Jump to content

நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்

மகளின் திருமணம்

2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது

2020 செப்ரெம்பரில் திருமணவிழா

என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது

என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது .

திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது

இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று .

ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எண்டு அய்யரும் சம்மதம் தந்திட்டார்

இருந்தாலும் இது கத்தோலிக்க முறைப்படியான திருமணம் . தேவாலயத்தில் குருவை மூன்று நாலு முறை பாத்து கதைத்து இரு வாரங்களில் அவரும் அந்தத் தேதிக்கு ஓகே பண்ணீட்டார்

கத்தொலிக்க திருமணத்தில் அய்யருக்கு என்ன வேலை என்று கேட்கக்கூடாது

எங்கள் சனம் எங்கை போனாலும் இந்தச் சாத்திர சம்பிரதாயத்தைக் கைவிடாயினம் பாருங்கோ

மாப்பிளைக்கும் பெண்ணிற்கும் திருமண நாளுக்கு முதல் நாள் வரை வேலை திடீரென்று லீவு கிடைக்கவில்லை .இது திருமணத்திற்கு முதல் நாட்கள் ஆரம்பமாகும் கூத்துக்களைக் கட்டுப்படுத்த உதவியது. மகிழ்ச்சி.

எழுத்து நடந்தபோது ஏற்பட்ட சில குளறுபடிகளை மனதில் வைத்து

இந்தமுறை எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்பதே முன்நின்றது .

கொரோனா குறைவதால் அதைப்பற்றிப் பெரிதாக்க கணக்கில் எடுக்கவில்லை

இருந்தாலும் இந்த இரண்டாவது அலை என்ற ஒரு மனப்பீதி ஒரு மூலையில் இருந்தது.

மண்டபம் ஓகே சாப்பாடும் ஓகே

இங்கே கேட்டரிங் செய்பவர்கள் தமிழர்கள் அதிகமாக இருந்தாலும் ஒருவரே பிரபல்யம் ,

எழுத்துக்கும் அவரிடம் சாப்பாடு எடுத்தபடியால் பிரச்னை இருக்கவில்லை.

திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும்போது கொரோனா இரண்டாவது முறை தலையை நீட்ட ஆரம்பித்துவிட்டது

பழைய கட்டுப்பாடுகள் திரும்பி வரலாம் குடும்பக் கொண்டாட்டங்கள் தடை ..அது-- இது-- எனப் பலரும் பலவிதமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள் .

ஆனாலும் இங்கே அரசாங்க அறிவிப்புக்களை மட்டுமே கவனத்தில் எடுத்து நாட்களும் நகர்ந்தன.

கொரோனாவை காரணமாக்கி திருமணம் தடைப்படுவதை யாரும் விரும்பவில்லை அது சகுனப்பிழையாம் எண்ட கதைகளும் வந்து சென்றன .

நடப்பது எல்லாம் நல்லதே என்ற பாணியில் அதை அப்படியே விட்டுவிடாமல் முதல் நாள் ஒரு முடிவு எடுக்கப்பட்டது

தேவாலயத்தினுள் சகலரும் முகமூடி அணிய வேண்டும் இருக்கையைத்தவிர...

யாரும் இருந்த இடத்தைவிட்டு தெரிந்தவர்களைக் கண்டவுடன் இடமாற்றம் செய்யக்கூடாது...

ஒரே குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் ஒரே இருக்கையில் அருகருகே இருக்க வேண்டும்...

மற்றவர்கள் ஒரு இருக்கையில் இடைவெளிவிட்டு இருவரோ மூவரோ மட்டுமே இருக்கவேண்டும்.....

தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட புகைப்படப்பிடிப்பாளரும்

காணொளிப்பதிவாளரும் மட்டுமே தங்களுக்கேற்றவாறு இடம்மாறலாம்.....

யாரும் மணமக்களை நெருங்கிப் புகைப்படம் மற்றும் காணொளி பிடிக்க முடியாது....

தாலி கட்டி தேவாலய சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் முகமூடியுடன்

விரைவாக ஆனாலும் அமைதியாக இடைவெளிவிட்டு விருந்தினர்கள் வெளியேற வேண்டும்............

வெளியே கத்தோலிக்க முறைப்படி புறா வேறை பறக்கவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது....

அப்போது கூட யாரும் நெருங்கி நிற்காமல் இருக்க வேண்டும்

விரைவாக அதை முடிக்க வேண்டும்.........

இப்படி சுகாதார சேவைகள் நிறுவனம் அறிவித்த ஒழுங்குமுறைகளைக்

கட்டாயம் கடைப்பிடிக்க வைக்கவேண்டும் அது தான் அந்தத்திட்டம்

வரும் விருந்தினர்களிடம் நேரடியாகக் கூறுவது ஒரு அசௌகரியமான நிலையை ஏற்படுத்தும் என்று யோசித்ததால் அது முடியவில்லை .

ங்கள் மக்கள் அதற்கு எத்தனை வியாக்கியானம் வைப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும் .

அதைவிட எங்கள் மக்கள் கட்டுப்பாடுகளை மதிப்பவர்களாக இருந்தாலும்

அவர்கள் பலநேரங்களில் அவர்கள் இருக்கும் நிலைமையை மறந்துவிடுவார்கள் அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டல் செய்யவேண்டும் அல்லது ஒரு பயத்தை உருவாக்கவேண்டும்

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஒரு பொறி தட்டியது .

பந்தடியில் அறிமுகமான ஒருவன் அந்த நகரத்திலேயே காவல்த்துறையில் அதிகாரியாக வேலை செய்கின்றான் .

அவனிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என யோசித்தபோது

குடும்ப விழாக்களில் அதிகாரிகளாக இருந்தாலும் உத்தியோகத்தைப் பாவிக்கமாட்டார்கள்.

அப்படிச் செய்வதும் பிழையானது அவருடைய வேலைக்கு ஆபத்து... என்ன செய்யலாம்

இரண்டாவது மகளிடம் இதைக்கூற அவர் சொன்னார் இது தானா பிரச்சனை

அதற்கு நான் பொறுப்பு நீங்கள் மற்ற அலுவல்களைப்பாருங்கள் என்றாள்

திருமண நாள்

தேவாலயத்திற்குச் சென்றபோது எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது .

மணப்பெண்ணைத் தந்தை ஆலயத்திற்குள் கைப்பிடித்து அழைத்து வர

எல்லோரும் திரும்பி அந்த அழகை ரசிப்பது வழமை தானே

ஆனால் இங்கோ எல்லோரும் ஆளுக்கொரு கைத்தொலைபேசியுடன்

கைகளை நீட்டி அவர்கள் நடந்துவரும் பாதையை மறிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்.

அப்போது எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை

ஒரு பத்து வெள்ளை இனப்பெண்கள் அத்தனைபேரும்

சாரணர்கள் அணிவது போன்ற ஒரே சீருடையில் இருந்தார்கள்

எல்லோரும் உங்கள் உங்கள் இருக்கையில் அமருங்கள்

இது சாதாரணமான திருமண விழா அல்ல

இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்

எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள்

என்ற கோஷங்கள் எழுதிய பதாதைகள் அவர்கள் கைகளில் உயர்ந்து தெரிந்தது

விருந்தினர்கள் அனைவரும் அப்போதுதான் வழமைக்குத் திரும்பினார்கள்

தனது உதைபந்தாட்டக்குழுவில் விளையாடும் பிள்ளைகளை அழைத்து வந்து ஒரே சீருடை அணிவித்து அவர்களை சுகாதார சேவைகளுக்கான கண்காணிப்பாளர்கள் என மகள் அறிவித்துவிட்டார்

அவர்களும் தேவாலயத்திலிருந்து மண்டபம் வரை எங்களைக் கவனித்துக் காத்து நின்றார்கள்

கண்ணியமான முறையில் சில இடங்களில் தளர்வுடனும் சில இடங்களில் மிக்க கண்டிப்பாகவும் அன்புடனும் அவர்கள் நடந்துகொண்டதும் மிக ஆச்சரியமாக இருந்தது

அந்த பத்து தேவதைகளுக்கும் நன்றிகள்

திருமணவிழா இனிதாக நிறைவேறியது

அப்படியும் இரு வாரங்கள் கடக்கும்வரை ஒரு திரிலாகத்தான் இருந்தது .

யாவும் கற்பனையல்ல😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண  வாழ்த்துகள் உங்கள் மூத்த மகளுக்கு .  உங்கள் இரெண்டாவது மகள் மிகு சமயோசிதம் உள்ளவர். திருமணம் என்றாலே எங்கே என்ன பிழை வருமோ  என பீதியாய்தான்  இருக்கும். உங்களுக்கு முடிந்த பின் 2 கிழமைக்கு  கொரோனா  பீதி வேறு, எக்ஸ்ட்ராவா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
எமது இன்றைய  இளம் சமுதாயம் பண்பாடு/கலாச்சாரம் தவறாமல் மாறுபட்டு யோசிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மணமக்களுக்கு பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் . இந்தக் கால இளசுகள் நல்ல சிமாட்  . அவர்களுக்கானதை (பணம்) கொடுத்து விட வேண்டும்   தாங்களே முன்னென்று நடத்தி விடுவார்கள்.  தலைமைத்துவம் , நடத்தும் திறன் நன்றாகவே இருக்கிறது.   அம்மா ,அப்பா நெருங்கிய உறவுகள் ஹை ..ஆக போய்  உட்க்கா ரலாம் . ஒரு சைடு சப்போர்ட் உம (பக்கத்துணை ) அவ்வப்போது கொடுத்தல் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண வாழ்த்துக்கள்.
அத்துடன் திருமணம் இனிதாக நடக்க உறுதுணையாக இருந்த வீராங்கனை மகளுக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Advance  Marriage Wishes Greeting Card

இனிய... திருமண வாழ்த்துக்கள். 💐
இக்கட்டான... சூழலில், திருமணத்தை இனிதே நடத்தி முடித்த.. 
இளைய மகளுக்கு... பாராட்டுக்கள்.  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட் ட திருமணங்கள் இங்கும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே நடந்தேறியிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐

கொரோனா நெருக்கடிக்குள் கொண்டாட்டங்கள் வைப்பது மிகவும் கடினமானது. நம்மவர்கள் பலர் கொரோனா தம்மைத் தீண்டாது என்று நம்புகின்றார்கள் அல்லது விளக்கமற்றவர்களாக இருக்கின்றார்கள்.
 
ஒழுங்கைக் கடைப்பிடிக்க சமயோசிதமாகச் செயற்பட்ட இளைய மகளுக்குப் பாராட்டுக்கள்👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Voir d'autres Gifs de cette catégorie Vous pouvez retrouver tout ces Gifs  sur les sites(recommandé): Sur Google+: pa… | Dessin de roses, Gif fleurs,  Fleurs animées

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.......!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இனிய திருமண  வாழ்த்துகள் உங்கள் மூத்த மகளுக்கு .  உங்கள் இரெண்டாவது மகள் மிகு சமயோசிதம் உள்ளவர். திருமணம் என்றாலே எங்கே என்ன பிழை வருமோ  என பீதியாய்தான்  இருக்கும். உங்களுக்கு முடிந்த பின் 2 கிழமைக்கு  கொரோனா  பீதி வேறு, எக்ஸ்ட்ராவா🤣

 நன்றி கோசன்

கொரோனா பீதியைவிட..........
எதோ ஒரு விதத்தில் தப்பி வந்தது மகிழ்சசி தான்  
நான் இங்கே எல்லோருக்கும் கூறுவது   குடும்பம் என்றாலும்
இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வாத்தியார் said:

 நன்றி கோசன்

கொரோனா பீதியைவிட..........
எதோ ஒரு விதத்தில் தப்பி வந்தது மகிழ்சசி தான்  
நான் இங்கே எல்லோருக்கும் கூறுவது   குடும்பம் என்றாலும்
இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான்

மிகவும் உண்மை. இதனால் சிலர் நம்மை கோவிக்கவும் கூடும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. உயிர் முக்கியம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இரு மகள்களுக்கும் வாழ்த்துக்கள். அந்த 10 பெண்களுக்கும் தான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாத்தியார் said:

நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்

மகளின் திருமணம்

2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது

2020 செப்ரெம்பரில் திருமணவிழா

என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது

என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது .

திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது

இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று .

ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எண்டு அய்யரும் சம்மதம் தந்திட்டார்

இருந்தாலும் இது கத்தோலிக்க முறைப்படியான திருமணம் . தேவாலயத்தில் குருவை மூன்று நாலு முறை பாத்து கதைத்து இரு வாரங்களில் அவரும் அந்தத் தேதிக்கு ஓகே பண்ணீட்டார்

கத்தொலிக்க திருமணத்தில் அய்யருக்கு என்ன வேலை என்று கேட்கக்கூடாது

எங்கள் சனம் எங்கை போனாலும் இந்தச் சாத்திர சம்பிரதாயத்தைக் கைவிடாயினம் பாருங்கோ

மாப்பிளைக்கும் பெண்ணிற்கும் திருமண நாளுக்கு முதல் நாள் வரை வேலை திடீரென்று லீவு கிடைக்கவில்லை .இது திருமணத்திற்கு முதல் நாட்கள் ஆரம்பமாகும் கூத்துக்களைக் கட்டுப்படுத்த உதவியது. மகிழ்ச்சி.

எழுத்து நடந்தபோது ஏற்பட்ட சில குளறுபடிகளை மனதில் வைத்து

இந்தமுறை எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்பதே முன்நின்றது .

கொரோனா குறைவதால் அதைப்பற்றிப் பெரிதாக்க கணக்கில் எடுக்கவில்லை

இருந்தாலும் இந்த இரண்டாவது அலை என்ற ஒரு மனப்பீதி ஒரு மூலையில் இருந்தது.

மண்டபம் ஓகே சாப்பாடும் ஓகே

இங்கே கேட்டரிங் செய்பவர்கள் தமிழர்கள் அதிகமாக இருந்தாலும் ஒருவரே பிரபல்யம் ,

எழுத்துக்கும் அவரிடம் சாப்பாடு எடுத்தபடியால் பிரச்னை இருக்கவில்லை.

திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும்போது கொரோனா இரண்டாவது முறை தலையை நீட்ட ஆரம்பித்துவிட்டது

பழைய கட்டுப்பாடுகள் திரும்பி வரலாம் குடும்பக் கொண்டாட்டங்கள் தடை ..அது-- இது-- எனப் பலரும் பலவிதமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள் .

ஆனாலும் இங்கே அரசாங்க அறிவிப்புக்களை மட்டுமே கவனத்தில் எடுத்து நாட்களும் நகர்ந்தன.

கொரோனாவை காரணமாக்கி திருமணம் தடைப்படுவதை யாரும் விரும்பவில்லை அது சகுனப்பிழையாம் எண்ட கதைகளும் வந்து சென்றன .

நடப்பது எல்லாம் நல்லதே என்ற பாணியில் அதை அப்படியே விட்டுவிடாமல் முதல் நாள் ஒரு முடிவு எடுக்கப்பட்டது

தேவாலயத்தினுள் சகலரும் முகமூடி அணிய வேண்டும் இருக்கையைத்தவிர...

யாரும் இருந்த இடத்தைவிட்டு தெரிந்தவர்களைக் கண்டவுடன் இடமாற்றம் செய்யக்கூடாது...

ஒரே குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் ஒரே இருக்கையில் அருகருகே இருக்க வேண்டும்...

மற்றவர்கள் ஒரு இருக்கையில் இடைவெளிவிட்டு இருவரோ மூவரோ மட்டுமே இருக்கவேண்டும்.....

தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட புகைப்படப்பிடிப்பாளரும்

காணொளிப்பதிவாளரும் மட்டுமே தங்களுக்கேற்றவாறு இடம்மாறலாம்.....

யாரும் மணமக்களை நெருங்கிப் புகைப்படம் மற்றும் காணொளி பிடிக்க முடியாது....

தாலி கட்டி தேவாலய சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் முகமூடியுடன்

விரைவாக ஆனாலும் அமைதியாக இடைவெளிவிட்டு விருந்தினர்கள் வெளியேற வேண்டும்............

வெளியே கத்தோலிக்க முறைப்படி புறா வேறை பறக்கவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது....

அப்போது கூட யாரும் நெருங்கி நிற்காமல் இருக்க வேண்டும்

விரைவாக அதை முடிக்க வேண்டும்.........

இப்படி சுகாதார சேவைகள் நிறுவனம் அறிவித்த ஒழுங்குமுறைகளைக்

கட்டாயம் கடைப்பிடிக்க வைக்கவேண்டும் அது தான் அந்தத்திட்டம்

வரும் விருந்தினர்களிடம் நேரடியாகக் கூறுவது ஒரு அசௌகரியமான நிலையை ஏற்படுத்தும் என்று யோசித்ததால் அது முடியவில்லை .

ங்கள் மக்கள் அதற்கு எத்தனை வியாக்கியானம் வைப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும் .

அதைவிட எங்கள் மக்கள் கட்டுப்பாடுகளை மதிப்பவர்களாக இருந்தாலும்

அவர்கள் பலநேரங்களில் அவர்கள் இருக்கும் நிலைமையை மறந்துவிடுவார்கள் அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டல் செய்யவேண்டும் அல்லது ஒரு பயத்தை உருவாக்கவேண்டும்

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஒரு பொறி தட்டியது .

பந்தடியில் அறிமுகமான ஒருவன் அந்த நகரத்திலேயே காவல்த்துறையில் அதிகாரியாக வேலை செய்கின்றான் .

அவனிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என யோசித்தபோது

குடும்ப விழாக்களில் அதிகாரிகளாக இருந்தாலும் உத்தியோகத்தைப் பாவிக்கமாட்டார்கள்.

அப்படிச் செய்வதும் பிழையானது அவருடைய வேலைக்கு ஆபத்து... என்ன செய்யலாம்

இரண்டாவது மகளிடம் இதைக்கூற அவர் சொன்னார் இது தானா பிரச்சனை

அதற்கு நான் பொறுப்பு நீங்கள் மற்ற அலுவல்களைப்பாருங்கள் என்றாள்

திருமண நாள்

தேவாலயத்திற்குச் சென்றபோது எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது .

மணப்பெண்ணைத் தந்தை ஆலயத்திற்குள் கைப்பிடித்து அழைத்து வர

எல்லோரும் திரும்பி அந்த அழகை ரசிப்பது வழமை தானே

ஆனால் இங்கோ எல்லோரும் ஆளுக்கொரு கைத்தொலைபேசியுடன்

கைகளை நீட்டி அவர்கள் நடந்துவரும் பாதையை மறிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்.

அப்போது எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை

ஒரு பத்து வெள்ளை இனப்பெண்கள் அத்தனைபேரும்

சாரணர்கள் அணிவது போன்ற ஒரே சீருடையில் இருந்தார்கள்

எல்லோரும் உங்கள் உங்கள் இருக்கையில் அமருங்கள்

இது சாதாரணமான திருமண விழா அல்ல

இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்

எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள்

என்ற கோஷங்கள் எழுதிய பதாதைகள் அவர்கள் கைகளில் உயர்ந்து தெரிந்தது

விருந்தினர்கள் அனைவரும் அப்போதுதான் வழமைக்குத் திரும்பினார்கள்

தனது உதைபந்தாட்டக்குழுவில் விளையாடும் பிள்ளைகளை அழைத்து வந்து ஒரே சீருடை அணிவித்து அவர்களை சுகாதார சேவைகளுக்கான கண்காணிப்பாளர்கள் என மகள் அறிவித்துவிட்டார்

அவர்களும் தேவாலயத்திலிருந்து மண்டபம் வரை எங்களைக் கவனித்துக் காத்து நின்றார்கள்

கண்ணியமான முறையில் சில இடங்களில் தளர்வுடனும் சில இடங்களில் மிக்க கண்டிப்பாகவும் அன்புடனும் அவர்கள் நடந்துகொண்டதும் மிக ஆச்சரியமாக இருந்தது

அந்த பத்து தேவதைகளுக்கும் நன்றிகள்

திருமணவிழா இனிதாக நிறைவேறியது

அப்படியும் இரு வாரங்கள் கடக்கும்வரை ஒரு திரிலாகத்தான் இருந்தது .

யாவும் கற்பனையல்ல😄

தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...உங்கட மகள் டொக்டர் அல்லவா?....இங்கேயா திருமணம் நடந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
எமது இன்றைய  இளம் சமுதாயம் பண்பாடு/கலாச்சாரம் தவறாமல் மாறுபட்டு யோசிக்கின்றார்கள்.

உண்மைதான் கு சா அண்ணை
மேலைத்தேச முறையில் இருந்தாலும் எமது இரண்டாவது தலைமுறை எப்போதும் எங்களை பின்தொடர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
 நன்றி அண்ணை 

23 hours ago, நிலாமதி said:

 மணமக்களுக்கு பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் . இந்தக் கால இளசுகள் நல்ல சிமாட்  . அவர்களுக்கானதை (பணம்) கொடுத்து விட வேண்டும்   தாங்களே முன்னென்று நடத்தி விடுவார்கள்.  தலைமைத்துவம் , நடத்தும் திறன் நன்றாகவே இருக்கிறது.   அம்மா ,அப்பா நெருங்கிய உறவுகள் ஹை ..ஆக போய்  உட்க்கா ரலாம் . ஒரு சைடு சப்போர்ட் உம (பக்கத்துணை ) அவ்வப்போது கொடுத்தல் சரி.

நன்றி அக்கா
இந்தத் திருமண நிகழ்வைத் தொகுத்து நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றவர் எனது மூன்றாவது மகள் தான் 👌

22 hours ago, ஈழப்பிரியன் said:

இனிய திருமண வாழ்த்துக்கள்.
அத்துடன் திருமணம் இனிதாக நடக்க உறுதுணையாக இருந்த வீராங்கனை மகளுக்கும் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி அண்ணா
உங்களைப்போன்றவர்களின் ஆசி அவர்களின்   வாழ்க்கையை நன்னெறிப்படுத்தும்

Link to comment
Share on other sites

மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்!! வாழ்க பல்லாண்டு!!!

அத்துடன் இளைய மகளின் புத்திகூர்மைக்கும் பாராட்டுகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 05:25, தமிழ் சிறி said:

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Advance  Marriage Wishes Greeting Card

இனிய... திருமண வாழ்த்துக்கள். 💐
இக்கட்டான... சூழலில், திருமணத்தை இனிதே நடத்தி முடித்த.. 
இளைய மகளுக்கு... பாராட்டுக்கள்.  👍

நன்றி தமிழ் சிறி அண்ணா
உங்களையும் பாஞ்ச் அண்ணாவையும்
திருமணத்திற்கு அழைப்பதாக ஒரு எண்ணம் இருந்தது.

இந்தக் கொரோனாவால் முடியவில்லை
தப்பாக நினைக்க வேண்டாம்
சந்தர்ப்பங்கள் இன்னும் வரும்
அப்போது எல்லோரும் சந்திக்கலாம்

On 29/9/2020 at 06:11, உடையார் said:

இனிய திருமண வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்திற்கு நன்றி உடையார்
நீங்கள்  எனக்கு நெருக்கமானவர் என்று  எனது உள்ளுணர்வு சொல்கின்றது
ஆனாலும் யாரென்று தெரியவில்லை
பிழையாகவும் இருக்கலாம்
தப்பாக நினைக்க வேண்டாம்
எதோ எழுதவேண்டும் என்று தோன்றியது
எழுதிவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 06:22, வல்வை சகாறா said:

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட் ட திருமணங்கள் இங்கும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே நடந்தேறியிருக்கிறது.

உண்மைதான் சகோதரி
இல்லாத ராசி நட்சத்திரம் எல்லாம் பார்த்து நாள்  வைக்கும்
எம்மவர் இருக்கும் கொரோனாவைக் கணக்கில் எடுப்பது குறைவாக இருக்கின்றது
மிக்க நன்றி

On 29/9/2020 at 07:45, கிருபன் said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐

கொரோனா நெருக்கடிக்குள் கொண்டாட்டங்கள் வைப்பது மிகவும் கடினமானது. நம்மவர்கள் பலர் கொரோனா தம்மைத் தீண்டாது என்று நம்புகின்றார்கள் அல்லது விளக்கமற்றவர்களாக இருக்கின்றார்கள்.
 
ஒழுங்கைக் கடைப்பிடிக்க சமயோசிதமாகச் செயற்பட்ட இளைய மகளுக்குப் பாராட்டுக்கள்👏👏👏

இந்தப்பயம் இல்லாததும்    அதீத நம்பிக்கையும் தேவையில்லாத கொண்டாட்டமும் தான் அண்மையில் இங்கே நம்மவர்கள் மத்தியில்
கொரோனா தொற்று ஏற்படக்காரணமாக இருந்தது.

அதைவிட எங்கேயோ ஏற்பட்ட பரவலை வேறு எங்கோ ஏற்பட்டதாக ஒரு வதந்தியை உருவாக்கி ஒரு காணொளியும் உலாவுகின்றது .
இங்கே தான் நம்ம தமிழன் நிற்கின்றான்😄

On 29/9/2020 at 07:45, கிருபன் said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐

நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 09:47, சுவைப்பிரியன் said:

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார்.

நன்றி  சுவைப்பிரியன்

On 29/9/2020 at 11:42, வாதவூரான் said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

நன்றி வாதவூரான்

On 29/9/2020 at 12:13, suvy said:

Voir d'autres Gifs de cette catégorie Vous pouvez retrouver tout ces Gifs  sur les sites(recommandé): Sur Google+: pa… | Dessin de roses, Gif fleurs,  Fleurs animées

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.......!   💐

நன்றி சுவி

On 29/9/2020 at 12:34, theeya said:

நன்றி சுவி அண்ணா🤭

On 29/9/2020 at 12:34, theeya said:

இனிய திருமண வாழ்த்துக்கள்!

நன்றி தீயா

On 29/9/2020 at 20:54, முதல்வன் said:

உங்கள் இரு மகள்களுக்கும் வாழ்த்துக்கள். அந்த 10 பெண்களுக்கும் தான். 🤣

அவர்களுக்கு ஒரு பரிசாக விளையாட்டிற்கான சீருடைகள்  வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளேன்

மற்றும் அடுத்தமுறை   அவர்களை மைதானத்தில் நடுவராகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தில்  சிவப்பு அட்டையை வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்லலாம் 😅 
நன்றி புதல்வன்
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.