Jump to content

நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள்

மஹாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட பௌத்த குருமார்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்தனர்.

குறித்த குழுவினர் இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் சமாதானத்தினை வலிறுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக கடந்த 30வருட காலத்தில் யுத்தத்தின் பால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு கோட்டின் கீழ் வாழும் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் உயர் அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

மேலும் உதவி வழங்கும் நிகழ்வில், 25 கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பேற்றின் பின்னரான உதவி பொருட்களும், சத்துணவுகளும், 100 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 150 பேருக்கு உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள் | Athavan  News

நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள் | Athavan  News

http://athavannews.com/நல்லிணக்க-விஜயமாக-யாழ்ப்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கத்துக்கு வந்தவர்களின் சைசு....அட போங்கப்பா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை பிக்குமார் என்று படம் காட்டுகினம்  . பிக்குகளே  கலகத்தை   ஏற்படுத்துகிறார்கள். பிறகு எதற்கு நல்லிணக்கம்? அவர்களே கலகத்தை ஏற்படுத்தி அவர்களே நல்லிணக்கமும்  செய்யினமாம்மில்ல. அதுக்கை எதுக்கு இராணுவ பிரசன்னம்?   தமிழரை மடையர் என்று நினைத்து நல்லாய் நாடகம் எழுதி நடிக்கிறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழவேண்டிய வயதுக் குழந்தைகளை என்ன என்று புரியாத வயதில் துறவிகள் ஆக்குவது மிகவும் கொடுமை.இது பெரிய மனிதஉரிமை மீறல்.

Link to comment
Share on other sites

48 minutes ago, ஈழப்பிரியன் said:

வாழவேண்டிய வயதுக் குழந்தைகளை என்ன என்று புரியாத வயதில் துறவிகள் ஆக்குவது மிகவும் கொடுமை.இது பெரிய மனிதஉரிமை மீறல்.

ஷுஸ்.   சிறுவர் போராளிகள் ஏன்டா மாத்திரிம் நாங்கள் கத்துவம். மதத்தின் பெயரால் என்ன செய்தாலும் கப் சிப்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

44-3.jpg

இதில் இருக்கும் பள்ளி மாணவர்கள் சிங்கள மாணவர்களா?

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.