Jump to content

ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே.!

PAI.png

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் பாரிய அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஈழவாதியான திலீபனை நினைவு கூருவதற்காக இவ்வாறு கடைகள், அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். எமது நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் வர்த்தக நிலையங்களை இவ்வாறு மூட முடியாது.

இது ஈழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் பாரிய அழுத்தம். ஏன் இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரித்து முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும்.

 அவர்கள் இன்னும் எமக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள இது நல்ல செய்தி.

வடக்கு – கிழக்கில் வர்த்தக நிலையங்களை மூடி விடுதலைப் புலிகளின் ஈழத்தையும் திலீபனையும் நினைவுகூரும் மிகப் பெரிய நிகழ்வை அவர்கள் நடத்துகின்றனர்.

இவற்றுக்கு தலைமை தாங்குவது யார், இதனை செயற்படுத்துவது யார். இதில் பின்புலத்தில் இருக்கும் அதிகாரிகள் யார்.
இவற்றை தேடி அறியும் பொறுப்பு நாட்டின் பாதுகாப்பு தரப்பினருக்கு உள்ளது.

நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி, சரியானதொரு சிங்கள பௌத்த தலைவரை தெரிவு செய்துள்ள இந்த தருணத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்குமாயின் நாங்கள் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருக்க முடியாது என்பது நாட்டுக்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் ஆகும் .

இவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி காட்டினால், அதுதான் நாங்கள் பெறும் மிகப் பெரிய வெற்றி என்பது நான் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன் என சுமணரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/85775/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது ஈழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் பாரிய அழுத்தம். ஏன் இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரித்து முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும்.

ரவுடித் தேரரின் கருத்து தவறானது. ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் தவறான சட்டங்களால் பாதிப்படையும் மக்கள் தங்கள் எதிர்ப்பை அந்த அரசாங்கத்திற்கு எதிராக  அமைதியான வழிகளில் காட்ட உரிமையுண்டு. சர்வாதிகாரிகளுக்கு அது விளங்காது.

 

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி காட்டினால், அதுதான் நாங்கள் பெறும் மிகப் பெரிய வெற்றி என்பது நான் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன் என சுமணரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் இந்த தேரரின் தர்ம போதனை. விகாரைகளில் இதைத்தான் போதிக்கிறார்கள் போலும்.  உங்களின் இந்த அடாவடியாற்தான் அஹிம்சை தோற்று, ஆயுதம் தோன்றியது. தமிழீழம் வேண்டும் என்கிற தேவையேற்பட்டது. இன்று தீவிரமடைந்துள்ளது இப்போது. இன்னும் உங்கள் தாகம் தீரவில்லை. தமிழரின்  இரத்த ஆறு ஓட வேண்டும், அதில்  தாங்கள் நீராட வேண்டும் என்று அடம் பிடிக்கும் பிக்குகள், அதை வேடிக்கை பார்க்கும் சர்வதேச கூட்டம்.  தமிழர் எதைச் செய்தாலும் புலிகளை மீள உருவாக்குகிறார்கள், அதை எம்மால்த் தான் கட்டுப்படுத்த முடியும் என்னும் பயத்தையும், உங்கள் மேல் நம்பிக்கையையும் சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தி, உங்கள் ஊழலை ஊதி பெருப்பியுங்கள். இருபதாம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்படும் எதிர்ப்புகளை திசை மாற்றுவதற்காக  அரங்கேற்றப்படும் நாடகம் இது.

Link to comment
Share on other sites

சிங்கள தேரர்கள்தான் அன்றுதொட்டு இலங்கையை ஆட்சிசெய்து வருகிறார்கள். இன்றும் அதுதான் தொடர்கிறது. அரச ஆட்சிக்குவரும் சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் தேரர்களின் பொம்மைகளே.  

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியாளர்கள் பிக்குகளை ஆட்டுகிறார்களா? பிக்குகள் ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கிறார்களா? என்பது பெரிதல்ல, எல்லோரும் தமிழரை வைத்தே வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி காட்டினால், அதுதான் நாங்கள் பெறும் மிகப் பெரிய வெற்றி என்பது நான் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன் என சுமணரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் நல்லது. செய்து காட்டுங்கள். அப்போதாவது எமது மக்களுக்கு / இன்றைய சமுதாயத்துக்கு அடக்குமுறைக்குள் தான் வாழ்கிறோம் என்ற உணர்வு வரும் இல்லையா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.