Jump to content

லெப். கேணல் சுபன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் சுபன்

Commander-Lieutenant-Colonel-Suban.jpg

 

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் சுபன்

1989 இன் இறுதிக் காலம், இந்தியப் படைகள் ஆக்கிரமித்த நின்ற இருண்ட நாட்கள்.

முள்ளிக்குளத்தில் முகாம் இட்டிருந்த ‘புளொட்’ கும்பல் மீது 20.05.1989 அன்று நடாத்தப்பட்ட வெற்றிகரமான தாக்கதலின்போது, அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்த பானு அண்ணன் படுகாயமடைந்து சிகிச்சைக்காகச் சென்றதை அடுத்து, சுபன் அண்ணன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டார்.

தளபதியாகப் பொறுப்பெடுத்து வந்த உடனேயே – இந்தியப் படைக்கு நல்லதொரு அடி கொடுக்க வேண்டும் என்று எண்ணங்கொண்ட சுபன் அண்ணன் அதற்காக மன்னார்த் தீவில் மருத்துவமனைக்கு அருகிலிருந்த இந்தியப் படைமுகாமைத் தேர்ந்தெடுத்தார்.

இத்தாக்குதலுக்கான திட்ட ஒழுங்குகளைச் செய்த அவர், அதனை நேரடியாகத் தலைமை ஏற்று நடாத்தும் பொறுப்பை மேஜர் சூட்டி அண்ணனிடம் ஒப்படைத்திருந்தார்.

எதிரி முகாமிட்டு காவல் புரிந்துகொண்டிருந்த ஒரே ஒரு தரைவழிப் பாதையைத் தவிர முற்றாகக் கடல் சூழ்ந்த தீவு. முழுமையாகவே இந்தியப்படை நிறைந்திருந்த அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசம். ஒரு பக்கம் 500 யார் தூரத்தில் பி.எம்.சி கட்டட முகாம்; மறுபக்கம் 500 யார் தொலைவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலைய முகாமைக் கொண்டு, மிகுந்த பாதுகாப்புக்கு நடுவில் இருந்து மருத்துவமனை முகாம்.

1989.06.17 அன்று சுபன் அண்ணன் வகுத்த தாக்குதல் திட்டம் செயற்படுத்தப்பட்டது.

கடல்வழியாகத் தீவுக்குள் நுழைந்தது தாக்குதல் அணி, குறித்த நேரத்தில் மருத்துவமனை முகாம்மீது தாக்குதல் தொடங்க, அங்கிருந்த முகாமிலிருந்து உதவி கிடைப்பதைத் தடுப்பதற்காக அந்த முகாம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

குறைந்த நேரத்திற்குள் முகாம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டு, 26 படையினர் கொல்லப்பட்டதுடன் 4 பிறண் எல். ஏம் ஜி களுடன் 24 ஆயுதங்களும கைப்பற்றபட்டன.

புலிகளின் தாக்குதலணி எவ்வித இழப்புகளுமின்றி வந்த வழியாகவே தீவிலிருந்து வெளியேறியது.

இந்திய அரசையையும் அதன் படைத் தலைமையையும் அதிர்ச்சி அடையச் செய்த தாக்கதல் இது என்பதில், வியப்பில்லை.

Commander-Lieutenant-Colonel-Suban-04.jp

நூறுவீதம் பாதுகாப்பானது என அவர்கள் கருதியிருக்ககூடிய ஒரு வலையத்துக்குள் ஊடுருவி நடாத்தப்பட்ட தாக்குதல் என்பது ஒருபுறமிருக்க, தங்களது படையின் ஒரு முகாமையே தாக்கி அழித்துவிட்டு இழப்பேதமின்றிப் போய் விட்டார்களே என, தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த உலகின் நான்காவது பெரிய படை நிச்சயம் அதிர்ந்திருக்கும்.

தமிழீழத்தில் இந்தியப்படையின் பெரியதொரு முகாம் ஒன்று தாக்கப்பட்ட முதல் நிகழ்வும் கடைசி நிகழ்வும் அதுதான். இந்தியப்படையிடமிருந்து ஒரே தடைவையில் கூடிய தொகையில் எல்.ஏம்.ஜி கைப்பற்றபட்ட முதல் சம்பவமும் கடைசிக் சம்பவமும் இதுதான்.

‘இன்னொரு விக்ரரின் காலம்” என மன்னார் மக்கள் பேசிக்கொள்ளத் துவங்கினார்கள்.

இந்தத் தாக்குதலோடுதான் சுபன் அண்ணின் சகாப்பதம் ஆரம்பித்தது.

1990 இன் ஆரம்பத்தில் இந்தியர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது இங்கேயே நிலைகொள்ள முயன்ற அவர்களுடைய எச்சசொச்சங்களைக் களையெடுக்கும் பணி நடந்தது.

சுபன் அண்ணனும் மன்னார் மாவட்டத்தின் அணிக்குத் தளபதியாக வடதமிழீழத்தின் பலபகுதிகளிலும் அந்த பணியில் பங்கேற்றார். வவுனியா முசல்குத்தியில் புளொட் துரோகிகள் மீது கிளிநொச்சியில் ஈ.என்.டி.எல்.எவ் துரோகிகள் மீது குஞ்சுக்குளத்தில் தலைமன்னாரில் என எல்லா இடங்களிலும் சுபன் அண்ணையின் குழு களையெடுப்பை நடாத்தியது.

இதற்கு பிற்பட்ட காலப்பகுதி, தமிழீழத்தில் போர் ஓய்ந்திருந்த ஓர் அமைதி நிலை தோன்றியிருந்தது. எங்களது போராளிகள் முழுமையாக மக்கள் அரங்கில் இறங்கி, அரசியல் வேலைகளில் ஈடுபட்ட வேளை,

அரசியல் வேலைசெய்யும் போராளிகளை அடிக்கடி அழைத்து சுபன் அண்ணன் கதைத்துக்கொண்டிருப்பார். மக்களோடு எப்படிப் பழகுவது, மக்களை எவ்வாறு அணுகுவது என்பதை எல்லாம் தானே செய்துகாட்டிச் சொல்லிக்கொடுப்பார். “சிறிய ஊர்கள் குக்கிராமங்கள் எல்லாவற்றிக்கும் போகவேண்டும். தமிழீழத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான மன்னாரில் மக்கள் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். அவர்களுடைய குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்றெல்லாம் விளக்கிக் சொல்லுவார்.

“மாவட்டதிலுள்ள மூலைமுடுக்குகளுக்குள் எங்கள் செயலகங்களை அமைக்கவேண்டும். இந்திய ஆக்கிரமிப்பின் நெருக்கடியான சூழ்நிலைகளில் எங்களை இமைபோல காத்த கிராமப்புற மக்களிடமிருந்த நாம் அந்நியப்பட்டுப் போகக்ககூடாது. மக்கள் எங்களைத் தேடிவராமல், நாங்கள் மக்களிடம் செல்ல வேண்டும்” என சுபன் அண்ணன் எடுத்துக் கூறுவார்.

கிராமங்களுக்குள் அரசியல் வேலை செய்யும போராளிகளின் நடவடிக்கைகள் பற்றி வேறு ஆட்கள் மூலம் தகவல்கள் அறிகின்ற அவர், பின்னர், அதிலுள்ள குறைநிறைகள் தொடர்பாக போராளிகளுக்கு ஆலோசனை வழங்குவார்.

மாவட்டத்திலுள்ள இராணுவ செயலகங்களானாலும் சரி, அரசியல் செயலகங்களாலும் சரி, பண்டிவிரிச்சான், அடம்பன் போன்ற கிராமபுறங்களிலேயே அமைக்கப்பட்டன. மன்னார்த் தீவுப் பகுதியே நகரமாக இருந்ததால் அரச செயலகங்கள் எல்லாம் அங்கேயே அமைந்திருந்தன. இதன் காரணமாக மன்னார்ப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மிகப் பெரும்பலான மக்கள் அனுபவித்த அசௌகரியங்களை, சுபன் அண்ணன் நன்கு உணர்ந்திருந்தார். இதனாலாலே எமது இயக்கத்தின் அலுவலகங்களைத் தீவுக்கு வெளியே, கிராமப்புறங்களில் அவர் நிறுவினார்.

Commander-Lieutenant-Colonel-Suban-02.jp

அடம்பனுக்கும் உயிலங்குளத்திற்கும் நடுவில்தான் மன்னார் மாவட்டத்தின் பெரிய நகரம் அமையவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தமிழீழத்தில் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொள்ளுவார்.

சண்டை அனுபவம் நிறைந்த ஒரு இராணுவத் தளபதியாக இருந்த அதே சமயம் – பெரிய அளவில் கல்வி அறிவைப் பெற்றிரக்காதபோதும் – அரசியல் வேலைத் திட்டங்களுக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி நெறிப்படுத்துகின்ற அறிவாளியாக இருந்தார்.

அவர் மக்களுடன் எவ்வளவு ஜக்கியமாக இருந்தார் என்பதை அவரது முகாமுக்கு செல்வதன் மூலம் அறியலாம். எந்த நேரத்திலும் ஒரு மக்கள் தொடர்பகம் போலவே அது காட்சி தரும்.

அதிகாலை 4.30 மணிக்கொல்லாம் சுபன் அண்ணன் எழுந்தவிடுவார். ஆனால், அதற்கு முன்னாலேயே அவரைச் சந்திக்க மக்கள் முகாமில் கூடியிருப்பார்கள். நித்திரை விட்டெழும்பினதிலிருந்து வந்திருப்பவர்களுடன் கதைப்பார்.

சண்டை முனைகிலிருந்து வந்து களைப்போடு இருக்கும் போது கூட சந்திப்பதற்காக யாராவது வந்திருந்தால் பொறுமையோடு அவர்களுடன் கதைத்து அனுப்பிவைப்பார்.

மக்களுக்குள் இருந்த பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தீர்த்துவைப்பதில் சுபன் அண்ணன் மிகுந்த கரிசனைகாட்டிச் செயற்படுவார். அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை சம்பவங்களாகச் சொல்லிமுடிக்க முடியாது.

குடும்பங்கள் பிரிஞ்சிருக்கின்ற சிக்கல்கள் என்றால் நேரடியாக வீட்டைத் தேடிப்போய்விடுவார் சுபன் அண்ணன். எத்தனை குடும்பங்களை அப்படி அவர் சேர்த்துவைப்பார்…

“இன்னொரு விக்ரரின் காலம்” என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

1990 இன் நடுப்பகுதிவரையான இடைக்கால அமைதிப் காலம்.

தமிழீழததின் தென் பிராந்தியத்தில் சிங்களப் படைகளின் அத்தமீறிய செய்லகள் பற்றிய செய்திகள் தகவல் பரிவர்த்தனை சாதனங்களில் வரும்.

கொலைகள், கைதுகள், சிங்கள குடியேற்றங்கள் போன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் சுபன் அண்ணன் சொல்லுவார், “என்றாவது ஒரு நாள் பெரிய அளவிலான ஒரு இன அழிப்பு யுத்தத்தை சிங்களப் பேரினவாதம் எங்கள் மக்கள் மீது துவக்கும்” என்று.

சுபன் அண்ணன் சொல்வதை மெய்ப்பிப்பதைப்போல, மன்னார் மாவட்டதிலிருந்த சிங்களப் படைமுகாம்களில் யுத்த ஆயத்த ஒழுங்குள் செய்யப்படுவதை எங்களால் நேரடியாக அவதானிக்க முடிந்தது. முகாம்களில் மேலதிகமாகத் துருப்புக்கள் குவிக்கப்பட்டனர். ஆயுத தளபாடங்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டன. காவலரண்கள் புனர் நிர்மானம் செய்யப்பட்டு, முகாம்கள் பலப்படுத்தப்பட்டன. இவை எல்லாம் எங்கள் கண்களுக்கு முன்னால் நடந்தன.

யூன் 11ஆம் நாள், சுபன் அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தது நடந்தது.

மட்டகளப்பு மாவட்டத்தில் வெடித்த போர், ஐந்து நாட்களில் தமிழீழமெங்கும் பரவியது.

மன்னார் மாவட்டத்தின் முதல் நடடிவடிக்கையாக, தீவுப் பகுதியிலிருந்த கோட்டையில் அமைந்திருந்த பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது. அனைத்துப் பொலிசாரும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ஆயுதங்களும் வாகனங்களும் ஏனைய பொருட்களும் எடுக்கப்பட்டன.

கைதாகிய சிங்கள்க் காவல்துறையினரை பாதுகாப்பாக மதவாச்சி வரை அனுப்பிவைத்தார் சுபன் அண்ணன்.

அவரின் அடுத்த இலக்கு தலைமன்னாரிலிருந்த பழைய பாலம் இராணுவ முகாமாக இருந்தது.

தற்போதைய மன்னார் மாவட்ட சிறப்பத் தளபதி ஜான் அண்ணன், மற்றும் லக்ஸ்மன் அண்ணன் ஆகியோரின் தலைமையில் 1/2 மணி நேரத்தில் அந்த முகாம் தாக்கி அழிக்கப்பட்டது.

16.06.1990 அன்று அதிகாலை நடந்த அந்தத் தாக்குதலில் 40 இற்கும் அதிகமான இராணுவத்தின் கொல்லப்பட்டனர்; 81 மி.மீ எறிகணை செலுத்தி உட்பட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பவை குறிப்பிடத்தக்கன.

இந்தப் பெரு வெற்றிகளைத் தொடர்ந்து, மன்னார் மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்த ‘கஜுவத்தை’ இராணுவமுகாம் சுபன் அண்ணனின் இலக்காக அமைந்தது.

அதுவொரு தமிழர்களின் பூர்வீகக் கிராமம், கொண்டச்சி என்பதுதான் அதன் பெயர். அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை நடாத்தியதன் மூலம், சிறிலங்கா அரசு அதனை ஒரு சிங்களக் கிராமாக மாற்றியது.

சிங்களத்தில், ‘கஜுவத்தை’ எனப் பெயரும் இட்டது. அங்கே இருந்த – பெருமளவில் வருமானத்தைத் தருகின்ற மரமுந்திரிகைப் பண்ணையில் சிங்களவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டனர். இந்த ‘ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை’ பாதுகாக்கவென ஒரு படைமுகாம் அமைக்கப்பட்டது. அனைத்து வசதிகளும் பொருந்தியதாகவும், எவ்வேளையில் அச்சுறுத்தல் வந்தாலும் உதவி வழங்கக்கூடிய முறையிலும் அந்த முகாம் நிறுவப்பட்டது.

அந்த முகாமை நிர்மூலமாக்குவதற்கான தாக்குதல் திட்டத்தை சுபன் அண்ணன் வகுத்தார். அவர் வகுத்த திட்டதின் படி மேஜர் வசந்த் அண்ணன், கெக்குலர் அண்ணன் ஆகியோரின் தலைமையில் தாக்குதல் நடந்தது.

இராணுவரீதியாக மட்டுமன்றி – அந்த முகாமின் அமைவிடம் காரணமாக – அரசியல்ரீதியாகவும் மிக முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வாக அந்தத் தாக்குதல் அமைந்தது.

ஆக்கிரமிக்கபட்ட பிரதேசங்களைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வது என்பது ஒரு சாத்தியமற்ற விடயமே என்பதை, சிங்கள ஆட்சியாளர்களுக்குப் புரியவைத்த முதலாவது தாக்குதலாகவும் அது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் தளபதியாகப் பணியாற்ற வந்தவுடன் இந்தியப் படையின் முகாம் ஒன்றைப் தாக்கியதன் மூலம், இந்திய ஆக்கிமிப்புப் போர் வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த சுபன் அண்ணன், ‘கஜுவத்தை’ இராணுவ முகாம் தாக்குதலின்மூலம், விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்னொரு முத்திரை பதித்தார்.

‘பவள்’ கவசவண்டி ஒன்று எவ்வித சேதமுமின்றி கைப்பற்றப்பட்டதுதான் அது. எங்கள் போராட்டத்தில் இது முதல் நிகழ்வு.

தென்னாபிரிக்கா நாட்டின் தயாரிப்பான இந்த ‘பவள்’ வகைக் கவசவண்டிகள், கன்னிவெடிகளால் தகர்த்தப்பட முடியாதவை என பல இராணுவ பரிசோதனைகள் மூலம் முடிவு செய்யபப்ட்டவை ஆகும். ஆனால் இதே ‘பவள்’ கவச வண்டிகள் சில ஏற்கனவே புலிகளின் கன்னிவெடிகளால் நொருக்கப்பட்டுவிட்டன என்பது கூடப் பழைய கதையாகிவிட்டது.

இந்த ‘கஜவத்தை’ தாக்குதலின் போது இன்னும் ஆறு போராளிகளுடன் மேஜர் வசந்த் அவர்கள் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். மன்னார் மாவட்டத்தில் சகல இராணுவ முகாம்களுக்கான வேவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த வசந்த் அண்ணன், தலைவரின் மெய்பாதுகாவலர் அணியில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மக்கள் “இன்னொரு விக்ரரின் காலம்” என்று பேசிக்கொண்டார்கள்.

பரந்த வெளிகளையும், விரிந்த கடலையும் தனக்குரிய குறியீடாக கொண்டது மன்னார்.

இங்கே, பூநகரியிலிருந்து செல்லும் பிரதான வீதியில் இருக்கும் இலுப்பைக்கடவை என்ற இடத்திலுள்ள கள்ளியடி என்னும் கிராமத்தில்தான் சுபன் அண்ணன் பிறந்தார்.

1965 ஆம் யூலை மாதம் 21ஆம் நாள், வினாசித்தம்பி சுந்தரலிங்களம் என்ற அந்தக் குழந்தை வசதிவாய்ப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தது.

சின்ன வயதிலிருந்தே இலுப்பைக்கடவை பாடசாலையில் கல்விகற்றுவந்த அவர் உயர்வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது, விடுதலைப் போராட்டம் பற்றிய சிந்தனை அவரது நெஞ்சுக்குள் அலைமோத தொடங்கியது.

விடுதலைப்பபுலிகள் இயக்கத்தின் தொடர்பு தேடித் திரியத் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டில் அது கிடைத்தது.

தமிழீழத் விடுதலைக்கான ஆயுதப்போர் வரலாற்றில், மன்னார் மாவட்டத்தில் நடந்த முதல் தாக்குதல் – இராணுவ வண்டித் தொடர் மீதான மூன்றாம்பிட்டி கன்னிவெடிப்புத்தான். 1984 ஆம் ஆண்டு பதின்மூன்று சிங்களச் சிப்பாய்களைக் கொன்ற அந்தத் தாக்குதல் நடந்தது.

சுபன் அண்ணனின் போராட்டப்பணி அந்தக் கண்ணிவெடிப்பிலிருந்தே ஆரம்பிக்கின்றது.

அப்போது அந்தத் தாக்கதலைத் தலைமையேற்று நடாத்திய லெப்.நிதியவர்கள், சுபன் அண்ணன் மூலமாகவே அந்த ரோந்து அணிபற்றிய தகபல்களைப் பெற்றார்.

ஒவ்வொரு தடவையும் அந்த ரோந்து தொடர் செல்கின்றபோது எத்தனை வாகனங்கள் செல்கின்றன? ஒவ்வொரு வண்டியிலும் எவ்வளவு துருப்புகள் இருக்கிறார்கள் போன்ற விபரங்களைப் பார்த்து சொல்வது, சுபன் அண்ணனின் பணி.

ஒருநாள் லெப்.நிதி அவர்கள் சுபன் அண்ணனிடம், “இன்னும் ஒரு வாரத்தில் இந்த ரோந்து அணியை மறிக்றேன்; எதிர்பார்த்துக்கொண்டிருங்கள்.” என்று சொன்னராம்”

வழமைபோல் மறுநாளும் இலுப்பைக்கடவைவரை பின் தொடர்ந்து சென்று வாகன ரோந்தை அவதானித்துவிட்டு சுபன் அண்ணன் திரும்பி வந்த 1/4 மணி நேரத்தில் அந்த மூன்றாம்பிட்டிக் கன்னிவெடியின் சத்தம் மன்னார் மாவட்டத்தையே அதிரச் செய்தது.

நாட்கள் உருண்டோட, தகவலறிந்த சிங்களப் பொலிசார் சுபன் அண்ணனைத் தேடத் துவங்கினார்கள்; விடு தேடிவர ஆரம்பித்தார்கள், அவர் தலைமறைவாக வாழவேண்டிய சூழ்நிலை உருவாகியது.

Commander-Lieutenant-Colonel-Suban-07.jp

1985 இன் ஆரம்பத்தில், அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பனான கப்டன் பெனா அவர்களுடன் இயக்கத்தில் முழுமையாக இணைந்துகொண்டார்.

(1989 ஆம் ஆண்டின் மே நாள் அன்று, வவுனியா நகரின் மத்தியில் பலத்த பாதுகாப்புக்கு நடுவில் – இந்தியப்படை முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த 42 போராளிகள் சிறச்சாலையை உடைத்துக் கொண்டு வெளியேறிய வெற்றிகரமான நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த கப்டன் பெனா அவர்கள் – பின்னர், இந்தியப் படையுடனான சண்டையொன்றின்போது வீரச்சாவடைந்தார்.)

இந்தியாவில் நடந்த ஒன்பதாவது பயிற்சி முகாமில் திறம்பட தனது பயிற்சிகளை முடித்துக்கொண்டு – முழமையான ஒரு போர் வீரனாக – தமிழீழம் திரும்பிய சுபன் அண்ணன், அப்போது மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்த எமது இயக்கத்தின் மந்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் விக்ரர் அவர்களின் அணியில ஒருவராக நின்றார்.

அக்காலப்பகுதியில் நடந்த பல தாக்குதல்களில் சுபன் அண்ணனின் பங்கும் நிறைய உண்டு.

1986 இன் நடுப் பகுதியில் அடம்பனில் நடந்த சண்டை ஒன்றில் காமடைந்து சிகிச்சைக்காகத் தமிழ்நாடு சென்ற சுபன் அண்ணன், காயம்மாறி தமிழீழம் திரும்பிவந்து தலைவரின் பாதுகாப்பு அணியில் ஒருவராக இருந்தார்.

02.04.1987 அன்று, காங்கேசன்துறை ‘காபர்வியூ விடுதி’ இராணுவ மினி முகாம் மீதான தாக்குதலின்போது மீண்டும் ஒரு தடவை அவர் காயமடைந்தார்.

Commander-Lieutenant-Colonel-Suban-03.jp

1987 இன் பிற்பகுதி அமைதி என்று சொல்லிக்கொண்டு கபட நோக்கோடு நுழைந்த இந்திய ஆக்கிரமிப்புப் படை, தனது சுய உருவைக் காட்டியபோது வெடித்தது புலிகள் – இந்தியப் போர்.

‘ஒப்பறேசன் பவான்’ எனப் பெயரிட்டு இந்தியப்படை யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும்வரை நடந்த சண்டைகளில் பங்கேற்ற சுபன் அண்ணன், பின்னர் மணலாற்றுக் காட்டில் தலைவரோடு நின்றார்.

மணலாறு; இந்திப்படைக்கு விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் மிகமுக்கிமானவைகளில் ஒன்றாகிவிட்ட தமிழீழத்தின் இதயபூமி.

முப்பாதாயிரத்துக்கும் அதிகமான துருப்புக்கள், கனரக ஆயுதங்கள், ஆட்லறித் பீரங்கிகள், அதிவேக குண்டுவீச்சு விமானங்கள் உலகின் நான்காவது பெரிய வல்லரசின் தரை, வான்படைகளின் ஒருங்குதிரட்டிய பலம். ‘செக்மேற் – 01, செக்மேற் – 02, செக்மேற் – 03’ எனப் பெயர்களிட்டு தலைவரைக் கொல்ல நடாத்தப்பட்ட மூர்க்கத்தனமான படையெடுப்புகளைத் தனித்துநின்று முறியடித்தனர் புலிகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமரில் பங்கேற்ற சில நூறு புலிவீரர்களுள் ஒருவனாக நின்று, தாக்குதலணி ஒன்றுக்குத் தலைமைதாங்கினார் சுபன் அண்ணன்

சிங்களப் படையுடான முதலாது போரில் புலிகள் நடாத்திய கடைசித்தாக்குதல் மணலாற்றிலேயே நடந்தது.

15.04.1989 அன்று நடந்த அந்தப் பதுங்கித் தாக்குதலில் சுபன் அண்ணன் முதன்மைப் பங்கு வகித்தார். 21 படையினர் கொல்வப்பட்டதுடன் அதே தொகையில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இதன்பின்தான் 1989இன் நடுப்பகுதியில் சுபன் அண்ணன் மன்னார் மாவட்டத் தளபதியாக தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

“இன்னொரு விக்ரரின் காலம்” என்று மன்னார் மக்கள் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

சிங்களத் படை தொடுத்த இரண்டாவத போர்க் காலம்;

மன்னார் மாவட்டத்தில் சிங்களப்படை நிலைகொண்டிருந்த இடங்கள் எங்கும் பலமான காவல் அரண்களை நிறுவினார் சுபன் அண்ணன்.

தமிழீழத்திலிருந்த சிங்களப்படைகளன் முகாம்களில் பழமையானவற்றில் ஒன்றாகவும், பாரியவற்றில் ஒன்றாகவும் இருந்த தள்ளாடி முகாமைச் சுற்றி வயுகம் அமைத்தார் சுபன் அண்ணன்.

நான்க பக்கமும் பெருவெளிகளைக்கொண்டு மையத்தில் அமைந்த தள்ளாடிமுகாமின் சூழல் ஒரு சண்டைக்கேற்றதாக இல்லாமலிருந்த போதும், வெளியேறும் படையினரை வழிமறித்துத் தாக்குவதற்குச் சாதகமான நிலைகளை சுபன் அண்ணன் தீர்மானித்தார்.

தள்ளாடியிலிருந்த மாந்தை நோக்கி நகரமுனைந்த இராணுவத்தை பலதடவைகள் எங்களது வீரர்கள் திருப்பி அனுப்பிவைத்தனர்.

1990 இன் இறுதிக்காலம்.

அனுராதபுரத்திலிருந்த பெரும் எடுப்பிலான ஒரு படை நகர்வை மனன்னார் நோக்கி ஆரம்பித்தது, சிங்கள் அரசு.

குறைந்தது இரண்டாயிரம் துருப்புக்கள். டாங்கிகள், கவச வண்டிகள் என 46 இராணுவ வாகனங்கள், பீரங்கிகள் உட்பட கனரக ஆயுத தளபாடங்கள்.

லெப். கேணல் வேணு அண்ணன் தலைமையில் விலாச்சியில் வைத்து எதிர்கொண்டது புலிகளின் சேனை. அனுராதபுர மாவட்டத்தின் எல்லையிலுள்ளது அக்கிராமம்.

சுபன் அண்ணன் அந்தச் சண்டையை வழிநடாத்தினார்.

பெரும் உயிரிழப்பையும், தளபாட இழப்பையும் சந்தித்து மட்டுமன்றி, அந்த இராணுவ அணி தள்ளாடி முகாமை வந்தடைய ஒரு மாத காலம் எடுத்தது.

மன்னார் மக்களின் மனங்களில் நிலைத்துவிட்ட ஒரு தளபதி சுபன் அண்ணன்.

மன்னாரின் வளர்ச்சியில் அவர் மிகுந்த அக்கறை காட்டினார். மக்களின் குறைகளைத் தீர்க்க அவர்களுக்கான – அவர்களின் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்தப் பாடுபட்டார்; விதைக்காத நெல் வயல்களை விதைப்பிக்க முயற்சி செய்தார்.

தமிழீழத்தில் ஒரு மாவட்டத்தில், அங்கு வீரச்சாவடைந்த எல்லா மாவீரர்களின் நிழற்படங்களைக் கொண்ட ஒரு வீடு முதன் முதலில் அமைக்கப்பட்டது என்றால் அது மன்னாரில்தான்.

மாவீர்ர துயிலும் இல்லத்தை மிகவும் சிறப்பாக்க சுபன் அண்ணன் அதிக கவனமெடுத்துச் செயற்பட்டார். அடிக்கடி சென்று பார்த்து வேலைகளைச் சொல்லுவார். கடைசியாகக்கூட பல வேலைகளைச் சொல்லிவிட்டுத்தான் போனார். ஆனால், பார்ப்பதற்கு அவர் திரும்பி வரவில்லை….

எந்த ஒரு சின்ன விடயமாக இருந்தாலும் அதனை அழகாக செய்யவேணும் என்று சொல்லுவார்; தானே செய்தும் காட்டுவார். அது தோரணம் கட்டுவதிலிருந்து எல்லா வேலைகளிலும்தான், போராளிகள் ஏதும் தவறிழைக்க நேர்ந்ததால் உடனடியாக அவ்களைக் கண்டிப்பார். பின்னர், அரவனைத்து வைத்துக் கதைப்பார்.

தலைவரோடு தானிருந்த காலத்தில் தலைவரிடமிருந்து கற்றவை, அறிந்தவை, தலைவருடைய உணர்வுகள் என்பவற்றை எப்போதும் போராளிகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களுக்க நல்வழி காட்டுவார்.

1991 இன் பிறப்பு இப்போது சுபன் அண்ணன் தனது முகாமை சிலாவத்துறைப் பகுதிக்கு மாற்றிவிட்டு, அங்கேயே எந்நேரமும் தங்கியிருந்தார்.

சிலாவத்துறை சிங்களப் ப்டைமுகாம் மீதான தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் மிகத்தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. அந்த வேலைகளை நேரடியாகக் கவனித்துக் கொண்டிருந்தார் சுபன் அண்ணன்.

அக்காலத்திலேயே, கொண்டச்சி இராணுவ முகாமிலிருந்து சிலாவத்துறை இராணுவ முகாமுக்கு ரோந்து செல்லும் ஒரு இராணுவ அணியை வழிமறித்துத் தாக்க , சுபன் அண்ணன் திட்டமிட்டார்.

17.02.1991 அன்று காலை, தற்போதைய மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதி ஜான் அண்ணன் மற்றும் லக்ஸ்மன் அண்ணன் ஆகியோரின் தலைமையில், அந்த இராணுவ அணிமீது புலிகள் பாய்ந்தார்கள்.

சுபன் அண்ணன் வகுத்த தாக்குதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது 60 பேர் கொண்ட இந்த ரோந்து அணியில் ஜந்தே நிமிடங்களில் 54 சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன், 55 ஆயுதங்களும் கைப்பற்றபட்டன. இந்தச் சண்டையின்போது எங்களது ஜந்து போராளிகளை நாங்கள் விலையாகக் கொடுத்தோம்.

இத்தாக்குதல் மூலம் போராட்ட வரலாற்றில் இன்னொரு முத்திரை பதித்தார் சுபன் அண்ணன். தமிழீழத்தில் முதன்முதலில் நடத்த மிகப்பெரிய பதுங்கித் தாக்குதல் அதுவாகும்.

சிங்கள அரசின் பாதுகாப்பு வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாகிய இத்தாக்குதல், தங்களது பாதுகாப்பு நவடிக்கைகளை மறபரீசிலனை செய்யவேண்டுமென அவர்களை வாய்விட்டுச் சொல்லவைக்கும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

“இன்னொரு விக்கரரின் காலம்” என மன்னார் மக்கள் பேசிக் கொண்டார்கள்.

Commander-Lieutenant-Colonel-Suban-02.jp

இதன்பின் சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்கதலுக்கான ஏற்பாடுகளில் முழுமையாக இறங்கிய சுபன் அண்ணன், அந்த வேளைகளில் இரவுபகலாக ஈடுபட்டார்.

எமது இயக்கத்தின் யாழ். மாவட்டப்பிரிவும், மன்னார் மாவட்டப்பிரிவும் கூட்டு நடவடிக்கையாக மேற்கொண்ட அத்தாக்குதல், 19.03.1991 அன்று ஆரம்பித்து நான்கு நாட்களாக நடந்தது.

அப்போதைய யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த தமிழ்ச்செல்வன் அண்ணன், தற்போதைய மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி ஜான் அண்ணன் ஆகியோர் நேரடியாகத் தலைமை தாங்கி நடாத்திய இத்தாக்குலின் ஒட்டுமொத்தத் தளபதியாக சுபன் அண்ணன் இருந்தார்.

இந்தத் தாக்குதலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு. சிங்கள் அரசின் – வான், கடல், தரை – முப்படைகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் புலிகள் சமரிட்ட முதற்களம் இதுவாகும்.

40 சிங்கள்ப் படையினர் கொல்லப்பட்டு, பெருமளவில் ஆயுதங்களும் கைப்பற்றபட்ட இத்தாக்கதலின்போது, எங்களது 82 தோழர்களை நாங்கள் இழந்தோம்.

சிலாவத்துறையில் எமக்கு ஏற்பட்ட இழப்பு சுபன் அண்ணனைய வெகுவாக பாதித்தது. இந்த துயரை ஆற்றவேண்டுமானால், சிங்களபடைமீது மூர்க்கத்தனமான ஒரு தாக்குதல் நடாத்த வேண்டும் என வேட்கைகொண்டார்.

சிலாவத்துறையில் புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து விட்டார்கள் என, இறுமாந்து மார்தட்டிக் கொண்டிருந்தது. சிங்கள அரசு.

சிலாவத்துறைத் தாக்குதல் முடிந்து சரியாக எட்டாவது நாள்.

அது 30.30.1991 இன் பகல்பொழுது.

அதே சிலாவத்துறையிலிருந்து முருங்கன் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த இராணுவ அணியை வேப்பங்குளத்தில் வைத்து எதிர்கொண்டனர் புலிகள்.

களத்தில் நேரடியாக இறங்கியிருந்தார் சுபன் அண்ணன்.

சிங்கள இராணுவத்தின் தலைசிறந்த போர் அணியில் ஒன்றென புகழ்பெற்ற ‘கஜபாகு றெஜிமென்ற்’ அங்கு குதறப்பட்டது.

40 இற்கும் அதிகமான படையினர் பிணங்களாய்ச் சுருண்டார்கள். அதிநவீனரக ஆயுதங்கள் உட்பட பல இராணவ தளபாடங்களைப் புலிகள் கைப்பற்றினர். கொல்லப்பட்வர்களில் 24 படையினரின் உடல்களையும் புலிகள் எடுத்துவந்தனர்.

சிலாவத்துறை இழப்பிற்கு ஈடுசெய்து , சிங்களப்படைக்கு பதிலடிகொடுத்து ஆயுதங்களையும், உடல்களையும் எடுத்து கொண்டுதான் தனது முகாமிற்குத் திரும்பினார் சுபன் அண்ணன்.

இந்தத் தாக்குதிலின் மூலமும் போராட்டவரலாற்றில் இன்னொரு முத்திரை பதித்தார் சுபன் அண்ணன். சிங்கள படையிடம் முதற் தடவையாக, ஒரே தாக்கதலில் 6 மினி மினி எல்.எம்.ஜிகள் கைப்பற்றப்பட்டது என்பதுவே அதுவாகும.

“இன்னொரு விக்ரரின் காலம்” என மன்னார் மக்கள் பேசிக்கொண்டனர்.

Commander-Lieutenant-Colonel-Suban-05.jp

அதற்கடுத்த மாதத்தில் வங்காலையிலிருந்து நானாட்டான் முகாமுக்கப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவ வண்டிகள் அடிக்கடி நெருங்கத்தொடங்கின.

சுபன் அண்ணனின் திட்டப்படி வீதி எங்கும் விதைக்கபப்ட்ட கன்னிவெடிகள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்தன.

புதிதாகத் தோன்றிய இந்தச் சிக்கலைச் சமாளிக்க, கால் நடையாக பொருட்களை எடுத்துவருவதைத் தவிர சிங்கள்ப் படைக்கு வேறுவழி இருக்கவில்லை.

சிலாவத்துறை இழப்பின் சோகத்திலிருந்து முழுமையாக விடுபட்டிருக்காத சுபன் அண்ணன். அந்த இராணுவ அணியைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டார்.

வங்காலையிலிருந்து பொருட்களுடன் வயல்வெளிகள் ஊடாக நடந்து நானாட்டான் செல்லும் படையினரைத் தாக்க வஞ்சியன் குளத்தைத் தேர்ந்தெடுத்தார் அவர்.

இந்தத் தாக்குதலுக்குச் செல்வதற்குமுன் போராளிகளோடு கதைக்கும்போத சுபன் அண்ணன் சொன்னார்.

“ஓமர்முக்தார் படத்தில், பெரு மணல் வெளியில் போராடுகின்ற போது தாங்கள் திரும்பி ஓடிவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் தங்கள் கால்களையே கட்டிபோட்டுவிடுகின்றார்கள். ஆனால் நாம் அப்படிக் கட்டிபோடுவதில்லை. திரும்பி ஓடுவதற்காக அல்ல; எதிரியைத் துரத்திப் பிடிக்கவேண்டும்; எனபதற்காக”

பெருவெளியான அந் வயல் நிலப்பரப்பில் இயன்றளவுக்கு உருமறைப்புச் செய்து, எங்களது தாக்குதலிணி நிலை எடுத்தது.

வழமைபோல பொருட்கள் எடுத்துக்ககொண்டு ரோந்த வந்த இராணுவ அணி எங்களது தாக்குதல் வலையத்துக்குள் முழுமையாக வந்ததன்பின், புலிகளின் துப்பாக்கிகள் ஒரே சமயத்தில் பேசத்துவங்கின.

அது 29.04.1991 இன் பகல்வேளை

சில நிமிடப்பொழுது கடந்து செல்ல, 60 பேர் கொண்ட அந்தப் படை அணியில், என்ன நடந்தது என்பதைத் திரும்பிப் போய்ச் சொல்வதற்குககூட ஒருவரும் மிஞ்சவில்லை.

இந்தத் தாக்குதலின் மூலமும் போராட்ட வரலாற்றில் இன்னொரு முத்திரை பதித்தார் சுபன் அண்ணன்.

தமிழீழத்தில் மிகப்பெரிய அளவில் ரோந்து உலாவந்த சிங்களப் படையணி ஒன்றின்மீது தாக்குதல் நடாத்தி அப்படையணி முற்றாக அழிக்கப்பட்ட நிகழ்ச்சி, வஞ்சியன்குளத் தாக்குதல் ஆகும்.

“இன்னொரு விக்ரரின் காலம்” என மன்னார் மக்கள் பேசிக்கொண்டார்கள்.

இப்போது 1991 இனட மையப்பகுதி.

ஆரம்பித்தது ஆனையிறவுப் பெரும் சமர்.

உலகத்தினை தமிழீழத்தை வியந்து பார்க்க வைத்த அந்தச் சமரில், புலிகளின் படைகளை வழிநடாத்திய முக்கிய தளபதிகளில் ஒருவராகக் களத்தில் நின்றார் சுபன் அண்ணன்.

அங்கு சண்டையில் ஈடுபட்டிருந்த மன்னார் மாவட்ட அணிக்கு அவர் தலைமை வகித்தார்.

ஆனையிறவுச் சமரின் பின் மன்னார் திரும்பியிருந்தபோது 22.10.1991 அன்று பூநகரிப் பகுதியில் இராணுவம் தரையிறக்கப்பட்டு ஒரு படை நகர்வு செய்யதன்மூலம் சிங்களப்படை அப்பகுதியைக் கைப்பற்றியது.

எதிர்த்துச் சண்டையிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழ்நிலையற்ற ஒரு இடமாக அது இருந்ததால், அங்கு சண்டையை நாங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டி நேர்ந்தது.

சுபன் அண்ணனைப் பொறுத்தவரை, சிங்களப்படையின் அந்த நடவடிக்கை அவருக்குப் பெரும் சவாலான ஒன்றாகவே அமைந்தது. எப்படியாவது இந்த இராணுவ வேலியை ஊடறுத்துத் தாக்கவேண்டுமென, அவர் அன்றிலிருந்தே செயற்படத்தொடங்கினார்.

காலம் மெல்ல மெல்ல அசைந்து உருண்டு கொண்டிருந்தது. இந்த இடைக்காலத்தில், சிறிய அளவுகளிலான வெற்றிகரத் தாக்குதல்கள் மன்னார் மாவட்டமெங்கும் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தன.

1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பிற்பட்ட நாட்கள்;

Lt.-Col-Suban-1-scaled.jpg

யாழ். குடாநாட்டை முழுமையாக முற்றுகையிட்டு தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த சிங்களப் படையெடுப்பொன்றை நடாத்தத் திட்டமிட்டது.

அப்போது வடபிராந்திய தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ தலைமையில் இந்தப் படையெடுப்பக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.

இந்தப் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடிக்கும் ஏறபாடுகளிலும் புலிகள் இயக்கம் முழுமூச்சாக ஈடுபட்டது.

இதன் ஓர் அங்கமாக மன்னார் மாவட்த்திலிருந்து ஒரு சண்டை அணியுடன் யாழ்ப்பாணம் சென்ற சுபன் அண்ணன், அராலிப் பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

எந்த முனையிலும், எந்த வேளையிலும், எந்த வகையிலும் எதிரியை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் அங்கு தாக்குதலணிகளை நிறுத்திக் காவலிருந்தார் அவர்.

ஆனால், அராலித்துறையில் எமது வீரர்களால் புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் இராணுவ வண்டி ஒன்று சிக்கியபோது, யாழ். குடாநாடு மீதான படையெடுப்புக்குத் தலைமைதாங்கிய சிங்களப் படைத்துறையின் வடபிராந்திய ஆணைப்பீடமே அதில் அழிந்துபோனது.

இதன் பின்னர், அந்த யாழ்ப்பாணச் சமரை சிங்கள அரசு கைவிட்டுவிட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னார் திரும்பிய சுபன் அண்ணன் பூநகரியில் அமைக்கப்பட்டிருந்த சிங்களப் படைத்தளத்தின் ஒரு பகுதியைத் தாக்கி அழிக்க முடிவுசெய்து, அதற்கான ஏற்பாடுகளில் முழுமையாக ஈடுபடத்தொடங்கினார்.

மாவட்டத்தின் நிர்வாக வேலைகள் அனைத்தையும் தனது மற்றைய தளபதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, பூநகரிப் பகுதிக்கு வந்து அங்கேயே தங்கியிருந்து, தாக்குதல் ஒழுங்குகளைப் பார்க்கத் துவங்கினார்.

அப்போதெல்லாம் சொல்லுவார்; “நான் செத்தாலும் பரவாயில்லை இவனுக்கு நல்ல அடி குடுக்கவேணும்” தோழர்களோடு கதைத்துக்கொண்டிருக்கும்போது பகிடியாகச் சொல்லுவார்.

“சவப்பெட்டி அடிக்கிற வேலை நடந்துகொண்டிருக்கிறதா? இந்தமுறை எனக்கும் சேர்த்து ஒரு பெட்டியடிங்கோ. அளவு தேவையெண்டால் இப்பவே எடுத்துக்கொண்டு போங்கோ…”

“இந்தமுறை இவன்களை நான் ரெண்டில ஒண்டு பார்க்கிற தெண்டுதான் இருக்கிறன்” என்று அடிக்கடி சொல்லுவார்.

அந்த நாள் வந்தது.

25.09.1992

பூநகரி சிங்களப் படைத்தளத்தின் பள்ளிக்குடாப் பகுதி மினி முகாமையையும், அதனோடு சேர்ந்திருக்கும் 2 1/2 மைல் நீள இராணுவ வேலியின் காவலரண்களையும் அழித்துவிடுவதுதான் தாக்குதல் திட்டம்.

எமது இயக்கத்தின் படைத்துறைத் துணைத் தளபதி பால்ராஜ் அண்ணன் தலைமையில் நடந்த இத்தாக்குதலில், அவருக்கு உறுதுணையாக நின்று சண்டையை வழி நடாத்தினார் சுபன் அண்ணன்.

புலிகளின் வீரமோசமான பாய்ச்சல்.

சுபன் அண்ணனின் கையிலிருந்து முழங்கிய எம்.16 ரைபிள் பொழிந்த ரவைகளை கூட எதிரிகளைத் துளைத்துச் சென்றன.

நின்று பார்க்கமுடியாமல், தளத்தின் மையப்பகுதியிலிருந்த பிரதான முகாமை நோக்கி ஓட்டமெடுத்தான் எதிரி.

2 1/2 மைல் தூரத்திற்கு இருந்த 60 இற்கும் அதிகமான காவலரண்களுடன், மினிமுகாம் ஒன்றும் அழிக்கப்பட்டது.

25 இற்கும் அதிகமான படையினர் கொல்லபப்பட்டதுடன் அதைவிட அதிகதொகையில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

வீழ்த்தப்பட்ட எதிரிகளின் நிலைக்குள் நுழைந்துகொண்டிருந்தனர் புலிகள்.

எங்கோ காயமடைந்த நிலையில் கிடந்த எதிரிப் படையாளன் ஒருவன் துப்பாக்கியைத் தூக்கி எங்கள் தளபதியை இலக்க வைத்து…

ஓ……

எங்கள் சுபன் அண்ணன….

எங்களை இடியெனத் தாக்கிய அந்த நேரத்தை வார்த்தைகளால் சித்திரிக்கமுடியாது.

“மன்னார்… மன்னார்…” என்று மன்னாருக்கு ஒளி கொடுக்க வென்றே, தன்னையே உருக்கி ஓய்வில்லாமல் எரிந்துகொண்டிருந்த அந்த மெழுகுவர்த்தி அணைந்துபோனதா…?

அம்மாவாக…. அப்பாவாக…. ஆசானாக…. நண்பனாக…. தளபதியாக எல்லாமாகவும் நின்று, எங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லித்தந்து கொண்டிருந்தாரே.. சுபன் அண்ணன், இனி வரமாட்டாரா?

அந்நதத் துயரத்தை எங்களால் தாங்கமுடியவில்லை.

Commander-Lieutenant-Colonel-Suban-06.jp

மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த மன்னார் மாவட்ட மக்களை முன்னேற்றகரமான வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்து கொண்டு திரிந்தாரே…. இனி அவரை நாங்கள் காணமுடியாதா…?

அந்த மக்கள் தாங்கொணத்த துயரத்தில் ஆழ்ந்து போனார்கள்.

“இன்னொரு விக்ரரரின் காலம் “ என்று மகிழ்ந்து கொண்டிருந்த அவர்கள் “மீண்டும் ஒரு விக்ரரை இழந்துவிட்டோமே” என்று துயரத்தில் அமிழ்ந்து போனார்கள்.

சாகும்போது கூட அந்தச் சாதனையாளன், போராட்ட வரலாற்றில் ஒரு முத்திரை பததித்தான்.

தமிழீழத்தின் சிங்கள்ப் படையின் மிகப்பெரிய பிரதேசம் தாக்கப்பட்டு – மிக நீண்ட தூர இராணுவ வேலி ஒன்று அழிக்கப்பட்ட முதல் சம்பவம், பூநகரியில்தான் நடந்தது!

ஓ… எங்கள் சுபன் அண்ணன்…! தூங்குங்கள். உங்களது கைகளில் வளர்ந்தவர்கள் நாங்கள்…. உங்களது இலட்சியத்தை அடையும்வரை ஓயமாட்டோம்!

நினைவுப்பகிர்வு: எஸ்.பிரதீபன்.
மூலம்: லெப். கேணல் சுபன் நினைவாக நூலிலிருந்து…

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-suban/

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரின் முத்து லெப். கேணல் சுபன்

Lt.-Col-Suban-1-scaled.jpg

மன்னாரின் முத்து:  லெப். கேணல் சுபன்

“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும்.

எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும்.

வெளியிலை வேலை செய்யேக்கை சரியாச் செய்வம்; இல்லாட்டி சனம் சுபநிட்ட சொல்லிடும்.

நாங்கள் ஏதும் சொல்லால் உங்களோட என்ன பேச்சு. நாங்க தளபதிக்கிட்ட சொல்லிக்கிறோம் என்று சனம் சொல்லும்.

சுபன் செத்ததை அவங்களாலை தாங்கிக்க முடியலை.

மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் சுபன் காட்டிய கரிசனையையும், அவனுக்கும் மக்களுக்கும் இருந்த நெருக்கத்தையும் பரஞ்சோதி சொல்லிக் கொண்டிருந்தான்.

“குடுபங்கள் பிரிஞ்ச சிக்கல் எண்டால் சுபன் நேரடியாகவே தலையிடும். எவ்வளவு குடும்பங்களை சேர்த்து வைத்திருக்கும்.”

மன்னாரில் கள்ளியடியில் பிறந்த சுபனின் குடும்பம் பெரியது. ‘அண்ணே…… என்னை வளர்க்க எனது அப்பர் 100 மாடு வளர்த்தாராம்’ என்று சுபன் சொல்லிச் சிரிக்கும்.

மழைக்கு இருண்ட வானத்தில் மின்னல் வந்து சிறிது நேரம் தரும் வெளிச்சத்தில் இருட்டே தெரியாதது போல, சுபன் சிரிக்கும்போது அவனது பல்லின் வெண்மையில் அவன் கறுப்பு முகம் மறைந்து போகும். மாட்டில் பால் கறக்கும்போது ‘சர்’, ‘சர்’ என சீராக வரும் ஒளிபோலவே சுபன் கதையும் சீராக, மெல்லிய இசை நயத்துடன் ஒலிக்கும்.

“அப்பர் சொந்தமா மாடு வளர்த்தவரோ, இல்லை ஊரிலை இருக்கும் மாடுகளைப் பிடித்து வந்து அடைத்து வளர்த்தவரோ” என நாம் சுபனைக் கிண்டல் செய்வதுண்டு.

“இந்தியாவிலே பயிற்சி முகாமிலே, சுபனை மாட்டுக்குள்ளதான் காணலாம். சுகயீனமான பயிற்சிப் போராளிகளை பராமரிக்கப் பால் தேவைப்பட்டது. அதை சுபன் செய்தது.”

தமிழ்நாட்டில் ஒரு மலைப்பகுதியில் இந்த பயிற்சி முகாம் இருந்தது. அடிக்கடி கிழே வந்து பால் எடுத்துச் செல்லமுடியாது.

மன்னாரின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையை சுபன் காட்டினான்.

விதைக்காத நெல்வயல்களை விதைக்க முயற்சி செய்தான்.

மக்கள் குறை தீர்க்க அடிப்படை வசதிகளை அங்கே அமைக்க முயன்றான்.

‘உயிலங்குளத்திற்கும் அடம்பனுக்கும் இடையில்தான் மன்னார் நகரம் அமைய வேண்டும்’ என சுபன் அடிக்கடி கூறும். ‘தமிழீழத்தில் அப்படித்தான் இருக்கும்’ என சொல்லிக் கொள்ளும்.

மன்னார் மாவட்ட போராளிகளின் குடும்பங்களின் துன்பங்கள் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும்.

மன்னாரில் வீரச்சாவைச் சந்தித்த எல்லாப் போராளிகளின் நிழற்படங்களுடன் கூடிய ஒரு வீடு. முதன் முதலில் தமிழீழத்தில் மன்னாரில் தான் அமைக்கப்பட்டது.

“மாவீரர் துயிலும் இல்லத்தை மிகவும் சிறப்பாக அமைக்க சுபன் கவனம் எடுத்திச்சு. அடிக்கடி சென்று பார்க்கும். கடைசியாகவும் பல வேலைகளைச் செய்யச் சொல்லிச்சு. ஆனால் பார்க்கத்தான் ஆள் இல்லாமல் போச்சு.”

பரஞ்சோதியின் நா தளதளத்தது.

“எதையும் ஆழமாகச் சிறப்பாகச் செய்யணும் எனச் சொல்லும்; செய்தும் காட்டும்.”

“தோரணம் கட்டிக்கொண்டு நின்றேன். சுபன் வந்ததைப் பார்த்தேன். ஏதோ பிழை பிடிக்கும். பின் தானே நின்று கட்டிக்காட்டும். நான் ஒழிச்சிடுவேன். ஆள் வந்திச்சு. பார்த்து விட்டு தோரணங்களை அவிட்டுக் கட்டிச்சு. பரஞ்சோதி எங்கே என்று கேட்டுது போனேன்.”

“தோரணம் கட்டினது சரியா” என்று கேட்டது. “சரிதான்” என்றேன்.

“ஒன்றிலை நாலு முசிச்சு கட்டி இருக்கிறீங்க, இன்னுமொன்றிலே மூன்று முடிச்சு போட்டிருக்கிறீங்க. எல்லாம் ஒரு சீராக இருந்த நல்லதுதானே” என்று சொல்லிச்சு.

“இப்படித்தான் எந்த விடயமென்றாலும், அது சின்ன விடயமென்றாலும் சரியாகச் செய்ய வேண்டும். எனச் சொல்லும்.”

“பிழை யாரும் விட்டா கண்டிக்கும். பிழைகளை தெளிவாக விளங்கப்படுத்து.”

“கண்டிச்சுப்போட்டு நல்லா அரவணைக்கும்.”

“கண்டிப்பும், அரவணைப்பும் அதை எப்போதும் குறிப்பிட மறந்திடாதீங்க” என்றான் பரஞ்சோதி.

“பண்டிக் கருக்கள் என்றால் சுபனுக்கு விருப்பம். தொதொல், மசுகெட் இருவும் விருப்பம்.”
“ஆள் நல்லா சமைக்கு. ஓய்வா இருந்தா சமைக்கும்; சமைச்சு எல்லோருக்கும் சாப்பிட கொடுக்கும்.”

ஒரு நாள் ஒரு ஐயாவை கூட்டி வந்தாங்க. அவர் சமையலிலே பெரிய ஆள் அதைச் செய்வார் இதைச் செய்வார் எண்டாங்க.

சுபன் விதவிதமாக ‘அது செய்வீங்களா இது செய்வீங்களா எனக் கேட்டுது. அவருக்கு ஒன்றுமே செய்யத் தெரிந்திருக்கலை. சுபன் தான் அவருக்கு செஞ்சுகாட்டும்.

அந்த ஐயாவும் சமையலும்………… அது பெரிய பகிடி

மழை பெஞ்சா இரவிலே நித்திரை இல்லை என்று தெரிஞ்சுக்கணும். சுபன் வேட்டைக்குப் போகும். நாங்க துவக்கி தூக்கினா மானுக்கோ, முயலுக்கோ தாங்க தப்பிக்கலாம் எனத் தெரியும்.

சுபன், ‘நீ போய் எடுத்து வா’ என்று சொல்லிவிட்டு சுடும். குறி தப்பாது.

குறி தவறாமல் சுடுவதில் மட்டுமில்லை, ஆயுதங்களில் சுபன் மிக கவனம். எத்தனையோ போராளிகளின் குருதிசிந்தி பெற்ற ஆயுதம்’ என்று அடிகடி சொல்லி, ஆயுதங்களை மிக கவனமாகக் கவனிக்கும்.

ஆயுதம் பேணுதல் எப்படி இருக்க வேணும் என்று நான் விளக்கத் தேவையில்லை. அது உங்களுக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டு பரஞ்சோதி.

கண்டிப்பும், அரவணைப்பும் அது முக்கியம் அதை மறந்திடாதேங்கோ என்றான்.

மடு ஏதிலிகள் தங்ககத்தை ஒழுங்குபடுத்த சுபன் கடுமையாக உழைத்தான்.

இப்படியான ஒரு சிக்கலை மன்னார் சந்தித்தது. இது தான் முதல் தடவை.

இருக்கும் குறைந்த வசதிகளுடன் தன்னால் இயலக் கூடியதை அவன் செய்தான்.

இந்தியாவில் பயிற்சி முடித்து திரும்பிய சுபன், லெப்.கேணல் விக்டரோடு நின்று மன்னாரில் செயற்பட்டான். 1986 இன் நடுப்பகுதியில் மன்னாரில் நடந்த ஒரு சண்டையில் காயமடைந்து, சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற சுபன். அதன் பின் தலைவரோடு மூன்று ஆண்டுகள் நின்றான்.

02.04.1987 காங்கேசன்துறை தங்ககத்தில் சிறிலங்கா படைகளுடனான மோதலில் காயமடைந்தான்.

தலைவர் பிரபாகரனைத் தேடி, மணலாற்றுக் காட்டில் இந்தியப் படையினர் ‘செக்மேற்’ 1, 11, 111 என்ற இராணுவ நடவடிக்கைகளைச் செய்தபோது, அந்தச் சண்டைகளில் நின்றான்.
15.04.1989 அன்று வெளி ஓயாவில் சிங்களப்படையை மறைந்து தாக்கிய நிகழ்ச்சியில் முதன்மைப் பங்கு வகித்தான்.

1989 நடுப்பகுதியில் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான்.

சுபன் பொறுப்பேற்று சிறிது காலத்தில், மேஜர் சுட்டியின் தலைமையில் மன்னார் மருத்துவமனையில் இந்தியப் படையின் சிறிய தங்ககம் மீதான தாக்குதல் நடந்தது. அத்தாக்குதலில் 24 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.

நாலு ‘பிறண்’ இலகு இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

1990 இன் ஆரம்பத்தில், கிளிநொச்சிக் காட்டுப் பகுதியில் இருந்த ஈ.என்.டி.எல்.எவ் துரோகக் கும்பலின் முகாம்மீது நடாத்தப்பட்ட பெரிய தாக்குதலில், சுபன் ஒரு பகுதி பொறுப்பாக இருந்தான்.

தமிழீழ – சிறிலங்காப் போர் மீண்டும் வெடித்த பின் தலைமன்னார் பழைய பாலம் படைத்தங்ககம் (15.06.1990), கயுவத்தை தங்ககம் (21.06.1990) என்பன முற்றாக தாக்கி அழிக்கப்பட்டன.

கயுவுத்தையில் இருந்த பவல் வாகனம் ஒன்று கையகப்படுத்தப்பட்டது.

சிலாவத்துறை, ஆனையிறவு படைத் தங்ககங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சுபன் கலந்துகொண்ட முக்கிய தாக்குதல்களாகும்.

சுபனின் காலத்தில் வஞ்சியன் குளத்திலும் (29.04.1991) வேப்பங்குலத்திலும் (30.03.1992) நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல்கள் புகழ்பெற்ற தாக்குதல்களாகும்.

வஞ்சியன் குளத்தில் 60 இற்கும் மேற்பட்ட படையினரும், வேப்பங்குளத்தில் 24 படையினரும் கொல்லப்பட்டனர். இவற்றில் இருந்து முறையே 50 இற்கும் 30 இற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டன.

தமிழீழத்தில் மிகப் பெரிய அளவில் காவல் உலா வந்த படையினர் மீது அதிரடித் தாக்குதால் நடத்தப்பட்டு அடிப்படை அணி முற்றாக அழிக்கப்பட்ட நிகழ்ச்சி வஞ்சியன் குலத்தாக்குதல் ஆகும்.

“வங்கலை இறங்கு துறையில் வந்து அடிப்பம் (09.10.1990) என்று எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அங்கு தாக்குவிட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்குள் வெளியே வேண்டும். அத்தாக்குதலில் 6 படையினர் கொல்லபட்டனர்.

பூநகரித் தாக்குதல் பற்றி (25.09.1992) நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க. இரண்டரை மைல் இராணுவ வேலியை அழித்து, 62 காவலரண்களை தகர்த்தோம். 25 படையினர் கொல்லப்பட்டாங்க. 30க்கு மேல் ஆயுதங்கள் கைப்பற்றினோம். அதில்தான்….. ஆள் காயப்பட்டுவிட்டது என்றுதான் சொன்னாங்க. உடம்பைத்தான் கொண்டுவந்தாங்க.

எந்தத் தாக்குதல் எண்டாலும் கடைசி வேவுக்கு சுபன் வரும். வந்து பார்த்து யார் யார் எங்கு நிலையெடுக்க வேண்டும். என்ன செய்யவேண்டும். என்று சொல்லும்.

அதன் பிறகுதான் தாக்குதல் நடக்கும். ஆள் பக்கத்திலே நிக்குது எண்டாலே ஒரே உற்சாகமாக இருக்கும்.

“அண்ணே, செய்ய முடியாது, என்று ஒன்றும் இல்லை” என்று சுபன் அடிக்கடி சொல்லும்.

சுபனின் அகரமுதலில் ‘முடியாது என்று ஒன்று இல்லை’.

நன்றி: களத்தில் இதழ் (11.12.1992).

 

https://thesakkatru.com/mannar-district-commander-lieutenant-colonel-suban/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு சிறந்த போராளி 
வீர வணக்கம் 

1990 இறுதி காலத்தில் 
யாழில் ஒரு பச்சை நிற பிக்கப்பில் திரிவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.