Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிங்களின்  வாக்குரிமையை பறிக்க முயற்சி -  ரிஷாத் பதியுதீன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிங்களின்  வாக்குரிமையை பறிக்க முயற்சி -  ரிஷாத் பதியுதீன்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிங்களின்  பெயர்களை தேர்தல் இடாப்பில் இருந்து நீக்குவதற்கு உதவி தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பில் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

spacer.png

சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

1990 இல் வடக்கில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிங்கள் புத்தளம்,குருணாகல்,அநுராதபுரம் போன்ற பகுதிகளில் குடியேறினார்கள். இதில் 50 வீதமானவர்கள் மீள் குடியேறினார்கள். 20-30 வீதமானவர்கள் புத்தளத்தில் நிரந்தரமாக குடியேறிதோடு 20 வீதமானவர்கள் அதாவது சுமார் 10ஆயிரம் வாக்காளர்கள் அங்கும் இங்கும் அழைந்து திரிந்தார்கள். மன்னார்,முல்லைதீவு பகுதிகளில் வீடுகள் இருந்தாலும் தொழில்,சுகாதாரம். பிள்ளைகளில் கல்வி என்பவற்றுக்காக புத்தளத்தில் தங்கினார்கள்.

இவ்வாறானவர்களுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளத்தில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் உதவி தேர்தல் ஆணையாளர் இவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து அகற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

தேர்தல் காரியாலயத்துக்கு சென்று இது பற்றி முறையிட்டுள்ளோம். மக்களின் வாக்குரிமையை பறிப்பது குறித்து அறிவித்துள்ளோம்.போராசிரியர் ஹூலை இங்கு விமர்சித்தார்கள். அவர் நேர்மையான அதிகாரி என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.

மேலும் சட்டத்தின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வதிவிடம் உள்ள வாக்காளர்களுக்கு தமது வதிவிடத்தை பதியும் உரிமை அவர்களுக்கே உள்ளது.இரு மாவட்டங்களில் வாக்காளர் பதிந்திருந்தால் ஆணைக்குழுவிற்கே அது தொடர்பில் முடிவு செய்ய முடியும்.ஆனால் இந்த மக்கள் ஒரு இடத்தில் மாத்திரம் பதிந்துள்ள நிலையில் அதனை தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக சந்தேகம் உள்ளது.மக்களின் வாக்குரிமையுடன் விளையாடக் கூடாது.

எனவே வடக்கிலிருந்து துரத்தப்பட்ட மக்களின் சொத்துக்களை அழித்தது போன்று அவர்களின் வாக்குரிமையை அழித்துவிடக்கூடாது. அதற்கு இடமமளிக்க முடியாது என்றார்.

 

https://www.virakesari.lk/article/90615

 

Edited by கிருபன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனவே வடக்கிலிருந்து துரத்தப்பட்ட மக்களின் சொத்துக்களை அழித்தது போன்று அவர்களின் வாக்குரிமையை அழித்துவிடக்கூடாது. அதற்கு இடமமளிக்க முடியாத

எல்லாம் உங்கடை வீட்டிலைதானே இருக்கு..பிறகு ஏன் யாரையும் நோவான்...நல்ல நடிகரு..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும் என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும் பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும் வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும் மழை துளி பனி துளி கலைந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும் தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா  
    • இப்படியும் ஒரு மானம்பு! உயரப்புலம் விநாயகர் ஆலயத்தில் ஐயர் காட்டிய வித்தை!😂      
    • ஆத்தோரம் தேக்குமரம்  
    • நல்லவேளை மட்டக்களப்பில்  அபிவிருத்திக்கு போட்ட வாக்குகள் மூலம் 199 பேருக்கு வேலையாவது கிடைக்குது, அம்பாறையில் கலையரசன் வயிறு புடைக்க கத்துவது மட்டும் நடக்குது, ஏற்கனவே 20 க்கு வாக்களிக்கும் போது ஒரு டீலிங்குடன் தான் வாக்களித்திருப்பினம் முஸ்லீம் அரசியல்வாதிகள் அதை வைத்து இருப்பதையும் பிடுங்குவினம், கூத்தமைப்பு அப்புக்காத்துமார் அவரை நீக்குங்கோ இவரை நீக்குங்கோ அப்புறம் சேர்ந்து அரசியல் பண்ணலாம் என்று அரிவரி பையன் போல காமெடி பண்ணிக்கொண்டு இருக்கினம்   
    • குறவன் குறத்தி Srijith Sri2 years ago உலகில் முதலில் தோன்றிய மனிதன் 'லமுரியா கண்டத்தில்' தான் இருந்து உருவானார்கள் அக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் தமிழர்களே ஆவர் . இதை ஏற்க ஒரு சிலர் மறுக்கிறார்கள் (ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து தான் தோன்றினான் என்று வரலாற்றை மாற்றி அமைத்தார்கள் உலக அரசியலில் ஏமாற்றினான் ) அதே போல தமிழர்களின் மூத்த தொல்குடி மக்களான குறிஞ்சி நில குறவரின் வரலாறும் மாற்றியமைக்கபட்டுள்ளது இந்தியாவில் ... ஆதலால் முற்காலத்தை நோக்கி பார்த்தால் குறவர்களில் - மலைகளின் அரசர்களாக நம்பிராஜன் வேடர் , குறுநில மன்னர்களாகவும் , சங்க இலக்கியங்களில் புலவர்களாகவும் , சமநிலங்களிலும் மன்னராகவும் , படை தளபதிகளாகவும் வாழ்ந்து வந்தனர் .... ஆனால் முன் தமிழகம்(தமிழ்நாடு கேரளம் ஆந்திரா கர்நாடகா) மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் பூர்வகுடி குறிஞ்சி நில மக்கள்(குறவர் வேடர் வேடுவர் சித்தனார் ) தோன்றினார்கள் ஆனால் முன் ஆரியர்களும் (பார்ப்பான்)மற்றும் பின் ஆங்கிலேயர்களின் படையெடுப்புக்கு பிறகு தமிழர்களின் அடையாளத்தையும் வரலாற்றையும் அழிக்க பல சதிகள் புனைந்தார்கள் ... இவர்கள் தான் கலப்பினம் இல்லா தமிழ் இன நாகர் மக்கள் .. இங்கு நரிகாரன் குருவிகாரன் , வாகிரி (நரிகுறவன் ) என்பது வேறு ... இவர்களுக்கு நம் பெயரை திணித்தது நம் அடையாளங்களை அழிக்க நினைக்கும் வந்தேரிகளின் சதிசெயல் நம் பெயரை அவர்கள் பின்னால் திரித்தது ... இந்த நரிகாரனுக்கும் (வட மாநிலத்தவனுக்கும்) நம் தமிழ்குடி மூத்த குறவர் வேடர் வேடுவர் சித்தனார் இன மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ... ஆனால் இவர்கள் வாகிரி குருவிகாரன் இன மக்கள் இவர்களுக்கும் தமிழ் தொல் பழங்குடி குறவர் இன மக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இவர்கள் ஒரு 150 ஆண்டுக்கு முன்னர்தான் வந்தார்கள் ... ஆனால் தமிழ் தொல்குடி குறவர் சங்க இலக்கியங்களில் இடம் பெறுபவர்கள் .... ஒரு இனத்தின் பெயர் இரு சமூகத்திற்க்கு அழைப்பதால், ஒரு இனத்தின் அடையாளம் அழிக்கப்படுகிறது, குறவர் பண்டை கால தமிழ் சமூகம், தனிஅடையாளம், தனி கலாச்சாரம், தனி தன்மை கொண்டவர்கள், குறவர் என்பவர் குறிஞ்சி நிலத்தின் மூத்த குடி, குறவர் என்ற பெயர் குறவருக்கு மட்டுமே உரிமையானது, ஆனால் இவர்கள் வாகிரி குருவிகாரன் இன மக்கள் இவர்களுக்கும் தமிழ் தொல் பழங்குடி குறவர் இன மக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இவர்கள் ஒரு 150 ஆண்டுக்கு முன்னர்தான் வந்தார்கள் ... ஆனால் தமிழ் தொல்குடி குறவர் சங்க இலக்கியங்களில் இடம் பெறுபவர்கள் ....   இங்கு நரிகாரன் குருவிகாரன் , வாகிரி (நரிகுறவன் ) என்பது வேறு ... இவர்களுக்கு நம் பெயரை திணித்தது நம் அடையாளங்களை அழிக்க நினைக்கும் வந்தேரிகளின் சதிசெயல் நம் பெயரை அவர்கள் பின்னால் திரித்தது ... இந்த நரிகாரனுக்கும் (வட மாநிலத்தவனுக்கும்) நம் தமிழ்குடி மூத்த குறவர் வேடர் வேடுவர் சித்தனார் இன மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.