Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழர்களும் ‘மலசலகூட’ அரசியலும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் ‘மலசலகூட’ அரசியலும்

தனது டுவிட்டர் ஊடகக் கணக்கினூடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் மலசலகூடங்களை அமைப்பதற்கான நிதியுதவி கோரி காணொளியொன்றை அண்மையில் வௌியிட்டிருந்தார். அந்த கிராமத்துக்கே வெறும் இரண்டே இரண்டு மலசலகூடங்களே இருப்பதால் அம்மக்கள் பெரும் அவதிக்கும், சுகாதார சீர்கேட்டுக்கும் முகங்கொடுப்பதாக கோடிகாட்டிய அவர், குறைந்தது 10 புதிய மலசலகூடங்கள் கட்டுவதற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை அவர் வைத்ததன் பின்னர், இதற்கான எதிர்வினைகள் பல்வேறுபட்டனவாக இருந்தன. 

சிலர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக “நல்லாட்சி அரசாங்கத்துக்கு” ஆதரவு வழங்கியதைச் சுட்டிக்காட்டி, ஏன் இதனை அப்போது செய்யவில்லை என்று கேள்வியெழுப்புகிறார்கள். வாஸ்தவமான கேள்வி.

கூட்டமைப்பு “நல்லாட்சி அரசாங்கத்துக்கு” ஆதரவு வழங்கியதைப் பற்றி பலருக்கும் இருக்கும் விமர்சனம் இது. அந்த ஆதரவு நிபந்தனையற்ற ஆதரவாக அன்றி, அதனூடாக தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய நற்பலன்கள் சிலவற்றையாவது கூட்டமைப்பு பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை.

வசந்தபுரம் கிராமம் கடந்த ஐந்து வருடங்களாக அங்கேதான் இருந்தது. இந்த மலசலகூடப் பிரச்சினையும் அங்கேதான் இருந்தது. யாழ். மாநகரசபையும் 2018ஆம் ஆண்டிலிருந்து த.தே.கூவின் ஆட்சியில்தான் இருக்கிறது. இத்தகைய சூழலில் இத்தனை காலம் கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்வி நியாயமற்றது என்று மறுதலித்துவிட முடியாது.

வேறு சிலரின் எதிர்வினை கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. இதை ஏன் நீங்கள் உங்கள் சொந்தக் காசில் செய்யக்கூடாதென சுமந்திரன் எம்.பியிடம் கேட்கிறார்கள். எவ்வளவு வேடிக்கையான கேள்வி.

அரசியல்வாதிகள் தமது சொந்தப் பணத்தை தானமளித்து அரசியல் செய்ய வேண்டுமென்ற அபத்தமான புரிதல் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஈகை என்பது ஒரு தனிமனிதனது தனிப்பட்ட விடயம். ஆனால் ஒரு மனிதன் பொது வாழ்க்கையில் இருப்பதன் காரணத்தால், அவர் கட்டாயம் கொடையாளியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எவ்வளவு அபத்தமானது.

வளர்ந்த நாடுகளில், அரசியல்வாதிகள்தான் மக்களிடமும், நிறுவனங்களிடமும் பணத்தைக் கொடையாகப் பெற்று தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். ஆனால் தெற்காசியாவில், அரசியல்வாதிகள் தமது சொந்தப் பணத்தை வாரியிழைத்து அரசியல் செய்ய வேண்டுமென்ற மனநிலை வேரூன்றியுள்ளது. இதன் முக்கிய விளைவுகளில் ஒன்று ஊழல்.

இலங்கையில் அனைவரும் வரி செலுத்துகிறார்கள், அந்த வரிப்பணத்தில் அரசாங்கம் இயங்குகிறது, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்படுகின்றன, பொதுநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

 ஆகவே, ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் தேவைகளும் அரசாங்கத்தினூடாக நிறைவேறச் செய்வதே. மாறாக சொந்தக் காசில் அதனைச் செய்வது அல்ல. அப்படியானால், சுமந்திரன், ஏன் அரசாங்கத்திடம் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தினூடாகக் கொண்டு செல்லவில்லை அல்லது எம்.பியாக அவருக்கு கிடைக்கும் பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து இதனைச் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதனைக் கூட சிலர் சுமந்திரனின் பதிவுக்கு எதிர்வினையாகப் பதிவுசெய்திருந்தார்கள்.

நாடாளுமன்றம் தற்போதுதான் கூடியிருக்கிறது. பாதீடு இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தினூடாகவோ, எம்.பியின்  பரவலாக்கப்பட்ட நிதியினூடாகவோ இக்காரியத்தைச் செய்து முடிப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்படும். 

அரசாங்கம் இப்படியான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு செயன்முறைக் கட்டமைப்பு உண்டு. அதற்கு குறைந்தபட்சம் சில மாதங்களேனும் தேவைப்படலாம். இங்கு உடனடியாக, அவசரத் தேவையாக ஒரு 10 மலசலகூடங்களையேனும் கட்டுவதுதான் நோக்கமாக இருக்கிறது. அதற்கு உதவி செய்யத் தயாரானவர்களின் உதவியைத்தான் அவர் வேண்டியிருந்தார். இந்த வேண்டுதலுக்கு மேற்சொன்னது போன்ற எதிர்மறையான எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டாலும் கூட. பல நேர்மறையான எதிர்வினைகளும் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக இலங்கையின் முக்கிய பங்குச்சந்தை வர்த்தகர்களுள் ஒருவரான நிமல் பெரேரா, டுவிட்டரினூடாகவே 10 மலசலகூடங்களுக்கான முழுக்கட்டுமானச் செலவையும் தான் ஏற்பதாக அறிவித்திருந்தார். மேலும் சிலரும் தாமும் பங்களிக்கத் தயாரென நேர்மறையான எதிர்வினையை வழங்கியிருந்தார்கள். ஆகவே, வசந்தபுரம் மக்களுக்கு விரைவில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம். சுமந்திரனின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியதே.

ஆனால் இவையெல்லாவற்றுக்கும் இடையில், தமது மக்களுக்கு மலசலகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை சுகாதார உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய யாழ். மாநகர சபை தூங்கிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அரசியலை தேசிய அரசியல் செய்பவர்கள் முன்னெடுக்கும் அதேவேளை, உள்ளூராட்சி அரசியல் செய்பவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமது கவனத்தைச் செலுத்துவதே பொருத்தமானது. இது தமிழ்த் தேசிய அரசியலின் இன்னொரு பிரச்சினையைக் கோடிகாட்டி நிற்கிறது.

இங்கு உணர்ச்சி பொங்க “பகட்டாரவாரப் பேச்சு” அரசியல் செய்பவர்கள் ஏராளமுளர், ஆனால் ஆட்சி மற்றும் நிர்வாகத் தேர்ச்சியுடையோர் சொற்பமே. இதற்கு முதலாவது வடக்கு மாகாண சபையே பெரும் உதாரணம். நிற்க.

சுமந்திரன் எம்.பியின் இந்தப் பதிவுக்கு வந்த இன்னொரு வகையான எதிர்வினையாது, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது, தமிழ் மக்கள் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்து எதிர்வினையாற்ற வேண்டியது. சிலர், த.தே.கூ அபிவிருத்தி அரசியலை நோக்கித் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கது. பிரிவினையைக் கைவிட்டுவிட்டு இதனை நீங்கள் முன்பே செய்திருக்க வேண்டும் என்று பதிவிடுகிறார்கள்.

இந்த “அபிவிருத்தி அரசியல்” என்ற சொல் பெருவாரியாகப் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இதனை பயன்படுத்துவோர் பயன்படுத்தும் நோக்கமும், உட்பொருளும் வேறாக இருக்கிறது. சிலர் இதனை தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றான அரசியலைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு கூட்டமைப்பு “தமிழ்த் தேசிய அரசியல்” கட்சி என்றும் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் போன்றவர்கள் “அபிவிருத்தி அரசியல்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள். இது “தமிழ்த் தேசியமும்”, “அபிவிருத்தியும்” பரஸ்பரம் ஒன்றிலிருந்தொன்று விலகியது அல்லது பரஸ்பரம் ஒன்றுக்கொன்று முரணானது என்ற போலித்தோற்றத்தை ஸ்தாபிக்கிறது. 

இந்தப் பொய் மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டு மக்கள் மனதில் ஆழமாகப் பதியப்பட்டுவிட்டது. அதனால் “தமிழ்த் தேசியம்” என்றால் அது ஏதோ அபிவிருத்திக்கு முரணானது அல்லது அதற்கும் அபிவிருத்திக்கும் சம்பந்தமில்லை என்ற தோற்றப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதற்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் முக்கிய காரணம்.

பல தசாப்தங்களாக “பகட்டாரவாரப் பேச்சு” அரசியலே நடத்தி பதவிக்கு வந்துவிட்ட அவர்கள், மக்களுக்கு “பட்டாரவாரத்தைத்” தாண்டிய எதனையும் வழங்காததன் விளைவுதான் தமிழ்த் தேசியம் என்பது அபிவிருத்தி சாராதது என்ற போலித்தோற்றம் வலுப்பெறக் காரணமாக இருக்கிறது. இந்தப் போலியெண்ணம் தமிழ் மக்களைத் தாண்டி, சிங்கள மக்களிடமும் வேரூன்றிவிட்டது.

அதனால்தான் ஒரு தமிழ்த் தேசிய அரசியல்வாதி அடிப்படை உட்கட்டுமானம் பற்றிப் பேசியவுடனேயே “தற்போதாவது பிரிவினையைக் கைவிட்டுவிட்டு, அபிவிருத்தி பற்றிப் பேசுகிறீர்களே” என்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி முன்வைக்கப்படுகிறது.

மறுபுறத்தில், டக்ளஸ் தேவனந்தா உள்ளிட்ட மேற்குறிப்பிட்டோர் செய்வது “அபிவிருத்தி அரசியலா” என்ற கேள்விக்கு, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சொல்லும் வியாக்கியானம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் அந்த அரசியலை “ஆதரவுத்தள அரசியல்” (patronage politics) என்கிறார். “அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல. அபிவிருத்தி என்பதற்கு ஆழமான புரிதலும் செயற்பாடும் தேவை. ஆதரவுத் தள அரசியல் என்பது தம் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காக அங்கொரு வேலை இங்கொரு வேலையைப்பெற்றுக்கொடுத்தல், மின்சார இணைப்பு பெற்றுத் தருதல், வீட்டுத் திட்டத்துக்கு சிபாரிசு செய்தல்  இப்படியான செயற்பாடுகள் மூலம் தமது ஆதரவுத் தளத்தை தக்க வைத்தல் எனப் பொருள் கூறலாம். ஒரு விதத்தில் பழைய “நல்ல ஜமீன்” அரசியல் போன்றது. இந்த ஆதரவு தளத்தை தக்க வைத்து அரசியல் செய்வது, அதிகாரத்தில் இருப்பது, வியாபாரம் செய்வது தான் இவர்களின் பிரதான நோக்கம்” என்கிறார் அவர். “அபிவிருத்தி அரசியல்” என்ற பொதுப்புழக்கத்திலுள்ள சொல்லின் பொருளைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன அனைத்தும் அவசியமானவை.

இது எல்லாவற்றிலும் மேலானது “தமிழ்த் தேசியம்” என்பது அபிவிருத்திக்கு எதிரானது என்ற மாயையைத் தகர்ப்பதாகும். தேசக்கட்டுமானத்தின் அடிப்படைகளில் ஒன்று அந்தத் தேசத்தின் அபிவிருத்தி.

அபிவிருத்தி என்பது வெறும் மலசலகூடம் கட்டுவதும், தார்வீதிகள் போடுவதுமல்ல. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம், உட்கட்மைப்பு வசதிகள், சுதந்திரம், மனித உரிமைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் அபிவிருத்தி.

இனியும் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இருந்துவிட முடியாது. “தமிழ்த் தேசிய” அரசியல் அபிவிருத்திக்கு முரணானதோ, அபிவிருத்தி நீக்கம் செய்யப்பட்டதோ அல்ல என்பதையும், “தமிழ்த் தேசியமும்”, “அபிவிருத்தியும்” பரஸ்பரம் ஒன்றிலிருந்தொன்று விலகியது அல்லது பரஸ்பரம் ஒன்றுக்கொன்று முரணானது அல்ல என்பதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்களும்-மலசலகூட-அரசியலும்/91-255789

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்று மனோ தனது கையெழுத்தை நீக்கிக் கொள்வதாக அறிவித்ததுள்ளார்.
  • இங்கே ஓர் நகைசுவையான சம்பவம், ஆனால், அதை தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் தனனை மாணவன் எள்ளி நகையாடிதாக கோபித்த சம்பவம். எனது மகன் தமிழ் பாடசாலையில் படிக்கிறார். எத்தனையாம் வகுப்பு என்று மறந்துவிட்டது, ஆசிரியர் பட்சியை கொண்டும், பற்றியும்,  தமிழ் பாடம் எடுத்து கொண்டு இருந்தார். ஏதோ ஓர் சிந்தனை உதித்து,எனது மகன் ஆசிரியரிடம் பட்சிக்கு பற்கள் இருக்கிறதா என்று கேட்டார்.     ஆசிரியர் அப்போது என்னசொனரோ தெரியவில்லை, ஆனால் அதை அவர் முறைப்பாடாக,  குறைபாடாக எங்களிடம் சொன்னார், தன்னை உங்களின் மகன் எள்ளி நகையாடுகிறார் என்று.  இவையெல்லாம் ஆசிரியர் முறைப்பாடாக எம்மிடம் தெரிவித்ததை. மகனிடம் கேட்டால், அவர்   சொன்னார், தனக்கு தற்செயலாக மனதில் உதித்த கேள்வி என்று. அதே கேள்வியை, பாடசாலை முடிந்த கையுடன் மகன் என்னிடமும் கேட்டார். எனது  பதில், இதுவரைக்கும் பற்கள் உள்ள பட்சிகளை  நான் காணவில்லை, cassowary எனும் மூர்க்கமான பறவையை கூட இயலுமானவரை கிட்ட இருந்து பார்த்தும் நான் பற்களை காணவில்லை.  ஆனால், சிறிய மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் பட்சிகளின்  அலகை விரல்களால் திறந்து, அலகின் மருங்குகளை தடவிப் பார்த்த அனுபவத்தில், இப்போதும் பட்சிகளின் அலகின் மருங்கில் மிகவும் குணுகிய,  பற்கள் போன்ற அமைப்பு, கூர் மழுங்கி  இருக்கிறது. அதனால், இப்போதைய பட்சிகளாக கூர்படைந்துள்ள, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இராட்சத பட்சி போன்ற தோற்றமுள்ள உயிரிரனத்தின் அலகில்  பற்கள் இருந்து இருக்கலாம். இதை இங்கு சொல்வதன் காரணம், தமிழ் பாடசாலைகளில், ஏன் பல தமிழ் இன ஆசிரியர்களுக்கு (எந்த பாடமாயினும்) பிடிப்பிபதில் மாணவர்களை அழைத்து செல்லமுடியாதரவர்களாக உள்ளனர். இப்படி, எனது மகன் அவரின் வழமையான (ஆங்கில) பாடசாலையில், டெசி மீட்டர் பற்றிஎனது மகன் தான் அறிந்ததை சொல்ல, அவர்கள் அதை தேடிப்பார்த்து பின்பு வகுப்புக்கே படிப்பித்தார்கள்.  அதை ஓர் குறைபட்டு கொள்ளவில்லை.  
  • பதடி என்றால் வீண்பேச்சுப்பேசுபவர்கள் தடி ஆயுதம் படி   நிறையின் அளவு கருவி
  • மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு முயற்சித்தார் – எம்.ஏ.சுமந்திரன்    மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டது  தவறான ஒரு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஓரிரு தினங்களுக்கு, துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், அது தற்போது நான் எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் தெரிவித்தார். அந்த விடயம் வெளிவந்ததனால், சில சங்கடங்களும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன என என்னிடம் மனோகணேசன் கேட்டார். துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டத்திற்கான உண்மையான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்தகாரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை. அரசியல் நாகரிகத்தை அவர் பேணாவிட்டாலும், அந்த நாகரீகத்தை பேண நான் விரும்புகின்றேன். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் சொன்னது, துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.  மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் சொல்லியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் சொல்லவில்லை. அது தவறானது. தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவது சரியான விடயம். அது செய்யப்பட வேண்டிய விடயம். துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம். ஆகையினால், செய்யப்படகூடாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடு. சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட,  தமிழ் அரசியல்கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். இந்த இரண்டு விடயங்களையும் சேர்க்ககூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை  செய்வதற்கு, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும். எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம். தமிழ் அரசியல்கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். அது வேறு விடயம். மனோகணேசன், ஞானசார தேரர் சிறையில் இருந்த போது, அவரை சிறையில் சென்று பார்வையிட்டு, அதன்பின்னர், அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தவர். பிள்ளையானை சிறையில் கண்டு வந்தவர். ஞானசார தேரர், பிள்ளையான், சுனில் ரத்னாயக்க, துமிந்தசில்வா, ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. தமிழ் அரசியல் கைதிகள் என நாங்கள் அடையாளப்படுத்துபவர்கள், கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே, தவறான ஒரு விடயத்தையும், சரியான ஒரு விடயத்தையும், முடிச்சுப் போட வேண்டாம் என நான் அவரிடம் சொல்லியிருந்தேன். அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு இணங்க முடியாதென்று நான் அவருக்கு தெளிவாக சொல்லியிருந்தேன். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை, தவறான செயலை செய்ததில் இருந்து தான் தப்புவிக்க வேண்டும் என்று, அதனை ஒரு கருவியாக பயன்படுத்த நினைப்பது ஒரு தவறான செயற்பாடு. அதற்கு இணங்கிப் போகக்கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு. நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் யோசித்துவிட்டுச் சொல்வதாக, தன்னிடம் கூறியதாக, மனோகணேசன் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். ஆனால், அடைக்கலநாதன், தான் அவ்வாறு சொல்லவில்லை. இரண்டு விடயங்களையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெளிவாக சொன்னதாக, ஊடகங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் இன்று  காலை தெரிவித்தார். மனோகணேசன், துரதிஸ்டவசமாக, தான் அகப்பட்ட அரசியல் சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக, இவ்வாறு பேசுவது பிழையான ஒரு விடயம். அவர் என்னிடம் தனிப்பட்ட விடயமாக பேசியதனால், சில விடயங்களை வெளிப்படுத்தவில்லை. நாங்கள் தெரிவித்ததாக மனோகணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையினால், நானும், அடைக்கலநாதனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக, தெளிவான நிலைப்பாட்டை சொல்லியிருக்கின்றோம். அந்த தேவை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.    by : Vithushagan http://athavannews.com/மனோகணேசன்-தனது-தவறை-மூடி/
  • 1234 நீ வேணா சொன்னா  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.