Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அம்பாறையில் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – பாதுகாப்பும் பலமாக இருந்தது!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆதரவு வழங்காத மக்கள் தமது அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள் மற்றும் வீதியோர வியாபாரங்கள் வழமை போன்று இயங்கியது.

இதன்போது பொதுமக்கள் வழமை போன்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் வழமை போல் காணப்பட்டது.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழவுள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் நடைபெற்றது. சப்பர் மாக்கட்கள், பாடசாலைகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று இயங்கின.

இதேவேளை சில இடங்களில் பொது மக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஹர்த்தால் பிசுபிசுத்தது

வ.சக்தி, வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எம்.அஹமட் அனாம், கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம், பாறுக் ஷிஹான், வி.சுகிர்தகுமார், எப்.முபாரக்

தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து, வடக்கு, கிழக்கு முழுவதிலும் இன்று (28) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு விடுத்திருந்த கோரிக்கைக்கமைய, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் மாத்திரம், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கான போக்குவரத்துச்  சேவைகள் இடம்பெற்றன.

உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதி மறுத்தமையைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஹர்த்தால், கிழக்கின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முழுமையாக முன்னெடுக்கப்படாத நிலைமையே காணப்பட்டது.

தமிழ் மக்களின் இனத்துவ அடையாளம், நில உரிமை, சமய மற்றும் கலாசார உரிமைகள் தீவிரமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், மரணித்த எமது உறவுகளை நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தியும் இதன் மறுதலிப்பு தீவிரமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராகவும், தமிழ் இனம் தனது ஆட்சேபனையை வெளிக்காட்டும் முகமாக, இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த அழைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோறளைப்பற்று பிரதேச மக்களால், இன்று  வாழைச்சேனை பொலிஸ் நிலையச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கழககல-ஹரததல-பசபசததத/73-256050

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு காண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான்  அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு காண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான்  அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல

மகிழ்ச்சி 
இந்த விபச்சார ஊடங்கள் இதை முதலில் எழுதவேண்டும் 
யார் கடைபிடிக்கவில்லை என்பதை முதலில் எழுதவேண்டும் 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image

நினைவேந்தல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசின் ஜனநாயல விரோத போக்கை கண்டித்து இன்று நடக்கும் கடையடைப்பில் முஸ்லிம் சகோதர்களும் தோழமையுடன் இணைவு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Maruthankerny said:

Image

நினைவேந்தல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசின் ஜனநாயல விரோத போக்கை கண்டித்து இன்று நடக்கும் கடையடைப்பில் முஸ்லிம் சகோதர்களும் தோழமையுடன் இணைவு

அம்பாறையில் பல எல்லா முஸ்லீம்களும் கடை திறந்து இருந்தார்கள் அது போக ஆதரவு என பிரசுரம் வெளியிட்ட ஆசிரியர்கள் சங்கம் பெரும்பாலானோர் பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்கள் 

இ ந்தப்படம் மட்டுந்கரில் உள்ள பஜார் கடை தமிழர் பகுதியென்பதால் அடைத்துள்ளார்கள் மாறாக அவர்கள் இடமென்றால் கடைகள் திறந்துதான் இருக்கும் உதாரணம் காத்தான் குடி  ஏறாவூர் ஓட்டமாவடி அம்பாறை , முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்தும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 17:20, தனிக்காட்டு ராஜா said:

இங்கு காண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான்  அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல

உண்மைதான் தனி.

அம்பாறையில் கல்முனையும், அம்பாறையும்தான் நகரங்கள் என்பதும் அவை இரெண்டும் எமது கையில் இல்லை என்பதும் இவர்களுக்கு தெரியாதா?

திருகோணமலையில் கூட இதுதான் நிலைமை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, goshan_che said:

உண்மைதான் தனி.

அம்பாறையில் கல்முனையும், அம்பாறையும்தான் நகரங்கள் என்பதும் அவை இரெண்டும் எமது கையில் இல்லை என்பதும் இவர்களுக்கு தெரியாதா?

திருகோணமலையில் கூட இதுதான் நிலைமை.

அதேதான் செய்திகளுக்காக எதையும் எழுதுவார்கள் இங்கிருந்து 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.