Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,

வணக்கம்!

ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும் இந்திய வல்லாதிக்கத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைக்க 12 நாட்கள் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த ஈகைப்பேரொளி நம்முயிர் அண்ணன் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு நாளை அனுசரித்துப் போற்றுவதற்குச் சிங்களப் பேரினவாத அரசு ஈழ நிலம் முழுமைக்கும் தடை விதித்திருக்கிறது. காற்றோடு கலந்து நமது மூச்சோடு உலவிக் கொண்டிருக்கிற மாவீரர்களின் சுவாச நெருப்பு நமது நெஞ்சத்துக்குள் கனன்று கொண்டிருக்கிற விடுதலைவேள்விக்கு உரமூட்டி வளர்ப்பதை எந்த அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறையாலும் தடையிட்டு முடக்கிவிட முடியாது.

அடக்குமுறைகள் மூலம் அன்னைத்தமிழினத்தின் பேரெழுச்சியைத் தடுக்க முற்படும் சிங்களப்பேரினவாதத்திற்குப் பாடம் புகட்டவும், உலக அதிகார வர்க்கத்துக்குத் தமிழர்களின் ஓர்மையைப் பறைசாற்றவும் முன்பைவிடப் பன்மடங்குப் பேரெழுச்சியோடு அண்ணன் திலீபன் அவர்களது நினைவேந்தலை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் முன்னெடுத்துப் போற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழரின் பெருங்கடமையாகிறது. உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல் வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது உன்னதத்தியாகத்தின் இறுதி நாளாகத் திகழும் செப்டம்பர் 26, சனிக்கிழமை அன்று அவரது திருவுருவப்படம் வைத்து, மலர் தூவி, சுடரேற்றி காலை 06 மணி முதல் மாலை 06 மணிவரை, 12 மணிநேரங்கள் அந்த ஒப்பற்ற மாவீரனின் ஈகத்தைப் போற்றும் வகையில், உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் உண்ணாநிலையை மேற்கொண்டு அவரது இலட்சியத்தாகத்தை நிறைவேற்றிட உறுதியேற்போம்.

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து,
நாமும் அரைநாள் பசித்திருப்போம்!


– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! - சீமான் பேரழைப்பு

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சுவிஸ் கூட்டாட்சி அரசின் முடிவுகள் சில   சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பெடரல் கவுன்சில் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது:   டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மூடப்படும். பார்கள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட வேண்டும். குழந்தைகளுடன் குடும்பங்களைத் தவிர, அதிகபட்சம் நான்கு பேர் உணவகங்களிலும் பார்களிலும் ஒரு மேஜையில் உட்கார அனுமதிக்கப்படுகிறார்கள் 50 க்கும் மேற்பட்ட நபர்களுடன் அனைத்து நிகழ்வுகளும், 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் விளையாட்டு மற்றும் கலாச்சார ஓய்வு நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. பாராளுமன்றம் மற்றும் சமூக சபைகள் விலக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கையொப்பங்கள் சேகரிப்பு ஆகியவை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன. தனியார் அறைகளில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நிகழ்வுகளுக்கான நபர்களின் எண்ணிக்கை 10 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தின் தொழில்முறை துறையில், பயிற்சி மற்றும் போட்டிகள் மற்றும் ஒத்திகை மற்றும் நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. 16 வயதிற்குட்பட்டவர்களுக்கும் விதிவிலக்குகள் உள்ளன. பல்கலைக்கழகங்களில் நேருக்கு நேர் கற்பித்தல் தடை (நவம்பர் 2 முதல்). முகமூடி தேவையின் விரிவாக்கம்: வசதிகள் மற்றும் வணிகங்களின் வெளிப்புற பகுதிகளிலும் இப்போது ஒரு முகமூடி அணிய வேண்டும். ஒரு முகமூடி தேவை பிஸியான பாதசாரி பகுதிகளிலும் பொருந்தும் மற்றும் பொது இடங்களில் தேவையான தூரத்தை பராமரிக்க முடியாது.   தொகுப்பு: சுவிஸ் தமிழர் தகவல் மையம்.
  • கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை... அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும் என சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவிக்கையில், “உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலைமையை நாம் அனைவரும் அவதானித்து வருகிறோம். நம் நாட்டில் கொரோனா பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதுடன், மரண வீதமும் அதிகரித்து வருகின்றது. இந்தக் கடிதம் எழுதப்படும் வரை 19 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கும் நிலை நம் நாட்டில் உருவாகியுள்ளது. இதுவரை மரணித்தவர்கள் அனைவரும் எரிக்கப்பட்டுள்ளார்கள். உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றில் உயிரிழப்போரை அடக்கவும் எரிக்கவும் அனுமதித்துள்ளன. அவரவர் மத அனுஷ்டானங்களின் அடிப்படையில் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் என அனைத்தும் கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்க அனுமதி வழங்கியுள்ளன. நம் அண்டை நாடான இந்தியாவில் கூட அடக்கம் செய்வதற்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எம்மைவிட தெளிவாக நீங்கள் அறிவீர்கள். ஆனால், நம் நாட்டில் அடக்கம் செய்வதற்கு உரிமை மறுக்கப்பட்டு, கொரோனாவில் உயிரிழப்பவர்கள் எரிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த நடைமுறை இஸ்லாமியர்களாகிய எம்மை மனதளவில் மிக ஆழமாக பாதித்துள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம். இலங்கையில் தற்போது 20வது அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக தாங்கள் மாறியுள்ள நிலையில், இஸ்லாமிய சமூகத்தின் மத உரிமையையும் முஸ்லிம்களின் மனநிலையையும் முழுமையாக கவனத்தில் கொண்டு ஜனாதிபதிக்குள்ள தனித்த நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி மரணித்தவர்களை அடக்குவதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும் என உங்களை அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். தம் உறவுகள் கொரோனாவில் மரணிக்கின்ற நிலையில் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவது என்பது எம் சமூகத்தை மனதளவில் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. உங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உரிமையை மீட்டுத் தரும் போது இந்த சமூகம் உங்களுக்கு நன்றியுள்ளதாக இருக்கும் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/கொரோனாவால்-உயிரிழக்கும-2/
  • மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/மத-வழிபாடுகளில்-ஈடுபடுபவ/
  • கொரோனா பாதிப்பு – சர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த மாதமளவில் சுமாராக 30ஆவது இடத்தில் இருந்த இலங்கை கடந்த சில தினங்களில் சடுதியாக முன்னேறி 112ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்னர் இலங்கையில் கொரோனா பரவல் ஆரம்பமாகிய காலப்பகுதியில் கடந்த ஜுன் மாதமளவில் இலங்கை 100ஆவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-பாதிப்பு-சர்வதேச/
  • கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்ட தகவல் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ், ஆபத்தான நோய்கள் உள்ள சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக சிரேஸ்ட பிரஜைகள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை நாடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இலகுவாக வெற்றிபெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/கொரோனாவால்-உயிரிழந்தவர-2/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.