Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நினைவேந்தல் உரிமை குறித்து இன்று பாராளுமன்றில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


Recommended Posts

 

நினைவேந்தல் உரிமை குறித்து இன்று பாராளுமன்றில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று சமர்ப்பிக்கவிருந்த எழுத்துமூல கேள்விக்கான அனுமதியை சபாநாயகர் தடை செய்தமையை எதிர்த்து பாராளுமன்றில் கஜேந்திரகுமார் -
தினேஸ் குணவர்தன ,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் குறுக்கீடுகளுக்கு பதில் வழங்கியபடி தமிழர் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்

 

கஜேந்திரகுமாருக்குத் தென்னிலங்கை நா.உறுப்பினர்கள் சபாநாயகர் மூலமாக முட்டுக்கட்டை போட்ட வேளையில் சுமந்திரன் குறுக்கிட்டு சட்ட ஆதாரங்களை சாதுரியமாக முன்வைத்து கஜேந்திரகுமாரின் உரிமைக்காக வாதாடினார்!

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்தி.  தமிழர் ஒற்றுமையாக உதவுவது மிகவும் நல்ல செயல்.  சுமந்திரன் அண்ணாவிற்கு ஒரு பச்சை!

  • Like 1
Link to post
Share on other sites
24.09.2020 அன்று பாராளுமன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட இருந்து நீதியற்ற முறையில் சபாநாயகரால் தடை செய்யப்பட்ட எழுத்து மூல கேள்வி நேர சமர்ப்பணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு
தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் உரையாற்றுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேற்றய தினம் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளைச்சட்டம் 27 (2) ,ன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் உரையாற்ற முடியும். ஆந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர அனுமதி மறுத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் உணர்வுகளை புண்படுத்தும் செயலும் உரிமைகளை முற்றாக மீறும் செயலும் என்ற அடிப்படையில் குறித்த மேற்படி நிலையியல் கட்டளையின் பிரகாரம் உரையாற்றுவதற்கு முன் அனுமதி கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சமர்ப்பித்திருந்த கோரிக்கையை நீதி மன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விடயம் என்று கூறி உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தியாகி திலீபன் தொடர்பாக உரையாற்றுவதற்காக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை முழுவிபரம் வருமாறு.
//செப்ரெம்பர் 26ம் திகதி தியாக தீபம் திலீபன் என அழைக்கப்படும் திரு. இராசையா பார்த்திபன் அவர்களது 33வது ஆண்டு நினைவேந்தல் தினமாகும்.
அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அரசியற் பொறுப்பாளராக இருந்தவர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கையளித்து நிராயுதபாணிகளாக இருந்தசமயம் அவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினார். இந்திய அரசாங்கம் தனது நல்லெண்ண முயற்சிகளை உபயோகித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுத்து தமிழ்மக்கள் எதிர்நோக்கம் அன்றாடப்பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுக்கவேண்டுமென ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டார்.
செப்ரெம்பர் 15ம் திகதி ஆரம்பித்த அவரது உண்ணாநிலைப் போராட்டம் 26ம் திகதி அவரது வீரச்சாவுடன் நிறைவுக்கு வந்தது. அவரது போராட்டமானது அமைதி வழியிலான அதியுச்சமான தியாகமாக உலகத் தமிழர்களால் போற்றப்படுகிறது.
கடந்த 32 வருடங்களாக இலங்கையில் வாழும் தமிழர்களும் அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து வருகிறார்கள். போர் நடைபெற்றுவந்த காலத்திலும், 2015ம் ஆண்டுக்குப்பின்னரும் , இந்நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிறிலங்காப் படையினர் அவ்வப்போது இந்நிகழ்வினைக் குழப்புவதற்கு எத்தனித்தபோதிலும், மக்கள் தாமாக முன்வந்து இந்நிகழ்வினை முன்னெடுத்து வருகிறார்கள். இருப்பினும் முன்னர் நீதிமன்றம் மூலமாக தடையுத்தரவினைப் பெறும் முயற்சியில் காவற்துறையினர் ஈடுபட்டதில்லை.
ஆனால் இம்முறை நீதிமன்ற தடையுத்தரவை பெறுமாறு தமக்கு அரசாங்கத்தின் அதி உயர்பீடத்திலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, இத்தடையுத்தரவை என்னிடம் கையளிப்பதற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸ் அதியட்சகர் குறிப்பிட்டிருந்தார்
.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலின் இறுதி நாள் செப்டம்பர் 26 ம் திகதி வருகின்றது. இந்த இறுதி நேரத்திலாவது, அடிப்படை மனிதவுரிமைகளின் அடிப்படையில் நினைவு கூருவதற்கான தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை வழங்குமாறு கோருவதற்கு இவ்விடயத்தை நான் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.
தியாகதீபம் திலீபன் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் அவரை நினைவுகொள்ளும் நிகழ்வு நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எனக்கூறி இத்தடையுத்தரவு நியாயப்படுத்தப்படுகிறது.
நினைவுகூரும் நிகழ்வுகள் சமாதானத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுமே தவிர ஒருபோதும் சமாதானத்துக்கு குந்தகமாக அமையப்போவதில்லை என்பதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
1994ம் ஆண்டு சன்னா பீரிசுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் நீதியரசர் அமரசிங்க மேற்காட்டிய அவதானத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
“வரையறைகளுக்கு உட்படாத கருத்துப் பரிமாற்றம், அவை எந்த அடிப்படைகளுக்கு முரணாகவோ, குழப்பம் விளைவிக்கக்கூடியதாவோ அல்லது மக்களில் ஒருசாராருக்கு உடன்பாடில்லாதாக இருந்தாலும், உண்மை வெளிக்கொணரப்படுமாயின் அவை அனுமதிக்கப்பட வேண்டும். பேச்சுரிமை என்பது பொதுவில் ஏற்றுக்கொளள்ளப்பட்ட கருத்துகளை தெரிவிப்பது என மட்டுப்படுத்த முடியாது.”
இவ்விடயத்தில் இலங்கையின் மனிதவுரிமை ஆணைக்குழு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு 2017ம் ஆண்டு ஜுன் 7ம் திகதி எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“30வருட போருக்குப்பின்னர் தற்போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் வகையில் இலங்கை செயற்பட்டுவருகிறது. இம்முயற்சியில் இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைத்துச் சமூகங்களுக்கும் இடமளிக்கவேண்டும். ஆதலால் நினைவுகூருவது நல்லிணக்க முயற்சிகளில் முக்கிய பங்களிப்பினை வகிக்கின்றது. இலங்கையில் போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூருவதற்காக நாங்கள் பல நினைவுச்சின்னங்களை அமைத்துள்ளோம். அதுபோன்று தமது குடும்ப உறுப்பினர்களையும், அவர்களது அன்புக்குரியவர்களயும் நினைவுகூருவதற்கு நினைவுச்சின்னங்களை அமைப்பதற்கு எல்லாச் சமூகங்களுக்கும் உரிமையுள்ளது. இறந்தவர் விடுதலைப்புலிகள் இயக்த்தைச் சேர்ந்தவர் எனக்காரணங்காட்டி அவரை நினைவுகூர்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்க முடியாது. அவர்களது அரசியல்நிலைப்பாடு எதுவாயிருப்பினும் இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு உரிமையுள்ளது. ஆணைக்குழுவின் பார்வையில், தங்களது உறவுகளை நினைவுகூர அனுமதிப்பதன் மூலம் இலங்கைத்தீவின் மக்களாக தமது உரிமையை நிலைநாட்டமுடிகிறது உணர்வினை அவர்களுக்கு வழங்கும் எனக் கருதுகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சியில் இது ஒரு பகுதியாக அமைகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தை மறுப்பது இனங்களுக்கிடையிலான பிளவினை மேலும் அதிகரிக்கவும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்புவதாகவுமே அமையும்.”
கடந்தகாலத்தில் இவ்விடயம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு உள்ளாக்கியிருந்தனர். 1971ம் ஆண்டு நடைபெற்ற ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியை நினைவுகூரும்விதமாக “ஏப்பிரல் வீரர்கள்’ எனவும், 1989ம் நடைபெற்ற ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியை நினைவுகூரும்விதமாக ‘நொவெம்பர் வீரர்கள்” எனவும் அவர்களது தலைவர் ரோகண விஜேவீரவினதும் மற்றைய சகாக்களினதும் இறப்பை நினைவுகூருகிறார்கள்.
எல்லாவற்றிற்கும்மேலாக உண்மை, நீதி மற்றும் மீளநடவாமையை உறுப்படுத்துதல் போன்ற விடயங்களிற்கான ஐ.நா. சபையின் சிறப்பு ஆணையாளர் அவரது A/HRC/45/45 என இலக்கமிடப்பட்ட அறிக்கையில் நிலைமாறுகால நீதியை அடையும் முயற்சியில், நினைவுகொள்வது என்பது ஐந்தாவது தூணாக அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளதாவது:
“பாரிய மனதவுரிமை மீறல்களுக்கு உள்ளான, பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்த சமூகங்கள் நினைவுகொள்வதற்கான உரிமை என்பது சர்வதேச மனிவுரிமைச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை பொருணமிய விடங்களைக் காட்டியோ அரசியல் மற்று நடைமுறைகளைக்காட்டியோ, அல்லது நிலைமாறு கால நீதிவிடயத்தில் இதர செயன்முறைகளைக்காட்டியோ சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் விலக்கிவிட முடியாது.”
அவ்வறிக்கையில் 100வது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்து. “நினைவுகொள்வதனை தவிர்த்துவிட்டு, உண்மை, நீதியை கண்டறிதல், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றை முழுமைப்படுத்த முடியாது. மீளநடவாமையையும் உறுதிப்படுத்த முடியாது.”
110வது பந்தியில், “போருக்குப் பின்னரான காலத்தில், நினைவுகூருதலினால் ஏற்படும் பயன் தங்களது வன்முறை நிறைந்து கடந்தகாலத்தினை உணரந்துகொள்வதற்கு மற்றவர்கள் மீது பழிவாங்கும் உணர்வினைத் தவிர்ப்பதாகவும், முன்னைய பிளவுகளை சரிசெயவ்வதற்கும் உதவும்.
தமிழ் மக்களின் நினைவேந்தல்கள் காலாகாலமாக அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஏனைய மக்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் கூட மதிப்புகொடுத்து அவற்றிற்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காமலும் நடாத்தப்படுகின்றவை .
சிங்கள தேசத்தின் 80 %மான ஆதரவைப்பெற்று அவர்களின் பெரும் செல்வாக்குடன் வந்திருக்கின்ற இந்த ஒரு அரசாங்கம், தமிழ்
மக்களின் உரிமைகள் என வரும்போது எதற்காக ஒரு பாதுகாப்பின்மையை பயத்தை உணர்ந்து இந்த நினைவேந்தல்களை தடைசெய்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
இந்த வகையில் இன்னும் மீதம் இருக்கும் மூன்று நாட்களாவது தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்க சிறிலங்கா காவல்துறைக்கு பணிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்ளுமாறு இந்த அவையில் இருக்கும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
Image may contain: 1 person, suit
 
 
 
 
 
 
  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடனட்டையை பாவிப்பதில் ஆரம்பத்தில் தயக்கமும், பின்னர் சரியான திட்டமிடல் இல்லாதமையால் கடன் சுமையும் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அனுபவங்கள் தந்த பாடங்களால் சரியான திட்டமிடல்களுடன் கடனட்டையை பாவிக்க தொடங்கி சில வருடங்களாக சரியான விதத்தில் பாவிக்கின்றேன்.  மருது மாதிரி நானும் மாதத்துக்கு 100 டொலர் வரைக்கும் தான் பணத்தாள்களை பயன்படுத்தி செலவு செய்வது. மிச்சமெல்லாம், கடனட்டையில் தான். அதே நேரத்தில் அப்படி வாங்குவனவற்றுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலையையும் ஏற்படவிடுவதில்லை.கடனட்டையால் வரும் Rebate மற்றும் சேகரிக்கும் points களைக் கொண்டு புது வருட ஆரம்பத்தில் புதிய பொருட்களை வாங்குவதும் உண்டு. கனடாவில் 1 விதத்தில் இருந்து 4 வீதம் Rebate கொடுக்கும் கடனட்டைகளையும் பெற முடியும்.இவற்றை சரியாக பயன்படுத்தினால் வருட இறுதியில் நல்ல தொகை வந்து சேரும்.
    • கம்யூனிஸமா? நாஸிசிசமா? இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று என்னைக் கேட்டால், நான் கம்யூனிசம் என்று தான் சொல்வேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. 1937 ல் சேர்ச்சில் இப்படி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடான பிரிட்டனை ஆட்சி செய்திருந்த சேர்ச்சில் கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரே காரணத்தோடு தான். கம்யூனிஸம், நாஸிஸம் இரண்டையும் அவர் ஒரே வரிசையில் வைத்து தான் ஒப்பிடுகிறார். சாம்பர்லைன் ஹிட்லரை ஆதரிப்பதை தொடக்கம் முதலே சேர்ச்சில் எதிர்த்து வந்திருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். நாம் இணைய வேண்டியது சோவியத்துடன் என்று 1938 முதலே சேர்ச்சில் சொல்லி வந்திருக்கிறார். ஐரோப்பாவை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து வந்தது. பிரான்ஸை வசப்படுத்தியது. பிரிட்டனை தாக்கியது என்று ஹிட்லரை வெறுக்க பல்வேறு காரணங்கள் சேர்ச்சிலிடம் இருந்தன. கம்யூனிஸத்தை சேர்ச்சில் எக்காலத்திலும் ஆதரித்ததில்லை. சோவியத் எதிர்ப்பை அவர் எந்த நோடியிலும் கைவிட்டதும் இல்லை. என்றாலும் ஹிட்லரை வீழ்த்துவதற்கு சோவியத்துடன் இணைந்தாகவேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு தயக்கம் இருந்ததில்லை. ஜேர்மனி, சோவியத் மீது போர்பிரகடனம் செய்த போது சேர்ச்சில் ரேடியோவில் அன்றைய தினமே அறிவித்தார். கம்யூனிஸத்தைப் பற்றி நான் இதுவரை சொல்லி வந்த கருத்துக்கள் எதிலும் மாற்றம் இல்லை. ஆனால், சோவியத் இப்போது தாக்கப்பட்டதைப் பார்க்கும் போது முன்னால் சொன்னவை அனைத்தும் மறைந்துவிட்டன, ஜுலை 12, 1941  அன்று பிரிட்டனும் சோவியத்தும் ஒப்பந்தம் செய்துகொண்டன, போர்க் காலத்தில் நமக்குள் உதவி செய்து கொள்ளலாம் என்பது அடிப்படை சாரம்சம்.   பேர்ல் துறைமுக தாக்குதல் கிழக்கு முனையில் சோவியத்திற்கும் ஜேர்மனிக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், டிசம்பர் 7, 1941 அன்று ஜப்பான், பேர்ல் துறைமுகத்தை (Pearl Habour) தாக்கியது. ஹவாயில் இருந்த இந்த துறைமுகப்பகுதியில் தான் அமெரிக்கா தனது ராணுவத் தளத்தை அமைத்திருந்தது. இது நாள் வரை ஒதுங்கி வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவை பேர்ல் துறைமுகத் தாக்குதல் உலுக்கியெடுத்தது.  பதினெட்டு மாதங்களுக்கு முன்பே ரூஸ்வெல்ட் அமெரிக்கப்படைகளை பேர்ல் துறைமுகத்தில் குவித்து வைத்திருந்தார். ஜப்பானின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தப் படை உதவும் என்று அமெரிக்கா நம்பியது. ஜப்பான் சீனாவுடன் தொடர்ச்சியான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயம் அது. போரைச் சமாளிக்க எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மூலப்பொருட்கள் ஜப்பானுக்கு குறைவின்றி தேவைப்பட்டன. இதை உணர்ந்து கொண்ட நேச நாடுகள் ஜப்பானுடனான வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டன. ஜுன் 1941 ல் இந்த வர்த்தக உறவு முடிவுக்கு வந்தது. எண்ணெய் வளமிக்க பிரதேசங்களான கிழக்கிந்திய தீவுகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றுவது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு ஜப்பான் வந்து சேர்ந்தது. ஐரோப்பா கொடுக்காவிட்டால் என்ன? எமக்கு வேண்டியதை நாங்கள் பறித்துக்கொள்வோம். ஜப்பான் இப்படித்தான் சிந்திக்கும் என்று அமெரிக்காவுக்கு தெரியும். ஆனால் எப்படியாவது தடுத்து நிறுத்திவிடலாம் என்று நம்பியது அமெரிக்கா. டிசம்பர் 7, 1941  காலை எட்டு மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது. அமெரிக்க கடற்படையின் நான்கு கப்பல்கள் அழிக்கப்பட்டன. 3 ஆயுதம் தாங்கிய க்ரூஸர் கப்பல்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. 188 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். தன் மீது தொடுக்கபட்ட மாபெரும் போராகவே அமெரிக்கா இதை எடுத்துக் கொண்டது. எப்படி இதை அமெரிக்கா அனுமதிக்கலாம் என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பின. அடுத்த நாள். ஹாங்காங், மலேசியா, ஷங்காய் மூன்றின் மீதும் போர்ப்பிரகடனம் செய்தது ஜப்பான். ஹிட்லரே அடிபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. கூட்டணியில் இருந்த கோலிக்குண்டு அளவுக்கே உள்ள ஜப்பான் எத்தனை ஆர்ப்பாட்டமாகத் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. மறுநாள், அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பான் மீது போர்ப்பிரகடனம் செய்தன. முன்று தினங்கள் கழித்து டிசம்பர் 11ம் திகதி ஹிட்லர் அமெரிக்கா மீது போர்ப்பிரகடனம் செய்தார். அது குறித்து அவர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி இது தான். ஒப்பந்த‍த்தின்படி, ஜேர்மனியும் இத்தாலியும் அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் எதிராக போரிட தீர்மானித்துவிட்டோம். ஜப்பானுக்கு ஆதரவாக நாங்கள் போர்ப்பிரகடனம் செய்கிறோம். ரூஸ்வெல்டின் கொள்கை உலகைக் கட்டியாள வேண்டும் என்பது தான். இத்தாலி ஜேர்மனி, ஜப்பான் மூன்றையும் எப்படியாவது அடக்கியாளவேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் விரும்புகின்றன. உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்று இந்த இரு சர்வாதிகார அரசுகளும் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதை ஜேர்மனி அனுமதிக்காது. இது ஹிட்லரின் முக்கிய தவறு. ஜப்பானே தாக்க ஆரம்பித்துவிட்டதே நாம் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று ஹிட்லர் சிந்தித்திருக்க‍க்கூடும். சோவியத்துடன் ஏற்படும் தொடர் தோல்விகளில் இருந்து விடுபட இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் போன்ற பலம் மிக்க நாடுகளோடு மோதிய அவர் அமெரிக்காவை நேரிடையாக பகைத்த‍து மிகப்பெரிய தவறு. இதுவரை போரில் நேரடி பங்காளராக இல்லாமல் பார்வையாளராக  பிரிட்டனுக்கு உதவிகள் மட்டும் செய்து வந்த‍ அமெரிக்காவை பிரிட்டன் பக்கம் வலுக்கட்டாமாக தள்ளிய ஹிட்லரின் செயல் தோல்வியை நோக்கிய தனது அடிகளில் ஒன்று என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அமெரிக்காவின் வருகை பிரிட்டனை உற்சாகம் கொள்ளச் செய்தது உண்மை. பிரான்ஸின் வீழ்ச்சிக்கு பிறகு தோதான ஒரு கை பிரிட்டனுக்கு கிடைக்கவில்லை. ஜேர்மனியுடனான போரில் கணிசமான இழப்புக்களை பிரிட்டன் சந்தித்திருந்த‍து. இந்நிலையில் அமெரிக்காவோடு கைகோர்த்துக்கொள்வது அற்புதமான வாய்ப்பு. ஜப்பானின் சமீபத்திய அவதாரம் அச்சமூட்டியது. முஸோலினியும் தன்னால் முடிந்தவரை அங்கே , இங்கே என்று மோதிக்கொண்டிருக்கிறார். இந்த மூன்று நாடுகளும் ஒரணியில் நிற்பது பிரிட்டனுக்கு அச்சுறுத்தல். அதோடு ஐரோப்பாவுக்கும். ஜப்பான் விரைவாக சில வெற்றிகளை குவித்த‍து. பேர்ல் துறைமுகத் தாக்குதல் நடந்த இரண்டாவது தினம், பிரிட்டனின் இரு பெரும் கப்பல்களை (Prince of Wales, the Repulse) ஜப்பான் தகர்த்தது. அடுத்த நாள் பர்மாவை நோக்கி முன்னேறியது. டிசம்பர் 26 ம் திகதி ஹாங்காங் ஜப்பானிடம் சரணடைந்தது. ஜனவரி 1942 ல் டச்சு கிழக்கு இந்திய தீவுகளை பாய்ந்து  தாக்கி கையகப்படுத்திக் கொண்டது. அங்கிருந்த எண்ணெய் வளங்களை கைப்பற்றி கொண்டது. பெப்ரவரி 15, 1942 அன்று பிரிட்டனின் எதிர்ப்பையும் மீறி மலேயா முழுவதையும் ஜப்பான் கைப்பற்றியது. கூடவே சிங்கப்பூரில் இருந்த மிகப்பெரிய கடற்படைத் தளத்தையும் சுற்றிவளைத்து தனதாக்கிக்கொண்டது. ஏப்ரல் 1942 ல் இந்திய எல்லைக்கு அருகே வந்து ஜப்பான் நோட்டம் விட்டபோது பிரிட்டன் உச்சக்கட்ட அதிர்ச்சியை சந்தித்தது. அடுத்து ஆஸ்திரேலியா தான் என்று பேச்சு அடிபட்டது.   பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உறவு மேலும் வலுவடைந்தது. நிதி உதவியும் ஆயுத உதவியும் மட்டுமே இதுவரை அளித்து வந்த அமெரிக்கா பிரிட்டனுடன் ஒரு தொழில் பார்ட்னராக கைகோர்த்துக் கொண்டது. டிசம்பர் 22, 1941 முதல் ஜனவரி 14 1942 வரை வாஷிங்ரனில் நடைபெற்ற மகாநாட்டின் போது, பொதுவான தலைமைக்குழு (Combined Chiefs of Staff committee) ஒன்றை உருவாக்க முடிவு செய்தனர். அமெரிக்கா பிரிட்டன் இரண்டும் இணைந்து போரிடுவதற்கான அடித்தளம் இது. எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்படும்? என்னென்ன உபகரணங்கள், மூலப்பொருட்கள் வேண்டியிருக்கும்? தகவல் தொடர்பை எப்படி முறையாக பயன்படுத்திக்கொள்வது? உளவு நிறுவனங்களிடம் இருந்து எப்படி கூட்டாக தகவல்கள் கேட்டறிவது? போக்குவரத்து ஏற்பாடுகளை எப்படிக் கவனிப்பது? போருக்கு தேவைப்படும் அத்தனை விஷயங்கள் பற்றியும் இந்த கமிட்டி முடிவு செய்தது. முதலில் ஜேர்மனியை கவனிப்பது என்று திட்டமிட்டார்கள். சோவியத் மீது ஜேர்மனி போர் தொடுத்திருக்கும் இந்த சமயத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோம். இனிமேலும் ஜேர்மனியால்(என்றால் அச்சுநாடுகளால்) ஐரோப்பாவிற்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி செய்வோம். ஜேர்மனியை உடனே தாக்குவோம். இது அமெரிக்காவின் நிலைப்பாடு. பிரிட்டன் தயங்கியது. ஜேர்மனியை தாக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் காலம் கனியட்டுமே. நம்மிடம் உள்ள ஆயுதங்கள் போதாது. ஆட்களும் போதாது. நம் பலத்தை அதிகப்படுத்திக்கொள்வோம். பிறகு தாக்குவோம். பர்மா, பிலிப்பைன்ஸ், மலேசியா, டச்சு கிழக்கிந்திய தீவுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை ஜப்பான் ஏப்ரல்1942 ல் கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றிவிட்டது. எதிர்ப்பட்ட நேசநாடுகளின் படைகளையும் விட்டுவைக்கவில்லை. தெற்கு சீன கடல், ஜாவா கடல், இந்து மகா சமுத்திரம் ஆகிய கடல் பகுதிகளை ஒட்டி அமைக்கபட்ட பல தளங்களைக் கைப்பற்றினார்கள். நேச நாடுகளின் தளம் அமைந்திருந்த டார்வின்(ஒஸ்ரேலியா) மீது குண்டுகள் வீசப்பட்டன. அட, ஜேர்மனியைப் போலவே நாமும் பெரிய ஆள் தான் என்று ஜப்பான் பெருமிதப்பட்டுக்கொண்டது. ஜேர்மனியும் ஜப்பானும் ஐரோப்பாவை கலக்கிக்கொண்டிருந்த போது, இத்தாலி சாய்வு நாற்காலியில் படுத்துக்கிடந்தது. கடல் மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் தாக்கி சிசிலியை கைப்பற்றிவிட்டது நேசப்படை. ஜூலை 9, 1943 ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 17 ல்  முடித்துக்கொண்டார்கள். இத்தாலியப்படை ஜேர்மனியப் படை இரண்டையுமே தாக்கி வெற்றிபெற்றிருந்தது நேசப்படை. கையோடு இத்தாலியை நோக்கி நகரவும் ஆரம்பித்தது. வானத்தில் இருந்து தினம் தினம் குண்டு மழை, நகரங்கள் அலுவலகங்கள், வீடுகள், வீதிகள் குலுங்கி வெடித்தன, மிச்சமிருந்த தொழிற்சாலைகளும் மூலப்பொருட்களை கொண்டு வர முடியாததால் மூடியே கிடந்தன. கரி இல்லை. எண்ணெய் இல்லை. சாப்பாடு இல்லை. மருந்து மாத்திரைகள் இல்லை. எனதருமை இத்தாலி மக்களே, நாம் பீடு நடை போட்டு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் பொறுங்கள். இது போன்ற முஸோலினியின் வழக்கமான பிரச்சாரத்தை மக்கள் உதாசீனம் செய்ய ஆரம்பித்தனர். வாடிகன் ரேடியோவையும் லண்டன் ரேடியோவையும் திருகி உண்மை நிலவரம் அறிந்து கொண்டார்கள். ஆம், இத்தாலி தோற்றுத்தான் போகப்போகிறது.
    • இந்த திரியில் நான் கடனட்டை பற்றி தெரிந்து கொன்டதை விட இன்னுமொரு மனதை பாதிக்கும் விடையத்தையும் அவதானித்தேன்.என்ன தான் அறிவாலும் வயதாலும் வளர்ந்தாலும் இன்னும்  கண்ணைக் கட்டி கோவம் பாம்பு வந்து கொத்தும் என்ட மாதிரி சின்னப்பிழைத்தனமான  விடையம் தான் அது.திருந்துவார்கள் என நினைக்கிறேன்.
    • ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........  எந்த ஒரு விஷயம் ஆயிரக்கணக்கான கவலைகளை மறக்க வைக்கிறதோ அதுவே உண்மையான சந்தோசம்.! அது எனக்கு நீதான் காஜா !
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.