Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்த டைனோசர் குறித்த விவாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்த டைனோசர் குறித்த விவாதம்

 

 

ஸ்பைனோசரஸ்

 

இதுவரை உலகில் வாழ்ந்ததாக அறியப்பட்டுள்ள மாமிசத்தை உண்ணும் வகையை சேர்ந்த மிகப் பெரிய டைனோசரை பற்றிய நீண்டநாள் வாதம் முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள 1,200க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பற்களின் மூலம் அவை "மிகப் பெரிய அசுரத்தனமான" விலங்காக வாழ்ந்தது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாய்ந்த நதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை ஆராய்ந்ததில் இதுகுறித்து தெரியவந்துள்ளதாக கிரெட்டேசியஸ் ரிசர்ச் (Cretaceous Research) என்ற சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய மொராக்கோவின் சஹாரா பாலைவனத்தின் ஊடாக ஓடிய ஒரு பழங்கால நதியின் படுக்கையில் இந்த ஸ்பைனோசொரஸ் வகை டைனோசர்களின் புதை படிவுகள் அதிக அளவில் கண்டறியப்பட்டன.

அவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், சுமார் 49 அடி நீளமும், ஆறு டன் எடையும் கொண்ட இந்த வகை டைனோசர் நிலத்தில் வேட்டையாடும் விலங்கினமாக அல்லாமல், பெரும்பாலும் நீர்வாழ் விலங்கினமாக வாழ்ந்ததாக தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், இதே ஸ்பைனோசொரஸ் வகை டைனோசரின் வால்பகுதியை கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த புதிய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.

இதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் பல்லுயிரியல் துறை பேராசிரியர் டேவிட் மார்டில், "எங்களுக்கு தெரிந்து, இதற்கு முன்னர் உலகின் வேறெந்த இடத்திலும் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் டைனோசர்களின் பற்கள் புதைப்படிம நிலையில் கண்டறியப்பட்டதில்லை" என்று கூறுகிறார்.

"மற்ற வகை டைனோசர்களுடன் ஒப்பிடுகையில் ஸ்பைனோசொரஸ்களின் பற்கள் வேறுபட்டு உள்ளன. இது அதன் நீர்சார்ந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது."

ஸ்பைனோசரஸ், டைரனோசொரஸ் ரக டைனோசரை விட அளவில் மிகப் பெரியதாக இருந்ததுள்ளது.

பட மூலாதாரம்,DAVIDE BONADONNA

 

"நமக்கு கிடைத்துள்ள ஸ்பைனோசொரஸ் ரக டைனோசர்களின் பற்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, தண்ணீரை குடிப்பதற்காக அவ்வப்போது நதிக்கரைக்கு வந்து செல்லும் டைனோசர்களை விட, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நீரிலேயே கழித்த ஒன்றாக அவை இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. அதனால்தான் நமக்கு புதைப்படிமங்கள் வரலாற்றுக்கு முந்தைய நதிக்கரையில் கிடைத்திருக்க வேண்டும்."

ஸ்பைனோசொரஸ்களின் புதைப்படிமங்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டன.

ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த எச்சங்கள் இரண்டாம் உலகப் போரின்போது முற்றிலும் சேதமடைந்தன. அதன் பிறகு, ஸ்பைனோசரஸ்களின் எலும்பு துண்டுகள் சிறிய அளவிலேயே கிடைத்து வந்தன.

கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஜுராசிக் பார்க் III திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் ஸ்பைனோசரஸ், டைரனோசொரஸ் ரக டைனோசரை வீழ்த்தியதன் மூலம் அதுகுறித்த பேச்சு பிரபலமடைந்தது.

 

https://www.bbc.com/tamil/science-54296627

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முகநூலில் நான் கண்ணால் காணாதவர்களைச் சேர்ப்பது வலு குறைவு. முக்கியமாக கண்ணால் காணாத பெண்கள் எவரையும் சேர்ப்பதில்லை!🤓 அத்தோடு இறுக்கமான பாதுகாப்பு வளையங்கள் எல்லாம் இருப்பதாலும் அடிக்கடி போஸ்ட் செய்யாமல் இருப்பதாலும் பிரச்சினைகள் இல்லை. முக்கியமாக முகநூலில் அரசியல், இலக்கியம் என்று பினாத்துபவர்களுடன் உரையாடுவதில்லை.  
    • (காரைதீவு நிருபர்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்ட கணக்காளர் கடந்த வாரம் கடமைக்கு வந்திருந்தார். பின்னர் அவரைக் காணக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது தவிசாளர் ஜெயசிறில் மேலும் தெரிவித்தவை வருமாறு; கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெற வேண்டும் என்பது நாடளாவிய எமது தமிழ் மக்கள் அனைவரதும் ஒருமித்த நீண்ட கால அபிலாஷை ஆகும். இப்பிரதேச செயலகம் அரசாங்கத்தால் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இனவாத அரசியல்வாதிகளே தொடர்ந்தேச்சையாக பல வழிகளிலும் முட்டுக்கட்டைகள் போட்ட வண்ணம் உள்ளனர். இப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெறுவதற்கான பிரமாண்டமான மக்கள் எழுச்சி போராட்டம் கடந்த வருடம் இடம்பெற்றது. இதில் பங்கெடுத்தவன் என்கிற உரிமை, பெருமை ஆகியன எனக்கும் இருக்கின்றது. அப்போதைய அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தருவதாக உறுதிமொழி வழங்கியது. கால அவகாசம் பெற்றுக் கொண்டது. ஆனால் அதன் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்ஷக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நிச்சயமாக தரம் உயர்த்தி தருவார்கள் என்று பகிரங்க வாக்குறுதிகள் வழங்கினர். குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்முனை தமிழ் மக்களுக்கு இதற்கான உறுதிமொழியை நேரடியாகவே வழங்கினார். அவ்வாக்குறுதியை வழங்கி கல்முனை தமிழ் மக்கள் அத்தேர்தலில் 7000 வாக்குகளை ராஜபக்ஷக்களுக்கு வழங்கினர். கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் ஆதரவு சக்தியாக உள்ள கருணா அம்மான் என்று சொல்லப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ராஜபக்ஷ அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தரப்படும் என்பது உட்பட ஏராளமான வாக்குறுதிகளை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கினார். அவருக்கு எமது மக்களின் 30,000 வாக்குகள் கிடைத்தன. ஆனால் எமது மக்களுக்கு எவையுமே கிடைக்கவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக அவரால் எதுவுமே நடக்கவில்லை. ராஜபக்ஷ அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நப்பாசை இன்னமும் எமக்கு இருக்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவைத் தீர்மானம் மூலம் கணக்காளர் நியமிக்கப்பட்டு கடமைக்கு வந்தமை எமக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் அம்மகிழ்ச்சி நீடிக்கவே இல்லை. அந்நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என அறிகின்றோம். இனவாத அரசியல்வாதிகள் மீண்டும் முட்டுக்கட்டைகள் போட்டு விட்டனர். கல்முனை பிரதேசத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணங்கி நடப்பதாக நாடகம் போடுகின்றனர். ஆயினும் அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் இப்பிரதேச செயலகம் தொடர்பாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆயினும் கருணா போன்றவர்களைப் போல் அல்லாமல் எப்போதும் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தர வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகின்றது. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைத்துள்ளார். சாணக்கியன் எம்.பி., கலையரசன் எம்.பி. ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டும். இது எமது மக்களின் உரிமை ஆகும். மாறாக இது எமது மக்கள் கேட்கின்ற சலுகை அல்ல. 29 கிராம சேவையாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டியது அரசாங்கத்தின் கடமையே ஆகும். ஆனால் அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தரத் தவறினால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும், அது கொரோனாவுக்குப் பின்னர் நடக்கும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்- காரைதீவு தவிசாளர் எச்சரிக்கை – Thinakkural
    • பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ் வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப்பெயர்ப்பலகை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந் நிலையில் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து வீதி அதிகார சபைக்கு விரைவாக குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் (தொலைநகல் வாயிலாகவும்) அனுப்பியிருந்தார். ஒரு கடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் அகற்றாத நிலையில் பிரதேச சபை ஒன்றிற்குச் சொந்தமான வீதியை மத்திய அரசாங்க நிறுவனமாக இருந்தால் என்ன எந்த நிறுவனமாக இருந்தால் என்ன எக் காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் புனரமைக்க முடியாது எனத் தெரிவித்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு பணித்திருந்தார். இதன்படி பிரதேச சபையினால் குறித்த அறிவிப்புப் பலகை எடுத்துவரப்பட்டு சபையில் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம் முறைப்பாட்டை அடுத்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் பிரதேச சபைக்கு வருகைதந்து அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். இதில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை சபையின் அனுமதியின்றி வீதி அதிகார சபை புனரமைப்பதற்கு முயற்சித்தமை சட்டவிரோதம் எனவும் அதனாலேயே சபை ஒன்றிற்கு பகிரப்பட்ட அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே தாம் குறித்த திட்ட பெயர்ப்பலகையை அகற்றியதாகவும் உரிய முறைப்படியான அனுமதி பெறப்பட்டால் அல்லது உரியவாறு அணுகினால் குறித்த பெயர்ப்பலகையை கையளிக்கத் தயார் எனவும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். மேலும், பிரதேச சபை என்பது அதிகார பகிர்விற்கான ஓர் இலகு என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் சட்டத்துக்கு விரோதமானதும் தேவையற்ற தலையீட்டையும் தாமும் தமது சபையும் ஏற்க முடியாது. அபவிருத்திக்கு நாம் தடை அல்ல. ஆனால் அதனை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப பொறுப்புச்சொல்லும் பாங்குடன் மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்குமூலம் – Thinakkural
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.