-
Tell a friend
-
Topics
-
6
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
அந்தம்மாவுக்கு.... பூட்டப் பிள்ளைகளும் இருக்காம், பாஞ்ச் அண்ணே. 🤪 -
இது நேர்மை. பாராட்டுக்கள். 👍
-
By பிழம்பு · பதியப்பட்டது
சமீபத்தில் நடத்தப்பட்ட ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க வரும் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதுதான் கருத்துக் கணிப்பின் இறுதி முடிவாக வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி! தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில் 158 முதல் 166 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு வங்கி 1.7 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி) அ.தி.மு.க கூட்டணி! அ.தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில், 60 முதல் 68 இடங்கள் வரை கைப்பற்றும் என்று ஏபிபி கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்ற வாக்கு சதவிகிதம் - 43.7. *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி) அ.ம.மு.க! டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2 முதல் 6 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க உடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.8 சதவிகித வாக்குகள் அ.ம.மு.க பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ம.நீ.ம! நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 0 முதல் 4 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. 6.7 சதவிகித வாக்குகளை ம.நீ.ம கவரும் என்ற தகவலும் கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர்! தமிழகத்தில் மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது ஏபிபி. அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு 36.4 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதாகவும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு 25.5 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. `தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 166 இடங்கள் வரை வெல்லும் வாய்ப்புள்ளது' என்கிற ஏபிபி-யின் கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் நோக்கர்களின் பார்வை என்னவாக இருக்கிறது? ``166 இடங்களை தி.மு.க கைப்பற்றும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க கூட்டணியில் முக்கிய இடம் பிடித்துள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை முன்னிறுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் தி.மு.க கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒருவேளை தி.மு.க தலைமை, கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டால் 166 இடங்கள் என்பது சந்தேகமே. தி.மு.க - அ.தி.மு.க மேலும், அ.ம.மு.க-வை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படி இணைக்கப்பட்டால், அ.தி.மு.க கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் தி.மு.க கூட்டணியின் எண்ணிக்கை குறையும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ள ம.நீ.ம, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் நிலவரம் குறித்து, ``மக்கள் நீதி மய்யம் நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும். புதிய வாக்காளர்கள் பலரும் ம.நீ.ம-வுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆனால், 4 சீட்கள் வரை அக்கட்சி வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒரு இடத்தை அக்கட்சி கைப்பற்றுவதே சிரமம்தான். அ.ம.மு.க-வுக்கு சசிகலா வருகை பலமாக அமையும். சசிகலா வருகைக்குப் பிறகு அ.தி.மு.க-விலிருந்து சிலர் அ.ம.மு.க பக்கம் தாவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் அ.ம.மு.க, நிச்சயம் ஒரு சில இடங்களில் வெற்றிபெறும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தி.மு.க-வினர் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில், ``இது தி.மு.க-வின் ஐபேக் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு. இதில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் போலியானது என இன்னும் 3 மாதங்களில் தமிழக மக்கள் நிரூபிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்'' என்று தைரியமாகச் சவால் விடுகிறார்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க 68... ம.நீ.ம 4... தி.மு.க-வுக்கு எத்தனை..? ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?! | ABP Opinion poll and political analyst views on 2021 Tn election (vikatan.com) -
**** மேன்மை பொருந்திய ஜனாதிபதி கோத்தபாய அவர்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது. நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காமல், மக்கள் வாழ உதவப்பாருங்கள்.🇨🇳
-
By விளங்க நினைப்பவன் · Posted
தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லபடுபவர்கள் தான். அட்டூழியம் செய்த காரணத்தால் இந்திய மீனவர்கள் என்று அழைக்கபடுகிறார்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.