Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில்  2ஆவது இடத்தில் இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் ஒக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இலங்கையும் மூன்றாம் இடத்தில் கானாவும், அதனைத் தொடர்ந்து தென்கொரியா, மியான்மர், அவுஸ்ரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 3,349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளடன் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-சிறந்த-முன்/

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில்  2ஆவது இடத்தில் இலங்கை

இதுக்காகவாவது  சர்வதேசம் கணக்குவழக்கில்லாமல் காசை அள்ளிக்குடுக்க வேணும்.:cool:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இதுக்காகவாவது  சர்வதேசம் கணக்குவழக்கில்லாமல் காசை அள்ளிக்குடுக்க வேணும்.:cool:

காசை கொடுத்தார்களோ இல்லையோ;கொரொனாவை பல வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இலங்கை  சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளது.

Edited by Dash
  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Dash said:

காசை கொடுத்தார்களோ இல்லையோ;கொரொனாவை பல வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இலங்கை  சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளது.

நீங்கள் தொலைஞ்சியள் இண்டைக்கு!🤣🤣

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Dash said:

காசை கொடுத்தார்களோ இல்லையோ;கொரொனாவை பல வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இலங்கை  சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளது.

இராணுவ ஆட்சியிலை கட்டுப்பாடுகள் கொஞ்சம் இறுகமாய்த்தானே இருக்கும்.....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

இராணுவ ஆட்சியிலை கட்டுப்பாடுகள் கொஞ்சம் இறுகமாய்த்தானே இருக்கும்.....

கொரோனாவிலிருந்து தப்புவதற்கான  கட்டுப்பாடுகள் ராணுவக்கட்டுப்பாடுகளைவிட இன்னும் மேலாக இருக்க வேண்டும்
அந்த வகையில் இலங்கை அரசைப் பாராட்டியே ஆகவேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

large.3495EBE5-3681-4289-9C48-B39490AEFB3A.jpeg.32e0ceed09fdbef0f78084766f5a504a.jpeg

 

☝️லண்டன் பரிதாபங்கள் 

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாத்தியார் said:

கொரோனாவிலிருந்து தப்புவதற்கான  கட்டுப்பாடுகள் ராணுவக்கட்டுப்பாடுகளைவிட இன்னும் மேலாக இருக்க வேண்டும்
அந்த வகையில் இலங்கை அரசைப் பாராட்டியே ஆகவேண்டும்.

இலங்கையிடம், வியட்நாமிடம், நியூசிலாந்துடம் யூகே, ஈயூ கற்கவேண்டிய பாடங்கள் நிறைய.

பெப்ரவரி முடிவில், external borders ஐ மூடி இருந்தால். இப்போ யூகேகுள், ஈயுவுக்குள் அதிக பிரச்சனை இல்லாமல் உள்ளூர் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி இருக்கலாம். 

இப்போ உள்ளூர் சாண்ட்விச் கடை முதல், கார் விற்பனை வரை பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியும் அடி வாங்குகிறது.

பொருளாதாரத்தின் 10% போயிருந்தாலும், அதை அரசு தாங்கி பிடித்திருக்கலாம்.

இப்போ 70% பொருளாதாரத்தை அரசே தாங்கி பிடிக்க வேண்டிய நிலை.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபையாவை பாராட்டத்தான் வேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறப்பாக கையாண்ட அரசுகளை பாராட்டியே ஆகவேணும் 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ம் நிட்சயமாக பாராட்ட வேண்டும் யாழை முடக்கிய சர்க்குணத்தாரை மறந்து 

எத்தன தல உருள போகுதோ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் பாராட்டியே ஆகா வேண்டும். 

இங்கும் கட்டாரில்  மிகவும் குறைந்து விட்டது. இங்கு கட்டாயம் மொபைலில்  கொரோனா செயலியை தரவிறக்கம் செய்யவேண்டும். உடனடியாக இந்த செயலி உங்கள் தேக ஆரோக்கிய விபரங்களை தேசிய சேமிப்பகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும். இது பச்சை நிரத்தில் இதுக்கும். 
உங்களுக்கு நோய் தொற்று என சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் தொற்று உறுதியானால், உடனடியாக செயலியின் நிறம் மாறிவிடும். பின்பு நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை பொலிஸாரினால் கண்காணிக்க முடியும்.

அதேபோல் உங்கலருகில் யாரும் நோயாளி இருந்தால் உங்கள் மொபைல் சத்தமிட்டு எச்சரிக்கும் 

எந்த ஒரு இடத்திற்கு (bank / shopping mall ) சென்றாலும் பச்சை நிறம் காட்டி   ஆரோக்கியமானவராக இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கபடுவார்கள் 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாஷ் , சரியான சண்டை. நான் முன்னரே சொன்னேன். பந்து, இந்தியாவிடம் இல்லை. பார்வையாளர் மட்டுமே என்பது, உறுதியாகிறது. டெல்லி வாலாக்கள், வாயில அல்வா.... அமெரிக்காகாரனுக்கு இந்தபோடு போடுறார்கள் இந்த சீனர்கள் + சிங்களவர் எண்டால், நாம வாயை கொடுத்து, காமடி பண்ணிக் கொண்டு, மொக்கையீனப்படேலாது. நடக்கிறது எல்லாம் நல்லா நடக்க, ராமர் அருள் புரியட்டும் எண்டு, கோமயத்தை குடிச்சிட்டு, பேசாம ஓரமா இருப்பம். குதிரை ஓடிப்போய் கணகாலம்.... இனி லாயத்தை பூட்டி, என்னத்தை காணுறது.
    • பாஞ்ச், உங்கள் "பொய் என்று ஆதாரத்துடன் நிரூபி" என்கிற சவால் உங்களுக்கே வடிவேலுத்தனமாகத்தெரியவில்லையா?🤔 1. ஒரு தகவலை நீங்கள் Forbes இல் வந்தது என்று பதிகிறீர்கள் 2. அது Forbes இல் இல்லை என்று நானும் கிருபனும் (போய்ப் பார்க்கும் எவரும்) கண்டு கொண்டு இங்கே சொல்கிறோம் 3. அதன் படி நீங்கள் தந்த தகவல் பொய் என்று நிரூபணமாகிறது இந்த logical படிமுறையின் படி, இனி ஆதாரம் தர வேண்டியது நீங்களல்லவா?  நோயாளிகள் நோய்க்குணங்குறி காட்டியபின்னர், அல்லது நோயாளிகளின் தொடர்பிலிருந்தோர் பி.சி.ஆர் மூலம் பரிசோதிக்கப்படுவது எங்கே என்று தெரியுமா உங்களுக்கு? இராணுவமுகாமிலா, கொழும்பிலா, தியத்தலாவையிலா? இது மாவட்ட மட்டத்தில் நடக்கிறது. மாகாண மட்டத்தில் தான் தகவல் வெளிவருகிறது. சத்தியமூர்த்தி நாளாந்தம் யாழ்ப்பாண நிலவரம் சொல்வது போல கீழ் மட்டத்தில் நடக்கிறது! தேசிய ஒருங்கிணைப்புத் தான் பாதுகாப்பு அமைச்சிடம். மாவட்ட, மாகாண அதிகாரிகள் எல்லாரும் சேர்ந்தா நோயாளிகள், மரணிப்போர் எண்ணிக்கை மறைக்கப் படுகிறது என்கிறீர்கள்? 🤔  
    • பாஜக நிர்வாகிகள் சட்டை கிழித்த விசிக கட்சியினர்  
    • இலங்கையில் நடந்தது போல் நடக்கும் 80 தெலுங்கு MLA க்களை உருவாக்குவோம்/ red pix / ntk / நாம் தமிழர்/ தமிழ் தேசியன்   ஆளுநருக்கு சகோதரி சரமாரி கேள்வி   
    • முதலாவது, எனது உவத்தலை, காய்தல்  புகுத்தாமலும், அப்படி சமூக அளவில்  உவத்தல், காய்தல் இருந்தால் அதை அகற்றாமலும் எனது பதிவுகள். எனது அனுபவங்களை, நான் கண்டதை, கேட்டதை எழுதுகிறேன். அது உவத்தல், காய்தல் அல்ல. நீங்கள் சொல்வது உங்கள் விருப்பம். ஆனால், அது யதார்த்தத்தில் இருக்காது. காலத்தை நீக்கி விட்டு ஒரு போதுமே நியாதிக்காக கண்ணோட்டம் எடுக்க முடியாது. அதனால் தான், அரிச்சந்திர காலத்தில் இருந்து, ஹிட்லரை தாண்டி, இன்று வரை வரலாற்று அனுபவங்களையும், அது ஏற்றப்படுத்திய பின்னோட்டமான நியாதிக்கத்தையும் உதாரணமாக, ஏன் ஊர் பேசிதையே சொன்னேன்.  உ.ம். ஆக இவைகளுக்கு ஓர் தீர்ப்பாயம் வெளியாரையும் உள்ளடக்கி வைக்கப்பட்டால், அது இங்கே நான் சொன்னதை விட பரந்து பட்ட வரலாற்று நியாயாதிக்கங்கள், அனுபவங்கள்  கருத்தில் எடுக்கப்பட்டே முடிவு எடுக்கப்படும்.   இன்னொன்று, நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே, காய்தல், உவத்தலோ, அல்லது அதற்கு மேலான நியாயாதிக்கம் (இருக்கிறதா அல்லது இல்லையா) என்பது பிறக்கிறது. அதிலேயே காலம் என்ற குறிப்பரை நீக்கிய நோக்கு இல்லாமல் போகிறது. மறுவளமாக,  எப்போதோ நடந்த குற்றத்திற்கு (செய்தவர் பிடிபடாமல், அல்லது யார் என்று அடையாளம் காணப்படாமல்), 30-40 வருடம் கழித்து அடையாளம் காணப்பட்டு, நீதி மன்ற கூண்டில் ஏற்றப்பட்டால், நீதிமன்றம் அந்த நேர நிலைமைகளையும், அந்த நேரத்தில் உருந்து அந்த குற்றம் பற்றிய சட்ட கோட்பாடு கூர்ப்படைந்து து உள்ளது, கூண்டில் ஏற்றப்படும் இருக்கும் சட்டம் என்பவற்றை கருத்தில் எடுத்தே தண்டனையை அடையும். அது கூட, பெரும்பான்மை jury ஆல் ஆமோதிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம், அதில் கூட பலரின் காலமம் சேர்த்த மற்றும் சேர்க்காத  குறிப்பரை முடிவை பாதிக்கிறது.         ஏன்னென்றால், நியாயாதிக்கம் (அல்லது எவ்வ்ளவு தவறி விட்டது) என்பது வரலாறு, அனுபவம், அந்த நேர நிலைமைகள் எந்தன் கூட்டு விளைவாக பிறக்கிறது.   எல்லா பக்கமும் ஆயுதம் தரித்து இருந்த போது, சகோதரப் படுகொலை என்று வகைப்படுத்த முடியுமா என்று ஓர்  கேள்வியும் இருக்கிறது. ஏனென்றால், இந்த இயக்கங்களை ஒன்றையும் சாரதா ஓர் ஆயுத அமைப்பு அந்த நேரத்தில் இருந்திருக்கிறது என்றும், அது எல்லாவற்றிலும் பலம் கூடியதாக இருந்து இருக்கிறது என்றும் வைத்து கொண்டால், அந்த அமைப்பு, அதன் பார்வையில், அந்த அமைப்பு தன்னை வேறு வெளிச்சக்திகளின் துணையோடு அழிக்க இடர்பாடுகள் நடப்பதாக அந்த அமைப்பு நம்பக் கொடிய சூழ்நிலையில்,  கொலையும் ஓர் தெரிவாக, கலைக்க முற்பட்டு இருக்க கூடிய  இடத்தில் செய்யப்பட்டு இருக்க கூடிய கொலைகளை சகோதர படுகொலைகள் என்று சொல்லப்பட்டு இருக்காது.         இதனால் தான், வன்முறை பிரயோகிக்கப்படக்கூடிய அதிகாரங்கள் இருக்கும் போது, அதன் தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் விதிகள் விதிக்கப்பட்டு, பின்பற்றப்பட வேண்டும்.     பிரபாகரன் இதில் காறாராகவே இருந்தார் என்பது 1983 -1985 இந்து ந்து ராம் எடுத்த பேட்டிகளில் இருந்து தெரியும். மேலும், புலிகள் மற்ற இயக்கங்களை, அதில் உள்ளவர்களை இயற்கை எதிரிகளாக (மற்ற இயக்கம் என்று) பார்க்கவில்லை, இங்கே புளொட் உறுப்பினர் சொல்வது மாதிரி. காரணத்தின் அடிப்படையிலேயே, எதிரிகளாக பார்த்தனர். இந்த காரணம், ஒன்று  புலிகள் தப்பி பிழைப்பது, மற்றது சித்தாந்த அடிப்படையில் தாம் எந்த காரணத்தினாலும் வெளி சக்தியினால் செல்லவாக்கு செலுத்தப்படக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது என்பது போன்றவை. அதிலும், பல இயக்கங்களை உருவாக்கி வெளிச்சக்தி ஊடுருவுவதை புலிகளும், புளொட் உம்  அறிந்து இருந்தது. டெலொ, eprlf, ஈரோஸ் இ பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால், ஈரோஸ் அதை அறிந்து கொள்ளாமல் இருந்தததற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து இருக்கும்.        இதை இன்னொரு நோக்கில், சொறி சிங்களதின், அரசு எனும் அடிப்படையில், வன்முறை பிரோயோகத்துக்கான வழிமுறைகள், பல படிகளில்,  legal frame work உம், due process உம், redress process  உம் இல்லை. இருந்த சாதாரண படிமுறைகளான, ஒருவர் எதிர்த்தோ அல்லது ஈதிர்ப்பு இல்லாமலோ  கொல்லப்பட்டால், உடனடியாக எல்லா உடல் உட்பட தடயங்களும் அழிக்கப்படலாம் என்பதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். இதனாலேயே, கிழக்கில் கிராமம், கிரமாக சுட்டு, கொளுத்தி சட்ட பூர்வமாக அழிக்கப்பட்டது.       மாறாக, புலிகள் (அல்லது அது போன்ற) அமைப்பு, என்னை பொறுத்தவரையில், சின்ஹல  அரசிலும் பார்க்க, மற்ற இயக்கங்களிலும் பார்க்க, எழுத்தில் இல்லா விட்டாலும்,   வன்முறை பிரோயோக தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் நியாயாதிக்கம், மற்றும் விதிகளை, அது அறியாமேலேயே பின்பற்றியது.   இவை வெளிப்படடையானவை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.