Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அண்ணன் தியாகி திலீபன் நினைவுக் கவிதை - பாடல்கள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   சிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்
   இது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மரணித்துப் போனவர். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரதமிருக்கத் தொடங்கியவர் செப்டம்பர்  26 ஆம் திகதி 11 வது நாள் அவர் உயிர் நீத்தார். திலீபன் அப்போது 23 வயது மட்டுமேயான மருத்துவபீட மாணவன்.
   சமீபத்தில் பாதுகாப்புச் செயலாளரும், “வெற்றிப் பாதை வழியே நந்திக் கடகடலுக்கு” என்கிற நூலை எழுதியவருமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன 
   என்று அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு எதிரான போரைப் பற்றி 900 பக்க நூலை எழுதிய கமல் குணரத்னவுக்கு 1987 ஆம் ஆண்டு இந்தியப் படைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார் என்கிற தகவலைக் கூட அறிந்திருக்கவில்லை என்பதோடு திலீபன் நோயால் மரணித்தார் என்கிற அண்டப் புளுகையும் சொல்ல முடிகிறதென்றால் அதிகாரத்துவ இனவெறி எகத்தாள வெளிப்பாடாக மட்டுமே நம்மால் கணிக்க முடியும். மேற்படி அவரின் கருத்தை பல சிங்கள ஊடகங்களும் பெரிதுபடுத்தி வெளியிட்டிருந்தன. அக்கருத்தை உள்வாங்கிக்கொண்ட சிங்கள வெகுஜன உளவியல் அதை அப்படியே பிரதிசெய்து பல இடங்களிலும் வினையாற்றி வருவதை காண முடிந்தது.
   மாவீரர் தினத்தை மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், நினைவு கொள்ள விடாதது போல திலீபன் நினைவையும் மேற்கொள்ள முடியாதபடி கடும் கட்டுப்பாடுகளை திணித்துவருகிறது.
   இறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக எங்காவது கல்லறைகளை உருவாக்குவதன் மூலம், நம்முடைய அன்புக்குரியவர் மீதுள்ள அன்பையும், அவரின் நினைவையும் நிரந்தரமாக நிலைநிறுத்த முயற்சிக்கிறோம். எல்லாளன் துட்டகைமுனு சண்டையின்போது துட்டகைமுனு எல்லாளனைக் கொன்ற போதும். போரில் தோற்கடிக்கப்பட்ட தனது எதிரி எல்லாளனுக்காக துட்டகைமுனு ஒரு கல்லறைக் கோபுரத்தை அமைத்து துட்டகைமுனுவுக்கு மரியாதை செய்ய மறக்கவில்லை என்பதை மகாவம்சம் வழியாக அறிகிறோம். அந்தக் கல்லறை வழியாக கடந்து செல்லும் எவரும் அங்கு வந்து தமது தலைக்கவசங்களை கழற்றி கௌரவம் செய்யவும் உத்தரவிட்டாராம் துட்டகைமுனு.
   இறந்துபோனபின் ஒருவரின் கல்லறை மதம், இனம், இனம், சாதி என்பவற்றினதும் சின்னமாக ஆகிவிடுவதில்லை. மறுபுறம் இறந்து மண்ணுக்குள் புதைந்துபோன ஓருடல் எந்த சமூக அடையாளங்களுக்கும் சொந்தமாகிவிடுவதில்லை. ஒருவரையோ, ஒரு நிகழ்வையோ நினைவுகொள்வது என்பது அரசியல் பண்பாடல்ல மாறாக வழிவழிவந்த பண்பாட்டு மரபின் தொடர்ச்சி, அதற்கென்று பண்பாட்டுப் பெறுமதி, அரசியல் பெறுமதி, அறப்பெறுமதி, மரபுப் பெறுமதி என ஒரு திரட்சியான பெறுமதியைக் கொண்டிருக்கிறது. நினைவுகொள்ளல் என்பது நமது மரபின் ஒரு அங்கமாகவே ஒட்டியிருக்கிறது. அதை வெறுப்பதும், மறுப்பதும், தடுப்பதும் பண்பாட்டு அறமுள்ள ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் இனக்குரோதத்துடன் அந்த நினைவழிப்பு வன்முறை ஒரு தொடர் நிகழ்வாகவும், பேரினவாத அரசியலின் அங்கமாகவும் ஆகியிருக்கிறது.
   இலங்கையில் நிகழ்ந்த போரில் உயிரிழந்த சிங்கள இராணுவத்தினருக்கு சிங்களப் பிரதேசங்களில் மாத்திரமன்றி தமிழர் பிரதேசங்களெங்கும் ஏராளமான நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டு நினைவுச் சின்னங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவை சிங்கள பௌத்த வீரத்தனத்தின் பெருமையாக கொண்டாடப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பல இராணுவ நினைவுத் தூபிகளில் ஒரு கையில் சிங்கக் கொடியையும், மறு கையில் துப்பாக்கியையும் உயர்த்தி ஏந்தியபடி இருக்கும் சிலைகள் நிறுவப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

   யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளின் நினைவாக அங்கு உருவாக்கப்படிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் அவர்களின் சொந்தங்கள் வந்து அழுதாறி, தீபத்தை ஏற்றி, ஒரு பூவை வைத்துவிட்டுச் செல்ல உரிமை இருந்தது.
   ஆனால் “சமாதானத்துக்கான யுத்தம்” என்றும், “தமிழர்களை பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்கும் யுத்தம்” என்றும் போர் புரிந்த சிங்கள அரசு; போர் நிறைவடைந்ததன் பின்னர் அம்மக்களுக்கு ஏற்கெனவே இருந்த அந்த உரிமையை மறுத்துவிட்டது. அம்மக்கள் அதுவரை அழுதாறி வந்த அந்தக் கல்லறைகள் எதையும் மிச்சம் வைக்காது புல்டோசர் வைத்து தகர்த்து சின்னாபின்னமாக அழித்து விட்டது. அப்படி அடையாளம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்ட இடங்களில் அந்தக் கல்லறைகளுக்கு சொந்தமானவர்களின் தாய்மார்களும், பிள்ளைகளும், சகோதரர்களும், துணைவியரும், உறவினர்களும் வந்து ஒரு பொது இடத்தை தெரிவு செய்து ஒரு தீபத்தை ஏற்றக் கூட விடாமல் யுத்தம் முடிந்து இந்த பதினோரு வருடங்களாக தொடர்ந்தும் தடுத்து வருகிறது சிங்கள அரசு.
   இடிக்கபடுவதற்கு முன்னர் இருந்த திலீபனின் நினைவுத் தூபி சிசிரவின் பதிவுக்கு...
   அரச அதிகாரத்தின் மறுப்பு இப்படி இருக்கையில் மறுபுறம் திலீபனைக் கொண்டாடும் சிங்களத் தோழர்கள் பலரும் இருக்கவே செய்கிறார்கள். ஊடகவியலாளரும் இடதுசாரி முகாமைச் சேர்ந்தவருமான சிசிர யாப்பா திலீபன் மாபெரும் கூட்டமொன்றில் உரையாற்றிக்கொண்டிருக்கும் படத்துடன் ஒரு குறிப்பையும் முகநூலில் பகிர்ந்திருந்தார்.
   என்று எழுதியிருந்தார். இந்தப் பதிவை அவரின் பக்கத்திலிருந்து மாத்திரம் 170 சிங்கள நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இப்படி வேறு சில சிங்கள தோழர்களும் திலீபனின் நினைவேந்தலை செய்திருந்தனர். சிசிர யாப்பாவின் பதிவின் கீழ் அப்பதிவை வரவேற்று பல பதிவுகள் இருந்தன. அதுபோல அவரை சபித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் பல வாதங்கள் அங்கே காணப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திலீபனை வலுக்கட்டாயமாக சாக அனுப்பியதாக அங்கே விவாதங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு சிசிர யாப்பா தான் அறிந்த திலீபன் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறார்.
   மறுபுறம் இன்னொரு சிங்கள நண்பர் சிசிரவிடம் கேட்கிறார்.
   என்கிறார்.
   திலீபனை சிங்கள சமூகத்திடம் கொண்டுபோய் சேர்த்ததில் ஜயதிலக்க பண்டாரவுக்கு முக்கிய பாத்திரமுண்டு.
   மருத்துவ மாணவரும், புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளருமான திலீபனுக்காக நல்லூர் கோவில் அருகில் கட்டப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இப்போது அங்கில்லை. திலீபன் போர் புரிந்து கொல்லப்பட்டவரும் அல்ல. தன் மக்களுக்காக விடாப்படியான உண்ணாவிரதம் இருந்து மரணித்த ஓர் உண்ணாவிரதி.
   உடைத்து அழிக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவுத் தூபி ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் இந்தோ-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் இந்திய துருப்புக்கள் பங்கு வகிப்பதை எதிர்த்து ஐந்து கோரிக்கைகளை எதிர்த்து திலீபன் 1987 செப்டம்பர் 15 அன்று ஒரு கொடிய உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தின் நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள நிலத்தை திலீபன் தேர்வு செய்தார். உண்ணாவிரதமிருந்த அந்தப் பகுதியை நோக்கி மக்கள் தொகைதொகையாக வந்து ஒன்று கூடினர். பலர் இரவுபகலாக அங்கேயே அமர்ந்திருந்தனர். திலீபனுக்காக பாடல்களையும் பாடினர். 
   மகாத்மா காந்தி மற்றும் திலீபனின் உருவத்தை தாங்கிய பதாகைகள் அந்த இடத்தை அலங்கரித்தன. திலீபன் தன் இலட்சியத்துக்காக மரணத்தை அண்மித்துக்கொண்டிருந்தார். அவருக்காக பக்திப் பாடல்களைப் பாடிய தமிழ் மக்கள் திலீபனின் தலைவிதியை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை. கையறுநிலை. உண்ணாவிரதம் தொடங்கி பதினொரு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 26, 1987 அன்று, திலீபன் மூச்சுத்திணறினார். திலீபனின் கடைசி பெருமூச்சுடன் அந்த இடமெங்கும் கூடி இருந்த தமிழ் மக்களின் கண்களில் இருந்து ஏக்கம் மிகுந்த வேதனையும் கண்ணீரும் பெருமூச்சும் பீறிட்டது. திலீபன் ஒரு நிராயுதபாணியாகவும் அமைதியாகவும் இலட்சிய மரணத்தைத் தழுவினார். திலீபனின் மரணம் அரசியல் வர்ணனையாளர்களால் "ஆயுதங்கள் மீதான நம்பிக்கை; வன்முறையற்ற போர் வடிவமாக மாற்றுவதற்கான வாய்ப்பு" என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் திலீபனின் மரணம் வடக்குக்கு மட்டுமன்றி தெற்கும் முக்கிய செய்தியாக அமைந்தது.
   நினைவுகளையும் எங்கே புதைத்தீர்கள்?
   வடக்கைப் போலவே தெற்கில் உள்ள மக்களுக்கும் திலீபனின் இறப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி பல்வேறு பல்வேறு கலை, இலக்கிய படைப்புகளால் பேசுபொருளானது பெப்பிலியானா சுனேத்ராதேவி பிரிவேனாவின் தலைவராக இருந்த கோன்கஸ்தெனிய ஆனந்த தேரோ என்கிற ஒரு பௌத்த பிக்கு இந்தச் சம்பவத்தால் மனம் நொந்து போனவர்களில் ஒருவர். அவர் ஒரு படைப்பாளியும் கூட. அவர் தனது கவிதைப் படைப்பால் பட்டினிப் போராட்டம் இருந்து மரணித்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
   இப்படியான கவிதைகளை யுக்திய பத்திரிகை அப்போது வெளியிட்டது. யுக்திய பத்திரிகை தென்னிலங்கையின் முக்கிய மாற்றுப் பத்திரிகையாக இருந்தது. இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தினால் அது அப்போது வெளியிடப்பட்டு வந்தது. இதே இயக்கத்தின் வெளியீடாக அப்போது பிரபலமான தமிழ் மாற்றுப் பத்திரிகையான சரிநிகரும் வெளிவந்தது. இந்தக் கவிதையை ஒரு பாடலாக நாடெங்கும் சிங்கள மேடைகளில் கொண்டு சென்றார் பிரபல சிங்களப் பாடர் ஜயதிலக்க பண்டார. 1971 ஜேவிபி கிளர்ச்சியில் பங்குகொண்டு நான்கு வருடங்கள் சிறைத்தண்டையும், சித்திரவதையும் அனுபவித்து விடுதலையானவர். அதன் பின்னர் மீண்டும் ஜே.வி.பியின் “விடுதலை கீதம்” (விமுக்தி கீ) அணியில் இணைந்து பல தொழிலாளர் வர்க்க எழுச்சிப் பாடல்கல் பலவற்றை பாடியிருக்கிறார் ஜயதிலக்க பண்டார. அடிமட்ட மக்களின் போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் ஒரு கலைஞராக அவர் தனது பாடல்களால் பங்களித்தார். அது மட்டுமன்றி அநியாயத்துக்கு எதிரான பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் அவரைக் காணலாம்.
   90களின் நடுப்பகுதியில் சந்திரிகாவின் ஆட்சிகாலப்பகுதியில் “வெண்தாமரை இயக்கம்” நாடளாவிய ரீதியில் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் சமாதான உறவை வளர்க்கும் என்கிற நம்பிக்கை தோழர் ஜயதிலக்க பண்டாரவுக்கு இருந்தது. அதனால் அவர் வெண்தாமரை இயக்க பிரச்சார மேடைகளில் பிரதான பாடகராக ஜொலித்தார். தமிழ் மக்களின் துயரங்களைச் சொல்லும் பல பாடல்களை அவர் பாடினார். “பயத்திலிருந்து விடுபடுவோம்” (‘බියෙන් අත්මිදෙමු’) என்று அன்று ஜே.வி.பியின் மேடைகளில் பாடிய பாடல்களை மீண்டும் இந்த மேடைகளில் பாடினார். அந்தப் பாடல்ககள் வரிசையில் முக்கிய பாடலாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையைச் சேர்ந்த திலீபனின் உண்ணாவிரத இறப்பை நினைந்து பாடப்பட்ட இந்தப் பாடல்.
   அவர் 2017 ஆம் ஆண்டு வெளியான “சமபிம” என்கிற சிங்கள சஞ்சிகையில் “நினைவுகளையும் எங்கே புதைத்தீர்கள்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
   என்று உருகுகிறார்.
   “ஆனால் இனி முத்தமிடுவதற்கு மட்டுமல்ல நினைவு கொள்வதற்கோ கூட அந்த சிலை அங்கில்லை. அது இடித்து வீசியெரியப்பட்டுவிட்டது...”  என்கிறார்.
   மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார். 
   என்று ஏக்க அழுகுரலில் ஜயதிலக்க பண்டார கூறுகிறார்.
    
    
   இந்தப் பாடலின் உள்ளடக்கத்தையும், அதன் மெட்டும், உருக்கமான இசையையும் கேட்டு அழுத சிங்களவர்களை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக வெண்தாமரை இயக்கம் முன்னெடுத்த “சாது ஜன ராவ” என்கிற இசை நிகழ்சிகளை பார்வையிட குழுமியிருந்த சிங்களவர்கள் பலர் அழுதிருக்கிறார்கள். “சாது ஜன ராவ” இசை நிகழ்ச்சி இலங்கையின் மூலை முடுக்கெங்கும் 1200 க்கும் மேற்பட்ட தடவைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு வீதி வீதியாக சென்று “வீதியே விரோதய” (வீதியில் எதிர்ப்பு) என்கிற வீதி நாடகத்தை நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்தினார்கள். அந்த வீதி நாடகத்தின் பிரதான பாடல் குரல் ஜயதிலக்க பண்டாரவினது. நாட்டின் அராஜகத்தை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட நாடகம் அது. 2014 நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வீதி வீதியாக நடந்து பல நாட்கள் சென்றது அந்த நாடகக் குழு. டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை நகரத்தில் வைத்து ராஜபக்ச அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும் மேயருமான  எராஜ் தன் சண்டியர்களுடன் சேர்ந்து அந்தக் குழுவை கடுமையாக விரட்டி விரட்டி தாக்கியது. ஜயதிலக்க பண்டார கடுமையாக தாக்கப்பட்டார்.
   ராஜபக்ச அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக அவரின் நண்பர்கள் அவரை நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர் ஐரோப்பாவுக்கு வந்திருந்தபோது அவர் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் தான் தங்கிருந்தார். தோழர் ஜயதிலக்க பண்டாரவுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர் சோர்ந்து காணப்பட்டார். எப்போதும் இயங்கியே பழகிய மனிதர் இங்கு வந்து அரசியல் ஓர்மம் பிடுங்கப்பட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தவராக இருந்தார். நான் இங்கு இருக்க மாட்டேன் சென்று விடுவேன் என்றார். அதுபோலவே அச்சுறுத்தல் மத்தியில் மீண்டும் நாட்டுக்குச் சென்று வாழ்ந்து வருகிறார். 
   திலீபனைப் பற்றிய பாடல் மட்டுமன்றி அவர் தமிழர்களுக்காக பாடிய ஏனைய பாடல்களையும் நீங்கள் கேட்க வேண்டும்.
   யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் போர் கொண்டாட்ட, போர் களிப்பு பாடல்கள் தென்னிலங்கை சிங்களவர் மத்தியில் வெகுஜன ரசனையை உயர்த்தும் அளவுக்கு போர் போதை ஊட்டப்பட்டாகிவிட்டது.
   திலீபனை நினைவுகொள்ள முடியாதபடி ஸ்ரீலங்கா இனவெறித் தேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், உறுமல்களும், மிரட்டல்களும் "தமிழருணர்வைத்" தான் ஊட்டிப் பெருக்கியிருக்கிறது என்பதை சிங்களத் தேசம் அறியாது. செப்டம்பர் 15-26 வரையான நாட்களையும் சினமேற்றும் நாட்களாக சிங்களத் தேசம் ஆக்கியதாக புரிந்துகொள்கிறோம்.
   சீப்பை ஒளித்துவிட்டால் கலியாணம் தான் நின்றுவிடுமா? நினைவுகொள்ளலை மறுத்துவிட்டால் மறதிதான் வந்திடுமோ? கல்லறைகளை சிதைத்துவிட்டால் வேட்கைதான் ஓய்ந்திடுமா?
   நன்றி - தாய்வீடு - ஒக்டோபர் 2020

       https://www.namathumalayagam.com/2020/10/dileepan.html
  • By தமிழரசு
   திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்
   திலீபனிற்கு
   தீபம் ஏற்றுவோரே
   பார்த்தீபனின்
   பாதம் தொழுவோரே
   ஈகச் சிகரத்திற்கு
   மாலை தொடுப்போரே
   அதிசய வள்ளலுக்காய்
   கசிகின்ற நெஞ்சோரே
   மனதிலேற்றுங்கள்…
   எங்கள்
   பார்த்தீபன்
   இப்போதும்
   பசியோடுதான் இருக்கிறான்
   சிறுகச் சிறுகச் சேர்த்து
   நிமிரக் கட்டிய மனையும்
   உயிரைப் பிரியும் பொழுதில்
   தந்தை
   உயிலாய்த் தந்த வளவும்
   இன்பம்
   பெருகப் பெருக நாங்கள்
   ஓடித்திரிந்த தெருவும்
   உள்ளம்
   உருக உருகக் கண்ணீர்
   விட்டுப்பிரிந்த ஊரும்
   திரும்பக் கிடைக்கும்
   காலம் வரைக்கும்,
   எங்கள்
   பார்த்தீபன்
   பசியோடுதான் இருப்பான்
   நாளும் பொழுதும்
   கண்ணைக் கரைத்து
   நாளை வருவார்
   நாளை வருவார்
   என்றே தங்கள்
   இதயம் வதைத்து
   கொலைஞர் பிடித்த
   உறவை நினைத்துக்
   கதறும் மனங்கள்
   இருக்கும் வரைக்கும்,
   எங்கள்
   பார்த்தீபன்
   பசியோடுதான் இருப்பான்
   சதியும் வெறியும்
   ஒன்றாய்க் கலந்து
   கருணை கனிமை
   எதுவும் மறந்து
   எங்கோ பிறந்து
   மனிதம் துறந்து
   எங்கள் மண்ணில்
   மரணம் விதைத்து
   துயரச் சுமையுள்
   எம்மைத் திணிக்கும்
   கொடுமைப் படைகள்
   எரியும் வரைக்கும்,
   எங்கள்
   பார்த்தீபன்
   பசியோடுதான் இருப்பான்
   உயிரை உடலை
   உறவைத் துறந்து
   உணர்வு முழுதும்
   தமிழைக் கலந்து
   விடியும் காலைக்
   கதிராய் விரிந்து
   தமிழர் தேசக்
   கனவை வரித்து
   மண்ணின் மானம்
   பெரிதாய் மதித்து
   மண்ணுள் உறங்கும்
   மாந்தர் கேட்கும்
   விடுதலை வந்து
   சேரும் வரைக்கும்,
   எங்கள்
   பார்த்தீபன்
   பசியோடுதான் இருப்பான்
   ஆகவே…
   பசித்த வயிற்றோடு
   பாடையேறிய
   எங்கள்
   பார்த்தீபன் கனவுகள்
   மேடையேறி முழங்கவல்ல
   தீபமேற்றி வணங்கவல்ல,
   களத்திலேறிப் பகைமுடிக்க
   நெருப்பிலேறிக்
   கொடிபிடிக்க
   தீர்வெடுங்கள்
   திலீபனிற்குத் தேவையான
   உணவை
   உங்களால்தான்
   சமைக்க முடியும்.
  • By கிருபன்
   தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…!
   AdminSeptember 15, 2021 செப்.15 – 1987
   🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்!
   காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார்.
   பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.
   அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.
   🔴தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்
   எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா தள்ளாத சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார்.
   சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத் திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப் போனார்.
   🔴போராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்)
   காலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது.
   அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள்.
   தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.
   🔴ஐந்து அம்ச கோரிக்கை
   1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
   2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
   3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
   4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
   5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக் கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
   பிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக் கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டிருந்தது.
   ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணா விரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
   🔴வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்
   அதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப் பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன.
   இரண்டாவது மேடையிலே நடைபெற்றுக் பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.
   15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின், யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்.
   🔴மாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்…
   அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று.
   பாடசாலை மாணவிகள் போட்டி பாட்டுக் கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார்.
   “அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க் குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது.
   கவிதைத் தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத் தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.
   🔴திலீபனின் தியாகப் பயணம் ஓர்…..
   ஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார்? சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.
   🔴நல்லூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடம்….
   உலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா?
   இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க் கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது.
   ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன்.
   அப்போது ஒர் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணா விரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார்.
   🔴தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.
   இந்தக் காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம்.
   திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பது போல் கைகளை தட்டி ஆரவாரித்தனர்.
   அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.
   அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால் தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச் சென்றார்.
   ட வருகை!
   அன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
   அதிகம் பேசி உடம்பை கெடுத்துக் கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.
   முதல் நாள் முடிவு, அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்.
   அவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கிய போது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார்.
   தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொதுமக்களும் கொட்டக் கொட்ட கண்விழித்துக் கொண்டிருந்தனர்.
   இந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.
   – தியாக வேள்வி தொடரும்….
   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
    
   http://www.errimalai.com/?p=56007
  • By karu
   இன்று அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நினைவு நாள் மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெடுக்கவா - ஈழத் தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும் தாங்குவன் நானெனக் கூறியே பாயும் புலி எம் திலீபனும் - பெரும் பட்டினிப் போரைத் தொடங்கவே இந்தியச் சோதரர் இஃதினை எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள் முந்தைய வாக்குறுதி தனை - விட்டு மோசங்கள் செய்யத் தொடங்கினர் சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள் தேச விடுதலைப் போரினைத் - தங்கள் சொந்த நலன்களைப் பேணவே சொதப்பிடலாமென எண்ணினர் நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள் நன்மைகளுக் கொரு காப்பிலை ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில் ஆயிரமாய்க் குடியேற்றலும் சாக்குச் சமாதானம் கூறலும் சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப் போக்கினர் காலம் திலீபனோ - தன்றன் பொன்னுடல் தேயத் தொடங்கினான் மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று மன்னவன் மண்ணின் விடுதலைத் தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ தேசம் அழுது துடித்தனள் பாயும் புலி பசும் புல்லினை - தன்றன் பட்டினி போக்கப் புசிக்குமோ - அட வாயில் வயிற்றில் விடுதலைப் பசி வாட்டத் துடித்தது அவனுயிர் காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன் கருணை உரைத்த உயர் நிலம் - பச் சோந்திகளின் புதரானதால் - எங்கள் சோகத்தை யாரும் மதித்திலர் ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு) என்ன எனத் திமிர் கொண்டுமே சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி செய்தனர் எம்மை ஒடுக்கவே நீருமருந்த மறுத்துமே - கொடு நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப் பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள் பாலகன் தன்னுயிர் நீத்தனன் ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில் ஈரமில்லாதவரோடினிக் - கதை ஏதென ஈழம் தெளிந்தனள் அன்னை பூபதி இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின் எதற்கினி வாழ்வெனக் கென்றுமே தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு தாய் எழுந்தாள் அந்த நாளிலே அன்னை அவள் பெயர் பூபதி - தன் ஐம்பத்தியாறு வயதிலே உன்னி விடுதலைக் காகவே - தன் உணவை மறுத்தனள் சாகவே பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ பூமியிற் சோகம் கவிந்தது சேய் பதினாயிரம் சேர்ந்திட - மறச் சேனை பெருகிச் சிறந்தது வாபதில் சொல்கிறோம் என்று - நின்றிட்ட வானர சேனையிற் பாய்ந்தது தாயவள் காளி விழித்தனள் - இந்தத் தாரணி ஆடச் சிரித்தனள்
  • By goshan_che
   பார்திபன் கனவு
   எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது,
   அவன் மனதில் அனல் குடி இருந்தது.
   உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, 
   எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. 
   சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை,
   எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு,
   சிதைத்தது பாரத வஞ்சத்தை.
   பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம்.
   போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது.
   அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம்.
   இருக்கட்டும்,
   அவன் இதயம் வேங்கையினது.
   அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். 
   ஆனால்,
   பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன்.
   மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன்,
   இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்துவகல்விக்கு உடலை விருந்தாயும் தந்தான்.
   தடை போடலாம் அவன் நிகழ்வுகளுக்கு,
   எம் மனதில் தினம் ஏந்தும் நினைவுகளுக்கு?
   பார்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான். அவன் கனவும் .....
   —கோஷான்—
    

 • Topics

 • Posts

  • தலைவர் மகளுக்கு பாஸ்போர்ட் எடுத்கதை பச்சை பொய் எண்டு ஊருக்கே தெரியும் அதை நீங்கள் நிருபிக்க தேவையில்லை. அப்படி ஒரு செய்தி வந்ததாக ஆதாரம் காட்டினீர்கள் (வேறு திரியில்).  ஆதாரத்துக்கு நன்றி சொல்லி - ஆனால் இது பொய் செய்தி என்று அதே திரியில் விளக்கினேன். இந்த திரியிலும் அதே விளக்கத்தை மீள தந்தேன். நீங்கள் நிரூபிக்க வேண்டியது விக்கியின் மகன் பற்றி நீங்கள் எழுதியதை மட்டுமே.  அதை நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே உள்ளேன்.  நான் சொல்வது விளங்குதுதானே?
  • அப்படி ஒரு செய்தியே பொய்யாக திரிக்கப்பட்ட செய்தி என்றே ஆரம்பத்தில் இருந்து கூறுகிறேன். அதைதான் ஏனைய உறவுகளும் வந்து கூறினார்கள். செய்தி போட்டது சிங்கள ஊடகமும், இந்திய ஊடகமும் - அவற்றின் நம்பகதன்மை பற்றி ஊரே அறியும். நீங்கள் செய்தி வந்த இணைப்பை இணைத்தீர்கள் - ஆனால் அந்த செய்தியே ஒரு பொய். ஐயோ மீண்டும் வாசிப்பதில் பிரச்சனையா? உண்மை என நிரூபிக்க சொன்னது விக்கிமகன் மீதான அவதூறை. அதை நீங்கள் நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே இருக்கிறேன்.
  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி லெப் கேணல் அமிதாப்    
  • இனி என்ன ஆதாரம் வேண்டும்? தல... இன்னும், இன்னும் அலம்பறை பண்ணி மொக்கையீனப் படக்கூடாது. நான் மிக தெளிவாக சொல்லிவிட்டேன்..... நான் சந்திரிக்கா பாஸ்போட் உடன் துவாரகாவுக்கு நல்வாழ்த்து அட்டையும் அனுப்பியிருந்தார் என்று வாசித்ததாக..... அப்படி ஒரு செய்தியே இல்லை..... பொய் சொல்கிறேன் என்றீர்கள்..... பத்திரிகை இணைப்பைத் தந்தேன்..... அதிலுள்ளது பொய்செய்தி என்று டகாலடியாக மாத்தி உருட்டுகிறீர்கள்..... கடந்த ஆறு மணி நேரமாக...... நான் அப்படி ஒரு செய்தி வந்ததை, வாசித்ததை, ஆதாரத்துடன் நிரூபித்து விட்டேன். அது பொய் செய்தியா, இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று நேர்மையாக சொன்னேன். அதனை உண்மை என்று நிரூபித்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று மீண்டும் குழம்பி, குழப்புகிறீர்கள்...... எதனை? எப்படி நிரூபிப்பது என்று ஒரு ஜடியாவாவது தாருங்கோ. 😊
  • இன்னும் போகேல்லியா?🤣 மீண்டும் சொல்கிறேன் உங்கள் குழப்பத்தின் அடிப்படை தலைவர் குடும்பம் “ஒரு காலமும்” வெளிநாட்டில் வசிக்கவில்லை என நான் கூறியதாக நீங்கள் விளங்கி கொண்டதுதான். நான் அப்படி கூறவே இல்லை. இதை புரிந்து கொண்டால் - நான் கூறியது முழுவதும் இந்த பாஸ்போர்ட் பற்றிய பொய் செய்தியையும், அதை தொடர்ந்து தலைவர் குடும்பம் பற்றிய அவதூறுகள் பற்றியுமே என விளங்கும். தவிரவும் இந்த பாஸ்போர்ட் செய்தி பொய் என்பதிலோ, அல்லது விக்கியின் மகன் பற்றிய கூற்று அவதூறு (ஆதாரம் தரும் வரை) என்பதிலோ ஒரு மாற்றமும் இல்லை. ஆதாரம் தந்தால் கருத்தை மாற்றி கொள்ளவும் தயாராகவே உள்ளேன். சரி போய் சாப்பிடுங்கோ. 2 மணியாகப்போது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.