Jump to content

பிரணாப் குமார் முகர்ஜி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரணாப் குமார் முகர்ஜி

 

மறைந்த வசந்த் குமார் மறைவிற்குப் பின்பு சமூக வலைதளத்தில் ஏதாவது ஓர் இடத்தில் அவரைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டவர்கள் யாராவது எழுதுவார்களா? என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். ஆனால் என் பார்வையில் அப்படியொரு தகவல் கண்ணில்படவே இல்லை. 

99 சதவிகிதம் அவரைப் பற்றி உண்மையான நேர்மையான அருமையான அஞ்சலி செய்திகள் தான் கண்ணில்பட்டது. அவர் அரசியல்வாதி, தொழில் அதிபர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வகித்தவர். 400 கோடிக்கும் மேல் என் சொத்து உள்ளது என்று கம்பீரமாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தவர். இதற்கு மேலாக அம்பானி அதானி என்று பேசிக்கொண்டிருக்கும் தமிழர்களின் மத்தியில் தன் முனைப்பை ஏற்படுத்திக் காட்டியவர்களின் முக்கியமானவராகவே தெரிகின்றார்.

 

அதே போல பிரணாப் குமார் முகர்ஜி மறைவு செய்திக்கு வந்து விழுந்த அஞ்சலிகளைக் கோர்த்துப் பார்த்தேன். ஏனிந்த மாறுபாடு? அது தான் சமூக வலைதளங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் உண்டான வித்தியாசம். பேரிழப்பு. தியாக சீலர், பாரதம் இழந்த தவப்புதல்வர் இத்யாதி இத்யாதி என்று வரிசையாகத் தோரணம் கட்டி வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தாலும் உண்மைக்கும் பொய்க்கும் உண்டான வித்தியாசங்கள் ஒவ்வொருவரும் பார்த்த கேட்ட நடந்த சம்பவங்களை வைத்து எளிதாக கிழித்து தோரணமாக கட்டிவிடுவது தான் தற்போதைய தொழில் நுட்பம் கொடுத்த வரப்பிரசாதம்.

குக்கிராமத்திலிருந்து தத்தமது பயணத்தைத் தொடங்கி இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்கள் என்று இரண்டு பேர்களை இந்திய அரசியல் சரித்திரம் பதிவு செய்துள்ளது. ஒன்று மறைந்த அப்துல் கலாம். மற்றொருவரும் பிரணாப். இருவரையும் ஒரே தட்டில் வைக்க முடியுமா? என்றால் முடியாது. தட்டே நகராது. இறங்கித் தொலைங்கப்பா என்று ஒருவரைக் கீழே தள்ளிவிடும்.

மக்களின் முதல் குடிமகன், மாணவர்களின் கனவு முதல் குடிமகன், அஞ்சு பைசா கூட அடுத்தவர் பணம் தேவையில்லை என்று கடைசி வரைக்கும் வாழ்ந்த அப்துல் கலாமோடு வேறு எவரையாவது ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்த, வசித்த,கொண்ட்டாங்களுடன் அனுபவித்துச் சென்றவர்களை ஒப்பிட முடியுமா?

1969ல் தொடங்கிய பிரணாப் ன் அரசியல் பயணம் ஐந்து முறை (மாநிலங்களவை உறுப்பினர்) புற வாசல் பயணமாகவே இருந்தது. நிதியமைச்சர், பாதுகாப்பு, வெளியுறவு என்ற இந்திய அதிகாரத்தின் மூன்று முக்கிய துறைகளையும் அனுபவித்தவர் கடைசி வரைக்கும் பிரதமர் பதவியென்பது அவருக்கு எட்டாத கனியாக இருக்க அதில் உருவான பூசல் ராஜீவ் காந்தியால் மூன்றாண்டு வனவாசம் அனுபவிக்க நேர்ந்தது. அதாவது அரசாங்கப் பணத்தில் வாழாத மூன்றாண்டுகள். இத்தாலி அம்மையாரின் தீர்க்க தரிசன யோசனையின் காரணமாக ஜனாதிபதி மாளிகை வாசல் கதவு திறக்க காரணமாகவும் இருந்தது.

கணவான் அரசியல் என்பதனை கடைசி வரைக்கும் கடைப்பிடித்த காரணத்தால் பாரத் ரத்னா விருது வரைக்கும் அவரால் கம்பீரமாக நடைபயில முடிந்தது. நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரின் உழைப்பு எல்லாமே திருபாய் அம்பானி மறைவுக்குப் பின்னால் அந்தக் குடும்பம் பாகப் பிரிவினைக்குப் பஞ்சாயத்து செய்பவராக வாழ்ந்த இவர்கள் என் மகன்கள் என்று அறிவிக்கும் அளவிற்கு இந்தியச் சமுத்திரத் திரளுக்கு தன்னால் ஆன மக்கள் பணியைச் செய்தார்.

என்னவெல்லாம் செய்தார் என்பது அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியும் சொல்லாது. அவர் மனதளவில் கடைசி காலத்தில் ஞானம் வந்து விரும்பிய பாஜகவும் பிரகடனம் செய்ய முடியாத அளவிற்குக் கம்பி மேல் பயணம் செய்த காரியக்காரராகவே வாழ்ந்து முடித்துள்ளார். இறந்த அவர் மனைவிக்கு ஒரு வேளை தெரிந்திருக்கக்கூடும். மகள் சொன்னது போல "பிரதமர் பதவியை எட்ட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருந்தது. ஜனாதிபதி ஆன பின்பு அதைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை" என்று அவருக்கு அவரே சமாதானம் செய்து கொண்டிருந்ததை அவர் எழுதியுள்ள இரண்டு ஆங்கிலப் புத்தகங்களில் சொல்லியுள்ளாரா? என்பதனை வாசித்து நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்திரா காந்தி அமைச்சரவையில் 47 வயதில் இந்தியாவின் இளம் நிதியமைச்சர் என்று பெயர் பெற்றவர் 2017 வரைக்கும் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் இந்தியர்களின் வரிப்பணத்தில் அவர் சகலவிதமான சந்தோஷங்களையும் அனுபவித்து மறைந்துள்ளார். அதனை ஊடகங்கள் சொல்வது போல நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தார் என்று நாம் நாகரிகமாகச் சொல்ல வேண்டும். அதற்கு மேலும் அவர் வேறெந்த பதவியையும் விரும்பாத காரணம் அவர் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்பது மட்டுமே. காரணம் உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் சீர் கெட்டு கடைசியில் எந்த மூளையில் இப்படி அதிசயமான நாட்டு நலன் குறித்து சிந்தனைகள் வந்ததோ அந்த இடத்தில் கட்டி வந்து அதுவே கோமா நிலைக்குக் கொண்டு சென்றது.

உயர்ந்த இந்திய இராணுவ மருத்துவமனை வசதிகள் அவருக்கு கடைசியில் கோமா நிலையைத் தான் தந்தது. தான் யார் என்று தெரியாமல், தன் உடம்பு எங்கேயுள்ளது என்பதனை அறியாமல், தான் செய்து வந்த காரியங்கள் அனைத்தும் நல்லதா? கெட்டதா? என்பதனை அறியும் அறிவு மறைந்து, உணர்வு நீங்கி, உள்ளுற அலையும் ஆத்மாவோடு அவர் உரையாடியிருக்கக்கூடும். எங்கேயோ லட்சக்கணக்கான மக்கள் இறந்த இரத்தச் சுவடுகளில் நம் கையும் நனைந்திருந்தது என்பதனை அவர் அந்தராத்மா அவருடன் உணர்த்தியிருக்குமா? என்று யோசித்துப் பார்த்தேன். அதாவது வாழும் போது நரகம். வாழ்க்கை முடியும் போது எப்போது இறந்தோம் என்று அறியாத பயணமாக அவர் உயிர்க்குருவி அவரை விட்டுப் பறந்துள்ளது.

அவரின் கடைசி 17 நாட்கள் எவ்வித சுயசிந்தனைகளைப் புடம் போட்டு அவருக்குள் உரையாடலை வளர்த்திருக்குமோ? என்று யோசித்துப் பார்த்தேன். காரணம் இந்து மத தத்துவங்களின் படி இறப்பவர்களுக்கு இறக்கும் நேரம் துல்லியமாகத் தெரியும். அவர்களின் முன்னோர்கள் அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. இவரை நிச்சயம் திருபாய் அம்பானி வரவேற்று இருப்பார். கூடவே அவர் இந்தியாவிற்குச் செய்ய மறந்த கடமைகளை நினைவூட்டப் பல லட்சம் பேர்களும் அந்த வரிசையில் இருந்திருக்கக்கூடும். அவருக்கு இந்திய அரசியல்வாதிகள் அஞ்சலிப் பூக்களை தூவிக் கொண்டிருந்த போது அவருக்கு உண்மையிலேயே அஞ்சலி செலுத்த வேண்டிய சகோதரர்கள் செய்துள்ளார்களா என்பதனை ட்விட்டரில் கவனித்துக் கொண்டிருந்தேன்.

கச்சிதமாக நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிங்களர்கள் எப்போதும் நன்றி மறவாதவர்கள் என்பதனை நினைத்து பெருமையாக இருந்தது.

Gotabaya Rajapaksa

@GotabayaR

I am deeply saddened to learn the demise of former Indian president #PranabMukherjee. He will be remembered for his service to the people of #India.

My heartfelt condolences to his family and friends.

Mahinda Rajapaksa

@PresRajapaksa

I am saddened to hear of the passing of the Fmr. #Indian President, #Bharatratna Shri #PranabMukherjee. He was a statesmen par excellence, a writer & a man loved by all. The passion with which he served his nation is unparalleled. My deepest condolences to his family & friends.

இதனை படித்த பின்பு வருத்தப்படும் நண்பர்களுக்காகவே வைரமுத்து எழுதி எங்கள் ஊர் மின் மயானத்தில் ஒவ்வொரு பிணமும் எரிக்கப்படும் போது ஒலிக்கும் பாடலை அவருக்கு அர்ப்பணிக்கின்றேன்.

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்.....

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்......

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்....

விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்....

இந்தியச் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டு தங்கள் நல்வாழ்க்கைக்காக கடைசி வரை வாழ்ந்த அரசியல்வாதிகளின் பாவங்களை எந்த மரணமும் மாற்றது. மறைக்காது. அதன் அழுக்கை கழுவாது. அதன் தாக்கம் தலைமுறைகள் அனுபவிக்கும்.

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.