Jump to content

யார் இவர்கள்


nige

Recommended Posts

யார் இவர்கள்
இதுவரை எங்கிருந்தார்கள்
இவர்கள் முகம் ஞாபகத்தில் கூட இல்லையே
எம் ஒவ்வொரு சறுக்கல்களிலும்
கைகொடுத்ததாக நினைவில்லையே
ஒருநேர உணவுக்கே நாம் திண்டாடியோது
ஓடி வந்து உதவிய முகங்களில்
இவர்கள் முகம் இருந்ததில்லையே
போகவழி தெரியாமல் பரிதவித்தபோது
எம் கைபிடித்து வழிகாட்டிய - அந்த
நல்ல மனிதர்களில் 
இவர்கள் ஒருவரேனும் இல்லையே
அடுக்கடுக்காய் வந்த சவால்களை
சமாளிக்க நாம் திணறியபோது
நம்பிக்கை கொடுத்த நாலுமனிதர்களுள்
இவர்கள் நிழல்கூட வந்ததில்லையே

இப்போது மட்டும் எப்படி
ஓ..! இப்போது புதிதாய் பார்வை பெற்ற
முன்னாள் குருடர்களோ இவர்கள்
உறவு முறை சொல்கிறார்கள்
உறவென்றும் சொல்கிறார்கள்
மறுபக்கம் விமர்சனமும் செய்கிறார்கள்
அவர்கள் அகராதியில்
உறவுக்கான அங்கீகாரம் பணம் என்றால்
எம் அகராதியில் அதற்கு இடமேயில்லை
பாவம் அறிவில்லா உங்களை மன்னித்துவிடுகிறோம்
அடுத்துவரும் காலங்களிலேனும்
உறவுக்கு விலை போடாமல்
உறவுகளை உண்மையாய் நேசியுங்கள்
அது மட்டுமே நிரந்தரமானது....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.