Jump to content

மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு - Ibctamil

வீடு கட்ட பள்ளம் தோண்டிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு!

மன்னார் – நானாட்டான், வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1900 மேற்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும்   ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை காணியின் உரிமையாளரால் புதிய வீடு அமைப்பதற்கு அத்திவாரம் அமைக்க குழி தோண்ட முற்பட்ட போதே குறித்த பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டன.

குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உப தவிசாளர் குறித்த விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனை தொடர்ந்து குறித்த நாணயக் குற்றிகள் முருங்கன் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயக் குற்றிகள் யாவும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல் பொருள் தினைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/மன்னாரில்-மீன்-மற்றும்-வ/

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியர்களின் எச்சங்களாகவே இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தொட்டை மீனவர்களின் பொக்கிசமாக இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவைத்து  சிங்களவன் ஏதாவது கதை புனையக்கூடும். நல்லவேளை! காணி உரிமையாளர் வீடு கட்ட வெட்டிய குழியில் இருந்து கிளம்பிச்சு, எல்லாம் நல்ல நேரம்.  

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

அதைவைத்து  சிங்களவன் ஏதாவது கதை புனையக்கூடும். நல்லவேளை! காணி உரிமையாளர் வீடு கட்ட வெட்டிய குழியில் இருந்து கிளம்பிச்சு, எல்லாம் நல்ல நேரம்.  

தொல்பொருட்கள் தனியார் காணிகளுக்குள் இருந்து எடுக்கப்பட்டாலும் அது அரசுக்குச் சொந்தம் என்ற சட்டம் இலங்கையில் இருக்கு என்று நினைக்கின்றேன். இப்ப அரசு அதை எடுத்துக் கொண்டு விட்டு பத்து வருசத்தின் பின் சிங்கள அரசர்கள் மீன் பிடித்துறை முகம் ஒன்றை மன்னாரில் கட்டி இருந்தார்கள் என்று புதிய கதையை மகாவம்சத்தில் இணைத்து வரலாற்றாக்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு

செப்டெம்பர் 2020, 11:22 GMT
பாண்டியர் கால காசு என நம்பப்படும் பெருந்தொகையான நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் - மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
பாண்டியர் கால காசு என நம்பப்படும் நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் - மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன.

இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாகவும் மன்னார் - நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் பி. புவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, காணி உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு சென்ற நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர், அந்த நாணயங்களை முருங்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

தற்போது அந்த நாணயக்குற்றிகள் அனைத்தும் மன்னார் நீதிமன்றின் ஊடாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லயனல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உப தவிசாளர் புவனம் தகவல்

உப தவிசாளர் புவனம் தகவல்
 
குறித்த நாணயங்களை தான் பார்த்ததாகவும், அவற்றின் ஒரு பக்கத்தில் இரண்டு மீன்கள் எதிரெதிராகக் காணப்படுவதாகவும், மற்றைய பக்கத்தில் மான் அல்லது நந்தி போன்றதொரு உருவம் காணப்படுவதாகவும் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் பி. புவனம் பிபிசி தமிழிடம் கூறினார்.

"அல்பேர்ட் என்பவர், தனது காணியை 14 வருடங்களுக்கு முன்னர் குளத்து மண்கொண்டு நிரப்பியுள்ளார். அந்தக் காணியில் வீடொன்றை அமைப்பதற்காக நிலைத்தைத் தோண்டும் வேலைகள் கடந்த வாரம் நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணியளவில் குறித்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த நாணங்கள் குறித்த காணியில் இருந்ததா? அல்லது அந்த காணியில் கொட்டப்பட்ட குளத்து மணலில் இருந்ததா? எனத் தெரியவில்லை.

கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் - மண் பாத்திரமொன்றில் இருந்திருக்க வேண்டும். நிலத்தைத் தோண்டும் போது அந்தப் பாத்திரம் உடைந்திருக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால், அந்த நாணயக் குற்றிகளுடன் உடைந்த பாத்திரத்தின் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன" என, உப தவிசாளர் புவனம் மேலும் கூறினார்.

குறித்த நாணயங்களின் தற்போதைய பணப் பெறுமதி எவ்வளவு என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையில் அரைவாசியை, குறித்த காணியின் உரிமையாளருக்கு அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகவும் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-54266251

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை இங்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்த முதலில் தெரிய வந்தது  பெரியமடு, செட்டிகுளம் குடியேற்றங்கள்.

20, 000 வருடங்களில் இருந்து அவை உருவாக்கி உள்ளதற்கான கார்பன் டேட்டிங்  உள்ளது தெரிந்தவுடன் சிங்களம் மூடி விட்டது.

அருவி ஆற்றின் வழியாக செழிப்புற்ற அன்றைய  செழிப்புற்ற நாகரிகம் வளர்ந்து இருந்தது. 

விஜயன் வந்து  இறங்கியதிகாக சொல்லப் படும் மன்னர் பிரதேசத்தை தொல்பொருள் ஆராய்ச்சி செய்யாமல், பிரித்தானியர் மகாவம்ச புனைகதை விட்டதை தமிழ் தலைமைகள் இப்போதாவது மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இதை விட, சமீபத்தில்  மொயினராகலையில், மேடேகமவுக்கும், பிபிலே இற்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்து எழுத்துக்கள் கண்டுபிடடிக்கப்பட்டன. அவை தமிழ் பிராமி என்றே  கண்டவர்கள், விடயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

 ராஜ் சோமடேவ எனும் சிங்கள தொல்பொருள் ஆராய்ச்சி ஆல்டர் இதை புறக்கணித்து விட்டு, அது சிங்கள எழுத்து வடிவம் என்று கதை விட, வெளியாக்கள் ஆய்வு மற்றும் peer-review இற்கு விடுமாறு கேட்க, துண்டை காணோம் என்று வாயை மூடினர் அதை பற்றி பின்பு வாயே திறக்கவிலை. சிங்களத்துக்கு கதை அளக்கிறார்.       
  
 un தொல்பொருள் குழுவில் சொறி சிங்களம் அரசு என்பதின்  வழியாக இருந்தாலும்,  இவரின் ஆராய்ச்சியை புறக்கணிக்கிறார்கள் சர்வதேச மட்டத்தில். கரணம், இவர் தனது ஆய்வுகளை சர்தேச மட்டத்தில் peer review செய்வதற்கும், மற்றும் காணப்பட்ட தொல்பொருட்களை சர்வதேச மட்டத்தில் ஆய்வுக்கும் தயாரில்லை. பிறர் இவரை முட்டாள் தொல்பொருள் என்று எள்ளி நகையாடுகின்றனர், ஏனெனில் இவரின் intellectual dishonesty.  

இவரே இது வரையிலும் பலாங்கொடை மனித எச்சம் சிங்களத்தின் தோற்றுவாய் என நிறுவ வெளிக்கிட்டு மூக்குடைந்து நிற்கிறார். அதற்கு முதல் ஆரியர் என்பதும் (சிங்களத்தினதும், ஆங்கிலியரினதும் 100 வரு புனை கதை), தொடந்து வேடுவர்  சிங்களத்தின் தோற்றுவாய் என்று சாதிக்க வெளிக்கிட்டு முட்டாள்  பட்டம் ஏற்று, இப்பொது சிங்களம் இவரின் வழியாக இராவணன் தங்கலின் தோற்றுவாய் என்பதில் வந்து நிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

20, 000 வருடங்களில் இருந்து அவை உருவாக்கி உள்ளதற்கான கார்பன் டேட்டிங்  உள்ளது தெரிந்தவுடன் சிங்களம் மூடி விட்டது.

இதற்க்கான ஆதாரம் எங்கேயும் உளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

பத்து வருசத்தின் பின் சிங்கள அரசர்கள் மீன் பிடித்துறை முகம் ஒன்றை மன்னாரில் கட்டி இருந்தார்கள் என்று புதிய கதையை மகாவம்சத்தில் இணைத்து வரலாற்றாக்குவார்கள்.

அதற்கு அவகாசம் கொடுக்காமல், இந்த நாணயத்துடன்  தொடர்புபட்ட   நமது வரலாறுகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி, பத்திரப்படுத்த இதனுடன் சம்பந்தப்பட்ட நம்மவர்கள் முன்வரவேண்டும்.

Link to comment
Share on other sites

8 hours ago, goshan_che said:

இதற்க்கான ஆதாரம் எங்கேயும் உளதா? 

தேடிப்பார்த்தால் சில வேளைகளில் கிடைக்கலாம். இதையும் விட இனிதான் பவுத்த மதம் சம்பந்தமான தொல்பொருட்கள் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்போகிறார்கள். நிறைய பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. இனிதான் இந்த ஆராச்சிகள் தொடங்கப்போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு சமூகத்தை அழிப்பதற்கான மிகச் சிறந்த வழி, அவர்களின் வரலாற்றைப் பற்றிய அவர்களின் சொந்த புரிதலை மறுப்பதும் அழிப்பதும் ஆகும்" – George Orwell

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இதற்க்கான ஆதாரம் எங்கேயும் உளதா? 

முன்பே சொல்லி இருந்தேன், இவற்றை நான் நேரடியாக. எனது கண்களால்  காணவில்லை.

நம்பகமானவர் சொன்னதையே இங்கு சொல்கிறேன். அவர் தமிழர் ஆயினும், திரிபு மற்றும் ஊதி பெருபிக்க வேண்டிய தேவை இல்லாதவர்.  

Anthropometry உம் அறிந்தவர். 

இவரே நான் வேறு திரியில் குறிப்பிட்ட, திராவிட நாகரிகத்தின் தனிச்சிறப்பு குறியீடு என்று கருதப்படும் தாழிப் புதை குழிகள் (குருநாகலில் இபெண்கொடுவ. மற்ற இடம் மறந்து விட்டது) பற்றியும் சொன்னவர்.

இதே போல வடக்கு,  வட மேற்கில் பல இடங்களில் மட்கல உடைசல்கள் மற்றும் கல்லாயுதங்களும் கண்டெக்கப்பட் உள்ளதாகவும். சிங்களத்தின் கைகளுக்கு வந்தவை மறைக்கப்பட்டு விட்டதாகவும்.    

செட்டிகுளம் மற்றும் பெரியமடு குடியற்றங்களின் அளவு.  நாகரிக  அளவை ஒத்தது என்றும் சொன்னார்.     

இவை சிங்கள அரசின் தொல்பொருள் ஆராய்ச்சியில் மறைக்கப்பட்ட விடயம். 

இதனால் தான் விஞ்ஞானம் அடிப்படையில் அணுகுவது இலங்கைத் தீவிலும் சரி, கிந்தியாவிலும் சரி திறந்த தேடுதலுடன் முன்னெடுக்கப்ப முடியாது என்பது ஒன்று. 

மற்றது, யார் சொல்லும், எந்த விஞ்ஞானம் என்பது, ராஜ் வேடம் சொல்வதை (இயேசு பௌத்த துறவியை இணைந்துளேன் பார்க்காவிட்டால் பார்க்கவும் )  என்பதின் அடிப்படையில்.

ஒருவருமே null  hypothesis ஐ (default position ஐ) மீளாய்வு செய்ய தயாரில்லை. ஒருவருமே null  hypothesis ஐ (default position ஐ) மீளாய்வு செய்ய தயாரில்லை உ.ம். ஆரியர் என வகைப்படுத்துதலுக்கான மரபணு 11% வடக்கு இந்தியாவில் வந்த ஆய்வை இந்திய அரசு தடுத்து விட்டது என்றும் அறிகிறேன்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
#DYK that the US government works to protect culturally significant sites around the world? A former Buddhist monastery, the Rajagala Archaeological Reserve in Eastern #SriLanka, is one such historically significant site we helped restore & preserve.
Image
 
இதுக்கு சில சிங்களவர்களின் பின்னூடடம் 
Replying to
Also to protect the Buddhust archeological sites in the North and East.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இதற்க்கான ஆதாரம் எங்கேயும் உளதா? 

கோசான் சார்! இல்லை என்று நிறுவுவதற்கு நீங்கள் ஆயிரம் ஆதாரங்களை வைத்திருப்பீர்களே????😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கோசான் சார்! இல்லை என்று நிறுவுவதற்கு நீங்கள் ஆயிரம் ஆதாரங்களை வைத்திருப்பீர்களே????

ஆதாரம் வேண்டும் என்பதில் எனக்கும் கருத்து வேறுபாடில்லை. அனால் சொறி சிங்களத்தின் மற்றும் கிந்தியாவின், தம்மிடம் ஏற்கனவே இருக்கும் narrative ஐ கேள்விக்கு உள்ளாகும் ஆய்வுகளை தடுப்பது, ஆதார சான்றுகளை  மறைப்பது, முடக்குவது, இல்லது போனால் மரபுரிமை நோயோதனப் பொருட்களை சிதைத்தல் என்று கிரிமினல் குற்றம் சாட்டுவதே உள்ள பெரிய பிரச்னை. 

இலங்கைத் தீவிலும், கிந்தியாவிலும் அது அரயசிலுக்காக, ஓர் இணைக்க குழுமத்தின் இருப்பை, அடையாளத்தை மறுப்பதற்காக செய்யப்படுகிறது. ஏனெனில், இந்தியா என்ற அரசும், சிறி இலங்கை என்ற அரசும் கட்டி எழுப்பப்பட்டு இருப்பது, உண்மையான வரலாற்றை மறைத்து, பொய்களின் அடிப்படையில்.   

இந்த மெடகம, பிபிலே எழுத்துக் கல் பற்றி சொன்னதும் பெரியமடு மற்றும் செட்டிகுளத்தை பற்றி சொன்னவர் தான்.

ராஜ் வேடம் பற்றி அவரே முன்பு சொல்லி இருந்தார். அனல், அதை பற்றி நான்  தேடததால், இயேசு பௌத்த துறவி திரியில் அதை அடியோடு மறந்து  விட்டேன். பின்பு யாழ் இல் இயேசு பௌத்த துறவி திரியில் நடந்த வாதத்தை பற்றி வந்த பொது தான், அவரே சொன்னார் Raj Vedam பற்றியும், அவரின் (அந்த நிறுவனத்தின்) ஆய்வுகள், postulates பற்றி தேடித் பார்க்கவில்லையா என்று. அதன் பின்பே, ராஜ் வேடம் இன் வீடியோ ஐ இயேசு பௌத்த துறவி திரியில் இணைத்தேன்.         

கீழே சொல்வது, என்னிடம் பெரியமடு மற்றும் செட்டிகுளத்தை பற்றி சொன்னவரின் வரலாற்று, தொல்பொருள் மற்றும் மானிடவியல் பற்றிய அறிவும், அக்கறையும், மற்றும் இலங்கைத் தீவில் அதை பற்றிய தகவல்களையம், நிலையையும் அறிவதத்திற்கான அவரின் தொடர்புகள் பற்றி நீங்களாகவே ஓர் judgement இற்கு வருவதற்கு.          

ஓர் வியடத்தை சொல்கிறேன். இங்கு லாரா எனும் பதிவாளருடன் பாகிஸ்தான் பற்றி வாதாடி முடிந்த  கையுடன், லாரா தனது கருத்தை வேறு திரியில் நிர்வாகம் அகற்றுவதாக குறைபட்டு விலக்கினார். இது நடந்தது 2019, ஆகஸ்ட்- நவம்பர் என்றே நினைவு. லாரா விலகிய அதே காலப்பகுதியில், பையன் எனும் பதிவாளருக்கும்  விலக்கினார். 

அப்போது பையன் என்பவரின் தொடர்பை தேடினேன். ஏனெனில் பையன் என்பவர் தனக்கு தெரிந்த, பல தென்தட்டன காரியங்களை செய்யக் கூடியவர்கள்   வன்னியில் இருப்பதாக பையன் காஷ்மீர் திரியில் சொல்லி இருந்தார்.    

இதன் காரணம், மாங்குளத்தில் இருந்து பணிக்கான குளம் செல்லும் வழியில், ஏறத்தாழ நடுப் பகுதியில், தெற்கக  2-3 km தூரத்தில் அந்த பகுதி கிராமத்தவர் மட்கல உடைசல்களையும், கல்லாயுதங்களையம் கண்டதான தகவல் இவருக்கு (செட்டிகுளம், பெரியமேடு குடியேற்றம் பற்றி சொன்னவருக்கு) யாழ் பல்கலைக்கழகத்தில் கிராமத்தவரால் தெரிவிக்கப்பட்டு பகிரங்கம் ஆவதற்கு முதல் தெரிந்தது. பையன் இடம் நான் கேட்க இருந்தது, பையனுக்கு தெரிந்தவர்கள் அந்த இடத்தை நோட்டத்தில்  வைத்து இருக்க முடியுமா என்ற  உதவியை நாடுவதற்கு. பையன் அந்த நேரம் யாழ் பக்கம் வரவில்லை என்பது வேறு விடயம். இந்த நோட்டமிடும் உதவியை கேட்டவரும் அவர் தான். யாழ் பல்கலை கழகமும், அதை பகிரங்கமாகாமல், இறுதியில் புஸ்பரத்தினம் அந்த இடத்தை சென்று அடைந்து, அவற்றை சேகரித்து விட்டார்.              

கோசான், உஙளின் அனுராதபுரத்தில் புதைந்து உள்ள சிவன் கோயில் பற்றிய இணைப்பை  பார்த்தேன். உஙளுக்கு தெரியுமோ என்று எனக்கு தெரியாது, 2019 August -October  என்றே நினைவு, யாழ் இல் கொழும்பில் வைத்து வெளியிடப்பட்ட ஓர் நூல், நூலின் தலைப்பு அனுராதபுரத்தில் புதைதந்து உள்ள சிவாலயங்கள் பற்றி யது, யாருக்காவது தெரியுமா என்று கேட்டு இருந்ததேன். இந்த நூலைப் பற்றியும் குறிப்பிட்டவர் அவர் தான்.

நீங்கள் இணைத்த பதிவாளரும், அத நூலாரிசிரியரும் ஒரே நபரை என்பது தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:
#DYK that the US government works to protect culturally significant sites around the world? A former Buddhist monastery, the Rajagala Archaeological Reserve in Eastern #SriLanka, is one such historically significant site we helped restore & preserve.
Image
 
இதுக்கு சில சிங்களவர்களின் பின்னூடடம் 
Replying to
Also to protect the Buddhust archeological sites in the North and East.

அமெரிக்காவுக்கு தெரியும் இந்த தொல்பொருள் சிங்களத்துக்கு (இப்பொது தமிழருக்கும்) எவ்வளவு உணர்ச்சி பூர்வமான  விடயம் என்று.

அமரிக்காவும், இந்த தொலபேருலை வைத்து சிங்களத்தை தாஜா பண்ண தொடங்கி  விட்டதோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

கோசான் சார்! இல்லை என்று நிறுவுவதற்கு நீங்கள் ஆயிரம் ஆதாரங்களை வைத்திருப்பீர்களே????😂

இல்லை என்னிடம்  இருக்கு என்று சொல்லவும் ஆதாரம் இல்லை, இல்லை என்று சொல்லவும் ஆதாரம் இல்லை.

பேரினவாதம் இதை மூடி மறைக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை.

சிலவேளை பாண்டிய -சிங்கள தொடர்பை காட்டி இது தமது மரபுரிமை என்பதாகவும் கதை புனையலாம்.

இதற்கான எம் எதிர்வினை எப்படி இருக்க வேண்டும்? இவை பாண்டிய சின்னங்கள் என நிறுவி அதன் வழியாக இவை எமது மரபு உரிமை என நிறுவ வேண்டும்.

நாம் நேராக  20, 000 வருடங்கள் பின்னால் போய் கதையை ஆரம்பித்தால் ?

இந்த கதையை உலகில் இந்த துறை சார்ந்த யாரிடம் போய் சொன்னாலும் சரி ஒரு நல்ல மருத்துவரை பாருங்கள் என சொல்லி விலகி விடுவார்கள்.

நா ம் ஏதோ சர்வ உலகமும் எமது வரலாற்றை மறைப்பதாக அழுது புலம்ப 
பேரினவாதம் மிக தந்திரமாக , 2000-1000 வருடங்களுக்குள் ஒரு கதையை புனைந்து இதை தமதாக்கி இருக்கும்
.

பேரினவாதம் நம்மை தனிமை படுத்தி, ஒவ்வொரு பரப்பிலும், ஒவ்வொரு கோணத்திலும் வெல்வது இதனால்தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20,000 வருடங்கள் முன்பு நகரம்/ஊர் இருந்திருக்க வாய்ப்பில்லை, 12,000 ஆண்டுகள் முன்பு தான் விவசாயம் செய்து ஊர்களில் வாழவே ஆரம்பித்தனர். எனவே, 20,000 ஆண்டுகள் பழைய கண்டு பிடிப்புகள் மனித என்புக் கூடாக அல்லது கல்லாயுதமாக இருக்க வேண்டும்.

சுண்ணாம்புப் பாறைகளால் ஆன வட இலங்கையில் வராலாற்றுக்கு முந்திய சுவடுகள் தப்பியிருப்பது கடினம். எனவே இன்னும் null hypothesis தான் நிலைத்திருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

ஆதாரம் வேண்டும் என்பதில் எனக்கும் கருத்து வேறுபாடில்லை. அனால் சொறி சிங்களத்தின் மற்றும் கிந்தியாவின், தம்மிடம் ஏற்கனவே இருக்கும் narrative ஐ கேள்விக்கு உள்ளாகும் ஆய்வுகளை தடுப்பது, ஆதார சான்றுகளை  மறைப்பது, முடக்குவது, இல்லது போனால் மரபுரிமை நோயோதனப் பொருட்களை சிதைத்தல் என்று கிரிமினல் குற்றம் சாட்டுவதே உள்ள பெரிய பிரச்னை. 

இலங்கைத் தீவிலும், கிந்தியாவிலும் அது அரயசிலுக்காக, ஓர் இணைக்க குழுமத்தின் இருப்பை, அடையாளத்தை மறுப்பதற்காக செய்யப்படுகிறது. ஏனெனில், இந்தியா என்ற அரசும், சிறி இலங்கை என்ற அரசும் கட்டி எழுப்பப்பட்டு இருப்பது, உண்மையான வரலாற்றை மறைத்து, பொய்களின் அடிப்படையில்.   

இந்த மெடகம, பிபிலே எழுத்துக் கல் பற்றி சொன்னதும் பெரியமடு மற்றும் செட்டிகுளத்தை பற்றி சொன்னவர் தான்.

ராஜ் வேடம் பற்றி அவரே முன்பு சொல்லி இருந்தார். அனல், அதை பற்றி நான்  தேடததால், இயேசு பௌத்த துறவி திரியில் அதை அடியோடு மறந்து  விட்டேன். பின்பு யாழ் இல் இயேசு பௌத்த துறவி திரியில் நடந்த வாதத்தை பற்றி வந்த பொது தான், அவரே சொன்னார் Raj Vedam பற்றியும், அவரின் (அந்த நிறுவனத்தின்) ஆய்வுகள், postulates பற்றி தேடித் பார்க்கவில்லையா என்று. அதன் பின்பே, ராஜ் வேடம் இன் வீடியோ ஐ இயேசு பௌத்த துறவி திரியில் இணைத்தேன்.         

கீழே சொல்வது, என்னிடம் பெரியமடு மற்றும் செட்டிகுளத்தை பற்றி சொன்னவரின் வரலாற்று, தொல்பொருள் மற்றும் மானிடவியல் பற்றிய அறிவும், அக்கறையும், மற்றும் இலங்கைத் தீவில் அதை பற்றிய தகவல்களையம், நிலையையும் அறிவதத்திற்கான அவரின் தொடர்புகள் பற்றி நீங்களாகவே ஓர் judgement இற்கு வருவதற்கு.          

ஓர் வியடத்தை சொல்கிறேன். இங்கு லாரா எனும் பதிவாளருடன் பாகிஸ்தான் பற்றி வாதாடி முடிந்த  கையுடன், லாரா தனது கருத்தை வேறு திரியில் நிர்வாகம் அகற்றுவதாக குறைபட்டு விலக்கினார். இது நடந்தது 2019, ஆகஸ்ட்- நவம்பர் என்றே நினைவு. லாரா விலகிய அதே காலப்பகுதியில், பையன் எனும் பதிவாளருக்கும்  விலக்கினார். 

அப்போது பையன் என்பவரின் தொடர்பை தேடினேன். ஏனெனில் பையன் என்பவர் தனக்கு தெரிந்த, பல தென்தட்டன காரியங்களை செய்யக் கூடியவர்கள்   வன்னியில் இருப்பதாக பையன் காஷ்மீர் திரியில் சொல்லி இருந்தார்.    

இதன் காரணம், மாங்குளத்தில் இருந்து பணிக்கான குளம் செல்லும் வழியில், ஏறத்தாழ நடுப் பகுதியில், தெற்கக  2-3 km தூரத்தில் அந்த பகுதி கிராமத்தவர் மட்கல உடைசல்களையும், கல்லாயுதங்களையம் கண்டதான தகவல் இவருக்கு (செட்டிகுளம், பெரியமேடு குடியேற்றம் பற்றி சொன்னவருக்கு) யாழ் பல்கலைக்கழகத்தில் கிராமத்தவரால் தெரிவிக்கப்பட்டு பகிரங்கம் ஆவதற்கு முதல் தெரிந்தது. பையன் இடம் நான் கேட்க இருந்தது, பையனுக்கு தெரிந்தவர்கள் அந்த இடத்தை நோட்டத்தில்  வைத்து இருக்க முடியுமா என்ற  உதவியை நாடுவதற்கு. பையன் அந்த நேரம் யாழ் பக்கம் வரவில்லை என்பது வேறு விடயம். இந்த நோட்டமிடும் உதவியை கேட்டவரும் அவர் தான். யாழ் பல்கலை கழகமும், அதை பகிரங்கமாகாமல், இறுதியில் புஸ்பரத்தினம் அந்த இடத்தை சென்று அடைந்து, அவற்றை சேகரித்து விட்டார்.              

கோசான், உஙளின் அனுராதபுரத்தில் புதைந்து உள்ள சிவன் கோயில் பற்றிய இணைப்பை  பார்த்தேன். உஙளுக்கு தெரியுமோ என்று எனக்கு தெரியாது, 2019 August -October  என்றே நினைவு, யாழ் இல் கொழும்பில் வைத்து வெளியிடப்பட்ட ஓர் நூல், நூலின் தலைப்பு அனுராதபுரத்தில் புதைதந்து உள்ள சிவாலயங்கள் பற்றி யது, யாருக்காவது தெரியுமா என்று கேட்டு இருந்ததேன். இந்த நூலைப் பற்றியும் குறிப்பிட்டவர் அவர் தான்.

நீங்கள் இணைத்த பதிவாளரும், அத நூலாரிசிரியரும் ஒரே நபரை என்பது தெரியவில்லை.

இது ராஜ ராஜ சோழன் தனது தயாரான வானவன் மாதேவியார் நினைவாக 
பொலநறுவையில் கட்டிய சிவன்  கோவில். 
ஆனால் இதை கூட யார் எப்போ காட்டினார் என்பது தெரியாது போல 
நாடகம் போடுகிறது இலங்கை அரசு.
இங்கிருக்கும் பலரும் ஆய்வு செய்வதென்றால் உடனடியாக பாக்கை தூக்கி 
தொழில்போட்டுக்கொண்டு போகலாம் என்றுதான் எண்ணிக்கொண்டு இருகிறார்கள் 
எவ்வளவுக்கு அனுமதி மறுக்க பட்டிருக்கிறது என்பது புரியாது 

Image

Image

Image

Image

Image

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வாதாட வரவில்லை. கேட்டதை மட்டும் சொல்கிறேன்.

செட்டிகுளம் மற்றும் பெரியமடு அவர் சொல்லிய கால அளவீடுகள் (இவை இரகசியமாக செய்தது என்றதே நான் விளங்கியது, சிங்களமா அல்லது அக்கறை உள்ளவர்களா என்பது தெரியாது). இவற்றின் விபரங்கள் சொன்னால் பிரச்னை வரும் என்றும் சொன்னார். அதற்கு மேல் நான் ஒன்றும் கேட்கவில்லை.  

2017 கடைப் பகுதி - 2018 தொடக்கப் பகுதியில் - 10, 000 வருடங்கள். 

2019 நடுப் பகுதி - 2019 கடை பகுதியில்  - 10, 000 வருடங்களுக்கு மேற்பட்டது.

2020 நடுப் பகுதிக்கு பின்பு -  20, 000 வருடங்கள் வரையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

இது ராஜ ராஜ சோழன் தனது தயாரான வானவன் மாதேவியார் நினைவாக 
பொலநறுவையில் கட்டிய சிவன்  கோவில். 
ஆனால் இதை கூட யார் எப்போ காட்டினார் என்பது தெரியாது போல 
நாடகம் போடுகிறது இலங்கை அரசு.
இங்கிருக்கும் பலரும் ஆய்வு செய்வதென்றால் உடனடியாக பாக்கை தூக்கி 
தொழில்போட்டுக்கொண்டு போகலாம் என்றுதான் எண்ணிக்கொண்டு இருகிறார்கள் 
எவ்வளவுக்கு அனுமதி மறுக்க பட்டிருக்கிறது என்பது புரியாது

நான் நினைத்தேன் இதை பற்றி இங்கு ஆதாரம் கேட்போருக்கு, அங்கிருக்கும் வெளியில் தெரியாத அனால் மிகவும்  இறுக்கமான நிலை தெரிந்து இருக்கும் என்று. அவர்களுக்கு அது தெரியவில்லை போலும்.

இப்பொது இந்த தொல்பொருள் (முக்கியமாக), மற்றும் வரலாற்று, மானிடவியல் சிங்களத்துக்கு பிரச்னை கொடுக்கும் முனைப்புகளை, பயங்கரவாத சட்டத்தின் கீழ் பதியும் போக்கு பொலிஸ், மற்றும் இந்த துறைகளுக்கு பொறுப்பான திணைக்களங்கள் மேற்க்கொள்வதாகவும் அறிகிறேன். 

இந்த துறைகளை, முக்கியமாக தொல்பொருள் ஆய்வை ஆயுதமாக்கி விட்டது சிங்களம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சொல்லியதான, மிகவும் சமீபத்தில் உள்ள ஆரியர் எனப்படுவோரின் மரபணுகள் வட  இந்தியாவில் கூட 11% உள்ளது எனும் ஆய்வு முடக்கப்பட்டு இருக்கிறது. 

இது கிந்தியவால் மறைக்கப்பட்டு வெளி வந்த  விடயம். இது ஹரப்பா நாகரிகத்தின் null hypothesis ஐ கேள்விக்கு உள்ளாக்குகிறது.

A man might have died some 4500 years back, but his skeleton and the DNA present in it can reveal historical facts that are important to study the inhabitants of the Harappan civilisation. The skeleton excavated from the village Rakhigarhi in Haryana had enough DNA to disclose its ancestry. An analysis of the DNA showed that the skeleton was more linked to a Dravidian tribal group named ‘Irula’, currently living in Tamil Nadu and Kerala in the Nilgiri highlands. Political sensitivity surrounding the issue had delayed publishing the study, but finally it is thought to be ready for print, as described in India Today, along with the data. It is expected to appear in Science this month.

https://www.newsclick.in/what-dna-4500-year-old-skeleton-rakhigarhi-has-say-about-ancient-india

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விஞ்ஞானத் துறையில் ஆய்வை தொழிலாக செய்கிற எனக்கு ஆய்வென்றால் "பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ரூர்" போவதில்லை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போய் விட்டது தான்! 

கடஞ்சா, மருதர்: மேலே கோசான் சொன்னது தான் எனது கருத்தும். சிங்களவன், இந்தியன் ஆய்வை அனுமதியான் என்பதை யாரும் மறுக்கவில்லை. இதற்கான எங்கள் எதிர் வினை 20,000 ஆண்டுகள் முன்பு நகரம் இருந்ததாகக் கதையளப்பதாக இருந்தால் எங்களை ஏனையோர் நம்பவும் மாட்டார்கள், சில சமயம் "லூசுப் பயல்களாக இருக்கிறார்களே" என்றும் நினைப்பர்! இந்த வரலாற்றுக்கு முந்திய காலங்கள் பற்றி hearsay க்களை பரப்புவதற்கு முதல், கடஞ்சா கீழ்க்கண்ட நூலை மேலோட்டமாக வாசித்து , உலக ரீதியில் ஹோமோ சேபியன்ஸ்களின் கால அளவீடுகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! 

Sapiens: A Brief History of Humankind by [Yuval Noah Harari]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத்தில் புதைந்துள்ள 100 ஆலயங்களும் 400 தமிழ் கிராமங்களும் பற்றிய  நூல் கொழும்பில் வெளிவந்ததை பற்றி நான் கேட்டது, 2018 மாசி -பங்குனி காலப்பகுதியில்.

18 hours ago, Kadancha said:

கோசான், உஙளின் அனுராதபுரத்தில் புதைந்து உள்ள சிவன் கோயில் பற்றிய இணைப்பை  பார்த்தேன். உஙளுக்கு தெரியுமோ என்று எனக்கு தெரியாது, 2019 August -October  என்றே நினைவு, யாழ் இல் கொழும்பில் வைத்து வெளியிடப்பட்ட ஓர் நூல், நூலின் தலைப்பு அனுராதபுரத்தில் புதைதந்து உள்ள சிவாலயங்கள் பற்றி யது, யாருக்காவது தெரியுமா என்று கேட்டு இருந்ததேன். இந்த நூலைப் பற்றியும் குறிப்பிட்டவர் அவர் தான்.

நீங்கள் இணைத்த பதிவாளரும், அத நூலாரிசிரியரும் ஒரே நபரை என்பது தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.