Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இசையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதன் இந்த பூமியில் வாழும்வரை உங்களை நேசிப்போம் அஞ்சலிகள்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • Replies 74
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலா,  பிறப்பால் நீ  தெலுங்கன் உணர்வால் தீந்  தமிழன்    தமிழை உன் போல் அழகு  செய்தோர் எவருமில்லை உன் உச்சரிப்பில் தமிழ் தாய் உச்சி குளிர்ந்த கணங்களுக்கு கணக்கே இல்லை  

ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏அதி உச்ச மருத்தவ கருவிகளின் அழுத்தங்களினால் அணு அணுவாக இறப்பதை விட நின்மதியாக போய் வாருங்கள் அய்யா.🙏🙏🙏 A great loss to music. The legendary voice falls silent. A humble human be

 • கருத்துக்கள உறவுகள்

குரலிசை நாயகன் எஸ்.பி பாலசுப்பிரமணியம் சகாப்தம் மறைந்தது { 1946 – 2020 } சிறப்பு பார்வை - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு...   கண்ணீர் அஞ்சலிகள். 🙏🏽

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்த காதலின்றி .........! ஆழ்ந்த அஞ்சலிகள் .........! 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான பாடகருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.🙏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தனது பாடல்களால் எங்களை எல்லாம் பல தசாப்தங்களாகக் கட்டிப்போட்ட பாட்டுத்தலைவன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அன்னார் பாடல்கள் காலத்தால் அழியாமல் ஒலிக்கும்.

 

——

குரல் அரசன் எஸ்பிபி காலமானார்!

spacer.png

 

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (74) இன்று பிற்பகல் 1.04 மணிக்குக் காலமானதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீர் பின்னடைவு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபியின் உடல்நிலை நேற்று முதல் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது. இதையடுத்து திரைபிரபலங்கள் எல்லாம் மருத்துவமனைக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். நேற்று இரவு 8 மணிக்குச் சென்ற நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், எஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது என கவலையுடன் தெரிவித்திருந்தார்.

இன்று காலை இயக்குநர் பாரதிராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் எம்ஜிஎம் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில், பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானார் என்று வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மருத்துவமனைக்கு முன்பு எஸ்பிபி மகன் அளித்த பேட்டியில், எம்ஜிஎம் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவின் பாடல்கள் இருக்கிற வரைக்கும் அவர் பெயர் இருக்கும், நீங்கள் எல்லோரும் இருக்கிற வரைக்கும் அப்பா எங்களுடன் இருப்பார். எல்லோருக்கும் நன்றி.. மற்ற தகவல்களை ஒரு மணி நேரத்தில் தெரிவிக்கிறேன் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

எஸ்பிபி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்ததாக இன்று காலை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. எஸ்பிபி மிகப் பெரிய பாடகன், உலகமகா கலைஞன் என்பதையும் தாண்டி என்னுடைய 50 வருட கால நண்பன். என்னால் இந்தத் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளத் தெரியவில்லை. உலகில் உள்ள எல்லோரும் பிரார்த்தனை செய்தோம், எழுந்து வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் பலனளிக்கவில்லை. நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது. அவரைப் போன்ற ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் வாடா போடா என அழைத்துக்கொள்வோம். வருத்தத்தில் என்னால் பேச முடியவில்லை என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

அதுபோன்று இனி பாடல்கள் மூலம் எஸ்பிபி நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார் என்று திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

https://minnambalam.com/public/2020/09/25/27/singer-sp-balasubrahmanyam-passes-away

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அஞ்சலிகள். 🙏

 

 

Edited by பையன்26
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள், ஆத்மா சாந்தியடையட்டும்

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குரல் என்றால் இதுதானென்று பலமுறை உணரவைத்த ஒரு குரலின் சொந்தக்காரர். என் மனதிற்கு பிடித்த ஒரு பாடகர்.ஒரு நல்ல புத்தகத்தை கிழித்து போட்ட உணர்வு. காயமில்லாமல் வலித்தல் என்பதை இவர் இழப்பு உணர்த்தி செல்கிறது.. ஆழ்ந்த அனுதாபங்கள்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரமம்மா 1f622.png 

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் 1f62d.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தேகம் அழிந்து போகலாம் இசையால் எமது இதயங்களில் என்றென்றும் வாழுவீர்.....!
ஆழ்ந்த இரங்கல்கள்.🙏💐 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

இறுதியாக “என்னோட பாஷா” என்ற பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சங்கீத மேகம் கலைந்து போனது..

கண்ணீர் அஞ்சலிகள்....

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏அதி உச்ச மருத்தவ கருவிகளின் அழுத்தங்களினால் அணு அணுவாக இறப்பதை விட நின்மதியாக போய் வாருங்கள் அய்யா.🙏🙏🙏

A great loss to music. The legendary voice falls silent. A humble human being RIP SPB sir.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

SPB. அவர்களின் இறுதி சடங்கின் முன் ரிஹானாவின் கண்ணீருடன் ஒரு பாடல்

 

Link to post
Share on other sites

 

குயில் தன் குரலை எம்மிடம் விட்டுட்டு தான் மட்டும் பறந்து பிரிந்து சென்றது.

கண்ணீர் அஞ்சலி பாலா.

 
 
 
 
spacer.png
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மனம் - ஆன்மா ..   பிரபஞ்ச #இரகசியம் . 1. ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம் 2. இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ அதுவே இன்றைய பிரபஞ்சம் 3. இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் புதைந்து கிடக்கிறது அதுவே பிரபஞ்ச மனது 4. பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே 5. பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம் 6. இயற்கை எதை உணர்கிறதோ அதை மனத்தின் வழி கட்டமைக்கிறது 7. நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கபட்டது எனவே நாமும் இயற்கைதான் 8. நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கபடுகிறது 9. மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம், அண்டத்தில் உள்ளதே இந்த பிண்டத்தில் .. 10. பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த மனித மனமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது 11. மனித மனம் இப்படி பல்வேறு மாயையில் சிக்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால் பிரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது 12. கவனம் குவியும் இடத்தில் அதை நோக்கி சக்தி பாயும். 13. எதை பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் . 14. நாளை  உனக்கு நடக்க போகும் விபத்தும் என்றோ ஓர் நாள் ஏற்பட்ட நிகழ்ச்சியின் தாக்கமே 15. மனது எண்ணங்களை உருவாக்கி உடல் அணுக்களை குறிப்பிட்ட அலைவரிசையில் அதிர செய்து பிரபஞ்ச அணுக்களின் தன்மையை மாற்றி தனக்கு தேவையானதை வடிவமைத்துக் கொள்கிறது . 16.  மனிதன்தான் இயற்கையால் கட்சிதமாக வடிவமைக்கபட்ட மேம்பட்ட சக்தி என்பது புரிகிறது . https://m.facebook.com/ulmugapayanam/photos/a.1563139250678600/2394401157552401/?type=3&source=57
  • அக்பர் அஹ்ஸன், நியுயோக்கிலிருந்து,,,,,,,,,,         1990 ஆம் ஆண்டு அக்டோபரில் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இந்த  வருடத்துடன் 30 ஆண்டுடன் ஆகின்றன. இது ஒரு தமிழீழ விடுதலை புலிகள் (எல்.டி.டி.இ) அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புச் செயலாகும்.       உண்மையில் கருப்பு ஒக்டோபர் 1990 இன் கருப்பு  ஆகஸ்டிலிருந்து ஆரப்பிக்கிறது,  பிரிவினைவாதத்திற்கான தமிழ் போராட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் குழுக்களில் இணைந்து போரிட்டனர், இருப்பினும் கிழக்கில் பெரிம்பான்மை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் வன்முறை மோதல்களுக்கும் சம்பவங்களுக்கும் உயர்ந்தன. இதனால் கிழக்கில் 1990 ஆகஸ்ட் 3 ஆம் தேகதி கத்தான்குடியில் முஸ்லீம் தொழுகையாளிகளையும், ஆகஸ்ட் 11, 1990 அன்று எராவூரில் தூங்கும் கிராமவாசிகளையும் புலிகள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்தனர். மேழும் முழு கிழக்கிலும் முஸ்லிம்கள் மீது  எல்.ரீ.ரீ.ஈ பரவலான படுகொலைகள், அட்டூழியங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இதே நேரம் வடக்கில் முற்றிலும் வேறுபட்ட சூழல் காணப்பட்டது. இரு சமுகமும் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல வாழ்தனர்.  எனினும் கிழக்கு புலிகளின் அழுத்ததால் தமிழீழத்திற்கு முஸ்லிம்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற பேலியான குற்றச்சாட்டின் பேரில் புலிகள் சுமார் 75,000 முஸ்லீம் மக்களை வடக்கு மாகாணத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.                             முதல் வெளியேற்றம் யாழ்ப்பாணத்தில்  30 அக்டோபர் 1990 இல்  எல்.டி.டி.இ தெருக்களில் ஓடியபோது முஸ்லீம் குடும்பங்களை உஸ்மானியா கல்லூரியில் கூட்டிச் செல்லுமாறு கட்டளையிட்டனர். அங்கு, இரண்டு மணி நேரத்திற்குள் வலுக்கட்டாயமாக வெளியேறும்படி அவர்களிடம் கூறப்பட்டது, மீறுவோர் சுடப்படுவர் என அச்சுருத்தப்பட்டனர். அத்தோடு முழு முஸ்லீம் மக்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யாழ்ப்பாணத்தில் மொத்த முஸ்லிம் மக்கள் தொகை 15000 ஆகும். மேழும் முழு வடக்கு மாகாணத்திலிருந்து சுமார் 75,000 பேர் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வலுக்கட்டாயமாக  வெளியேற்றப்பட்டனர்.  இதில் மன்னாரில் இருந்து 40,000 பேர், யாழ்ப்பாணம் மற்றும் கிளினோச்சியைச் சேர்ந்த 20,000 பேர், வவுனியாவிலிருந்து 10,000 பேர் மற்றும் முல்லைதீவிலிருந்து 5,000 பேர் அடங்குவர் , இதனால் உடமை, உரிமை இழந்து பெரும் துண்பத்திற்கு மத்தியில்  பெரும்பாளானோர் புத்தளம் தச்சம் அடைந்தனர், இவர்களுக்கு இடம் அளித்த புத்தள மக்களுக்கு மறுமை வரைக்கும் நண்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.          யுத்தம் முடிந்த பின்பும் கூட மீள்குடியேற முஸ்லீம்கள் தயக்கம் காட்டுகின்றனர்,ஏனெனில் வெளியேற்றமானது இம்முஸ்லிம்களிடையே கசப்பான நினைவுகளை இன்னும் கொண்டுள்ளது.   அக்பர் அஹ்ஸன். நியுயோக்கிலிருந்து https://www.madawalaenews.com/2020/10/blog-post_740.html
  • அன்பு உடையார் இன்னமும் பல்லாயிரம் பச்சைப் புள்ளிகளை வேகமாக பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.🎉🎉🎉 கொரோனாக் காலத்தில் யாழில் பலரும் விரும்பும் திரிகளை தொடருங்கள். 👍🏾 நம்ம பையன் பக்திப் பாட்டுக்களை தினமும் தவறாமல் கேட்கின்றார் போலிருக்கு☺️
  • துமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா? துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்கு வெள்ளையடிக்கும் வகையில் கூறிவரும் கருத்துக்களை அப்படியே நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. துமிந்த சில்வா ஒரு கிரிமினல். பலரும் அறிந்த போதைப்பொருள் வியாபாரிகள். பட்டப்பகலில் படுகொலை செய்து தமது பண, அதிகார செல்வாக்கால் கூட விடுதலை பெற முடியாதபடி நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர். போதைப்பொருள் பணத்தில் பிரதான இனவாத ஊடகமொன்றை நடத்திவரும் குடும்பம் அவர்களின் குடும்பம். துமிந்தவை வெளியில் கொணர்வதற்காக ராஜபக்ச குடும்பத்தினரை பதவியில் அமர்த்த கடுமையாக உழைத்த ஊடகம் அது. கடந்த சில வருடங்களாக இனவாத பிக்குமாரையும், இனவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் துமிந்தவின் விடுததலைக்கு குரல் கொடுக்க வைப்பதற்காக ஏராளமாக செலவழித்தவர்கள். தற்போதும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கையெழுத்துக்காக தலா நாற்பது லட்சம் வீதம் வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியெல்லாம் இருக்க என்றெல்லாம் மனோ கணேசன் கூறுவது பசப்பு மட்டுமல்ல வேடிக்கையாக இருக்கிறது. மனோகணேசன் இப்பேர்பட்ட உத்தரவாதத்தை கொடுப்பார் என்று நாம் கொஞ்சமும் நம்பியிருக்கவில்லை. இன்னமும் வழக்குமின்றி, விசாரணையும் செய்யப்படாத நிலையில் துமிந்த சில்வாவை விட அதிக காலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளும், சந்தேகநபர்களும் உள்ளார்கள். ஆனால் மேன்முறையீட்டு  நீதிமன்றத்தாலும் சந்தேகமின்றி கொலைக்குற்றவாவாளியென மீளவும் உறுதி செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதில் இந்த அரசியல்வாதிகளுக்கு எந்தளவு அக்கறை வந்திருக்கிறது பாருங்கள்.  என்கிறார் மனோ கணேசன். துமிந்தவால் கொல்லப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது பாதுகாவலரும் கூட குடும்பஸ்தர்கள் தான். அவர்கள் இந்த சமூகத்தில் வாழ பாரத லக்ஸ்மனால் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தனது தந்தையின் கொலைக்காக நீதி கோரி போராடிய அவரது மகள் ஹிருனிகா பிரேமச்சந்திர; மனோ கணேசனுடன் ஜனநாயக அரசியல் கூட்டணியில் ஒன்றாக சேர்ந்து பயணித்து வருபவர். இனி சக தோழமை அரசியல் சகாவின் முகத்தில் தான் மனோ கணேசன் விழித்திட முடியுமா? இதை எல்லாவற்றையும் விட இலங்கையின் ஜனாதிபதிகள் தமது அரசியல் சுய லாபங்களுக்காக நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பது இப்போது ஒரு போக்காக மாறி வருகிறது. ஜே.ஆர். காலத்தில் அவரின் ஆதரவாளனான ஒரு பெரிய சண்டியனை விடுவித்தார். மிகச் சமீபத்தில் கூட மைத்திரிபால தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரரை விடுவித்தார். 20 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அத்தகைய அராஜக அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்கள் கூட கடக்கவில்லை. அதற்குள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச குடும்பம் தனது ஆதரவாளனான கொலைக்குற்றவாளியை விடுவிக்க முற்படுகிறது. இதற்கு விலை போபவர்கள் யார் யார் என்பது பற்றி இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். மனோ கணேசன் அந்த பட்டியலில் எப்போது சேர்ந்தார். அதிகார நலன்களுக்காக நாட்டின் நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்வதை ஒரு வழிமுறையாகவே மேற்கொண்டு வருபவர்கள் ராஜபக்ச தரப்பு. அதில் மனோ கணேசன் எப்போது பங்காளியானார். மனோ கணேசன் மட்டுமல்ல இதற்கு துணைபோன அத்தனை எம்பிக்களும் நயவஞ்சகர்களே.      https://www.namathumalayagam.com/2020/10/blog-post.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.