Jump to content

வணக்கம் - அன்புடன், பராபரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பராபரன் said:

யாழ் களத்திலே, ஒரு தனிக்காட்டுச் சிங்கம் போல் சுற்றிவரும் கோசன் அண்ணாவுடன் மோதி விளையாடிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கிறன்..

எக்ஸ்கியுஸ்மி, சண்டயில கிழியாத சட்டை எங்க சார் விக்குது...😃😃

கோசான் இஞ்சை வந்திட்டு டெய்லி கிழிஞ்ச சட்டையோடை வீட்டை திரும்பிப்போற  விசயம் இவருக்கு ஏன் தெரியேல்லை  எண்டது யாமறியோம் பராபரமே.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பராபரன் said:

யாழ் களத்திலே, ஒரு தனிக்காட்டுச் சிங்கம் போல் சுற்றிவரும் கோசன் அண்ணாவுடன் மோதி விளையாடிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கிறன்..

எக்ஸ்கியுஸ்மி, சண்டயில கிழியாத சட்டை எங்க சார் விக்குது...😃😃

🤣 எனக்கு இந்த வின்னர் படத்தில் வாற அண்ணன் தம்பி தான் நினைவில் வருகுது.

கிழியாத சட்டையை பற்றி தெரியாது, ஆனால் நாம் தமிழர் திரியில் பல கிழிஞ்ச சட்டைகள் தொங்குது🤣

7 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிய மோசமா கிடக்கு போட்டு தள்ளிவிடுங்க.

சின்னத்தம்பி......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 எனக்கு இந்த வின்னர் படத்தில் வாற அண்ணன் தம்பி தான் நினைவில் வருகுது.

கிழியாத சட்டையை பற்றி தெரியாது, ஆனால் நாம் தமிழர் திரியில் பல கிழிஞ்ச சட்டைகள் தொங்குது🤣

😂கலியாண வீட்டிலை மாப்பிளை பொம்புளைக்கு ஐயர் வெளியிலை கூட்டிக்கொண்டுபோய் தெரியாத வெள்ளியை காட்டுவார்  (அருந்ததி பார்த்தல்). அவையும் ஓம் தெரியுது எண்டுட்டு  விழுந்து கும்புடுவினம்.
அது போலை நம்ம தலயும் அந்தா பார் தமிழர் திரியிலை நான் கிழிச்சன் புடுங்கினன் கிழிஞ்ச சட்டை காயுது தொங்குது நொண்டிக்கொண்டு நடக்கினம்  எண்டு  பந்தாகாட்டுறார். அவர்ரை ராகம் தாளம் பல்லவிக்காரரும் ஓமோம் எண்டு தலையாட்டுவினம்.

ஆனால் நம்ம தல ஒவ்வொரு இடத்திலையும் அடிவாங்கியே  கந்தலாகி கூந்தலாகி இரத்தம் சொட்டச்சொட்ட வெளியிலை போறத இந்த சமுதாயமே பார்த்து சிரிக்குதையா   😂                    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அண்ணர் கருத்து களத்திலதான் எழுதுறத தலைகீழா விளங்கிறையள் எண்டு பார்த்தால்... இங்கேயுமா😂

நான் சொன்ன கிழிந்த சட்டை என்னுடையதும் ராகம், தாளம் பல்லவி, அனு பல்லவி, சரணம் ஆக்களுடைது.

உங்கட சட்டையை கிழிக்கேலுமே( ஒண்டும் போடாமல் வந்தால் எப்படி கிழிக்கிறது🤣).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

உங்கட சட்டையை கிழிக்கேலுமே( ஒண்டும் போடாமல் வந்தால் எப்படி கிழிக்கிறது).🤣

சீ

கோவணம் எப்பவும் இருக்கும்  🤣🤣🤣

(பகிடிக்கு அண்ணை)👃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

சீ

கோவணம் எப்பவும் இருக்கும்  🤣🤣🤣

(பகிடிக்கு அண்ணை)👃

ஐயோ அண்ணா 😁 நான் மேல் சட்டயை மட்டும்தான் சொன்னான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

சீ

கோவணம் எப்பவும் இருக்கும்  🤣🤣🤣

(பகிடிக்கு அண்ணை)👃

பகிடியெண்டாலும் சரி வெற்றிக்கு எண்டாலும் சரி நான் கோவிக்க மாட்டன் விசுகர் 😁

ஆனால் மற்றவருக்கு இண்டையிரவுக்கு இருக்கு கூத்து 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பகிடியெண்டாலும் சரி வெற்றிக்கு எண்டாலும் சரி நான் கோவிக்க மாட்டன் விசுகர் 😁

ஆனால் மற்றவருக்கு இண்டையிரவுக்கு இருக்கு கூத்து 🤣

கு.சா அண்ணர், ஏன் பேயுலாவுற அதிகாலை நேரத்தில முழிச்சிருக்கிறனீங்கள்? உடல் நலத்திற்கு கொஞ்சம் பாதகமான விடயம். கேக்க வேணுமெண்டு நினைச்சன் கனகாலமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தேத்தண்ணி குடித்துக்கொண்டு இதை வாசித்து

அப்படியே சிரித்து

உடுப்பெல்லாம் தேத்தண்ணி

(கடையில நிக்கிறதுகளும் சேர்ந்து  என்னைப்பார்த்து சிரிக்குதுகள்🤣 )

நன்றியண்ணா : கன காலம் இப்படி  சிரிச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

கு.சா அண்ணர், ஏன் பேயுலாவுற அதிகாலை நேரத்தில முழிச்சிருக்கிறனீங்கள்? உடல் நலத்திற்கு கொஞ்சம் பாதகமான விடயம். கேக்க வேணுமெண்டு நினைச்சன் கனகாலமா

பாதகமான விடயம்  என்று எனது உடம்பே உணர்த்துகின்றது. இருந்தாலும் ஒரு மனிதனுக்கு 7- 8 மணித்தியாலங்கள் தூக்கம் போதுமென சொல்கிறார்கள்.அதனை நான் பெரும்பாலும் கடைப்பிடிக்கின்றேன். அதிகாலை 4- 11 வரை

குறிப்பிட்ட நேரத்தில் உறங்கவேண்டும் என சொல்கிறார்கள் உண்மையா?
இரவு10- 5/6 மணி உகந்தது என்கிறார்கள் உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

பாதகமான விடயம்  என்று எனது உடம்பே உணர்த்துகின்றது. இருந்தாலும் ஒரு மனிதனுக்கு 7- 8 மணித்தியாலங்கள் தூக்கம் போதுமென சொல்கிறார்கள்.அதனை நான் பெரும்பாலும் கடைப்பிடிக்கின்றேன். அதிகாலை 4- 11 வரை

குறிப்பிட்ட நேரத்தில் உறங்கவேண்டும் என சொல்கிறார்கள் உண்மையா?
இரவு10- 5/6 மணி உகந்தது என்கிறார்கள் உண்மையா?

7/8 மணி  நேரத்தூக்கம் முக்கியம். ஆனால், உங்கள் உடலை எந்தக் காலப் பகுதியில் 7/8 மணி நேரம் என்று பழக்கப் படுத்திக் கொள்வது சாத்தியம். இந்த தூங்கும் காலப்பகுதியை அடிக்கடி மாற்றினால் உடல் நலப்பிரச்சினை வரும். வேலை காரணமாக உங்கள் தூங்கும் நேரம் இப்படி இருந்தால் அதற்கேற்ப உடலைப் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக தூங்கும் அறை போதுமானளவு உங்கள் உறக்க நேரம் இருட்டாக இருக்க வேண்டும், விழித்திருக்கும் நேரம் அதிக கோப்பி, அதிக சீனி கொண்ட உணவுகள் என்பன குறைக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பகிடியெண்டாலும் சரி வெற்றிக்கு எண்டாலும் சரி நான் கோவிக்க மாட்டன் விசுகர் 😁

ஆனால் மற்றவருக்கு இண்டையிரவுக்கு இருக்கு கூத்து 🤣

கோஷானை கடைசிய முகம் பாக்கிறவை பாருங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

7/8 மணி  நேரத்தூக்கம் முக்கியம். ஆனால், உங்கள் உடலை எந்தக் காலப் பகுதியில் 7/8 மணி நேரம் என்று பழக்கப் படுத்திக் கொள்வது சாத்தியம். இந்த தூங்கும் காலப்பகுதியை அடிக்கடி மாற்றினால் உடல் நலப்பிரச்சினை வரும். வேலை காரணமாக உங்கள் தூங்கும் நேரம் இப்படி இருந்தால் அதற்கேற்ப உடலைப் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக தூங்கும் அறை போதுமானளவு உங்கள் உறக்க நேரம் இருட்டாக இருக்க வேண்டும், விழித்திருக்கும் நேரம் அதிக கோப்பி, அதிக சீனி கொண்ட உணவுகள் என்பன குறைக்கலாம்.  

உங்கள் ஆரோக்கியமான பதிலுக்கு நன்றி.

இன்னுமொரு கேள்வி. கண்ட கண்ட களிசறை கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை என கொதிக்கப்படாது. வைத்தியர்கள் கடவுள் போன்றவர்கள் என்று ஊரில் சொல்வார்கள். எனவே அதற்கமைய.......
எமது உடலுறுப்புகள் அனைத்தும் சூரிய உதிர்ப்பையும் மறைவையும் வைத்து இயங்குகின்றது என சொல்கிறார்கள். இது உண்மையா? ஆதாவது சூரியன் மறையும் நேரம் உறங்குவதும் சூரியன் உதிர்க்கும் போது  எழும்புவதும்  தான் உடலுக்கு ஆரோக்கியம் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Traditional Chinese Organ Body Clock: Lana Moshkovich, DACM, L.AC: Chinese  Medicine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கோஷானை கடைசிய முகம் பாக்கிறவை பாருங்கோ🤣

மெல்லமாய் கதையுங்கோ.....சனம் உங்கை எட்டுச்செலவுக்கு ரெடி பண்ணப்போகுதுகள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

உங்கள் ஆரோக்கியமான பதிலுக்கு நன்றி.

இன்னுமொரு கேள்வி. கண்ட கண்ட களிசறை கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை என கொதிக்கப்படாது. வைத்தியர்கள் கடவுள் போன்றவர்கள் என்று ஊரில் சொல்வார்கள். எனவே அதற்கமைய.......
எமது உடலுறுப்புகள் அனைத்தும் சூரிய உதிர்ப்பையும் மறைவையும் வைத்து இயங்குகின்றது என சொல்கிறார்கள். இது உண்மையா? ஆதாவது சூரியன் மறையும் நேரம் உறங்குவதும் சூரியன் உதிர்க்கும் போது  எழும்புவதும்  தான் உடலுக்கு ஆரோக்கியம் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Traditional Chinese Organ Body Clock: Lana Moshkovich, DACM, L.AC: Chinese  Medicine

கு.சா, அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன், கடந்த காலத்தை விட்டு விடுங்கள்.

நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கிறது. ஆனால், சூரியன் என்பதை விட ஒளி என்று சொல்லலாம். ஒளியை எங்கள் உடல் உணர்ந்து கொண்டு எங்களுக்குள் ஒரு கடிகாரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கடிகாரம் காரணமாகத் தான் பகலில் விழிப்பு நிலையும் இரவில் உறக்க நிலையும் வருகிறது. மின்சாரம் வருவதற்கு முதல் சூரியனே ஒளியாகப் பழக்கப் பட்டு விட்டதால் மனிதனை சூரிய ஒளி புகாத ஒரு சுரங்கத்தில் அடைத்து வைத்தாலும் அவனது உடல் இந்த விழிப்பு- தூக்க சக்கரத்தை தானே பின் தொடரும். இந்த இயற்கைக் கடிகாரத்தோடு சேர்ந்து இயங்குவதே மிக்க நலம் தரக் கூடியது. ஆனால், எங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களால் எல்லாருக்கும் இது இயலாது. எனவே தான் உடலை இந்தக் கடிகாரத்தில் இருந்து reset செய்து பழக்கப் படுத்தினால், சூரிய உதயம் அஸ்தமனம் என்ற சக்கரத்தில் இருந்து விலகினாலும் உடலை நலமாக வைத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

 ஜஸ்டின்! உங்கள் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.