, முழத்துக்கு ஒரு சிங்களப்படைவீரனை காவலுக்கு விட்டிருந்த நேரம். யாழ்மண் குடாவாக விரிந்து ஒடுங்கியமை பாதுகாப்பு ரீதியில் சிங்களப்படைக்கு அதிகம் சாதகமாயிற்று.
   தலைவர் அவர்கள் குறிப்பிடுவது போல் எந்தப் பலத்திலும் பலவீனம் இருந்திடாமலா போய்விடும் “பலவீனம் இல்லாவிட்டாலும் பலம் உடைத்து உட்புகுவோம்” என்ற விடுதலை வீரர்களின் வீச்சை சிங்களத் தலைமையின் ‘ஆக்கிரமிப்பு மனோபாவம்’ உணரவிடவில்லை.
   துப்பாக்கியுடன் கொரில்லா வீரனாக யாழ் மண்ணில் நடவடிக்கையில் ஈடுபடுவது அதிக ஆபத்தை உருவாக்கி இருந்த காலத்தில் மக்களுடன் மக்களாக, அவர்களின் புதல்வர்களாக, தேவை ஏற்படும் போது மட்டும் கைத்துப்பாக்கியுடன் தாக்குதலாளர்களாக தயார் படுத்தப்பட்ட புலனாய்வு அணியில் இவன் முதன்மையானவன். பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணில் ஒவ்வொரு வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் புலனாய்வு செய்வதற்காக, ஆக்கிரமிப்பாளனின் பிடரியில் அடிப்பாற்காக புலனாய்வுப் படையியற் பயிற்சிக்காக முல்லைத்தீவுக்குச் சென்றான்.
   என்ன பயிற்சி? கரும்புலி வீரனுக்குரிய பயிற்சி, எதிரியை அடித்து விழுத்தி துப்பாக்கியை பறித்தெடுக்கும் பயிற்சிஇ உணவு உறக்கத்தை மறந்து சகிப்புடன் மறைந்திருக்கும் பயிற்சி என நீண்டுகொண்டே சென்ற பயிற்சியில் ஒருநாள் ஓய்வுப் பொழுதில்…
   இவனுடன் அன்பு வாத்தி உந்துருளியில் புதுக்குடியிருப்புக்கு வந்து கொண்டிருக்க பெற்றோல் தீரும் நிலை, பல ஒழுங்கைகள் சுற்றி ஒரு வீட்டின் வாசலில் உந்துருளியை நிறுத்தியவன்இ “மாஸ்ரர் ஆதரவாளர் ஒருவரைச் சந்திக்கோணும் குறை நினைக்காமல் வாசலில் நில்லுங்கோ” போனவன் விரைவாகவே திரும்பினான். “பெற்றோல் தீரப்போகுது ஒழுங்கைகள் எல்லாம் விட்டுக் கொண்டோடுகிறீர்கள்…” உந்துருளியில் பின்னால் இருந்து அன்பு வாத்தி கேட்க “பெற்றோல் அடிச்சாச்சு மாஸ்ரர், உங்களைக் கூட்டிப்போனால் சனம் உங்கடை முகத்தைக் காண பிறகு என்னைச் சாட்டி நீங்கள் பெற்றோல் அடிக்க…”, “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” அன்பு வாத்திக்கு உறைத்தது.
   கூப்பிடு தூரத்திலிருந்தும் யாழ் மண்ணுக்குப் பயணிப்பதாயின் ஏதாவதொரு கடல் வழியையே பயன்படுத்த வேண்டும். ஆழமான கடற்பகுதி அதற்கு வாய்ப்பளிப்பதில்லை. ஆதலால் உப்பு ஏரிகளே தெரிவுசெய்யப்படும். ‘குல்லா’ என அழைக்கப்படும் சிறு ஓடங்களின் ஆதரவுடன் தற்துணிவைத் துடுப்பாக்கி பயணம் தொடரும். வயிறு விழுங்கி ஆறு (நீரோட்டம்) சில வேளை வீச்சாய் ஓடும். அல்லது சாதுவாய் ஓடும். வீசும் கடுங்காற்றைக் கடந்து இருட்டைக் கிழித்து ஓடம் நகரும்.
   அன்றும் அப்படியான பயணம் தான். “அண்ணை, இடுப்பளவு தண்ணீர் வந்திட்டா எங்களை இறக்கிவிடுங்கோ. நாங்கள் தரையேறும் வரை எங்களுக்காகக் காத்திருங்கோ சில வேளை ஆமி சுடத்தொடங்கினால் நாங்கள் எப்படியும் தப்பிவரப் பார்ப்பம் அப்படி வெடிச்சத்தம் ஏதும் கேட்காட்டால் தரையில் நிற்கிற பொடியளிட்டை நாங்கள் சுகமாய் போய்ச் சேர்ந்ததாய் சொல்லுங்கோ” பொறுப்பாய்ச் செல்லும் இவன்தான் அப்படிக் கூறுவான். செய்திக்காக ஓட்டி காத்திருக்க அவர்களின் பயணம் தொடரும். சிங்களப் படைகளின் அதிவெளிச்ச மின்குமிழ்கள் (FOCUS LIGHT) ஏரிப்பரப்பில் ஒளியைப் பாய்ச்சும். கண்கள் மட்டுமே வெளியே தெரிய நீருக்குள் மறைந்து கொள்வார்கள். இருள்கவிய மீண்டும் பயணம் தொடரும். குரையை அண்மிக்க கூரிய கத்திபோல் நீண்டிருக்கும் ‘கவாட்டி’ ஊறிய பாதங்களை பதம் பார்க்க ஊறிவிறைத்து உறைந்து போன பாதங்களுக்கு வெட்டுவதும் தெரியா குத்துவதும் தெரியா. ஆனால் குருதி கொப்பளிக்கும். அமைதியாக நகர்ந்து கரையேற ஏதோ ஒரு அசமாந்தம் படையினரை விழிப்படைய வைக்க அவர்கள் துப்பாக்கிகள் சடசடக்கத்தொடங்கியது. காதைக் கூர்மைப்படுத்திக் காத்திருக்கும் ஓட்டிக்கு விடயம் விளங்க சத்தம் வரும் திசையை நோக்கி ஓடத்தைச் செலுத்த, போனவர்கள் மீண்டு வந்தார்கள். தொடக்கப் புள்ளிக்கு வந்துசேர, உப்பூறிய றொட்டிகளும் ஒருநாளுமே சுவைத்திடாத சுவையைத்தர அதைச் சாப்பிட விடாமல் நுளம்புகள் மோசம் செய்தன. அவற்றை விரட்டுவதற்கு இருந்த ஒரே வழி அவர்களது பழைய செருப்புகள். செருப்புகள் நெருப்பில் எரியத் தொடங்க.. கடசியாக எரிந்து கொண்டிருந்தது இவனது ஒற்றைச் செருப்பு. சூரியன் பகலைத்தர ஒற்றைச் செருப்பு மட்டுமே எஞ்சியது. இன்னொரு இரவில் இவர்கள் தங்கள் பயணத்தில் வெற்றிகண்டனர்.
   லெப். கேணல் சிவனேசனுடன் வலிகாமம் சென்றவன், தாம் இரவு தங்க வேண்டிய கோண்டாவில் ஆதரவாளரின் வீட்டினை பல மணி நேரம் தேடியும், கண்டுகொள்ள முடியவில்லை. நாய்கள் குரைக்கத் தொடங்கியிருந்தன. “இரவில் நடமாடுவது ஆபத்தானது” என உணர்ந்த இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாத இருவேறு வீடுகளில் கதவினைத் தட்ட அந்த இரவில் ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் யார்தான் கதவினைத் திறப்பர்? பிறகென்ன வாசல் படிகளில் அரைகுரை உறக்கத்தில் நம்பிக்கையுடன்… காலையில் வீட்டாருக்கு அதிர்ச்சி, அவர்கள் தங்களை அறிமுகப்படுத்த வீட்டாரின் மனப்பீதி இன்னும் அதிகமானது. தாம் தேடிவந்த வீட்டினை விசாரிப்பது புலனாய்வுச்சிக்கல். ஒருவாறாய் கோண்டாவில் சந்தியில் ‘றோசாப்பூ’ எனும் குறியீட்டுப் பெயரைக் கொண்ட ஆதரவாளனைக் கண்ட போது “கடவுளே உங்களுக்கு நல்ல காலம் தான்இ என்ரை வீட்டை உடைச்சு ஆமி எல்லோ இருக்கிறான்” என்ற அதிர்ச்சித் தகவல்களுடன் தன் தற்காலிக வீட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்றாரர்.
   மறுநாள் சிவனேசனை முன் இருக்கையில் ஏற்றி ஈருருளியை சந்தியில் திருப்ப ‘படையினர்!’, சடுதியாக ஈருருயியைத் திருப்பியவன் “நாங்கள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வந்தவர்கள். ஆமி, அடையாள அட்டையைக் கேட்டாலும் அதனைக் காட்டி சாதுரியமாய் தப்பி பணியாற்ற வேண்டும்” என்ற பொறி சிந்தனையில் தட்டுப்பட ஈருருளியைத் தேநீர்க் கடைக்கு செலுத்தினான். உண்மையில் அவர்களது அதிஸ்டம், அன்று எதுவுமே நடக்கவில்லை. பின்னாளில் எல்லாமே அத்துப்படியானது. படை உளவாளிகள் கூட இவனின் நண்பர்களானார்கள்.
   இவனது பணியில் தாக்குதல் நடவடிக்கை என்பது இரண்டாம் பட்சமானவை. இரகசிய செயற்பாட்டாளர்கள் தங்கி வேலை செய்யும் வீடுகள், அவர்களுடைய அம்மா, அப்பா, சகோதரர்கள், அன்ரி…. என உறவுகள், படை உளவாளிகளின் கண்களினுள், அயல் வீட்டாரின் கண்களினுள் சந்தேகப் பிராணியாய் விழுந்திடாதபடி சூழலுக்கேற்ப, வயதுக்கேற்ப, தோற்றத்திற்கேற்ப மறைப்புத் தொழில்கள் என இவனது புலனாய்வுச் செயற்பாடுகள் துடிப்புடன் நீண்டதில், வலிகாமத்தில் சிவனேசன், எமர்சன், சிவம், சுந்தர் எனப் பல இரகசிய செயற்பாட்டுப் போராளிகளை நிலைப்படுத்த வழிவகுத்தன. செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் ‘வன்னிக்கு வரவும்’ கட்டளைப் பணியகத்திலிருந்துப் பொறுப்பாளரின் தகவல் அவன் கரம் சேர்ந்தது.
   “வன்னிக்கு போகுமுன் தாக்குதல் செய்ய வேண்டும். விரைவாகச் செய்ய வேண்டும். நல்லதொரு இலக்காகத் தேர்வு செய்ய வேண்டும்” இவனது உதடுகள் இப்படித்தான் உச்சரித்தன.
   வேவு முடிந்து, தயார்ப்படுத்தல் முடிந்து தற்கொடையாளனுடன் இலக்கை அண்மிக்க சில மணித்துளிகளில் இலக்குத் தப்பிட முதல் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
   இன்னுமொரு முயற்சி, மறைப்பொன்றைத் தேடி ஆபத்தைச் சந்தித்து மறைப்பைப் பெற்று அதற்குள் கண்ணிவெடியை (CLAY MOUR) வைத்துக் காத்திருக்க இலக்கு வரவேயில்லை.
   படைப் பிரதேசத்தினுள் தாக்குதல் நேரத்து சாதுரியத்தை, துணிவை விட தாக்குதல் முயற்சியின் போதே அதிக துணிவும், சாதுரியமும் தேவைப்படும். நிறைந்த ஆபத்தைச் சந்தித்தும் முயற்சிகள் வெற்றியளிக்காமை இவனது மனதை உடைத்தது உண்மைதான்.
   வன்னிக்குச் செல்வதற்கான நாள் வந்தது. எண்ணத்தில் துடித்த முயற்சிகள் வெற்றிகொள்ளப்படாத கவலை ஆட்கொள்ள ‘முயற்சிகள் தான் வெற்றிக்கான படிக்கற்கள்’, என புலனாய்வுப் பொறுப்பாளர் கூறுவார் என்பதை அறியாத இவனை சிறு ஓடம் மீண்டும் வன்னிக்கரையில் சேர்ப்பித்தது. இவனது செயற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டன. கோவையாக்கப்பட்டன. நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. ஆத்ம பூர்வமாக நேசிக்கப்பட்ட தலைவரை சந்தித்தான். தலைவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டான். புதிய கட்டளைகள், புதிய செயற்பாடுகளுடன் இன்னும் அதிக துணிச்சலுடன், நம்பிக்கையுடன் யாழ் உள்ளக புலனாய்வுக் கட்டளைப் பொறுப்பாளராக மீண்டும் யாழ் மண் இவனை வரவேற்றது.
   1999 முற்பகுதி “சிங்களப் படைப்பிரிவின் புலனாய்வாளர்களையும் துணைபோகும் கைக்கூலிகளையும் அழித்தல், அவர்களது செயற்பாடுகளை நடமாட்டத்தை முடக்குதல் என்பன யாழ் மண்ணில் போராளிகளின் செயற்பாட்டை இலகுபடுத்த வழிசடைக்கும்” என்ற தலைமையின் முடிவு இவனை செயலில் இறக்கியது.
   அது ஒரு ஞாயிற்றுக்கிழமை இரண்டு, “சிங்களப்படை உளவாளிகள் யாழ்நகர் கடையொன்றில் கூடுவது வழமை” என்ற வேவுத் தகவலின் அடிப்படையில் அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈருருளியை இவன் மிதிக்க முன்னிருக்கையில் கைத்துப்பாக்கியுடன் சகபோராளி. காலை பத்துமணி வரை இலக்கு கண்ணில் புலப்படவில்லை தொடர்ந்து அவ்வீதியில் நடமாடுவதன் ஆபத்தைக் கருத்திற் கொண்டு தங்குமிடம் சென்று, பின் மீண்டும் மாலை நான்கு மணிக்கு நடவடிக்கை தொடர்ந்தது. இரவு ஏழு மணியாகியும் இலக்குவர வேண்டிய இடத்துக்கு வரவில்லை ஈருருளியை யாழ்நகர கஸ்தூரியார் வீதியால் இலக்கைத் தேடி மிதிக்கையில் சற்று முன்னால் சென்ற ஈருருளியின் முன் இருக்கையில் இருந்து பயணிப்பவன் ஆக்கிரமிப்பாளனுடன் சேர்ந்து செயற்படும் கைக்கூலிக் குழு ஒன்றின் யாழ். மாவட்டப் பொறுப்பாளன் என்பதை கடைத்தெருவில் ஒளிர்ந்த மின்குமிழின் வெளிச்சம் காட்டியது. “தேடி வந்த இலக்கைவிட தற்செயலாகக் கண்ட இலக்கு பெறுமதியானது அழிக்கப்பட வேண்டியது” சடுதியாக இவனது ஈருருளி வேகம் கொள்ள துப்பாக்கிக் குறியில் இலக்குத் தப்பவேயில்லை.
   இன்னொருநாள், நல்லூர்ப் பிரதேசத்தில் படைப் புலனாய்வாளர்களுடன் இணைந்து போராளிகளைக் காட்டிக்கொடுப்பதிலும் படையினருடன் நெருங்கி ஒத்துழைத்து வந்ததுமான இலக்கு, அழிக்கப்பட வேண்டிய இலக்கு வேவுத் தகவல்கள் எல்லாவற்றையும் இவனே முடித்திருந்தான். இன்றும் முன்னிருக்கையில் சக போராளி கைத்துப்பாக்கியுடன் இருக்க ஈருருளியை இவனே இலக்கின் வாசல் வரை ஓட்டி வந்தான். இலக்கின் பெயர்கூறி இலக்கை அழைக்க, வெருட்சியுடன் “இந்தப் பெயருக்குரியவன் நானில்லை” என குற்ற உணர்வுடன் இவர்களை நோக்கித் திரும்பியது இலக்கு. காட்டிக்கொடுப்புக்கு வழமை போலவே ஒறுப்பு அளிக்கப்பட்டது.
   இன்னுமொருநாள், முக்கிய இலக்கு ஒன்றை அழிப்பதற்காய் பயிற்சி முடித்திருந்த தாக்குதலாளனை வன்னியிலிருந்து உப்புநீரேரி கடந்து யாழ் மண்ணுக்கு அழைத்து வருகையில்…
   06.06.1999 நீரேரி ‘கவாட்டியால்’ பாதங்கள் கிழிக்கப்பட்ட நிலையில் இவனும் தோழர்களும் பாசையூர் கடற்கரையிலேறி பிரசவ விடுவியை அண்மிக்க சிங்களத்தில் ‘யார்?;’ என சிங்களச்சிப்பாய் வினாவ, துப்பாக்கிகள் சடசடக்கத் தொடங்கின. கப்டன் சித்தார்த்தன் வீரச்சாவைத் தழுவ தப்பி ஓடியவன் ஏறிய ஒழுங்கைகள், சந்திகள் எல்லாமே படையினர். பிறகென்ன உயிர் பிழைப்பதற்கான இவனது கடைசி முயற்சி வெற்றியைக் கொடுத்திருந்தது. யாருக்கும் தெரிந்திடாத ஒரு மறைவிடத்தில் ஆயிரம் கைகள் உணவூட்ட காத்திருந்தும் அக்கைகளுக்குத் தெரியாமலேயே பதுங்கிக்கிடந்தான் நாளைய பாய்ச்சலுக்காய்.
   மறுநாள் அவனை அரவணைத்து தன் வீட்டின் பிள்ளையாக வைத்திருந்த தேசத்தின் அன்னை கூறினார் “என்ர பிள்ளையின்ர கால்களிலெல்லாம் காயங்கள், முள்ளுக் கீறல்கள். நான்கைந்து நாட்களாக ஒரேநாரி நோவு. பிள்ளை சோர்ந்தே போனான். இரவிரவாக நானும், அப்பாவும் காலுக்கு மருந்து போட்டு நாரிக்கு எண்ணெய் தடவி அவனை பிள்ளை ஆக்கினம்”.
   “அம்மாவோட தான் அவன் நல்ல வாரப்பாடு 18.06.99 அன்று அதிகாலை எழும்பியவன் என்னிடமிருந்த பயபக்தியையும் மீறி வழக்கத்துக்கு மாறாய் ஒருநாளும் இல்லாத செல்லம் கொஞ்சினான்.
   என் கைகளைப் பிடித்து “அப்பா, இந்த ஆயிரம் ரூபாவை ஏதாவது அநாதை இல்லத்துக்கு கொடுங்கோ எனக்கு இன்று பிறந்தநாள்” என்றான். நான் பணத்தைக் கொடுத்து பற்றுச்சீட்டை கொடுக்கலாம் என்றால் “உங்களில் என்ன நம்பிக்கை இல்லை என்றா தாறியள்?” எனக் கேட்டான். கொடுக்காட்டில் எனது மனட்சாட்சிக்குப் பிழை. நான் அதைக் கொடுக்கவே இல்லை. 29 வயதில் அவனது பக்குவத்தை எண்ணி வியந்தே போனேன்.” கலங்கும் அம்மாவின் கண்களைப் பார்த்து கலங்கியபடியே இப்படித்தான் அப்பா கூறினார்.
   சக நண்பனைப் பாதிவழியில் இழந்த துயர் இவன் இதயத்தை அம்பாகத் துளைத்தாலும், தன் பாதையில், இலக்கில் அம்பு போல் செயல்படலானான்.

   “யாழ் கொட்டடியில் சீனிவாசன் வீதியில் இரண்டு சிங்களப்படைப் புலனாய்வாளர்கள் மாஸ்ரர் ஒருவரின் வீட்டுக்கு வந்து போகின்றனர்” பூட்டு எனப்படும் விடுதலைப் பற்றாளனின் வேவுத் தகவல் அது. ஒரு இரவுப் பொழுது மாலை ஏழு மணி, சக போராளியுடன் இலக்கத்தைத் தேடிச் சென்றான். துப்புத் துலக்கி தேடப்படுவோர் தம்மைத் தேடி வருவதை அறியாத இலக்கு நகையாடிக் கொண்டிருந்தது. சக போராளியின் குறியில் ஒருவன் சரிய மற்றையவன் ஓட எத்தனித்தான். ஓடுபவனைக் குறி வைத்து தன்னிடம் இருந்த கைக்குண்டை எறிந்தவன் கூப்பிடு தூரத்தில் உள்ள சக படைவீரர்கள் ஓடிவரும் முன் சடுதியாய்த் தாக்குதலை முடித்துத் திரும்பினான்.
   “அம்மா இன்றைக்கு உங்கட புட்டை விட்டுட்டு நல்லதாய் ஏதாவது செய்து தாங்கோ சரியா பசி எடுக்குது” புழுக்கிண்டுவது போல் புளுகம் கிண்ட, தாக்குதல் வெற்றியில் திளைத்தவனை அப்பாவும் அம்மாவும் புரிந்து கொண்டனர்.
   “அம்மா, நான் அவசரமாக வெளியில போறன் றேடியோவில ஏதாவது தகவல் வந்தால் பதிவு செய்து வையுங்கோ” “டேய் ஒருக்காத்தான் பழக்கித் தந்திட்டு பதிவு செய் என்டால் முடியுமே? இன்னும் ஒருக்கா பழக்கித் தந்துட்டு போடா” வாசல் வரை வந்தவனை மறித்து அம்மா கேட்க, “குறித்த நேரத்திற்கு அங்க நிக்கோணும் எதற்கும் விரைவாய் வரப்பார்கிறேன்”
   அவசரமாய் இவன் போய்விட இவன் திரும்பும் முன்னமே தகவல்வரும் நேரத்தை மணிக்கூடு காட்டியது. அம்மாவிடம் மேலோங்கியிருந்த அறிவுப் புலமை ஒருவாறாய் அலைவரிசையைப் புடித்து தகவலைப் பதிவு செய்து விட்டது.
   என்ன தகவல்? “நீங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்ற தகவலை எங்களுக்கு அனுப்பி வைக்க, தொடர்பு முறையொன்றை நீதான் தேட வேண்டும். சீரான தொடர்புகள் இன்றி செயற்படுவதிர் அர்த்தமில்லை. என்ற தொனிப்பட நல்ல ஏச்சுடன் வந்திருந்தது. “தகவலைக் கொடுத்தால் பிள்ளை நொந்து போவான், வெந்துபோவான்” தகவலைக் கொடுக்க அம்மாவின் தாய்டை உணர்வு தடுத்தது. இயக்கத் தகவலை, அம்மா கொடுக்காமலும் இரா. தயங்கித் தயங்கிக் கொடுத்தார். அவை பற்றி அம்மா கூறுகையில்இ தகவலைக் காட்டியதும் நினைத்தது போலவே உடைந்தே போனான். அன்றிரவு சாப்பாடும் நித்திரையும் இன்றி கட்டிலில் உருண்டு உருண்டு புரண்டான். நான்தான் அருகிலிருந்து தேற்றினான்” பின்னொரு நாளில் அவன் இங்கே ஒரு நிமிசம் கூட சும்மா இருக்கிறது இல்லை காலையில் எழும்பினால் இரவு வரைக்கும் நாட்டுக்காகத்தான் உழைக்கிறான். இனிமேல் ஏசித் தகவல் வரக்கூடாது” என அம்மா இவன் பொறுப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தா.
   அம்மா வீட்டுடன், தேவையற்று ஆதரவாளர்களையோ, தொடர்பாளர்களையோ, சக போராளிகளையோ தொடர்பு படுத்தாத தன்மை மற்றும் செயற்பாட்டின் போது பயன்படுத்தும் போலி ஆவணங்கள், வேறு பெயரில் பெறப்பட்ட அவனது ஈருருளி…. அம்மா புட்டவிக்கும்போது தடயங்களை நெருப்பில் போட்டு அவை எரிந்து முடியும் மட்டும் கண்வெட்டாது பார்க்கும் பொறுப்புணர்வு, எப்பொழுதுமே அவனிடமிருக்கும் சைனற்குப்பி என இரகசியம் பேணுவதில், தான் சார்ந்தவர்களைப் பாதுகாப்பதில் இவனது அதீத பாதுகாப்பு உணர்வு அம்மாவுக்கு இவனைப் பிடித்துப் போனதில் வியப்பில்லைதான்.
   04.09.1999 அம்மாவின் இடக்கை சுழுக்கெடுத்து நோவு எடுத்திருந்ததை அறிந்தவன் அதிகாலையில் எழுந்து அம்மாவுக்கு மலசலகூடத்துக்கு தண்ணீர் எடுத்து வைத்து, பாத்திரங்களில் எல்லாம் தண்ணீர் நிரப்பி, வீடு கூட்டி… வீட்டுப் பணியெல்லாம் முடித்து தன் பணிக்காகப் பயணப்பட்டவன், வாசலில் நின்று கொண்டு, “அம்மா இன்றைக்கு சில நேரம் வரமாட்டன். அன்ரி வீட்டிலை தங்கினாலும் தங்குவன்…” சொல்லித்தான் வெளிக்கிட்டான். எங்க அன்ரி வீடு இருக்குது? கண்டிப்பாக நீ வீடு வரவேணும் என அம்மா கேட்கவும் மாட்டார். கட்டளையிடவும் மாட்டார். இரகசியம் பேணுவதில் அம்மாவும் கண்டிப்பானவர். வழமை போலவே வாசலில் நின்று அம்மா வழியனுப்பி வைக்க அம்மா புள்ளியாய்த் தெரியும் மட்டும் அவன் கையசைத்துச் சென்றான். “என் மகன் தன்னைப் போராளியாக இணைக்கும் போதும் இப்படித்தான் கையசைத்துச் சென்றவன்” அம்மாவின் இதய அறைகளில் ஒன்றுக்குள் மகனும் மற்றையதில் இவனுமாக அம்மா கனதியானார்.
   05.09.1999 நல்லூர் முருகன் கோயில் வீதி மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த, பகல் பதினொரு மணிப்பொழுது, காதலியை ஏற்றிய ஈருருளிகள், மனைவியை ஏற்றிய உந்துருளிகள், குடும்பத்தையே சுமக்கும் கார்கள், பட்டப்படிப்பு முடித்து வேலை வாய்ப்புக்காக முருகனிடம் வந்த பள்ளிக்கூட நண்பர்கள்… என எல்லோரையும் கடந்து இவனது ஈருருளியும் சக போராளிகளினது ஈருருளிகளும் புலனாய்வுக் கண்களுடன் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தன.
   நல்லூர் அரசடி வீதியை (பாரதி சிலையடி) இவனது சைக்கிள் கடக்க முற்பட, காவலரணுக்கு அருகில் நின்ற சிங்களப்படைவீரன் வழிமறித்து இவன் கைகளைப் பிடிக்க, அவனை உதறிவிட்டுத் துப்பாக்கியைப் பறித்தெடுக்கும் நோக்குடன் காவலரணுக்குள் பாய்ந்தோட.. முடியாமல் போக, சைனைற் குப்பியை அவன் பற்கள் நன்றாக அரைக்க, அது அவன் உயிரை பிரித்துத்தான் விட்டதா?
   கறுப்பு ஜூன்ஸ், சாம்பல் நிற சேட், பச்சை உள்ளாடையுடன் இளைஞனின் சடலம் செய்தித்தாளில் வந்த செய்தி அம்மாவை இடியாய் இடித்தது. உடைகள் அவனுடையது தான். அப்பாவும் அம்மாவும் குசுகுசுத்துக்கொண்டனர். வைத்தியசாலையில் இவன் உடலைப்பார்க்க அம்மாவால் முடியவில்லை. உடலைப் பார்த்து ஓவென அழாமல் அம்மாவால் இருக்க முடியாது. அப்படி அழுதால் சிங்களப் புலனாய்வாளர்களின் கண்களில் எத்துப்படலாம். இன்னுமொரு போராளியைத் தன் சிறகினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அம்மா வைத்தியசாலைக்குச் செல்லவே இல்லை.
   அம்மா நினைத்தது போலவே அவனது சைக்கிள், அடையாள அட்டைகள் என்பனவற்றைப் படையினர் கைப்பற்றியிருந்த போதிலும் அம்மாவின் வீட்டை இனங்காண முடியவில்லை.
   “அவன் நிறைய சாதிக்க வேண்டியவன் வன்னிக்கு எடுத்து கதைப்பம் என்றிருக்க இப்படி நடந்து போய்ச்சு.. அவனுக்குத் தெரிந்த நிறையச் சனம் வருமென்று தெரிந்தும் அதற்குள்ள போயிருக்கிறான்..” என்ற புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையிலும், “விடுதலை வீரனின் சுயநலமற்ற பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமுடையது. விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான்” என்ற தலைவரின் பார்வையிலும் இவனது வாழ்வு உன்னதமானது.
   நினைவுப்பகிர்வு: சி.மாதுளா
   நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை, 2003).
    
   https://thesakkatru.com/commander-lieutenant-colonel-sentamilselvan/
  • By உடையார்
   கடற்கரும்புலி மேஜர் அன்பு
    
    

    
   கண்ணீரைக்கடந்து…
   ‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது.
   வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்……
   இன்பருட்டி ‘வான்” அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த ‘வான்” அதிர்ந்து கொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள்.
   நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலையில் விழுந்தது. பொறுப்பாளர் அன்புவை அழைத்தார். ‘அன்பு…. நீதான் அவர்கள எப்படியாவது அமைதிப்படுத்த வேணும்…..” அன்பு முதலில் தயங்கினாலும், நிலைமையைப் புரிந்தவனாய் தன் அம்மாவோடும், உறவுகளோடும் போய்க் கதைத்தான்.
   அம்மா மகனைக் கட்டிப்பிடித்து அழுதா….. காலில விழுந்து கும்பிட்டா….. ‘தம்பி கரும்புலியாப் போகாதையடா….” உடன்பிறப்புக்களோ அவன் கையையும் காலையும் கட்டிப்பிடித்தபடி நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அன்புவிடம்.
   திருவள்ளுவர் சொன்ன கூற்று அவன் மனத்திரையில்…
   ‘பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”
   அவன் முடிவெடுத்தான். ‘நான் கரும்புலியாப் போகேல்லையெண….” அம்மா கேட்டபடி ஊர்க்கோயில்கள் எல்லாவற்றின் மீதும் ‘சத்தியம்” செய்தான். பொய்யே பேசாத அவன் பொய்ச் சத்தியம் செய்யுமளவிற்கு சூழ்நிலைக் கைதியானான். அம்மா நம்பிக்கொண்டு வீட்டுக்குப்போக முற்றுகையிட்ட உறவுகள் பின்னாலே…
   ஒருவாறாக அன்பு என்ற பெருமழை ஓய்ந்து போக அன்பு சிரித்தபடி போராளிகளிடம் வந்தான். போராளிகளின் விழிகள் கசிந்திருந்தன.
   உலகில் எந்தவொரு உயிரினமும் ஆழமாய் அன்பு செலுத்துவது ‘அம்மா” என்ற தாய்மையில்தான் எவ்வளவுதான் மனவுறுதி படைத்தவனாக இருந்தாலும், அம்மாவின் கண்ணீர் அவனை ஆட்டங்காணச் செய்துவிடும். ஆனால், அன்புவோ… தான் விரும்பித் தேர்ந்தெடுத்த கொள்கையில் இருந்து சற்றும் தளரவில்லை.
   தனது தாய், உறவுகள் என்ற குறுகிய வட்டத்திற்காக நமது தாய் மண்மீது அவன் வைத்த பற்றுதலைத் துறக்கத் துணியவில்லை. 20.09.1995, இன்பருட்டி வான் கலகலக்கத் தொடங்கியது.
   அன்புவை வேவு பார்த்துக் கொண்டிருந்த தம்பி தகவல் சொல்ல அம்மாவிடம் ஓடினான். ‘அம்மா… நேற்றைக்கு நிண்ட படகிலதான் அண்ணா நிக்கிறானெண….” அம்மாவுக்குள் எரிமலை…. இன்பருட்டி வானை நோக்கி அம்மா ஓடினாள்.
   இன்பருட்டிக் கரையில் அம்மாவின் தலைக்கறுப்பைக் கண்ட அன்பு படகிற்குள் மறைவாக இருந்தபடி எல்லோரையும் பார்த்தான்.
   தலையிலும் வயிற்றிலும் அடித்தடித்து அம்மா மண்ணில் புரண்டு அழுதாள். உடன்பிறப்புக்களும் ஏதேதோ சொல்லி அழுதார்கள். படகின் பொறி ஓசையை மீறி அவர்கள் சொல்லி அழுவது மட்டும் புரியவில்லை.
   ஆனால், அவர்கள் துடித்து அழுவது மட்டும் அன்புவின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது.
   தாயின் மீதும், உடன்பிறப்புக்கள் மீதும் அன்பு வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாய் அன்புவின் கண்களிலும் நீர்த்திரை. எத்தனையோ மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான அவன் பயணம்… அன்பு உறவுகளின் கண்ணீரைக் கண்டு தடைப்பட்டுப் போகவில்லை. அவன் பயணம் கண்ணீரைக் கடந்துசென்று வென்றது.
   நினைவுப்பகிர்வு: பிரமிளா.
   நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (04.09.2008).
   https://thesakkatru.com/black-sea-tiger-mejor-anbu-anthamaan/
    
  • By உடையார்
   லெப்டினன்ட் ராஜா
    
    

    
   தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்டினன்ட் ராஜா (பரமதேவா) மட்டு நகர் மண்ணின் முதல் மாவீரன்!
   1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார்.
   1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது.
   சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் செயல்பட்டார்.
   மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் தாக்குதல் தளபதியான ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் மட்டக்களப்பில் புரட்சிவாத இளையோர்களின் புனிதப் பயணமாக அமைந்திருந்தன.
   ஒரு போராளியாக, ஒரு விடுதலை வீரனாக, தமிழர் படையின் சிறப்பு மிக்க வீரனாக திகழ்ந்த பரமதேவா தாய் மண்ணில் தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பார்ப்பதற்கு முதல் எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கண்ணீருக்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தின் படைகள் மீது தாக்குதலை நடத்திவிட்டு தனது தாயைச் சந்திப்பேன் என்று செய்தி அனுப்பிவிட்டு தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தத்தில் தன்னை ஈடுபடுத்தினார்.
   ஒரு போராளியின் உருவாக்கம் மொழிப்பற்று, இனப்பற்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. சூழ்நிலையின் தாக்கத்துக்குள் இல்லாமல் சிறு வயது முதல் தன் இனத்தின் விடுதலையில் எழுந்தவர்கள், தனது குடும்பத்தின் விருப்போடு தமிழினத்தின் போராளியாகப் புறப்பட்டவர்களின் வரிசையில் மட்டக்களப்பில் முதல் விடுதலை வீரனாக களம்கண்ட காவிய நாயகன் லெப்.ராஜா என்பதில் விடுதலையை நேசிக்கும், விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நெஞ்சினில் ஏந்தப்பட்ட விடுதலை நெருப்பின் அடையாளமாகும்.
   இவ்வாறு உணர்வான விடுதலைப் போராளியை தாயக விடுதலைக்கு ஈந்த அன்னையை எண்ணிப்பெருமிதம் கொள்வதோடு அணையாத விடுதலை நெருப்பாக மட்டக்களப்பில் எரிந்து கொண்டிருக்கும் லெப். ராஜா அவர்களின் வரலாற்றில் என் எழுதுகோலை ஊன்றுகின்றேன்.
   தமிழர் தாயகம் மீதான நில அபகரிப்பு, ஆக்கரமிப்பு, தமிழின அழிப்பு, மொழிப் புறக்கணிப்பு என்பன தேசிய இன அடையாளத்தை அழிக்கும் செயலாக சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத அடக்குமுறைக்கு பதில் சொல்லும் நிலையில் மாறியபோது புறப்பட்ட இளையோர்களில் ஒருவராக பரமதேவாவின் தன்னலமற்ற தாயக விடுதலைப்பற்று வெளிப்படுத்தப்பட்டிருந்ததனால் ஒரு உண்மைப் போராளியை எமது மண் பெற்று பெருமைகொண்டது.
   பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள் பரமதேவாவை ஒரு விடுதலைப் போராளியாக ஏற்றுக் கொண்டதை அன்றைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளிலிருந்து அறியமுடிந்தது.
   1984.09.22ம் நாள் அன்று களுவாஞ்சிக்குடி சிங்களகாவல் நிலைய அழிப்பில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன் வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில் தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
   கிழக்கின் பெரும் வீரனாக, தலைமைக் தளபதியாக செயலாற்றி விடுதலை இயக்கத்தை நடத்தக்கூடிய வல்லமை கொண்டவரான பரமதேவா பயணத்தில் தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்காது.
   மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்தள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும் ஏனைய போராளிகளும் தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்திருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டன. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனையும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன.
   விடுதலைப் போராளிகளை பெருமையாக மக்கள் மதித்த காலப்பகுதியில் இரகசியமாக இத் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்ட போதும் அர்ப்பணிப்போடு அமைந்ததாக சிலரின் உதவியையும் பெற்று தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராகினர். தாக்குதலுக்கான இடமும், காலமும் குறிக்கப்பட்ட நிலையில் போராளிகளும் குழுவாகக் பிரிக்கப்பட்டனர்.
   மூன்று குழுக்களாகப் பிரிந்த போராளிகள் சந்திக்கும் இடமாக கிரான்குளம் ஊர் தெரிவு செய்யப்பட்டது. 1984 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் நாள் இரவு குழுக்கள் மூன்றும் பிரிந்து தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பாதையைத் தீர்மானித்தனர். ஒரு குழு தோணி ஒன்றில் மட்டக்களப்பு வாவியில் பயணித்து ஆயுதங்களுடன் கிரான் குளத்திற்கு வந்து சேர்ந்தனர்.
   இரண்டாவது குழு, மூன்றாவது குழு மிதி வண்டியில் வேறு வேறு பாதைகள் ஊடக பயணித்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அன்று இரவு ஒரு ஆதரவாளரின் தென்னந்தோட்டத்தில் தங்கினர். 22 ம் நாள் பகல் உணவு எடுத்துக்கொண்ட பின் மாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற திட்டத்திற்கமைய பி. பகல் 3 மணிக்கும் 4 மணிக்குமிடைப்பட்ட வேளையில் கிரான் குளத்திற்கும், குருக்கள் மடத்திற்குமிடையில் அம்பிளாந்துறை சந்திக்கு அருகாமையில் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் போராளிக்குழுக்கள் ஒன்று சேர்ந்து தாக்குதலுக்கு செல்லும் பயணத்தை ஆரம்பித்தனர்.
   கல்முனை நெடுஞ்சாலையில் மட்டு நகரிலிருந்து 20 வது மைல்லில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடியில் நிலைகொண்டிருந்த சிங்களக் காவல் துறையின் நிலையத்தைத் தாக்கியழித்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் அவசர மருத்துவ ஊர்தி உட்பட இரண்டு ஊர்திகள் வழிமறிக்கப்பட்டு அந்த ஊர்திகளில் போராளிகள் அனைவரும் தாக்குதலுக்காகச் சென்றனர்.
   இத் தாக்குதலில் அனுபவமிக்க திருமலைத் மாவட்ட தளபதி லெப். கேணல் சந்தோசம், மூதூர்த் தளபதி மேஜர் கணேஷ், ஆகியோரும் இடம் பெற்றது மேலும் சிறப்பான நிலையில் தாக்குதல் அணி இருந்ததைக் குறிப்பிட முடிகின்றது.
   மாவட்டத்தில் தங்கியிருந்து செயல்பட்ட அனைத்து விடுதலைப் புலிப்போரளிகளும் இதில் பங்கெடுத்திருந்தனர். சரியாக பிற்பகல் 5:30 மணியளவில் காவல் நிலையத்தினுள் பாய்ந்த விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்தபோது, எதிர் பார்த்ததற்கு மாறாக காவல் துறையினரின் விடுதியிலிருந்து போராளிகளை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதனால் களநிலைமை மாறியிருந்தது.
   ஏனெனில் போராளிகளுக்கு கிடைத்த தகவலின்படி மாலை 6 மணிக்கு பின்னர்தான் காவல்துறையினர் விடுதிகளுக்குள் திரும்புவார்கள் என்றும் அது வரையில் காவல் நிலையத்தினுள் அனைத்து ஆயுதங்களும் இருக்கும் என்பதால் பணி ஒய்வு பெறும் நேரத்தில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆயுதங்களையுப் பெற்று வெற்றியுடன் திரும்பமுடியும் என்பது போராளிகளின் நிலைப்பாடாகும். ஆனால் சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த இச்சண்டையில் லெப்.ராஜா, வீரவேங்கை ரவி அவர்களின் வீரச்சாவுடன் சில போராளிகள் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆயுதம் மாத்திரம் கைப்பற்றப்பட்டு போராளிகள் பின்வாங்கினர்.
   இத் தாக்குதலில் எமக்கு ஏற்பட்ட இழப்பு வரலாற்றில் ஈடு செய்யமுடியாத இழப்பாக அமைந்து போனது. போராட்ட வரலாற்றில் பிற்பட்ட காலங்களின் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது அறியக் கூடியதாகயிருக்கின்றது. மண்ணின் விடுதலைக்காக மட்டக்களப்பில் எழுந்த தமிழ் தேசிய உணர்வின் அடையாளமான பரமதேவா தாய் மண்ணில் தாக்குதலில் வீழ்ந்தது தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரிழப்பாக இருந்தது.
   வீரவேங்கை ரவி மகிழடித்தீவு ஊரைச் சேர்ந்தவர். வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவனாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, அரசியல் வேலையில் உற்சாகமாக செயல்பட்டவர். குடும்பத்தில் மூத்த மகனான வாமதேவன் என்ற ரவிக்கு ஆறு தங்கைகள் சகோதரிகளாக இருந்தனர். இவரின் இழப்பு குடும்பத்திற்கு மாத்திரமில்லாமல் ஊரக உணர்வுள்ள மக்களுக்கும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அன்று இளம் அரசியல் விடுதலைப் போராளி ஒருவரையும் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்திருந்தது.
   இவர்கள் இருவரின் வீரச்சாவு செய்தியறிந்த மக்கள் எல்லோரும் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த தவிப்போடு துயரம் நிறைந்தவர்களாக காணப்பட்டனர். தமிழர்களுடைய வரலாற்றில் மட்டக்களப்பில் பள்ளிக்கூட பருவத்திலிருந்து விடுதலைக்காக எழுந்த ஓர் உயர்வான போராளியான பரமதேவாவை ,ழந்து தாய் மண் தவித்தது. மட்டக்களப்பின் முதல் விடுதலைப் போராளியாக களமிறங்கிய வரலாற்று நாயகனின் சிந்தனைகள், செயல்பாடுகள் விடுதலைப் போராளிகளுக்குப் பாடமாக அமையப்பெற்றிருந்தன.
   ஒவ்வொரு தமிழரும் வாழும்வரை போராளியாக வாழ்வதென்பது வரலாற்றில் எமது விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும். இந்த உறுதிதான் எமக்குத் தேவையாகும். இதைவிடுத்து விவேகமற்ற விமர்சனத்தை முன் வைப்பவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து பின்வாங்கி தம்மை அர்பணித்து தாய் மண்ணில் வீழ்ந்தவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவேண்டும்.
   பணத்தாசை பிடித்து, ஆக்கிரமிப்பு வாதிகளின் பண உதவியுடன், பித்தலாட்டம் போட்டு, இணையதளம் நடத்துபவர்கள், போராளிகளை போற்றா விட்டாலும், தூற்றாமல் விலகிக் கொள்வதுதான் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும்.
   போற்றுவதற்கும், தூற்றுவதற்குமான தகுதியை இழந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்த் தேசிய விரோதிகள் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை அரங்கிலிருந்து வெளியேறி, ஒதுங்கி வாழ்ந்தாலே போதும் என்ற நிலையில் தமிழ் உணர்வாளர்கள் இருக்கின்றனர்.
   பரமதேவாவின் தமிழ் உணர்வு, விடுதலை பெற்றவர்களாக தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்ற நிலையில் உயர்ந்து நின்றபோது இளவயதில் மாணவ பருவத்தில் இன விடுதலை வீரனாக மட்டக்களப்பில் பரமதேவாவைக் காணமுடிந்தது.
   விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி, எழுச்சியில் வரலாறு தேட முற்படுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் ஆயுதப் போராட்டம் மட்டக்களப்பின் விடுதலைப் புரட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொண்டு எழுத வேண்டிய நிலையுமுள்ளது. போராளியின் புனிதப் பயணம் என்பது இலட்சியத்தின் எல்லையில்தான் முடிவடையும்.
   தடைகளையும் தன்னல மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு தடம் புரண்டு திரும்புவது போராளி என்ற நிலையிலிருந்து மாறிவிடும். இலட்சியத்தை நோக்கிப் புறப்பட்டவர்கள் எல்லாம் சிங்களப் பாராளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடும் நிலையில் போராட்டம் மாறியிருக்கின்ற இவ்வேளையில் புரட்சிவாதிகளையும், புனிதப் போராளிகளையும் எமது மக்களுக்கு இனங்காட்டி வருகிறோம்.
   மாணவனாக போராட்டத்தில் பரமதேவா.
   பரமதேவா, 1975 ம் ஆண்டுகளில் அனைத்துத் தமிழ்மக்களாலும் அறியப்பட்ட பெயராகும். இந்தப் பெயரின் பின்னால் இருந்தபலம் தமிழ் இளையோர்களை தாயக விடுதலை நோக்கிய உறுதியான பயணத்தில் இணைய வைத்திருந்தன. 1972 ம் ஆண்டு சிங்கள அரசின் புதிய அரசியலமைப்பு சட்டங்களின் உருவாக்கத்தில் மே 22 குடியரசு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தன.
   சிறுபான்மை இனங்கள் என்று சொல்லப்படுகின்ற தமிழ்த் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்புக்கு இருந்த சட்டவிதியும் அகற்றப்பட்டதாக அரசியலமைப்பை உருவாக்கியிருந்தனர். இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர் அப்போதைய அமைச்சரும் லங்கா சம சமாஜக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி .சில்வா அவர்களாகும். சமத்துவம் பேசுகின்றவர்கள் எல்லாம் பதவிக்கு வந்தவுடன் பேரினவாதத்திற்குள் ,ருந்து அரசியல் செய்வதையே சிறிலங்காவில் அன்று கண்டதுபோல் இன்றும் கண்டுகொண்டுடிருக்கின்றோம்.
   1972 ல் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க வரிகள் தமிழ் இளையோர்களைத் தட்டியெழுப்பியது மாத்திரமில்லாது அவரையும் சிங்களக் சிறைக்குள் தள்ளியது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் விடுதலை வேட்கை வீறுகொண்டு எழுந்ததனால் ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்ன குறை? என்ற பாவலரின் வரிகளுக்கு அர்த்தத்தை உண்டுபண்ணும் விதமாக தமிழ் இளையோரின் எழுச்சியும் அமைந்திருந்தன.
   மே 22 கரி நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அரசு அறிவித்திருந்த குடியரசு நாள் நிகழ்வுகளைப் புறக்கணித்து தமிழர் வாழ் நிலங்கள் எங்கும் எதிர்ப்பு முழக்கங்கள், எதிர்ப்பு பதாகைகள், கறுப்புக் கொடிகள் என்று சிங்கள அரசுக்கு புரியவைக்கும் நடவடிக்கைகளை தமிழ்மக்கள் மேற்கொண்டனர். இவற்றில் தமிழ் மாணவர்களின் பங்கு அளப்பரியதாக அமைந்திருந்தன.
   தமிழ் மாணவர் பேரவை என்ற எழுச்சிமிகு அமைப்பின் உருவாக்கத்திற்கும் சிங்கள பேரினவாதத்தின் போக்கு காரணமாக இருந்தன. இவ்வாறான எழுச்சியின் அடையாளமாக, அத்திவாரமாக, விடுதலைப் புரட்சி ஏற்படுவதற்கு முக்கியமாக மட்டக்களப்பில் பரமதேவாவின் உணர்வு மிக்க எழுச்சி மாவட்டமெங்கும் தமிழ் மாணவர்களை தட்டி யெழுப்பியது. எழுச்சி கொண்ட இனமாக தமிழினம் மாறி விடுதலையில் ஓர் புரட்சியை ஏற்படுத்துவதற்கு பரமதேவா என்ற மாணவனின் போராட்டங்களும் தூங்கிக் கிடந்த தமிழர்களை நிமிர்ந்து நியாயம் கேட்கவைத்தது.
   அற வழியின் கொள்கையில் அரசியலாக இருந்த தமிழ்த் தேசிய ,னத்தின் விடுதலையை அச்சமின்றி, உயிரை துச்சமாக எண்ணிப் பயணிக்கும் இளையோர்களின் கரங்களில் மாறுவதற்கு பரமதேவா போன்றவர்களின் விடுதலைப்பற்று தூண்டு கோலாகயிருந்தன.
   பரமதேவா, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஆயுதப் போராட்ட எழுச்சிக்கு முதல் தொடக்கம் என்பதிலிருந்து எழுகின்ற விடுதலை இயக்கங்களின் தோற்றங்களுக்கு மத்தியிலும் தனித்துவமாக, தலை நிமிர்ந்து களம்காணப் புறப்பட்டவர்.
   மேடையில் விடுதலைப் புரட்சிவாதம் பேசிய தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் வீட்டில் குடும்ப வளர்ச்சியில் அரசியல் செய்த வேளையில் பரமதேவா போன்றவர்களின் புரட்சிவாத எண்ணங்கள் தங்கள் வழியை தீர்மானிக்க தமிழ் இளையோர்களை ஒருமுகப்படுத்தியதையும் காணமுடிந்தது.
   இன்று இந்துக் கல்லுரியாக எம்முன் உயர்ந்து நிற்கின்ற மட். கோட்டமுனை மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவனாக பரமதேவா, தமிழரின் பண்பாட்டு உடையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவனாகக் காணப்பட்டார். இவரின் ஆற்றலும், அறிவும், தமிழ் இனத்தின் மீது கொண்டபற்றும், பார்த்தவுடன் தெரிந்து கொள்ளுமளவுக்கு முகத்தில் மலர்ந்திருந்தது. ஓர் இளம் விடுதலை வீரனை மட்டக்களப்பு மக்கள் இனங்காணும் அளவுக்கு உயர்ந்த எண்ணங்களும் உறுதியும் பரமதேவாவிடம் நிறைந்து காணப்பட்டிருந்தன.
   மாணவ பருவத்தில் பள்ளிக் கூடத்தில் பரமதேவா ஏற்படுத்திய புரட்சி, தமிழ், மாணவர்களை தட்டியெழுப்பியது மாத்திரமல்லாது,சிங்கள அரசு இயந்திரத்தையும் அச்சமடைய வைத்தது. மாணவனான பரமதேவாவின் உணர்வை முளையிலே கிள்ளியெறிய எண்ணியதின் விளைவில் ராஜன் செல்வநாயகத்தின் பங்கு அன்றிருந்தது. இதனால் பள்ளிக் கூடத்தினுள் கலகம் விளைவிக்கும் மாணவன் என்று பரமதேவாவை எந்தப் பள்ளிக் கூடத்திலும் படிக்கமுடியாதவாறு அதிபரை வைத்து வெளியேற்றினார்.
   ஆனால் நிலைமைமாறி மாவட்டமெங்கும் மாணவர்கள் புறக்கணிப்பின் மூலம் எதிர்ப்பை தெரிவித்தனர். இப் போராட்டம் மட்டக்களப்பு கல்வித் திணைக்கள அதிகாரிகளை அதிர வைத்தது. சந்திப்புக்கள், பேச்சு வார்த்தைகள் என்று அதிகாரிகள் செயல்பட்டு மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவை அறிவித்தபோது அதிபர் திரு. வைத்தியநாதன் அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். இம் முடிவு பரமதேவாவை சங்கடத்துக்குள்ளாக்கியது. ஏனென்றால் திறமைமிக்க அறிவியலாளரான திரு. வைத்தியநாதன் அவர்களின் இடமாற்றம் சக மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதால் தான் வெளியேறி வேறு பள்ளிக்கூடத்தில் பயில்வதற்கு பரமதேவா முடிவு எடுத்துச் செயல்பட்டார்.
   பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் உணர்வு மிக்க எழுச்சி மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புரட்சி மேலும் வளர்வதற்கு வித்திட்டது என்று சொன்னால் மிகையாகாது. 33 ஆண்டு காலவிடுதலைப் புரட்சியின் 28 ஆண்டுகளுக்கு முன் விடுதலைக்காய் வீழ்ந்த விடுதலை வீரனைப் பற்றிய நினைவுகளில் மட்டக்களப்பில் கருவான புரட்சி வாதத்தின் விடுதலைப் புலிகளின் வித்தாக தாய் மண்ணில் வீழ்ந்த தமிழ் மறவனின் வரலாறு விடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பில் எழுதப்படும்போது எண்ணற்ற எழுச்சிமிகு இளையோர்கள் பற்றியும் எழுதவேண்டிய நிலையுள்ளது.
   1972 ம் ஆண்டு தமிழ் மக்களின் விடுதலை வரலாற்றில் முக்கியமான ஆண்டாகவும் எடுத்துக்கொள்ள முடிகின்றது. ஏனெனில் இக்காலத்தில் இளையோர்களின் தீவிர எழுச்சியினால் அடிமைப்பட்ட தமிழர்களின் சார்பாக சிங்கள அரசுக்கு அடங்காப்பற்றுடன் கூடிய எதிர்ப்புகளும் காணப்பட்டன.
   மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் தமிழ் இளையோர்கள் விடுதலைப் புரட்சி வாதிகளாக மாறத்தொடங்கியதும் சிறைக்குள் தள்ளப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் விடுதலைப் போராளிகளுக்கான ஆதரவு மேலும் அதிகரித்துக்காணப்பட்டன. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இளையோர்களிடையே ஏற்பட்ட விடுதலை உணர்வு, தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்தன.
   மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் பேரவையின் முதல் தலைவராக திரு. அன்ரன் என்பவர் பணியிலிருந்தபோது. திரு.பொன்.வேணுதாஸ், திரு.மோகனச்சந்திரன், பாசி, துரைராசசிங்கம் போன்றவர்களின் செயல்பாடும் இணைந்ததாக காணப்பட்டன. இக்காலத்தில் மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சையில் தெரிவாகி பின்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து மாவட்ட அரசியல் அதிகாரியாகச் செயல்பட்ட இராஜன் செல்வநாயகம் அவரின் தமிழ் விரோதப் போக்கு தமிழ் இளைஞர்களுக்கு எதிராகத் திரும்பியதனால், விடுதலை உணர்வுள்ள இளைஞர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
   கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்திருந்த சிங்கள காவல்துறையின் விசேட பிரிவினர் இவ்வாறான இளைஞர்களை கைது செய்யும் நோக்குடன் வீடுகளில் தேடுதலை நடத்தி பெற்றோருக்கு பெரும் இடையூறுகளை கொடுத்தனர். இந் நடவடிக்கைகளுக்கு பின்னால் இராஜன் செல்வநாயகத்தின் பங்கு பெரும் அளவில் ,ருந்ததை குறிப்பிடமுடிகின்றது.
   தமிழர்களுடைய வரலாறறில் காட்டிக்கொடுக்கும் தேசிய விரோதிகள் வரலாறும் ,ணைந்தே ,ருந்து வந்துள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை என எல்லா இடங்களிலும் தொடர்ந்திருந்தன. இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தன்னலமற்றவர்கள் மத்தியில் தன்னலமுள்ளவர்களின் செயல்பாடு அழிக்க, அழிக்க முளைப்பதுபோல் தொடர்வது விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு சிங்களப் பேரினவாதத்திற்கு உதவியாக அமைந்தன. இது எமது இனத்தின் சாபக்கேடு என்றே குறிப்பிடமுடிகின்றது.
   விடுதலைப் போராட்டம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தும், விடுதலையை வைத்து அரசியல் நடத்திய தன்னல வாதிகளின் போக்கும், விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தன.
   இவ்வாறான நிலையில் மட்டக்களப்பில் பரமதேவா போன்ற தமிழ் இளைஞர்களின் பற்று பாரிய தாக்கத்தை சிங்கள அரச இயந்திரத்தில் ஏற்படுத்தியிருந்ததை குறிப்பிட முடிகின்றது. முள்ளிவாய்க்கால் ஊரில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் வரலாறு தேடும் பலருடைய செயல்பாடுகளுக்கு மத்தியில், பரமதேவா பற்றிய போராட்டப் பதிவை தமிழர் வரலாற்றில் வைப்பதற்கு முனைகின்ற வேளையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புரட்சி வாதிகளாக போர்க்கருவி ஏந்திய நிலையில் புறப்பட்ட முதல் விடுதலை வீரனாக பரமதேவா அவர்களையே குறிப்பிடமுடிகின்றது.
   1977 ம் ஆண்டுத் தேர்தலில் பரமதேவா
   தமிழீழ நாட்டின் மக்கள் ஆணைக்கான தேர்தலாக 1977 ம் ஆண்டுத் தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அதிகமாகவே காணப்பட்டது. மட்டக்களப்புத் தொகுதியில் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, மட்டக்களப்புத் தொகுதி தமிழ் இளைஞர்களின் அதிகப்படியான ஆதரவு கிடைக்கப்பெற்றிருந்தன.
   மாணவனான பரமதேவா தொகுதியெங்கும் தேர்தல் கூட்டங்களில் உணர்வு பொங்க பேசியது தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு முழக்கமாக வெளிப்பட்டது. இக் காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பல தமிழ் இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு பெற்றுக்கொடுக்கும் வகையில் மேடைகளிலும், வெளியிலும் பரப்புரையை மேற்கொண்டிருந்தனர். கொள்கை, இலட்சியம் என்பதில் பரமதேவா உட்பட்டவர்களின் நிலை நேரிய பாதையில் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது.
   மட்டக்களப்பில் பொன்.வேணுதாஸ், மோகனச்சந்திரன், அன்ரன், வாசுதேவா, சிவஜெயம், தயாளன், குணாளன், சின்னாச்சி, யோகபதி, பூபாலபிள்ளை (பீ.டி), ஆரையம்பதி தவராஜா, செல்வேந்திரன் போன்றவர்களும்.
   கல்குடாவில் பா.சின்னத்துரை, கி.துரைராசசிங்கம், வாகரை பிரான்சிஸ், வாழைச்சேனை யோகராஜா, நிமலன் சௌந்தரராஜன், ராஜ்மோகன் ஆகியோரும். பட்டிருப்பில், நடேசானந்தம், மண்டூர் மகேந்திரன்,சரவணபவான், அரசன், தம்பிராசா, பரமேஸ்வரன், பிரேம், இன்பராசா, தவம், உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்களின் விடுதலையை பெறுவது என்ற குறிக்கோளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டனர்.
   அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக மாற்றப்பட்டதனால் மாவட்டம் எங்கும் வேல்முருகு, தமிழ்நேசன், பன்னிர்செல்வம், ரஞ்சன், நாகராஜா ஆகிய இளைஞர்களின் உணர்வுமிக்க செயல்பாடுகள் தமிழ் மக்களை தெளிவுபடுத்தியிருந்தன.
   மாணவப்பருவத்திலிருந்து தனது இறுதிக்காலம் வரை தமிழ் மக்களின் விடுதலைக்காக களத்தில் பயணித்த பரமதேவா போன்றவர்களின் போராட்ட வரலாறு இன்றைய எதிர்கால இளைய சந்ததிக்கு பாடமாக அமைய வேண்டுமென்பது இக் கட்டுரையின் நோக்கமாகும், பிறப்பின் பயனை அடைந்துவிட்ட இந்தப் புனிதப் போராளிகள் விட்ட பணி தொடரவேண்டும்.
   தாய் மண்ணில் பிறந்ததன்பின் தொடர்ந்த மாணவ, வாலிபப் பருவங்களை, தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த பரமதேவா போன்ற இளையோர்கள் எக்காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தால் மறக்கப்படமுடியாத மாமனிதர்கள் என்பதை தமிழர் வரலாறு உணர்த்திக் கொண்டேயிருக்கும். மட்டடக்களப்பில் பரமதேவா தமிழ்த் தேசிய எழுச்சியின் ஆரம்ப வடிவம் என்பது அழியாத வரலாற்று பதிவாகும்.
   தனித்து ஒரு குழு அமைத்து, களமாடப் புறப்பட்ட பரமதேவா,
   1977 ம்ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் அரசியலுக்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலையை பெறுவதற்கு உகந்தவழியை தெரிவு செய்யும் நிலையில், பரமதேவா எடுத்தமுடிவு ஆயுதங்களைப் பெறுவதற்காக அரச நிறுவனங்களிலிருந்து காசு பெறும் நடவடிக்கையாகும்.
   இதற்காக பொத்துவில் ரஞ்சன், விஜி, வாமதேவன் ஆகியோர் குழுவாக இணைந்தனர். 1978 ம் ஆண்டு செங்கலடி ப .நோ .கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கியிலிருந்து காசை பறித்துக்கொள்ளும் நடவடிக்கை தாக்குதல் இலக்காகும். ,க் காசு மூலம் விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான போர்கருவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் பரமதேவாவின் மனதில் பதிந்திருந்தது.
   எவ்வித எதிர்கால வாழ்வு நோக்கமும் அற்ற ஒரு விடுதலைப் போராளியை பெற்றுக்கொண்ட தமிழ் மக்கள் குறுகிய காலத்தில் இழந்தது உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட தடைகளில் ஒன்றாகவே கருத முடிந்தது.
   தனித்துச் சிந்தித்து களமிறங்கிய பரமதேவா அவர்களின் திட்டத்தில் முதல் நடவடிக்கையொன்று மட்டக்களப்பு மண்ணில் நிறைவேற்றப்பட இருக்கின்ற நிலையில் செங்கலடியைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோது மட்டக்களப்பு – திருகோணமலை நெடுஞ்சாலையில் 10வது மைல் கல்லில் செங்கலடி அமைந்திருக்கின்றது. செங்கலடி கிராமிய வங்கிக்கு முன்பாக நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் சாந்தி சாராய விடுதியும், அதற்கு அருகாமையில் சாரதா படமாளிகையும், அதனை அண்டியதாக எல்லை வீதியும் அமைந்திருக்கின்றன.
   ஓரளவு சனநடமாட்டம் உள்ள இவ்விடத்தில் ஒரு நடவடிக்கையை பரமதேவா குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் பயன்படுத்திய மகளூர்ந்து ஓட்டுனராக வாமதேவன் இருந்தார். குறிப்பிட்டபடி நடவடிக்கை அந்தபோதும், எதிர்பாராத சம்பவம் ஒன்று இவர்கள் பிடிபடுவதற்கு காரணமாகவிருந்தன.
   மட்டக்களப்பு – பதுளை நெடுஞ்சாலையில் பரமதேவா குழுவினரின் மகளுர்ந்து, பறித்தெடுத்த காசுடன் பயணித்த வேளையில் சாந்தி சாராய விடுதியில் சந்தர்ப்ப வசமாக தங்கியிருந்த சிங்களக் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் செங்கலடி கிராமிய வங்கியில் தென்பட்ட பதட்டத்தை விளங்கிக்கொண்டபின் பரமதேவா குழுவினரின் மகளூர்ந்தை தொடர்ந்து சென்று மகளூர்ந்தை நெருங்கிய வேளையில் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.
   இதனால் பரமதேவா குழுவினரும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் இத் தாக்குதலைத் தொடர்ந்து பரமதேவா விழுப்புண் அடைய மகளூர்ந்து நிறுத்தப்பட்டு இறங்கி ஓட முற்படும்போது ஓட்டுனர் வாமதேவன் மாத்திரம் தப்பிச்செல்ல பரமதேவா, விஜயசுந்தரம், ரஞ்சன் ஆகியோர் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
   இக்காலங்களில் மக்களால் பேசப்பட்ட கதாநாயகன் பரமதேவா, காலத்தால் அழியாத வரலாற்றுப் பதிவு ஒன்றை ஆரம்பித்து வைத்து, உணர்வுள்ள இளையோர்களை தமிழர் உரிமைக்காக தட்டியெழுப்பிய தன்னலமற்ற வீரன். இவனுடைய எழுச்சி, எண்ணற்ற இளையோர்களை களமாடத் தூண்டியது.
   இந்த வரிசையில் மட்டக்களப்பில் மறத்தமிழ் வீரனாக, தன்மானத்துடன் எழுந்து, சிங்களப் படைகளுக்கு கெதிரான குண்டுத் தாக்குதலுக்கு சென்ற வேளையில் கைகளுக்குள்ளே குண்டுவெடித்ததால் விழுப்புண் அடைந்த நிலையில், இந்த அடையாளம் தன்னைக் காட்டிக்கொடுக்குமென்பதால் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற கல்லடிப்பால அடியில் ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியில் வீழ்ந்து முழ்கி தன்னை இழந்து தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு ஆரம்பத்தில் அத்தியாயம் ஒன்றைப் படைத்திட்ட செந்தமிழ் வீரன் பெஞ்சமின் உட்பட்டவர்களை எண்ணிக்கொள்வதிலும், அதனை எழுத்தாக வடிப்பதிலும், பரமதேவா வரலாற்றோடு பதிவை ஒன்றிணைத்து தொடர்கின்றேன்.
   சிங்களச் சிறையில் பரமதேவா
   1978 ம் ஆண்டு பரமதேவா, ரஞ்சன், (லெப்.சைமன்) விஜயசுந்தரம், ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளையோர்கள் சிங்கள புலனாய்வுப் படையால் பிடித்து, சித்திரவதை செய்யப்பட்டு சிறைகளை எல்லாம் தமிழர்களின் அடக்குமுறைக் கூடங்களாக மாற்றிக்கொண்டிருந்தனர்.
   விடுதலைக்காக போராளிகள் உருவாவதும், சிறைகளில் சித்திரவதை செயப்பட்டு, இருண்ட வாழ்க்கையில் மக்களுக்காக வாழ்வதும் தொடர்ந்த வண்ணம் தமிழர் தாயகமெங்கும் விடுதலை அலை எழுந்து கொண்டிருந்தன. மட்டக்களப்பு மண்ணில் உணர்வுடன் எழுந்த, உணர்ச்சி பாவலர் தனது பாட்டு வரிகளால் ஊட்டிய பற்று இளையோர்களை விடுதலைப் பற்றாளர்களாக மாற்றியிருந்தது.
   ஒவ்வொரு அடக்கு முறையையும் சிங்களம் திணிக்கும்போது திரண்டெழும் மக்கள் சக்தி மலைபோல் எதிர் கொண்டது. அரச சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அன்றைய ஜனாதிபதி து.சு.ஜெயவர்த்தன அவர்களின் பேரினவாத அரசியல் தமிழ் ,ளைஞர்களுக்கெதிராக அடக்கு முறைச்சட்டங்களை உருவாக்குவதற்கும், சிங்களச் சிறைகளில் விசாரணைகளின்றி, காலவரையற்ற சிறைவாசத்திற்குட்படுத்துவதும் தமிழின அடக்கு முறையை மேலும் வலுவாக்கியது.
   இதனால் எண்ணற்ற இளையோர்கள் சிங்கள சிறைகளில் குவிந்திருந்தனர். ,வர்களில் ஒருவராக பரமதேவாவும் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். தாயகமெங்கும் ஏற்பட்ட எழுச்சி, சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறை, மேலும் இளையோர் கூட்டங்களை அணியணியாக விடுதலை ஒன்றையே நோக்காகக் கொண்டு பயணிக்கவைத்தன.
   புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரங்கொண்ட அடக்குமுறை ஆட்சியமைப்பு எல்லாம் இணைந்ததாக தமிழ்மக்களை குறி வைத்த சட்டங்கள், தன்னாட்சி உரிமைக் கோட்பாட்டுக்கு விலங்கு போட்டு தமிழ் மக்களை அடக்கி ஆளப்புறப்பட்டதெல்லாம் தாயகமெங்கும் தமிழின எழுச்சியின் உச்சத்திற்கு இளைஞர்களை அழைத்துச்சென்றிருந்தன. தொடர்ந்து அடக்குமுறைக்கும், தமிழின அழிப்புக்கும் உச்சமாகமைந்த 1983 யூலை இன வன்முறையும், படுகொலைகளும் சிங்களப் பேரினவாதஅரசியலின் பௌத்த மேலாதிக்க கொள்கையை வெளிப்படுத்தன.
   உலகிலே ஆச்சரியப்பட்ட விடயமாக சிங்களவர்கள் பௌத்தமதத்தைப் பின்பற்றிய நிகழ்வாக இருப்பதைக் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது. வக்கிரமும், வன்முறையும் கலந்து ஏனைய இனத்தவரையும், மதத்தவரையும் அழிக்கும் செயலானது பௌத்தத்திற்கு பெரிய இழுக்கை இலங்கைத் தீவில் ஏற்படுத்தியிருந்தது.
   சிறைக்குள் அடைக்கப்படிருந்த தமிழ் அரசியல் போராளிகளை படுகொலை செய்யும் செயலானது உலகத்திலேயே மனிதாபிமானத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எடுத்துக்கொண்டு, உலகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அமைந்த சம்பவமான சிறைப்படுகொலை உலக நாகரீகத்தைக் குழி தோண்டிப் புதைத்த நிலையிலிருந்தன. மூத்த போராளிகளான தங்கத்துரை, குட்டிமணி,போன்ற 52 தமிழ்ப் போராளிகளின் படுகொலையும், தப்பிய கைதிகள் மட்டக்களப்பு சிறைக்குள் மாற்றப்பட்டதான நிலையில் பரமதேவா போன்றோரின் சிறைவாசமும் தொடர்ந்திருந்தன.
   1983.09.23 ம் நாள் மட்டக்களப்பு தமிழ் மக்களின் முழு ஆதரவோடு தகர்க்கப்பட்ட சிறையிலிருந்து தமிழ்ப் போராளிகள் வெளியேறிய போது பரமதேவா உட்பட சிலர் தாயக மண்ணில், பரந்த வெளிச்சத்தில், விடுதலை வானில் மறைக்கப்படாத ஒளியைத் தேடிய நிலையில் தமிழர் எழுச்சியின் புரட்சி விடுதலை வடிவமான மேதகு வே .பிரபாகரன் அவர்களின் உறுதிமிக்க விடுதலைப்பாதை அவர்களை பின்தொடரவைத்தன.
   சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரையில் பிரபாகரன் அவர்களின் வீரம், தன்மானம் என்பன தமிழரைத் தலை நிமிர்ந்து வாழவைக்கும் என்ற எண்ணம், பரமதேவா அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ,ணைய வைத்ததன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ,ந்தியாவில் முதல் பாசறையில் பயிற்சி பெறுவதற்கு பயணிக்கவைத்தன.
   விடுதலைப் புலிகளின் பாசறையில் பரமதேவா
   இலங்கைத் தீவில் மாபெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து இந்திய அரசின் அழைப்பில் தமிழ் இளையோர்கள் அணிகள் படைத்துறை பயிற்சி பெறுவதற்காக படகின் மூலம் சென்று கொண்டிருந்தனர். இப் பயிற்சியை பெறுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சிப் பாசறையில் பரமதேவாவும் இணைந்திருந்தார்.
   1972ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை எழுச்சியில் உணர்வுடன் எழுந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களின் முன்னணியில் திகழ்ந்த பாசி, மோகனச்சந்திரன், ஆகியோருடன் பொன். வேணுதாஸ் சரவணபவான் பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர்.
   1975ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை எழுச்சியில் உணர்வுடன் எழுந்து ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்ட மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களின் முன்னணியில் திகழ்ந்த பரமதேவா, ரஞ்சன், தயாளன்,யோகபதி ஆகியோர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர்.
   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்திலிருந்து முதல் உறுப்பினரான பாசி.யோகன் அவர்களுடன் இணைந்ததாக போராளிகள் புறப்பட்டிருந்தனர்.
   மட்டக்களப்பின் முன்னணி வீரன் பரமதேவாவின் விடுதலை உணர்வு, எழுச்சிமிகு செயல்பாடுகள் என்பவற்றை அறிந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பரமதேவா விடுதலைப் புலிகளோடு இணைந்தது தனது உறுதியான விடுதலைப் பயணத்தில் கிழக்கிலிருந்து சாள்ஸ் அன்ரனியைத் தொடர்ந்த பலமாகவே எண்ணிப்பெருமிதம் கொண்டிருந்தார்.
   தலைவரின் நெஞ்சினில் ஆழமாக வேரூன்றியிருந்த கிழக்கு போராளிகளில் பரமதேவா ஒருவர் என்பதை தலைவர் அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாட்டிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.
   தாய் மண்ணில் விடுதலைப் புலிப் போராளியாகப் களத்தில் பரமதேவா
   சாதாரண படகுப் பயணமூலம் தாய்த் தமிழகத்திலிருந்து தமிழீழத் தாய்மண்ணுக்கு வந்திருந்த பரமதேவா தனது பிறந்த ஊர் பயணத்தில் நடைப்பயணம் ஒன்றுக்காக காத்திருந்தார்.
   ஆரம்ப காலங்களில் சாதாரண மீன் பிடிப் படகுகள் மூலமும்,கால் நடை மூலமும் மாவட்டங்களுக்கிடையிலான போக்கு வரவைப் போராளிகள் மேற்கொண்டிருந்தனர்.
   யாழ்.மாவட்டத்திலிருந்து வன்னி பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளோடு சிலகாலம் தங்கியிருந்த பாமதேவா முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தை தாக்கியழிக்கும் நடவடிக்கையில் முன்னணி வீரனாக களமிறங்கினார்.
   விடுதலைப் புலிகளின் போராளிகளால் 05.08.1984 ம் ஆண்டு அன்று தாக்கியழிக்கப்பட்ட ஓட்டுச்சுட்டான் சிங்கள காவல் நிலையத்தில் சுமார் 30 விசேட பயிற்சி பெற்ற அதிரடிப்படையினர் உட்பட்ட 50 சிங்கள காவல் துறையினர் பணியிலிருந்தனர். முல்லைத்தீவின் முச்சந்தியில் அமைந்துள்ள ஓட்டுச்சுட்டான் பழமையான வரலாற்றை எமக்கு உணர்த்தும் பாரம்பரிய தாயகத்தின் புனித பூமியாகும். தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இவ்வூரிலிருந்து முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு, முத்தையன்கட்டு, நெடுங்கேணி போன்ற தமிழரின் ஊர்களுக்குள்ளும் செல்ல முடியும், இந்த ஊரின் அருகாமையில் பண்டாரவன்னியன் என்ற தமிழ் மன்னனின் கல்லறை கற்சிலை மடுவில் அமைந்துள்ளதையும் குறிப்பிடமுடியும்.
   வீறுகொண்டெழுந்த வேங்கைகளின் பாய்ச்சலில் கிலிகொண்ட சிங்களப்படையினர் அழிக்கப்பட்ட படையினரை விட்டு நாலா புறமும் ஓடியபோது விடுதலைப் புலிகள் உள் நுழைந்து எராளமான நவீன போர்க்கருவிகளை அள்ளியெடுத்து வெளியேறினர்.
   சிங்கள காவல் ஆய்வாளர் கணேமுல்ல உட்பட்ட 6 பேர் இத் தாக்குதலில் அழிக்கப்பட்டனர். விழுப்புண் அடைந்த சில போராளிகளுக்கு பரமதேவா முதல் உதவிப் பணிகளைத் செய்திருந்தார். இத்தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளுடன் பரமதேவா என்ற மட்டக்களப்பு மாவீரனும் இணைந்திருந்தார். தாக்குதலுக்கும், மருத்துவத்திற்குமாக கடமை உணர்த்தப்பட்ட பரமதேவா தனது பணியை செம்மையாக செய்திருந்தார்.
   அள்ளப்பட்ட ஆயுதங்களில் சிலவற்றுடன் முல்லைத்தீவு மண்ணிலிருந்து நடைப்பயணமாகவும், கடல் பயணமாகவும் சில போராளிகளுடன் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டார். முல்லைத்தீவு, மணலாறு, தென்னமரவாடி, வெருகல் ஊர்களுடாக அவருடைய பயணம் அமைந்திருந்தது. அக்காலத்தில் விருப்புடன், புனிதப் பயணத்தில் இலட்சியத்திற்காக, உறுதியான கொள்கையில் பயணிக்கும் ஒவ்வொரு போராளிக்கும், தமிழீழ மெங்கும் தமிழ் ஊர்களைத் தாவிச்செல்வதும், அங்கு வாழும் மக்களை தரிசிப்பதும் புதிய அனுபவமாகும். ஒரு போராளியின் உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வின் வெளிப்பாடகவும் இருந்ததனால் இப் பயணத்தை தமிழர் நிலங்களில் கால் பதித்துச் செல்லும் பாக்கியமாகவே கருதியிருந்தனர்.
   ஒரு போராளியின் வாழ்க்கையில் தான் சார்ந்த இனத்தின் விடுதலையை தாங்கிச்செல்லும்போது. முழு இனத்தின் உறவோடு பயணிப்பதில் அவனின் இலட்சியப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பன உண்மையின் வெளிப்பாடாகவே அமைந்துவிடுகின்றன. இவ்வாறு எமது மண்ணில் புனிதப் போராளியாகப் பயணித்தவர்களில் பரமதேவாவும் தமிழர் வரலாற்றில் விடுதலை வீரனாக, கண்முன்னே நிழலாக காட்சிதந்து கொண்டிருக்கின்றார்.
   ஒரு தமிழன்னைக்கு, தாய் மண்ணில் பிறந்த பரமதேவா பாலகப்பருவம் தாண்டிய பள்ளிப் பருவத்தில் தமிழ் மக்களின் விடுதலையை தோள்மீது சுமந்து பயணித்து தமிழீழ அன்னையின் வீரப் புதல்வர்களில் ஒருவரானார்.
   மட்டக்களப்பில் இராஜதுரை, அம்பாறையில் கனகரெட்ணம் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தை சிதைத்து தமிழர் அரசியலிலிருந்து மாறியபோது, கனகரெட்ணம் அவர்களின் மகனையும் அழைத்துக்கொண்டு களமாடப் புறப்பட்ட பரமதேவா மட்டக்களப்பு அரசியலில் பாரிய தாக்கத்தையும், உறுதியான விடுதலை சார்பாக ஏற்படுத்தியிருந்தார்.
   அன்று அவருக்கு தோள் கொடுத்தவர்களாக காசி ஆனந்தன், பொன்.வேணுதாஸ், வணசிங்கா ஆசிரியர், சௌந்தரராஜன் ஆசிரியர், பத்திரிகையாளர் நித்தியானந்தன், வணபிதா சந்திரா பெர்னாண்டோ போன்றவர்களைத்தான் எம்மால் இனங்காணமுடிகிறது. தமிழர் அரசியலில் வேறுபலரும் தொடர்ந்திருந்தபோதும் உறுதியான விடுதலை, அரசியல் பயணத்தில் விலகாமல் சென்றவர்களாக பிற்காலத்தில் அரசியலில் மிளிர்ந்தவர்களை உயர்ந்தவர்களாக சொல்ல முடியவில்லை.
   தமிழரின் அரசியல் பயணம், விடுதலைப் பயணமாக மாறிய வேளையில் மட்டக்களப்பில் உறுதியான அரசியல் எழுச்சியில் குளிர் காய்ந்து பதவியைப் பிடித்தவர்களும், அதைக்தக்கவைக்க தடம் புரண்டு அரசியல் நடத்தியவர்களையும், அவதானிக்க முடிந்தது.
   பரமதேவா (லெப்டினன்ட் ராஜா) என்ற மாவீரனின் வரலாற்றுப் பதிவில் சாதாரண சம்பவங்களாக அரசியலைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் எழுச்சி அரசியல் தொடங்கிய வேளையில் இவருடைய விடுதலை எழுச்சியும் மக்கள் மத்தியில், ஒரு புரட்சித் தீயை மூட்டியதால், வரலாறும் அரசியலோடு இணைந்ததாக பதியப் படவேண்டிய நிலையில் இருக்கின்றது.
   இன்றைய தமிழ் இளையோர்களுக்கெல்லாம் முன் மாதிரியான, எழுச்சி வீரனாக கூறக்கூடிய பரமதேவா (லெப்டினன்ட் ராஜா) என்ற தன்மானமிக்க, தமிழ் புரட்சியாளனின் வரலாறு, புதிய எழுச்சியை, புதிய அரசியலை, விடுதலைக் களத்தில் நிட்சயம் தோற்றுவிக்கும். மங்காது, மறையாது, புரட்சியாளர்களின் வரலாறு என்பதற்கமைய லெப்டினன்ட் ராஜா (பரமதேவா) போன்றவர்களின் வரலாறும், காலம் காலமாக எமது மக்களின் சந்ததியோடு தொடர்ந்து செல்லும்.
   விடுதலை அடையமட்டுமல்ல, விடுதலை பெற்ற பின்பும் இது தொடரும்.
   மாசற்ற மறவனை பெற்றெடுத்த மட்டக்களப்பு மண் கண்ட வீரர்கள்பலர், இம் மண்ணில் களமாடி வீழ்ந்த 8000 க்கு மேற்பட்ட மாவீரர்களின் வரலாற்றின் ஆரம்பந்தான் பரமதேவா என்ற புரட்சி வீரனின் புதிய விடுதலை அத்தியாயம். எழுதப்படுகின்ற எமது போர்க்காவியத்தின் படைப்புகளில் மட்டக்களப்பின் தொடக்கத்தின் முதல் பக்கமாக பரமதேவா என்ற விடுதலைப் போராளியின் வரலாறு அமைந்திருக்கும்.
   நினைவுப்பகிர்வு:- எழுகதிர்.
    
   https://thesakkatru.com/commander-lieutenant-raja/
  • By உடையார்
   லெப். கேணல் சந்திரன்
    
    

    
   வன்னியின் முழுநிலவு”
   வன்னிப் பிராந்திய அரசியல்த்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் சந்திரன்.
   சந்தின், உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த் மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை.
   புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி உற்சாகமாக வழியனுப்பும் நிழல்மரங்களும் உன்னைக் காணாமல், உன்னை விழுங்கிய கடலலைகளைப் போலவே குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
   சந்திரன், நீ முல்லைத்தீவுக்கு வரும்பொழுது ஒரு சின்னப்போராளி.
   நீ கறுப்பாக இருந்தாலும் அழகாக இருப்பாய். கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் உனது கண்களில் அன்பும், கனிவும் இருக்கும் சில நேரங்களில் கோபமும் தெறிக்கும்.
   சந்திரன் நீ அடிக்கடி சொல்வாய்: “நான் ஏழைக்குடும்பத்தில்தான் பிறந்தனான். வயலில் கூலிவேலை செய்துதான் நாங்கள் வாழ்ந்தனாங்கள்.” உண்மைதான். அதனால்தான் ஏழைகளை நேசிக்கும் இதயத்தைப் பெற்றுக்கொண்டாய். அதனால்தான் எப்பொழுதுமே ஏழை மக்களுடன் ஒன்றிக் கலந்துவிடுவாய்.
   ஒருமுறை, புதரிகுடா என்ற கிராமத்திற்கு நாங்கள் போயிருந்தோம். வயற்கரை ஓரங்களில் சிறு கொட்டகைகளைக் கட்டி அங்கு சில குடும்பங்கள் இருந்தன. கூரைகள் பிய்ந்துபோயிருந்தன. மழையிலும் வெயிலிலும் அவர்கள் நனைந்துகொண்டுதான் இருந்தார்கள். விழிகளில் ஏக்கத்துடன், வெறும் மேனியுடன், நோயினால் வீங்கிய வயிறுகளுடன் இந்த மண்ணின் குழந்தைகள் எங்கள் முன்பு நின்றார்கள்.
   நீ தவித்தாய்… அவர்கள், பல நாட்களாகக் குளிக்கவில்லை என்றார்கள். தண்ணீர் அள்ளவேண்டாம் என்று பக்கத்து வளவுக்காரன் தடுத்துவிட்டானாம். குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை என்றார்கள். அதைக்கேட்டு நீ பட்ட தவிப்பும், உன்னிடம் தோன்றிய கோபமும் எங்களுக்கு நன்றாகவே தெரிந்தன. அந்த ஏழை மக்கள் இந்த மண்ணில் மனிதர்களாக வாழவேண்டும். அவர்களுக்கென்று இந்த மண்ணில் சொந்த நிலம், தொழில், மகிழ்ச்சிக்குரிய வாழ்வு எல்லாமே தோற்றுவிக்கப்பட வேண்டும் என, நீ தீர்மானித்துக் கொண்டாய். உண்மையில் நீ கேலியாகச் சொல்வது மாதிரி ‘அதுவும் ஒரு போர்முனை’ தான்.
   நீண்ட காலமாகக் கவனிக்கப்படாமல் ஊருக்குள் காடாய் இருந்த உடையார் ஒருவரின் பெரும் நிலம், அவர்களுக்குச் சிறிய பகுதிகளாகச் சொந்த நிலமானது. புதிய அழகான மண் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமானது. அந்தக் கிராமத்திற்கென்று பாலர் பாடசாலையை ஆரம்பித்தபோது, உன்னுடன் நாங்களும் அங்கே நின்றோம். நீ அவர்களுக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்திருந்தாய். ஆறு வயது தொடக்கம் பத்துப் பன்னிரண்டு வயதுவரை, எல்லாக் குழந்தைகளும் பாலர் வகுப்பில் படிப்பதற்கு வந்திருந்தார்கள். அது ஒரு மகிழ்ச்சிக்குரிய நாள். இனி அந்தக் கிராமம் தனக்கென்றொரு வாழ்வைக் காணும் என்பது அன்று வெளிப்பட்டது.
   சில நாட்கள் சென்றன. அந்தக் கிராமத்தவர்களுக்குப் புதரிகுடா என்ற பெயர் பிடிக்கவில்லையாம். அதனைச் சந்திரபுரம் என மாற்றிவ்ட்டார்கள். அதனைக்கேட்ட எங்களுக்குச் சிரிப்பாக இருந்தது. உனக்குக் கோபமாக இருந்தது. நீ எசினாய். இனி அப்படிச் சொல்லக்கூடாது என்றே. ஆனால் சந்திரன், நீ உயிரோடு இருக்கும் பொழுதும் உன் மரணத்தின் பின்பும் அந்தப் பெயர் மாறவே இல்லை. நீ அதற்குப் பின் எவ்வளவோ பெரிய பெரிய பொறுப்புக்களில் எல்லாம் இருந்திருப்பாய். ஆனால் நீ தடம்பதித்துச் சென்றது இங்குதான். உன் நினைவுகள் ஆழமாக வேரூன்றிப் போனதும் இங்குதான்.
   சந்தின், உன் நினைவுகளைச் சொன்னபடி சந்திரபுரம் மட்டும்தான் இருக்கிறதென்றில்லை. நீ உருவாக்கிய இன்னொரு கிராமமான பொன்னகர், நாவற்காடு, உன்னைத் தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட முள்ளியவளை, தண்ணீருற்று, முல்லைத்தீவு, பாண்டியன்குளம், பனங்காமம்… ஏன் வன்னி முழுவதுமே உன் நினைவுகளைச் சொன்னபடி நிற்கின்றன.
   சந்திரன், உனது உள்ளம் சிலவேளைகளில் தாயன்பைத் தேடி அழுவதுண்டு. நீ உந்து அம்மாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தாய் என்பது, எங்களுக்குத் தெரியும். உன்னுடைய சோகம் நிறைந்த இளமைக் காலத்தை நீ, வேலைகளினூடே சொல்வதுண்டு.
   அந்தக் காலங்களில் எங்கள் முன் கடுமையான வேலைகள் நின்றன. நீ முறிந்து, கஷ்டப்பட்டு வேலை செய்வாய். நாங்கள் வியந்து நிற்போம்.
   “நான் சின்ன வயசிலேயே வயலுக்கை நிண்டனான்” என்பாய் நீ. உன் விழிகளில் ஏதோ ஒரு ஏக்கம் தெரியும்.
   “அண்ணன்மாருக்கும் எனக்கும் சேர்த்து அம்மா பழஞ்சோறு உருட்டித்தருவா” என்பாய் நீ. உன் விழிகளை நாங்கள் பார்ப்போம். நீ வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பாய்.
   சந்திரன், நீ கிளிநொச்சியில்தான் பிறந்தாய். ஆனால் உனது அம்மாவும், அப்பாவும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். உனது அப்பா சாகும்பொழுது உனக்கு இரண்டு வயதாம். உனது இரண்டு அண்ணன்மாரும் சின்னப்பிள்ளைகள். உங்கள் மூன்று போரையும் வைத்துக்கொண்டு உனது அம்மா எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பாள். இப்போதெல்லாம் உன்னுடைய அம்மா உனது படத்தை வைத்துக்கொண்டு விம்மிக் கொண்டிருக்கிறாளாம்.
   சந்திரன், நீ முள்ளியவளையில் அரசியல் வேலை செய்யும்பொழுது, சில நேரங்களில்…… இரவில் உன்னைத் தேடி நாங்கள் வருவதுண்டு. இரவில் சோகமான பாடல் கேட்கும். வீட்டில் உன்னை நாங்கள் காணுவோம். நீ விழித்திருப்பாய். “இந்த விடயம் ஆமிக்காரனுக்குத் தெரிந்தால் பாட்டுக்கேட்கிற வீட்டில் வந்து உன்னைப் பிடிக்கப்போறாங்கள்” என்று, நாம் எசுவோம். நீ வீடு வீடாக வேலிகளுக்கு மேலாகப் பழைய சோறு தேடித் திரிவாய். அதற்காக நீ வெட்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அங்கிருக்கிற எல்லா வீட்டிற்கும் நீ பிள்ளை மாதிரித்தான். உனக்குச் சாப்பாடு தரவேண்டும் என்பதற்காகவே, அவர்கள் இரவில் சோற்றை மிச்சம் வைப்பதுண்டு. சந்திரன், இன்றைக்கு அந்தச் சனத்தினுடைய இதயத்தில் நீ இருக்கிறாயடா!
   சந்திரன், நீ அரசியல் பேசுவதை நாங்கள் கேட்பதில்லை. சில நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஏதாவதொரு வீட்டின் முற்றத்தில், ஒரு கல்லின்மேல் நீயிருப்பாய். தங்கள் வீட்டுக் கதைகளைச் சொல்லிக்கொண்டே அந்த வீட்டுகாரரும் முன்னாலிருப்பார்கள். அப்போதுதான் நீயும் இந்த மண்ணின் நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டிருப்பாய். அவர்கள் எவருக்குமே தெரியாது, அவர்களுக்கு நீ அரசியல் படிப்பிக்கிறாய் என்று. கதைத்து முடிந்த பின்பு, “இந்த மண்ணின் விடுதலைக்காக எல்லோரும் போராடத்தான் வேண்டும்” என்பார்கள்.
   முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசத்திற்கு நீ அரசியல் வேலை செய்வதற்கு வந்து, இரண்டு வருடங்கள் சென்றன. இந்தக் கால இடைவெளியில் உன்னிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. எதற்கெடுத்தாலும் கோபப்படும் உனது இயல்பும் மாறி இருந்தது. முல்லைத்தீவு பிரதேசத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. உனதும் உனது தோழர்களதும் கடுமையான உழைப்பு, தேசவிரோத சத்திகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தன. தங்கள் மண்ணின் விடுதலையைப் பற்றி மக்களைச் சிந்திக்க வைத்தது. அந்த விடுதலைக்காக மக்களைப் போராடத் தூண்டியது.
   சந்திரன், உனக்குத் தெரியும்; அந்த நேரங்களில்த்தான், இந்தியப்படை எம் தேசத்தின் மீது ஒரு யுத்தத்தை நடாத்தியது. நாங்கள் தெருக்களில் நடக்க முடியாமலும், கிராமங்களில் நிற்க முடியாமலும், இருந்த நேரமது.
   இரவு நேரங்களில் காடுகளிற்குள்ளும், காட்டுக் கரையோரங்களிலும்தான் நாங்கள் படுப்போம். ஆபத்தை எதிர்பார்த்தபடியே இரவின் அச்சத்தில், பசித்த வயிற்ருடன் இருக்கும் எங்களை, நீதான் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாய். நாட்கள் செல்ல செல்ல ஆபத்து நிறைந்த அந்த இரவுகளே இனிமையான இரவுகளாக எங்களுக்கு மாறிவிட்டன. சந்திரன், எங்களின் எல்லாத் தோழர்களும் சொல்வார்கள் “கஸ்டமான அந்த நாட்களும் அந்த நினைவுகளும்தான், இன்னும் எங்களின் மனங்களில் பசுமையாய் படிந்து கிடக்கின்றது” என்று.
   சந்திரன் நீ அரசியல் வேளைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், தாக்குதற் களங்களுக்குச் செல்வதற்கும் தவறுவதில்லை. உன் கைகள் எதிரிக்கு எதிராகப் பலமுறை துப்பாக்கிகளை இயக்கியிருக்கும்.
   இந்தியப் படைகளுடன் நெடுங்கேணியில் நடந்த சண்டை ஒன்றில் நீ, கழுத்திலும் கையிலும் காயமடைந்திருந்தாய். களத்தில் ஆயுதங்களைக் கைப்பற்ற முன்னேறியபோது நீ காயமடைந்ததாக, உன் தோழர்கள் சொன்னார்கள்.
   நீ எமது முகாமில் சாய்மனைக் கட்டிலில் சாய்ந்திருத்தாய். உன் கழுத்தில் சிக்கிய துப்பாக்கி ரவை, உன்னை வேதனைப்படுத்தியது. நீ அதைவிட அதிகமாக பாவனை, நடிப்புச் செய்தாய். உன் பாவனைகளை எத்தனை தோழர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒரு தோழன் உன்னை அழைப்பான். நீ கழுத்தைத் திருப்ப முடியாமல் உடல் முழுவதையும் திருப்பி அவனைப் பார்ப்பாய். எங்கள் முகாம் முழுவதும் உன்னைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும். இந்தியப் படைகள் எங்களைச் சுற்றி ஒரு வலயத்தை அமைத்து எங்களை நெருங்கிய பொழுதும், நாங்கள் காடுகளிற்குள் மகிழ்ச்சியாக இருந்தோம். போராட்டத்தில் நம்பிக்கையோடு இருந்தோம் என்பது, இந்தியர்களுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது.
   உனது காயம் சுகமாகியது. அந்த நேரத்தில் முல்லைத்தீவு பிரதேசத்து மக்கள் இந்தியப் படைகளால் அடித்து விரட்டப்பட்டு, காடுகளிலும் வயல்களிலும் தஞ்சமடைந்து வாழ்ந்தனர். நீயும் அவர்களுடன் கலந்து நின்றாய். நீயும் உனது தோழர்களும் அந்த மக்களுக்குப் போராட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினீர்கள். போராட்டத்தின் தேவையைப்பற்றி, இந்த மண்ணின் விடுதலையைப்பற்றி, இந்திய ஆக்கிரமிப்பின் நோக்கத்தைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினீர்கள். அந்த நிலையை விளங்கிக்கொண்டு, மக்கள் எங்களை அரவணைத்ததால்தான், ஆக்கிரமிப்பாளனுக்கு இந்த மண் அடிபணியாது தலை நிமிர்ந்துகொண்டது.
   அந்த நாட்களில்தான், நீ கிளிநொச்சிக்கு அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிகப்பட்டாய். முல்லைத்தீவு மாவட்டத்து மக்களின் கண்கள் உன் பிரிவைத் தாங்காது தவித்தன. ஆனால் உன்முன் இருந்ததோ பெரும் கடமை. நீ கிளிநொச்சிக்குச் சென்ற பின்பு, அரசியல்த்துறைப் பிரிவை ஒழுங்குபடுத்தி விஸ்தரித்திருந்தாய். உனது திறமையான செயற்பாடுகள் அந்த மாவட்டத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தின. அந்த நேரங்களில் இரண்டு மூன்று தடவைகள், இந்தியப் படைகளின் சுற்றிவளைப்புக்களிலிருந்தும் நீ தப்பிக்கொண்டாய்.
   வன்னி மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக இருந்த மாறன் அண்ணாவின் இழப்பின் பின்பு, நீ வன்னி மாவட்ட அரசியற் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாய். அந்த நேரத்தில்தான் இந்தியப் படை இந்த மண்ணை விட்டு வெளியேறியது. நீ வன்னி முழுவதும் அரசியல்த்துறைப் பிரிவை ஒழுங்குபடுத்தி, வேலைத் திட்டங்களை வகுத்துக்கொண்டே. புதிதாய்ப் பிறப்பெடுத்த எமது கட்சி அமைப்பும் அந்த நேரங்களில் பலப்பட்டுக்கொண்டது. அந்த நேரங்களில் நாங்கள் நடாத்திய பேரணிகளில், கூட்டங்களில், உனது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பார்கள். உன்னால் எப்படி இவ்வளவு இலகுவாக, தெளிவாக எல்லா மக்களையும் கவரக்கூடியமாதிரிப் பேசமுடிகிறது என்பது, எங்களுக்கு வியப்பாகவே இருக்கும்.
   சிறிலங்கா இராணுவத்தினருடனான சண்டை மீண்டும் தொடங்கியபோது, நீ எங்கேயோவொரு தாக்குதற் களத்தில்த்தான் நிற்பாய் என்பது, எலோருக்குமே தெரியும். அப்படித்தான் நீயும் நின்றாய்.
   கொக்காவில் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் நீ கலந்துகொண்டாய். அந்த முகாமை நாங்கள் வெற்றிகொண்டோம். ஆனால், அங்குதான் உனது அடிவயிற்றில் துப்பாக்கிக் குண்டு தாக்கியது.
   சந்திரன், நீ எங்கள் வைத்தியசாலை ஒன்றில் கிடந்தாய். உன் விழிகள் நீ தப்பிக் கொள்வாய் என்ற நம்பிக்கையைத் தரவில்லை. உன் உறுதியான கறுத்தத் தேகம் வாடிப்போய்க் கிடந்தது; கலங்கிய விழிகளுடன் நாங்கள் காத்திருந்தோம்.
   சில வாரங்கள் சென்றன. நீ கண் விழித்தாய். ஆனால், உன் கால்கள் இனி இயங்காது என்றார்கள். கால்கள் இல்லாத சந்திரனை எங்களால் கற்பனை கூடச் செய்யமுடியாது சந்திரன்! ஆடாமல், பாடாமல், ஓடாமல் நீ இருக்கவே மாட்டாய். நாங்கள் தவித்தோம். கலங்கி நின்றோம். ஆனால் நீ கலகலப்பாக இருந்தாய். உனது நிலை உனக்குத் தெரிந்த பின்பும் உற்சாகமாக இருந்தாய்.
   சந்திரன், நீ வைத்தியசாலைக் கட்டிலிருந்துகொண்டெ “நான் இங்கையும் அரசியல் வேலை செய்யிறன். இங்கு வருகிற தாதிகளுக்கும், வைத்தியர்களுக்கும், ஏன் என்னை இந்தக் கதவுகளால் எட்டிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் ஒரு போராட்டம் ஏன் நடக்கிறது எனச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றாய். உண்மைதான்; நீயிருந்த – சோகம்பாடும் அந்த, வைத்தியசாலைகூட கலகலப்பாக மாறிப்போனது.
   சந்திரன் நடக்கத் தேவையில்லை, அவன் இருந்தாலே போதும் போராடுவான், போராட்டத்திற்குப் பங்களிப்பான் என எங்கள் மனங்கள் எண்ணிக்கொண்டன.
   அதன் பின்பு; நீயும் உனது தோழர்களும் வைத்திய வசதியைத் தேடிக் கடலில் பயணம் போனதாகக் கேள்விப்பட்டோம். உண்மையில் உங்களுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. கடலிற்குள் தோன்றிய சிங்கள மிருகங்கள் உங்களைக் கவிட்டிருக்கும். உனக்கு நீந்தத்தெரியும். நீ கைகளால் நீந்த முயன்றிருப்பாய். இயலாத உனது கால் உன்னைக் கீழே கீழே இழுத்திருக்கும். கடல் உன்னை மூட ஒரு கணம் தயங்கியிருக்கும். மூடிய பின்பும் ஏற்றுக்கொள்ள முடியாமல் குமுறி இருக்கும். வன்னி மக்களின் மனங்கள் கொந்தளித்ததைப் போலவே, கடலும் உன்னை அணைத்த பின்பு வேதனை தாளாது கொந்தளித்திருக்கும்.
   நினைவுகளுடன் தோழர்கள்.
   நன்றிகள்: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி 1991), களத்தில் இதழ் (09.10.1996).
   https://thesakkatru.com/commander-lieutenant-colonel-santhiran/
    
  • By உடையார்
   கடற்கரும்புலி கப்டன் புலிமகள்
    
    

    
   பூக்களுள் எழுந்த புயல் கடற்கரும்புலி கப்டன் புலிமகள்.
   அது 1998 நடுப்பகுதி. கிளிநொச்சியின் நகரப்பகுதி இராணுவத்திடமிருந்தது. டிப்போச் சந்தியடி எங்களிடமிருந்தது. தற்போது கிளிநொச்சி மாவட்ட தமிழீழ காவற்பணிமனை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள தேவாலயம், கருணா நிலையம் எல்லாம் எமதும் சிறீலங்காப் படையினரதும் காவல் நிலைகளுக்கிடையிலான சூனியப் பகுதிக்குள் அமைந்திருந்தன.
   நேர்வீதி. எமது நடமாட்டத்தைப் படையினரும் அவர்களை நாமும் இலகுவாக அவதானித்து, பதுங்கிச் சூடுகளை தாராளமாக மேற்கொள்ள வசதியான நேர்வீதி. இரு பகுதியுமே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மறைப்புப் படங்குகளை வீதிக்குக்குறுக்கே கட்டித் தொங்கவிடுவோம். ஒருவரின் படங்கை மற்றவர் எரித்துக்கொண்டுமிருந்தோம். கதிரவன் உதிப்பதும் மறைவதும் போல, படங்கு கட்டுவதும் எரிப்பதும் கூட மாற்றமின்றி நடந்துகொண்டிருந்தது.
   தேவாலயத்தருகே எம்மவர்கள் இரவிரவாக ஏறிக் கட்டுகின்ற படங்கு, படையினரின் அடியில் விடிவதற்க்கிடையிலேயே கிழிந்து விழுந்துவிடும். சில நாட்களாக இது தொடர்ந்தது எங்களுக்குப் பெரிய சவாலாகப் போய்விட்டது. படங்கு எரிந்தால், அறுந்து விழுந்தால் நடமாடமுடியாது. காப்பரண்களுக்குள்ளேயே சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் முடங்கவேண்டியதுதான்.
   அங்கு நிலைகொண்டிருந்த லெப். கேணல் செல்வியின் கொம்பனிக்கு வேவு பார்ப்பது லெப். தாமராவின் அணி. கப்டன் புலிமகள் அவர்களில் ஒருவர். தாமராவுடன் நெடுஞ்சாலை வேவுக்குப் பெரும்பாலும் இணைந்து போவது புலிமகள்தான்.
   ‘படங்கை நான் கட்டிறன்’ புறப்பட்டால் புலிமகள்.
   வெட்டப்பட்ட உரப்பைகளை இணைத்துத்தைத்து படங்கு தயாரிக்கப்பட்டது. இரவானதும் படங்கை இழுத்துக்கொண்டு தேவாலயத்தடிக்குப் போனார் புலிமகள்.
   பகலில் படங்கு எரிந்துபோனதால், இரவு கட்டாயம் நாம் வருவோம் என்று எதிர்பார்த்திருந்த படையினர், இருள் சூழ்ந்ததுமே தேவாலயச் சூழலை நோக்கி எறிகணைகளை விசிறத் தொடங்கினர்.
   புலிமகள் படங்கோடு பதுங்கிப் பதுங்கி போனார்.
   அதுநேர்வீதி என்பதால், இரவில் ஒருவர் நின்றால்கூட வானவிளிம்பில் நிழலுருவமாகத் தெரியும். பகலைப் போலவே இரவும் ஆபத்தானதுதான். அச்சத்தைத் தரவல்ல, ஆபத்து நிறைந்த அந்த இரவில், கல்வாரிமலை நாயகனின்…… மெளன தவத்தைக் குழப்பியவாறு படிர் படிர் என எறிகணைகள் வெடித்து முழங்க , மரத்தில் ஏறிய புலிமகள் படங்கை இழுத்து வரி வரி என்று வரித்து கட்டிவிட்டு, வீதியின் மறுபுறமுள்ள மரத்திலும் இறுக்கு இறுக்கு என்று இறுக்கிக் கட்டிவிட்டு, காயங்கள் ஏதுவுமின்றி இரவு 9.00 மணிக்கே எமது முண்ணரங்குக்கு திரும்பிவிட்டார்.
   காலையில் காற்றிலே படங்கு அசைந்தாடிக்கொண்டிருந்ததை நாங்களும் ஆச்சரியமாகத்தான் பார்த்தோம். நேற்றும் அதற்கும் முதல் நாளும் இவ்வளவு நேரம்வரை படங்கு தாக்கு பிடித்திருக்கவில்லை. அதிகாலையிலேயே அறுந்து விழுந்து எங்களுடைய எல்லா வேலைகளையும் பாழாக்கிவிட்டிருந்தது. இன்று விடிந்த பின்பும் காற்றிலே ஆடிக்கொண்டிருந்தது.
   படையினர் அடியை பலமாகத் தொடங்கினர். படங்கிலே ஓட்டைகள் விழுந்தனவேயன்றி, அறுந்து விழவில்லை. அடியோ விடாமல் தொடர்….ந்….தது.
   கடைசியில் படங்கு அறுந்து விழுந்தபோது மதியம் 12.00 மணி கடந்துவிட்டிருந்தது. அதற்குள் நாங்கள் எவ்வளவோ வேலைகளைச் செய்து முடித்துவிட்டிருந்தோம்.
   ளானாள். பின்னொரு நாளில் கரும்புலியானவள்…. அன்று…… கடலிலே பகைக் கலமதை , பகைவரை வென்ற மகளும் ஆனாள்.
   அன்று புலிமகள் வெற்றிமகளானாள். சில காலங்களின் பின் அவள் கடல்மகளானாள். பின்னொரு நாளில் கரும்புலியானவள்…… அன்று…… கடலிலே பகைக் கலமதை, பகைவரை வென்ற மகளும் ஆனாள்.
   நினைவுப்பகிர்வு: மலைமகள்.
   நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, ஆடி 2004).
    
   https://thesakkatru.com/black-sea-tiger-captain-pulimahal/
 • Topics

 • Posts

  • மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு முயற்சித்தார் – எம்.ஏ.சுமந்திரன்    மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டது  தவறான ஒரு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஓரிரு தினங்களுக்கு, துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், அது தற்போது நான் எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் தெரிவித்தார். அந்த விடயம் வெளிவந்ததனால், சில சங்கடங்களும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன என என்னிடம் மனோகணேசன் கேட்டார். துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டத்திற்கான உண்மையான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்தகாரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை. அரசியல் நாகரிகத்தை அவர் பேணாவிட்டாலும், அந்த நாகரீகத்தை பேண நான் விரும்புகின்றேன். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் சொன்னது, துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.  மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் சொல்லியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் சொல்லவில்லை. அது தவறானது. தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவது சரியான விடயம். அது செய்யப்பட வேண்டிய விடயம். துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம். ஆகையினால், செய்யப்படகூடாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடு. சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட,  தமிழ் அரசியல்கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். இந்த இரண்டு விடயங்களையும் சேர்க்ககூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை  செய்வதற்கு, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும். எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம். தமிழ் அரசியல்கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். அது வேறு விடயம். மனோகணேசன், ஞானசார தேரர் சிறையில் இருந்த போது, அவரை சிறையில் சென்று பார்வையிட்டு, அதன்பின்னர், அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தவர். பிள்ளையானை சிறையில் கண்டு வந்தவர். ஞானசார தேரர், பிள்ளையான், சுனில் ரத்னாயக்க, துமிந்தசில்வா, ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. தமிழ் அரசியல் கைதிகள் என நாங்கள் அடையாளப்படுத்துபவர்கள், கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே, தவறான ஒரு விடயத்தையும், சரியான ஒரு விடயத்தையும், முடிச்சுப் போட வேண்டாம் என நான் அவரிடம் சொல்லியிருந்தேன். அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு இணங்க முடியாதென்று நான் அவருக்கு தெளிவாக சொல்லியிருந்தேன். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை, தவறான செயலை செய்ததில் இருந்து தான் தப்புவிக்க வேண்டும் என்று, அதனை ஒரு கருவியாக பயன்படுத்த நினைப்பது ஒரு தவறான செயற்பாடு. அதற்கு இணங்கிப் போகக்கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு. நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் யோசித்துவிட்டுச் சொல்வதாக, தன்னிடம் கூறியதாக, மனோகணேசன் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். ஆனால், அடைக்கலநாதன், தான் அவ்வாறு சொல்லவில்லை. இரண்டு விடயங்களையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெளிவாக சொன்னதாக, ஊடகங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் இன்று  காலை தெரிவித்தார். மனோகணேசன், துரதிஸ்டவசமாக, தான் அகப்பட்ட அரசியல் சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக, இவ்வாறு பேசுவது பிழையான ஒரு விடயம். அவர் என்னிடம் தனிப்பட்ட விடயமாக பேசியதனால், சில விடயங்களை வெளிப்படுத்தவில்லை. நாங்கள் தெரிவித்ததாக மனோகணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையினால், நானும், அடைக்கலநாதனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக, தெளிவான நிலைப்பாட்டை சொல்லியிருக்கின்றோம். அந்த தேவை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.    by : Vithushagan http://athavannews.com/மனோகணேசன்-தனது-தவறை-மூடி/
  • 1234 நீ வேணா சொன்னா  
  • சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மேலும் 15ஆண்டுகள் பதவியில் நீடிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல்!    http://athavannews.com/wp-content/uploads/2020/10/xi-jinping-person-of-year-2017-time-magazine-square-720x450.jpg தற்போதைய சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மேலும் 15ஆண்டுகள் பதவியில் நீடிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வரும் சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பெய்ஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மா சேதுங்குக்குப் பிறகு கட்சியின் அதிகாரமிக்க தலைவராக 67 வயதான ஸி ஜின்பிங் இப்போது வளர்ந்துள்ளார். ஆண்டு மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 198 மத்தியக் குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சார்பில் மத்தியக் குழு உறுப்பினர்கள், ஜனாத்பதி ஸி ஜின்பிங்கின் செயற்பாடுகளை மதிப்பிட்டனர். தொடர்ந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஸி ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் (2021-2025) ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், உள்ளூர் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்காமல், உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்வைத்த முக்கிய யோசனை என்றும் தெரிய வந்துள்ளது. ஸி ஜின்பிங், ஜனாதிபதி பதவி தவிர, கட்சியின் பொதுச் செயலர் பதவி, இராணுவத்தின் தலைமைப் பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளார். அத்துடன் இந்த அறிவிப்பின் மூலம் ஆயுள் முழுவதும் அவர்தான் இப்பதவிகளில் இருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில், இப்போது வழங்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் முடியும்போது அவருக்கு 82 வயதாகும். அதற்கு முன்னதாகவே அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஸி ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022ஆம் முடிவடைய இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பதவியில் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.     by : Anojkiyan http://athavannews.com/சீன-ஜனாதிபதி-ஸி-ஜின்பிங்/
  • கொரோனா அச்சுறுத்தல்: யாழ்.மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன     வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், வட.மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், வட.மாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளை தளபதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது குறித்த கூட்டத்தில்,  ‘இறுதிச் சடங்கில் 25 பேருக்கு மாத்திரமே அனுமதி (2 தொடக்கம் 3 நாள்களில் நிறைவுறுத்த வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் கலந்துகொள்வதற்கோ வருகை தருவதற்கோ தடை) நடைபாதை வியாபாரம், மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி, தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கத் தடை, திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை, விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்கவேண்டும், மக்கள் கூட்டங்களை, பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டும் பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளுக்கு அனுமதி, உணவங்களில் இருந்து உணவு உண்பதற்குத் தடை (பொதிக்கு மட்டும் அனுமதி), வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் கிராம அலுவலகர் ஊடாக பதிய வேண்டும் தொழிற்சாலைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து தொழில் புரிவோர், முடக்கப்பட பகுதிகளில் இருந்து வருகை தந்து பணிபுரிவோருக்கு தங்குமிடம் உணவு வசதி ஏற்படுத்த வேண்டும் அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்படவேண்டும், முடக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல தடை,  முடக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளே குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லலாம் அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 021 222 5000 செயற்படும்,  அவசர நிலை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் 7 நாட்களும் செயற்படும். ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதி, ஆலயங்களில் அன்ன தானங்களுக்கு தடை பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கான நேர்முக பரீட்சைக்கு கட்டுபாடுகளை கல்வி திணைக்களம் மேற்கொள்ளும்’ போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  by : Yuganthini http://athavannews.com/கொரோனா-அச்சுறுத்தல்-யாழ/
  • மோதட்டுமே நல்லா மோதட்டுமே இதனால் எங்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகுது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.