Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை? கேவலமான பிழைப்பு !

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

லண்டன் சந்திப்புகளுக்கு நான் வந்துள்ளேன். கலந்துகொள்ளவில்லை🤣

"ஒளிச்சு நின்று பார்த்தனான்" என்று கதை சொல்ல போறீங்களோ 😉

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தனி மடல்லை போட்டுவிடுங்கோ பிரிண்ட் பண்ணி  அழகு பாப்பம்...😎

சுவரில மாட்டாதவரை ஓகே🤣

2 minutes ago, ரதி said:

"ஒளிச்சு நின்று பார்த்தனான்" என்று கதை சொல்ல போறீங்களோ 😉

கணா ரெஸ்டூரண்ட் என்ன MI5 தலமையகமா ஒளிச்சு நிண்டு பார்க்க🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சுவரில மாட்டாதவரை ஓகே🤣

கணா ரெஸ்டூரண்ட் என்ன MI5 தலமையகமா ஒளிச்சு நிண்டு பார்க்க🤣

கிருபன், நான் உங்களுக்கு சொன்னனான் எல்லோ அங்கால  பக்கமிருந்து கண்ணாடி போட்ட ,கொஞ்ச்ம மொட்டையான ஒரு நடுத்தர வயசு ஆள் அடிக்கடி  எட்டிப் பார்க்கிறார் என்று ...இவர் தான் ஆள்🤣 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

கிருபன், நான் உங்களுக்கு சொன்னனான் எல்லோ அங்கால  பக்கமிருந்து கண்ணாடி போட்ட ,கொஞ்ச்ம மொட்டையான ஒரு நடுத்தர வயசு ஆள் அடிக்கடி  எட்டிப் பார்க்கிறார் என்று ...இவர் தான் ஆள்🤣 

🤣 பார்க்க இளமைக்கால செந்தில் போல இருந்திருப்பாரே?

large.8DCC58D8-B43B-40F4-A013-64CF2CC4AB4F.jpeg.95dee15b73418f1efa23771e5453e0aa.jpeg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கிருபன், நான் உங்களுக்கு சொன்னனான் எல்லோ அங்கால  பக்கமிருந்து கண்ணாடி போட்ட ,கொஞ்ச்ம மொட்டையான ஒரு நடுத்தர வயசு ஆள் அடிக்கடி  எட்டிப் பார்க்கிறார் என்று ...இவர் தான் ஆள்🤣 

தல... என்னையா இது......

இந்த லெவலில 80’s kid எண்டது கன்போம்ட் தான் போலை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

தல... என்னையா இது......

இந்த லெவலில 80’s kid எண்டது கன்போம்ட் தான் போலை.

81 ஏ எல் எண்டா 70s kid ஐயா

மேல நானும் குசா அண்ணையும் நிக்கிற போட்டோ போட்டிருக்கு பாருங்கோ.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

82 A/L Holy Family Convent. நடிகை ராதிகா ரெண்டு class எங்களுக்கு மேல. நெடுகளும்  young  ஆக இருக்கமுடியாதுதானே? ஓமோம் 74' களில் இருந்து போனேன். சுவாமி ப்ரேமாத்மானந்தஜி தான் அப்போதைய சுவாமி. கணபதிப்பிள்ளை டீச்சர் , மலர் டீச்சர் , தேவகி டீச்சர் எல்லோரும்தான் எங்களுக்கு படிப்பிப்பது . 
அங்கயும் கலர் பார்த்தீர்களா? நாங்கள் கோயிலில் தான் பார்த்தோம். சிவராத்திரிக்கு மிஷன் போய் பஜனை பாடப்போகிறோம் என்று சொல்லிவிட்டு சும்மா தலையை காட்டிட்டு நேரா கோயிலுக்கு போய்விடுவோம். அதெலாம் ஒரு காலம். 

ராத்திக்காவோடை இப்பவும் பழக்கமிருக்கா நில்மினி?படிப்பிலை எப்பிடி கெட்டிக்காரியோ? 😁
அது சரி எல்லாம் கிடக்கட்டும் அங்கை படிச்ச தாரகாவை தெரியுமோ? 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, குமாரசாமி said:

ராத்திக்காவோடை இப்பவும் பழக்கமிருக்கா நில்மினி?படிப்பிலை எப்பிடி கெட்டிக்காரியோ? 😁
அது சரி எல்லாம் கிடக்கட்டும் அங்கை படிச்ச தாரகாவை தெரியுமோ? 😎

நான் அந்தப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 2 வருடத்தில் ராதிகா  முடித்து போய்விட்டா. அத்துடன் சிங்கள மீடியத்தில் தான் படித்தவை என்று நினைக்கிறன். ஆனால் அங்கேயே படித்த எனது மற்ற நண்பிகளுடன் எங்கேயாவது சந்தித்தால் நன்றாக கதைப்பா. எமது குடும்பம் அப்பாவின் வேலை இடமாறல்  காரணமாக நுவரெலியா, ஹட்டன், மாத்தளை, கண்டி என்று மாறி மாறி இருந்து கடைசியில் கொழும்புக்கு வந்தோம். அங்கேயும் வீட்டுக்கு கிட்ட உள்ள  St. Lawrence school (SLC) பள்ளிக்கூடத்தில்தான் 10ஆம் வகுப்புவரை படித்து (அது ஒரு சிறிய வெள்ளைக்கார ரோமன் கத்தோலிக்க 10 ஆம் வகுப்பு வரை  மட்டுமே உள்ள மும்மொழி பள்ளிக்கூடம்). அதன் பிறகுதான் இந்த பள்ளிக்கூடத்தில் படித்தேன். ஆனால் டியூஷன் வகுப்பில் எல்லா பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் ஒன்றாக படித்ததால் நிறைய பேரை பழக்கம். இதன் நடுவில் அம்மம்மா தன்னுடன் வந்து இருந்து வேம்படியில் படிக்கும்படி கேட்டு ஒரு வருடம் (5ஆம் ஆண்டு) படித்தேன். அம்மா அப்பாவை விட்டிட்டு இருக்கமுடியாமல் திரும்ப போய்விட்டேன். தாரகாவை தெரியவில்லை அண்ணா. எந்த A/L batch ? நாங்கள் வெள்ளவத்தையில் இருந்தபடியால் HFC இல் படித்த, எனக்கும் பார்க்க வயது கூடிய குறைந்த நிறைய பேருடன்  இப்பவும் தொடர்பு இருக்கு. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

நீங்கள் போகாத நாடுமில்லை.போகாத ஊருமில்லை.போகாத பள்ளிக்கூடமுமில்லை.தெரியாத ஆக்களுமில்லை.
சகலகலாவல்லி 😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, குமாரசாமி said:

நீங்கள் போகாத நாடுமில்லை.போகாத ஊருமில்லை.போகாத பள்ளிக்கூடமுமில்லை.தெரியாத ஆக்களுமில்லை.
சகலகலாவல்லி 😁

எல்லாம் ஒவ்வொருவரின் பலன்தான். அப்பாவுக்கு சுற்றுலா அதிகம் விருப்பம் இருந்ததால் இலங்கை முழுவதும் சுத்தி திரிந்தோம். பாடசாலை அதிபர் என்பதால் ரயில், பிளேன் வாரெண்டும் இருந்தது. இலங்கையில் சுற்றி திரிந்தது பத்தாது என்று படிக்க மட்ராஸ், சிதம்பரம் என்று போய் கிடைத்த லீவில் எல்லாம் (அப்போது பரீட்சையில் சித்தியடையாதரவர்களுக்கு  செப்டம்பர் மாதத்தில் மீள் பரீட்சை வைப்பார்கள். அந்த நாட்களில்  விடுதியில் சத்தம் போடாமல் ரெண்டு கிழமை இருக்கமுடியாத காரணத்தால்) நண்பிகள் எல்லோரும் சேர்ந்து எனது மாமாவுடன் அல்லது வேறு யாரவது பெரியவர்களின் துணையுடன் இந்தியா முழுவதும்  சுற்றுலா  போனோம். படிப்பு முடிந்து மாலைதீவில் 5 வருடம் வேலை செய்து, நியூசிலாந்தில் 5 வருடம், கனடாவில் ஒரு வருடம் , பிறகு இந்த ஊரில்தான் வாசம். லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன். இளைய மகனுக்கு உங்கள் ஊர் விருப்பம் என்பதால் அங்கும் வந்து நானும் மகனும் ஒரு கார் ரெண்ட் பண்ணி பல இடங்களையும் பார்த்தோம். வயது போன காலத்தில் இலங்கை இந்தியாவை தவிர எங்கும் போக விருப்பம் இல்லை. இப்பவே அநேகமாக எனக்கு விருப்பமான இடங்களை பார்த்தாச்சு. 

Edited by nilmini
 • Like 6
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

எல்லாம் ஒவ்வொருவரின் பலன்தான். அப்பாவுக்கு சுற்றுலா அதிகம் விருப்பம் இருந்ததால் இலங்கை முழுவதும் சுத்தி திரிந்தோம். பாடசாலை அதிபர் என்பதால் ரயில், பிளேன் வாரெண்டும் இருந்தது. இலங்கையில் சுற்றி திரிந்தது பத்தாது என்று படிக்கச மட்ராஸ், சிதம்பரம் என்று போய் கிடைத்த லீவில் எல்லாம் (அப்போது பரீட்சையில் சித்தியடையாதரவர்களுக்கு  செப்டம்பர் மாதத்தில் மீள் பரீட்சை வைப்பார்கள். அந்த நாட்களில்  விடுதியில் சத்தம் போடாமல் ரெண்டு கிழமை இருக்கமுடியாத காரணத்தால்) நண்பிகள் எல்லோரும் சேர்ந்து எனது மாமாவுடன் அல்லது வேறு யாரவது பெரியவர்களின் துணையுடன் இந்தியா முழுவதும்  சுற்றுலா  போனோம். படிப்பு முடிந்து மாலைதீவில் 5 வருடம் வேலை செய்து, நியூசிலாந்தில் 5 வருடம், கனடாவில் ஒரு வருடம் , பிறகு இந்த ஊரில்தான் வாசம். லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன். இளைய மகனுக்கு உங்கள் ஊர் விருப்பம் என்பதால் அங்கும் வந்து நானும் மகனும் ஒரு கார் ரெண்ட் பண்ணி பல இடங்களையும் பார்த்தோம். வயது போன காலத்தில் இலங்கை இந்தியாவை தவிர எங்கும் போக விருப்பம் இல்லை. இப்பவே அநேகமாக எனக்கு விருப்பமான இடங்களை பார்த்தாச்சு. 

Few Chiraaku Dobbe Problems & Situations Every Guy With A Hair fall Problem Goes Through | Wirally

😂🤣😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, குமாரசாமி said:

Few Chiraaku Dobbe Problems & Situations Every Guy With A Hair fall Problem Goes Through | Wirally

😂🤣😀

🤣😂

மெக்ஸிகோ சென்று மாயன் அஸ்டெக் குகைகள் என்று அவற்றையும் பார்த்தாச்சு. சிறு சிறு மாயன் கிராமங்களுக்கு சென்று அவர்களின் சமையல் உபசரிப்புகளையும் அவதானித்தபோது இந்தியா இலங்கை கலாச்சாரத்துடன் ஒப்பிடும்படியாக இருந்தது. Madagascar உம்  தான். நிறய ஒற்றுமை இருக்கு . 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

கிருபன், நான் உங்களுக்கு சொன்னனான் எல்லோ அங்கால  பக்கமிருந்து கண்ணாடி போட்ட ,கொஞ்ச்ம மொட்டையான ஒரு நடுத்தர வயசு ஆள் அடிக்கடி  எட்டிப் பார்க்கிறார் என்று ...இவர் தான் ஆள்🤣 

அப்படியா! நான் அன்று வந்தவர்களில் எவரையும் கவனிக்கவில்லை, உங்களைத் தவிர😜

 • Haha 2
Link to post
Share on other sites
2 hours ago, nilmini said:

 லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன்.

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இந்த விலங்கைப் பற்றி கொஞ்சம் எழுத முடிந்தால் நல்லம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

எல்லாம் ஒவ்வொருவரின் பலன்தான். அப்பாவுக்கு சுற்றுலா அதிகம் விருப்பம் இருந்ததால் இலங்கை முழுவதும் சுத்தி திரிந்தோம். பாடசாலை அதிபர் என்பதால் ரயில், பிளேன் வாரெண்டும் இருந்தது. இலங்கையில் சுற்றி திரிந்தது பத்தாது என்று படிக்க மட்ராஸ், சிதம்பரம் என்று போய் கிடைத்த லீவில் எல்லாம் (அப்போது பரீட்சையில் சித்தியடையாதரவர்களுக்கு  செப்டம்பர் மாதத்தில் மீள் பரீட்சை வைப்பார்கள். அந்த நாட்களில்  விடுதியில் சத்தம் போடாமல் ரெண்டு கிழமை இருக்கமுடியாத காரணத்தால்) நண்பிகள் எல்லோரும் சேர்ந்து எனது மாமாவுடன் அல்லது வேறு யாரவது பெரியவர்களின் துணையுடன் இந்தியா முழுவதும்  சுற்றுலா  போனோம். படிப்பு முடிந்து மாலைதீவில் 5 வருடம் வேலை செய்து, நியூசிலாந்தில் 5 வருடம், கனடாவில் ஒரு வருடம் , பிறகு இந்த ஊரில்தான் வாசம். லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன். இளைய மகனுக்கு உங்கள் ஊர் விருப்பம் என்பதால் அங்கும் வந்து நானும் மகனும் ஒரு கார் ரெண்ட் பண்ணி பல இடங்களையும் பார்த்தோம். வயது போன காலத்தில் இலங்கை இந்தியாவை தவிர எங்கும் போக விருப்பம் இல்லை. இப்பவே அநேகமாக எனக்கு விருப்பமான இடங்களை பார்த்தாச்சு. 

எனக்கும் உலகம் பூரா சுத்தோணும் என்று ஆசை...துட்டு தான் இல்லை அத்தோடு கொடுப்பினையும் இல்லை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

மனுசர் கொலிடேயள கான்சல் பண்ணி, இன்சூரண்ஸ் காரருடன் இழுபட்டு கொண்டிருக்கும் காலத்தில் கடுப்பை கிளப்புறா மை லார்ட்🤣

1 hour ago, நிழலி said:

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இந்த விலங்கைப் பற்றி கொஞ்சம் எழுத முடிந்தால் நல்லம்

என்ன குழம்போ பிரட்டலோ நல்லா இருக்கும் என்ற விபரம்தானே🤣

4 hours ago, nilmini said:

🤣😂

மெக்ஸிகோ சென்று மாயன் அஸ்டெக் குகைகள் என்று அவற்றையும் பார்த்தாச்சு. சிறு சிறு மாயன் கிராமங்களுக்கு சென்று அவர்களின் சமையல் உபசரிப்புகளையும் அவதானித்தபோது இந்தியா இலங்கை கலாச்சாரத்துடன் ஒப்பிடும்படியாக இருந்தது. Madagascar உம்  தான். நிறய ஒற்றுமை இருக்கு . 

இத நோட் பண்றம் - நேரா யூடியூப் போய் ஒரு ஆராய்சி வீடியோ போடுறம்.

மாயன் எனும் மாயோன் - மறத் தமிழரின் மறு பக்கம்🤣

3 hours ago, கிருபன் said:

அப்படியா! நான் அன்று வந்தவர்களில் எவரையும் கவனிக்கவில்லை, உங்களைத் தவிர😜

அக்காச்சி 🤣🤣🤣 நீங்க என்னை கலாய்க நினைக்கப்போய்.....🤣

1 hour ago, ரதி said:

எனக்கும் உலகம் பூரா சுத்தோணும் என்று ஆசை...துட்டு தான் இல்லை அத்தோடு கொடுப்பினையும் இல்லை 

கொடுப்பினையை பற்றி தெரியாது ஆனால் யூகேயில் இருந்து ஐரோப்பாவை குறைந்த செலவில் சுற்றலாம். ஒழுங்காக திட்டமிட்டால். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நிழலி said:

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இந்த விலங்கைப் பற்றி கொஞ்சம் எழுத முடிந்தால் நல்லம்

நல்ல ஒரு அனுபவம் நிறைந்த பயணம். லெமூர் மிருகங்களை தேடி 2 கிழமையாக காடு  மேடு எல்லாம் திரிந்தோம். படமெல்லாம் எடுத்து வச்சிருக்கிறேன். பதிவிடுகிறேன் நிழலி 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எனக்கும் உலகம் பூரா சுத்தோணும் என்று ஆசை...துட்டு தான் இல்லை அத்தோடு கொடுப்பினையும் இல்லை 

உங்களிடம் துட்டு இல்லாவிட்டால் என்ன வாறவர் துட்டு வைத்திருப்பாரில்ல.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நில்மினி Honolulu (Havawii) என்னும் இடத்திற்கு சென்று இருக்கின்றீர்களா? இது ஒரு தீவுக்கூட்டாமா? இங்கு அப்படி என்ன விசேட‌ம்?  ஏனையா அமேரிக்க மநிலத்தில் இருந்து வேறுபட்டதா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

அக்காச்சி 🤣🤣🤣 நீங்க என்னை கலாய்க நினைக்கப்போய்.....🤣

கொடுப்பினையை பற்றி தெரியாது ஆனால் யூகேயில் இருந்து ஐரோப்பாவை குறைந்த செலவில் சுற்றலாம். ஒழுங்காக திட்டமிட்டால். 

கலாய்க்க போய் அங்கால என்ன:unsure: சொல்ல தைரியம் இல்லையாகும் 😉... ஒளிந்து நின்று கோழை மாதிரி கண்ணாடிக்குள்ளால எட்டிப் பார்த்த ஆள் தானே நீங்கள்😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

கலாய்க்க போய் அங்கால என்ன:unsure: சொல்ல தைரியம் இல்லையாகும் 😉... ஒளிந்து நின்று கோழை மாதிரி கண்ணாடிக்குள்ளால எட்டிப் பார்த்த ஆள் தானே நீங்கள்😂

🤣 ரதி அக்காச்சிக்கு பயப்படாத ஆள் இந்த யாழில இருக்கே?

அஞ்சா நெஞ்சன் கு. சா அண்ணையே தங்கச்சி தங்கச்சி எண்டு பம்முறார்🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/9/2020 at 14:08, ரதி said:

எனக்கும் உலகம் பூரா சுத்தோணும் என்று ஆசை...துட்டு தான் இல்லை அத்தோடு கொடுப்பினையும் இல்லை 

துட்டு நிறைய தேவையில்லை ரதி. திட்டமிட்டு சேமித்து 5, 6 பேர் சேர்ந்து போனால் அவ்வளவு சிலவிருக்காது. இந்தியாவில் Van பிடித்து தமிழ்நாடு கேரளா முழுதும் சுத்திப்பார்க்க  இலங்கையை விட மிக குறைந்தளவு காசே தேவைப்படும். உடல் நிலை சரியாக இருந்தால் சரி. இதுக்குதான் நான் இப்பவே எல்லா இடங்களையும் பார்த்து வருகிறேன். இன்னும் 10 வருடங்களில் (இருந்தால்) ஒரு இடமாக பார்த்து சிவனே என்று இருக்க வேண்டியதுதான். அதுதான் எனக்கு விருப்பமும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/9/2020 at 00:10, colomban said:

நில்மினி Honolulu (Havawii) என்னும் இடத்திற்கு சென்று இருக்கின்றீர்களா? இது ஒரு தீவுக்கூட்டாமா? இங்கு அப்படி என்ன விசேட‌ம்?  ஏனையா அமேரிக்க மநிலத்தில் இருந்து வேறுபட்டதா?

வணக்கம் கொழும்பான் இப்பதான் இந்தப்பதிவுகளை பார்க்கிறேன். வேலையால்  வந்து இதைப்பற்றி பதிவிடுகிறேன். 4 வருடங்களுக்கு முன்பு போயிருந்தேன் 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nilmini said:

துட்டு நிறைய தேவையில்லை ரதி. திட்டமிட்டு சேமித்து 5, 6 பேர் சேர்ந்து போனால் அவ்வளவு சிலவிருக்காது. இந்தியாவில் Van பிடித்து தமிழ்நாடு கேரளா முழுதும் சுத்திப்பார்க்க  இலங்கையை விட மிக குறைந்தளவு காசே தேவைப்படும். உடல் நிலை சரியாக இருந்தால் சரி. இதுக்குதான் நான் இப்பவே எல்லா இடங்களையும் பார்த்து வருகிறேன். இன்னும் 10 வருடங்களில் (இருந்தால்) ஒரு இடமாக பார்த்து சிவனே என்று இருக்க வேண்டியதுதான். அதுதான் எனக்கு விருப்பமும். 

நன்றி ...20, 25 வருடங்களுக்கு முன்பு பெற்றோருடன் சேர்ந்து இந்தியா போயியுளேன் ...அந்த நேரம் கோயில்களை மட்டும் சுத்தி பார்த்தது ...திரும்ப ஒருக்கால் போக விருப்பம் ...பார்ப்போம்  
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted (edited)
On 30/9/2020 at 15:06, nilmini said:

வணக்கம் கொழும்பான் இப்பதான் இந்தப்பதிவுகளை பார்க்கிறேன். வேலையால்  வந்து இதைப்பற்றி பதிவிடுகிறேன். 4 வருடங்களுக்கு முன்பு போயிருந்தேன் 

நேற்று முழுக்க ஹவாயில் எடுத்த படங்களை தேடினேன். கண்டுபிடிக்கமுடியவில்லை. அதை தேட போய் பலவருடங்களாக காணாமல்போன படங்கள் எல்லாம் கிடைத்தது. இந்தப்படங்கள் ஒன்லைனில் இருந்து சேர்த்திருக்கிறேன்.

அம்மாவுக்கு பாக்க  விருப்பமான ஒரு இடமாதலால் கூட்டிக்கொண்டு போனேன். எம்முடன் ஒரு சிங்கள நண்பி மட்டும் வந்திருந்தா. மூவர் மட்டும்தான். Honolulu வில் இறங்கி ஒரு  SUV எடுத்துக்கொண்டு Oahu தீவு முழுவது 5 நாள் சுற்றித்திரிந்தோம். மிகவும் அழகான தீவு. இலங்கை பாதைகள் அகலமாக ஒழுங்காக, சுத்தமாக இருந்தால் அதே மாதிரி இருக்கும்.  Sunrise cruise, dolphin cruise , whalewatching cruise என்று மூன்று போனோம் . அவை மிகவும் ஒரு வித்தியாசாமான அனுபவம். அமெரிக்கர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள் என்று அந்த சுற்றலா மூலம் மீண்டும் ஒருமுறை கண்டுகொண்டேன்.  கடலில் Dolphin, whale பார்த்தார்களா இல்லையோ  cruise  நெடுகிலும் விதம் விதமான சாப்பாடுகள், பசிபிக் தீவுக்கூட்ட , நியூசிலாந்து Maori  நடனங்களுடன் cruise இல் ஒரே பாட்டும் ஆட்டமும் . நீர் மூழ்கி கப்பலில் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள், மீன்கள் என்று பார்த்தோம். மாலை தீவு அளவு  மீன்கள் இல்லாவிட்டாலும் நல்ல ஒரு அனுபவம். ஹெலிகொப்டரில் பக்கத்துக்கு தீவுக்கு சென்று எரிமலைகளை பார்ப்பம் எண்டு போனபோது இறுதி நேரத்தில் காலநிலை சரியில்லை என்று நிறுத்தி விட்டார்கள். போன போன இடமெல்லாம் மிகவும் ருசியான கடல் உணவு வகைகள். Pearl harbor military base  இல் ஜப்பான் குண்டு போட்ட இடம், போர் கப்பல்கள் மற்றும் பல அமெரிக்க கடற்படை சம்பந்தமான கப்பல்கள், பீரங்கிகள் என்று அருங்காட்சியகம் இருக்கு. பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது.

ஹவாய் நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு தீவுக்கூட்டம். அமெரிக்காவின் மற்றைய  மாநிலங்களில் இருந்து மிகவும் வேறுபட்டது. பசிபிக் தீவு கூட மனிதர்களினதும், ஜப்பானிய வழியினரும் போலத்தான் முகவெட்டு. மலைகளும், காடுகளும், ஏரிகளும்  எரிமலைகளையும் கொண்ட மிக மிக இயற்கை வனப்புள்ள இடம். எங்கு பார்த்தாலும் தேங்காய் மரம் ஆனால் தேங்காயை பார்க்க முடியாது. தலையில் விழுந்திரும் என்று வெட்டி அகற்றி விடுவார்கள். ஊரில் உள்ள எல்லா பூக்கள், பழங்கள், மரக்கறி வகைகள் எல்லாம் இருக்கு. 

சூரியகுமார் முத்துக்குமார் என்று திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த  ஞானி ஒருவரையும் அவரது பார்மில் சந்தித்தோம். பார்முக்கு வழி கேட்டபோது ஒரு பெரிய தெருவால்  வந்து  "மௌன பார்ம் றோட் " என்று போர்ட் போட்டிருக்கும் தெருவுக்குள்  திரும்பி வர சொன்னார். அது அவர் வைத்த  பெயர்தான். 40 வருடங்களுக்கு மேலாக அங்கு வசிக்கிறார். தாய் மற்றும் சகோதரங்கள் ஹானோலுலுள்வில் வசிக்கிறார்கள். தாய் அடிக்கடி வந்து அவரது ஆசிரமம் மாதிரியான மௌன பார்மில் வந்து இருப்பா . நாங்கள் போனபோது சில வெள்ளைக்கார மாணவர்கள்தான் தோட்டம் மற்றும் சிற்ப வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒருபோதும் ருசித்திராத வகையில் புழுங்கல் அரிசி சோறு, பருப்பு, முருங்கைக்காய் கறி (ஏலக்காய், கறுவா சேர்த்திருந்தது ) வாழைக்காய் பொரியல் என்று பெரிய விருந்தே தனது கையால் செய்து பரிமாறினார். அவரின் வாழ்க்கையின் பின்னணியில் சோகக்கதை ஒன்றுள்ளது என்று கூறினார். பின்பு ஒன்லைனில் வாசித்து அறிந்துகொண்டோம். அவர்தான் ஹவாய் வந்து தாய் மற்றும் சகோதரர்களையும் கூப்பிட்டாராம். குடும்பத்தினர் தமது வீட்டுக்கு அழைத்தார்கள். போக நேரம் கிடைக்கவில்லை.

எனது தங்கை ஹவாய் போனபோது இன்னுமொரு தீவில் உள்ள இறைவன் கோவிலுக்கு போனார் . அங்கு ஒரு பெரிய ஆசிரமம், ருத்திராட்சை மரக்காடும் உள்ளதாம். நாவல் நிறத்தில் உள்ள உருத்திராட்ச பழங்களில் இருந்துதான் எடுக்கிறாரக்ள்.  தண்டபாணி என்ற பெயருடன் உள்ள இலங்கையை சேர்ந்த யோக சுவாமி அவர்களின் சீடன் ஒரு இளைஞரும் இங்கு வசித்துள்ளார்கள்  என்று கேள்விப்பட்டேன்

https://www.youtube.com/watch?v=1epdktBQbic

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

spacer.pngspacer.png

Edited by nilmini
 • Like 4
 • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்   காலவிதை: கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன். வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகின்றான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீரூற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடிந்தபடி விளக்கையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் குட்டான் மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளும் வாசலுக்கு வந்தனர். அந்த வயது முதிர்ந்த அம்மா விளக்கை உயர்த்தி எல்லோர் முகங்களையும் பார்த்தாள். இல்லை…… அவள் தேடி வந்த செங்கதிர்வாணன் இல்லை. வந்தவர்களின் முகத்தில் எழுதாத கவிதையொன்று எதையோ உணர்த்தியது. அம்மாவால் முகங்களைப் பார்க்க முடிந்தது படிக்க முடியவில்லை. “இவ்வளவு நாட்களும் ஏன் மோனை வரேல்லை” அம்மாவிற்கு அவன் வந்திருப்பான் என்பதில் அவ்வளவு நம்பிக்கையிருந்தது. அவனை எதிர்பார்த்து எத்தனை வாசல்கள். எல்லோருடனும் சிரித்துப் பழகுவான். அவனுள் எரியும் நெருப்பு வெளியில் தெரியாது. கண்களுக்குத் தெரிவது சிரிப்பு. உள்ளே கனன்றுகொண்டிருப்பது நெருப்பு. அவனை எரிமலையாக்கும் முதற்பொதி கலவரங்களினால் விழுந்தது… “காலம் கெட்டுக்கிடக்கின்ற நேரத்தில எங்கை மோனை திரியிற… அவங்கள் மனிசரின்ர உயிரை எடுக்கிறதெண்டே றோட்டுவழிய நிக்கிறாங்கள்.” அம்மா பெற்ற வயிற்றில் நெருப்புப்பற்ற பதறுவாள். அப்போதெல்லாம் அவளின் கைகள் அவனின் தலையிலோ கன்னத்திலோ உலாவிக் கொண்டிருக்கும். அவன் அவளின் பாசத்தைப் புரிந்து கொண்டாலும் கரைந்துபோக மாட்டான். கைகளை விலக்கி விட்டுக் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்பான். பின் வீராவேசமாக வசனம் பேசுவான். “அவங்களைப் போலத்தான் நாங்களும். ஏன் பயந்து சாகிறியள்.” அவன் சொல்லிக்கொண்டே தனது சைக்கிள் பாருக்குள் மறைத்து வைத்திருந்த பழைய சைக்கிள் செயினை எடுத்துக் காட்டினான். “ஆரும் அடிக்க வந்தாங்களென்டால், இனி அடிப்பன்” அவனின் கண்கள் கோபத்தாற் சிவந்தன. அம்மா முன்னரிலும் பார்க்க கூடுதலாகப் பதறினாள். “என்ன இழவடா இது…… நான் என்ன செய்ய……” அம்மா அழுதாள். அவளின் அழுகைக்கு காரணம் இருந்தது. அது 1983 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு இனவாத நெருப்பில் ஆவேசமாக எரிந்து கொண்டிருந்த நாட்கள். வீதிகளில், வீடுகளில் எங்கு என்ற வேறுபாடு இல்லாது கொலை நடந்துகொண்டிருந்த நேரம். தெருவெல்லாம் பிணங்கள். சொந்தத் தெருக்களிலேயே உலாவ முடியாத வேதனை. அதுவும் இவர்கள் திருகோணமலையில் சிவபுரியில் சிங்கள ஊர்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள். கொழும்பிலும் வேறிடங்களிலும் கலவரம் நடப்பதை இலங்கை வானொலி அறிவித்துக் கொண்டிருந்தன. இவர்களிற்கு அடுத்த வீடு, எதிர்வீடு தெருவெல்லாம் காடையர்கள் பெரிதாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. இவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு வேலைக்கு வரும் சிங்களக் கிழவியை வீட்டில் விட்டு விட்டுப் பற்றைக்குள் மறைந்தனர். அப்பாவும், மரத்தில் ஏறுமளவுக்கு வளர்ந்த அண்ணாக்களும் மரத்தில் ஏறி ஒளிந்திருந்தனர். அப்பா பதட்டத்தில் விழப்பார்த்து கைகால் எல்லாம் உரஞ்சலோடு மீண்டும் கொப்புக்களை கெட்டியாய் பிடித்து ஏறி அமர்ந்து கொண்டார். எல்லோரும் ஊரில் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தனர். அம்மாவின் இறுகிய அணைப்பில் நின்று சினமும் வெறுப்பும் கண்களில் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான், கடைக்குட்டி. வீடுகள் எரிந்து கொண்டிருந்தன. எங்கும் தீ பரவி புகை மூடியிருந்தது. ஊரவர்கள் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்தனர். காடைகள், அவர்களை அடித்து வீழ்த்துவதும் வெட்டுவதுமாக தாண்டவம் ஆடின. இவர்களின் வீட்டை நோக்கி வேகமாய் ஓடிவந்தன. முற்றத்தில் நின்று சிங்களத்தில் கத்தின. வேலைக்கு வந்த சிங்களக்கிழவி வீட்டிற்குள் இருந்தபடியே சிங்களத்தில் ஏதோ கத்தினாள். அதுகள் போயிவிட்டன. ஊரே வெறிச்சோடிப்போனது. அது நடந்ததிலிருந்து அணுகுண்டு விழுந்த நகரம் போல அந்த இடம் ஆளரவமற்றுப் போனது. இரவில் தனியே யாரும் உலாவித்திரிய அஞ்சும் நாட்களில் அவளின் ஆசைமகன் திரிவதை எப்படிப் பார்த்திருப்பாள். அவனுக்கு இப்பதானே பதினாறு வயது. அம்மா கெஞ்சலான குரலில் மன்றாடினாள்இ அவன் கேட்கவே இல்லை. வீட்டை விட்டு வெளியே போவான். இனக்கலவரத்தால் ஊரில் கொதிப்புற்றுப்போயிருந்த இளைஞர்களோடு சேர்ந்து ஆங்காங்கே அவனும் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பெரியவர்கள் செய்யம் ஒவ்வொன்றிலும் ஒருவித துடிப்போடு அவனும் ஓடித்திரிந்து ஈடுபட்டான். அவன் இயக்கத்தோடு சேர்ந்து கொள்ள முடியாமல் அவனது வயதும் இருந்தது. ஏற்கனவே அவனது அண்ணன் ஒருவன் போராளியாக இருந்தான். இவர்களின் நடவடிக்கைகளை எப்படியோ சிறிலங்கா இராணுவமும் பொலிசும் அறிந்திருக்க வேண்டும். வீடு அடிக்கடி சுற்றிவளைக்கப்பட்டது. துடியாட்டமான கடைக்குட்டி ஒவ்வொருமுறையும் தப்பிவிடுவான். அவனது அண்ணன் ஒருவனைக் கைதுசெய்து கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள். அண்ணா சிறைக்குப் போனதும் வீட்டில் சோகம் சூழத்தொடங்கியது. அம்மா பொலிவிழந்து போனாள். இவன் கொஞ்ச நாள் வீட்டிலேயே நின்றான். அம்மாவிற்குத் தெரியும்படி எங்கேயும் போவதில்லை என முடிவெடுத்தான். பிள்ளை இனிப் போக மாட்டான் என்று அம்மா நினைத்து இருப்பாள். ஆனால் அவன் இரகசியமாய்ப் போய் வந்து கொண்டிருந்தான். பாடசாலையில் சுற்றுலா போக ஆயத்தமாகினால் அங்கே முண்டியடித்துக் கொண்டு ஓடித்திரியும் துடியாட்டமான சிறுவன், பாடசாலையில் திருத்த வேலை, பாடசாலை வளவில் தோட்டம் வைப்பது அங்கும் அதே ஆள். வகுப்பில் அவன் ஓர் எடுத்துக்காட்டு. எங்கேயும் சின்னப்பிரச்சினை வந்துவிட்டதென்றால் அதை தீர்த்து வைப்பதில் அவனும் ஓர் ஆள். ஒழுக்கக்கேடாக யாரும் நடந்துவிட்டாள் உடனே தண்டனை கொடுக்கப்படும். அங்கேயும் தண்டனை வழங்குபவனாக நிற்பான். பாடசாலை முழுவதும் அவன் பெயர் பரவியிருந்தது. பள்ளியில் வகுப்பாசிரியரிடம் நல்ல மதிப்பைப் பெறுவதே பெரும்பாடு, அப்படியிருக்க அவன் அதிபரின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவனாக இருந்தான். வீட்டின் வறுமை இடையிடையே வயிற்றைக் கடிக்கும். நாட்டின் நிலைமையும் குழப்பமாக இருந்தது. இந்திய இராணுவக் காலம் அது. தேடுதல் வேட்டைக்குள் அகப்படாது முயலோட்டம் ஓடித்திரிந்த நாட்கள். இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் நாளேடொன்றில் தலைவரின் படத்தைக் கண்டவுடன் உடனே தன் எண்ணத்தில் வந்ததின்படி செய்து விட்டான். படத்தை அளவாக வெட்டித் தடித்த மட்டை ஒன்றில் ஒட்டினான். கீழே தலைவர் வே.பிரபாகரன் என்று தன் கைப்பட எழுதி ஊர் கூடும் இடம் ஒன்றில் எல்லோரும் காணும்படியாக ஒட்டினான். அப்போது அவன் எந்த பின்விளைவைப் பற்றியும் கவலைப்படவில்லை. எதையும் எதிர்கொள்வது என்ற துணிவோடு இருந்தான். இரகசியப் பொலிசார் நோட்டமிட்டபடியே திரியும் அந்த இடங்களில் அவன் ஒட்டிய படம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் யார் இதைச் செய்திருப்பார். அவர்களோடு சேர்ந்து அவனும் ஆச்சரியப்படுவதாய்ப் பாவனை செய்தான். இந்த அதிர்வலை அடங்க முன் யமாலியாவில் தேசத் துரோகிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வரும்போது படகு விபத்தில் வீரச்சாவடைந்திருந்த மாவீரர்களின் படங்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தையும் எடுத்து வீட்டில் கூட யாருக்கும் தெரியாமல் பசை கிண்டிக்கொண்டு போய் கோட்டை முகப்பில் ஒட்டி விட்டான். அது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவனின் செயல் ஒவ்வொன்றிலும் தீவிரம் கூடக்கூட சொந்த ஊரில் வாழ்வதற்கே முடியாமல் போனது. நாளுக்குநாள் அவனுக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்தில் அண்ணன் ஒருவருடன் யாழ்ப்பாணம் வந்து அவருடனே வாழ்ந்து கொண்டிருந்தவன், காலத்தின் தேவையறிந்து தன்னைப் போராட்டித்தில் இணைத்துக் கொண்டான். பகைவனின் குகைக்குள்ளேயே கூடுகட்டி அவனையே வேவு பார்க்கும் வேவுப்பணிதான் அவனுக்கு வழங்கப்பட்டது. அராலி, ஊர்காவற்துறை இன்னும் அந்தக் கரையோரத்து இராணுவ முகாம்கள் எல்லாவற்றிற்குள்ளேயும் நிற்கும் பற்றைகள் பேசுமானால் மட்டுமே அவனைப்பற்றி முழுமையாக அறியலாம். எவ்வளவோ கடினங்களும் துயரங்களும் அந்தப் பற்றைகளோடும், மரங்களோடும் சேர்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றது. ஆட்கள் இல்லாத சூனியப் பிரதேசத்துக் கட்டடங்களும் தண்ணீரில் நனைந்து கொண்டேயிருக்கும் கரையோரத்துப் பற்றைகளுந்தான் அவனின் தங்கிடங்கள். பல நாட்களாய் அங்கேயிருந்து ஊர்காவற்துறை முகாம் வேவிற்காக அலைந்து கொண்டிருந்தான். ஒருநாள், தன் அணியோடு வேவிற்காக உள்ளுக்கு வந்தவன் இடையில் இராணுவத்தை சந்தித்துக் கொள்ளவேண்டியிருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் சண்டையிட்டார்கள். முன்னனி அரணைத் தாண்டிவெளியே போகவே முடியாது என்று புரிந்துகொண்டான். அவர்களோடு வந்தவர்களில் ஒருவன் காலில் சூடுபட்டு விழுந்து விட்டான். முன்னனி நிலைகளை இராணுவம் பலமாகவும் விழிப்பாகவும் இனி வைத்திருக்கும் என்று புரிந்தமையால் காயப்பட்டவனையும் தோளில் சுமந்து கொண்டு இராணுவப்பகுதிக்குள்ளேயே சென்றார்கள். இடையிடையே இராணுவகாவலரண்கள் மற்ற இடங்கள் எல்லாம் பற்றைகள். அவர்களது நடைத்தூரம் அதிகமாக அதிகமாக நா வரண்டு போனது. ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லை. பசிவாட்டம் தாங்க இயலாது. உடல் சோர்ந்துவிட்டது. காயப்பட்டவனின் புண்ணுக்குச் சுற்றிய சீலைத்துணியை துளைத்துவிடும் முயற்சியில் இளையான்களும் கொசுக்களும் மொய்த்துக்கொண்டிருந்தன. “சீ…. இதுகளே காட்டிக்கொடுக்கும் போல” மடியில் வைத்திருந்தவன் கொசுக்களை விரட்டிக் கொண்டிருந்தான். காயப்பட்டவன் வேதனையோடு முனகிக் கொண்டு கிடந்தான். இந்த வேளையில் எல்லோரும் சோர்ந்த பின்னும் செங்கதிர்வாணன் இன்னுமொருவனை அழைத்துக் கொண்டு தண்ணீர் தேடினான். இப்போது அவர்கள் இயலாமையினால் அழுதால் கூட கண்ணீர் வராது. அவ்வளவுக்கு உடலில் நீர்த் தன்மையில்லை. தண்ணீர் தேடி அலைந்தவர்களின் கண்ணில் கிணறு ஒன்று தென்பட்டது அது ஆழக்கிணறு. யாரும் பாவிப்பதில்லையென்பதால் கிணற்றில் வாளிகூட இல்லை. அவன் கிணற்றில் இறங்கித் தண்ணீர் எடுப்பது என்ற முடிவோடு உடற் தளர்வைப் பொருட்படுத்தாது கிணற்றினுள் இறங்கினான். ஒவ்வொரு படியும் குறையக்குறைய நெஞ்செல்லாம் புதுப்பரவசமோடியது. தண்ணீர்…… தொடும் தூரத்தில் கையால் அள்ளி முதலில் உதடுகளை நனைப்போம் என்று முயன்றான். சீ… சரியான உப்புத்தண்ணி. ஏமாற்றம். இயலாமை என்றாலும் சோர்ந்து விடாது மீண்டும் மேலேறிவந்து தண்ணீர் தேடி அலைந்தான். தனக்கு இல்லாவிட்டாலும் தன் காயப்பட்ட தோழனுக்கும் ஏனைய தோழர்களுக்கும் கொடுத்துவிட வேண்டுமே எனத் துடித்தான். அவனுக்கு இது பெரும் கஸ்ரமாகவோ சுமையாகவோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட வேளையிலெல்லாம் அவனின் மனதில் வந்துபோபவை அவன் நேரில் கண்ட மக்களின் அவலமும் தன் தேசத்தை மீட்கத் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் அவலங்களுமே அதிகரிக்குமே என்ற எண்ணங்கள் தான். அவன் முயற்சிகளை கைவிடாது நடந்தான். அவனது கண்ணில் ஒரு வீடு தென்பட்டது. அவர்களை அழைத்து தண்ணீர் கேட்டு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கவிரும்பவில்லை. அவர்கள் முற்றத்தில் ஏதோ சுவையாகக் கதைத்துக்கொண்டிருக்க பின்புறம் வந்து குடத்துத் தண்ணீரை அவன் கொண்டுவந்த கலன்களில் நிரப்பிக் கொண்டு தோழர்களை நோக்கி விரைந்தான். இடையில் ஓரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய்நெய்யும் எடுத்துக்கொண்டுபோய் காயப்பட்ட போராளிக்கு கை மருத்துவம் செய்து விட்டு உதவி அணி வரும் வரை காத்திருந்தான். உதவி அணி வந்து சேர முடியாது அல்லற்பட்டது. இவர்களும் வெளியில் செல்ல மீண்டும் மீண்டும் முயன்றனர். முடியவில்லை. உதவியணி ஒருவாறு இவர்களை வந்தடைந்தது. இரவுபகல் அலைந்தமையால் எத்தனை நாட்கள் எங்கே அலைந்து திரிந்தார்கள் என்று சரியாகத் தெரியாது. உதவியணியில் வந்தவர்களிலும் சிலர் காயமடைந்தார்கள். அவர்களையும் தூக்கிக்கொண்டு சேற்றுக்குள்ளால் நடந்து வெளியேறி வந்து சேர்ந்தார்கள். ஆனால் பெறப்பட்ட தகவல்கள் நெஞ்சின் ஆழத்திற் கவனமாக இருந்தன. ‘நொடி மாஸ்ரர்’ அவனை அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள். பயிற்சி முடித்து கிடைக்கும் தேநீர் இடைவேளையிலோ ஓய்வான வேளைகளிலோ அவன் நிற்கும் இடத்தைச் சிரிப்பூட்டிக் கொண்டிருப்பான். ஏதாவது நொடி சொல்லி மற்றவர்களை மடக்கிவிடுவான். அவனின் அகன்ற உடம்பும் நடக்கும் போதும் நிற்கும் போதும் பின்புறம் வளையும் கால்களும் குத்திநிற்கும் மீசையும் எடுப்பில்லாத சாதாரண தோற்றமும் நினைவுக்கு வரும் ஒவ்வொரு கணமும் அவன் கேட்டு விடை காணமுடியாது போன புதிர்களே நினைவுக்கு வரும். ‘நொடி மாஸ்ரர்’ அது அவனுக்கு ஏற்றதாய்த்தான் இருந்தது. அவன் உண்மையில் ஆசிரியன் தான். அராலித்துறைச்சண்டைக்கு செல்லும் அணிகளில் ஒன்றிற்கு இவனே வழிகாட்டி. இவன் வழிகாட்டி அழைத்துச் சென்ற அணிக்கு இவன்தான் பயிற்சி கொடுத்தான். அதன் பின் வெடிமருந்து பற்றிப்பிடித்தான். புதிதாய் வேவு அணியில் இணைபவர்களுக்கு அவனே வெடிமருந்துப் பாடமும் கற்பித்தான். வெடிமருந்து சம்பந்தமான பயிற்சிகளும் கொடுத்தான். மெதுவாகவும் பொருள் விளங்கும் படியும் கற்பிக்கும் திறமையால் அவன் கற்பிப்பதைப் போராளிகள் விரும்பினர். வேவு பணியில் நின்று வெடிமருந்து பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போது முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையில் எதிரி வைத்த பொறி வெடிகளையும் வெடிக்காமல் போன எறிகணைகளையும் செயலிழக்கச் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. வெடிமருந்துக் கல்வி முழுமையாக நிறைவுறாத போதும் அவன் தனது முயற்சியால் ஒவ்வொரு வெடிப்பொருளையும் செயலிழக்கச் செய்யும் முறையை அறிந்து வேகமாகச் செயற்பட்டான். அவன் இயக்கத்தில் இணைய முன்பே யாழ்ப்பாணத்திற் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப அறிவு பெரிதும் பயன்பட்டது. அவன் சூரியக்கதிர் சண்டையில் அணி ஒன்றிற்கு பொறுப்பாக நின்ற போது கரும்புலி அணிக்குச் செல்வதற்கான அனுமதி வந்தது. அவன் வேவில் நிற்கும் போதே தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தான். பதில் வந்தபோது குள்ளிக் குதித்தான். மனசை வலிக்கவைக்கும் எத்தனை நிகழ்வு. வளர்த்த நாய் சாப்பிடாது விட்டால் தானும் சாப்பிடாமலே பசியிருக்கும் அவனது நேசம் எல்லோர் மீதும் எல்லாவற்றின் மீதும் வியாபித்திருந்தது. மனதுக்குள் எழுகின்ற வலிகள் எல்லாம் வலிமையாகியிருந்தன. இலக்கிற்காக காத்திருப்பது, பயிற்சி எடுப்பது, நகருவது, சண்டை ஆரம்பிக்கலாம் என்ற கடைசிக் கணங்களில் சந்தோசப்படும் வேளை ஏதாவதொரு காரணம் இலக்கை அழிக்கமுடியாமைக்கு வழிவகுக்கும். வாடிய முகம், தளர்ந்த நடை, மறுபடி தளம் திரும்புவான். மறுபடியும் மறுபடியும்…… அவனின் காத்திருப்பு, பயிற்சி எடுப்பு, எல்லாம் தொடரும். மூன்று வருடங்களாக கழிந்த ஒவ்வொரு கணத்திலும் அவனது காத்திருப்பும் சேர்ந்தே கழிந்திருந்தது. சோர்வில்லாது எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியபடி எல்லாக் காரியங்களிலும் ஈடுபடும் செங்கதிர்வாணனின் பாதங்கள் கடைசியாக மணலாற்றுக் காட்டுக்குள் இரத்தம் கசியக் கசிய நடந்தன. அந்தப் பாதங்கள் பல இடங்களில் பதிந்திருக்கின்றன. அநேகமாக சண்டைகளிற்கு முன் வேவுப் பணிக்காக எதிரியின் மையப் பிரதேசம் வரையும் சுவடு பதிந்திருக்கிறது. கரும்புலியாக வெடி சுமந்தும் ஏராளமான களங்கள். சிலவற்றை இப்போதுகூட வெளிக்காட்ட முடியாது. ‘எங்கேனும் ஒழிந்திருப்பான்’ அவளின் மனம் அங்கலாய்த்தது. சற்றுத் தள்ளி விளக்கை உயர்த்தினாள். வாகனத்திலிருந்து வித்துடற் பேழை இறங்குவது தெரிந்தது. அவளால் நம்ப முடியவில்லை. இனி நம்பித்தான் ஆக வேண்டும். மணலாற்றில் கரும்புலித்தாக்குதல் ஒன்றின் இறுதி வேவிற்காக சென்ற போது அவன் வீரச்சாவடைந்தான். ‘ஆட்டி உடைக்க வேணும்’ என்று இரவுபகலாய் விழித்திருந்த அந்த வழிகள் 29.10.1999 அன்று உறங்கி விட்டன. ‘குட்டான் மாமா குட்டான் மாமா’ என்று சிறுமிகள் குரலெடுத்து அழுவது மனங்களை உருக்கியது. நாளை…… இந்தச் சின்னமனங்களுக்கு வளமான எதிர்காலமும் நிலையான தேசமும் வேண்டித் தானே குட்டான்மாமா போலப் பலபேர் போகிறார்கள். சிறுமிகளுக்கு இப்போது புரியாவிட்டாலும் காலம் ஒருநாள் உணர்த்தும். நினைவுப்பகிர்வு: துளசிச்செல்வன். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை, 2004).   https://thesakkatru.com/black-tiger-mejor-sengathirvanan/
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்   https://thesakkatru.com/
  • உலக மக்கள் வாழ்வதற்கு வந்தது குர்ஆன் || நாகூர் ஹனிபா இஸ்லாமிய பாடல்.  
  • இதில் உள்ள link இல் அழுத்தினால் யாழ் இணையத்துக்கு செல்கிறது. யாழுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?
  • பகிர்வுக்கு நன்றி .. கச்சானை கொண்டு பூரணம் செய்வோம் . .சுவை அருமை ..👌
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.