Jump to content

இலங்கையை பாராட்டிய யுனிசெப் அமைப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் ஆகிய விடயங்களில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு யுனிசெப் அமைப்பு பாராட்டுத்தெரிவித்திருக்கிறது.

சிறுவர் மற்றம் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய 14 வயதிற்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இளம் குற்றவாளிகள், நன்னடத்தைப் பாடசாலை தொடர்பான கட்டளைச்சட்டத்திற்கு அமைய 16 - 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்கள் நீதிமன்றத்தினால் நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். எனினும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்களை சிறைச்சாலையில் அடைத்தல், இளம் குற்றவாளிகளுக்கான நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்புதல் போன்ற தீர்ப்புக்களை நீதிமன்றம் வழங்குகின்றது.

இந்நிலையில் பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்களை சிறுவர்கள் என்றும் 18 - 22 வயதிற்கு இடைப்பட்டவர்களை இளைஞர்கள் என்றும் வரையறுக்கும் வகையில் சிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பான கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் வேலைக்கு அமர்த்தக்கூடிய சிறுவர்களின் வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக உயர்த்துவதற்கும் கடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்குப் பாராட்டுத்தெரிவிக்கும் வகையிலான கடிதமொன்றை யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரிம் சுட்டோன் நீதியமைச்சர் அலிசப்ரிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதற்கான சட்டத்தில் சிறுவர்களுக்குரிய வயதெல்லையை 18 ஆக உயர்த்துவதற்கும், வேலைக்கு அமர்த்தக்கூடிய வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக உயர்த்தும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

அதுமாத்திரமன்றி சிறுவர் உரிமைகளைப் பொறுத்தவரையில் இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதுடன், சிறுவர் உரிமைகள் விவகாரங்களில் நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படக்கூடிய முன்னேற்றகரமான நகர்வுகளுக்கு எமது பூரண ஆதரவினை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/90652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வீரகேசரி இப்படி புகழும் ஆங்கிலத்தில் டெலிகிராப் காரன் இதே அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டக்கிளஸ் தமிழ் சிறுமி  சிறுவர்களை  வித்த  கதையை விக்கிலீக்ஸ் வெளியிடும் இப்படி மாமா வேலை பார்த்த டக்கித்தான் திலீபனை கொலைகாரன் என்கிது அப்ப  தமிழ்நாட்டில் சூளை  மேட்டில் யாகம் செய்தவராக்கும் .

https://www.colombotelegraph.com/index.php/wikileaks-epdp-sold-jaffna-children-girls-to-prostitution-rings-and-boys-to-slavery/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் ஆகிய விடயங்களில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு யுனிசெப் அமைப்பு பாராட்டுத்தெரிவித்திருக்கிறது.

ஆஹா........ தீர்மானத்திற்கே இவ்வளவு பாராட்டு என்றால், கொலைக்குற்றவாளிகளை பாராளுமன்றம் அனுப்பிய செயலுக்கு  எவ்வளவு பாராட்டு வழங்கவேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

தமிழ் வீரகேசரி இப்படி புகழும் ஆங்கிலத்தில் டெலிகிராப் காரன் இதே அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டக்கிளஸ் தமிழ் சிறுமி  சிறுவர்களை  வித்த  கதையை விக்கிலீக்ஸ் வெளியிடும் இப்படி மாமா வேலை பார்த்த டக்கித்தான் திலீபனை கொலைகாரன் என்கிது அப்ப  தமிழ்நாட்டில் சூளை  மேட்டில் யாகம் செய்தவராக்கும் .

https://www.colombotelegraph.com/index.php/wikileaks-epdp-sold-jaffna-children-girls-to-prostitution-rings-and-boys-to-slavery/

உங்களை நினைக்க பரிதாபமாய் இருக்கின்றது பெருமாள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

உங்களை நினைக்க பரிதாபமாய் இருக்கின்றது பெருமாள் 

சந்தோசம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

ஆஹா........ தீர்மானத்திற்கே இவ்வளவு பாராட்டு என்றால், கொலைக்குற்றவாளிகளை பாராளுமன்றம் அனுப்பிய செயலுக்கு  எவ்வளவு பாராட்டு வழங்கவேண்டும்.  

இலங்கையும், யுனிசெப் அமைப்பும்....
மாறி, மாறி.... முதுகு சொறிந்து கொண்டிருக்கும்....
காட்சியை பார்த்து... கண் எல்லாம், பூத்துப்  போச்சுதையா...  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையும், யுனிசெப் அமைப்பும்....
மாறி, மாறி.... முதுகு சொறிந்து கொண்டிருக்கும்....
காட்சியை பார்த்து... கண் எல்லாம், பூத்துப்  போச்சுதையா...  😎

சின்ன பிள்ளைகளை  மதநிறுவனங்களுக்கு அழைத்து சென்று அங்கு மதபோதனைகளை போத்தித்து மதவெறியர்களாக வெளிவந்து  மதபிரச்சாரம் செய்யும் சிறுவர்களை பற்றி இவர்கள் ஏன் கண்டு கொள்வதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

சின்ன பிள்ளைகளை  மதநிறுவனங்களுக்கு அழைத்து சென்று அங்கு மதபோதனைகளை போத்தித்து மதவெறியர்களாக வெளிவந்து  மதபிரச்சாரம் செய்யும் சிறுவர்களை பற்றி இவர்கள் ஏன் கண்டு கொள்வதில்லை

"வல்லவன், வகுத்ததே... வாய்க்கால்"  என்பார்கள்.
அதில்... சிங்களவன், கெட்டிக்காரன்.

தமிழன்... அந்த ரகம் இல்லை.
அதனால்... இந்தக் கொடுமையை, அடுத்த சந்ததி என்று, ஒன்று இருந்தால்...
அவர்களுக்கு... கொடுத்துவிட்டுப் போக நினைக்கின்றனர்.

தேசியத் தலைவர் பிரபாகரனுக்குப் பின்....
விரல் விட்டு... எண்ணக்  கூடிய.. ஓரிருவர் இருந்தாலும்...
மிச்சம் எல்லாம், சிங்களவனுக்கு... சேவகம் செய்யும் நிலையில் தான், இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை மூடி மறைக்காமல் ஏற்றுக்கொள்வதற்கு தைரியம் வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.