Jump to content

கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில்  2ஆவது இடத்தில் இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் ஒக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இலங்கையும் மூன்றாம் இடத்தில் கானாவும், அதனைத் தொடர்ந்து தென்கொரியா, மியான்மர், அவுஸ்ரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 3,349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளடன் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-சிறந்த-முன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில்  2ஆவது இடத்தில் இலங்கை

இதுக்காகவாவது  சர்வதேசம் கணக்குவழக்கில்லாமல் காசை அள்ளிக்குடுக்க வேணும்.:cool:

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

இதுக்காகவாவது  சர்வதேசம் கணக்குவழக்கில்லாமல் காசை அள்ளிக்குடுக்க வேணும்.:cool:

காசை கொடுத்தார்களோ இல்லையோ;கொரொனாவை பல வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இலங்கை  சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Dash said:

காசை கொடுத்தார்களோ இல்லையோ;கொரொனாவை பல வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இலங்கை  சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளது.

நீங்கள் தொலைஞ்சியள் இண்டைக்கு!🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Dash said:

காசை கொடுத்தார்களோ இல்லையோ;கொரொனாவை பல வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இலங்கை  சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளது.

இராணுவ ஆட்சியிலை கட்டுப்பாடுகள் கொஞ்சம் இறுகமாய்த்தானே இருக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

இராணுவ ஆட்சியிலை கட்டுப்பாடுகள் கொஞ்சம் இறுகமாய்த்தானே இருக்கும்.....

கொரோனாவிலிருந்து தப்புவதற்கான  கட்டுப்பாடுகள் ராணுவக்கட்டுப்பாடுகளைவிட இன்னும் மேலாக இருக்க வேண்டும்
அந்த வகையில் இலங்கை அரசைப் பாராட்டியே ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாத்தியார் said:

கொரோனாவிலிருந்து தப்புவதற்கான  கட்டுப்பாடுகள் ராணுவக்கட்டுப்பாடுகளைவிட இன்னும் மேலாக இருக்க வேண்டும்
அந்த வகையில் இலங்கை அரசைப் பாராட்டியே ஆகவேண்டும்.

இலங்கையிடம், வியட்நாமிடம், நியூசிலாந்துடம் யூகே, ஈயூ கற்கவேண்டிய பாடங்கள் நிறைய.

பெப்ரவரி முடிவில், external borders ஐ மூடி இருந்தால். இப்போ யூகேகுள், ஈயுவுக்குள் அதிக பிரச்சனை இல்லாமல் உள்ளூர் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி இருக்கலாம். 

இப்போ உள்ளூர் சாண்ட்விச் கடை முதல், கார் விற்பனை வரை பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியும் அடி வாங்குகிறது.

பொருளாதாரத்தின் 10% போயிருந்தாலும், அதை அரசு தாங்கி பிடித்திருக்கலாம்.

இப்போ 70% பொருளாதாரத்தை அரசே தாங்கி பிடிக்க வேண்டிய நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபையாவை பாராட்டத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாக கையாண்ட அரசுகளை பாராட்டியே ஆகவேணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் நிட்சயமாக பாராட்ட வேண்டும் யாழை முடக்கிய சர்க்குணத்தாரை மறந்து 

எத்தன தல உருள போகுதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் பாராட்டியே ஆகா வேண்டும். 

இங்கும் கட்டாரில்  மிகவும் குறைந்து விட்டது. இங்கு கட்டாயம் மொபைலில்  கொரோனா செயலியை தரவிறக்கம் செய்யவேண்டும். உடனடியாக இந்த செயலி உங்கள் தேக ஆரோக்கிய விபரங்களை தேசிய சேமிப்பகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும். இது பச்சை நிரத்தில் இதுக்கும். 
உங்களுக்கு நோய் தொற்று என சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் தொற்று உறுதியானால், உடனடியாக செயலியின் நிறம் மாறிவிடும். பின்பு நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை பொலிஸாரினால் கண்காணிக்க முடியும்.

அதேபோல் உங்கலருகில் யாரும் நோயாளி இருந்தால் உங்கள் மொபைல் சத்தமிட்டு எச்சரிக்கும் 

எந்த ஒரு இடத்திற்கு (bank / shopping mall ) சென்றாலும் பச்சை நிறம் காட்டி   ஆரோக்கியமானவராக இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கபடுவார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.