Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கொரோனா வைரஸ்: உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
 • ஜாக் குட்மேன் மற்றும் ஃப்ளோரா கார்மைக்கேல்
 • பிபிசி ரியாலிட்டி செக் அணி

கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும்கூட அது குறித்த போலிச் செய்திகள் பரவுவது குறைந்தபாடில்லை.

அந்த வகையில், சமீப காலமாக அதிகளவில் பகிரப்பட்டு வரும் சில கூற்றுகள் குறித்த உண்மைத் தன்மையை காண்போம்.

கூற்று: அகச்சிவப்பு வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கும்

உண்மைத்தன்மை: இந்த கூற்று தவறானது. அகச்சிவப்பு வெப்பமானிகள் அபாயகரமானவை அல்ல.

கல்வி நிலையங்கள் முதல் அலுவலகங்கள் வரை, வணிக வளாகங்கள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை, எங்கு சென்றாலும் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமானியை கொண்டு உடல் வெப்பநிலையை அளவிடுவது என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.

இந்த வெப்பமானிகள் உடலின் மேற்பரப்பில் இருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிடுவதன் மூலம் ஒரு நபரின் வெப்பநிலையை பதிவு செய்கின்றன.

அதிக உடல் வெப்பநிலை என்பது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

உடலில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெப்பமானி பதிவு செய்கிறது. அனைத்து பொருட்களின் மேற்பரப்புகளும் இந்த வகை கதிர்வீச்சை வெளியிடுகின்றன. எனவே, இந்த கருவியிலிருந்து எவ்வித கதிரும் மனிதர்களை நோக்கி செலுத்தப்படுவதில்லை.

இந்த நிலையில், இந்த செயல்முறை அபாயகரமானது என்ற போலியான தகவலை கூறும் காணொளி ஒன்றை யூடியூபில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத செவிலியர் ஒருவரின் கவலைகளை அந்த காணொளியில் விளக்கும் நபர், வெப்பமானிகளால் பினியல் சுரப்பி பாதிக்கப்படுவதாக கூறுகிறார்.

மெலடோனின் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்தும் இந்த சுரப்பி மூளையின் ஆழ்ந்த உட்பகுதியில் உள்ளது. ஆனால், உண்மையில் வெப்பமானிகளால் இந்த சுரப்பிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

"இது உங்களது கதிர்வீச்சை கணக்கிடுவதற்கான பாதுகாப்பான வழி" என்று கூறுகிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான ஸ்டாஃபோர்ட் லைட்மேன்.

கூற்று: கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலுக்கு முன்பே அதற்கான பரிசோதனை கருவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன

உண்மைத்தன்மை: 2020ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உலகளாவிய இரசாயன விநியோகங்களின் தரவுத்தளத்தில் உள்ள 2015ஆம் ஆண்டு முதலான பட்டியலில் "கோவிட்-19 கருவிகளும்" இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலை பராமரிக்கும் சர்வதேச அமைப்புகளுள் ஒன்றான உலக வங்கி, கொரோனாவுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்த கருவிகளே தற்போது அந்த நோய்த்தொற்றை கண்டறிய பயன்படுத்தப்படுவதால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. இதைத்தொடர்ந்து, இந்த தரவுத்தளம் திருத்தப்பட்டு, அதற்குரிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா வைரஸ் பற்றிய சதி கோட்பாடுகளை வெளியிட்டு வருபவர்கள், திருத்தப்படாத தரவுத்தளத்தின் திரைப்பிடிப்புகளை (ஸ்கிரீன் ஷாட்) மற்றும் இணைய முகவரிகளை கொண்ட ஒரு நீண்ட பதிவை சமூக ஊடகங்களில் பரப்பி வந்தனர்.

"கொரோனா பெருந்தொற்று முன்னரே திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒன்று என்பதற்கும் அதுகுறித்து உலக வங்கிக்கு ஏற்கனவே தெரியும் என்பதற்கும் இதொரு முக்கிய ஆதாரம். கொரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனை கருவிகள் 2017ஆம் ஆண்டிலேயே ஏற்றுமதி செய்யப்பட்டன" என்று ஆங்கிலம் மட்டுமின்றி டச்சு, இத்தாலியன், ஜெர்மன், போலந்து, ஸ்பானிஷ், அரபு, போர்த்துகீசியம் மற்றும் ஹீப்ரு உள்ளிட்ட மொழிகளில் ஃபேஸ்புக், வாட்சாப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இதுதொடர்பான பதிவுகள் பகிரப்பட்டன.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், EPA

 

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள உலக வங்கி, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டு வரும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த இரசாயன பொருட்களை ஒரே இடத்தில் பட்டியலிடும் இந்த தரவுத்தளம் கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து எழுந்த குழப்பத்தால் அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, விளக்க குறிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது, குழப்பத்துக்கு காரணமான தரவுத்தளத்தில் இருந்த, "2017இல் நாடுகள் வாரியாக கொரோனா பரிசோதனை கருவிகளின் ஏற்றுமதி நிலவரம்" என்ற பட்டியலின் தலைப்பு இந்த மாதம் 7ஆம் தேதி, "மருத்துவ பரிசோதனை கருவிகள்" என்று மாற்றப்பட்டு உள்ளது.

இந்த மாற்றத்தின் காரணமாக மேலதிக குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க, அதே இணைய பக்கத்தில், "இங்கு உள்ள தரவானது, கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை எதிர்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உலக சுங்க அமைப்பால் வகைப்படுத்தப்பட்ட மருத்துவ கருவிகளின் பட்டியலை கொண்டுள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line
 
கொரோனா வைரஸ்
 

கூற்று: லாமாவின் இறைச்சி கொரோனாவை எதிர்த்து போரிட உதவும்

உண்மைத்தன்மை: இதை உறுதிப்படுத்தும் வகையில் அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே அதை சரிசெய்யும் என்று கூறி பல பயனற்ற மற்றும் நிரூபிக்கப்படாத சிகிச்சை முறைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் அவற்றுக்கு முன்னணி அரசியல் தலைவர்களும் ஆதரவு அளித்து வந்துள்ளனர்.

ஆனால், இந்த கூற்று புதிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கான லாமாவின் இறைச்சியை உண்பது கொரோனாவுக்கு எதிராக போராட உதவும் என்று பெரு நாட்டை சேர்ந்த ஆளுநர் ஒருவர் கூறியிருந்தார்.

அதாவது, லாமா மற்றும் அல்பகாஸ் வகை விலங்குகள் தங்களது உடலின் வாயிலாக ஆன்டிபாடிகளை கடத்துகின்றன என்று கூறும் ஆய்வுகளை முதலாக கொண்டு அவற்றை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று அந்த ஆளுநர் கூறியதாக அந்த நாட்டை சேர்ந்த வானொலி ஒன்று தெரிவிக்கிறது.

அதவாது, லாமாக்களின் இறைச்சி ஆன்டிபாடிகளை அதிகரிக்க உதவும் என்ற ஆய்வு குறித்து பிபிசி இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. அது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இதுவரை, மருத்துவ பரிசோதனைகளின் மூலம், டெக்ஸாமெதாசோன் மற்றும் ஹைட்ரோகார்டிசோன் மட்டுமே உயிரைக் காப்பாற்ற நிரூபிக்கப்பட்ட மருந்துகளாக கண்டறியப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/global-54248346

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீஙகள் சொல்வது வேறு..... நான் சொல்வது வேறு. உங்கள் மகனும் நான் சொன்னது சரி என்பார். 😁 சைபர் செக்கீயூரிட்டி என்பது ஹக்கர்ஸ் திருடர்களிடம் இருந்து எவ்வாறு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது என்பது குறித்த திறனறிவுப் படிப்பு. நான் சொல்வது, ஹக்கர்ஸ் திருடர்கள் எப்படி, எப்படி எல்லாம் ஜடியா போட்டு வருவார்கள் என்று ஊகித்து, உள்ளிருந்தே, சட்டபூர்வமாக, சைபர் செக்கியூரிட்டிக்காரரின் வேலைகளை உடைத்து, இன்னும் உறுதியாக்க உதவுவது. உதாரணமாக யாராலுமே உடைக்க முடியாது என்று விளம்பரப்படுத்தப்பட்ட சந்தைக்கு போகவுள்ள, பூட்டினை, சந்தையில் ஒருவர் உடைத்தெறிந்தது கரி பூச முன்னர், நிறுவனத்தின் இன்னும் ஒரு பகுதி.... உடைக்க முணைந்து.... முடியாது என்ற நிலையில் சந்தைக்கு அனுப்புதல் போன்றது. உங்கள் மகனது வேலையில் குடைச்சல் போட்டு, நொட்டை, நொள்ளை புடுங்குவதே இவர்கள் வேலை.
  • படுபாவிளெண்டு திட்டப்படாது நாதமுனி.எனது மகனை படுபாவிளெண்டு நீங்கள் சொல்றபோல இருக்கு. 🙄எனது மகன் cyber security😊முன்பு தான் யுனி புறொயெக்ட்டில் செய்த ஹக் பற்றிய விடயங்களை சொல்லுவான். எனக்கு பாதி விளக்கம் அவன் சொல்லி தான் புரியும்.  இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது. 
  • கமலா ஹரிஸ்.... பண்டி இறைச்சி சாப்பிடுகின்றவர். அவரை சரஸ்வதி பூசை நேரம், துர்க்கையுடன் ஒப்பிடுவது கண்டனத்துக்குரியது.
  • மருதங்கேணியில் 21 கொரோனா நோயாளிகள் அனுமதி!   மருதங்கேணி கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோயாளிகள் 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (19) காலை, மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை, உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நேற்று இரவு 10.30 மணியளவில், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்கள். https://newuthayan.com/மருதங்கேணியில்-21-கொரோனா-ந/   மினுவாங்கொடை தொற்று 2222 ஆனது! கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (20) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,222 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5,685 ஆகும். https://newuthayan.com/மினுவாங்கொடை-தொற்று-2222-ஆனத/
  • கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு     அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்ட அவரது மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பதிவு: அக்டோபர் 20,  2020 16:39 PM வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (வயது 55) போட்டியிடுகிறார்.  இவரது மருமகள் மீனா ஹாரிஸ் (வயது 35).  வழக்கறிஞராக உள்ளார்.  குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.  அந்த பதிவில், கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்டு படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அந்த படத்தில், கமலா ஹாரிஸ் கடவுள் துர்க்கையாக காட்சி அளிக்கிறார்.  மகிசாசுரன் ஆக அதிபர் டிரம்ப் காட்டப்பட்டு இருக்கிறார்.  அவரை ஹாரிஸ் குத்தி கொல்வது போன்று உள்ளது. இதேபோன்று ஜனநாயக கட்சிக்கான அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், துர்க்கையின் வாகனம் ஆன சிங்கம் போன்று காட்டப்பட்டு இருக்கிறார். இந்த பதிவு வெளியிடப்பட்டு சற்று நேரத்தில் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.  இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்து அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் சுஹாக் சுக்லா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் கடவுளான அன்னை துர்க்கையின் முகவடிவம் மிகைப்படுத்தப்பட்டு இருப்பது, உலகம் முழுவதும் உள்ள பல இந்து மக்களை ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது என தெரிவித்து உள்ளார். இதேபோன்று இந்து அமெரிக்க அரசியல் செயற்குழு, அவதூறுக்கு எதிரான அமெரிக்க இந்துக்களுக்கான அமைப்பு உள்ளிட்டவையும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கடந்த வார இறுதியில், நவராத்திரியை முன்னிட்டு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அல்லவை அழிந்து நல்லவை வெற்றி பெறட்டும் என்று அமெரிக்காவில் வாழும் இந்து சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்து செய்தியில், நம்முடைய இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான விழாவாக அமைய வாழ்த்துகிறேன். நம்முடைய சமூகங்கள் மற்றும் அமெரிக்காவை அதன் நிலையிலிருந்து உயர்த்துவதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விடுமுறை அமையட்டும் என்றும் அவர் பதிவிட்டார்.   https://www.dailythanthi.com/News/World/2020/10/20163911/Hindu-organizations-are-strongly-opposed-to-the-niece.vpf    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.