Jump to content

திலீபனுக்காக கையொப்பம் இட்டவர்கள் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்களே - டக்ளஸ் பகிரங்க சவால்


Recommended Posts

திலீபனுக்காக கையொப்பம் இட்டவர்கள் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்களே - டக்ளஸ் பகிரங்க சவால்

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். அவ்வாறான தேவை தனக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“திலீபனை நினைவுகூருவது தொடர்பாக தற்போது பேசி வருகின்ற அரசியல் தலைவர்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பேசுகின்றார்களே தவிர, எவரும் உளப்பூர்வமாக பேசவில்லை.

இந்த அரசியல் தலைவர்களை இதுதொடர்பான பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்.

குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புக்களை புலிகளின் தலைமை அழித்தபோது யாழ்ப்பாணத்தில் அதனை நேரடியாக திலீபன் வழிநடத்தியிருந்தார்.

அதேபோன்று, தமிழரசுக் கட்சித் தலைவர்களும் புலிகளின் தலைமையினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமல்ல, தற்போது இந்த அமைப்புக்களின் தலைவர்களாக திலீபனை நினைவுகூர வேண்டுமென்று கையொப்பம் இட்டவர்களும் புலித் தலைவர்களின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான்.

இவ்வாறானவர்களினால் உளப்பூர்வமாக திலீபனை நினைவு கூரமுடியாது. எனினும் காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்" என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/151363?ref=imp-news

Link to comment
Share on other sites

இந்த சாட்டில் டக்லஸ் தனது கொலைப்பட்டியலில் இருந்தவர்களது பெயரையும்  வெளியிடலாமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியருக்கு.. தெரியும் தானே கூட இருந்தவை செய்தவை.

என்ன புளொட் கும்பல் மீது புலிகள் ஒரு தடவையும் சுடவே இல்லை.. இரவோடு இரவாக ஆயுதத்தை ஒப்படைத்து விட்டு ஓடிவிட்டார்கள். ஈபிஆர் எல் எவும் அப்படித்தான் கிட்டமுட்ட.

ஆனால்.. புலிகளுடன் அதிகம் முரண்பட்ட ரெலோ தான் பின்னாளில்.. புலிகளை அதிகம் நெருங்கியும் வந்தது.  ஆனால்.. புளொட்டும்.. அன்றைய ஈபியின் தூண் இன்றைய ஈபிடிபி கொலைக்கும்பலின் தலைவன் மட்டுமே புலிகள் அதிகம் வெறுத்தார்கள்.. காரணம்..

சரணாகதி அடையும் இடத்தில் தங்களை தக்க வைக்க. 

கோத்தா மகிந்த செல்லப் பிள்ளைகளாக உலா வரனும் என்றால்.. இப்படி சொந்த இனத்துக்கு எதிராக சிங்களம் மனங்குளிர ஏதாவது செய்தால் தான் உண்டு.

நக்கிப் பிழைக்கத் தெரிந்த கூட்டம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

இந்த சாட்டில் டக்லஸ் தனது கொலைப்பட்டியலில் இருந்தவர்களது பெயரையும்  வெளியிடலாமே! 

சிவாஜிலிங்கம்,செல்வம்,சித்தர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, செண்பகம் said:

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புக்களை புலிகளின் தலைமை அழித்தபோது யாழ்ப்பாணத்தில் அதனை நேரடியாக திலீபன் வழிநடத்தியிருந்தார்.

இவர், இப்போ எதற்காக மண்ணில் மாண்டுபோன எலும்பைக் கிளறி எடுத்து வந்து நக்குகிறார்? தன்னைக் கூப்பிடவில்லை என்கிற ஆதங்கத்திலா? தன்னால் நினைவு கூர முடியாதவரை யாரும் நினைவு கூரக்கூடாது என்றா? மக்கள் எதிரிக்கு எதிராக  ஒன்று சேரக்கூடாது என்றா? எஜமானின் திட்டத்தை நிறைவேற்றவா? தனது வாக்கு வங்கி இந்த ஒற்றுமையினால் சரியப்போகிறது என்கிற பயத்தினாலா? தனது கை சுத்தம் என்று காட்டவா  இப்படி ஆவேசப்படுகிறார்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.