Jump to content

பிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு

தமிழர்தரப்பின் பலத்தை மேலோங்கச் செய்ததன் காரணத்தாலும், அறிவியலினூடாகவும் தொலைநோக்கினூடாகவும் தமிழீழ அரசின் பொதுக்கட்டுமானங்களை வேகமாகக் கட்டியெழுப்பியதாலும் உலகத்தமிழர்களுக்கெல்லாம் அச்சாணியாகவும் பாடமாகவும் தமிழீழ விடுதலைப்போர் அடையாளப்படுத்தப்பட்டது.

Praba-book1.jpg

இதன்காரணமாக உளக்கிளர்ச்சியுடன் வாழ்ந்துவந்த உலகத்தமிழர்களை, 2009 இல் உலகஅரசுகளின் கூட்டுச்சதியோடு சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்பானது ஆழ்ந்த வேதனையையும் உளச்சோர்வையும் தந்து படுகுழிக்குள் தள்ளியது. “நாம் தோற்றுப்போய்விட்டோம்” என்ற அவல மனநிலையுடன் தமிழர்கள் பதினொரு ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள். இன்னமும் அப்படியேதான் பலர் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ” நாம் தோற்றுப்போகவோ அன்றி அடிபணியவோ இல்லை” என்பதனையும், மீளெழும் வழிகளைக் கைக்கொள்ளும் நடைமுறை உதாரணங்கள் நம் கண்முன்னே விரிந்துகிடக்கின்றன என்பதையும், தமிழர்களது போராட்டத்தைத் தத்துவார்த்த, அறிவியலினூடாக அடையாளப்படுத்தும் முதல் நூலாகவும் வெளிவருகிறது “பிரபாகரன் சட்டகம்”.

Praba-book4.jpg

கனடா மெமோரியல் பல்கலைக்கழகத்தின் முதுகலைப்பட்டமும், அமெரிக்காவின் கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்ற சிறப்புக்குரியவரான கலாநிதி.மு.சேதுராமலிங்கம் அவர்களின் ஆய்வாக வெளிவரும் இந்நூலை, நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி செப்பனிட்டுத் தொகுத்து, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினூடாக வெளியிடுகிறார்கள்.

இதன் முதல் வெளியீடு எதிர்வரும் 03.10.2020 சனிக்கிழமை யேர்மனியின் Soest நகரில் நடைபெறுகிறது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுநாள் நிகழ்வில் வெளியிடப்படும் இந்நூல், தொடர்ச்சியாக ஏனைய நாடுகளிலும் வெளியிடப்படவிருக்கிறது.

தொடர்பு :
– நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி
– Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல்

http://www.ilakku.org/பிரபாகரன்-சட்டகம்-நூல்-வ/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் பிரபாகரன் சட்டகம் நூல் வெளியீடு

 

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர், தமிழ்முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தலும், பிரபாகரன் சட்டகம் நூல் வெளியீடும் நேற்று (03.10.2020) யேர்மனியின் Soest நகரில் நடைபெற்றது.

மாலை 16.59 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர் பாபு அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியினை முன்னாள் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு.ஆனந்தராசா அவர்களும் ஏற்றிவைத்தனர். திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்கள் கப்டன் அப்பன் மற்றும் வீரவேங்கை மதன் ஆகியோரின் சகோதரர் திரு.சிறிதரன் அவர்களும், மாவீரர் கப்டன் சிவா அவர்களின் சகோதரர் சந்திரன் அவர்களும், தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களது திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை நாம்தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர் திரு,முகுந்தன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

திருவுருவப்படங்களுக்கான மலர்மாலையை தமிழீழ விடுதலைச்செயற்பாட்டாளர்கள் திரு,புவனேஸ்வரன், திரு.வரதன், திரு,சிவம் , ஆகியோர் ஏற்றிவைத்தனர். அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் பாடல்கள், நடனங்கள், கவிதைகள், உரை ஆகியன இடம்பெற்றன.

தொடர்ந்து பிரபாகரன் சட்டகம் நூல் வெளியீட்டிற்கான அறிமுக உரையை நூலாசிரியர் திரு.சேதுராமலிங்கம் அவர்கள் நிகழ்த்த, ஆய்வுரையை தமிழ்நெற் நிறுவன ஆசிரியர் ஜெயச்சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வெளியீட்டுரையை மேஜர்பாரதி கலைக்கூடப்பொறுப்பாளரும் அறிவிப்பாளருமான திரு.வலன்ரைன் அவர்கள் சிறப்பாக நிகழ்த்தினார்.

நூலின் முதற்பிரதியை; தவளை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் அன்பு அவர்களின் சகோதரி பெற்று வெளியிட, மாவீரர்கள் கப்டன் அப்பன் , வீரவேங்கை மதன், கப்டன் சிவா, கப்டன் மொழி, லெப்.இயல்வாணன், மேஜர் நிலவன், ஆகியோரின் சகோதரர்கள் தொடர்ச்சியாக பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வினை அறிவிப்பாளர்கள் திரு.வலன்ரைன் , செல்வி. தட்சாயிணி ஆகியோர் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் தொகுத்து வழங்கினர்.

இரவு 20.30 இற்கு நிறைவெய்தும் வகையில் திட்டமிடப்பட்ட நிகழ்வு 11 நிமிடங்கள் தாமதமாக 20.41 இற்கு நிறைவெய்தியது, தாமதத்திற்கு வருந்துகிறோம். நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னின்று நடாத்தி, நிகழ்விற்கு வருகைதந்த அனைவரையும் அன்புடன் உபசரித்த Soest நகர மக்களுக்கு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல், மற்றும் நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளியினர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள்.

குறிப்பு,: முதல் வெளியீட்டு நிகழ்விலேயே 120 பிரதிகள் மக்களால் பெறப்பட்டன.

http://www.ilakku.org/யேர்மனியில்-பிரபாகரன்-சட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.