Jump to content

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா?

கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்! 

அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.

தவிரவும் இதுவரை சிலருக்கு தொற்று மீளவும் வந்துள்ளது.

நான் வாசித்து அறிந்தவரையில் பொதுவாக பெரிய விளைவை தரும் சார்ஸ், சின்னம்மை போன்ற தொற்றுக்கள் - 2 வருடமாவது antibodies உடலில் இருக்குமாம். ஆனால் சாதாரண தடிமலை தொடர்ந்து வரும் antibodies ஓரிரு மாதங்களில் அழிந்து விடுமாம். 

ஆனால் இந்த வைரஸ் பாரிய தாக்கத்தை தருவதாக இருந்தாலும் - பலருக்கு நோய் வந்த 2 கிழமையின் பின்னும் antibodies நெகட்டிவ் வருகிறதாம்.

ஆகவே herd immunity சாத்தியமாக தெரியவில்லை.

தடுப்பூசியினால் வரும் பாதுகாப்பும் 6 மாதம் - 1 வருடம்தான் என கதைக்கிறார்கள்.

ஆனால் தடுப்பூசி ஏற்றினால் பக்க விளைவு மரணம் இல்லை என்பதால் - அனைவருக்கும் ஒரே காலத்தில் தடுபூசி ஏற்றி ஒவ்வொரு நாடாக பாதிப்பை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.

இதுவரை மனி குலம் சந்தித்த தொற்றில் இருந்து இந்த வகையில் இது மாறுபாடானது.

ஆகவேதான் இதில் “மனிதரின் கைகள்” இருக்க கூடும் என நான் சந்தேகிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

பொருளாதாரத்திற்கும் பாடசாலை திறப்பிற்கும் நேரடியான சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோவிட் 19 தொடர்பான அச்சத்தை களைய இந்த உத்தியை மேற்கொண்டிருக்கலாம். அச்ச உணர்வு மிகையாகி செல்லும்போது அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. அங்குதான் பொருளாதாரம் பயணிக்கிறது. கனடாவைப் பொருத்தவரை காலநிலை என்பது மிகச்சோதனையானது. தற்சமயம் ப்ளூ எனப்படும் காய்ச்சல் பரவும் நேரம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்தத் தாக்கத்தால் அநேகர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு தடுப்பூசி போடுவதும் செப்ரெம்பர் கடைசி, ஒக்டோபரில் இங்கு நடைமுறையாகும் விடயம். தற்போது தடுப்பூசி பற்றி எத்தகவலும் இல்லை. அத்தோடு இங்கு குடும்ப வைத்தியர்கள் எல்லோரும் தமது அலுவலகங்களைப் பூட்டி வைத்துக்கொண்டு தொலைபேசி வாயிலாகவே உரையாடுகிறார்கள். வைத்தியத் தேவைக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. சாதாரண வழமையான வருத்தங்களுக்கும் காட்ட முடியாத சூழல். ஆனால் பல் வைத்தியர்கள் அலுவலகங்களைத் திறந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.(காரணம் பற்சிகிச்சைக்கு நோயாளிகளே பணம் செலுத்த வேண்டும்) குடும்ப வைத்தியர்கள் அப்படியல்ல அரசாங்கமே அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கிறது) குடும்ப வைத்தியர்களிடம் போக முடியாதவர்கள் நேரடியாக அவசரச் சிகிச்சைப்பகுதிக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு 4,5 நாட்கள் அப்பிரிவில் மறிக்கப்பட்டு கோவிட் 19 இருக்கிறதா என்று சோதனை செய்தே திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தை சந்தர்ப்பம் கிடைத்ததால் நிறையவே சுத்துமாத்து செய்து பிழைப்பவர்கள் இங்கு ஏராளம். ஏன் என்னுடைய பதிவு செய்யப்பட்;ட தொழிலைக் காட்டி 40 ஆயிரம் டொலர்களை எடுக்க வழி சொல்லித்தந்தவர்களும் உண்டு. உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களுக்கு சேரவேண்டியதை பலரும் தவறான வழியில் உபயோகிப்பதால் எதிர்வரும் காலத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாதிக்கப்படப்போகின்றோம். இவை இப்படியே இருக்கட்டும்.

இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திருப்பினாலே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைகளை இயங்க வைப்பதன் மூலம் மற்றவர்களையும் பணிகளுக்கு வரும்படி நிர்ப்பந்திக்கலாம். உரிய வைத்திய காரணி உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பணியாற்றலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும் அல்லவா ,)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

யஸ்ரின்

எதிர்ப்பு சக்தி உருவாகாது என்று விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோயிற்காக நீண்ட கால செயற்பாடின்மை மனபிறழ்வுகளை உருவாக்குகிறதே. இதுவரை இங்கு கோடைகாலம் இருந்ததால் வெளியே நடமாட்டம் குறைந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அல்லது பல்கனி என்று வெளிக்காற்றைச் சுவாசித்தோம் இனி அத்தனையும் முடக்கப்பட்டு கூடுகளுக்குள்  சிறைப்படுத்தப்பட்ட பறவைகள்போல வாழ வேண்டிய கட்டாயம். இப்போதே பல முதியவர்களுக்கு மன அழுத்தம் இனிவரும் காலங்களில் இளைய சமூகமும் இந்த மன அழுத்தத்திற்கு உள்வாங்கப்படப்போகிறது. கோவிட் 19 வெளியே தெரியும் நோயாக இருக்க மன அழுத்தம் அதை விடக்கடினமாக எல்லோரையும் தாக்கப்போகிறது. ஒரு வேளை அத்தகைய சூழலைத் தவிர்க்க இத்தகைய விடயங்களை மேற்கொண்டிருப்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

தவிரவும் இதுவரை சிலருக்கு தொற்று மீளவும் வந்துள்ளது.

நான் வாசித்து அறிந்தவரையில் பொதுவாக பெரிய விளைவை தரும் சார்ஸ், சின்னம்மை போன்ற தொற்றுக்கள் - 2 வருடமாவது antibodies உடலில் இருக்குமாம். ஆனால் சாதாரண தடிமலை தொடர்ந்து வரும் antibodies ஓரிரு மாதங்களில் அழிந்து விடுமாம். 

ஆனால் இந்த வைரஸ் பாரிய தாக்கத்தை தருவதாக இருந்தாலும் - பலருக்கு நோய் வந்த 2 கிழமையின் பின்னும் antibodies நெகட்டிவ் வருகிறதாம்.

ஆகவே herd immunity சாத்தியமாக தெரியவில்லை.

தடுப்பூசியினால் வரும் பாதுகாப்பும் 6 மாதம் - 1 வருடம்தான் என கதைக்கிறார்கள்.

ஆனால் தடுப்பூசி ஏற்றினால் பக்க விளைவு மரணம் இல்லை என்பதால் - அனைவருக்கும் ஒரே காலத்தில் தடுபூசி ஏற்றி ஒவ்வொரு நாடாக பாதிப்பை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.

இதுவரை மனி குலம் சந்தித்த தொற்றில் இருந்து இந்த வகையில் இது மாறுபாடானது.

ஆகவேதான் இதில் “மனிதரின் கைகள்” இருக்க கூடும் என நான் சந்தேகிக்கிறேன்.

சில விடயங்கள் உண்மை: தற்போதைய  வைரசுக்கு நோய்த்தீவிரத்தைப் பொறுத்தவரை நெருக்கமானதாக 2003 இல் வந்த சார்ஸ் வைரஸும், 2012 இல் வந்த மேர்ஸ் வைரசும் இருக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் உருவான நிர்ப்பீடன எதிர்ப்பு 2 வருடங்கள் வரை உடலில் தங்கியது. இதுவும், வேகமாகப் பரவாமையும் காரணமாக உயிரிழப்பு மிகக் குறைவு சார்சிலும் மேர்சிலும். 

உங்கள் மனிதனின் கண்டுபிடிப்பா கோவிட் என்ற சந்தேகத்திற்கு இப்போதைக்கு positive ஆன ஆதாரங்கள் இல்லை, சந்தேகங்களும் தகவல்களில் இருக்கும் இடைவெளிகளும் காரணமாக இப்போது என் முடிவு: இது இயற்கையாக விலங்கினத்தில் இருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்பதே: 

1. இந்த வைரசை உடலுக்கு வெளியே திசுக்களில் வளர்த்தெடுப்பது கடினமாக இருக்கிறது. ஆபிரிக்க பச்சைக் குரங்கின் Vero6 என்ற திசுவில் மட்டுமே இது நன்கு வளர்கிறது. ஆனால், ஆபிரிக்க பச்சைக் குரங்கினத்தில் இந்த வைரசு இயற்கையாகக் காணப்படவில்லை.

2. மலாயன் பொங்கொலின் என்ற சீனாவுக்குள் அதிகம் கடத்தி வரப்படும் ஒரு விலங்கில் இந்த வைரசுக்கு மிக நெருக்கமான  அமைப்புடைய வைரசு இருப்பதாக க் கண்டறிந்துள்ளனர். வேறு விலங்குகளில் இதை விட நெருக்கமான கொரனா வைரசுகள் இல்லை.

3. இறுதிக் காரணம் மூலக்கூற்று அமைப்பு  சார்ந்தது, இதை விளக்க தமிழில் எனக்குக் கடினம், ஆயினும் முயல்கிறேன்: வைரசு ஒரு விலங்குகள்/மனிதரிடையே பல காலம் பரவி சுற்றித் திரியும் போது தன்னைக் காத்துக் கொள்ள சில மாச்சத்து மூலக் கூறுகளால் தன்னை மறைத்துக் கொள்ளும் (masking). இத்தகைய மாற்றம் பல வருடங்களாக ஒரு விலங்கினத்தில் வைரசு சுற்றித்திரிவதால் மட்டுமே ஏற்படக் கூடிய மாற்றம். இத்தகைய மாற்றம் இந்த நவீன கொரனாவைரசில் இருக்கிறது. உண்மையில் இந்த மாற்றம் தான் எங்கள் உடல் வைரசின் Achilles heel ஐ இனங்காண முடியாமல் தடுக்கிறது. இந்த glycosylation என்ற மாற்றத்தை செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்குவது  அசாத்தியம் என்றல்ல, ஆனால் மிகவும் சவாலான ஒரு வேலை.

இதுவே இப்போதைக்கு என் முடிவின் காரணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

தெளிவான விளக்கத்துக்கு  நன்றி.

உங்கள் மூன்று காரணங்களும் அதன் படி உங்கள் முடிவும்  புரிந்து கொள்ள முடிகிறது.
தவிரவும் நான் தான் மனிதர் உருவாக்கியது என்ற எடுகோளை வைக்கிறேன் ஆகவே நான்தன இதை ஐயம் திரிபற நிறுவ வேண்டும்.

ஆனால் இந்த கோணத்தில் சிந்தித்து  பார்திர்களா?

எடுகோள்

இதுவரை நாம்  அறியாத ஒரு உயிரியல் கல உருவாக்க முறையை சீனா அறிந்து விட்டது. அதனால் 

1. நம்மால் மனித உடலுக்கு வெளியே உருவாக்க முடியாததை அவர்கள் இலகுவாக உருவாக்குகிறர்கள் 
2. இந்த வைரசு labல் உருவாக்கியதால்தான் வேறு விலங்கில் இது இல்லை 
3. ஏனையை இயற்கையான வைரசுகள்  போலன்றி இந்த வைரஸின் அஷிலிசின் குதியை கண்டு பிடிக்க கடினமாக இருப்பதும் - இது மனிதர்களால் டிசைன் பண்ண பட்டதால்தான்.

எனது கருத்தின் "விழுந்த பக்கத்தில் குறி சுடும்" தன்மை எனக்கு  புரிகிறது 😀

மேலும் என் முழு தியறியுமே எனது நிறுவ படாத எடுகோளிலேயே தங்கி உள்ளது.

ஆனால் குறைந்த பட்ஷம்  ஒரு healthy scepticismற்கு  இடமிருப்பதாகவே படுகிறது. or may be my imagination is running riot🤪.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

யஸ்ரின்

எதிர்ப்பு சக்தி உருவாகாது என்று விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோயிற்காக நீண்ட கால செயற்பாடின்மை மனபிறழ்வுகளை உருவாக்குகிறதே. இதுவரை இங்கு கோடைகாலம் இருந்ததால் வெளியே நடமாட்டம் குறைந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அல்லது பல்கனி என்று வெளிக்காற்றைச் சுவாசித்தோம் இனி அத்தனையும் முடக்கப்பட்டு கூடுகளுக்குள்  சிறைப்படுத்தப்பட்ட பறவைகள்போல வாழ வேண்டிய கட்டாயம். இப்போதே பல முதியவர்களுக்கு மன அழுத்தம் இனிவரும் காலங்களில் இளைய சமூகமும் இந்த மன அழுத்தத்திற்கு உள்வாங்கப்படப்போகிறது. கோவிட் 19 வெளியே தெரியும் நோயாக இருக்க மன அழுத்தம் அதை விடக்கடினமாக எல்லோரையும் தாக்கப்போகிறது. ஒரு வேளை அத்தகைய சூழலைத் தவிர்க்க இத்தகைய விடயங்களை மேற்கொண்டிருப்பார்களோ?

1 hour ago, வல்வை சகாறா said:

பொருளாதாரத்திற்கும் பாடசாலை திறப்பிற்கும் நேரடியான சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோவிட் 19 தொடர்பான அச்சத்தை களைய இந்த உத்தியை மேற்கொண்டிருக்கலாம். அச்ச உணர்வு மிகையாகி செல்லும்போது அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. அங்குதான் பொருளாதாரம் பயணிக்கிறது. கனடாவைப் பொருத்தவரை காலநிலை என்பது மிகச்சோதனையானது. தற்சமயம் ப்ளூ எனப்படும் காய்ச்சல் பரவும் நேரம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்தத் தாக்கத்தால் அநேகர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு தடுப்பூசி போடுவதும் செப்ரெம்பர் கடைசி, ஒக்டோபரில் இங்கு நடைமுறையாகும் விடயம். தற்போது தடுப்பூசி பற்றி எத்தகவலும் இல்லை. அத்தோடு இங்கு குடும்ப வைத்தியர்கள் எல்லோரும் தமது அலுவலகங்களைப் பூட்டி வைத்துக்கொண்டு தொலைபேசி வாயிலாகவே உரையாடுகிறார்கள். வைத்தியத் தேவைக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. சாதாரண வழமையான வருத்தங்களுக்கும் காட்ட முடியாத சூழல். ஆனால் பல் வைத்தியர்கள் அலுவலகங்களைத் திறந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.(காரணம் பற்சிகிச்சைக்கு நோயாளிகளே பணம் செலுத்த வேண்டும்) குடும்ப வைத்தியர்கள் அப்படியல்ல அரசாங்கமே அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கிறது) குடும்ப வைத்தியர்களிடம் போக முடியாதவர்கள் நேரடியாக அவசரச் சிகிச்சைப்பகுதிக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு 4,5 நாட்கள் அப்பிரிவில் மறிக்கப்பட்டு கோவிட் 19 இருக்கிறதா என்று சோதனை செய்தே திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தை சந்தர்ப்பம் கிடைத்ததால் நிறையவே சுத்துமாத்து செய்து பிழைப்பவர்கள் இங்கு ஏராளம். ஏன் என்னுடைய பதிவு செய்யப்பட்;ட தொழிலைக் காட்டி 40 ஆயிரம் டொலர்களை எடுக்க வழி சொல்லித்தந்தவர்களும் உண்டு. உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களுக்கு சேரவேண்டியதை பலரும் தவறான வழியில் உபயோகிப்பதால் எதிர்வரும் காலத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாதிக்கப்படப்போகின்றோம். இவை இப்படியே இருக்கட்டும்.

இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திருப்பினாலே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைகளை இயங்க வைப்பதன் மூலம் மற்றவர்களையும் பணிகளுக்கு வரும்படி நிர்ப்பந்திக்கலாம். உரிய வைத்திய காரணி உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பணியாற்றலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும் அல்லவா ,)

அக்கா,

உங்கே எப்படியோ தெரியாது ஆனால் இங்கே 16 வயதுக்கு கீழே உள்ள பிள்ளைகளை தனியே வீட்டில் விட முடியாது, சட்டபடி. ஆகவே பள்ளியை மூடினால்- ஒரு பெற்றாராவது வேலை செய்ய முடியாது (வீட்டில் இருந்தும்) ஆகவே இது பொருளாதாரத்தை பாதிக்கும்.

உங்கள் மன அழுத்தம் சம்பந்தமான கேள்வி நியாயமானதே. பல cancer screening உம் தள்ளி போகிறது.

இவற்றுகெல்லாம் ஒரே தீர்வு நாடுகள் தம்மை தாமே தனிமை படுத்துவதே.

Goods and services ஐ மட்டும் முன்பு போல பரிமாறியபடி, மனித பிரயாணங்களை  தடுப்பதே ஒரே வழி.

ஈயு, அமெரிக்கா, கனடாவில் உள் நாட்டில் இருக்கும் குழப்ப நிலை, இலங்கை, தைவான், நியுசிலாந்து, சிங்கபூரில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: பிள்ளைகளை பார்த்தபடி வீட்டில் இருந்த வேலை செய்ய ஒரு தடையும் இல்லை, ஆனால் பலர் முடியாது என சொல்லுவீனம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு 
உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன் 
எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி 
இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது. 

ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை 
ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான 
மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

வழமையாக நான் ஏதாச்சும் எழுதினால் அது ஏதோ மட்டமான.ஒரு கருத்தாகவே கணிப்பிடப்படுவது வழமை..னக்கு எதிராக யாராச்சும் எழுதினால் பச்சை குத்த பத்துப் பேர் இருப்பார்கள்.அந்தவகையில் நான் என்ன சொல்ல வாறேன் என்பதையாவது புரிந்துள்ளீர்கள் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

எல்லாம் ஒகே, தல ... 

மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே...

முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள்.

இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே.

எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மூத்த மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை.

அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு?

இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன்.

NHS க்கு இவையளை பராமரிப்பதே பெரிய செலவு. தனி வீட்டில போரிங்... பொழுது போகுதில்லை எண்டு, குத்துது, குடையுது எண்டு ஆஸ்பத்திரிக்கு போய், கட்டிலிலை இருந்து, ஓசி சாப்பாடையும் அடிச்சுக்கொண்டு இருக்கிற ஆட்களை கேள்விப்பட்டிருக்கிறியளே.

ஆஸ்பத்திரி செலவை, bed occupancy days வைத்துதான் கணிப்பார்கள். இவர்கள் WBO (waste bed occupiers) என்பார்கள், ஆஸ்பத்திரி கணக்காளர்கள்.  

உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம்.

கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫

இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

உண்மைதான்...நானும் இந்த கோணத்தில் சிந்தித்தேன். 

ஆனால் மொக்கு அரசு (state) இல்லை. மொக்கு அரசாங்கம் (govt.) - ஏனென்றால் இதனால் வரும் savings பயன் தர நாள் எடுக்கும். ஆனால் பொருளாதாரத்தில் விழும் அடி - கையோட கம்மாரிசு. 

அத்தோட பிரெக்சிற் விழைவு வேற. இனி கெண்ட் போகவே லொறிகாரார் பெமிற் எடுக்கொணுமாம்.

10 மணிக்கு பப் பூட்டல். இதர கட்டுப்பாடுகள் சகலதையும் போர்டரை பூட்டி இருந்தா தவிர்திருக்கலாம்.

இந்த கடுப்பெல்லாம் இந்த அரசாங்கத்தின் மீதுதான் திரும்பும்.

அடுத்த தேர்தலுக்கு பிறகு வரும் அரசாங்கம் உந்த savings ஐ அறுவடை செய்யும்.

மக்களும் மொக்குகள்தான் - கொலிடே போய், தொற்று வந்து பொருளாதாரம் படுத்தால், இவர்களுக்கும்தான் வேலை போகும், வீட்டு விலை குறையும். ஆனால் instant gratification தான் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பொரீஸரோ, ரிசியோ பொக்கட்டாலையே போடப்போகினம்.....

வரி வரிசையாக ஏறப்போகுது.....

வற் வரி இப்ப இருபது இனி இருபத்தைந்து ஆகலாம்.

கோப்பரேற் வரி,

தனிநபர் வருமானவரி,

சொத்துவரி,

எரிபொருள் வரி,

வீட்டு காஸ் வரி இப்ப ஜந்து.....இனி பத்தாகலாம்

ஆவன வரி - சராசரியா ஜந்து வீதம் கூடலாம்

ஆவன பெறுமதி உயர்வு வரி கூடலாம்

சிகரட், தண்ணி வரி கூடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

😩😡🤦‍♂️

வெளிகிடடி விசுவமடுவுக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசானும் நாதமும் கதைக்கிறதைப் பார்த்தால் இருவரும் முதுமையடையாத மாக்கண்டேயர் ஜீன் ஏதும் வைச்சிருப்பீனம் போல கிடக்கு!😎
(அல்லது பழையகால வைக்கிங்குகள் செய்தது போல, முதுமை வந்ததும் மலையில இருந்து குதித்து நேராக "ஒடின்" கடவுளிடம் போற பிளானோ தெரியேல்ல!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

கோசானும் நாதமும் கதைக்கிறதைப் பார்த்தால் இருவரும் முதுமையடையாத மாக்கண்டேயர் ஜீன் ஏதும் வைச்சிருப்பீனம் போல கிடக்கு!😎
(அல்லது பழையகால வைக்கிங்குகள் செய்தது போல, முதுமை வந்ததும் மலையில இருந்து குதித்து நேராக "ஒடின்" கடவுளிடம் போற பிளானோ தெரியேல்ல!)

நாங்கள் பிரிட்டிஸ்காரர் கண்டியளே.....

நாங்கள் எங்களுக்கு பிடுங்குப்பட்டாலும்..... நீஙகள், கனடாக்காரர், ஆஸ்திரேலியாக்காகரர், சீறீலங்கன்ஸ், இந்தியன்ஸ் எழுதிப்பதியிறத..... ஒண்டரைக் கணணால தான் வாசிக்க தொடங்குவம்.....

என்ன இருந்தாலும்..... எங்கண்ட பழைய கொலணியலில இருக்கிற ஆக்கள் எண்டு ஒரு..... பார்வையெண்டு சொல்லுங்கோவன். 😜
 
சும்மா பகிடிக்கு 😁...உங்கள் கருத்தை ரசித்தேன். நாம சும்மா பம்பலா அப்பப்ப கதைக்கிறது தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நாங்கள் பிரிட்டிஸ்காரர் கண்டியளே.....

நாங்கள் எங்களுக்கு பிடுங்குப்பட்டாலும்..... நீஙகள், கனடாக்காரர், ஆஸ்திரேலியாக்காகரர், சீறீலங்கன்ஸ், இந்தியன்ஸ் எழுதிப்பதியிறத..... ஒண்டரைக் கணணால தான் வாசிக்க தொடங்குவம்.....

என்ன இருந்தாலும்..... எங்கண்ட பழைய கொலணியலில இருக்கிற ஆக்கள் எண்டு ஒரு..... பார்வையெண்டு சொல்லுங்கோவன். 😜

சீரியசாக சொல்லவில்லை, ஆனால் என் அபிப்பிராயம்: circle of life

நாங்கள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கும் வரை அரசு மற்றவர்களிடம் வரி வாங்கி எங்களுக்கு படிப்பும், மருத்துவமும் தருகிறது. நாம் உழைக்கும் போது அடுத்த சந்ததிக்கும் முன்னர் எங்களுக்கு வரி கட்டிய முந்தைய தலைமுறைக்கும் வசதிகள் கொடுக்கிறது. பிறகு நாங்கள் வயதாகி உழைக்க இயலாமல் போகும் போது எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கட்டும் வரி எங்களுக்கு செலவிடப் படும்! இது welfare நாடுகளின் சிறப்பான திட்டம் என நினைக்கிறேன். இதில் துஷ்பிரயோகம் இருக்கும், நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல. கனடா தன் சமூக நலன் திட்டங்களை வரையறை செய்தது போல செய்தால் புதிய குடியேறிகள் துஷ்பிரயோகம் செய்வதைக் குறைக்கலாம். 

எனவே, வாழ்க்கை என்ற கணக்கு லெட்ஜரில் வரவும் செலவும் சமன் செய்யும் என்று தான் நான் கருதுகிறேன்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நீங்கள் சொல்வதில் எவ்வித பிழையும் இல்லை..... நமக்கும் வயதாகும் போது கொடுத்தது (வரி) காத்து நிக்கும்.

இதுவே ஊருக்கு திரும்பி போக விரும்புபவர்களை தயங்க வைக்கிறது.

இந்தியாவில்.... பணம் இல்லாவிடில் பாடை தான். பாடகர் பாலா குடும்பமே திணறிவிட்டது.

இங்கே, மருத்துவ அநுமதி நேர்முகத்தேர்வில், இலவச மருத்துவத்தால் வந்த பிரச்சணைகளில் ஒன்றாக நீண்டகாலம் வாழும் வயதானவர்கள் குறித்து சொல்லி, அது குறித்து விளக்கம் கேட்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எல்லாம் ஒகே, தல ... 

மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே...

முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள்.

இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே.

எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மூத்த மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை.

அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு?

இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன்.

NHS க்கு இவையளை பராமரிப்பதே பெரிய செலவு. தனி வீட்டில போரிங்... பொழுது போகுதில்லை எண்டு, குத்துது, குடையுது எண்டு ஆஸ்பத்திரிக்கு போய், கட்டிலிலை இருந்து, ஓசி சாப்பாடையும் அடிச்சுக்கொண்டு இருக்கிற ஆட்களை கேள்விப்பட்டிருக்கிறியளே.

ஆஸ்பத்திரி செலவை, bed occupancy days வைத்துதான் கணிப்பார்கள். இவர்கள் WBO (waste bed occupiers) என்பார்கள், ஆஸ்பத்திரி கணக்காளர்கள்.  

உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம்.

கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫

இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..

வயோதிபர்களை பராமரிக்கும் வேலைவாய்ப்பு எத்தனை பேருக்கு வேலை கொடுக்கிறது 
அவர்கள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள்?

அவர்களுக்கான மருந்துகளை செய்யும் மெடிக்கல் கொம்பனிகள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள்.

இது எல்லாம் வெறுமனே எமது வரி பணத்தில் வாழுகிறார்கள் என்ற கணக்கில் மட்டுமே வராது.
இதுவே இவருடைய தாயார் இலங்கையில் இருந்து நோய்வாய் பட்டால் .... ஒரு கதைக்கு வைத்துக்கொள்ளுங்கள்  தயார் அங்கிருக்கும் அப்போலோவில் அட்மிட் ஆனால் 
இவர் ஒரு  10 ஆயிரம் பவுன்சை லண்டனுக்கு வெளியில் அனுப்பும்போது அது இங்கிலாந்தின் ஏற்றுமதி இறக்குமதி டெபிசிடில் நஷடம் கொள்கிறது.

அவர் ஆடம்பரமாக வாழுவதுதான் உங்களுக்கு லாபம் 
காரணம் அவர்க்கு கொடுக்கும் பணத்தை உள்நாட்டு பொருளாதாரம் வாழுவத்துக்கு 
உந்து சக்தியாக இருக்கிறார்.

மற்ற சாமி போக்கு இருப்பவர்கள் பணத்தை சேமித்து இலங்கைக்கு அனுப்பினால் 
அது உங்கள் முதலுக்கு கொஞ்சம் மோசமானதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதில் எவ்வித பிழையும் இல்லை..... நமக்கும் வயதாகும் போது கொடுத்தது (வரி) காத்து நிக்கும்.

இதுவே ஊருக்கு திரும்பி போக விரும்புபவர்களை தயங்க வைக்கிறது.

இந்தியாவில்.... பணம் இல்லாவிடில் பாடை தான். பாடகர் பாலா குடும்பமே திணறிவிட்டது.

இங்கே, மருத்துவ அநுமதி நேர்முகத்தேர்வில், இலவச மருத்துவத்தால் வந்த பிரச்சணைகளில் ஒன்றாக நீண்டகாலம் வாழும் வயதானவர்கள் குறித்து சொல்லி, அது குறித்து விளக்கம் கேட்பார்கள்.

Welfare நாடுகளில் இருப்பது போன்ற சமூக பாதுகாப்பு இல்லாத அமெரிக்காவில் வாழ்ந்தால் இந்த நலன் திட்டங்களின் அருமை நன்கு விளங்கும். ஸ்கண்டினேவிய நாடுகளையும், ஜேர்மனியையும் பார்த்தால் அவர்கள் பணத்தை விட மனித வளத்தை பெறுமதியானதாகப் பார்க்கிறார்கள், அதன் பலன்களை நீண்ட கால நோக்கில் அறுவடையும் செய்கிறார்கள். நல்ல சுகதேகியாக கவலைகள் இன்றி ஒருவன் 40 வருடம் உழைத்தால் அவன் கட்டும் வரிகளும் செய்யும் செலவுகளுமே (consumer spending) நாட்டிற்கு பெரிய இலாபம் தரும். இந்த சிம்பிள் கணக்கை புரிந்து கொள்ளாத நிலை தான் அமெரிக்கா பங்குச்சந்தை இலாபத்திலேயெ தன் அண்டர்வேரைக் கொழுவிக் காத்திருக்கும் நிலைக்குக் காரணம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தனியாக வாழுவதால் 
ஹௌசிங் மார்க்கெட்டுக்கு (Housing Marketing) துணையாக இருக்கிறார் 

ரெண்டல் ப்ரோபெர்டியேசில் (Rental Properties) உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறார் 
நாங்கள்தான் அதை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இப்போது மக்களை அவசியம் இல்லாமல் வெளியே திரிய வேண்டாம் என்கிறார்கள். கடைகளுக்கு கூட அவசியம் என்றால் மட்டுமே...
எதிர்வரும் பாடசாலை விடுமுறைகளுக்கு வெளியூர்/வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்துகின்றனர். அதேபோல் நத்தார் புதுவருட விடுமுறைகளையும் முடிந்தளவு வெளியிடங்களுக்கு செல்வதை  குறைக்கும் படியும் ஆலோசனை சொல்கிறார்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணா,

நானும் நாதம் போலதான் welfare state இன் முழு ஆதரவாளன். ஆனால் சுத்துமாத்தை செய்யும் போது கடுப்பாகும். அதுவும் இப்படி செய்தால் நாங்கள் வயசாகும் காலத்தில் எல்லாத்தையும் புடுங்கி விடுவார்கள் என்ற சுயநலமும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

உணவகங்களில் 50 வீத  கழிவு என்ற  நாடகமும் நடந்ததே??

சனம்  அள்ளுப்பட்டு  ஓடித்திரிஞ்சுதே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

உணவகங்களில் 50 வீத  கழிவு என்ற  நாடகமும் நடந்ததே??

சனம்  அள்ளுப்பட்டு  ஓடித்திரிஞ்சுதே???

ஓம். சில சனம் கலியாண வீட்டு சாப்பாட்டை கூட இந்த முறையில் முடித்து கொண்டார்கள் 🤦‍♂️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.