Jump to content

கிளிநொச்சி பாடசாலை - தலைமுடியால் வந்த வினை! அதிபர் மீது தாக்குதல் முயற்சி : போராட்டத்தில் குதித்த பெற்றோர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. 

நேற்று புதன்கிழமை பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாக தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது. 

பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

விடயம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

262 பாடசாலை மாணவர்களை கொண்ட குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. அதற்காக அதிபர் அடங்கலாக 19 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்றனர். இவ்வாறான நிலையில் நேற்று புதன்கிழமை பாடசாலை மாணவர் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்க வருமாறும், பாடசாலை ஒழுக்க விதிகளை பேணுமாறும் பாடசாலை அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், தடுக்க முற்பட்ட ஆசிரியரில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களை பாதுகாத்து தருமாறு கோரியே பெற்றோர் மற்றும் மாணவர்களால் பிராத வாயிலை மூடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

 குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிசார் பெற்றோரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

பாடசாலையின் கௌரவத்தை பாதுகாக்குமாறும், உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் கிளிநொச்சி பொலிசாரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து போராட்டம் கைவிட்டதுடன் குறித்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன், அச்சுறுத்தலுக்குள்ளான பாடசாலை அதிபர் இன்றைய தினம் சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை இவ்வாறான அச்சுறுத்தல்கள் மத்தியில் கடமைகளை சீராக செய்ய முடியாத மனநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/90637

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைமுடிப்பிரச்சனை தமிழ்செல்வனின் மகளுக்கும் நடந்தது. அப்போ பாடசாலை நிர்வாகம் தான் வென்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது அங்கு இப்படியான போராட்ட்ங்கள் மலிந்துவிட்டது.  இன்னொரு ஊரில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திருத்துமாறு பணிக்கப்படத்துடன் பொதுப் போட்டிகளை பாரபட்சமின்றி நடத்துமாறும் கூறியதால், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களைத் தூண்டி ஆர்ப்படடம் செய்தார்கள்.  ஒரு ஆசிரியர் தனது பிள்ளைகளின் போட்டிகளை தானே மத்தியஸ்தம் வகித்ததனால், அதிபர் தனது அதிருப்தியைத் தெரிவித்தது பிடிக்காமல் நடந்தேறிய நாடகம் அதிபரை வெளியேற்றி சாதனை படைத்தனர்.

Link to comment
Share on other sites

3 minutes ago, Sabesh said:

இப்போது அங்கு இப்படியான போராட்ட்ங்கள் மலிந்துவிட்டது.  இன்னொரு ஊரில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திருத்துமாறு பணிக்கப்படத்துடன் பொதுப் போட்டிகளை பாரபட்சமின்றி நடத்துமாறும் கூறியதால், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களைத் தூண்டி ஆர்ப்படடம் செய்தார்கள்.  ஒரு ஆசிரியர் தனது பிள்ளைகளின் போட்டிகளை தானே மத்தியஸ்தம் வகித்ததனால், அதிபர் தனது அதிருப்தியைத் தெரிவித்தது பிடிக்காமல் நடந்தேறிய நாடகம் அதிபரை வெளியேற்றி சாதனை படைத்தனர்.

இங்கு மக்களின் போராட்டம் பாடசாலை அதிபருக்கும் நிர்வாகத்துக்கும் ஆதரவாகவே இடம்பெற்று இருக்கு?

தலைமுடியை சீராக்கி வருமாறு கோரியதற்காக மாணவர் ஒருவர் ஆசிரியரை தாக்கு முற்படுவது தடுக்கப்பட வேண்டிய விடயம் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

இங்கு மக்களின் போராட்டம் பாடசாலை அதிபருக்கும் நிர்வாகத்துக்கும் ஆதரவாகவே இடம்பெற்று இருக்கு?

தலைமுடியை சீராக்கி வருமாறு கோரியதற்காக மாணவர் ஒருவர் ஆசிரியரை தாக்கு முற்படுவது தடுக்கப்பட வேண்டிய விடயம் தானே...

நான் மாறி விளங்கி விட்டேன்.  உண்மை!  இவை தடுக்கப்பட வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.