Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

spacer.png

26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்து புலிகளின் சார்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். இக் கோரிக்கையை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை கண்டுகொள்ளவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை இந்திய இராணுவத்திற்கு தெளிவாக உணர்த்தியது.

யாழ்பாணத்தில் ஊரெழு பகுதில் பிறந்த மத்திய தரவர்க்க இளைஞனான திலீபன், யாழ்பாண இந்து கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு புலிகளின் இணைந்துகொண்டார். 1983 ஆண்டு காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கன அரசியல் இடைவெளி இடதுசாரி மற்றும் வலதுசாரி என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. டெலோ மற்றும் தமிழீழ விடுதலப் புலிகள் என்ற இரண்டு அமைப்புக்களும் தம்மை வலது சாரிகள் என வெளிப்படையாகவே அறிவிக்க ஆரம்பித்திருந்தனர்.

நகர்புற இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வலதுசாரியப் பார்வை கொண்டவர்களாக இருந்தனர். அந்தவகையில் திலீபனும் புலிகளில் இணைந்துகொண்டார். அவர் வாழ்ந்த பகுதியிலிருந்த கிராமங்களில் இடது நிலைப்பாட்டை தமது பார்வை என கூறிக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் எகோபித்த ஆதரவு பெற்றிருந்தது.

திலீபன் மரணித்து சரியாக ஒரு மாதம் முடிவதற்குள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விடுதியில் சிறிய உலங்கு வானூர்திகள் ஊடாக நள்ளிரவிற்கு சற்றுப் பின்னர் இந்திய அதிரடிப்படையினர் தரையிறங்க முற்பட்டனர். பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தலையாளி பகுதியில் தங்கியிருந்த பிரபாகரன் மற்றும் அன்டன் பாலசிங்கம் போன்ற புலிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்காகவே ஹெலிகொப்டர் ஊடான தரையிறக்கம் இடம்பெற்றது. தரையிறங்கிய அனைத்து இராணுவத்தினரும் புலிகளின் போராட்டத்தில் கொல்லப்பட இராணுவ வாகனங்களில் தலையாளிப் பகுதிக்குள் நுளைந்த இந்திய இராணுவம் அங்கு பொது மக்கள் சிலரைக் கொன்று போட்டுவிட்டு முகாம்களுக்குள் திரும்பிச்சென்றது.

அதனைத் தொடர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் முழுவதையும் இந்திய இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டு தனது தர்ப்பாரை நடத்தியது.
இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவென 70 களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயங்களான டெலோ,ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன ஏகத் தலைமை என்ற கோட்ப்பாட்டில் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. அந்த இயக்கங்களிலிருந்த முற்போக்கு சனநாயக அணிகளும், அறிவார்ந்தவர்களும் புலிகளின் துப்பாக்கிக்கு இரையாக எஞ்சியிருந்த தலைவர்கள் தமது ஆதரவாளர்களோடு இந்திய அரசின் அடிவருடிகளாகினர். எதிர்பார்த்தது போன்றே புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவத்தால் அந்த இயக்கங்கள் பழி வாங்கும் உணர்வோடு களத்தில் இறங்கினர்.

சந்திகளிலும் சாலைத்திருப்பங்களிலும் சந்தேககிக்கப்பட்ட அத்தனை அப்பாவிகளும் இந்திய இராணுவத்தினதும் அவர்களின் தமிழ்த் துணைக் குழுக்களதும் சித்திரவதைக்கும் துப்பாக்கிகும் இரையாகினர். மருதனாமடம் என்ற பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் கோரமான சித்திரவதைகளுக்குப் பேர்போனது. பல பெண்கள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தையும் மீறிய இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளில் பகல் கொள்ளையடிதனர். காரணமின்றியே பல அப்பாவிகளைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் காரணமின்றியே கொன்று போட்டனர்.

புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புச் சீர்குலைந்தது. பெரும்பாலான தலைவர்கள் காடுசார்ந்த மறைவிடங்களிலிருந்து இயங்க ஆரம்பித்தனர்,

spacer.png

புலிகள் வீதிகளின் நடந்தும் துவுச்சக்கர வண்டிகளிலும் சென்றதைப் போலவே இந்திய இராணுவம் வீதிகளில் வலம்வந்தது. இந்திய இராணுவத்தின் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களும், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களோடு முரண்பட்டு விலகியிருந்தவர்களும், இந்திய இராணுவத்தோடு இசைந்து செல்லக்கூடியவர்கள் எனச் சந்தேகத்திற்கு இடமானவர்களும் புலிகளால் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளை தனி நபர்களாக உலாவிய புலிகளின் தலை மறைவு உறுப்பினர்களே நடந்தினர். இவைகளுக்கு எல்லாம் தலைமை தாங்கியவர் பசீர் காக்கா என்ற புலிகளின் தலைமை குழுவிலிருந்தவர். பசீர் காக்காவின் துப்பாக்கிக்கு மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியாகினர். இன்று தேசியத்திற்காக மேடைகளில் கண்ணீர்வடிக்கும் பசீர் காக்கா தான் தனது சொந்தக் கரங்களால் கொன்று குவித்த அப்பாவிகளுக்காக ஒரு கணமாவது சுய விமர்சனம் செய்துகொண்டதில்லை.

spacer.png

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களிலிருந்த பெரும்பாலான போராளிகள் அந்த இயக்கங்களிலிருந்து புலிகளின் அழிப்பின் போதே விலகிவிட்டனர். எஞ்சியிருந்த சிறு குழுவினர் மட்டுமே இந்திய இராணுவத்தோடு இலங்கையில் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட்டனர். இந்த மக்கள் விரோதக் கும்பலுக்கு தலைமை தாங்கியவர் இன்று தேசியம் என்று உணர்ச்சிவயப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று திலீபனின் தியாகம் நினைவு கூரப்படுவது அடிப்படை உரிமை என்றும் கூச்சலிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சொந்தக் கரங்களால் அசோக் ஹொட்டேல் என்ற இந்திய இராணுவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்களை புலிகள் என்ற சந்தேகத்தில் கொலை செய்தார். அவரது கொலைகரங்களால் மாண்டுபோன பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் அப்பாவிகள்.

spacer.png

கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட சுரேஷ் தலைமையிலான குழு தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை இந்திய இராணுவத்தோடு இணைந்து உருவாக்கியது. இளைஞர்கள் தெருக்களில் தனியாகச் செல்லும் போது வாகங்களில் கடத்தப்பட்டு அசோக் ஹொட்டேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மந்தைகள் போல சில நாட்கள் அடைக்கப்பட்டு, பின்னர் சுரேஷ் பிரமச்சந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த பலர் அந்த இடத்திலேயே சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். 24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான் சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.

படுகொலைகளுக்கு அப்பால் புலிகள் நடத்திய விட்டுக்கொடுக்காத எதிர்ப்புப் போராட்டம் இந்திய இராணுவத்தை எதிர்ப்பது என்ற தலையங்கத்தில் பிரேமதசவுடன் கைகோர்த்துகொண்ட போது அதன் முழு அர்த்தைத்தையும் இழந்தது.

இந்திய இராணுவம் திருப்பியழைக்கப்பட்ட போது அவர்களோடு இணைந்து வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட்ட தலைவர்களும் தப்பியோடினர்.
இன்று இலங்கை பாசிச அரசு திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடுவதைத் தடை செய்திருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. காலனியத்திற்கு பிந்திய காலம் முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையே இலங்கை அரசின் இருப்பை உறுதிசெய்கிறது. மறுபக்கத்தில் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களாகத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் சுரேஷ் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு இலங்கை அரசுடனோ இந்திய அரசுடனோடு முரண்பாடுகள் இல்லை. ஏனைய இயக்கங்களை அழித்து வலதுசாரிகள் எனத் தம்மை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய புலிகள் நடத்திய போராட்டத்தை விமர்சன சுய விமர்சன அடிப்படையில் அணுகாமல் துதிபாடும் கும்பல்களுக்கும் இலங்கை இந்திய அரசுகளின் அடிவருடிகளே. இத் தடைகள் அனைத்தையும் கடந்து தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் சனநாயகக் காற்றைச் சுவாசிக்க முடியும்.
 
http://inioru.com/திலீபனுக்கு-அஞ்சலி-சுரே/

 • Like 2
Link to post
Share on other sites
 • Replies 94
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இங்கே இந்த பதிவை இணைத்தவரின் ஒரே நோக்கம் இத்திரி கொழுந்துவிட்டு எரியவேண்டும் என்பதுதான். அது நன்றாகவே நடக்கிறது. இப்பதிவை ஆதரித்து வாக்களித்தவர்களைப் பொறுத்தவரை இப்பதிவு புலிகளை விமர்சிக்கிறது என்பதே

ரஞ்சித், உணர்ச்சி வசப்பட்டு அவசரப் பதில் பந்தி பந்தியாக எழுதாமல் நான் எதற்கு அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று பார்க்க வேண்டும்!  சோசலிசத்தால் அழிவே என்றீர்கள்! இலங்கையின் கலப்புப் பொருளாதார முறைய

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை! 09/24/2020 இனியொரு... 26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போ

 • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்வி இதை இங்கு இணைத்தவர் இது ஒரு வாந்தி என்று தெரியாமல்தான் 
இணைத்தாரா? அல்லது தெரிந்து கொண்டும் இணைத்தாரா என்பதுதான். 
 
இதை எழுதியவர் இன்னமும் இண்டெர்நெட் இணைப்பு இல்லாத ஆர்டிக் பகுதியில் 
வாழலாம் என்று எண்ணுகிறேன் .. இவரை மனித மக்கள் கூட்டம் வாழும் பகுதிகளுக்கு 
இதை இங்கு இணைத்தவர்களுக்கு தொடர்பிருந்தால் வர சொல்லுங்கள்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

எனது கேள்வி இதை இங்கு இணைத்தவர் இது ஒரு வாந்தி என்று தெரியாமல்தான் 
இணைத்தாரா? அல்லது தெரிந்து கொண்டும் இணைத்தாரா என்பதுதான். 
 
வாசித்துவிட்டுத்தான் இணைத்தேன் மருதர். 😎

உங்கள் பார்வையில் வாந்தியாக இருப்பது எல்லோருக்கும் வாந்தியாக இருக்காது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

வாசித்துவிட்டுத்தான் இணைத்தேன் மருதர். 😎

உங்கள் பார்வையில் வாந்தியாக இருப்பது எல்லோருக்கும் வாந்தியாக இருக்காது. 

நீங்கள் கூறுவது உண்மைதான் சில தெருநாய்கள் வாந்திகளை உண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அதற்காக அது வாந்தி இல்லை என்று வாதம் செய்ய முடியாத ஒரு சங்கடம் இருப்பதையும் புரிந்து கொள்கிறேன் 

2 minutes ago, கிருபன் said:

வாசித்துவிட்டுத்தான் இணைத்தேன் மருதர். 😎

உங்கள் பார்வையில் வாந்தியாக இருப்பது எல்லோருக்கும் வாந்தியாக இருக்காது. 

இதுக்கெல்லாம் நேரம் செலவழிப்பதே வீண் நிர்வாகம் நீக்குவதே மேல் 
முதலும் கடைசியுமாக உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன் .. உங்கள் மேல் இருக்கும் மதிப்பு காரணமாக மட்டுமே. 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

நீங்கள் கூறுவது உண்மைதான் சில தெருநாய்கள் வாந்திகளை உண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அதற்காக அது வாந்தி இல்லை என்று வாதம் செய்ய முடியாத ஒரு சங்கடம் இருப்பதையும் புரிந்து கொள்கிறேன் 

கட்டுரையை வாசிக்காமல் எட்டிப் பார்ப்பவர்களுக்கு அப்படியே எது வாந்தியென்றும் சொல்லிவிடுங்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையில் அப்படி என்னத்தை பிழையாக சொல்லிப் போட்டார் ?...சுரேஷ் என்ன உத்தமரா ? சீவி என்ன தியாகியா ?
இவ்வளவு கொலைகள் செய்த சுரேசை மன்னிப்போம் ஆனால் கருணாவை மன்னிக்க மாட்டோம். ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

spacer.png

26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார்.

திலீபனை பற்றி கட்டுரை எழுத தெரிந்த எருமைக்கு திலீபன் வைத்த கோரிக்கையே தெரியவில்லை.
இது உலகிலிலேயே நடந்த அகிம்சை போராட்டம் அறிவுஜீவி சிங்களவராலேயே போற்றப்படுபவன் திலீபன்.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த திலீபன் ஐந்து அம்சக்  கோரிக்கை ஒன்றை முன்வைத்து புலிகளின் சார்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். இக் கோரிக்கையை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை கண்டுகொள்ளவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை இந்திய இராணுவத்திற்கு தெளிவாக உணர்த்தியது.

யாழ்பாணத்தில் ஊரெழு பகுதில் பிறந்த மத்திய தரவர்க்க இளைஞனான திலீபன், யாழ்பாண இந்து கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு புலிகளின் இணைந்துகொண்டார்.

இதுக்கு நான் ஏதும் எழுத தேவை இல்லை என்று நினைக்கிறேன் 

1983 ஆண்டு காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கன அரசியல் இடைவெளி இடதுசாரி மற்றும் வலதுசாரி என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

இந்த வாந்திக்கு ஏதும் ஆதாரம் இருந்தால் நீங்கள்தான் எழுத வேண்டும்.
நான்கு பெரிய இயக்கங்கள் ஒருமித்து இயங்க கூடினார்கள் என்பதுதான் உண்மை
 
டெலோ மற்றும் தமிழீழ விடுதலப் புலிகள் என்ற இரண்டு அமைப்புக்களும் தம்மை வலது சாரிகள் என வெளிப்படையாகவே அறிவிக்க ஆரம்பித்திருந்தனர்.

எங்கு எப்போது என்று? கொஞ்சம் விரிவாக வாந்தி எடுத்தால் அந்த மர்மங்களை 
நாமும் வாசித்து அறியலாம் ... 

நகர்புற இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வலதுசாரியப் பார்வை கொண்டவர்களாக இருந்தனர்.

எனக்கு தெரிய வலது இடது என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தவர்கள்தான் 99 வீதம் 
இப்படி ஒரு மாயையை இப்படியான வாந்திகளில் மட்டும் காணலாம் 

அந்தவகையில் திலீபனும் புலிகளில் இணைந்துகொண்டார்.

சிரிப்பு அடக்க முடியவில்லை ....ஆக திலீபன் வலது சாரி கொள்கைகளை கொண்டு 
இடது சாரி சிங்கள இராணுவ முகாம்களை தகர்க்க புலிகளில் சேர்ந்தார்? 

அவர் வாழ்ந்த பகுதியிலிருந்த கிராமங்களில் இடது நிலைப்பாட்டை தமது பார்வை என கூறிக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் எகோபித்த ஆதரவு பெற்றிருந்தது.

உரும்பிராயில் ஈப்பி ஏகோபித்த ஆதரவு பெற்று இருந்தது 
இந்த வாந்திக்காரர் வந்து பார்த்தார்? 

திலீபன் மரணித்து சரியாக ஒரு மாதம் முடிவதற்குள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விடுதியில் சிறிய உலங்கு வானூர்திகள் ஊடாக நள்ளிரவிற்கு சற்றுப் பின்னர் இந்திய அதிரடிப்படையினர் தரையிறங்க முற்பட்டனர். பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தலையாளி பகுதியில் தங்கியிருந்த பிரபாகரன் மற்றும் அன்டன் பாலசிங்கம் போன்ற புலிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்காகவே ஹெலிகொப்டர் ஊடான தரையிறக்கம் இடம்பெற்றது. தரையிறங்கிய அனைத்து இராணுவத்தினரும் புலிகளின் போராட்டத்தில் கொல்லப்பட இராணுவ வாகனங்களில் தலையாளிப் பகுதிக்குள் நுளைந்த இந்திய இராணுவம் அங்கு பொது மக்கள் சிலரைக் கொன்று போட்டுவிட்டு முகாம்களுக்குள் திரும்பிச்சென்றது.

அதனைத் தொடர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் முழுவதையும் இந்திய இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டு தனது தர்ப்பாரை நடத்தியது.
இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவென 70 களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயங்களான டெலோ,ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன ஏகத் தலைமை என்ற கோட்ப்பாட்டில் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன.

இவர்கள் எல்லோரும் இணைந்த தலைமை என்ற கோட்ப்பாட்டிலா புலிகளை கொன்றார்கள்?
சும்மா தெரிந்து வைத்திருக்க கேட்க்கிறேன் 

அந்த இயக்கங்களிலிருந்த முற்போக்கு சனநாயக அணிகளும், அறிவார்ந்தவர்களும் புலிகளின் துப்பாக்கிக்கு இரையாக எஞ்சியிருந்த தலைவர்கள் தமது ஆதரவாளர்களோடு இந்திய அரசின் அடிவருடிகளாகினர். எதிர்பார்த்தது போன்றே புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவத்தால் அந்த இயக்கங்கள் பழி வாங்கும் உணர்வோடு களத்தில் இறங்கினர்.

சந்திகளிலும் சாலைத்திருப்பங்களிலும் சந்தேககிக்கப்பட்ட அத்தனை அப்பாவிகளும் இந்திய இராணுவத்தினதும் அவர்களின் தமிழ்த் துணைக் குழுக்களதும் சித்திரவதைக்கும் துப்பாக்கிகும் இரையாகினர். மருதனாமடம் என்ற பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் கோரமான சித்திரவதைகளுக்குப் பேர்போனது. பல பெண்கள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தையும் மீறிய இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளில் பகல் கொள்ளையடிதனர். காரணமின்றியே பல அப்பாவிகளைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் காரணமின்றியே கொன்று போட்டனர்.

புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புச் சீர்குலைந்தது. பெரும்பாலான தலைவர்கள் காடுசார்ந்த மறைவிடங்களிலிருந்து இயங்க ஆரம்பித்தனர்,

spacer.png

புலிகள் வீதிகளின் நடந்தும் துவுச்சக்கர வண்டிகளிலும் சென்றதைப் போலவே இந்திய இராணுவம் வீதிகளில் வலம்வந்தது. இந்திய இராணுவத்தின் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களும், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களோடு முரண்பட்டு விலகியிருந்தவர்களும், இந்திய இராணுவத்தோடு இசைந்து செல்லக்கூடியவர்கள் எனச் சந்தேகத்திற்கு இடமானவர்களும் புலிகளால் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளை தனி நபர்களாக உலாவிய புலிகளின் தலை மறைவு உறுப்பினர்களே நடந்தினர்.

இவைகளுக்கு எல்லாம் தலைமை தாங்கியவர் பசீர் காக்கா என்ற புலிகளின் தலைமை குழுவிலிருந்தவர். பசீர் காக்காவின் துப்பாக்கிக்கு மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியாகினர்.

இந்திய இராணுவ சண்டை நடந்தபோது பசீர் காக்க எங்கு இருந்தார் என்ன செய்துகொண்டு 
இருந்தார் என்பது இந்த ஆர்டிக்கில் வசிக்கும் வாந்தி காரருக்கு தெரிய வாய்ப்பில்லை 

இன்று தேசியத்திற்காக மேடைகளில் கண்ணீர்வடிக்கும் பசீர் காக்கா தான் தனது சொந்தக் கரங்களால் கொன்று குவித்த அப்பாவிகளுக்காக ஒரு கணமாவது சுய விமர்சனம் செய்துகொண்டதில்லை.

யாரந்த அப்பாவிகள் என்று இவர் பெயர் விபரம் தந்தால் 
நாங்களாவது அவருக்கு சொல்லி சுய விமர்சனம் செய்ய சொல்லாம் 

spacer.png

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களிலிருந்த பெரும்பாலான போராளிகள் அந்த இயக்கங்களிலிருந்து புலிகளின் அழிப்பின் போதே விலகிவிட்டனர். எஞ்சியிருந்த சிறு குழுவினர் மட்டுமே இந்திய இராணுவத்தோடு இலங்கையில் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட்டனர். இந்த மக்கள் விரோதக் கும்பலுக்கு தலைமை தாங்கியவர் இன்று தேசியம் என்று உணர்ச்சிவயப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று திலீபனின் தியாகம் நினைவு கூரப்படுவது அடிப்படை உரிமை என்றும் கூச்சலிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சொந்தக் கரங்களால் அசோக் ஹொட்டேல் என்ற இந்திய இராணுவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்களை புலிகள் என்ற சந்தேகத்தில் கொலை செய்தார். அவரது கொலைகரங்களால் மாண்டுபோன பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் அப்பாவிகள்.

ஒருவன் தவறு செய்தால் தொடர்ந்தும் அதையே செய்யவேண்டுமா? 
அல்லது கொலை செய்வது நன்று இறந்தவருக்கு அஞ்சலி செய்வது தவறு என்கிறாரா 
இந்த வாந்தி காரார்? 

spacer.png

கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட சுரேஷ் தலைமையிலான குழு தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை இந்திய இராணுவத்தோடு இணைந்து உருவாக்கியது. இளைஞர்கள் தெருக்களில் தனியாகச் செல்லும் போது வாகங்களில் கடத்தப்பட்டு அசோக் ஹொட்டேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மந்தைகள் போல சில நாட்கள் அடைக்கப்பட்டு, பின்னர் சுரேஷ் பிரமச்சந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த பலர் அந்த இடத்திலேயே சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.

அப்போ அசோகா கோட்ட்லுக்கு கீழே பல நூற்று கணக்கான எலும்பு கூடுகள் இருக்கிறது 
என்பதை இவர் உறுதி செய்கிறார்? 

24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆக வலதுசாரி தமிழ்த்தேசியம் ஓகே 
கண்ணீர் வடிக்கும் ஆட்கள்தான் இப்போ பிழை 
இதை குறிப்பில் வைத்து கொள்கிறேன் சில நேரம் கீழே தேவைப்படலாம் 

அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான்

யாருக்கு என்ன தண்டனை வித்தித்தார் என்று 
கொஞ்சம் வாந்தி எடுத்தால் நாமும் தெரிந்து கொள்ளலலாம் 

சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.

உங்களை போல அடியும் தெரியாது முடியும் தெரியாது 
ஈழ வரைபடமே தெரியாது வாந்தி எடுக்க்கவும் சிலரை உருவாக்கி இருக்கிறதுதானே?  

படுகொலைகளுக்கு அப்பால் புலிகள் நடத்திய விட்டுக்கொடுக்காத எதிர்ப்புப் போராட்டம் இந்திய இராணுவத்தை எதிர்ப்பது என்ற தலையங்கத்தில் பிரேமதசவுடன் கைகோர்த்துகொண்ட போது அதன் முழு அர்த்தைத்தையும் இழந்தது.

இந்த மகா தீயோரியை கொஞ்சம் நீளமாக இங்கு இணைத்தவர் விளக்கினால் 
நானும் புரிந்துகொள்வேன் திம்புவில் பேசியபோது எவ்வளவு வீதம் அர்த்தம் இழந்தது என்றும் எழுதினால் நன்று.

இந்திய இராணுவம் திருப்பியழைக்கப்பட்ட போது அவர்களோடு இணைந்து வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட்ட தலைவர்களும் தப்பியோடினர்.
இன்று இலங்கை பாசிச (அப்பாடா நடுநிலைமை பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து நிற்கிறேன்) அரசு திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடுவதைத் தடை செய்திருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது.

அப்பாடா !
ஆக திலீபனுக்கு நினைவு தினம் செய்யலாம் .. எங்க இவர் எதிர்த்தால் 
இனி செய்ய முடியாதே என்று இதை வாசிக்குமட்டும் ஒரு அங்காலைப்பில் இருந்தேன் 

காலனியத்திற்கு பிந்திய காலம் முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையே இலங்கை அரசின் இருப்பை உறுதிசெய்கிறது. மறுபக்கத்தில் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களாகத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் சுரேஷ் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு இலங்கை அரசுடனோ இந்திய அரசுடனோடு முரண்பாடுகள் இல்லை.

இவர் இப்போ இன்ன இடியப்பம் புளிகிறார்?
மேலேதான் வாந்தி எடுத்தார் முந்தி கொலைசெய்தவர் இப்போ குரல் கொடுக்கிறார் என்று 
இப்போ ஒன்றும் செய்யவில்லை என்கிறார். ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களுக்கு ஏன் இவர் வாந்தி எடுக்கிறார்? 

ஏனைய இயக்கங்களை அழித்து வலதுசாரிகள் எனத் தம்மை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய புலிகள் நடத்திய போராட்டத்தை

எழுத நேரம் இல்லை 
ஆதாரம் ப்ளீஸ் ???
புலிகள் தமக்கு எதிராக வந்த இயக்கங்கள் மட்டுமல்ல 
இந்திய இலங்கை இராணுவத்தையும் அழித்து இருக்கிறார்கள் 
கொஞ்சம் சேர்க்க சொல்லுஙகள் 

விமர்சன சுய விமர்சன அடிப்படையில் அணுகாமல் துதிபாடும் கும்பல்களுக்கும் இலங்கை இந்திய அரசுகளின் அடிவருடிகளே.

ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றால் 
புலிவாந்தி எடுக்காதவர்கள் அனைவரும் இந்திய இலங்கை அருவருடிகள் 
ஐயா வாந்தி எடுத்து சுத்த தமிழனாக தீட்ஸைபெற்று பரிசுத்தமாகி உள்ளார். 
(ஐயா வெட்டி கிழித்தது என்ன என்றுதான் ஒருவருக்கும் தெரியாது) 

இத் தடைகள் அனைத்தையும் கடந்த

புரட்டி புரட்டி வாசித்து விட்டேன் 
என்ன தடைகள் என்று மேலே எங்கும் இல்லை 
வாந்திக்குள் மூழ்கி முத்தெடுக்கும் யாரவது எந்த தடியை உடைத்து என்று கொஞ்சம் எழுதினால் 
நாங்களும் சுட்டியல் கோடாரியோடு முடிந்தால் வரலாம். 

 தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே

என்னங்க இப்பிடி மொடடை கடிதம் போல எழுதினால் எப்படி?
இவளவு வாந்தி எடுத்த நீங்கள் 
என்ன போராடடம்?
யாருக்கு எதிராக?
வலது பக்கமாக படுத்து போராடுவதா?
இடது பக்கமாக படுத்து போராடுவதா?
எங்கு போராடுவது? என்ன நேரம் போராடுவது என்றாவது எழுத கூடாதா?

தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் சனநாயகக் காற்றைச் சுவாசிக்க முடியும்.

எங்களுக்கு என்ன சுவாசிக்கிறது என்பது தெரியும் 
நீ உன்ரை வேலையை பார்த்திட்டு போ என்று மரியாதையை குறைவாக 
அநாகரீக முறையில் எல்லாம் எழுத கூடாது என்பதால்.

இதுக்கலாம் தாங்கள் புடுங்கின ஆணி என்ன என்று கேட்டு முடிக்கிறேன் 

http://inioru.com/திலீபனுக்கு-அஞ்சலி-சுரே/

எந்த ஆதாரமும் அற்ற வெறும் வாந்தியான 
ஒரு கட்டுரைக்கே வரையறை இல்லாத ஒரு வாந்தியை இணைத்ததும் இல்லாமல் 
அதுக்கு வக்காலத்தும் வாங்கலாம் என்று எண்ணுகிறீர்கள் 
நீங்கள் ரொம்ப பெரியவர்.

முதலில் இவர் சொல்ல வருவது என்ன என்று கூறுங்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

முதலில் இவர் சொல்ல வருவது என்ன என்று கூறுங்கள்

Quote

24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான் சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

கட்டுரையை வாசிக்காமல் எட்டிப் பார்ப்பவர்களுக்கு அப்படியே எது வாந்தியென்றும் சொல்லிவிடுங்கள். 

கட்டுரையில் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன் வாசிக்கவும் 
இனிமேல் இவ்வளவு நேரம் வீண் அடிக்க போவதில்லை அது தேவையும்மில்லை.

ஆமியும் பிழை அவரும் பிழை இவரும் பிழை என்று எழுதினால் மட்டும் 
நடுநிலைமையோ நியாயமோ வந்துவிடாது ... அப்படி எழுதிவிட்டால் தொடர்ந்து 
எந்த குப்பையையும் எந்த ஆதாரமும் இன்றி எழுதிவிடலாம் என்றும் ஆகாது.

எவ்வளவோ வாசிக்கிறீர்கள் தயவு செய்து குப்பைகளை கொண்டு திரியாதீர்கள்.
நான் புலிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறேன் ... எனது மாமா புலிகளால் (சூசையால்) 
கொலைசெய்யப்பட்டு இருக்கிறார். உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எங்களுக்கும் நிறைய 
விமர்சனம் கேள்விகள் உண்டு ... அதுக்கு மேலால் ஒரு அடிப்படை மனித அறிவு உண்டு.
குறைந்த பட்ஷம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று பாருங்கள்.

கட்டுரை என்பது ஒரு தலைப்பு சார்ந்து அதை நோக்கி எழுதுவது 
விக்கிக்கும் சுரேசுக்கும்  திலீபனை நினைவுகூர ஜோக்கிதம் இல்லை என்றால் 
அதை ஏற்றுக்கொள்ளலாம் ........ அதை தெளிவாக இன்ன இன்ன காரணத்தால் என்று கொஞ்சாமாவது 
ஆதாரத்துடன் எழுதவேண்டும். யாழ்களத்தின் எதிர்கால நிலையையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
வெறும் குப்பையை போடுவதால் என்ன பயன்? 

Quote

24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான் சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.

இதில் தமிழ் மக்களுக்கு என்ன சாபக்கேடு இருக்கிறது?
முன்பு குற்றம் புரிந்த ஒருவன் தனது குற்றத்தை தெரிந்து திருந்தி இருக்கிறான் 
 
சில மரணங்களுக்கு காரணமாக இருந்தவனே அந்த மரணங்கள் 
உயர்வானவை அஞ்சலிக்க பட வேண்டியவை என்கிறான்.

இதில் என்ன மக்களுக்கு  சாபக்கேடு இருக்கிறது என்று கொஞ்சம் தெளிவாக எழுதுவீர்களா? 

Link to post
Share on other sites

டக்ளஸ் பற்றி ஒரு வரியும் இல்லை. ஒரு கொலையும் செய்யவில்லையோ?? பசீர்காக்காவை  உதாரணத்துக்கு எடுத்து எழுதியவருக்கு டக்ளஸ், சித்தார்த்தன் போன்றவர்களின் கொலையை பற்றி இலகுவாக மறந்து விட்டார் போல.
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த இனியொரு பா நாவலன் என்றது.. 2009 க்கு முன் தேசம் என்ற ஒட்டுக்குழு பத்திரிகை மூலமும் இதே புலி எதிர்ப்பு வாந்தி தான் செய்து கொண்டிருந்தது.

அதன் பின்..

தேசியக் கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க வை என்றிச்சுது.

சிங்கள பெளத்த பேரினவாத்துடன் இணக்க அரசியலே எனி கதி என்றிச்சுது.

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு என்ற ஒன்றில்லை எல்லாம் புலிகளின் போராட்ட பலாபலன் என்றிச்சுது.

இப்ப.. திலீபன் உண்ணாவிரதமும் இருக்கவில்லை.. தியாகமும் செய்யவில்லை.. பசீர் காக்கா என்னிடம் இருந்து தான் துப்பாக்கியை வாக்கிச் சுட்டு திரிந்தவர்.. என்ற கணக்கா.. எழுதிக்கிட்டு திரியுது.

புலிகள் ஒட்டுக்குழுக்களை சுடேக்க.. ஒட்டுக்குழுக்கள் திருப்பி தாக்கவே இல்லை. மாறாக வெள்ளைக் கொடியை பிடிச்சுக்கிட்டு குப்புறக் கிடந்தவை என்பது தான்.. இந்த பா நாறலில் நாறல் வாதம். 

என்ன மாயமோ தெரியல்ல.. நம்ம கிருபண்ணாவுக்கு புலி எதிர்ப்பு வாந்தியை சுவைப்பதில் ஒரு அலாதிப் பிரியமும் இருப்பதை காலத்துக்கு காலம் காண முடிகிறது.

புலியை எதிர்த்து.. இந்தக் கூழ்முட்டைகள் கண்ட மிச்சம் என்ன..????!

சொந்த இனத்தவனின் தியாகங்களை கொச்சைப்படுத்தி.. சொந்த மக்களையும் மண்ணையும் எதிரிக்கு தாரை வார்த்தது தான். 

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild

மரணதண்டனை கைதி பாராளுமன்றம் போகலாம்!

கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கலாம்!

அரச உத்தியோகத்தரை மதகுரு அடிக்கலாம் கழுத்தைபிடிச்சு தள்ளலாம்!

அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவரை நினைவேந்த முடியாது! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

Bild

மரணதண்டனை கைதி பாராளுமன்றம் போகலாம்!

கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கலாம்!

அரச உத்தியோகத்தரை மதகுரு அடிக்கலாம் கழுத்தைபிடிச்சு தள்ளலாம்!

அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவரை நினைவேந்த முடியாது! 

இதுகளுக்கு எல்லாம் இந்தளவு ஆரவாரம் காட்ட கூடாது காரி உமிழ்ந்துவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும். இந்த குப்பைகளை யாரும் வாசிக்க போவதில்லை 
கிருபன் போன்றவர்கள் ஏன் காவி வருகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

மாற்று கருத்து 
அல்லது ஒரு எதிர் கருத்து என்பது ஏற்றுக்கொள்ள கூடியது 

எந்த ஆதாரமும் அற்ற பிதற்றல்களை ஏன் காவுகிறார் என்று தெரியவில்லை.

உண்மையில் இதில் என்ன எழுதியிருக்கு அல்லது ஏன் எழுதி இருக்கு என்பதே எனக்கு 
இன்னமும் புரியவில்லை. ஒரு வேளை கிருபனுக்கு இப்படியானவைகளை வாசித்து வசித்து 
எந்த ஒரு தலைப்பும் அடிப்படையும் இல்ல்லாமல் இப்படி வரும் பிதற்றல்கள் பழகி போட்டுதோ தெரியவில்லை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

கிருபன் போன்றவர்கள் ஏன் காவி வருகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

தமிழ்த் தேசியம் என்று போலிவேஷம் போடுபவர்களின் மறுபக்கத்தையும் அறியவேண்டும் என்ற காரணம்தான்😁

9 hours ago, Maruthankerny said:

விக்கிக்கும் சுரேசுக்கும்  திலீபனை நினைவுகூர ஜோக்கிதம் இல்லை

பிரேமானந்தாவின் சீடன் விக்கியர் 2009 க்கு பின்னர் வந்து தேசியவாதியாகிவிட்டார். மண்டையன் குழு தலைவராக இருந்த சுரேஸுன் தேசியவாதிவிட்டார். ஆகவே அவர்களின் பழையதுகளை மறக்கலாம். 

ஆனால் கருணா, டக்ளஸ், பிள்ளையான், கேபி தேசியவாதிகளாக இல்லையென்பதால் அவர்களின் பழையதுகளை ஒவ்வொருநாளும் நினைவுபடுத்துவோம்😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

தமிழ்த் தேசியம் என்று போலிவேஷம் போடுபவர்களின் மறுபக்கத்தையும் அறியவேண்டும் என்ற காரணம்தான்😁

இவளவு காலமும் சுரேஷ்பிரேமச்சந்திரனை தெரியாமல் இருந்த நீங்கள் 
இனி தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்?

அதை விடுங்கள் 

இந்த கட்டுரையில் ஏதாவது யாரைப்பற்றியாவது எழுதி  இருக்கிறதா?
ஏதாவது உண்மை இருக்கிறதா?
இந்த வாந்தியை ஏன் காவுகிறீர்கள் என்பதே எனது கேள்வி.

இதில் விக்கியரை பற்றி 
அல்லது சுரேஷை பற்றி 
ஏதும் அறிய கூடியதா எழுதி இருக்கிறதா?
ஏதாவது ஒரு எழுத்துக்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருக்கிறதா?

இந்த வாந்திகளை ஏன் காவுகிறீர்கள் என்பதுக்கான பதிலை எதிர்பார்க்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இந்த வாந்தியை ஏன் காவுகிறீர்கள் என்பதே எனது கேள்வி.

உங்களைக் குஷிப்படுத்த என்ன காவவேண்டும் என்றும் தெரியும்😀

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பிரேமானந்தாவின் சீடன் விக்கியர் 2009 க்கு பின்னர் வந்து தேசியவாதியாகிவிட்டார். மண்டையன் குழு தலைவராக இருந்த சுரேஸுன் தேசியவாதிவிட்டார். ஆகவே அவர்களின் பழையதுகளை மறக்கலாம். 

சரியாக சொன்னீர்கள் இது எல்லாம் நியாயமா

4 hours ago, கிருபன் said:

ஆனால் கருணா, டக்ளஸ், பிள்ளையான், கேபி தேசியவாதிகளாக இல்லையென்பதால் அவர்களின் பழையதுகளை ஒவ்வொருநாளும் நினைவுபடுத்துவோம்

கொலைகள் செய்துவிட்டு தமிழ் தேசியவாதியாக மாறிவிட வேண்டும் தேசியவாதியாக இருந்தால் என்ன  அநீதிகளும் செய்யலாமே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியம் என்று போலிவேஷம் போடுபவர்களின் மறுபக்கத்தையும் அறியவேண்டும் என்ற காரணம்தான்😁

பிரேமானந்தாவின் சீடன் விக்கியர் 2009 க்கு பின்னர் வந்து தேசியவாதியாகிவிட்டார். மண்டையன் குழு தலைவராக இருந்த சுரேஸுன் தேசியவாதிவிட்டார். ஆகவே அவர்களின் பழையதுகளை மறக்கலாம். 

ஆனால் கருணா, டக்ளஸ், பிள்ளையான், கேபி தேசியவாதிகளாக இல்லையென்பதால் அவர்களின் பழையதுகளை ஒவ்வொருநாளும் நினைவுபடுத்துவோம்😜

கொள்கை ரீதியாக

அல்லது

தாயக கனவுடன் தியாகமானவர்களின் கனவு  சார்ந்து 

தம்மை மாற்றிக்கொண்டவர்களுக்கும்

அதை  மறந்தவர்களுக்குமான வித்தியாசம்  இருக்கலாம் தானே???

தமிழர் கனவென்ன??

அதற்காக தம்மை மாற்றிக்கொள்பவரை ஏற்பதில் உங்களுக்கு ஏதும் தயக்கம்???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உங்களைக் குஷிப்படுத்த என்ன காவவேண்டும் என்றும் தெரியும்😀

உங்களால் பதில் எழுத முடியாவிட்டால், இப்படிதான் உங்களின் கீழ்தரமான பதில்கள் பலருக்கு பதிலிடுகின்றீர்கள்.

உண்மையில் நீங்கள் எப்படிப்பட்டவரென நினைக்க, .........   சொல்ல விரும்பவில்லை, விளங்க கூடிய நிலையில் நீங்களில்லை.

நீங்களாக உணர்ந்து கருத்துக்கு கருத்தை பதியுங்கள். இப்படி "உங்களைப்பற்றி தெரியும், உங்களின் அறிவு எந்தளவென்று தெரியும்... "  பதிந்து உங்களை நீங்களே கீழ் நிலைக்கு தள்ளுகின்றீர்கள். 

நீங்கள் மட்டுமில்லை இன்னுமொருவர் இருக்கின்றார் இப்படி 

39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொலைகள் செய்துவிட்டு தமிழ் தேசியவாதியாக மாறிவிட வேண்டும் தேசியவாதியாக இருந்தால் என்ன  அநீதிகளும் செய்யலாமே

திருந்தியபின் மக்களுக்கு இன்றுவரை என்ன நன்மைகள் செய்கின்றார்கள் என விளக்க முடியுமா, கருணா குட்டி புட்டிகளுடன் காலம், மற்றவர்... சிங்களத்துக்கு அடிவருடி... மக்கள் ஏமாளிகள்

தமிழ் தேசியவாதியாக மாறுவது என்றால் என்ன என்று விளங்கப்படுத்த முடியுமா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

இந்த கட்டுரையில் அப்படி என்னத்தை பிழையாக சொல்லிப் போட்டார் ?...சுரேஷ் என்ன உத்தமரா ? சீவி என்ன தியாகியா ?
இவ்வளவு கொலைகள் செய்த சுரேசை மன்னிப்போம் ஆனால் கருணாவை மன்னிக்க மாட்டோம். ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் 

கருணா அம்மான் என்றால் தென் தமிழீழம். தென் தமிழீழம் என்றால் கருணா அம்மான். தென் தமிழீழத்துதின் அடையாளம். இது அவர் கருணா அம்மானாக இருக்கையில் எனது மனநிலை. 

இப்போது அவர் முரளீதரன்.

அவரை சுரேஸின் தரத்திற்கு கீழிறக்கி ஒப்பிடுவது,  நீங்கள் உங்கள் அண்ணரை இழிவுபடுத்துவதாகாதா ? ☹️

(உங்கள் ஒப்பீடு சகிக்கவில்லை ☹️)

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Quote

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

உதுதான் குழம்பிய குடடையில் மீன் பிடிக்கிறது.

ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தை கொன்ற கருணாவை, அவன் தேசீய வீரனாக ஆக்கி வைத்து இருக்கிறான். நாங்களோ ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி இருக்கின்ற ஒற்றுமையை குலைத்துக்கொள்வோம்

Edited by zuma
Link to post
Share on other sites

ஒரு பக்கம் பழைய விடயங்களை பற்றி மீண்டும் மீண்டும் கதைக்காமல் புதிய சிந்தனைகளுக்குட்படுவோம் என்று பல்லாயிரக்கணக்கான  தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமான  கோத்தாவுடன் , அதை பின் நின்று நடத்திய இந்தியாவுடன் , சிங்கள அரசுகளுடன் , ஒத்து ஊதிய சர்வதேசத்துடன் புதிய உறவுகளை அமைத்து ஏற்படுத்தி முன்னேறச் சொல்லி அறிவுரைகள் தருகின்றனர். அதே நேரம்  தமிழ் அரசியல்வாதிகளாக இன்று மக்கள் முன் நிற்பவர்களின் கடந்த கால செயற்பாடுகளை மறக்காமல், குத்தி கிளறி அவர்களது செயற்பாடுகளை முடக்கி ஒதுக்கி வைக்க முயல்கின்றனர்.

எல்லாருக்கும் அவரவர் அரசியல் தான் முக்கியம். 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதில் ஏன் ஒரு சிலருக்கு இவ்வளவு கோபமென்று  எனக்குப் புரியவில்லை! திலீபனை நினைவுகூர்வது தவறென்று கட்டுரை கூறவில்லை! ஆனால், எல்லோருடைய கடந்த காலமும் பேசப்பட வேண்டும் என்ற தொனியைத் தான் கட்டுரை வலியுறுத்துகிறது. 

ஒரு தவறைச் செய்யும் போது ஒருவருக்கு வராத மனக் கிலேசமும் கோபமும் அதைச் சுட்டிக் காட்டும் போது எதிர்வினையாக வருவது அதிசயம்! எனவே இந்த சுட்டிக் காட்டல்களால் ஒரு தீமையும் இல்லை, இது சுரேஷ் உட்பட எவரையும் பாதிக்கப் போவதும் இல்லை!

Link to post
Share on other sites
12 minutes ago, Justin said:

ஒரு தவறைச் செய்யும் போது ஒருவருக்கு வராத மனக் கிலேசமும் கோபமும் அதைச் சுட்டிக் காட்டும் போது எதிர்வினையாக வருவது அதிசயம்! எனவே இந்த சுட்டிக் காட்டல்களால் ஒரு தீமையும் இல்லை, இது சுரேஷ் உட்பட எவரையும் பாதிக்கப் போவதும் இல்லை!

மேற்சொன்ன கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர்கள் தவறிழைக்கும் போது, இக் கட்டுரையை விமர்சித்தவர்களுக்கு கோபமும் கிலேசமும் ஏற்பட்டிருக்கவில்லை என்ற எந்த அடிப்படையில்  முடிவு செய்தீர்கள்? 
இந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்ட விடயங்கள் அவர் குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் வைத்து தான் விமர்சிக்கப்படுகின்றது. திலீபனின் நினைவேந்தல்களை இலங்கை அரசு தடுத்துக் கொண்டு இருக்கும் வேளையில், நினைவேந்தல்களை செய்ய முற்படும் தரப்பினரைப் பார்த்து இவர்கள் முன்னர் இப்படி இப்படியான விடயங்களை செய்தார்கள் என்று பழைய விடயங்களை குறிப்பிடுவதன் நோக்கத்தினை இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது. 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

நிழலி, அவர்கள் கொலைகள் செய்த போது மனக்கிலேசம்/வருத்தம் அடைந்தார்களா என்று அறியேன். ஆனால், சொல்லப் பட்ட கொலைகள் நடந்தவையே, இவை இரகசியமே அல்ல! என் கருத்து, அதை எப்போது பேசினாலும் ஏற்றுக் கொள்ளும் நிலை செய்தவர்களுக்கும் அவர்களை ஆதரிப்போருக்கும் இருக்க வேண்டும் என்பதே! அந்த நிதானத்தை இங்கே பல கருத்துகளில் காணவில்லை.

இங்கே, ஒரு குறிப்பிட்ட தரப்பைப் பற்றிப் பேசும் போது மட்டும் பழசைப் பேசுதல் கூடாது என்ற நிலையும், இன்னொரு தரப்பைப் பற்றி எப்போதும் பழசைப் பேசலாம் என்ற கருத்தும் இருக்கிறது! என் நிலை, எல்லோருடைய பழையதையும் பேசி பேசுவதை சகஜமாக்குங்கள் என்பதே!

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.